மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஜோசப் ஸ்டாலின் 3


 I 1 I –  I 2 I – I 3 I – I 4 I – I 5 I

புதிய அரசு மூன்று அரசு ஆணைகளை உடனடியாக பிறப்பித்தது.

  1. சமாதனம் தேவை – நாங்கள் தயார்
  2. பேச்சுவார்த்தை நடத்து என்று உலகப் போரில் ஈடுபட்டிருந்த அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள். நிலம் முழுவதும் அரசின் உடமை நேரடியாகப் பாடுபடுவோர் அதன் உரிமையாளர்கள்.
  3. அரசின் அதிகாரம் வட்டார அளவில் செயல்படும். தொழிலாளி – விவசாயி – இராணுவ வீரர்கள் கொண்ட சோவியத்துகளுக்கு என்பது உடனடியாக அறிவிக்கப்பட்டது.

தோழர் லெனின் தலைமையில் அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது. தோழர் ஸ்டாலின் அமைச்சர்களில் ஒருவராக இருந்தார். தேசிய இனங்களுக்கான அமைச்சராக செயல்பட்டார். மொத்தம் டிராட்ஸ்கி உட்பட 15 பேர் அமைச்சர்களாக இருந்தனர். 101 உறுப்பினர்கள் கொண்ட மத்திய நிர்வாகக் குழு கட்சியில் தேர்வு செய்யப்பட்டது.

மென்ஷ்விக்குகள் என்று ஒரு பிரிவினரை பற்றி பார்த்தோம் அல்லவா. அவர்கள் சிறுபான்மையினர்தான். ஆயினும் தோழர் லெனினுக்கு தொடர்ந்து விரோதமாக இருந்தனர். அவரை அரசில் சேர்க்கக் கூடாது என்றனர். சுருக்கமாகக் கூறினால் தலையற்ற உடலைக் கோரினர். டாலின் அவர்களைச் சீறினார். லெனின் பக்கம் உறுதியாக இருந்தார். புரட்சி முடிந்து 7 நாளில் நாட்டு மக்களுக்கு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. தோழர் லெனினும், ஸ்டாலினும் இதைத் தயாரித்தனர். இவ்வறிக்கை கீழ்க்கண்ட கருத்துக்களைப் பிரகனடம் செய்தது.

  1. ரஷ்ய மக்கள் அனைவரும் சமமானவர்கள்.
  2. தேசிய இனங்கள் சுதந்திரமானவை. தேவை ஏற்பட்டால் பிரிந்து சென்றும் அரசு அமைக்கலாம்.
  3. அனைத்து சிறுபான்மையினரும் சுதந்திரமான வளர்ச்சி பெற வேண்டும்.
  4. எந்த மதத்திற்கும் சிறப்பு சலுகை இல்லை – தடைகளும் இல்லை.
  5. இந்தக் கருத்துக்களுக்கு எதிராக கட்சிக்குள் சிலர் குழப்பம் செய்து கொண்டு இருந்தனர்.

இவர்களைக் கண்டித்து லெனினுடன் சேர்ந்து ஸ்டாலினும் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

பின்லாந்தில்:

1917 நவம்பர் 14 அன்று பின்லாந்து சென்றார். கட்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அவர்களை வாழ்த்தினார். பின்லாந்து விடுதலை பெற்று தன்னாட்சி அமைக்க அறிவிப்பு செய்தார். அதே ஆண்டு டிசம்பர் 18 அன்று தோழர் லெனின் – ஸ்டாலின் கையெழுத்துடன் இந்த ஆணையை வெளியிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு சிலரிடம் இருந்தது. தோழர் லெனின் துணையுடன் ஸ்டாலின் இதை சமாளித்தார். தொடர் முயற்சி அரசிற்கும் மதத்திற்கும் உள்ள உறவு பிரிக்கப்பட்டது. தேவாலயங்கள் வேறு – அரசு வேறு என்று வெவ்வேறு ஆக்கப்பட்டது. அதே சமயம் ஒவ்வொரு குடிமகனுக்கும் மதச்சுதந்திரமும் வழிபாட்டு சுதந்திரமும் உறுதி செய்யப்பட்டது. உலக யுத்தம் துவங்கி நடைபெறும் காலமாக இது இருந்தது. ஏற்கனவே இருந்த அரசு தன்னை யுத்தத்தில் ஈடுபடுத்தியிருந்தது. இதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள தோழர் லெனின் தலைமையிலான அரசு விரும்பியது.

அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்தது. 1918 – ஜனவரியில் ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் மற்றும் அமெரிக்காவிலும் இருந்த புரட்சிகர, குணம் கொண்ட சோசலிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கட்சிகளின் மாநாடு கூட்டப்பட்டது. இதில் ஸ்டாலின் முக்கியப் பங்கு வகித்தார். இது மூன்றாவது அகிலம் உருவாக உதவியது. உலக யுத்தம் உலக முதலாளித்துவ சக்திகளால் நடத்தப்படுகிறது. இதனைத் தொழிலாளி வர்க்கம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கருத்து தோழர் லெனினால் முன்வைக்கப்பட்டது. ரஷ்யாவில் யுத்தமற்ற சூழல் இருந்தால்தான் முன்னேற்றப் பணிகளை நிறைவேற்ற முடியும் என்பதையும் வற்புறுத்தினார். டிராட்ஸ்கி போன்ற சிலர் இதை ஏற்கவில்லை. தோழர் ஸ்டாலின் லெனின் பக்கம் நின்றார். டிராட்ஸ்கியின் துரோகச் செயலைக் கடுமையாகக் சாடினார். ஜெர்மனி ரஷ்யாவைத் தாக்கியது. போரைத் தொடர்ந்தது. ரஷ்யாவின் பழைய இராணுவம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தோழர். லெனின் மக்களை வேண்டினார். புதிய இராணுவம் செம்படை என்ற பெயரில் அமைந்தது. இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜெர்மனியின் முயற்சி முறியடிக்கப்பட்டது. முறுக்கிக் கொண்டு வந்த ஜெர்மனி முறியடிக்கப்பட்டதும் பணிந்தது. சமாதான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

இக்காலத்தில் பாதுகாப்புக் கருதி ரஷ்யாவின் தலைநகர் பெட்ரோகிராடில் இருந்து மாஸ்கோவுக்கு மாற்றப்பட்டது. ஜெர்மனியர் தாக்குதல் பெட்ரோகிராடுக்கு அருகாமையில் வந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டது.

கட்சியின் பெயரும் ரஷ்யக் கம்யூனிட் கட்சி (போல்ஷ்விக்) என்று மாற்றப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்த ஏழை விவசாயிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்களை ஒடுக்கி வந்த குலாக்குகள் என்னும் பிரிவினர் ஒடுக்கப்பட்டனர்.

இரண்டு எதிர்ப்புகள்:

புரட்சிகர அரசு உழைப்பாளி மக்களின் அரசாக உறுதிப்பட்டுவிட்டால் நமது நாடுகளிலும் இதே நிலைமை ஏற்பட்டு விடும். இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற முனைப்புடன் உலக ஏகாதிபத்திய சக்திகள் செயல்பட்டன. அதே சமயத்தில் உள்நாட்டில் தங்கள் சுரண்டல் கொள்கை நின்றுவிடுமே என்ற அச்சத்துடன் முதலாளிகளும், தங்கள் நிலங்களை இழந்த உடமையாளர்களும் அரசை எதிர்த்தனர். இவர்களுக்கு ஆதரவாக உள்நாட்டில் இருந்த சுரண்டும் வர்க்க ஆதரவு கட்சிகளும் செயல்பட்டன.

முறைப்படி போர் அறிவிப்பு செய்து போர் தொடுப்பது தான் முறை. ஆனால் அதனைக் கைவிட்டு திடீர் என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யாவைத் தாக்கின. உலகின் மிகப் பெரிய நாடுகள் புதிய அரசைத் தாக்கின.

வெண்படை என்ற பெயரில் மிகவும் மோசமான புண்படை ஒன்று ரஷ்யாவில் இருந்தது. அதனை ஆதரித்து ஏற்கனவே மக்கள் அமைத்திருந்த சோவியத்துக்களைக் கலைத்தனர். வெண்படை அரசை அமைத்து முதலாளித்துவ நிர்வாகத்தை ஏற்படுத்தினர்.

எதிர் புரட்சி சக்திகள் ஊக்குவிக்கப்பட்டன. தோழர். ஸ்டாலின் பணிகள் கூடுதல் ஆயின. அவரது தலைமையில் புரட்சிகர இராணுவ கவுன்சில் அமைக்கப்பட்டது. செம்படை பலப்படுத்தப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர்களும், அவர்கள் தலைமையில் இருந்த தொழிலாளி வர்க்கமும் இப்பணிக்கு உறுதுணையாக இருந்தனர். உணவுத் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. உற்பத்தி நடைபெற முடியவில்லை. இந்தச் சூழலிலும் தளரா உறுதியுடன் போரிட்டு முறியடித்தனர். அகில ரஷ்ய மத்திய நிர்வாகக்குழுவிற்கும், தலைமைக்குழுவிற்கும் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர். லெனின் அவர்களின் உதவியாளராகவும் செயல்பட்டார். போர் முனையில் தோல்வி ஏற்படும் இடங்களுக்கு நேரில் அனுப்பப்பட்டு பலவீனத்தைப் போக்கி வெற்றி கொள்ளச் செய்தார்.

1919 மார்ச் 18 முதல் 23 வரை மாகோவில் கட்சியின் 8-வது மாநாடு நடைபெற்றது. போர்த்துறையின் அமைச்சராக இருந்த டிராட்ஸ்கியின் செயல்கள் கடும் விமர்சனத்திற்கு ஆளாயின. தொழிலாளர், விவசாயிகள் கொண்ட இராணுவம் அமைக்கப்படுவதன் அவசியத்தை ஸ்டாலின் முன்வைத்தார்.

இம்மாநாட்டில் கட்சியின் உயர்மட்டக்குழுக்களுக்கு தேர்வு செய்யப்பட்டார். உள்துறை அமைச்சராகவும் ஆனார். இவரது தலைமையில் இயங்கியவர்கள் பாராட்டை எதிர்பாராமல் கடுமையாக உழைத்தனர்.

மணவாழ்க்கை

1919 மார்ச் 24 அன்று நாடியா அலுவாலியா என்னும் நங்கையை மணமுடித்தார். இக்குடும்பம் ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமாக இருந்த குடும்பம். ஜார் ஆட்சிக் காலத்தில் பணியாளர் குடியிருப்பாக இருந்த பகுதியில் ஒரு சிறிய வீட்டில் அவரது இல்லறம் நடந்தது.

இதே காலத்தில் வெண்படையின் கொட்டத்தை அடக்க செஞ்சேனைக்குத் தலைமை தாங்க கட்சியால் அனுப்பப்பட்டார். அப்பணியையும் திறம்பட நிறைவேற்றினார். போர்க் கலையில் வல்லவராகத் திகழ்ந்தார்.

1917 நவம்பர் திங்கள் புரட்சிகர அரசு அமைந்தது என்று பார்த்தோம் அல்லவா, அதற்கு முன்பு நடந்த சேதத்தை விட பின்பு நடைபெற்ற தேசம் கொடியதாக இருந்தது. அந்நிய நாடுகளின் தாக்குதல், உள்நாட்டு எதிர்புரட்சி சக்திகளின் தாக்குதல் இவற்றினாலும், பஞ்சம் பட்டினியாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சம், பொருட் சேதம் 6000 கோடி டாலர்.

1918 ஆம் ஆண்டு பேனி காப்ளான் என்னும் கொடியவளால் தோழர் லெனின் சுடப்பட்டார். குருவி தலைமையில் பனங்காய் என்பது போன்ற சூழல் புதிய அரசிற்கு ஏற்பட்டது. இதற்காக ஏகாதிபத்திய நாடுகள் செலவிட்டது பல்லாயிரம் கோடிகள். இச்சூழலில் தோழர். லெனின் தலைமையில் உறுதியாக நின்று ஸ்டாலின் செயல்பட்டார்.

கட்சி பலம்:

கட்சியின் தரத்தையும், உறுப்பினர் எண்ணிக்கையையும் உயர்த்த அயராது உழைத்தார். 1917 ஆம் ஆண்டு புரட்சி நடந்த காலத்தில் இரண்டரை லட்சமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 7 லட்சமாக 1920 நவம்பர் மாதம் இருந்தது. தோழர். லெனின் வழிகாட்டலின் பேரில் சக தோழர்களுடன் இணைந்து இப்பணி நிறைவேற உதவினார்.

கருத்து வேறுபாடுகள்:

தொழில் வளர்ச்சி, வேளாண்மை வளர்ச்சி ஆகியவற்றில் கருத்து வேறுபாடுகள் வந்தன. போர்க்காலத்தில் இருந்த அணுகுமுறையை மாற்றி புதிய பொருளாதார அணுகுமுறை வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார். முதலாளித்துவத்தின் சில அம்சங்களை நாம் அனுமதிக்கலாம். அதே சமயம் கட்டுப்பாட்டு அதிகாரம் நம்மிடம் இருக்க வேண்டும். அடிப்படையான தொழில்கள் நம்மிடம் இருக்க வேண்டுமென்றார்.

இது புதிய பொருளாதாரக் கொள்கை என்று அறிவிக்கப்பட்டது. 1921 மார்ச் 8 அன்று நடைபெற்ற கட்சியின் பத்தாவது காங்கிர இதனை நிறைவேற்றியது. கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள் ஜனநாயகப் பூர்வமாக நடத்தப்படக் கூடாது என்று டிராட்ஸ்கி போன்றோர் கருதினர். லெனின் மறுத்தார். தொழிற்சங்கங்கள், நிர்வாகப் பயிற்சி, மேலாண்மைப் பயிற்சி மற்றும் கம்யூனிசப் பயிற்சிக்கான பள்ளிகள் என்று கூறினார்.

“நமது கருத்து வேறுபாடுகள்” என்ற தலைப்பில் ஸ்டாலின் “பிராவ்தாவில்” எழுதிய கட்டுரையும் இதை வழிமொழிந்து இருந்தது. கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் போக்குகளையும் கண்டித்தனர்.

உடல்நலம் குன்றல்:

1920-21ல் ஸ்டாலின் இருமுறை உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டார். குடல் சுழற்சி நோய் தாக்கியது. அறுசை சிகிச்சை செய்ப்பட்டது.

புதிய பொறுப்புகள்:

இதற்கு மத்தியில் பொறுப்புகளும் அதிகரித்தன. தேசிய இன அமைச்சராக ஸ்டாலின் இருந்தார் என்று பார்த்தோம் அல்லவா? அன்றைய ருஷ்யாவின் மக்கள் தொகை 14 கோடி. இதில் ருஷ்யர் அல்லாதவர் 6.50 கோடி. இவர்களது நலனைப் பாதுகாக்கும் பொறுப்பை ஸ்டாலின் நிறைவேற்றினார்.

ஜார் ஆட்சிக் காலத்தில் இருந்த ஊழியர்கள் மக்களை நேசிக்காதவர்களாக இருந்தனர். தேவையற்ற தாமதம் செய்தனர். ஊழலில் திளைத்தனர். இதனை கண்காணித்து ஒழுங்கமைக்க தொழிலாளர் – விவசாயிகள் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இது ராப்க்ரின் என அழைக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்புத் துறை அமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். 1922 ஏப்ரல் 3 அன்று விரிவடைந்த மத்தியக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தோழர் ஸ்டாலின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2 responses to “ஜோசப் ஸ்டாலின் 3”

%d bloggers like this: