அனில் பிஸ்வாஸ்
மாவோயிஸ்ட்டுகள் கொரில்லா யுத்தக் கொள்கையிலேயே பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் உபதேசத்தின் உள்ளடக்கத்தின் அமைப்பை லெனினைக் கொண்டே நாம் விளக்கலாம். ஒரு தொழிலாளி வர்க்க கட்சியானது கொரில்லா யுத்தத்தை மட்டும் தனது பாதையாக பின்பற்றுவது என்பதை கருத்தில் கொள்ள கூடாது என்று லெனின் எழுதியுள்ளார். கொரில்லா யுத்தமானது மற்ற போராட்ட வடிவங்களுக்கு உதவுவதாக இருத்தல் வேண்டும். இதை சோசலிசத்தை புரிந்து கொள்வது மற்றும் ஸ்தாபனங்களை வளர்த்தெடுக்க முயற்சிப்பதன் மூலமாக பலப்படுத்த வேண்டும். மிகவும் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவென்றால் எல்லா வகையான போராட்டங்கள் அது வேலைநிறுத்தம் மூலமாகவோ, பாராளுமன்ற வடிவம் மூலமாக அல்லது பத்திரிக்கை வாயிலாகவோ இருக்கலாம் என்று லெனின் அழுத்தமாகவே குறிப்பிடுகிறார். பழங்கால சோசலிச வடிவத்திலிருந்து விலக நேர்கிற பொழுது புறப்படும்போது பல தரப்பட்ட வடிவங்களைக் கொண்ட போராட்டங்களையும் மார்க்சியம் அங்கீகரிக்கிறது என்று லெனின் விளக்குகிறார். ஆனால் மாவோயிஸ்ட்டுகள் பரவலாக இந்த ஆய்வை மறுக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் காரணமாக வெகு ஜனங்களிடமிருந்து தவிர்க்க இயலாத விரோதத்தை உருவாக்கியுள்ளது. வெகுஜனங்களின் சொந்த முயற்சிகளும் இதன் காரணமாக பாதிக்கப்படுகிறது. பெரும் திரள் மக்களின் அரசியல் முன்முயற்சிகளுக்கே உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
போராட்ட வடிவத்தை பற்றி சிந்திக்கும்போது வரலாற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற மார்க்சியத்தின் கோரிக்கையை வற்புறுத்துவதற்கு லெனின் எந்தவொரு சமரசத்திற்கும் இடம்தரவில்லை. இதில் திருகுதாளம் செய்தால் அது மார்க்சிய, லெனினியத்தின் அடிப்படையான கோட்பாடுகளிலிருந்து விலகி நிற்பதாகும். ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவம் சரியா என்ற கேள்விக்கு ஆம், இல்லை என்று பதில் கூறு முன் குறிப்பிட்ட கட்டத்தின் ஸ்தூலமான நிலவரங்களை விரிவாக ஆராயயமல் சொல்வது மார்க்சிஸ்ட நிலைபாட்டை கைவிடுவதாகும் என்று லெனின் கூறினார்.
ஆனால் மாவோயிஸ்ட்டுகள் இவைகளை கணக்கிடாமல் அனைத்து வழிகளிலும் கடுமையாக தவறு செய்கிறார்கள். புரட்சிக் காலத்தில் கொரில்லா யுத்தம் தான்வெற்றியை கொணரும் மற்ற வழிகள் எல்லாம் முக்கியத்துவம் இல்லாததும் பொருத்தமற்றதாகும் என்ற கோட்பாட்டினை மார்க்சியம் ஏற்றுக்கொள்ளவில்லை. சீனாவில் ஆயுதமேந்திய விவசாயிகள் புரட்சி மற்றும் ஆயுத தாங்கிய புரட்சிகர மண்டலங்களாக தீர்மானிப்பதற்கான சூழ்நிலைகளையும் நிர்பந்தங்களையும் மாவோ கண்டறிந்தார். அவைகள் பின்வாறு முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலார்களின் தார்மீக ரீதியான சட்டரீதியான அவர்களின் வேலைநிறுத்தங்கள் மூலமாகவும், சட்டத்தின் போராட்டங்கள் மூலமாகவும் திடீர் போராட்டங்கள், பாராளுமன்றம், அரசியல் மற்றும் பொருளாதா போராட்டங்கள் பயன்களால் அவர்கள் வளர்ச்சியடைந் துள்ளார்கள். சீனாவில் அங்கு பாராளுமன்றம் இல்லை. சட்டப்பூர்வ அமைப்புக்களை பயன்படுத்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. சீனாவின் விவசாயப் பொருளாதாரம் உள்ளுர் மட்டத்தை தாண்டவில்லை. குறைந்த அளவிலான முதலாளித்து வளர்ச்சி காரணமாக நாடு தழுவிய முதலாளித்துவ பொருளாதார அனுபவம் சீனாவில் இல்லை. வட்டார அளவில் ஆட்சி செய்யும் படைவைத்திருக்கும் பிரபுக்கள், தனிமைப்பட்டே இருந்தனர். மேலும், ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டுடிருந்தனர்.
ஏகாதிபத்திய சக்திகள் சீனாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக துண்டு துண்டாக்கினர். இது சீனாவில் அடிக்கடி ஏகாதிபத்தியவாதிகளிடையே மோதல்களை உருவாக்கின.
சீனாவில் ஒருமுகப்படுத்தப்பட்ட அரசியல் தலைமை இல்லாத பலவீனம் காரணமாக நிர்வாகத்திலும், இராணுவத்திலும் டெயல் இசைவு இன்றி ஒழுங்கீனம் மலிந்து கிடந்தது.
இந்தியாவின் தற்போதைய எதார்த்தமான நிலையினை கவனத்தில் கொண்டால் தொலைதுர கிராமங்களை ஆதரவு தளங்களாக கட்ட முயற்சிகள் எடுத்து அதனை விடுதலை பெற்ற மண்டலங்களாக உருவாக்கி பின்னர் நகரங்களை சுற்றி வளைப்பது என்ற கருத்து ஒரு கற்பனை புனைவாகவே இருக்க முடியும். புரட்சிகர மாறுதல்களுக்கான கடுமையாக முயற்சிக்கும் காலத்தில் மத்திய அரசியல் மையம் மற்றும் சக்திவாய்ந்த இராணுவம் ஆகியவை பற்றி மாவோயிஸ்ட்டுகள் கவலைப்படுவ்தில்லை. கொரில்லா யுத்த அடிப்படையிலான ஆயுத தாங்கிய போராட்டக் கருத்துடன் தற்போதை சூழ்நிலைகள் ஏதாவது விதத்தில் இனக்கமாக உள்ளதா என்பதைக் கூட இவர்கள் பார்ப்பதில்லை.
இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி, உலக பொருளா தாரத்துடன் கொண்டுள்ள பிணைப்பு, பாராளுமன்ற ஜனநாயக அனுபவம், சமூக, பொருளாதார மாற்றங்கள், வர்க்கங்களின் சமூக அந்தஸ்த்து, இந்திய மக்களின் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறை, தத்துவ சாதனங்கள் மற்றும் செய்தித்துறை வளர்ச்சி போன்ற முக்கிய அம்சங்கள் விடுதலை பெற்ற மண்டலங்களை உருவாக்க அடிப்படை கொரில்லா யுத்தத்திற்கான பொருத்தமானவையாக இருக்க வேண்டும். வெகுஜன போராட்டத்தில் பலவீனங்கள் இருந்தபோதிலும் நகர மற்றம் கிராமப்புற உழைக்கும் வர்க்கங்கள் அவர்கள் அமைப்புக்கள் ஆகிய இரண்டிலும் முன்னேற்றத்தை பதிய வேண்டும். மார்க்சிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை இது ஒரு முக்கிய ஜீவாதார விசயமாகும். இந்திய பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை கவனத்தில் கொள்ளும்போது கொரில்லா யுத்த தந்திரங்களால் ஒரு நிரந்தரத்தை உருவாக்க முடியாது அவை மின்னல் போல விழும் அத்தோடு மாபெரும் சக்தியை திரட்டுவதற்கும் மாபெரும் போராட்டங்களுக்கும் கெடுதல் ஏற்பட்டு முடிவிற்கு வரும் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. நடைமுறை பற்றிய நுலில் மாவோ கீழ்கண்டவாறு எழுதுகிறார். எதார்த்த நிலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்குக் கேற்ப மாறாத கடும் பிற்போக்காளர்களை நாம் எதிர்க்கிறோம். இது வரலாற்றுரீதியாக வலதுசாரி சந்தர்ப்பவாதம் ஆகும். அவர்களது சிந்தனை சமூக நடைமுறைகளில்லிருந்து விலகி நிற்கிறது. சமூகத்தோரை முன்னோக்கி கொண்டு செல்ல அவர்களால் வழிகாட்டுகிற முறையில் நடைபோட முடியாது. பின்னால் இருந்து அது வேகமாக போவதாக புலம்பிக் கொண்டே பின்னோக்கி எதிர் திசையில் இழுக்க முயற்சிப்பர் என்று மா-சே-துங், நடைமுறை பற்றி என்ற ஆய்வு நூலில குறிப்பிடுகிறார்.
நமக்கு கிடைத்துள்ள மாவோயிஸ்ட்டுகளின் ஆவணங்களில் சாதகமான சூழ்நிலைகள் உருவாக்குவதற்கான வழிமுறைகள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது. ஏகாதிபத்திய சக்திகளக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகள் இந்திய ஆளும் வர்க்கத்தை பாதிக்கும். இது அரசியலில் நிச்சயமற்ற தன்மையும், நிர்வாகம் பலவீனமாகவும் இருக்கும் என்று நம்புகிறார்கள். இத்தகைய சூழலில் தரகு ஆளும் வர்க்கத்திற்கு எதிராக மாபெரும் கிளர்ச்சிகளுக்கு அழைத்து செல்லும், இதனால் காவல்துறை மற்றும் இராணுவம் பாதிக்கும். இந்த திருப்பம் உலக போருக்கு இட்டுச் செல்லும் என்று மாவோயிஸ்ட்டுகள் சொல்கிறார்கள். இதை பகல் கனவு அல்ல எனில் வேறு என்னவென்று சொல்வது? தொழிலாளி மற்றும் விவசாயி கூட்டை மையமாகக் கொண்டு அனைத்து தேசபக்த, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் மூலம் மக்கள் ஜனநாயக புரட்சியின் லட்சியங்களை அடைவதற்கான போராட்டம் சிக்கலானதும், நீண்ட கால தன்மை கொண்டதும் ஆகும். வேறுபட்ட சூழல்களில் வெவ்வேறு கட்டமாக இதை நடத்த வேண்டியிருக்கும். புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கின் தனித்துவ கட்டங்களில் பல்வேறு வர்க்கங்களும் ஒரே வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரும் பல வகைப்பட்ட நிலைபாடுகளை எடுப்பார்கள் ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுத்து தொலைநோக்கு இலக்கை அடைவதற்கு பொருத்தமான ஐக்கிய முன்னணி உத்தியை உருவாக்கி மாற்றங்களை உருவாக்குவதன் மூலம் இத்தகைய பிரிவினரை தனது அணிக்குள் ஈர்க்க முடியும். இத்தகைய கட்சியால் தான் மிகுந்த அக்கரை கொண்ட சகல தியாகங்களுக்கும் தயாராக உள்ள பகுதியினரை தனது அணிக்குள் கொண்டு வந்து புரட்சிகர இயக்கத்தின் பாதையில் ஏற்படும் பல்வேறு திருகல்கள், திருப் பங்களின்போது மக்களுக்கு தலைமை தாங்கி செல்ல முடியும். (கட்சித் திட்டம் பாரா 7.16)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுத்தவரை வெகுஜன புரட்சிகரப் போராட்டங்களை வளர்த்தெடுப்பதுதான் இன்றைய கட்டத்தின் பிரதான கடமையாக நம்புகிறது. ஒரு உண்யைன மார்க்சிஸ்ட்டுக்காக ஆயுத போராட்டத்திற்கான பலமான உறுதிமொழி ஒரு போதும் ஒருவருடைய புரட்சிக்கான தகுதியின் முன் நிபந்தனையாக இருக்காது. தொழிலாளி வர்க்கமோ அல்லது உழைக்கும் மக்களோ தாங்களகவே வன்முறையில் இறங்காதவரை ஒரு தொழிலாளி வர்க்க கட்சியின் நிலை என்னவாக இருக்க வேண்டும் ? மக்கள் ஜனநாயகம் மற்றும் சோசலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறுகிற போராட்டங்களை இணைப்பதன் மூலமும் பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும், அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு அமைதியான வழிமுறையில் இத்தகைய மாற்றங்களை கொண்டு வர பாடுபடுவர் எனினும் ஆளும் வர்க்கங்கள் தங்களது அதிகாரத்தை ஒரு போதும் தாமாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் அவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சட்டத்திற்கு புறம்பாகவும் வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள முயல்வார்கள். எனவே நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய திருப்பங்கள் திருகல்கள்களையும் கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற வகையில் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும். (கட்சித் திட்டம் பாரா 7.18)
எதார்த்த நிலைமை
வன்முறையும், எதிரிகளை பூண்டோடு அழிப்பது உட்பட அரசியல் மற்றும் இராணுவ திட்டங்களிலும் வெஜனங்களை பங்கேற்பதற்கான முயற்சிகளை வழங்குவதும் தங்களுடைய கடமைகளுடன் இணைந்த ஒன்றாகும் என மாவோயிஸ்ட்டு கொரில்லாக்கள் குறிப்பிடுகிறார்கள். அதன் விளைவுகளை ஒவ்வொருவரும் இப்பொழுது பார்க்க முடிகிறது.
தனிநபர்களை படுகொலை செய்யும் வழியான இடது குறுங்குழுவாதக் கொள்கையைத் தான் நக்சலைட்டுகள் இயக்கம் துவங்கப்பட்ட காலம் முதல் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். சாரு மஜூம்தார், கானு சன்யால், சோரின் போஸ், சி.டெஜெஸ்வர் ராவ், மற்றும் டி.நாகபூஷன் பட்நாயக் உட்பட 6 நக்சலைட் தலைவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் நகசலைட்டுகளின் நாசகர பாதையினை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க மறுத்துவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். லீன்பியோவின் மக்கள் யுத்த கோட்பாட்டை இயந்திரத்தனமாக கடைபிடித்த நக்சலைட்டுகள் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது மேலும் வர்க்க எதிரியின் இரத்தத்தில் கையை மூழ்கி எடுப்பதன் மூலம் புரட்சிகர கம்யூனிஸ்ட்டுக்களை உருவாக்க முடியாது. மறுபக்கம் கட்சியானது மேலும் கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்கவும் முடியாது என்பதையும் உறுதி செய்யும்.
மக்கள் யுத்த குழு (PWG) மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் (MCC) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உள்ளடக்கிய இடது குறுங்குழு வாதிகள் பல ஆண்டு காலம் வன்முறை நடவடிக்கைகளில் மனம் போன போக்கினை கொண்டிருந்தனர். 1991க்கும் 2001க்கும் இடைப்பட்ட காலத்தில் நக்சலைட்டுகள் தொடர்புடைய வன்முறைகளால் 2077 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் பெரும்பகுதியினர் சாதாரண குடிமக்கள் ஆவர். உயிரோடு எரித்துக் கொல்வது, உள்நாட்டு ஆயுதங்கள், நாட்டு வெடிமருந்துகள் வெடிவைத்து சிதறச் செய்வது என்ற கொடூரமான முறைகளில் கொன்றனர்.
2002ல் 90 பேர் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டனர். இது 2003ல் 136 ஆகவும், 2004ல் 70 பேரும், 2005ல் 122 பேருமாக கொல்லப்பட்டனர். இவர்களை படுகொலை செய்வதற்கு முன்னர் அவர்கள் போலீசாருக்கு உளவு பார்த்தவர்கள் என்று சொல்லி அடையாளப்படுத்தினர். இவர்களில் 80 சதவீதத்திற்கு அதிக மானோர் மாவோயிஸ்ட்டுகளால் வகைப்படுத்தப்பட்ட வர்க்க எதிரிகள் அல்ல சாதாரண மக்கள் ஆவர். இவர்களில் சிலர் நக்சலைட்டுகளின் எதிர்குழுக்களின் ஆதரவாளர்கள், அவர்களின் உண்மையான தொண்டர்களாக இருந்தவர்களும் கொல்லப் பட்டுள்ளனர். சுருக்கமாக இது இவர்களுக்குள் ஒருவரையொருவர் ஒழித்துக் கட்டும் போராட்டம் என்பது தெளிவாகும்.
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்டுகளின் திடீர் தாக்குதல்களால் 12 மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும், 17 காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். தொலைப் பகுதியில் தனித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை நிலக் கன்னி வெடிகளைக் கொண்டு வெடிக்கச் செய்து அழித்தனர். கிராமப்புற மக்கள் மத்தியில் அச்ச உணர்வுகளை பரப்பவும் முயற்சித்தனர். மிகச் சிறிய எல்லை கொண்டுள்ள ஒரிசா, சதீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிர பகுதிகளில் விரிவுபடுத்துகிறார்கள். பயங்கர வாத நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக என்றில்லாமல் ஒருபகுதியில் பரப்புவதையும் புரட்சிகர வழி என்பதன் பெயரால் வன்முறைகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்கள் எங்கு செயல்படுகிறார்களோ அங்கே தொடர்புடைய பகுதியில் மண்டலங்களை கட்டுவதற்கான முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
சமீபகாலமாக இடது குறுங்குழுவாதிகளிடையே, உறுதீ குலையும் போக்கு குறிப்பிடத்தக்கதாகும். ஆந்திர பிரதேசத்தில் மக்கள் யுத்தக்குழுவால் சரனடைந்தோர் சராசரி ஆண்டு 550 ஆக இருக்கிறது. இதேபோன்றே பீகார், ஜார்கண்டிலும் அழிவு வேலைகளில் ஈடுபட்டனர்.
அண்டை நாடான நேபாளத்தின் மாவோயிஸ்ட்டுகளின் அதிகரித்து வரும் நடவடிக்கைகளையும், தெற்காசிய மாவோ யிஸ்ட்டுகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டதையும் தங்களது பயங்கரவாத தந்திரங்களை பலப்படுத்திட மாவோயிஸ்ட்டுகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பீகாருக்கும் நேபாளத்திற்கும் இடையே உள்ள நீண்ட கண்காணிப்பற்ற இரு எல்லைப் பகுதிகளை சட்டவிரோத கடத்தல்களுக்காகவும், பயற்சி முகாம்களை நடத்தவும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்திய தீவிரவாதக்குழுக்கள், விடுதலைப் புலிகள் ஆகியோருடன் மிக நெருக்கமான தொடர்புகளையும், அவர்களிடமிருந்து ஆயுத உதவிகளையும் பெறுகிறார்கள். 2004 நவம்பரில் வெளியான செய்திகளின்படி அவர்களி பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புடன் கூட தொடர்பு வைத்துள்ளது தெரிய வருகிறது.
எவ்வாறாயினும், மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளின் மொத்த அரசியல் விளைவுகளை பொறுத்தளவில் மிகவும் சுருங்கியும், தற்காலிகமானதாகவும் உள்ளது. உதாரணமாக பீகார், ஜார்கன்ட் மாநிலங்களில் நிலபிரபுக்களுடைய உச்சவரம்பிற்கு மேல் உள்ள உபரி நிலங்களை கைப்பற்றவோ அதை நிலமற்றவர்களுக்கு அல்லது கிராமப்புற ஏழை மக்களுக்கு மறு விநியோகமோ செய்யப்படவில்லை. மாவோயிஸ்ட்டுகளின் பிரதானமான வருவாய் என்பது கிராமப்புற பணக்காரர்களிடமிருந்தும், நிலபிரபுக் களிடமிருந்தும் லெவியாக வசூல் செய்வதிலிருந்து தான் வருகிறது. கிராமப்புற ஏழைகளின் நலன்களை பாதுகாப்பதற்கோ அல்லது இயற்கை ஆதாரங்களின் நலன்களை பாதுகாப்பதற்கு வெகு தொலைவில் அவர்கள் உள்ளனர். ஆனால் மறுபுறம் வியாபாரிகள் மற்றும் வர்த்தக சூதாடிகளுடன் பரவலாக உறவுகளையும், விரிவான தகவல் தொடர்புகளையும் மாவோயிஸ்ட்டுகள் வைத்துள்ளனர். சத்தீஸ்கரிலும் ஒரிசாவிலும் வனத்திலிருந்து பீடி இலைகளையும், நார் சத்து மிக்க வனப் பொருட்களையும் கடத்தும் மாவோயிஸ்ட்டு களுக்கும் அப்பகுதி கிராம மக்களுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
துப்பாக்கி முனையை வைத்து கிராமங்களையும், கிராம மக்களையும் தங்களது பிடிமானத்தை கெட்டிப்படுத்தியுள்ளனர். இது அவர்கள் மீதான பற்று காரணமாக அல்ல மாறாக கிராம மக்களின் அச்சத்திலிருந்து வருகிறது. மாவோயிஸ்ட்டுகளின் மக்கள் மற்ற தீர்ப்பு என்று, துப்பாக்கியால் சுட்டுக்கொன்று நீதி வழங்குமுறை நன்றாவே ஆவணமாக்கப்பட்டுள்ளன. மேலும் மாவேயிஸ்ட்டுகள் முதலா ளித்துவ அரசியல் கட்சிகளின் கைப்பாவையாக மாறி வருவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெலுங்கு தேச கட்சியின் கீழ் மட்ட அளவில் நக்சலைட்டுகள் வைத்துக் கொண்ட உறவை நக்சலைட் கவிஞர் வற வற ராவ் வழக்கறிஞர் குழு முன்பு ஒப்புதல் அளித்தார். தெலுங்கு தேசமும், காங்கிரசும் பணத்தை கொடுத்து மாவோயிஸ்ட்டுகளின் சேவையை பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் வறவறராவ் மேலும் சொல்லியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாவோயிஸ்ட்டுகளை பயன்படுத்த கணிசமான தொகையினை அவர்களுக்கு வழங்கப் பட்டதாக ஜார்கன்ட் மாநில முண்டா அரசியல் அமைச்சராக உள்ள பிஜேபி தலைவர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்தார். பீகாரில் பகலில் முதலாளித்து கட்சிகளின் பிரதிநிதிகளாகவும் இரவில் மாவோயிஸ்ட்டுகளாகவும் இருப்பார்கள் என்ற பழமொழியே உள்ளது. இது தொடர்பாக மற்றொரு விசயத்தில் திரினாமுல் காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டதாக மக்கள் யுத்தக்குழுவின் (PWG) முன்னாள் மாநில செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னேற்றத்திற்கான தோற்றம்
வளர்ச்சியின்மை காரணமாக மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்கு பெருகும் என்று மீடிய நிறுவனங்கள் தொடர்ந்து சொல்லிவரும் கருத்தாகும். மாவோயிஸ்ட்டுகளால் மேற்கொள்ளப் படும் ஒவ்வொரு படுகொலைகளையும் முன்னேற்றத்திற்கான குறைபாடுதான் அடிப்படை என்று நியாயப்படுத்துகின்றன. அவர்கள் கிராமப்புற மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் நலன் களுக்காக வேலை செய்வதற்காக அவர்கள் கிராமங்களில் நீடித் திருக்கவில்லை என்று மாவோயிஸ்ட்டுகளின் ஆவணங்களே தெளிவுபடுத்துகின்றன. கிராமப்புற பகுதிகளை அவர்கள் தேர்ந் தெடுப்பதற்கு வசதியான காரணம் அவர்களின் கொரில்லா யுத்தத் திற்கு தக்கவாறு பொருந்துவதுதான். தனிமைப்பட்டுள்ள இப் பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஏற்ற இயற்கை சூழலைப் பயன்படுத்த கணக்கிடு.