நமது கட்சியின் அகில இந்திய 18வது மாநாடு நடத்திய கட்சி அமைப்பு பற்றிய பரிசீலனை அறிக்கையின் கோடிட்டு காட்ட வேண்டிய பகுதி என்று எங்களுக்கு பட்டதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மக்கள் மனதை கவ்விப்பிடிக்கும் ஒர புரட்சிகரமான பாட்டாளி வர்க்க கட்சியாக நாம் உயர அயராது பாடுபட வேண்டியுள்ளது. இன்றைய பலகீனத்தை களைந்து, நாடு தழுவிய அளவில் நமது செயல் விரிவடைய வேண்டுமானால், திட்டமிட்ட செயல் பாடுகள் அவசியமாகிறது.
கட்சி மையங்களை பலப்படுத்துவது, வேகமாக கட்சியை விரிவடைய செய்தது, வெகுஜன அமைப்புகளில் மக்களைத் திரட்டுவது, தத்துவார்த்தப்பணியை மேம்படுத்தவது, உறுப்பினர் சேர்த்தல், ஆதராவளர் குழுக்களை பராமரித்தல், கிளைகளின் அரசியல் ரீதியான செயல்பாட்டை மேம்படுத்துதல், எல்லாவற்றிற்கும் மேலாக நெறிப்படுத்தும் இயக்கத்தை தொய்வின்றி இயக்குவது ஆகியவைகள் இல்லாமல் ஒரு வெகுஜனப் புரட்சிக் கட்சியை கட்ட முடியாது என்பத நாம் எல்லோரும் அறிந்த உண்மை என்றாலும், நடைமுறை சிக்கலை தீர்ப்பதற்கு அனுபவங்களையும் பாடமாக கொள்ள வேண்டும். இதனை மாநாட்டு அறிக்கை தொகுத்தளிப்பதால் சிந்தனைக்கு மட்டுமல்ல, செயலுக்கும் இது அடிப்படையாகி விடுகிறது, அறிதோறு அறியாமை கண்டற்றால் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார், அதாவது ஒன்றை அறிய முயலும் போதுதான் அறியாமை புலப்படும் என்கிறார். அதுபோல் இப்பகுதியை மீண்டும், மீண்டும் படிக்க நுணுக்கமாக நமது பலகீனத்தை அறிய முடிகிறது. அவைகளை விரட்டி அடிக்க வேகமும், விவேகமும் புதிது புதிதாக பிறக்கிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சி என்னும் இலட்சியப் பிடிப்பை இந்த ஸ்தாபன ஞானமே உறுதிப்படுத்துகிறது. எனவே, மறக்கக் கூடாதவைகளை மறந்து விடாமல் இருக்க இப்பகுதியை வாசியுங்கள், ஒரு முறை அல்ல, பலமுறை. அனுபவங்களைத் தொகுத்துப் பார்க்கும் போது (18வது மாநாட்டு அரசியல் ஸ்தாபன அறிக்கை பக்கம் 58)
கட்சி உறுப்பினர் எண்ணிக்கை, வெகுஜன அமைப்புகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, மக்களைத் திரட்டுவதில் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளுக்கு உள்ள வலிமை, கட்சியின் தேர்தல் வலிமை ஆயிவற்றுள் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பரிசீலிக்கும் போது கட்சி இக்காலத்தில் விரிவுபட்டுள்ளது என்பதை அவை சுட்டிக் காட்டவில்லை. வலிமை மிக்க மாநிலங்களில் கட்சியால் தனது வலிமையை பாதுகாத்துக் கொள்ள முடிந்துள்ளது என்ற போதிலும் பலவீனமாக உள்ள பல மாநிலங்களலும் பிராந்தியங்களிலும் கட்சி சிறிது சிறிதாக செல்வாக்கிழந்து வருவதையே ஒட்டு மொத்த சூழல் படம் பிடித்து காட்டுகிறது.
கட்சியை செயலூக்கமுள்ளதாக மாற்றுவதில் முன்னேற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக மாநில மாநாடுகளில் சமர்ப்பித்த வேலை அறிக்கைகள் வலியுறுத்திக் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த அகில இந்திய மாநாட்டிற்கு பிந்தைய முதல் இரண்டு ஆண்டுகளில் இது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல மாநில சட்டமன்றத் தேர்தல்களும் மக்களவைத் தேர்தலும் இடையில் குறுக்கிட்டன.
கட்சி இந்த தேர்தல்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. வேறு பல உடனடிப் பொறுப்புககளை கட்சியின் அகில இந்திய மையம் நிறைவேற்ற வேண்டியிருந்ததால் அதனாலும் அதிகமான கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் நிர்ணயிக்கப் பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றுவதில் காட்டப்பட வேண்டிய வேகம் குறையத் தொடங்கியது. ஆனால் ஒட்டு மொத்த அனுபவங் கள் உணர்த்துவது யாதெனில் உறுதியான திட்டமிட்ட நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் முன்னேற்றங்கள் எட்டப்பட்டி ருக்கும் என்பதேயாகும். போதுமான வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபடுத்த வேண்டியதன் தேவையையும் அனுபவங்கள் உணர்த்து கின்றன. தற்போது பணிபுரியும் கட்சி ஊழியர்களின் வேலை முறைகளிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. மாநில மாநாடுகளின் அறிக்கைகளும் மாநாடுகளில் நடைபெற்ற விவாதங்களும் தொகுத்துக் கூறும் அனுபவ பாடம் இதுதான் – எங்கெல்லாம் எப்பொழுதெல்லாம் தீவிரமான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவோ அங்கெல்லாம் கட்சி விரிவுபடுத்தப் படுவது சாத்தியமாகியுள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலை கட்சியின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புக்களை அளித்துள்ளன என்று மாநில மாநாட்டு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த வாய்ப்புக்களை கட்சியின் வேகமான வளர்ச்சிக்கு எப்படிப் பயன் படுத்தப் போகிறோம் என்பது தான் நமது கட்சியின் முன்னே உள்ள உடனடிக்கடமையாகும்.
தோல்விகளும் பலவீனங்களும்
அகில இந்திய அளவில் கட்சியின் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து வரும் அதே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் கட்சியின் தேர்தல் வலிமையும் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன. அனைத்து அகில இந்திய அரசியல் பிரச்சனைகளிலும் பொதுவாக சரியானதொரு அரசியல் நிலைபாட்டையே கட்சி எடுத்துள்ளது என்பதை அரசியல் நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. நாட்டின் அரசியல் வாழ்விலும் முக்கியமான பங்கிளை கட்சி ஆற்றி வருகிறது.
மேலும் மேலும் அதிகமான மக்கள் பிரிவினர் கட்சியின் உதவியையும் வழிகாட்டுதலையும் எதிர்நோக்கி வருகின்றனர். இவையெல்லாம் இப்படி இருந்த போதிலும் கட்சி ஏன் வேகமாக வளரவில்லை என்பதை ஆழமாக அலசி ஆராய வேண்டியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற வேலைகள் அவற்றின் அனுபவங்கள் பற்றிய பரிசீலனையும், கட்சியின் விரிவான வளர்ச்சிக்கு கீழ்க்கண்ட பலவீனங்களும், குறைபாடுகளுமே தடையாக உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
கட்சி உறுப்பினர்களின் தரம்
கட்சி உறுப்பினர்களின் தரம், பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கட்சி உறுப்பினர்களின் திறமை ஆகியவற்றை மேம்படுத்துவதிலேயே கட்சியின் வளர்ச்சி பிரதானமாக சார்ந் திருக்கிறது. மக்களைப் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை தேர்ந்தெடுப்பது, அந்தப் பிரச்சனைகளுக்காக நடத்தப்படும் கிளர்ச்சி களுக்கும், போராட்டங்களுக்கும் மக்களைத் திரட்டுவது, வெகுஜன அமைப்புக்களை உருவாக்குவது, தத்துவார்த்த மற்றும் அரசியல் போராட்டங்களை நடத்துவது, கட்சியைக் கட்டுவது போன்றவற்றில் எல்லாம் கட்சி உறுப்பினர்கள் எப்போதும் செயலூக்கத்துடன் திகழ வேண்டும்.
தேர்தல் காலங்கள், மற்ற முக்கிய அரசியல் பணிகள் நடைபெறும் காலங்கள் தவிர பிற நேரங்களில் எல்லாம் கட்சி உறுப்பினர்களின் கணிசமான பிரிவினர் செயலற்றுக்கிடக்கின்றனர் என்பதையே மாநிலங்களின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அவர்களில் சிலர் கட்சி கிளைக் கூட்டங்களில் முறையாகக் கலந்து கொள்வதில்லை. கட்சியினால் விலக்களிக்கப்பட்டவர்கள் தவிர மற்ற அனைத்து கட்சி உறுப்பினர்களும் வெகுஜன அமைப்புகளில் செயல்பட வேண்டும் என்று கட்சியின் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. பெரும் எண்ணிக்கையிலான கட்சி உறுப்பினர்களைப் பொறுத்தவரை இந்த விதி செயல்படுத்தப்படுவதில்லை. கட்சி உறுப்பினர்களின் பெரும் பகுதியினரின் அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன தரம் என்பது எதிர்பார்க்கக் கூடியதை விட தரம் குறைந்ததாகவே உள்ளது. கட்சியில் புதிதாக சேர்க்கப்படுபவர்களுக்கு அரசியல் மற்றும் ஸ்தாபன விவகாரங்களில் போதிய பயிற்சி அளிக்கப்படுவதில்லை. இன்றைய சமூக அமைப்பின் தீய குணங்களையும், முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் தவறான ஸ்தாபன நடைமுறைகளையும் சுமந்தபடியே கட்சிக்குள் வருகின்றனர். இவைகளெல்லாம் சிறிது சிறிதாக கட்சி உறுப்பினர்களின் தரத்தை குறைத்து வருகின்றன. கட்சி உறுப் பினர்களில் கணிசமான பகுதியினர் அரசியல், ஸ்தாபன, தத்து வார்த்த தரம் குறைவாக இருப்பதால் பல இடங்களில் கிளர்ச்சிப் பணிகள், அரசியல் வேலைகள், தத்துவார்த்த மற்றும் ஸ்தாபனப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை. கட்சியின் வேகமான விரிவான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பல காரணங்களில் இது முக்கியமான காரணம் ஆகும். கட்சியும் வெகுஜன அமைப்புகளும்
(அரசியல் ஸ்தாபன அறிக்கை பக்கம் 72)
கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்குமிடையே உள்ள உறவு முறையினை மத்தியகுழு வெளியிட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் மேம்படுத்த வேண்டியுள்ளது.
வெகுஜன அமைப்புகளின்பால் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை பற்றி மத்தியக்குழு வெளியிட்டுள்ள ஆவணத்தில் வெகுஜன அமைப்புகள் மற்றும் கட்சி ஆகிய இரண்டுமே வளருவ தற்கு ஏற்ற வகையில் அவற்றுக்கிடையேயான உறவு முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி பரிசீலிக்கப்பட்டுள்ளது. மூன்று முக்கிய அம்சங்களில் தற்போது காணப்படும் நடைமுறைகளை மத்திய குழு ஆவணம் பரிசீலனை செய்தது. அவையாவன.
- வெகுஜன அமைப்புகள் சுயேட்சையாக செயல்படும் வகையில் அவற்றை வளர்க்க வேண்டும். அவ்வாறு அவற்றை வளர்ப்பதன் மூலம் அவை விரிவாக வளர்ந்து புதிய பகுதி மக்களைச் சென்றடையும்.
- வெகுஜன அமைப்புகள் ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டும். இளைஞர், மணவர் மற்றும் மாதர் அமைப்புகள் தஙங்களின் தனித்தன்மையை பராமரிப்பதன் மூலம் அவை ஜனநாயக மேடையாகத் திகழ வேண்டும்.
- வழிகாட்டுதல்களை அளிக்கக் கூடிய வகையிலான கட்சியின் பங்கும், கட்சியை வளர்ப்பதும் பற்றி சரியானதொரு புரிதல் அவசியமானது.
கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளுக்கிடையே உள்ள உறவுகளை பரிசீலனை செய்த பின்னணியில் மத்திய குழு வெளியிட்டுள்ள ஆவணம் பின்வரும் வழிகாட்டுதல்களை வழங்கியது.
- வெகுஜன அமைப்புகளின் சுயேட்சையான செயல்பாட்டையும், அவற்றின் ஜனநாயக ரீதியான செயல்பாட்டையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- வெகுஜன அமைப்புகளின் அன்றாடப்பணிகளை அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களின் நிர்வாகிகள் நிறைவேற்ற வேண்டும்.
- கட்சி செயல்பாட்டுக்கு பொருத்தமாக உள்ள கொள்கை களையும், நடைமுறைகளையும் வெகுஜன அமைப்புகளின் மீது திணிக்கக் கூடாது. வெகுஜன அமைப்புகளுக்கே உரிய தனியான விதிகளும், நடைமுறைகளும் இருப்பதால் அவைகள் அவற்றையே பின்பற்ற வேண்டும். வெகுஜன அமைப்புகளின் கட்சி துணைக் குழுக்களும், பிராக்ஷன் குழுக்களும் செயல்பட வேண்டிய சரியான முறை பற்றி கட்சி ஊழியர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டும்.
- வெகுஜன அமைப்புகளில் செயல்படும் கட்சி உறுப்பினர்கள் கட்சிக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள். கட்சி அமைப்புகளில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் செயல்பட வேண்டும். தங்களுடைய வெகுஜன அரங்கப் பணியுடன் கட்சியின் வளர்ச்சிக்கும் அவர்கள் பங்களிக்க வேண்டும். கட்சி அளிக்கின்ற குறிப்பிட்ட அரசியல் ஸ்தாபன பணிகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
- ஒவ்வொரு வெகுஜன அரங்கத்திலும் கட்சியை வளர்ப்பதற்கு செய்யப்படும் வேரகள் குறித்தும். கட்சியின் கொள்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும் வெகுஜன அமைப்பின் பொதுவான திசை வழி குறித்தும் கட்சிக்குழுக்கள் ஓராண்டுக்கு ஒருமுறையேனும் ஆய்வு நடத்திட வேண்டும். செய்யப் படும் வேலைகள் குறித்து முறையான அறிக்கை கட்சிக் குழுக்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- எந்த வெகுஜன அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் தங்கள் மாநாடுகளையும், செயற்குழு கூட்டங்களையும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்தவில்லை என்பதை மாநிலக்குழுக்கள் பரிசீலிக்க வேண்டும். அந்த அமைப்புகளின் ஜனநாயக செயல் பாடுகளை உறுதி செய்து கொள்ள இத்தகைய பரிசீலனைகள் தேவையானவை. அவ்வாறு செயல்பட தவறும் அமைப்புகளுக்கு பொறுபபான கட்சி நிர்வாகிகள் அப்படிப்பட்ட செயலின்மைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
- கட்சியின் நிதியும், வெகுஜன அமைப்புகளின் நிதியும் தனித்தனியாக பராமரிக்கப்படாத இடங்களில் அவற்றைத் தனித்தனியாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெகுஜன அமைப்புகளின் கணக்குகள் தனியாகவும், முறையாகவும் பராமரிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவை தணிக்கை செய்யப்பட வேண்டும்.
- ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வர்க்க வெகுஜன அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் தங்களின் அமைப்புகளின் பணிக்கே தங்களின் நேரத்தை பெரும் அளவில் ஒதுக்க வேண்டும். இது தொடர்பான பரிசீலனை முதலில் கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் துவக்கப்பட வேண்டும்.
- கட்சி உறுப்பினர்கள் வெகுஜன அமைப்புகளில் செயலாற்ற வேண்டும் என்பதை வற்புறுத்த வேண்டும். வெகுஜன அமைப்புகளின் வேலைகளுக்கு போதுமான அளவில் கட்சி ஊழியர்களை கட்சிக் குழுக்கள் ஒதுக்க வேண்டும். அந்த அமைப்புகளின் தேவைகள் அவ்வப்போது பரிசீலிக்கப்பட வேண்டும்.
- வெகுஜன அமைப்புகளின் துணைக்குழுக்களும், கட்சிக் கோட்பாடுகளின் அடிப்படையில் இயக்கப்பட வேண்டும். வெகுஜன அமைப்புகளின் சாதாரணப் பணிகளை இக்குழுக்கள் விவாதிக்கக் கூடாது. கட்சிக் கொள்கைகள், கட்சியைக் கட்டுவது, கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை, வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர்கள் மத்தியில் கட்சியின் பிரசுரங்களை விநியோகிப்பது, கட்சியின் கருத்துக்களைப் பரப்புவது போன்றவையே இக்குழுக்களின் கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும். இவை தொடர்பான அறிக்கைகள் கட்சிக்குழுக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் தொடர்பாக தற்போது நிலவி வரும் சூழ்நிலையை பரிசீலிக்குமாறும், உறுதியான திட்டங் களை வகுக்குமாறும, மாநிலக்குழுக்களுக்கு மத்திய குழு அறிவுறுத்தி யுள்ளது. மாநிலக்குழுக்களின் பரிசீலனை அறிக்கைகளும், கட்சி மாநாடுகளும நிலவி வரும் சூழ்நிலைகளை பரிசீலனை செய்து எதிர் காலக்கடமைகளை வகுப்பதற்கான சிலமுயற்சிகள் மேற் கொண்டன. ஆனாலும், இப்படிப்பட்ட பரிசீலனைகள் போதுமான அளவிலோ, தீவிர கவனத்துடனோ பல மாநிங்களில் நடத்தப்பட வில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. கட்சியின் அகில இந்திய மாநாடு முடிந்த பிறகு மாநிலக்குழுக்களும், கீழ்மட்ட அளவிலான குழுக்களும் இந்த முக்கியமான பணியினை மேற் கொள்ள வேண்டும். கிளர்ச்சிகளிலும், போராட்டங்களிலும் பங்கேற்கும் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள கட்சி திட்டமிட வேண்டும். அந்த மக்கள் பிரிவில் காணப்படும் போராளி களின் அரசியல் உணர்வை வளர்க்க வேண்டும். அவர்களுக்கு அரசியல் ரீதியான, தத்துவார்த்த மற்றும் ஸ்தாபன அடிப் படையி லான பயிற்சிகளை அளிக்க வேண்டும். அவர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். இந்தப் பணியை விடா முயற்சியுடன் தொடர வேண்டும். கம்யூனிச நெறிமுறைகள் (அரசியல் ஸ்தாபன அறிக்கை பக்கம் 87)
17வது அகில இந்திய மாநாட்டின் முடிவுக்கு ஏற்ப, தவறுகளை சரி செய்யவும், கம்யூனிச நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் கடைபிடிக்கப்பட்டு வரும் தவறான போக்குகளுக்கு எதிராகவும் பல்வேறு மாநிலக்குழுக்களும் நெறிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. தவறு செய்த கட்சி உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டன. சிலர் கட்சியிலிருந்து வெளியேற் றப்பட்டனர். வேறு பலரின் மீதும் பல்வேறு ஒழுங்குமுறை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் நெறிமுறைகளை கடைபிடிப்பது குறித்து பல மாநிலக்குழுக்களும் வழிகாட்டுதல் வரையறைகளை வெளியிட்டன. ஒரு மாநிலக்குழுவின் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தாரளமயமாக்கல் கொள்கை கள் காரணமாக கட்சி ஊழியர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் பரவலான முறையில் நுகர்வோர் மனப்பான்மை தங்களுடைய அந்தஸ்த்தைப் பற்றிய உணர்வுகள், பொருட்களின் மீது ஆசை, தனியார் துறை மீது ஈடுபாடு போன்ற செல்வாக்குகள் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.
நிதி வசூல் பற்றி கேரள மாநிலக்குழு பொதுவான வழிகாட்டுதல் களை வெளியிட்டது. அதில் பின்வரும் அம்சங்கள் அடங்கியிருந்தன. கறைபடிந்த நபர்களிடமிருந்து கட்சித் தலைவர்கள் நிதி வசூல் செய்வதை தவிர்க்க வேண்டும்.
நிதி வசூல் கூட்டான முறையிலேயே செய்யப்பட வேண்டும்.
சாதாரண பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்வதற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
ரூ.5000 ஐ விட கூடுதலான தொகைகள் மாவட்டக்குழுவின் ஒப்புதலுடன் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும்.
வசூலிக்கப்பட்ட அனைத்து தொகையும் கணக்கு புத்தகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். நன்கொடையாளர்கள் பற்றிய விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
பஞ்சாயத்துகள், சட்ட மன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றில் செயல்படும் மக்கள் பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆந்திர மாநிலக்குழு பின்வரும் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் அலுவலகங்களிலிருந்து செயல்பட வேண்டும். வீடுகளிலிருந்து அல்ல. அவர்கள் கட்சிக் கூட்டங்களில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும். மக்களுட னான நல்லுறவை அவர்கள் பேணிக்காக்க வேண்டும். கட்சியின் கண்ணோட்டத்திற்கு எதிரான வகையில் அமைந்துள்ள பூஜைகள், வழிபாடுகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளக் கூடாது. தாங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட பகுதி தவிர பிற பகுதிகளுக் காகவும் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பணிபுரிய வேண்டும். தங்களுடைய மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் அவர்கள் உதவி புரிய வேண்டும். மற்ற முதலாளித்துவ கட்சிப் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளும் போது கட்சியின் அடையாளம், தனித்தன்மை, மரியாதை மற்றும் கட்சி இயக்கங்கள் ஆகியவை தொடர்பாக எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளக் கூடாது. சாதீய அமைப்புகளின் கூட்டங்களிலோ, அவை அளிக்கும் பாராட்டு விழாக்களிலோ கலந்து கொள்ளக் கூடாது. ஒரு கம்யூனிஸ்ட்டின் வாழ்க்கையையே அவர்கள் வாழ வேண்டும். மற்றவர்களிடமிருந்து பரிசுப் பொருட்களையோ, நினைவுப் பரிசுகளையோ பெறக் கூடாது. நேரடியாகவோ மறைமுக மாகவோ ஒப்பந்தங்கள் எதனையும் எடுக்கக் கூடாது. கமிஷன்களை யோ, லாபத்தில் பங்குகளையோ அவர்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது. தங்களுடைய சொத்து விபரங்களைப் பற்றி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வெளிப்படையான முறையில் கட்சிக்குத் தெரிவிக்க வேண்டும். புதிதாக ஏதாவது சொத்து வாங்குவதாக இருந்தால் கட்சியின் முன் அனுமதியைப் பெற வேண்டும். கட்சிக்கு நிதி வசூலிக்கும் பணிகளில் அவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்.
மேற்கு வங்கக் குழுவின் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது: நெறிப்படுத்தும் இயக்கத்தை நடத்தும் போதுதொடர்ச்சியான செயல்பாடு முக்கியமானது. பல்வேறு விதமான ஈர்ப்புகளுடைய தாக்குதலினால் தத்துவார்த்த கவசத்தில் ஏற்படக் கூடிய துளைகளை கவனித்து அவற்றை அடைக்கும் பணியை திறமையாக நிறைவேற்ற வேண்டும். கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகளை மூன்று மாதத்திற்கொருமுறை பரிசீலனை செய்வதற்கு வகுக்கப்பட்ட முறைகளைநிறைவேற்றிட எதிர்பார்க்கப்படும் அளவில் மாவட்டக் குழுக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த போக்கு கைவிடப்பட வேண்டும்.
திரிபுரா மாநிலக்குழு அறிக்கை கூறுகிறது: கம்யூனிஸ்ட் இயல்புகளுக்கு மாறான நடைமுறைகளுக்கு எதிராக விடாப்பிடியான போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நெறிப்படுத்தும் இயக்க ஆவணத்தில் அறைகூவல் விடப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டு களில் அத்தகைய இயல்புகளுக்கு முரணான நிழ்ச்சிகள் குறைய வில்லை. அவற்றுக்கு எதிரான உட்கட்சி எதிர்ப்புச் சுவர்களும் எதிர்பார்த்த அளவுக்கு பலப்படுத்தப்பட வில்லை. எப்போதும் போல வேலை செய்யும் மனோபாவம் நீடிக்கிறது. ஒரு பகுதி கட்சி உறுப்பி னர்கள் மத்தியில் நிலவி வந்த அக்கறையின்மை மறைந்து போகவில்லை. வருமானத்துக்குப் பொருத்தமில்லாத வாழ்க்கை முறை, நிதி ஆதாரங்களை கட்சியிடமிருந்து மறைக்கும் போக்கு, அதிக மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளுதல், நெறிமுறை களுக்கு மாறாக ஏராளமான அளவில் சொத்து சேர்ப்பது, திருமணங் களின் போது வரதட்சணை பெறுவது, பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் பற்றிய அக்கறையின்மை, பழமைவாதம் மற்றும் மூடநம்பிக்கைகளுடன் சமரசம், லஞ்ச லாவண்ய நடவடிக்கைகளுக்கு உடந்தையாக்குதல் போன்ற பல்வேறு வகையான இழிவான செயல்பாடுகள் ஒரு பகுதி கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.
கம்யூனிஸ்டு நெறிமுறைகளை மீறும் போக்குகளுக்கு எதிரான இயக்கத்தை தொடர்ந்து நடத்த வேண்டியதன் அவசர தேவையை அறிக்கைகள் வலியுறுத்துகின்றன. தாரளமயமாக்கல் கொள்ககைகள் தோற்றுவித்துள்ள சுற்றுச் சூழல்களும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் செயல்பாட்டு முறைகளும் ஒருபகுதி கட்சி உறுப்பினர் களின் மீது தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் நெறிமுறைகளுக்குப் புறம்பாக அனைத்து தவறான போக்குகளுக்கும் நடைமுறைகளுக்கும் எதிராகப் போராடுவதற்கு கட்சி உறுப்பினர்களும், கமிட்டிகளும் தணிச்சலையும், உறுதிப் பாட்டையும் வெளிப்படுத்த வேண்டும். இத்தகைய போக்குகளுக்கு எதிரான போராட்டம் தொடர்சியாக நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். குறிப்பிட்ட கால இடைவெளி களில் இவை நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். குறிப்பிட்ட காலஇடைவெளிகளில் இவை எவ்வாறு நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பது குறித்த பரிசீலனைகள் நடத்தப்பட வேண்டும்.