கட்சிக் கல்வியின் பணி என்பது தற்பொழுது உள்ள கட்சிக் உறுப்பினர்களை உறுதிப்படுத்துவது, கட்சிக் உறுப்பினர்களுக்கு வகுப்பெடுப்பது என்று மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக கட்சிக் விரிவாக்கத்திற்கான தளத்தை உருவாக்குவதேயாகும்.
உலகத்தின் பல பகுதிகளின் இயக்க அனுபவங்களைப் பார்க்கையில் உறுப்பினர் உறுதி என்பது போராட்டங்கள் மூலமே சாத்தியம் என நிரூபணமாகிறது. எனவே கட்சிக் கல்வி என்பது கட்சிக் விரிவாக்க நோக்கத்தை கொண்டதாகவே அமைவது அவசியம்.
கட்சிக் கல்வி என்பது வெறும் தத்துவம் சார்ந்ததல்ல. அது நடைமுறை சார்ந்ததாகும். கட்சிக் விரிவாக்கம் இரண்டு தேவைகளுக்காக – ஒன்று, அரசியல் தேவை காரணமாக மற்றது ஸ்தாபன ரீதியான செயல்பாட்டு இயலாமைகளை தகர்க்க அவசியமாகிறது.
கட்சிக் கல்வி நம் அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டங்கள் பிரச்சினைகள் தொழிலாளி வர்க்க பார்வையுடையதாக அமைகிறதா என்ற கேள்வியை எழுப்பிப்பார்க்க உதவிடும். மேலும், அவை தொழிலாளி வர்க்கத்தையே மையப்படுத்தி அமைவதை கட்சிக் கல்வி உறுதி செய்யும்.
நமது கட்சிக்யின் எல்லா மாநாடுகளிலும், கட்சிக் கல்வி பற்றிய பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம், கட்சிக் கல்வி என்பது புதுப்பித்துபட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அனுபவங்கள் மூலம் மாற்றங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும். மாற்றம் அடையாத எதுவும் தேங்கி மக்கி விடும் என்பது அனுபவம்; 18வது கட்சிக் காங்கிரஸ், கட்சிக்யின் விரிவாக்கம் வேகமாக நாடு தழுவிய முறையில் பரவ வேண்டும் என்பதன் அரசியல் முக்கியத்துவத்தை கோடிட்டு காட்டுகிறது. அதற்கு கட்சிக் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டியதில்லை. அது பற்றிய சில கோட்பாட்டு பிரச்சினைகளை இக்கட்டுரை விவாதிக்கிறது. எனவே எல்லோருக்கும் ஒரே பாடம் என்பது சரியல்ல.
இன்றைய கல்வி முறையில் ஜனநாயகம் இல்லை என்று பெரிதும் கவலைப்பட்டு விமர்சிக்கிறம். அறிவுள்ளோர், அறிவற்றோர்க்கு பயிற்றுவித்தல் என்ற பாணியில் இது நிகழ்வதாக குறைப்படுகின்றோம். ஆனால், நம் கட்சிக் கல்வி முறையை நாம் ஜனநாயகப்பூர்வமானதாக அமைக்கிறோமா? என பரிசீலிக்க வேண்டும். கட்சிக் கல்வி முறையை ஊழியர்கள் தொடர்புடையதாய் ஊழியர்க்கேற்றதாக அமைத்தல் என்பது வெறும் வடிவம் சம்மந்தமான பிரச்சினை மட்டுமே அல்ல.
கட்சிக் ஊழியரின் அரசியல்தன்மையை பொருத்தே கட்சிக்யின் அரசியல் தன்மை உள்ளது. அவரின் அரசியல்தன்மை செயல்பாட்டிலிருந்தே உருவாகிறது. எனில் அவரின் செயல்பாட்டு முறைகளை செழுமைப்படுத்துவதே, கூர்தீட்டுவதே கட்சிக் கல்வி பணியாகும். கட்சிக் ஊழியரின் செயல்பாட்டில் தாக்கம் விளைவிப்பது அல்லது தலையீடு செய்வது என்பது பலகூறுகளை கொண்டது. கட்சிக் ஊழியர் செயல்படும் அரங்கம், அவரிடம் கோரும் செயல்பாடுகளை நிறைவேற்ற அவர் திறன் உடையவராக உள்ளாரா? எப்படி இதை அறிவது? இது அவரின் தனிப்பட்ட திறமையை பொறுத்தது அல்ல. தொழிலாளி வர்க்கத்தை திரட்டுவதில் உள்ள சவால்களும், கம்யூனிஸ்ட்டுகளின் முன்னுள்ள அரசியல் சவால்களுமே தனிப்பட்ட ஊழியரின் செயல்திறனின் தேவை அளவை நிர்ணயிக்கிறது. இந்த புரிதலில் சமரசம் கூடாது.
ஒரு பகுதியில் விவசாயிகள் சந்திக்கிற பிரச்சினைகள், அரசுக் கொள்கையின் தாக்கங்கள், பொதுவாக சமூகத்தில் நிலவுகின்ற உழைப்பு குறித்த பார்வையில் உள்ள கோளாறுகள், விவசாயிகள் ஒருங்கிணைவதற்கு எதிராக வர்க்கத்திற்குள்ளேயே இயங்கும் இயல்புகள் போன்றவற்றையெல்லாம் குறித்த ஓர் ஒருங்கிணைந்த பார்வையை விவசாய அரங்கம் ஊழியர்க்கு தருவது இவைகளெல்லாம் வெளியே இருந்து இறக்குமதி செய்ய முடியாது. அவர் செயலாற்றும் விவசாய அரங்கத்தின் மூலமே அவர் கற்க முடியும்.
தொழிலாளி வர்க்கம்
கட்சிக் கல்வியை தனித்து பார்ப்பது சரியல்ல; அவர் செயல்படும் வெகுஜன அரங்கத்தில் கம்யூனிச நெறிகளை, நடைமுறைகளை பின்பற்ற உதவிடும் வகையில் அமைய வேண்டும்.
எனவே, குறிப்பிட்ட செயல்தளத்தில் செயல்படும் குறிப்பிட்ட ஊழியருக்கான, குறிப்பிட்ட கட்சிக் கல்வி தேவை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து, கட்சிக்க் கல்வியை கொண்டு செல்ல வேண்டிய அவசியமிருக்கிறது.
அனைத்து கட்சிக் ஊழியருக்குமான பொது கட்சிக் கல்வி என்பது கம்யூனிஸ்ட் அணுகுமுறை ஆகாது. இதை எப்படி நிறைவேற்றுவது?
செயல்தளம் என்பது, பல்வேறு வகையாக உள்ளது. அது வெகுஜன அரங்கத்திற்கு வேறாகவும், தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு வேறாகவும் உள்ளது. ஒவ்வொரு ஊழியரும் தான் செயல்படும் அரங்கத்திற்கு தேவையான பார்வையை சமூக அரசியல், பொருளாதாரம் குறித்த பார்வையை ஆழப்படுத்திக் கொள்ளவும், சர்வதேசிய, தேசிய புரிதலை உள்ளூர் நிலைமைகளுக்கேற்றவாறு பொருத்திப் பார்க்கவும் கட்சிக் கல்வி உதவ வேண்டும்.
ஒவ்வொரு அரங்கவாரியாக ஊழியர்களின் கற்கும் திறனை கொண்டு ஊழியர்களை வகைப்படுத்துதல் இதில் அவர்களின் சுயகல்வி / சமூக பின்னணியையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
பின் ஒவ்வொரு வகையினருக்குமான தனித்தனி பாடத் திட்டத்தை வகுத்தல். இது கல்விக்குழுவின் பணியாக இருக்க வேண்டும். இப்பயிற்றுவித்தலுக்கான பல்வேறு வடிவங்களை உருவாக்குதலும் அவசியமாகிறது. இதற்கு உதவக்கூடிய குறும்படங்கள், படக்காட்சிகள், குழு கலந்துரையாடல் என்பவற்றை பயன்படுத்த முடிந்தால் சிறப்பாக இருக்கும். கரும் பலகை முதல் மிக எளிய சாதனங்களையும் பயன்படுத்தலாம். ஓர் ஆண்டிற்கான அரங்கம் வாரியாக பாடத் திட்டத்தை உருவாக்குதல் உதாரணமாக,
- அந்த அந்த அரங்கங்கள் முன்வைக்கின்ற பிரதானமான கோஷங்கள் (DYFI எல்லோருக்கும் வேலை, SFI எல்லோருக்கும் கல்வி) போன்றவற்றின் பின்னுள்ள அரசியல், பொருளாதார கூறுகளை புரிய வைக்கும் அம்சம் அப்பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டும். வேலை உத்திரவாத சட்டம் பற்றிய முழு புரிதலை கொடுப்பதின் மூலம் வேலையின்மை குறித்த சூழலை எதிர்கொண்டு தீர்வு தேடுவதையும் புரியவைக்கலாம். வேலைவாய்ப்புக்கும் – பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பை, உபரி, உழைப்பு, மூலதனம் என்று சகலவற்றையும் இதைக்கொண்டு புரிய வைக்க வேண்டும். இதை மாதாந்திர அரங்க கூட்டமாக நடத்திட அரங்கத்திற்குள் இருக்கும் தகுதி வாய்ந்த தோழர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கொண்டு நடத்த வேண்டும். இதை ஒருங்கிணைக்கும் பணிதான் கல்விக்குழு பணி. இதற்கான தோழர்களை (வகுப்பாசிரியர்கள்) பயிற்றுவிக்கும் பணியை கல்விக்குழு மேற்கொள்ளும். இது தலைப்புகளுக்கான குறிப்புகளை தேடுதல், வகுப்பாசிரியர்களோடு விவாதித்தல், இறுதிப்படுத்துதல் என பலதும் செய்ய வேண்டும். இவை குறிப்பிட்ட அரங்க செயல் தளத்திற்கானவை.
- ஒவ்வொரு ஊரிலும் நம் அரசியல் தளத்தை விரிவாக்க புதிய தளங்களை உருவாக்க திட்டமிட்ட துல்லியமான முயற்சிகள் தேவை. இதில் ஊரில் வசிப்போரின் பின்புலம், தொழில் நிலைமை, வர்க்கப் பிரிவு என அடையாளம் காண வேண்டும். தொழிலாளி வர்க்கம் எப்பகுதியில் எவ்வளவு குடும்பங்கள் வசிக்கின்றன என அறிய வேண்டும். பகுதிவாரியான, தொழிலாளி வர்க்க குடியிருப்புகளின் வரைபடம் உருவாக்கல். இந்த அடையாளம் காணலின் மூலம் அந்த அந்தப் பகுதியினரிடையே புதிய அரசியல் தளத்தை நமக்காக உருவாக்க கற்ப்பிப்பது, கட்சிக் கல்வியாக அமைய வேண்டும். உலகமயம் போன்றவற்றின் தாக்கம் நேரிடையாக வெளிப்படுவது குடும்பங்களுக்குள் என்பதாலும் இதற்கான எதிர்வினையாற்றும் போராட்ட சக்தியை இத்திரனுக்குள்ளேயே நாம் உருவாக்க வேண்டியிருப்பதாலும் மாற்றங்கள் விளைவிக்கும் சக்தியும் இவற்றிலேயே பொதிந்து இருப்பதாலும் மக்கள் பிரிவுவாரியாக நம் செயல்பாடு அமைதல் வேண்டும். பிரைமரி சென்சஸ் அப்ஸ்ட்ராக்ட் உதவியுடன் குழுக்களாக சென்று கிராமவாரியாக மேப்பிங் பணியை செய்ய வேண்டும். வர்க்க பகுதியினரின் சகல விவரங்களடங்கிய தகவல் தொகுப்பை கிராமவாரியாக உருவாக்குதல். இப்பணியை கட்சிக்க் கல்வி இடைக்கமிட்டியோடு ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.
- இப்படி அடையாளம் அறிந்த பின் வர்க்கவாரியாக மக்களை அணிதிரட்ட நாம் ஊடுருவ தேவையான செயல்வடிவங்களை, யுத்திகளை உருவாக்க வேண்டும். இதில் அந்த அந்த பிரிவினரிடையில் நாம் ஆற்ற வேண்டிய பணிகளை பட்டியலிடுதல், இவற்றில் நீண்டகால பணிகள், உடனடியான பணிகள் என பிரித்தல். இதற்கான செயல்திறனை ஊழியர்களிடையே உருவாக்க தனித்திறன்களை வளர்த்தல்.
பயிற்சி
வர்க்கப் பிரச்சினையை சார்ந்த பகுதிவாரியான போராட்டங்களை வடிவமைப்பதற்கான பயிற்சி. போராட்ட காலங்கள் இல்லாத பொழுதும் நம் அரசியல் தளத்தை விரிவுப்படுத்த ஆற்றவேண்டிய தொடர் பணிகள் பற்றிய பயிற்சி.
அறிவு என்பதும் எல்லாவற்றையும் நுகர்வதுபோல நுகரப்படக்கூடியதாக மட்டுமே நம்மில் பலரால் பார்க்கப்படுகிறது. பிரச்சினைகள் குறித்து பெறும் அறிவை கொண்டு எப்படி எதிர்வினையாற்றுவது / இயங்குவது என முயற்சிக்காமல் இருப்பவர்கள் கட்சிக்க்கு மிகுந்த அபாய சக்திகளாகும். இப்படியானவர்கள் கட்சிக் வளர்ச்சிக்கு தடைகளாகவும் இருப்பர். கட்சிக் தோழர் பெறும் அறிவு அனுபவங்கள் அவரின் தனிப்பட்ட சொத்து அல்ல. அதன் மீது அவர் செயலாற்றுவதால் கட்சிக் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டியது அவரின் கடமையாகும். செயல்படாமல் இருக்க அறிவாளி முத்திரையோடு மட்டும் கட்சிக்க்குள் இடத்தை பெற முயல கட்சிக் ஊழியர்க்கு எப்பொழுதும் உரிமையில்லை. செயல்பாடற்ற அறிவு / தகவல் நுகர்வு என்பது அதிகாரம் சார்ந்த அரசியலுக்கே மாற்றத்திற்கான அரசியலுக்கு அல்ல.
கட்சிக் ஊழியர்களை செயலாற்றுவதற்கு பல சமயங்களில் தடையாக உள்ள தனிநபர் உறவுகளில் உரசல், மானப்பிரச்சினை, அதிகார தேடல்கள் ஆகியவற்றை கட்சிக் கல்வி மூலம் போக்கிட கூட்டுத் தேடுதல் முறையிலான கல்வி முறையே இதை சாத்தியமாக்கும்.