மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அமெரிக்க கடன் தவணைகள் உலகம்பெறும் தொல்லைகள்


“அமெரிக்கா தும்மியது!  இந்தியாவிற்கு சளி பிடித்துவிட்டது!”- என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எட்டு பத்தி தலைப்பில் செய்தி வெளியிட்டு அண்மையில் பரபரப்பை ஏற்படுத்த முனைந்தது.
அமெரிக்க நாட்டில் வீட்டின் மீது கடன், கிரெடிட் கார்டு ஆகியவைகளுக்கும், இந்திய நாட்டில் உருவாகும் ஏற்றுமதி தொழில் நெருக்கடிக்கும் மற்றும் நமது நாட்டு பங்குச் சந்தைக்கு வரும் விக்கலுக்கும் என்ன உறவு என்று யாரும் இன்று கேட்பதில்லை. மாறாக அவைகளால் இங்கு உருவாகும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பதே முன்னுக்கு நிற்கிறது. டாலர் – ரூபாய் பரிவர்த்தனை வழியாக மட்டுமே இன்றி அமையாத உலக வர்த்தக உறவு இருப்பதால் அங்கு ஏற்படுகிற நெருக்கடி இங்கு நம்மை தாக்குகிறது என்பது வெளிப்படையாக  தெரிகிறது. ஆனால் எது மர்மமாக உள்ளது? எல்லா வகையிலும் வலுவாக உள்ள பணக்கார அமெரிக்க பொருளாதாரத்தில் நெருக்கடி ஏன் ஏற்படுகிறது, அதனால் அவர்களைவிட நமக்குஏன் அதிக சேதாரம் ஏற்படுகிறது, என்பதுதான் விடுகதைபோல் உள்ளது. அரசியலையும் பொருளா தாரத்தையும் இணைத்துப் பார்க்காமல் இந்த மர்மத்தை புரியவே இயலாது. அதோடு நாடுகள் எல்லைகளால் பிரிக்கப்பட்டிருப்பது போல் ஒரு நாட்டின் சமூகமும் மோதும் வர்க்கங்களாக பிரிக்கப் பட்டு கிடக்கிறது என்ற அனா ஆவன்னா எதார்த்தத்தை பார்க்கும் துணிச்சல் வேண்டும்,இல்லையெனில் அமெரிக்காவில் வருமானம் குறைந்தோர் வீடுகள் வாங்கினால் நெருக்கடி அமெரிக்க பொருளா தாரத்திற்கு வரும் என்பதையோ வாங்காமல் இருந்தால் வீடு கட்டும் தொழில் தேங்கி அப்பொழுதும் அமெரிக்கப் பொருளாதாரம் அல்லாடும் என்பதையோ விளக்கவும் முடியாது,புரியவும் முடியாது.
மேலும் டாலருக்கு வந்து போகும்  நெருக்கடி அலைகள் இந்தியாவிற்குள் இறக்குமதியாகி உருவாக்கும் அழிவிற்கு பல காரணிகள் உண்டு, அவைகள் ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லாதவைகள் போல் தோன்றும். ஆனால் அவைகள் ஒன்றை ஒன்று சார்ந்து   இருப்பதால் சங்கிலி தொடர்பு போல் விளைவுகள் ஏற்படுகின்றன. அமெரிக்க டாலர் – இந்திய ரூபாய் – கடன் – வட்டி விகிதம் – வேலை – கூலி – பங்குச் சந்தைகளில் புரளும் பணம் – மத, சித்தாந்த வெறிகள் கொண்ட கும்பல்களின் குண்டு  வெடிப்பு கொலைகள்-தொழிலிலும், சந்தையிலும் ஏகபோகமாக ஆகிட தனித்தும், கூட்டணி வைத்தும் நடக்கும் போட்டிகள்-அதைத் தொடரும் படையெடுப்புகள்-ஏவுகணை வியூகங்கள் – ஆயுத குவிப்புகள் – அரசாணைகள் – சட்டங்கள் – பெட்ரோலிய எண்ணை விலை நிலவரம்-வெளி நாடுகளில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை நிலவரம்-இவைகளெல்லாம் உறவாடும் பொழுது நெருக்கடிகளையும் விளைவிக்கின்றன. இக் கட்டுரை அதனை அலசப்போவதில்லை. அமெரிக்கக் கடன் முறைகள் அதிலும் வீட்டுக்கடன் தவணை முறை நம்மையும் அமெரிக்க நாட்டு வருவாய் குறைந்தோரையும் எவ்வாறு அல்லாடவைக்கிறது என்பதை மட்டும் அலசுகிறது. இன்றைய சந்தை முறையில் உள்ள கோளாறுகளையும் சேர்த்தே இந்தப் பரிசீலனை அமைகிறது
சந்தைகள் எத்தனை! எத்தனை!
இன்றைய அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி திடீரென்று முளைக்கவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக சூடேறி இப்பொழுது கொதி நிலையை எட்டியுள்ளது. இதற்கு பல, பல காரணிகள் உண்டு, பல காரணிகள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவைகள், பல காரணிகள் அரசியலை அடிப்படையாகக் கொண்டவைகள். அவைகளை இங்கே தொகுத்து பார்ப்பது நமது நோக்கமல்ல, வருமானம் குறைந்தோர் வீடு வாங்க தவணை முறை கடன் கொடுக்கிறோம் என்ற பெயரில் நடக்கும் கந்து வட்டிக் கொள்ளையால் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் சமூக நெருக்கடி எப்படி இந்தியா போன்ற நாடுகளை தாக்குகிறது என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.அமெரிக்க சப்-பிரைம் மார்க்கெட் பற்றி கூகிள் தகவல் சேமிப்பு வலையில் கிடைக்கும் லட்சக்கணக்கான தகவல்களுக்குள் புதைந்து கிடக்கும் உண்மையைத் தேட முயல்வோம். கூகிளில் கிடைக்கும் தகவல்களில் நிபுணர்களுக்கிடையே பட்டிமன்ற பாணியில் நடக்கும் வாதப்பிரதி வாதங்கள், பத்திரிகைகளில் வரும் செய்திக் கட்டுரைகள், அரசாங்க அறிவிப்புகள், இவைகளை மட்டும் தேர்ந்து எடுத்து  அலசுவோம்.
1.    அதற்கு முன் ஒரு கவன ஈர்ப்பு! அமெரிக்க மக்கள் எல்லா மானுட உறவுகளையும் சந்தை உறவுகளாக சித்தரிக்கும் பண் பாட்டில் ஊறிப்போனவர்கள். சப்-பிரைம் மார்க்கெட் என்றாலே முதன்மை சந்தையின் கீழ் சந்தை (அல்லது உப-சந்தை) என்றுதான் பொருள், நம்மூர் கந்து வட்டி முறையைத்தான் அவர்கள் அவ்வாறு அழைக்கிறார்கள், கடத்தலை அவர்கள் ஓரம் கட்டப் பட்ட சந்தை (பெரிபெரல்-மார்க்கெட்) என்கின்றனர், விபசாரத்தை பாலியல் சந்தை (செக்ஸ்-மார்க்கெட்) என்கின்றனர். ஏலம் போடுவதை நியாய விலை சந்தை (பயர்-பிரைஸ்-மார்க்கெட்) என்கின்றனர். வேலை இல்லாத் திண்டாட்டத்தை தொழிலாளர் சந்தை (லேபர்-மார்க்கெட்) என்கின்றனர். இப்படி எல்லா மானுட உறவுகளையும் சந்தைகளாக  பார்ப்பதும் அல்லது ஆக்க முயற்சிப்பதும், பாகுபாடுகளை திணிப்பதும் இன்றைய அமெரிக் காவில் ஆதிக்கம் செலுத்தும் பண்பாடாகும். இது நடைமுறையில் நெருக்கடிகளை கொண்டுவருகிறது. அதன் விளைவாக அமெரிக்க மக்களில் சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கும் உழைப்போரும், அமெரிக்காவை நம்பி நிற்கும் ஏழை நாடுகளும், நிலையற்ற பொருளாதாரத்தை அனுபவிக்கத் தள்ளப்படுகிறார்கள். இத்தோடு அமெரிக்கச் சந்தைகள் பற்றிய பொது ஆய்வினை வேறு ஒரு கட்டத்திற்கு ஒத்தி வைத்துவிட்டு, அமெரிக்க சப்-பிரைம் மார்க் கெட் நெருக்கடிக்குள் நுழைந்து அலசுவோம். அதோடு ஒரு எச்சரிக்கை! நாம் சந்தை முறையின் எதிரிகளல்ல! அதே நேரம் எல்லாவற்றையும் சந்தையாக்கி பார்ப்பவர்களும் அல்ல! சந்தையில் சமத்துவத்தை கொண்டுவர அனுபவங்களின் மூலம் போராடுப வர்கள்! சுதந்திரச் சந்தை எனும் ஏமாற்றை உறுதியாக எதிர்ப்பவர்கள்!
இருண்ட பக்கம்
2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 3-ஆம் தேதியிட்ட “போஸ்ட்டன் குளோப்” என்ற அமெரிக்கப் பத்திரிகை-” தகுதி நியதிகளை தளர்த்தி வழங்கிய கடனின் இருண்ட பக்கம்”என்ற தலைப்பில் ஒரு செய்தி கட்டுரை வெளியிட்டது. அதில்” வீட்டுக்கடன் கொடுப்பதில் திருப்பிக் கொடுக்கும் திறனை கணக்கிடும் நியதிகளை வங்கிகள் தளர்த்தியதால் வீடு விற்பனை சந்தையிலிருந்த தேக்கம் போய் விட்டது. 69 சத அமெரிக்கக் குடும்பங்கள் சொந்த வீடு பெற கடன் பெற்றன. அதேநேரம் வீடுகளுக்கேற்பட்ட கிராக்கியால் ரியல் எஸ்டேட் பிசினசிலும் அடுக்குமாடிகள், வீடுகள் விற்பனையிலும் விலைகள் தாறுமாறாக ஏறிவிட்டன. கடன் சுமையும் வட்டியும் தாங்கமுடியாது போய்” தவணை கட்டமுடியாமல் தவிப்போரின் வீடுகளை கடன் கொடுத்த நிறுவனங்கள் கைப்பற்றும் எண்ணிக்கை பெருகிவருகிறது” இந்த ஆண்டு வீடு இழக்கும் போக்கு வேகப்பட்டுள்ளது, என்று இது சம்மந்தமான வழக்குகளின் எண்ணிக்கை அதிகப்பட்டு இருப்பதை புள்ளிவிபரங்களுடன்  காட்டிவிட்டு அக் கட்டுரை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
வேலை இழப்போர் எண்ணிக்கை அதிகப்படும்பொழுது வீட்டுக் கடனுக்கு தவணை செலுத்தத் தவறுவோர் பெருகுவர்.
கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் வீடுகளை கைப்பற்றுதலும் பெருகும். அதோடு கைப்பற்றப்பட்ட வீடுகள் நியாய விலை சந்தைக்கு வருவதால் அதாவது ஏலத்திற்கு வருவதால் சூடேறிய விலைகள் தலைகுப்புற விழுந்து அத்தொழிலே நட்டத் தொழிலாகும் அபாயம் உள்ளது என்று அக்கட்டுரை தொழிலுக்கும் சந்தைக்கும் அபாயம் என்று எச்சரித்தது!
கடன் தவணை எனும் வலை
அதோடு நிற்கவில்லை இதனுள் மறைந்து கிடக்கும் நிதி நிறுவனங்களின் ஏமாற்றுக்களையும் அக்கட்டுரை வெளிக்கொண்டு வந்தது. நிதி புழக்கத்தை நெறிப்படுத்தும் மைய அரசின் அதிகாரி (அட்டார்னி ஜெனரல்) நடத்திய புலனாய்வில் “நிதி நிறுவனங்கள் கடன் பெறத் தகுதி படைத்தோருக்கு அதாவது  வருவாய் மிகுந்தோருக்கு கடனுக்கு 5.7 சத வட்டி விதிக்கப்படுகிற பொழுது வருவாய் குறைந்தோருக்கு இதைப்போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதாவது 10 சதம் முதல் 14 சதம் வரை வட்டியை தீட்டியுள்ளனர்” என்பதைக் கண்டார். அதற்கு அவர்கள் கூறுகிற காரணம் கடன் முழுவதும் அடைபடாது என்ற ஆபத்து இருப்பதால் கூடுதல் வட்டி விதித்து நட்டத்தை சரி கட்டுகிறோம் என்பதாகும். அதோடு சந்தை நிலவரத்தால் மாறும் வட்டி விகிதத்திற்கு (ஏ.ஆர்.எம்-அட்ஜெஸ்டபிள் – ரேட்-மார்ட்கேஜஸ்) சம்மதிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டே கடன் வழங்கப்படுகிறது என்பதையும் அவர் கண்டார். முதலில் குறைந்த வட்டிக்கு இழுத்து ஏ.ஆர்.எம் மூலம் வட்டியை கூட்டி விடுகின்றனர் என்பதையும் கவனித்துள்ளார். ஆனால் வசதி படைத்தோரை இப்படி நிபந்தனை போட்டு கடனை வாங்க வைக்க முடியாது. வசதியற்ற ஏழைகளுக்கு கடன் பெறும் தகுதி  இல்லாததால் இப்படிப்பட்ட வட்டி கொள்ளைக்கு (நம் ஊர் விவசாயிபோல்)  தள்ளப்படுகின்றனர்  என்பதை அட்டார்னி ஜெனரல் மூலம் அரசு அறிந்திருந்தது. இப்படி மாறும் வட்டி விகிதத்திற்கு கடன் வாங்கி தவிப்போர் எண்ணிக்கை பெருகிவருவதை போஸ்ட்டன் குளோப் எச்சரித்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே செய்தி வெளியிட்டதைத்தான் மேலே பார்த்தோம்.
பிப்ரவரி,17, 2007 வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகை அலறியது: சப்-பிரைம் மார்க்கெட்டில் கடன் தவணை தவறியதால் ஏற்படும் முன் மூடுதல் கடன் தவணை சந்தையில் அழிவை கொண்டு வந்து விட்டது. ஏறத்தாழ 12 லட்சம் வீடுகளை கடன் தவணை தவறியதால் நிதி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. அதாவது 92 குடும்பங்களில் ஒன்று மாட்டிக்கொண்டது. சுமார் 80 சத கடன்கள் ஏ.ஆர்.எம் வகையாகும். “வெடிக்கும் ஏ.ஆர்.எம்” என்ற பெயரும் அதற்கு வந்துவிட்டது. குறைந்த வட்டி விகிதத்தில் துவங்கி சில ஆண்டிலேயே வட்டி விகிதம் கூடி வெடித்துவிடும் என்பதால் இப்பெயர் பெற்றுவிட்டது.
2008 ஜனவரி 3 தேதியிட்ட கார்டியன் என்ற நடு நிலை இதழ் கத்தியது: (ஐவ நெபயn றiவா டடிற-inஉடிஅந ஹஅநசiஉயளே நெiபே நnஉடிரசயபநன வடி
bடிசசடிற அடிசவபயபநள வாநல உடிரடனn’வ யககடிசன….. கூhந நஉடிnடிஅiஉ ரெவவநசகடல நககநஉவ றடிரடன நஎநவேரயடடல உயரளந னநயடள றடிசவா bடைடiடிளே டிக னடிடடயசள வடி கயடட யயீயசவ; வாந கசைளவ சரn டிn ய க்ஷசவைiளா யெமே in 140 லநயசள; …….ஹவ வாந ளவயசவ டிக வாந லநயச, ளவடிஉம அயசமநவள றநசந யவ ளiஒ-லநயச hiபாள யனே ட்40bn றடிசவா டிக அநசபநசள யனே வயமநடிஎநசள றநசந யறயவைiபே உடிஅயீடநவiடிn. ஞசiஎயவந நளூரவைல கசைஅள யனே hநனபந கரனேள றநசந படிசபiபே வாநஅளநடஎநள டிn உhநயயீ அடிநேல யனே ய hயனேகரட டிக ளநஉசநவiஎந, hரபநடல றநயடவால iனேiஎனைரயடள றநசந நெஉடிஅiபே inஉசநயளiபேடல iகேடரநவேயைட. க்ஷரவ வை றயள வாந அடைடiடிளே டிn அடிசந அடினநளவ inஉடிஅநள றாடி றடிரடன ரடவiஅயவநடல ளாயயீந வாந நஎநவேள டிக 2007)
“அமெரிக்காவில் வருவாயில் தாழ்ந்த நிலையில் இருப் போருக்கு தகுதிக்கு மீறிய அளவு கடன் வாங்கத் தூண்டியதால் வந்த வினையிது! இதனால் பிரிட்டன் வங்கிகள் 140 ஆண்டுகளில் காணாத நெருக்கடியை சந்திக்கின்றன. 2007ம் ஆண்டு பெரும் பணக்காரர் களுக்கு நல்ல ஆண்டாகத்தான் துவங்கியது. பங்குச் சந்தையில் கடந்த ஆறு ஆண்டில் இல்லாத உற்சாகம் இருந்தது. தனியார் பங்கு நிறுவனங்கள், ஹெட்ஜ் பண்டினர், ரகசியமாக பணத்தை குவித்திருப்போர், குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும் வாய்ப்பால் எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக மகிழ்ந்தனர் ஆனால்  லட்சோப லட்ச  அமெரிக்க வருவாய் குறைந்தோர் பொருளா தாரத்தை உருவாக்குபவர்கள் என்பதை காட்டிவிட்டதாக” எழுதி வட்டிக்கொள்ளையை பற்றி எதுவும் கூறாமல் விட்டது
இத்தகைய பத்திரிகை செய்திகளில் குறிப்பிட வேண்டிய ஒரு தலை பட்சமான அம்சம் உண்டு. பத்திரிகை செய்திகள், நிபுணர்கள் கருத்துக்கள், அதிகாரிகளின் அறிவிப்புகள், அனைத்தும் இந்த அநியாய வட்டிக் கடன் தவணைகளில் சிக்கியவர்கள், வாழ்நாள் சேமிப்பை இழந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை கண்டு கொள்வதே இல்லை. மாறாக அவர்கள் தவறுவதால், நிதி நிறுவனங்கள் முடக்கம், ரியல் எஸ்டேட் சந்தை சரிவு, பங்குசந்தை பதட்டம், டாலரின் மதிப்பு ஆட்டம், என்று அக்கறையுடன் எழுதித் தள்ளின. குறைந்த வருமானத்தில் வாயைக் கட்டி சேமித்த சேமிப்பும் போய் கடன் தவணை தவறியதால் குடியேறிய வீட்டையும் இழந்து நிற்போரைப் பற்றி. எழுதவோ பேசவோ பத்திரிகைகளும் தயாரில்லை, நிபுணர்களும் முன்வரவில்லை. அதோடு ஒரே வீட்டை கடன் தவணைக்கு பல முறை விற்று கொள்ளை லாபம் அடிக்க வாய்ப்பு இருப்பதால்தான் அமெரிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஏ.ஆர்.எம் கடன்களை அள்ளி வீச போட்டி போட்டன என்பதை கண்டிக்க யாரும் முன் வரவில்லை. மாறாக இதனை இரண்டாம் கட்ட (செகன்டரி மார்க்கெட்) சந்தை விரிவு என்று எழுதினர்.விளைவு தவணை தவறுவோர் பெருகி ஏராளமான வீடுகள் (பயர்-பிரைஸ்- மார்க்கெட்) நியாய விலை சந்தையில் (ஏலக்கடைகள்) குவிந்தன. வீடுகளின் விலைகள் தலை குப்புற விழுந்து முதலுக்கே மோசம் ஏற்பட்டதால் பல உள்நாட்டு வெளி நாட்டு வங்கிகள் (குறிப்பாக ஐரோப்பிய வங்கிகள்) ஏ.ஆர்.எம் கடன் கடைகளை மூடின . அமெரிக்க ஜனாதிபதியே வாய் திறக்க வேண்டியது வந்து விட்டது. அவரும் வாய்திறந்தார்!
ஆகஸ்டு 9,2007 அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை பாக்ஸ் செய்தி நிறுவனம் பரபரப்பாக வெளியிட்டது. அதில் வீட்டுக் கடன் வழங்குதலில் ஏற்பட்டு வரும் நெருக்கடி அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்காது, அமெரிக்கப் பொருளாதார அடிப்படைகள் வலுவானவை என்று ஜனாதிபதி திருவாய் மலர்ந்த பொழுது வேறு சில முத்துக்களையும் உதிர்த்தார் அதன் கருத்தை தமிழிலும் தருகிறோம்:
“ஐக லடிர அநயn னசைநஉவ பசயவேள வடி hடிஅநடிறநேசள, வாந யளேறநச றடிரடன நெ nடி,” வாந யீசநளனைநவே ளயனை.
“வீடிழந்தோருக்கு மான்யம் இல்லை” என்றார் ஜனாதிபதி
“அமெரிக்காவின் கடுமையான உழைப்பாளிகளில் பலர் கடனுக்காக கையொப்பமிட்டுள்ளனர். உண்மை என்னவென்றால் அவர்கள் நிதி விவகாரம் பற்றி முழுமையான அறிவில்லாமல்  கையொப்ப மிட்டுள்ளனர் என்று தெரிகிறது. அவர்களுக்கு நிதி சம்மந்தமான கல்வி அறிவு போதிக்கப்பட வேண்டுமென்பதே சரியான முடிவாக இருக்குமென நான் உறுதியாக நம்புகிறேன்  அதற்காக பட்ஜெட்டிலே நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது” மேலும் புஷ் “கடன் சுமை தாங்காமல் வீடுகளை இழப்போருக்காக அமெரிக்க மக்கள் “ஆழ்ந்த அனுதாபத்தை” காட்ட வேண்டும். மற்றப்படி அவர்களை வீட்டுச் சந்தை கவனித்து விடுமென நம்புகிறேன்”, என்றும் குறிப்பிட்டார். “பெரும் தொகை கடனைப் பெற குதிக்கும் முன்னர் ஒருவர் நிதி பற்றிய அறிவை பெற்று இருக்க வேண்டும், இந்த விவகாரத்தில் அரசு தலையிடுவது தேவையற்றது” வீடிழந் தோரை மீட்கும் உத்தேசம் உண்டா என்று கேட்டதற்கு           “மீட்சியா எனக்கு விளங்கவில்லை! வீடிழந்தோருக்கு நேரடி மான்யம் என்ற பேச்சிற்கே இடமில்லை” என்றார்
அமெரிக்க அட்டார்னி ஜெனரல் “அநியாய வட்டிக்கு கடன் வாங்கத் தள்ளப்பட்டோரையும், மருத்துவ செலவால் வீட்டை அடகு வைக்க வந்தோரையும் எப்படி கடன் வலையில் நிதி நிறுவனங்கள் சிக்கவைக்கின்றன  எப்படி வீடுகள் ஏலத்திற்கு வருவதால் வீட்டுச்சந்தை சரிந்து நெருக்கடியை சந்திக்கிறது” என்று சுட்டிக்காட்டியும் அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிற்கு எட்டவில்லை.
சொந்த வீட்டை இழந்து வாடகை வீட்டை தேடுவோர் பெருகி வீட்டு வாடகை சந்தையில் வாடகை உயரப் பறப்பதையும் அவரால் பார்க்க முடியவில்லை. வருவாய் மிகுந்தோர் பட்டியல் சுருங்கி கடன் பெற தகுதியற்றோர் பட்டியல் நீள்வதையும் அவரால் கணிக்க முடியவில்லை. வீட்டுக் கடனோடு இப்பொழுது அநியாய வட்டியைத் தீட்டும் கிரெடிட் கார்டும் நெருக்கடிகளை கொண்டு வருகிறது என்பதும் அவரது மூளைக்கு எட்டவில்லை.
ஆனால் உயர்ந்த சம்பளம் பெறுவோரும் தொடமுடியாத உள் சந்தை வட்டி உயர்வும், எரி பொருள்விலை உயர்வும், அதற்கு அனுதாபப்பட்டு பிற பொருட்களின் விலைகள் உயர்வும், வீட்டுக் கடன் நெருக்கடியும், நிதி மூலதனத்திற்கு, பங்குச் சந்தைக்கு ஆபத்து என்றவுடன் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆளும் வட்டாரம் உணரத் தொடங்கியது, இந்த நெருக்கடி பற்றி நியுயார்க் டைம்ஸ் செய்தி (ஜனவரி 18 ,2008) கூறுவதை பாருங்கள்:.
“கட்டடத் தொழிலை மந்த நோய் பற்றியதால் விலை சரிகிறது. ஆனால் வருவாய் மிகுதியாக பெற்றோர் மேலும் விலை சரியட்டும்  என்று காத்துத் கிடக்கின்றனர். மற்றவர்களோ  கடன் சந்தை நெருக்கடியால் வீடு வாங்க இயலவில்லை  கட்டட தொழில் பாதிப்பால் வேலையற்றோர் நிவாரணத்திற்காக மனுச்செய்வோர் எண்ணிக்கை 275 லட்சமாக உயர்ந்துவிட்டது” என்கிறது நியுயார்க் டைம்ஸ்.
வீடு விற்பனையில் தேக்கம், வேலை இழப்போர் எண்ணிக்கை கூடுதல், கார்டியன் பத்திரிகை குறிப்பிட்ட வங்கிகளின் நிதி வீட்டுக்கடனில் மாட்டிக்கொண்ட பரிதாபம், அதனால் பங்குச் சந்தையில் பணக்காரர்களுக்கு ஏற்பட்ட நட்டம்  தேர்தலில் பிரதிபலிக்கும்    என்பதால் இப்பொழுது அமெரிக்க அரசு வட்டியை குறைத்துள்ளது!
இந்த வட்டி குறைப்பு அவர்கள் கூறுகிற முதன்மை சந்தையை தாண்டி அவர்கள் கூறுகிற உப சந்தைக்கு வரப்போவதில்லை. அதாவது கடன் பெற தகுதி படைத்த பணக்காரர்களுக்கு வட்டி குறையும். ஆனால் அநியாய வட்டிக்கு கடன் வாங்கி தவணை தவறி வீடிழந்தோருக்கு புஷ் கூறியபடி மீட்சி என்பது கிடைக்காது. வீடிழந்தோர் வாடகை வீடு தேடி அலைவர். வட்டிகுறைப்பால் பணக்காரர்கள் வீடுகளை வாங்கி வாடகைக்கு விடும் போக்கு தூண்டப்படும். விளைவு வீட்டுச் சந்தை பழையபடி சுறுசுறுப் படையலாம் ஆனால் சமூகத்தில் விரிசல் அதிகமாகும். அநியாய வட்டி தான் கடன் சந்தையை நெருக்கடியில் தள்ளியது என்பதை அமெரிக்க ஆளும் வட்டாரம் இன்னும் உணரவில்லை. பங்குச் சந்தையில் உள் ஆள் வர்த்தகத்தை கிரிமினல் குற்றமாக்க அமெரிக்கா சட்டம் போட்டது போல் கந்து வட்டி வாங்குவதையும் குற்றமாக கருதாமல் அமெரிக்க பொருளா தாரமும் உருப்படாது, மாட்டிக் கொண்ட நாமும் தேற மாட்டோம்.
அரசியலும் வட்டிவிகிதமும்
டாலர் என்பது அமெரிக்க நாணயம் மட்டுமல்ல! இன்று உலகில் பெரும்பான்மை நாடுகள் (70 சத நாடுகள்) அந்நிய செலவாணியாக பயன்படுத்தும் பொது நாணயமுமாகும்.  60 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் உருவான உலக அரசியல் நிலவரத்தால் டாலர் பொது நாணயமாக ஆகியது. இதற்குள் ஒரு வரலாறு உண்டு. அதற்குள் ஒரு ஏமாற்றும் உண்டு! அதை இங்கே அலசப்போவதில்லை. டாலர் பொது செலவாணியாக ஆனதால் அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் ஏற்றுமதி மூலம் டாலர் சம்பாதிக்க வேண்டும். அல்லது உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டும்.அமெரிக்காவோ விருப்பப்படி டாலரை அச்சடித்துக் கொள்ளலாம், என்ற நிலை  உலக வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்க உத்தரவாத மேற்பட்டது. அமெரிக்காவின் ஆளும் வட்டாரத்திற்கு கடனையும் வட்டியையும் வைத்து உலக அரசியலை தன் விருப்பப்படி வளைக்க முடியும் என்ற நப்பாசையை வளர்க்க உதவியது. உலகவங்கியின் கடனும் வட்டி விகிதமும் நிபந்தனைக்குட்படுத்தப்பட்டது. சந்தை விதிகள் அதற்குப் பொருந்தாது! அதாவது சந்தை போட்டிக்கும் உலகவங்கியின் வட்டிக்கும் சம்பந்தம் இல்லை. வட்டி விகிதத்தை உண்மையில் நிர்ணயிப்பது அரசியலே தவிர பாமரர்கள் கருதுவதுபோல் தம்பட்டம் அடிக்கிற சுதந்திர சந்தையல்ல. உள்நாட்டுச் சந்தையோ, உலகச் சந்தையோ  சந்தை நிர்ணயிக்கிற வட்டி விகிதம் என்றால் ஓரே வட்டிவிகிதம் தான் இருக்க முடியும்; ஏழைக்கு ஒன்று, பணக்காரனுக்கு ஒன்று, வருங்கால வைப்பு நிதிக்கு ஒன்று, விவசாயிக்கும், வருமானம் குறைந்தோருக்கும் கந்து வட்டி; என்று இருக்கமுடியாது. ஆளுக்கொரு வட்டி என்பதை நிர்ணயிப்பது  அரசியலே. அரசியலை வடிவமைப்பது வர்க்கப் போராட்டங்களே! அரசியல் விழிப்புணர்வு இருந்தால் மக்களும், இல்லையெனில் ஆளும் வர்க்கமும், வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறார்கள். இப்போது நடந்ததென்ன? வீடிழந்தோரின் கவலையை சந்தை கவனித்துக் கொள்ளும் என்ற ஜார்ஜ் புஷ் வங்கி வட்டியை சந்தை நிர்ணயிக்கட்டும் என்று சொல்லாமல் வட்டியை குறைத்தது எதைக்காட்டுகிறது? ஆளும் வர்க்கமே ஆளுக்கொரு வட்டி என்ற பாகுபாட்டை  நிர்ணயிக்கிறது என்பதைத்தான். வட்டியை சுதந்திர சந்தை நிர்ணயிக்கிறது என்பது ஒரு ஏமாற்று.
அமெரிக்க நெருக்கடி
சுருக்கமாக சொல்வதென்றால் இன்று அமெரிக்கா விரித்த கடன், ராணுவ நடவடிக்கை வலையில் அதுவே மாட்டிக்கொண்டது! உலக வங்கிக் கடனின் ஒரு நிபந்தனை டாலரை அந்நிய செலவானியாக ஏற்ற நாடுகள் தங்களது சேமிப்புக்களை அமெரிக்க அரசாங்க வங்கியிலே டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு அரசு நிர்ணயிக்கிற வட்டி வழங்கப்படும் என்பதாகும். இன்று ஏழை நாடுகளின் இந்த டெபாசிட் மலைபோல் வளர்ந்து அமெரிக்க அரசிற்கு கடன் சுமை ஆகிவிட்டது. அடுத்து அதனுடைய ராணுவச் செலவிற்கு ஏராளமான டாலர் தேவைப்படுகிறது. அரசின் வரிக்கொள்கை பணக்காரர்களை திருப்திபடுத்தும் வரிச்சலுகைகள் நிறைந்ததாக இருப்பதால் செலவிற்கு கடனோ, டாலர் அச்சடிப்போ தேவைப்படுகிறது. இக்காரணங்களால் டாலரின் மதிப்புகுறைகிறது. பணக்காரர்களுக்கு சலுகை வழங்கிக் கொண்டே ஏகாதிபத்திய யுத்தத்தை தொடரமுடியாது என்ற இக்கட்டான நிலை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. அதைவிட பகா சூர நிதி நிறுவனங்கள் முன்பேர வர்த்தகத்திற்கும், பங்குச் சந்தை சூதாட்டத்திற்கும், உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்தவும் குறுகியகால கடனாக பல லட்சம் கோடிடாலருக்கு அலைகிற பொழுது வட்டி உயரவே செய்யும், அந்த உயர்வைத் தடுக்காமல் போனால் அமெரிக்காவின் உலகச்சந்தை மீது கொண்ட ஆதிக்கம் தளரும். அதாவது அமெரிக்க அரசிற்கு லட்சக்கணக்கான கோடி டாலர் செலவாகும் யுத்தத்தை தொடர்ந்து கொண்டே லட்சக்கணக்கான கோடி டாலர் தேவைப்படும் உலகச் சந்தைமீது ஆதிக்கம் செலுத்த பணக்காரர்களுக்கு லட்சக்கணக்கான கோடி டாலரை விட்டுவைக்க முடியாது. இன்று உருவாகிவரும் நெருக்கடி அமெரிக்க மக்களின் சுதந்திரச் சந்தை பற்றிய பார்வையை மாற்றி விடும் என்று சொல்ல முடியாது! ஆனால் அரசியல் மாற்றம் கொண்டுவரும் என்பது நிச்சயம்!



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: