மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கடவுள் சிருஷ்டியா?


ம. சிங்காரவேலர்

தென்னிந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் தோழர் ம.சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமையேற்றவர்; கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்; விஞ்ஞானப் பார்வையை தமிழ்மக்கள் பெறுவதற்காக ஏராளமான கட்டுரைகளை சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே எழுதியவர். புராணங்களையும், இதிகாசங்களையும் விமர்சித்தால் போதாது, விஞ்ஞான பார்வை மக்கள் பெறும்போதுதான் அறியாமை இருள் அகலும் என்று உறுதி காட்டியவர்; 71 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய கட்டுரையை மார்க்சிஸ்ட் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

– ஆசிரியர்

டார்வின் பரிணாம சித்தாந்தமும், ஸர். அம்பிரோர பிலமிங் (பிளெமிங்) விஞ்ஞானியும், ஸர். அம்பிரோர பிலமிங் என்பவர் ஒரு பிரபல விஞ்ஞானி. இவர் தனது விஞ்ஞான புலமைக்காக அநேக பிரபல பரிசுகள் பெற்றவர். இவரது சிறந்த வல்லமையை முக்கியமாக ஆகாய தந்தி விஷயமாக காட்டியுள்ளார். இவருக்கு அநேகமாக ஆயிரம் டாலர் மதிப்புள்ள பரிசு இரண்டு இவருடைய சாமார்த் தியத் திற்காக கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியாதி சிறப்பு வாய்ந்த விஞ்ஞானி.

மத அனுகூலமாக டார்வின் சித்தாந்தங்களில் முதன்மையான மனித உற்பவ சித்தாந்தத்தைத் தாக்கிப் பேசினார். அதற்கு விடையாக உயிர் மெஞ்ஞானங்களில் சிறந்தவராகிய ஸர்.ஆர்தர் கீத் பதில் எழுதிய காலத்தில் பலமாக கண்டுபிடித்துள்ளார் ஸர். அம்பிரோர.

பைபிளில் கூறியுள்ள படி, கடவுள் மனிதனை தன் உருவத்தைப் போல சிருஷ்டி செய்ததாக சொல்லி இருப்பது உண்மை என்றும், டார்வின் சித்தாந்தப்படி ஆதி குரங்கு வடிவமே மனிதனாக மாறி இருக்க முடியாது என்றும் கூறுகின்றோம்.

இந்தப் பிரபல தர்க்க வாதத்தில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், மனிதன் 6000 வருஷங்களுக்கு முன் கடவுளால் மண்ணைக் கொண்டு சிருஷ்டிக்கப் பட்டானா? அல்லது 6 கோடி வருஷங்களாக சிறு மிருகங்களிலிருந்து உருவம் மாறி வந்தானா என்பதுதான்.

மனிதன் கடவுள் உருவத்தைப் போல் சிருஷ்டிக்கப்பட்டவ னென்றால், கடவுள் உருவம் சைவக் காரன் முகத்தைப் போன் றாகிலும் அல்லது பாபிரி முகத்தைப் போன்றாகிலும் அல்லது தமிழ் நாட்டுத் திராவிடன் முகத்தைப் போன்றாகிலும் அல்லது அய்ரோப்பியன் முகத்தைப் போன்றாகிலும் பெற்றிருந்தாரா என்று கேட்கின்றோம்.

இவ்விதம் வித்தியாசம் கொண்ட முகங்களைப் போல் ஆதிமனிதனைப் படைக்கவில்லை என்றால், இவ்வித வித்தியா சங்கள் பிறகு ஏற்பட்டிருக்க வேண்டும்.

பிறகு ஏற்பட்ட வித்தியாசங்கள் மக்களுக்குள் இயற்கை யாகத்தான் எழுந்திருக்கவேண்டும். இவ்வித வித்தியாசங்கள் பூர்வ மனித விஞ்ஞானிகள் சொல்வது போல சுமார் 5 அல்லது 6 லட்ச வருஷங்களாக இயற்கையாக உண்டாயிருக்குமானால், ஏன் அய்ந்து அல்லது ஆறு கோடி வருஷங்களுள் ஆதி மனிதன், ஆதி மிருகமொன்றிலிருந்து இயற்கையாகவே மாறி வந்திருக்கலாகாது?

இது நிற்க, கடவுள் உருவத்தைப் போல் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் தனது தாய் கர்ப்பத்தில் வளரும் போது அய்ந்து ஆறு வாரம் கருவில் வாலொன்றை, கை, கால்கள் தோன்றுவதற்கு முன் காட்டிக் கொண்டு வருவானேன்?

கடவுள் சிருஷ்டி என்றால், அவர் உருவத்திற்கு ஒரு காலத்தில் வாலொன்று இருத்தல் வேண்டுமென்றோ?

இந்த சிருஷ்டி சித்தாந்தத்தின் ஆபாசத்தை மதாபிமானிகள் ஏன் கவனிப்பதில்லை? ஆசை வெட்கம் அறியாது என்ற ஒரு முதியோர் வாக்கியம் உண்டு. தங்கள் வைராக்கியத்தால் மதரதர்கள் தங்கள் சிருஷ்டி சித்தாந்தத்தின் ஆபாசங்களுக்கு தங்கள் கண்களை மூடிக் கொள்ளுகிறார்கள். தங்கள் மதங்களின் ஆபாசங்களுக்குத் தங்கள் கண்களை மூடிக் கொள்ளாமல் விழித்துப் பார்ப்பார் களாகில் உலகம் எவ்வளவோ சீரடைந்துவிடும் என்று பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த

பேரறிவாளர் ம. சிங்கார வேலர் கூறிய கருத்துக்களை இன்று வரை கிறிஸ்தவ மதத்தினரால் மறுக்க முடியில்லையே? ஏன்?

நன்றி: புது உலகம் ஏடு மே 1935%d bloggers like this: