மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இயற்கை சீரழிவுகளையும் பயன்படுத்தி ஆதாயம் அடையும் புதிய முதலாளித்துவ வடிவம்


புதிய முதலாளித்துவ வடிவம்கடந்த ஆண்டின் கோடை காலத்தில் புஷ் நிர்வாகத்தின் யுத்த மறு சீரமைப்புக் கொள்கை வேகமாக செயல்படத் தொடங்கியது. அதற்காக ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று மறு சீரமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஒருவரை வெள்ளை மாளிகை நியமனம் செய்தது. உக்ரைன் நாட்டிற்கான அமெரிக்க தூதராக முன்பு பணிபுரிந்த கார்லோஸ் பாஸ்கல் இந்த பதவிக்காக புதிதாக நியமனம் செய்யப்பட்டவர். இவரது அலுவலகத்தின் வேலை என்ன தெரியுமா? வியப்படையாதீர்கள்! ஏனென்றால் அதனைத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு வியப்பும் அதிர்ச்சியும் கூட ஏற்படக் கூடும். நாடுகளுக்கிடையே யுத்தம் ஏற்பட்டால் அதனால் ஏற்படக் கூடிய சீரழிவிலிருந்து அவற்றை புனர் நிர்மாணம் செய்வதற்கான திட்டத்தை முன்கூட்டியே வகுப்பதுதான் மறு சீரமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் வேலை. 25 நாடுகளின் பட்டியல் அவரது அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் எவையாவது மற்ற நாட்டுடனோ, நாடுகளுடனோ சண்டையில் ஈடுபடும் போது அந்த நாடுகளில் ஏற்படும் அழிவை சரிசெய்ய மறுகட்டுமானத் திட்டங்களை யுத்தம் எதுவும் துவங்குவதற்கு முன்பாகவே வகுப்பதுதான் அந்த அலுவலகத்தின் பணி. ஒரே நேரத்தில் மூன்று மையங்களில் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் நிறைவு செய்யக்கூடிய புனர் நிர்மானத் திட்டங்களை வகுக்கும் முயற்சியில் அந்த அலுவலகம் ஈடுபட்டு வருகிறது. எதிரி தாக்குதல் தொடுக்கும் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தாக்கி அழிப்பது எங்கள் உரிமை என்று கொள்கைப் பிரகடனம் செய்த புஷ் நிர்வாகம் தாக்குதலுக்கு முன்பாக மறு சீரமைப்புப் பணிகளை திட்டமிடும் வேலையில் இறங்கியுள்ளது பொருத்தமானது தான். முன்கூட்டியே தாக்கி அழிக்கும் அழிவு வேலையில் ஈடுபடுவோர் –  துவங்கப்படாத யுத்தத்திற்காக மறு சீரமைப்புக் கட்டுமானத்தை நிர்மாணம் செய்யும் மற்றொரு அவதாரத்தையும் எடுத்துள்ளனர்.

(இந்து மத நம்பிக்கைகளின் படி அழித்தல் சிவனின் வேலை படைத்தல் – பிரம்மனின் வேலை. எதிரி என்று பெயர் சூட்டி நாடுகளை முன்கூட்டியே அழிக்கும் சிவனாகவும் – அழித்த நாட்டை மறு சீரமைக்க முன்கூட்டியே திட்டமிடும் பிரம்மனாகவும் அமெரிக்கா ஒரே நேரத்தில் அவதாரம் எடுத்துள்ளது.)

யுத்தங்கள் நடைபெற்ற பிறகு மறுசீரமைப்புப் பணியை திட்டமிடும் (பழைய) காலம் மாறி விட்டது. யுத்தத்தை முன்கூட்டியே திட்டமிடுவது மட்டுமல்ல மறு கட்டுமானத்தையும் முன்கூட்டியே வகுப்பது தான் நவீன அமெரிக்க பாணி முதலாளித்துவத்தின் நடைமுறையாகியுள்ளது. மொழி பெயர்ப்பாளர்) அமெரிக்க நாட்டின் தேசிய உளவுத்துறை மறுசீரமைப்புக்கான ஒருங்கிணைப் பாளரின் அலுவலகத்துக்கு நெருக்கமான ஒத்துழைப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்த அபாயத்தை அதிகமாக எதிர் நோக்கியுள்ள நாடுகளின் பட்டியலை அமெரிக்க உளவுத்துறை மறு சீரமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்துக்கு வழங்கிடும். யுத்தம் நிகழுமானால் மின்னல் வேகத்தில் மறுசீரமைப்புப் பணிகளை துவங்குவதற்கான குழுக்கள் இப்போதே அடையாளங் காணப்படும்.

மறு சீரமைப்புக்காக அடையாளங் காணப்படும் குழுக்களில் தனியார் கம்பெனிகள், அரசு சாரா அமைப்புகள் வல்லுநர் குழுக்கள் ஆகியவை இடம் பெறும். அவற்றுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படும். யுத்தம் துவங்குவதற்கு முன்பே மறு சீரமைப்புப் பணிகளை திட்டமிடுவதால் மூன்று மாதம் முதல் ஆறுமாதத்திற்கான தாமதம் தவிர்க்கப்படுமாம். இது திருவாளர் கார்லோஸ் பாஸ்கலின் கருத்து. புனர் நிர்மானத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது சம்பந்தப்பட்ட நாடுகளின் சமூக அடிப்படையே மாற்றிடும் வகையிலேயே அவை திட்டமிடப்பட்டிருக்கும். பழைய தேசங்களை அவை எப்படி இருந்தனவோ அப்படியே புனர் நிர்மாணம் செய்யத் திட்டமிடுவது அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை அல்ல. ஜனநாயக நாடுகளை;ம சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படை யாகக் கொண்ட நாடுகளையும் புதிததாக உருவாக்கத் திட்டமிடுவது தான் அமெரிக்க மறு சீரமைப்புக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள பணி. பாகல் பின்வருமாறு விளக்குகிறார்: செயல்பட முடியாத பொருளாதார அமைப்புக்குக் காரண மாகவுள்ள பொதுத்துறை நிறுவனங்களை விற்க வேண்டியிருக்கும்! மறு சீரமைப்பு என்றால் சில நேரங்களில் பழைய அமைப்பு முறைகளை உடைத்து நொறுக்குவது என்றும் பொருள்படும்!.

காலனிகளை முன்பு உருவாக்கியபோது நாகரிமற்ற அந்த நாடுகளில் சொர்க்கத்தை உருவாக்குவோம்! என்று காலனியாதிக்க வாதிகள் அன்று சப்பித்திரிந்தார்கள். காலனிய அமைப்புமுறையே இன்று காணாமல் போய்விட்டது. காலனி ஆதிக்கவாதிகளுக்கு கண்டுபிடிப்பதற்கான புதிய இடங்கள் எதுவுமில்லை. எழுதப்படாத வெற்றுத் தாள்கள் எதுவுமில்லை முன்பொருமுறை மா-சே-துங் குறிப்பிட்டார், எழுதப்படாத வெற்றுத் தாள்களில் மிக மிகப் புதிதாக மிக மிக அழகான சொற்களை எழுத முடியும் என்று, இப்போது காலனி ஆட்சி முறையை பரப்ப புதிய தேசங்கள் எதுவுமில்லை. ஆனால் ஏராளமான அழிவுகள் தான் தினம் தினம் நிகழ்ந்து வருகின்றன. கடவுல் அருளாலோ அல்லது புஷ் நிர்வாகத்தின் செயலாலோ சிதைந்து சின்னா பின்னமாகிப் போன நாடுகள் தான் எத்தனையோ உள்ளனவே! (கடவுளின் செயலுக்கும் புஷ்ஷின் நடவடிக்கைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஏனென்றால் கடவுளின் உத்தரவுப்படிதான் தான் செயல்படுவதாக புஷ் கூறிக் கொள்கிறார் அல்லவா?)

முந்தைய காலங்களில் அசிங்கமானதொரு காலனி ஆதிக்க முறை இருந்தது. இப்போது நளினமானதொரு நவீன காலனி ஆதிக்க முறை உருவாகி வருகிறது. அதற்குப் பெயர் தான் புனர் நிர்மாணம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஆய்வாளராக ஷல்மாலி குட்டலி என்பவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இராக் முதல் இந்தோனேஷியாவில் சுனாமி பாதிப்புக்குள்ளான அசே வரை யுத்தப் பேரழிவை சந்தித்த ஆப்கானிதானத்திலிருந்து ஹைட்டி வரை இப்படிப்பட்ட மறு நிர்மாண நடவடிக்கைகள் தான் நடைபெற்று வருகின்றன. லாப வேட்டை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஆலோசனை அமைப்புகள், கட்டுமான நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள், ஐ.நா. உதவி அமைப்புகள், சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து ஒரு போட்டி அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன. இவற்றின் செயல்பாடுகளைப் பற்றி ஏராளமான புகார்கள் வந்த வண்ணமுள்ளன. வேலைகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன அன்னிய ஆலோசனை அமைப்புகளின் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் கொட்டி அழ வேண்டியுள்ளது உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுக்கப்படுவதில்லை அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை – முடிவு எடுப்பதில் உள்ளூர்வாசிகளுக்கு எத்தகைய பங்கும் இருப்பதில்லை… இப்படி எண்ணற்ற புகார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாகியாகும் அசே பிராந்தியத்தில் மறு சீரமைப்புப் பணிகளே நடைபெறவில்லை என்று நியுயார்க் டைம் பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கக் கம்பெனிகளிடம் மறு சீரமைப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ள இராக் நாட்டின் நிலையும் இதுதான். இராக் நாட்டில் குடிநீர் விநியோகக் கட்டுமானங்களை உருவாக்கும் பணி அமெரிக்காவின் பெக்டெல் கம்பெனியிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. வேலைகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டதாக அந்த கம்பெனி கூறிய பின்னர் – இப்போது பார்த்தால் நீர் விநியோக அமைப்புகள் எல்லாம் செயலற்றுக் கிடக்கின்றன. மறுசீரமைப்பு ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு நாடு ஆப்கானி தான். அன்னிய நாட்டு ஒப்பந்தக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு கிடைத்த சொற்பமான நிதி உதவிகளையெல்லாம் வீணடித்து விட்டார்கள். லஞ்ச ஊழலிலும் பணத்தை விரயம் செய்வதிலும் பெயற் பெற்றுள்ள இந்த ஒப்பந்தக்காரர்கள் கணக்கு வழக்குகளையும் முறையாக பராமரிக்கவில்லை என்று ஆப்கன் ஜனாதிபதி ஹமீது கர்சாய் குற்றம் சாட்டியுள்ளார். சுனாமி பேரழிவுக்கு 6 லட்சம் மக்களை பலி கொடுத்துள்ள இலங்கையின் கதையும் இது தான். பாதிகப்பட்டவர்களுக்கு அளிப்பதற்காக கிடைத்த நிதி எல்லாம் செல்வாக்கு மிக்க சிலரையே சென்றடைந்துள்ளது. எங்கள் கூக்குரலை எவரும் பொருட்படுத்துவதில்லை. நாங்கள் குரல் எழுப்பவே கூட அனுமதி மறுக்கப்படுகிற.

மறுகட்டுமானப் பணி இவ்வளவு தாறுமாறாக நடைபெறுகிறது என்றால் இதற்கு காரணம் மறுகட்டு மானம் என்பது அவர்களின் உண்மையான நோக்கமாக இல்லை – இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளவர் இலங்கையைச் சேர்ந்த ஹெர்மன்குமாரா.

இவை எல்லாம் மறு கட்டுமான நடவடிக்கைகள் அல்ல – எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும் வேலை என்கிறார் குட்டல். ஊழல், திறமையின்மை பற்றி எல்லாம் பேசப்படும் கதைகள் மிகவும் ஆழமான மற்றொரு பெரும் ஊழலை மூடிமறைப்பதற்காக என்கிறார் குட்டல். பேரழிவுகளையும் சீரழிவுகளையும் பயன்படுத்தி லாபவேட்டையில் ஈடுபடும் புதிய முதலாளித்துவ வடிவத்தின் துவக்கத்தை அவை மூடி மறைக்கப் பார்க்கின்றன. இயற்கைச் சீரழிவுகள் மற்றும் யுத்தப் பேரழிவுகளால் மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற விரக்தியுணர்வு, அச்சம் ஆகியவற்றை பயன்படுத்தி தீவிரமான சமூகப் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வருவது இந்த முதலாளித்துவ வடிவத்தின் நோக்கமாக உள்ளது. மறுகட்டுமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் நடவடிக்கை களிலும் நிலங்களை வளைத்துப் போடும் வேலையிலும் மின்னல் வேகத்தில் ஈடுபடுகின்றன. தங்களை தாக்கியது எது என்று மக்கள் புரிந்து கொள்வதுற்கு முன்னரே இப்படிப்பட்ட நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இலங்கையைச் சேர்ந்த ஹெர்மன் குமாரா பின்வரும் மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அன்னிய கம்பெனிகளின் படையெடுப்பு, ராணுவமயமாக்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டாவது சுனாமியை இலங்கை சந்தித்து வருகிறது. முந்தைய சுனாமியை விட இது அதிகமான அழிவை ஏற்படுத்தக் கூடியது. சுனாமி நெருக்கடியைப் பயன்படுத்தி கடலையும், கடற்கரையையும் அன்னிய நிறுவனங்கள் கையிலும் சுற்றுலாத்துறையிடமும் ஒப்படைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கு அமெரிக்க கடற்படையின் உதவியும் பெறப்பட்டு வருகிறது.

பால் ஓல்போ விட் இராக் நாட்டில் இதே வேலையைத் தான் செய்தார். பாக்தாத் நகரம் பற்றி எரியும் போதே இராக் நாட்டின் முதலீட்டுச் சட்டங்கள் மாற்றப்பட்டன. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு அவசர அவசரமாக வெளியிடப்பட்டது.

இராக் நாட்டின் மறு சீரமைப்புப் பணிக்கான பொறுப்பு ஓல் போவிட் இடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் அவரது திறமையின்மை வெளிப்பட்டது. அதனை சுட்டிக்காட்டி அவர் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு லாயக்கற்றவர் என்று சிலர் வாதிடுகின்றனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் இயற்கைச் சீரழிவுகளை சந்தித்த நாடுகளிலும் உலக வங்கி இதுவரை எவ்வாறு செயல்பட்ட வந்துள்ளதோ அதே முறையில் தான் இராக் நாட்டில் ஓல் போவிட் செயல்பட்டுள்ளார். அந்த அடிப்படையில் பார்த்தால் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அவரை விடப் பொறுத்தமானவர் வேறு எவருமில்லை.

இப்போது மறுகட்டுமானப் பணிகள் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டன. எனவே, அவற்றை ஐ.நா. போன்ற அமைப்புகளிடும் விட்டு விடக்கூடாது. வறுமை ஒழிப்பு என்ற பெயரில் லாப வேட்டையில் ஈடுபடும் உலக வங்கி இப்போது மறு கட்டுமானப் பணிகளிலும் முன்னணிப் பாத்திரத்தை கைப்பற்றியுள்ளது. மறு கட்டுமானத் தொழிலில் ஏராளமான லாபம் கிடைக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இராக் நாட்டிலும் ஆப்கானிதானத்திலும் அமெரிக்காவின் ஹாலிபர்ட்டன் கம்பெனி 1000 கோடி டாலர் கான்டிராக்டை எடுத்துள்ளது. (இந்த கம்பெனி அமெரிக்க துணை அதிபர் டிக்சேனவுக்கு நெருக்கமான கம்பெனி) இந்த நாடுகளில் ஜனநாயகத்தைக் கட்டும் தொழில் பலநூறு கோடி டாலர் புழங்கும் தொழிலாக மாறியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை விற்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கும் பணியில் ஈடுபடும் ஆலோசகர் அமைப்புகளுக்கு பெரும் கொண்டாட்டம்தான். இந்த அமைப்புகள் அரசாங்க வேலைகளை நிறைவேற்றும் துணை ஒப்பந்தக்காரர்களாக ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இந்த வேலையில் ஈடுபட்டு வரும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பேரிங்பாயிண்ட் நிறுவனத்தின் வருவாய் ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் 34 கோடியே 20 லட்சம் டாலரை அது லாபமாக ஈட்டியுள்ளது. லாப விகிதம் 35 சதம்! சீரழிவை சந்திக்கும் நாடுகளுடன் தொழில் நடத்துவது உலக வங்கிக்கு பிடித்தமான ஒரு செயலாகியுள்ளது. ஏனென்றால் அவை உலக வங்கியின் உத்தரவுகளை ஒழுங்காக நிறைவேற்றக் கூடியவை.

இயற்கைச் சீரழிவு போன்ற பெரும் அழிவை சந்திக்கும் நாடுகள் உலக வங்கியிலிருந்து உதவி பெறுவதற்காக அது என்ன சொன்னாலும் கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பெரும் கடன் சுமையை ஏற்றுக் கொள்வதற்கோ தீவிரமான கொள்கை மாற்றங்களை நிறைவேற்றுவதற்கோ அவை தயங்குவதில்லை. குந்தக் குடிசைக்கும் உண்ண உவுக்கும் அல்லல்படும் நிலையில் உள்ள மக்களை தனியார்மயத்துக்கு எதிராக போராடுமாறு அழைப்பது அரசியல் அமைப்புகளுக்கு பெரும் ஆடம்பர வேலையாகத்தான் மாறி விடும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் சுயாதிபத்திய உரிமையே வரம்புக்குட்பட்டதாகி வருகிறது. உதவித் தொகையை முறையாக செலவு செய்யும் திறன் அற்றவையாக அவை கருதப்படுகின்றன. எனவே உதவித் தொகை உலக வங்கியின் பொறுப்பில் இயங்கும் ஒரு டிரட் நிதியிடம் ஒப்படைக்கப்பட்டு உலக வங்கியின் மேற்பார்வையில் செலவு செய்யப்படும். இந்தோனிசியாவிலிருந்து விடுதலை பெற்ற சின்னஞ்சிறு நாடான கிழக்கு டிமோர் நாட்டில் இதுதான் நடந்தது. இங்கே பொதுத்துறை வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டன. உலக வங்கியின் நிர்ப்பந்தத்தால் நியமனம் செய்யப்பட்ட அன்னிய ஆலோசகர் களுக்கு ஏராளமான தொகை ஊதியமாக அளிக்கப்பட்டது. (பென்மாக்சம் என்ற ஆய்வாளர் பின் வருமாறு கூறுகிறார். ஒரு அரசாங்கத் துறைக்காக நியமனம் செய்யப்பட்ட அன்னிய ஆலோசகர் ஒருவரின் ஒருமாத ஊதியம் அதே துறையில் பணிபுரியும் 20 திமோர் நாட்டு ஊழியர்களின் ஓராண்டு ஊதியத்திற்குச் சமமானது)

ஆப்கானிதானுக்கு உலக வங்கி அளித்துள்ள கடன் தொகையும் ஒரு டிரட் நிதி மூலம் பராமரிக்கப்படுகிறது. புதிய மருத்துவ மனைகள் கட்டுவதற்கு ஆப்கன் அரசின் சுகாதாரத் துறைக்கு நிதி வழங்க உலக வங்கி மறுத்து விட்டது. அதனால் பொது சுகாதாரப் பராமரிப்பு வேலை அங்கே தற்போது தனியார்வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அரசு சாரா தனியார் அமைப்புகளுக்கு உலக வங்கியின்  உத்தரவுப்படி நிதி அளிக்கப்படுகிறது. அவை சுகாதார நிலையங்களை மூன்றாண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தி வருகின்றன. நீர் விநியோகத்துறை, தொலை தொடர்புத்துறை, எண்ணெய், எரிவாயு, சுரங்கங்கள் போன்ற துறைகளிலும் தனியார்துறை கூடுதலான முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறையிலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும். அவற்றை அன்னிய தனியார் முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உலக வங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிதானத்தின் அரசமைப்பு முறையில் செய்யப்பட்டுள்ள இப்படிப்பட்ட முக்கியமான மாற்றங்கள் மக்கள் மன்றம் எதிலும் விவாதிக்கப்படவில்லை. உலக வங்கி நிர்வாகத்தைத் தவிர வெளியே உள்ள எவருக்கும் இந்த மாற்றங்கள் பற்றி எதுவுமே தெரியாது. ஆப்கானிதானத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கட்டமைப்பு முறையை சீர் செய்வதற்காக உலக வங்கி அளித்த அவசரக் கடன் தொடர்பான ஆவணங்களில் தான் இந்த மாற்றங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இவை எல்லாம் நடந்து முடிந்து விட்டன. அமெரிக்க பிராந்தியத்தப் உள்ள ஹைட்டி நாட்டிலும் இதே போன்ற கதைதான் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் சொல்லைக் கேட்க மறுத்த ஹைட்டி ஜனாதிபதி ஜீன் பெரட்ரண்டு அர்டிடே விரட்டியடிக்கப்பட்டார். உலக வங்கி 6 கோடியே 11 லட்சம் டாலர் கடனை ஹைட்டி நாட்டுக்கு வழங்கியுள்ளது. அந்த கடனுக்கான நிபந்தனையின் காரணமாக ஹைட்டி நாட்டி சுகாதாரத்துறையும் கல்வித்துறையும் கூட்டுத் துறையாக மாற்றப்பட்டுள்ளன. வங்கியின் ஆவணங்களின் படி பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் தனியார் கம்பெனிகள் நடத்தி வருகின்றன.

மேற்கு மண்டலத்துக்கான அமெரிக்கத் துணைச் செயலாளர் ரோகர் நொரீகா பின்வருமாறு தெரிவித்துள்ளார். உலக வங்கியின் குறிக்கோள்களை புஷ் நிர்வாகமும் ஆதரிக்கிறது. இதே திசை வழியில் ஹைட்டி நாடு முன்னேற நாங்கள் உற்சாகமளிப்போம். வேறு சில பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கவும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் உரிய நேரத்தில் ஹைட்டி அரசாங்கத்துக்கு வழிகாட்டுவோம் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று அமெரிக்கன் என்டர்பிரை இன்ட்டியூட் என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசும்போது தான் ரோகர் நொரீகா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஹைட்டி நாடு வலுவானதொரு சோசலிச அடித்தளத்தைக் கொண்ட நாடு. இதனால் தான் இந்த நாட்டில் மிகவும் சர்ச்சைக் கிடமான பல திட்டங்களை உலக வங்கி இந்த முறையில் நிறைவேற்றி வருகிறது. தற்போது ராணுவ ஆட்சி முறை போன்றதொரு ஆட்சி முறை நிலவும் சூழலில் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை – சோசலிச அடித்தளத்தை தகர்க்கும் நடவடிக்கைகளை உலக வங்கி நிறைவேற்றி வருகிறது. இப்போது இடைக்கால அரசு ஒன்று அமைந்துள்ளதால் இப்படிப்பட்ட பொருளாதார நிர்வாகமுறைகளை அமல்படுத்த முடிகிறது. எதிர்காலத்தில் அமையவுள்ள எந்த அரசும் இவற்றை மாற்றுவது கடினமானதாக இருக்கும் என்று உலக வங்கியின் ஆவணம் ஒன்று குறிப்பிடுகிறது. அரிடிடே வெளியேற்றப்பட்டதற்கே உலக வங்கி போன்ற அமைப்புகள் தான் காரணம். ஜனநாயக அமைப்பு முறை சரியாக இல்லை என்று கூறி ஹைட்டி அரசுக்கு முன்னர் ஒப்புக் கொண்ட கடணை வழங்க உலக வங்கி மறுத்து விட்டது.

இப்போது அரிடிடே வெளியேற்றப்பட்டு விட்டார். ஜனநாயக அமைப்பு முறை இல்லாத ஒரு சூழலில் உலக வங்கி களியாட்டம் போட்டு வருகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக பல நாடுகளுக்கு உலக வங்கியும் சர்வதேச நிதியமும் அதிர்ச்சி வைத்தியத்தை அளித்து வருகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றில் திடீர் ராணுவ புரட்சிகள் ஏற்பட்ட பின்னணியையும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் இந்த அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன. 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மிட்ச் சூறாவளி மத்திய அமெரிக்காவைத் தாக்கிய நேரத்தில் இயற்கைச் சீரழிவுகளில் ஆதாயம் பெறும் முதலாளித்துவ முறை தீவிர வேகத்துடன் செயல்படத் துவங்கியதாக பார்வை யாளர்கள் சிலர் கருதுகிறார்கள். அந்த சூறாவளியின் போது பல கிராமங்கள் முற்றிலும் சீரழிந்து போயின. 9000 பேர் மாண்டு போயின், மறு கட்டுமானத்துக்கான கடன்களை அந்த நாடுகள் கோரின. சர்வதேச நிதியமைப்புகள் பல்வேறு நிபந்தனைகளுடன் கடன் கொடுக்க முன்வந்தன.

கடன் பெறுவதற்காக, ஹொண்டுரா நாட்டின் பாராளுமன்றம் எடுத்த நடவடிக்கைகளை, புயலுக்குப் பின் நடந்தஅதிரடி விற்பனை என்று பைனான்சியல் டைம் ஏடு, மிகச் சரியாகவே வர்ணனை செய்தது. விமான நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், போன்றவைகள் மட்டுமல்ல, தொலைபேசி நிறுவனங்கள், மின்சார கம்பெனிகள், நீர் விநியோக அமைப்புகள் ஆகியவையும் அவசர அவசரமாக தனியார்மயமாக்கப்பட்டன. ஏற்கனவே செய்யப்பட்ட நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் சீர்குலைக்கப்பட்டன. அன்னியர்கள் உள்நாட்டில் சொத்துக்களை வாங்கவும் விற்கவும் வசதி செய்து தரப்பட்டது. ஹொண்டூரா நாட்டின் அண்டைநாடுகளும் இதே நிலையைத் தான் சந்தித்தன. அந்த இரண்டு மாதங்களில் குவாதிமாலா நாடு தனது தொலைபேசித் துறையை விற்பனை செய்வதைப் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டது. நிகாரகுவா நாட்டின் மின்சாரக் கம்பெனியும், பெட்ரோலியத் துறையும் தனியார்மயமாக்கப்பட்டன. வால்ரீட்ஜர்னல் பின்வருமாறு செய்தி வெளியிட்டது.

நிகாரகுவாவுக்கு அளிக்கப்பட ஒப்புக்கொண்ட 440 கோடி டாலர் அன்னிய உதவியின் பகுதியாக மூன்று ஆண்டுகளுக்கு 4.70 கோடி டாலர் உதவி அளிக்க உலக வங்கியும், சர்வதேச நிதியமும் முன்வந்தன. அதற்கான முன் நிபந்தனையாக தொலைபேசித்துறை தனியார்மயம் வலியுறுத்தப்பட்டது. டிசம்பர் 26-ந் தேதி நடந்த சுனாமிப் பேரழிவையும் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நாடுகளில் இதே போன்ற கொள்கை மாற்றங்களைக் கொண்டுவர உலக வங்கி முயற்சித்து வருகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் எவற்றுக்கும் கடன் நிவாரணம் எதுவும் அளிக்கப்படவில்லை. அவசர உதவி என்ற பெயருடன் கடன்கள் தான் வழங்கப்பட்டுள்ளன. உதவி எதுவும் கொடையாக வழங்கப்படவில்லை.

சுனாமியால் தாக்கப்பட்ட நாடுகளில் 80 சதம் அளவுக்கு பாதிப்பை சந்தித்தலை கடலோரங்களில் வாழ்ந்த மீனவக் குடும்பங்கள் தான் அந்த குடும்பங்களுக்கு உதவி செய்வதைப் பற்றி பேசுவதற்கு பதிலாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது பற்றியும் பிரம்மாண்டமான மீன் பண்ணைகளை அமைப்பதைப் பற்றியும் தான் உலக வங்கி பேசி வருகிறது. சாலைகள், பள்ளிக் கூடங்கள், போன்ற பொதுக் கட்டமைப்புகளை சீரமைப்பதற்கு அரசாங்க பொது நிதியை பயன்படுத்தினால் அது அவற்றுக்கும் பெரும் சுமையாக இருக்குமாம். எனவே அவற்றை எல்லாம் தனியார்மயமாக்கி விடுவது நல்லதாம் இவ்வாறு உலக வங்கி கூறுகிறது. (தனியார்மயத்தைத் தவிர வேறு யோசனையே உலக வங்கிக்குத் தோன்றுவதில்லை) சில குறிப்பிட்ட முதலீடுகளுக்கு தனியார் அமைப்புகளை பயன்படுத்து மாறும் உலக வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது. ஹைட்டி முதல் இராக் வரை மறுகட்டுமான நடவடிக்கைகள் எவ்வாறு நடைபெற்றனவோ அவ்வாறு தான் சுனாமி தொடர்பான மறுகட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. எங்கேயுமே அழிந்தவைகளை முன்பிருந்தது போல கட்டுவதற்கு காண திட்டங்கள் இல்லை.

