மார்க்சிஸ்ட் வழியில் கிளர்ச்சி மற்றும் பிரச்சாரப் பணிகள்


மக்களை  ஸ்தாபனங்களில் திரட்டிடும் கிளர்ச்சி  பிரச்சாரப் பணிகள் மூலம் மட்டுமே ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி அரசியலில் பங்கெடுக்க முடியும். அதோடு இன்னொன்றயும் மனதில் கொள்ள வேண்டும், தத்துவார்த்த தெளிவு கொண்ட அரசியல் கருத்துக்களும், அரசியல் நடைமுறையும் இல்லாமல் ஊர்வலங்கள், பெரும் திரள் உண்ணாவிரதங்கள், மனு கொடுத்தல், தலைவர்கள் மட்டத்தில் பேசி காரியம் சாதித்தல், சலுகைகளை பெறுதல் ஆகியவைகள் அரசியல் மாற்றத்தையோ நாம் எதிர்பார்க்கும் பலனையோ தராது. இதன் பொருள் இவையெல்லாம் கூடாது என்று சொல்வதாக கருதிவிட வேண்டாம். இது அறைகுறை பணியே ஆகும். இதை மட்டும் செய்து விட்டு மக்கள் நம் பக்கம் வரவில்லையே என்று பரிசீலனை செய்வது அல்லது இதற்காக மக்களை குறை சொல்வதில் பொருளில்லை.
முதலாளித்துவ உற்பத்தி முறையால் உருவாகும் சவால்களும், நிச்சயமற்ற தன்மைகளும்,  அரசியல் தலைவர்களின் வாக்குறுதி மீறலும் ஒரு பகுதி மக்கள் (எல்லா வர்க்கப் பகுதியினரும் இதில் அடங்கும்) மனங்களிலே எரிச்சலையும், ஆத்திரத்தையும் உருவாக்கிக் கொண்டே இருக்கும். இதனால்  தன்னெழுச்சியாக மக்கள் கலவரத்தில் ஈடுபடுவர். இத்தகைய கலவரமெல்லாம் புரட்சிகர மாற்றத்தை கொண்டுவர உதவாது. சுரண்டும் வர்க்கங்களின் அரசியல் ஆதிக்கத்தையோ, அதற்கு அடிப்படையாக இருக்கும் தத்துவ அடிப்படைகளையோ இந்த கலவரத்தால் அசைக்க முடியாது. இத்தகைய கலவரங்களும், பயங்கரச் செயல்களும் அடக்குமுறை கருவியாக இருக்கும் அரசு எந்திரத்தை மேலும் கூர்மைப்படுத்துமே தவிர மார்க்ஸ் எங்கெல்ஸ் குறிப்பிட்ட  அரசெனும் அடக்குமுறை கருவி உதிர்ந்து போகாது. 300 ஆண்டுகளாக  ஜனநாயகம் வளர்வதாக கூறப்படும் மேலை  நாடுகளில் கூட அரசெனும் அடக்குமுறை கருவி கூர்மை அடைந்துள்ளதே தவிர, தராளமயமாகவில்லை என்பதை கவனிக்கத் தவறக் கூடாது. தன்னெழுச்சி இயக்கங்கள் பூர்ஷ்வா அடக்குமுறையை தீவிரப்படுத்துமே தவிர புரட்சிகர மனமாற்றத்தை கொண்டு வராது
அதே நேரம் மக்களின் தன்னெழுச்சிகளை சரியாக பயன்படுத்தும் ஆற்றலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இன்றி அமையாதது. அந்த நேரத்தில் சாத்தியமான தீர்வினை முன்வைத்து அவர்களது நம்பிக்கையை சம்பாதிக்க தெரிந்திருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் மக்களிடையே மோதலை உருவாக்கும் கோரிக்கைகள் நம்மை சிக்கலில் தள்ளும்.குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களிடையே இது நிகழ்வதை கிராம மக்களோடு தொடர்புள்ள கட்சி உறுப்பினர்கள் காண முடியும். சாதிக்கொரு சுடுகாடு கேட்டு மக்களிடையே மோதல் உருவாவதை காண்கிறோம். அத்தகைய கோரிக்கைகளை நிராகரிக்கும் துணிச்சல் மட்டுமல்ல அவர்களிடையே ஒற்றுமையை உருவாக்கும் யுக்திகளும் தேவைப்படுகிறது. இப்படி மக்களிடையே மோதலாக திசைமாறும் எரிச்சலை அரசியல் விழிப்பாக மாற்ற வேண்டுமானால் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் மக்களிடையே கிளர்ச்சிப் பிரச்சாரகனாக செயல் பட்டு நம்பிக்கையை உருவாக்கியிருக்க வேண்டும்.
வர்க்கப் போராட்டங்களை  யாந்திரிகமாக புரிந்து கொண்டு தவிக்காமல் அத்தகைய சூழலில் சமூகத்தில் உருவாகும் முரண்பாடுகளைப் பற்றி இயக்க இயல் அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். எத்தகைய சூழலில் வேறுபாடுகள் முரண்பாடாக திரிந்து போகிறது என்பதை கணிக்கும் ஆற்றலை பெற தவறக்கூடாது.
தெலுங்கான சமிதி நடத்தும் போராட்டம் போல் மக்களிடையே மோதும் கலவரச் சூழலை உருவாக்கிட நமது அரசியல் கருத்துக்கள் அல்லது கோரிக்கைகள் அமைந்து விடக்கூடாது.
அதைவிட  கல்லின் மேல் எழுதிய எழுத்துப்போல் ஒன்றை மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டியது நமது நாட்டில் உழைப்பாளி மக்கள் பல அரசியல் கட்சிகளில் சிதறிக் கிடக்கிறார்கள். படு பிற்போக்கான கட்சிகள், மத, சாதி உணர்வுகளை இலக்காக வைத்து இயங்கும் கட்சிகள், தனி நபர் சாகசங்களை முதலீடாக கொண்ட கட்சிகள் இவைகளில் உழைப்பாளி மக்கள் சிதறிக் கிடக்கிறார்கள். எனவே அரசியல் ரீதியான ஒற்றுமை கேள்விக்குறியாக உள்ளது. வெகுஜன அமைப்புக்களின் செயல்பாட்டைபொறுத்தே இந்த ஒற்றுமை சாத்தியமாகும். கட்சிகளை விமர்சிக்கிற பொழுது  தத்து
வார்த்த தெளிவுள்ள மக்களின் தத்துவார்த்த பிடிப்பில் முன்னேற்றங்களை கொண்டுவருகிற கருத்துக்களை முன் வைப்பது அவசியம்.   இது நமது முக்கியக் கடமையாகும். இதில் பழைய பாணிகள் இன்று பயன்படாது. பொதுமையாகப் பேசுதல் கூடாது. விளக்கம் தேவைப்படும் விஞ்ஞான தத்துவ சொற்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். சாதரண சொற்பிரயோகத்தின் மூலம் அவைகளை விளக்கவும், ஸ்தூலமாக பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
பொதுக்கூட்டச் சொற்பொழிவுகளில் தெளிவான உள்ளடக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆவேசமாகப் பேச வேண்டிய அவசியமில்லை. இ.எம். எஸ், ஜோதிபாசு போன்ற கிளர்ச்சிப்பிரசாரகர்கள் ஆவேசமாக பேசுவோரைவிட அதிக மக்களை நிதானமாகப் பேசியே திரட்டினர் என்பதை மற்றவர்களும் பாராட்டுவதைக் காண்கிறோம்.
உழைப்பாளி மக்களின் பொதுவான போராட்டங்களையும் தனியான போராட்டங்களையும் மையமாகக்கொண்டு நமது பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும்.  பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் அனைத்து உறுப்பினர்களும் செயல்படுவதற்கான கண்ணோட் டத்தைத் தர வேண்டும்.
கம்யூனிÞடுப் பிரச்சாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள்:
1.     வாய்மொழியாகத் தனிப்பட்ட தோழர்களின் பிரச்சாரம்.
2.     தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர் கூட்டங்களில் பேசுவது.
3.     கட்சிப்பத்திரிகைகள் மற்றும் பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது, ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் இப்பணிகளில் தவறாது பங்கேற்க வேண்டும்.
4.     தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது, பிரசுரங்களைக் கொண்டுசேர்ப்பது அவசியம். இதையே கட்சிக்குச் செல்வாக்குள்ள பகுதிகளிலும் கொண்டு செல்ல வேண்டும்.
5.     நகரங்களில் சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் நல்ல பலனளிக்கும்.
6.     இடைக்கமிட்டிகள் தொடர்ந்து Þதலப் பிரச்சனைகளில் தொடர் கிளர்ச்சிகளை நடத்த வேண்டும். கட்சி ஏடுகள், பிரசுரங்களை வினியோகம் செய்ய வேண்டும்.
7.     சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் அம்மக்களைச் சேர்ந்த தோழர்களையே அனுப்பிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். மொழிச் சிறுபான்மையினர் என்றால் அவர்கள் மொழியிலேயே பேசுவது நல்லது. இதற்கென ஊழியர்களைத் தேர்வு செய்து பயிற்சியளிக்க வேண்டும்.
8. பாட்டாளிகள் மத்தியில் புரட்சிகர உணர்வுகள் இல்லாமலிருக்கக்கூடும். அப்போது பிரச்சாரத்திற்குப் புதிய புதிய முறைகளைக் கையாள வேண்டியது அவசியம். பாட்டாளிகளின் குழப்பமான குறுகிய சிந்தனைகளைப் போக்க வேண்டும். அவர்களை நமது கொடியின் கீழ் கொண்டுவரும் முறையில் அணுக வேண்டும்.
9.     நமது கட்சி அமைப்பு உழைக்கும் வர்க்கத்தின் துணிச்சல்மிக்க, அறிவார்ந்த, உத்வேகமிக்க, எப்போதும் நம்பிக்கைக்குரிய ஒரு அமைப்பு என்பதை உணர்த்த வேண்டும். அதை அவர்கள் அங்கீகரிக்கும் விதத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
வேலைநிறுத்தங்கள், கதவடைப்புகள், வேலைநீக்கங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் கட்சி முழு மூச்சோடு தங்கள் சக்தியை எல்லாம் திரட்டிட வேண்டும். களத்திலிறங்கி நின்று உருக்குப்போன்ற உறுதியுடன் போராடிட வேண்டும். இவை மூலம்தான் உழைப்பாளி மக்களோடு கட்சி தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ள முடியும்.
முதலாளித்துவ முரண்பாடுகளைத் திறம்படப் பயன்படுத்த நமக்குத் தெரிய வேண்டும். இரண்டாம் உலகப்போர் காலத்தில் தோழர் Þடாலின் ஏகாதிபத்திய முரண்பாடுகளைக் கூட சிறந்த முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டார். இப்போரில் Þடாலின் தலைமையிலான சோவியத் யூனியன், நேசநாடுகளின் கூட்டணியுடன் உடன்பாடு கண்டு, இட்லரின் பாசிசத்திற்கு முடிவு கட்டியது.
.மக்களின் நடைமுறைக் கோரிக்கைகளை சுவரொட்டிகள் மூலம் பரப்ப வேண்டும். சிறிய துண்டு நோட்டிÞகளையும் வினியோகிக்க வேண்டும். நடைமுறைச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இவை அமைய வேண்டும். சுவரொட்டிகள் ஒட்டுகிற இடங்களைக் கூடத் தேர்வு செய்து ஒட்ட வேண்டும். இப்பணிகளைச் செய்ய சிறப்புக் குழுக்களைத் தயார் செய்ய வேண்டும். தொழிலாளர் கூடுமிடங்களில் துண்டறிக்கைகளை வினியோகிக்க வேண்டும். நகரின் முக்கியப் பகுதிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் வினியோகிக்க வேண்டும். துண்டறிக்கையில் உள்ள விசயங்களைப் பேசியும் தரலாம். பிரசுரங்களையும் இதேபோல் பேசி விற்பனை செய்யலாம். விரிவான துண்டறிக்கைகளை வீடுகள், தொழிலாளர் கூடுமிடங்களில் தருவது நல்லது. அப்போதுதான்  நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
இவைகளை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கு நமது கட்சி மிகவும் கட்டுக்கோப்புடன் விளங்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் வலுவான இதர அரசியல் அமைப்புகள் கூடக் கம்யூனிÞடுக் கட்சியுடன் இணைந்து போராட்டக் களத்தில் குதிப்பர். பாட்டாளி மக்கள் வெறும் ரொட்டித் துண்டுக்காக, சில்லரைக் காசுகளுக்காக போராடும் அவலநிலையிலிருந்து மீண்டு எழுவார்கள். வீரஞ்செறிந்த போராட்டங்களில் ஈடுபடத் தொடங்குவர். கம்யூனிÞடு கட்சி அத்தகைய இயக்கத்தை முன்னின்று நடத்தும் போது Þதாபன ரீதியாக முழுமையான தயாரிப்புப் பணிகளைச் செய்திட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் நமது நடவடிக்கைகள் பெரும்பாலான உழைப்பாளி மக்களிடையே வெற்றிகரமான முறையில் சென்றடைய முடியும்.
. நமது பத்திரிகைகளும் இயக்கம் பற்றிய சகல பிரச்சனைகளையும் பொது மக்களிடையே தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக அவை சிறிய, பெரிய கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வர வேண்டும். அந்தக் கட்டுரைகள் யாவும் பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து எழுதப்பட வேண்டும். இதற்குத் தேவையான விபரங்களை நமது அமைப்புகள் உடனுக்குடன் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பிக் கொண்டேயிருக்க வேண்டும்.
நமது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர உள்ளாட்சி உறுப்பினர்கள் போன்ற அனைவரும் கட்சியின் போராட்டத்துக்கு உறுதுணையாகத் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். அவர்கள் போராட்டப் பிரச்சனைகளைப் பற்றி நாடாளுமன்றத்திலும், சட்டமன்றம், நகர்மன்றத்திலும், உள்ளாட்சி மன்றங்களிலும் தீர்மானங்கள் மற்றும் வெட்டுப் பிரேரணைகளைச் சமர்ப்பித்திட வேண்டும். இவர்கள் அனைவரும் மக்களின் பிரதிநிதிகள் என்பதைக் கருத்தில் கொண்டு உணர்வுபூர்வமாகச் செயலாற்றிட வேண்டும்.
இன்றைய விளம்பர உலகில் மீடியாக்கள் பரப்புகிற பொய்களை முறியடிக்க வேண்டுமானால் மக்களிடம் நெருக்கமாக இருக்கும் கட்சிக் கிளைகள் அரசியல் அக்கறை யுடன் மக்களிடம் தகவலை சேர்க்க தாமதிக்கக் கூடாது. மாதக் கடைசியில் நிதி வசூலுக்கு போகக் கூடாது. அது போல் மாதக் கடைசியில் கருத்துப் பிரச்சாரம் செய்ய தவறக்கூடாது. அது போல் அரசின் சலுகைகளை கிண்டல் செய்யக்கூடாது, அது ஒழுங்காக ஏழை மக்களிடம் சேருகிற முறையில் மக்களை திரட்டிட வேண்டும். மக்களின் வரிப்பணம் தான் சலுகையாக வருகிறது. எனவே அது சலுகையல்ல உரிமை என்ற உணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும். கல்வி, சுகாதாரம் இவைகளுக்கு பணம் ஒதுக்கு என்ற குரல் ஓங்கி ஒலிக்க மக்களை தயாரிக்க வேண்டும். மக்களை பிளவுபடுத்தியே பூர்ஷ்வா கட்சிகள் ஆட்சியை பிடிக்கின்றன. மக்களை ஒற்றுமைப் படுத்துவதில் சிரமங்கள் உண்டு, அதைக் கண்டு மலைக்காமல், புதிய, புதிய வழிகளை காண்பதில் கவணம் செலுத்த வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s