மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இனி சுகாதாரம் – சந்தையிலே


“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, நீங்கி பிறத்தல் அரிது”, என்று மனித பிறப்பின் சிறப்பை எடுத்துரைக்கும் தமிழ் மூதாட்டி ஓளவையார், ஆரோக்கியத்தின் அவசியத்தையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியுள்ளார். வான்தமிழ் கண்ட வள்ளுவரோ “நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”, என்ற குறள் மூலம் மருத்துவம் நோயையும், நோய் வந்த காரணத்தையும், கண்டறிவதுடன் அதனை நீக்கும் மருந்தை உணர்ந்து நோயாளியின் உடலுக்கேற்ற மருத்துவம் செய்யவேண்டும் என “மருத்துவ தொழிலுக்கும்” அறம் அமைத்துள்ளார். இவரே மேலும், “உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்  கற்றான் கருதிச் செயல்”, எனும் குறள் மூலம் மருத்துவர் நோயாளியின் வயதையும், நோயின் அளவையும் மருத்துவம் செய்வதற்கேற்ற காலத்தையும் புரிந்து மருத்துவம் செய்யவேண்டும் என்ற ஆலோசனையும் கூறுகிறார். “புதிய ஆத்திச்சூடி” படைத்த சுதந்திர கவி பாரதியாரோ “உடலினை உறுதி செய்”, “ஊண் மிக விரும்பு” என உடலை வலிமையுடன் வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் உடல் வலிமைக்கேற்ப உணவுப் பழக்கம் வேண்டுமெனவும் கூறுகிறார். சித்தர் பாடல்களிலும், பட்டினத்தார் பாடல்களிலும் கூட மருத்துவம் சம்மந்தமான பாடல்கள் நிறைய உள்ளன. இந்திய மருத்துவம்வரலாற்றுப் பழமையானது. “ஹோமியோபதி”போன்ற இன்னும் பல மருத்துவ முறைகளும் இந்தியாவில் தோன்றியுள்ளன. நமது வரலாற்றில் அந்நியப் படையெடுப்பு, கடவுள் பக்தி, மதமோதல் நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் பொது சுகாதாரத்திற்கும் உரிய இடம் உண்டு.

“இயந்திர மனிதனைக்”கொண்டும் உற்பத்தி என தொழிற்துறையை வளர்த்துள்ள இன்றைய நவீன விஞ்ஞானம், மருத்துவ விஞ்ஞானத்தையும் பிரம்மாண்டமாய் வளர்த் துள்ளது. உடல் உறுப்பு அறுவை சிகிச்சை, செயற்கை உறுப்புகளுக்கான அறுவை சிகிச்சை, மரபணு மருத்துவம் மூலம்  பரம்பரை  நோய்களுக்குத் தீர்வு, செயற்கை முறையில் கருத்தரித்தல் என நவீன மருத்துவ விஞ்ஞானமானது,“நோயற்ற வாழ்வை உத்தரவாதப்படுத்தியுள்ளது. ஆனால் இத்தகைய நவீன காலத்தில்தான் டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா நோய், ஸ்வைன் ப்ளு வைரஸ் நோய், பன்றிக்காய்ச்சல் என மாதம் ஒரு புதிய மர்மக் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவுவதால் பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் உயிரை பலியிடுகின்றனர். ஜனவரி 2010 கடைசி வாரத்திலிருந்து தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் புதிய மர்ம நோய் பரவி வருகின்றதாம். 2006ஆம் ஆண்டு 63 ஆயிரம் பேரை பாதிக்கச் செய்த சிக்கன் குனியா நோயின் அறிகுறிகள் இந்த மர்மக் காய்ச்சலிலும் உள்ளனவாம். தேசிய நோய் தடுப்பு குழுவினர் மர்ம நோயை கண்டறிய மேற்படி நகரங்களுக்கு விரைந்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

சென்ற நூற்றாண்டில் மக்களின் உயிரை ஆயிரமாயிரமாய் கொள்ளை கொண்டு சென்ற, காலரா, பெரு அம்மை, பிளேக், போன்ற தொற்று நோய்களையும், டைபாய்டு, மலேரியா, போலியோ, யானைக்கால், காசநோய் மற்றும் தொழுநோய் போன்ற உயிர்குடிக்கும் நோய்களையும், நவீன மருத்துவ விஞ்ஞானத்தின் ஆரம்ப வளர்ச்சியே ஒழித்துக் காட்டியது அல்லது கட்டுப்படுத்தியுள்ளது எனலாம். நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் இன்று இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி யானது, இந்திய மக்கள் அனைவருக்கும் “நோயற்ற வாழ்வை குறைவற்ற செல்வமாய்” வாரி வழங்கும் வல்லமையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஆனால் உலகிலேயே இந்தியாவில் தான் காசநோயாளிகளும், இருதய நோயாளிகளும், சர்க்கரை நோயாளிகளும் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளும் அதிகமாக உள்ளனர் என்கிறது புள்ளிவிவரம். மருத்துவ விஞ்ஞானம் அடைந்துள்ள வளர்ச்சியும் பெரும்பான்மை மக்களின் சுகாதார நிலைமையும் எதிரும் புதிருமாக உள்ளன.

ஆனால் 2008ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுத்ததில் இந்தியாவின் மருத்துவ தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் பங்குண்டு எனவும் மற்ற தொழில்களில் “லே ஆப்”அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், 5 லட்சம் புதிய நபர்களுக்கு மருத்துவத் தொழில் வேலை வழங்கியுள்ளது எனவும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவரும், அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் தலைவருமாகிய பிரதாப்.சி.ரெட்டி பெருமைப் பட்டுக் கொள்கிறார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதத்திலிருந்து 6சதவிகிதமாக குறைந்துள்ள நிலையிலும், மருந்து உற்பத்தி தொழிலானது 23 சதவிகிதம் வளர்ச்சியையும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளின் உற்பத்தி வளர்ச்சியானது, இறக்குமதி என்றிருந்த நிலையை முறியடித்து ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வளர்ந்துள்ளதாகவும் மருத்துவ கருவிகளின் உற்பத்தி ஆண்டுக்கு 15 சதவிகிதம் அளவிற்கு வளர்ந்து வருவதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறார். 2008ஆம் ஆண்டில் உலக வங்கி செய்த ஆய்வோ மிகக் குறைந்தளவிலான தொற்றுநோய் (ஆடைன ஞயனேநஅiஉ) பரவுவதால் இந்திய மொத்த வருவாயில் 0.6சதவிகிதம் வளர்ச்சி அதிகரிக்குமெனவும், மிதமான தொற்றுநோய் பரவினால் 2சதவிகிதம் வளர்ச்சி அதிகரிக்குமெனவும், அதே கடுமையான தொற்றுநோய் பரவினால் இந்தியாவின் மொத்த வருவாய் 4சதவிகிதம் வரை வளர்ச்சி அதிகரிக்குமென இந்தியப் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட்டுள்ளது. தொற்று நோய் பரவுவதால் பொருளாதார வளர்ச்சி என, இன்று வளர்ச்சிக்கு புதிய இலக்கணம் வகுக்கப்படுவது அதிர்ச்சிக்குரியதாகும்.

ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் மருத்துவக் கமிட்டியாகிய க்ஷhடிசந ஊடிஅஅவைவநந யானது, இந்திய மக்கள் எவருக்கும் வசதியில்லை என்பதற்காக மருத்துவ வசதி மறுக்கப்படும் நிலை இருக்கக் கூடாது எனவும், மருத்துவ வசதியும், சுகாதார வசதியும் மக்களின் வீடுகளைத்தேடி சென்றடையும் வகையில் திட்டமிடல் வேண்டுமெனவும், நோய் வந்த பின் குணப்படுத்தும் மருத்துவ வசதிகளைக் காட்டிலும், நோய் வராமல் தடுக்கும் மருத்துவ வசதிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் இந்த ஞசநஎநவேiஎந ழநயடவா றுடிசம-ஐ பல தேசிய அளவிலான திட்டங்கள் மூலம் நாடு முழுவதற்கும் எல்லா கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டுமெனவும், இதன் மொத்த செலவீனங்களையும் அரசு தனது வருவாய்களிலிருந்து செலவிட வேண்டுமெனவும் இந்திய அரசு தனது மொத்த வருவாயில் 5சதவிகிதம் வரையிலும், மாநில அரசுகள் தனது மொத்த வருவாயில் 15சதவிகிதம் வரையிலும் சுகாதாரத்திற்காக செலவிடவேண்டுமென பரிந்துரை செய்தது. மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வாழ்விற்காகவே நாட்டின் பொருளாதாரம் என்றிருந்த நிலையானது, இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவே மக்களின் சுகாதாரமும், மருத்துவமும் என்கிற தலைகீழான நிலைமையாக இன்று மாற்றப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது உலகமயமாக்கல், தாராளமய மாக்கல், தனியார் மயமாக்கல் ஆகியவற்றோடு இணைந்து ஒன்று கலந்து விட்டதன் விளைவாய் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறைகளில் வெளிப்படும் மாற்றங்களே இவைகளாகும். இன்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் தொழில்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை புரிந்து கொள்ள அதனை இந்தியப் பொருளா தாரத்தோடும் அதன் வளர்ச்சியோடும் அதில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களோடும் இணைத்துப் பார்த்தே புரிந்து கொள்ள வேண்டும். இதுவே சுகாதாரம் மற்றும் மருத்துவப் பணிகளின் மீதான இந்திய ஆளும் வர்க்கங்களின் இன்றைய மற்றும் எதிர்கால நோக்கங்களை புரிந்து கொள்ள உதவும்.

சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட சுகாதாரக் கொள்கைகளும், கட்டமைப்பு வசதிகளும்

முதலாளித்துவம் ஏற்படுத்திய இரண்டு உலகப்போரின் விளைவுகளையும், ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்கத் தன்மைகளையும், சோவியத் யூனியனிலும் சீனாவிலும் ஏற்பட்ட உழைக்கும் மக்களின் ஆட்சியதிகாரத்தையும், அதன் பலன்களையும் புரிந்து கொண்ட சுதந்திர இந்தியாவின் தலைவர்கள் இந்தியப் பொருளாதாரத்தினை கலப்புப் பொருளா தாரமாகவும் (ஆiஒநன நுஉடிnடிஅல) அதன் நிர்ணயகரமான பங்களிப்பை பொதுத்துறைக்கெனவும் திட்டமிட்டனர். இந்திய அரசையும் மக்கள் நல அரசாகவே வளர்த்தெடுக்கவும் முற்பட்டனர். சுரங்கம், ஆயில், கனரக இயந்திரங்கள் போன்ற அவசியமான தொழில்துறைகள் பொதுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது போலவே, இந்திய பொது சுகாதாரமும், மருத்துவமும் பொதுத்துறை வசமே ஒப்படைக்கப்பட்டன. இந்தியா சுதந்திரமடைந்தவுடன் க்ஷhடிசந என்பவர் தலைமையில் இந்தியாவுக்கான சுகாதாரத் திட்டங்களை வரையறுக்க பரிந்துரைத்தது. இந்த க்ஷhடிசந உடிஅஅவைவநந தனது அறிக்கையில் அடிப்படை வசதியின்றி பெரும்பான்மை மக்கள் வாழும் நாடு இந்தியா என்பதால் நாட்டு மக்களின் சுகாதார உத்தரவாதத் திற்கான பொறுப்பினை இந்திய அரசும் மற்றும் மாநில அரசுகளும் ஏற்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.

மருந்து மற்றும் மருத்துவக் கருவிகளின் தேவைகளையும் இந்தியாவுக்குள்ளேயே பெற்றுக் கொள்ளும் வகையில் இதன் உற்பத்தியும் இதர செயல்பாடுகளும் ஊக்குவிக்கபட வேண்டு மெனவும் க்ஷhடிசந ஊடிஅஅவைவநந பரிந்துரை செய்தது. க்ஷhடிசந கமிட்டியின் பரிந்துரைகள் இந்தியாவின் சுகாதாரத் திட்டங்களின் அடிப்படையாக நீண்ட காலம் விளங்கினாலும், இன்று வரையிலும் கமிட்டியின் பரிந்துரைகள் முழுவதும் நிறைவேற்றப்படவில்லை எனலாம். ஆயினும் இந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களில் பிரதிபலித்தன. இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில், இந்திய மக்களை மிகவும் பாதித்த நோய்களான மலேரியா, காசநோய், யானைக்கால், தொழுநோய், மற்றும் பால்வினை நோய்களை கட்டுப்படுத்துவதுடன், முழுவதுமாக ஒழித்துக் கட்டவும் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன் காலரா, பிளேக் நோய், பெரு அம்மை, மஞ்சள் காமாலை போன்ற கொள்ளை நோய்கள்வராமல் தடுக்கும் வண்ணம் நோய் தடுப்பு திட்டங்களும் க்ஷhடிசந  கமிட்டியின் பரிந்துரைகளின் படி அறிமுகப்படுத்தப்பட்டன. அரசின் எல்லாத் திட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்படும் வண்ணம் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆரம்ப சுகாதார நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டன.

ஐந்தாண்டுத் திட்டங்களும், சுகாதாரக் கமிட்டிகளும்

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் அமைக்கப்பட்ட “முதலியார் கமிட்டி” (1962) சுகாதார அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக பலப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் தங்களது முதலீட்டை அதிகரிக்க வேண்டுமென பரிந்துரைத்தது. மேலும் இதே திட்ட காலத்தில் ஊhயனனாய ஊடிஅஅவைவநந, ஆரமாநசதநந கமிட்டி 1965 மற்றும் ஆரமாநசதநந கமிட்டி 1966 என மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டு அவைகளின் பரிந்துரை களின் பேரில் நோய் தடுப்புக்கான சுகாதார வசதிகள் நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்டதுடன் எல்லா கிராமங்களும், நகரங்களும் அரசின் சுகாதாரத் துறையுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டன. குடும்பக் கட்டுப்பாடு திட்டம் மூன்றாம் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன. இத்திட்ட காலத்தில் அமைக்கப்பட்ட துரபேயடறயடடய ஊடிஅஅவைவநந அரசு மருத்துவர்கள் அரசு மருத்துவமனை தவிர பிற இடங்களில் பணிபுரிவதை தடைசெய்தது. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் கிராம மக்களுக்கு ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் ஒருங்கிணைந்த சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு இலக்குகளை நிர்ணயித்தது. இத்திட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட கர்தார்சிங் கமிட்டி 50,000 நபர்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்பட வேண்டும் எனவும் இதுவும் 3000 முதல் 3500 மக்களுக்கு 1 சப் சென்டர் வீதம் 16 சப் சென்டரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமெனவும், இதுபோல் நாடு முழுவதற்கும் ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கபட வேண்டுமெனவும் பரிந்துரைத்தது. இத்திட்ட காலத்தில் அமைக்கப்பட்ட “சீனிவாஸ்தவா கமிட்டி”மருத்துவக் கல்வி சம்மந்தமாகவும், மருத்துவ துணைப் பணிகள் மற்றும் பணியாளர்கள் சம்மந்தமாகவும் பல பரிந்துரைகளை செய்தது. இதைத் தொடர்ந்து 1978இல் வெளியிடப்பட்ட கூhந ஹடஅய ஹவய னுநஉடயசயவiடிn, 2000ஆம் ஆண்டுக்குள்ளாக இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனப் பிரகடனம் செய்தது. இதனை அடிப்படையாகக் கொண்டே 6வது ஐந்தாண்டுத் திட்டம் அனைவருக்குமான சுகாதாரம் என்பதனை தனது நோக்கமாக நிர்ணயித்தது.

1983இல் இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கையும், அனைவருக்கும் இலவச மருத்துவம் என்கிற க்ஷhடிசந கமிட்டியின் பரிந்துரைகளையே பிரதிபலித்தது. 1985இல் பிரதமர் ராஜீவ் காந்தியால் வெளியிடப்பட்ட புதிய மருந்துக் கொள்கையும், மருந்து உற்பத்தியில் அரசு பங்களிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தது. 6வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மட்டும் நாடு முழுவதும் 9115 ஆரம்ப சுகாதார மையமும் 84376 ழநயடவா ளுரb ஊநவேநசள ஏற்படுத்தப்பட்டன. சமூக சுகாதார மையம் 716ல் இருந்து 4276 ஆக உயர்த்தப்பட்டது. இத்திட்ட காலத்தில் தான் மலேரியா முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. 7வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஆரம்ப சுகாதார மையம் 23458 ஆக உயர்த்தப்பட்டதுடன் ழநயடவா ளுரb ஊநவேநசள 146036 ஆகவும் உயர்த்தப்பட்டது. மேலும் கிராம சுகாதாரத் திட்டங்களை பலப்படுத்தி “மூன்று அடுக்கு”அளவிலான சுகாதாரப் பணிகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், சுகாதாரத்திற்கான மருத்துவ கருவிகளின் தட்டுப்பாட்டை ஒழிக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்ட காலத்தில் 1986இல் அமைக்கப்பட்ட பஜாஜ் கமிட்டியும் தனது அறிக்கையில், தேசிய அளவிலான மருத்துவம் மற்றும், சுகாதாரத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமெனவும், “சுகாதார விஞ்ஞான கல்விக்கென” கமிஷன் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், சுகாதார விஞ்ஞான கல்விக்கென, பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்த வேண்டுமெனவும், 12ஆம் வகுப்பில் மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த “தொழிற்கல்வி”அவசியம் எனவும்  பரிந்துரைத்தது.

மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்காக 43 ஆண்டுகள் பல திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினாலும் மக்கள் அனைவருக்கும் இலவசமாக, தரமான உயர்சிகிச்சையை முழுவதுமாக வழங்குவதை அன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தால் உத்தரவாதப்படுத்த முடியவில்லை. ஆனால் நோய் தடுப்புக்கான சுகாதாரப் பணிகளில் இவர்கள் முத்திரை பதித்துள்ளதுடன் மருத்துவம் மற்றும் சுகாதார பொருளாதார செயல்பாடு களுக்கான போதுமான கட்டமைப்பு வசதிகளையும் இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

சுதந்திர இந்தியாவின் ஆளும், அன்றைய வர்க்கத்தினர் மூலதனத்தை கட்டுப்படுத்துவதை மட்டுமே திட்டமாகக் கொண்டிருந்தனர். மூலதனத்தை ஒழிப்பதையும் அதை சமூகமயமாக்குவதையும் திட்டமாகக் கொண்டிருக்கவில்லை. கணிசமான மக்களுக்கு வாங்கும் சக்தியை ஏற்படுத்த வேண்டு மெனில் மூலதனத்தின் மீதான கட்டுப்பாடு அவசியம். அதுபோல் கணிசமான மக்கள் பகுதியினருக்கு வாங்கும் சக்தி ஏற்படுகின்றவரை மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் அரசுடைய பங்களிப்பே மிகவும் அவசியமாகும். இந்திய கலப்புப் பொருளாதாரத்தில் தனியார்துறை வளருவதற்கு நன்றாகவே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது போலவே, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் தனியார் மூலதனத்துக்குரிய வாய்ப்புகளும் பாதுகாக்கப்பட்டு வந்தன. இந்தியப் பொதுத்துறை இந்தியா வுக்கான மூலதனத்தையும் இந்திய முதலாளிகளையும் வளர்த்தது மட்டுமின்றி, நல்ல வாங்கும் சக்தி கொண்ட “கணிசமான” மத்திய தர வர்க்கத்தினரையும் தோற்றுவித் துள்ளது. 7வது ஐந்தாண்டு திட்ட காலம் வரை பொதுத் துறையால் வளர்ந்த இந்திய ஆளும் வர்க்கங்கள் தங்களது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தனியார் மயமாக்கலை ஊக்குவிக்க தலைப்பட்டன. இக்கால கட்டத்தில் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயம் ஆகிய கொள்கைகள் இதற்கு ஊக்கமளித்தது எனலாம்.