இலங்கை, தாய்லாந்து, இந்தோனிசியா, இந்தியா போன்ற நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் ஓட்டல்களும், தொழிலகங்களும் தங்களின் மறு கட்டுமானப் பணிகளை துவங்கி விட்டன. ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை கடற்கரைப் பகுதிகளில் மீண்டும் கட்டுவதற்கு தடை விதிக்கும் சட்டங்களை இந்த நாடுகள் இயற்றியுள்ளன. கடற்கரைப் பகுதியில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையிலிருந்து தொலைவான இடங்கள் குடியமர்த்தப்படுகின்றனர். அசே பகுதியில் ராணுவ முகாம்களைப் போன்ற குடியிருப்புகளிலும் தாய்லாந்தில் கான்கிரீட் பெட்டிகள் போன்ற குடியிருப்பு வீடுகளிலும் லட்சக்கணக்கான மக்கள் வலுக் கட்டாயமாக குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். கடற்கரை நெடுகிலும் முன்பிருந்த திட்டுத் திட்டான மீனவக் குடியிருப்புகள் அழிந்து போய்விட்டன. அவற்றை மீண்டும் உருவாக்க திட்டமிடப்படவில்லை. மீனவக் குடியிருப்புகளும் வலைகளை காயப்போட மீனவர்கள் பயன்படுத்திய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்கும் இடங்களாக மாறி வருகின்றன. கடற் பகுதிகள் மீன் பிடிப்பதற்கான ராட்சத கப்பல்கள் ஒதுங்குவதற்கான இடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கும் மீன்பிடிக்கும் கம்பெனிகளுக்கும் வசதி செய்து கொடுப்பதற்காக தனியார் விமான நிலையங்களும் நெடுஞ்சாலைகளை அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உலக வங்கி போன்ற அமைப்புகள் பெருந் தொகையை கடனாக வழங்கி வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளில் அரசாங்க அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், அன்னிய முதலீட்டாளர்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்க உள்துறை செயலாளற்கான காண்டலீசாரை தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுனாமி ஒரு அற்புதமான வாய்ப்பாக அமைந்தது நமக்கு பெரிய அளவு ஆதாயத்தை அது வழங்கியுள்ளது இவ்வாறு தனது மனதில் தோன்றியதை நாசூக்கு எதுவுமின்றி பிரதிபலித்துள்ளார். மனித குலத்துக்கு பெரும் சீரழிவை ஏற்படுத்திய ஒரு இயற்கை உற்பாதத்தை ஆதாயம் அடைவதற்கான வாய்ப்பாகக் கருதிய அந்த அம்மையாரின் கருத்து பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. ஆனால் உண்மையில் ரை தனது முழு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திவிட வில்லை. சற்று அடக்கியே தான் வாசித்துள்ளார். தாய்லாந்தைச் சேர்ந்த சுனாமியிலிருந்து தப்பிழைத்தோர் அமைப்பு பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளது. தொழிலதிபர்களும் – அரசியல் வாதிகளுடம் கடவுளிடம் விடுத்த வேண்டுகோளுக்கு பரிசாகக் கிடைத்தது தான் சுனாமி ஆழிப் பேரலைகள் கடலோரப் பகுதி நெடுகிலும் சுற்றுலா மையங்கள், ஓட்டல்கள், சூதாட்ட விடுதிகள், இரால் மீன் பண்ணைகள் ஆகியவற்றை நிர்மாணித்து கொள்ளை லாபம் அடிக்க நீண்ட காலமாக ஆசைப்பட்டு வந்தனர். அவர்களின் ஆசை நிறைவேறாமல் தப்பி பெருந்தடையாக மக்கள் குடியிருப்புகளெல்லாம் சுனாமியால் தற்போது துடைத் தெறியப்பட்டு விட்டன. இந்த கடலோரப் பகுதிகளெல்லாம் அவர்களைப் பொறுத்தவரை வெட்க வெளிகளாக மாறிவிட்டன. இயற்கைச் சீரழிவுகள் எல்லாம் வசதிபடைத்த கூட்டத்துக்கு கடவுள் வழங்கியுள்ள அருட்கொடையாக இன்று மாறியுள்ளன.

நவோமி கிளெய்ன



%d bloggers like this: