பங்குச் சந்தையை ஊட்டம் கொடுத்து வளர்த்து, அதன் மூலம் பொருளாதாரத்தை பெருக்க ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் நிதியமைச்சருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு சந்தை ஏற்கனவே ஏறுமுகமாக உள்ளது. பலர் தேசத்தின் பொருளாதார நிலையை பங்குச் சந்தை பிரதிபலிப்பதாக கற்பிதம் செய்து கொள்கின்றனர்.
பல இந்திய நிபுணர்களின் கணிப்புப்படி நியூயார்க் பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கும், அல்லது சிகாகோ வர்த்தக குழுமத்திற்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பு எதுவோ அது அப்படியே நம்நாட்டு பங்கு சந்தைக்கும் பொருளா தாரத்திற்கும் பொருந்தும் என்பதே!
அதிகாரம் படைத்த நிதியமைச்சக உயர் அதிகாரிகள் இக்குழப்ப வலையில் சிக்கிக் கொண்டு முழிக்கின்றனர். அனைவரையும் ஆட்டிப் படைக்கும் சந்தை பற்றிய கருத்திற்கு அதுவே மூல காரணமாகும். உண்மையிலேயே சந்தையின் பங்கு பற்றி தவறான புரிதல்கள் நிலவுகின்றன.
பங்குச் சந்தை யாரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது?
பங்குச் சந்தை பற்றி ஒரு சில புரிதல்களை இங்கு பார்ப்போம்.
புரிதல்: 1
இந்திய பெருநிறுவனங்கள் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேசிய வருமானத்தில் 14 சதம் மட்டுமே பெரு நிறுவனங்களின் மூலம் கிடைக்கப்பெறுகிறது.
பெரு நிறுவனங்களல்லாத ஒருவரே உடமையாளர்களாக இருக்கும் நிறுவனம் (Proprietorship) அல்லது பங்குதாரர்கள் நடத்தும் நிறுவனம் (Partnership) உண்மையிலேயே தேசிய வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டித் தருகின்றன (38 சதம்), அதற்கடுத்தாற் போல் விவசாயம் (24 சதம்) மற்றும் அரசு நிறுவனங்களும் ஈட்டித் தருகின்றன.
மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வியாபார துறைகள், ரயில்வே தவிர்த்து இதர வாகனப் போக்குவரத்துத் துறைகள் மற்றும் வாகனங்கள் போன்ற பெரிய நிறுவனங்களல்லாத துறைகள் தேசிய வருமானத்தில் 70 சதத்தை பெற்றுத் தருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக உள்ளது. கடந்த 10 வருடத்தில் சராசரி வளர்ச்சி என்பது சேவைத்துறையில் 8 சதமாகும். இருப்பது இவைகளை உள்ளடக்கிய சேவை துறையே. அதே நேரம் தொழில்துறையான பொருள் உற்பத்தி துறையில் 5 சதவிகிதமாகும்.
உள்நாட்டு சேமிப்பில் பெரிய நிறுவனங்களின் பங்கு 5 சதவீதத்திற்கும் குறைவாகும். இதற்கு மாறாக வளர்ச்சியுள்ள நாடுகளில் இதுவே 50 சதவீதத்திற்கும் மேலாகும். நமது நாட்டு தேசிய சேமிப்பில் பெரும் பங்காற்றுவது (90 சதம்) குடும்ப சேமிப்புகளே (House hold). உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அல்லது போக்குவரத்தில், கட்டுமானத்தில் அல்லது உணவகம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள பங்குதாரர், ஒரே உடமையாளர் நிறுவனங்கள் இதில் அடங்கும். எனவே பெரிய நிறுவனங்கள் தான் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்பது உண்மைக்கு புறம்பானதாகும்.
மீண்டும், மீண்டும் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இதுவே நிலைமை என்று இடைவிடாமல் கூறிக் கொண்டே இருப்பதால் எவரும் அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்தும் எனக் கருதத் தலைப்படுவர்.
இந்தப் புரிதல் 1 உண்மையுமல்ல, ஏற்கக்கூடியதுமல்ல. பெரிய நிறுவனங்கள் அனைத்தும் மறைந்தாலும் தேசிய வருமானம் 14 சதவீதம்தான் குறையும்.
நமது தேசிய வருமானம் குறைந்தபட்சம் 30 சதவீதம் குறைத்தே கணக்கிடப்படுகிறது. அப்படியெனில் மொத்தத்தில் எவ்விதமான இழப்பும் இதனால் ஏற்படாது எனலாம்.
புரிதல் : 2
பங்கு சந்தை என்பது பெரிய நிறுவனங்களின் கடந்தகால, எதிர்கால செயல்பாட்டை அளக்கும் கருவியாகும்.
இந்தியாவில் கிட்டத் தட்ட ஏழு லட்சம் கம்பெனிகள் உள்ளன. அவற்றில் 6000 அதற்குமேலோ கம்பெனிகள் தான் பங்கு பரிவர்த்தனை கழகத்தில் உறுப்பினராக உள்ளன. நமது பங்கு சந்தையில் சுமார் 9 ஆயிரம் நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டிருந்தாலும் இதில் சரிபாதி நிறுவனங்களின் பங்குகளை கேட்பாருமில்லை, வாங்குவாருமில்லை.
மேலும்அதில் 25 சதம் நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஆண்டில் ஓரிரு தடவைதான் பரிவர்த்தனைக்கு கேட்கப்பட்டன. கடந்த ஆண்டு பங்குச் சந்தை வியாபாரத்தில் 45 சதம், முதல் பத்து நிறுவனங்களின் பங்குகளாகும்.
இதற்கு நேர் மாறாக நியூயார்க் பங்கு பரிவர்த்தனை கழகத்தில் பரிவர்த்தனைக்கு ஏற்கப்பட்ட எந்த ஒரு நிறுவனத்தின் பங்குகளும் மொத்த விற்பனையில் ஒரு சதத்தை விட குறைவே.
பங்கு வர்த்தகர்களும், பங்கு சந்தை புள்ளிகளும் உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமான நிறுவனங்கள் மிக அதிகமான பங்கு சந்தை பட்டியலில் உள்ளன என பீத்திக் கொள்கிறார்கள். (இந்தியாவில் தான் அதிகமான மாடுகள் உள்ளன என்பதுபோல்) ஆனால், நூறு நிறுவனங்கள்தான் உயிரோட்டமுள்ளவைகள்.
இந்த நூறு நிறுவனங்களின் பங்குகளில் 70 சதவீத பங்குகள் யாரும் காசு கொடுத்து வாங்கி பெயர் மாற்றம் அடையாது. சந்தை மொழியில் சொன்னால், இன்னொரு பங்கிற்கு ஈடாக வைக்கப்படுபவை. வேறு வார்த்தனைகளில் கூற வேண்டுமானால் இந்த விதமான வர்த்தகத்தில் ஈடுபடுவோர் பரிவர்த்தனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ள பங்குகளை பார்க்கக் கூட மாட்டார்கள். அவர்கள் அதனை பார்க்கமலேயே இறுதி வரை வர்த்தகம் நடைபெறும். மிகக் குறைந்த லாபத்திற்கு அல்லது நஷ்டத்திற்கு தின வர்த்தகர்கள் என அழைக்கப்படும் பங்குச் சந்தை வியாபாரிகளால் ஒவ்வொரு நாளும் தங்களுடைய பங்கு பரிவர்த்தனையை சமன் செய்து கொள்வர். ஒரு பெரும் பகுதி வர்த்தகம் இப்படித்தான் சுறு சுறுப்பாக பங்குச் சந்தையில் நடைபெறும். எனவே இந்தியாவில் பெரிய நிறுவனங்களின் செயல்பாட்டை கணிக்கும் அல்லது இந்திய பொருளாதாரத்தை அளக்கும் கருவியாக பங்குச் சந்தை இருந்ததில்லை.
புரிதல் : 3
பங்குச் சந்தை மக்களின் சேமிப்பை முதலீடாக மாற்றும்.
நல்ல காலத்தில் பொது மக்களின் சேமிப்பு பங்கு முதலீடாக மாறியது. துவக்கத்தில் முதலீட்டு முன் முயற்சிகளை ஊக்குவித்த வர்த்தக குழுமங்களான ஆஸ்வால், பன்சாலிஸ், ஆர்.கே., மெஹ்ராஸ், ருயியாங் ஆகியோரின் முயற்சிகளை குறிப்பிடலாம்.
இந்தப் பட்டியல் நீண்டதாகும். விருப்பமுள்ளவர்கள் கடந்த பத்தாண்டுகளில் வெளி வந்த வர்த்தக இதழ்களை புரட்டி பார்க்கலாம். (குறிப்பாக விளக்க கட்டுரைகளை பார்க்கவும்) அவைகள் எவ்வாறு ஆருடம் சொல்பவர்கள் மற்றும் தொலை நோக்கு கணிப்பாளர்கள் புதிய இந்தியாவை உருவாக்குவார்கள் அல்லது தொழில்மயமாக்குவார்கள் என்பது பற்றி விரிவாக தெரிவிக்கின்றன.
சேமிப்பு அட்டவணை (அட்டவணை எண் : 2) தெரிவிப்பது என்னவெனில் மிகச் சிறந்த காலங்களில் (முதலீட்டாளர்களுக்கல்ல) அதாவது 1990-இன் ஆரம்ப காலத்தில் பங்குகள் மற்றும் டிபன்சர் இவைகளில் குடும்ப சேமிப்பில் முதலீடாக மாறியது 17 சதம். இது 2003இல் 5 சதவீதத்திற்கும் கீழே போயிற்று.
மிகப் பெருமளவு முதலீடு அஞ்சலக சேமிப்பாகவும் பிராவிடண்ட் பண்ட் சேமிப்பாகவும் மற்றும் ஆயுள் காப்பீட்டிலும் இருந்துள்ளது. எனவே நமது பொருளாதாரத்தில் பெரிய நிறுவனங்களின் பங்கு மிகக் குறைவாக, அதே சமயம் பெரிய நிறுவனங்களில்லாத துறைகளின் பங்கு மிக அதிகமாகவும் உள்ளது.
ஆனால் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டவைகள், அதாவது பெரிய நிறுவனங்களில்லாத துறைகள், பங்கு சந்தையில் பதிந்தவைகள் அல்ல; மேலும் அவைகள் நிறுவனங்களுமல்ல. மாறாக தனி உடமையாளர் அல்லது பங்குதாரர்கள் நடத்தும் வியபாபார அமைப்புகளாகும். வர்த்தகம், போக்குவரத்து, உணவகம் மற்றும் கட்டுமானம் போன்ற சேவைத் துறையின் வேகமான வளர்ச்சிக்கு அவைகள் பெரும் பங்காற்றுகின்றன.
தேசிய பொருளாதாரத்தில் குடும்ப சேமிப்பின் பங்கு மிக முக்கியமானதாகும். (30 சதத்திற்கும் மேலாகும்) இவற்றில் 5 சதம் மட்டுமே பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.
வங்கி சேமிப்பு, சிறு சேமிப்பு, ஆயுள் காப்பீடு மற்றும் பிரவிடண்ட் பண்ட் இவைகளில் மிகப் பெரிய அளவு சேமிக்கப்படுகிறது. பங்குச் சந்தை மூலம் பங்களிப்பு என்து நமது பொருளாதாரத்தில் 10 சதவீத அளவே இருக்கும். ஆனால் அதனையே பொருளாதாரத்தை கணிக்கும் கருவியாக கருத முடியாது.
அவ்வாறெனில், எவ்வாறு நாம் பொருளாதார வளர்ச்சியை கணிக்க முடியும்? மிகச் சுலபம். ஜன்னல் வழியே பார்த்தாலே இது புரியும்.
மிகப் பெருமளவில் கட்டுமான வேலைகள் நடைபெற்றால், சாலைகளில் அதிக எண்ணிக்கையில் லாரிகள் சென்றால், அதிக எண்ணிக்கையில் உணவகங்கள் மற்றும் சிறு, சிறு வியாபார நிறுவனங்கள் உருவானால், அதன் மூலம தான் பொருளாதார நடவடிக்கைகள் பெருகி வருகிறது என்பதை உணர முடியும்.
அட்டவணை – 1
பொருளாதாரத்தில் பெரிய நிறுவனங்களல்லாத துறைகளின் பங்கு (சதவீதத்தில்)
பிரிவு | 1980-91 | 1990-91 | 1995-96 | 2002-03 |
அரசுத்துறை | 17.5 | 23.9 |
23.0 |
23.6 |
தனியார் பெரும் நிறுவனங்கள் | 9.5 |
9.3 |
13.6 | 14.9 |
பெரிய நிறுவனங்கள் அல்லாத துறைகள் |
விவசாயம் | 38.1 | 31.5 | 28.9 | 28.8 |
இதரவை | 34.9 | 35.3 | 34.5 | 37.7 |
குறிப்பு :
- அரசு மற்றும் பெரு நிறுவனங்களால் செய்யப்படும் விவசாயத்தின் பங்கு விவசாயம் தலைப்பில் சேர்க்கப் படவில்லை. அது அந்தந்த பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இவைகள் தேசிய உள்நாட்டு உற்பத்தி விபரங்கள் அடிப்படையில் இன்றைய விலைகளின் அடிப்படையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
- சுமார் 3 சதவீதம் தனியார் உற்பத்தி துறையில் பெரிய நிறுவனங்களல்லாத துறை மூலம் நடைபெறுகிறது. எனவே பொருளாதாரத்தில் பெரிய நிறுவனங்களல்லாத துறைகளின் பங்கு 38 சதவீதமாகவும், பெரிய நிறுவனங்களின் பங்கு 14 சதவீதமாகவும் உள்ளது.
ஆதாரம் : தேசீய கணக்கு புள்ளி விபரம் : 1997, 2002, 2004,
தேசிய புள்ளி விபர நிறுவனம், புதுடில்லி.
அட்டவணை – 2
குடும்ப சேமிப்பு விபரம் 1980இல் இருந்து 2003 வரை (சதவீதத்தில்) |
பொருள் | 1980-81 | 1990-91 | 2002-2003 |
குடும்ப சேமிப்பிலிருந்து | 73 | 84 | 94 |
மொத்த உள்நாட்டு சேமிப்பிற்கு பொருள் சேமிப்பிலிருந்து | 67 | 55 | 55 |
குடும்ப சேமிப்பிற்கு நிதி சேமிப்பிலிருந்து | 43 | 45 | 45 |
குடும்ப சாதனத்துறை சேமிப்புக்கு பண சேமிப்பிலிருந்து | 19 | 13 | 12 |
நிதி சேமிப்பிற்கு நிகர சேமிப்பிலிருந்து நிதி சேமிப்பிற்கு | 34 | 22 | 25 |
பங்கு மற்றும் பத்திரங்களிலிருந்து | 5 | 17 | 5 |
நிதி சேமிப்பிற்கு நிதி சேமிப்பிலிருந்து | 7 | 15 | 23 |
அரசிற்கு சேரவேண்டிய நிகர பங்கு ஆயுள் காபீட்டிலிருந்து | 10 | 11 | 16 |
நிதி சேமிப்பிற்கு பிரவிடண்ட் பண்ட் மற்றும் ஓய்வூதியத்திலிருந்து | 25 | 22 |
19 |
நிதி சேமிப்பிற்கு மொத்த நிதி சேமிப்பு | 100 | 100 | 100 |
ஆதாரம் : தேசிய கணக்கு புள்ளி விபரம், மற்றும் மத்திய புள்ளி விபர நிறுவனம் மூலம் பல்வேறு அறிக்கைகளை தொகுத்து இணைக்கப்பட்டது.
நன்றி : பிசினஸ் லைன்,
மார்ச் 24, 2005
ஆர். வைத்தியநாதன்
தமிழில் : எஸ். ரமணி