இந்தியாவின் பொதுத்துறையை பலவீனப்படுத்த ஆரம்பம் முதல் உலக வங்கியும் ஐஆகும் எடுத்த நடவடிக்கைகள் போலவே, இந்தியாவின் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறைகளின் பொதுத் துறையை பலவீனப்படுத்தவும் உலக வங்கி நடவடிக்கைகள் மேற்கொண்டன. திட்ட ஒதுக்கீடுகளில், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளுக்கு அரசு தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்துவிடாதபடி உலக வங்கி தொடர்ந்து நிர்பந்தம் செய்து வந்ததுடன், தனது கடன் திட்டங்கள் மூலம் பொது சுகாதாரத் துறையில் பொதுத்துறைக்கெதிரான பல சீர்திருத்தங்கள் கொண்டுவரவும் நிர்பந்தம் செய்து வந்தன.

7வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்   (ழநயடவா ளுலளவநஅள னுநஎநடடியீஅநவேள ஞசடிபசயஅஅநள – ழளுனுஞளு) என்கிற திட்டத்தின் பெயரில் பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஒரிஸா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உலக வங்கியிடம் கடன்களைப் பெற்று சுகாதாரத் துறையில் பல சீர்த்திருத்தங்களை கொண்டுவந்தன.

உலகமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கலுக்கு ஏற்ப சுகாதாரத் தொழில் துறையும் மாற்றப்படுதல்

இந்தியாவில், 8வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் உலகமயமாக் களையும், தனியார் மயமாக்களையும், தாராளமயமாக்களையும் (டுஞழு) ழுஹகூகூ ஒப்பந்தப்படி அமல் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்ட காலத்திலிருந்து அரசு செலவினங்களை குறைத்தல் மற்றும் பட்ஜெட் பற்றாக்குறை ஆகிய காரணங்களைக் காட்டி மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டன. இந்தியப் பொருளா தாரத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துதல் அதாவது தனியார் முதலீடுகள் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுதல் என்பதற்காதரவாக இந்தியப் பொருளாதாரத்தை தாராளமயப் படுத்தவும் (டுiநெசயடணையவiடிn) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொழிற் துறைக்கான லைசென்ஸ் முறையை எடுத்தல், இறக்குமதி மீதான வரியை நீக்குதல் போன்ற நடவடிக்கைகளும் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டன.

னுசூஹ தொழில்நுட்பம் சார்ந்த மருந்துகள் மற்றும் அரசுக்கு தேவைப்படும் க்ஷரடம னுசரபள தவிர மற்ற மருந்துகள் தயாரிக்க அரசின் அனுமதி தேவையில்லை என உத்திரவிடப்பட்டது. அரசின் உற்பத்திக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டிருந்த முக்கிய 5 மருந்துகளின் உற்பத்தியில் பிப்ரவரி 1999 முதல் தனியார் துறை அனுமதிக்கப்பட்டது. மருந்துகள் விலையில் கட்டுப்பாடுகள் இருந்ததால் தனியார் முதலீடுகளுக்கும் அந்நிய முதலீடுகளுக்கும் இதனால் லாபம் குறைவாகவே கிடைக்கும் என்பதால், இந்தியாவில் நீண்ட காலம் கடைபிடிக்கப்பட்டுவந்த டுiஅவைநன ஞசடிகவையbடைவைலகொள்கையை னுசரபள (ஞசiஉநள யனே உடிவேசடிட) டீசனநச 1995 நீக்கியது. பின்னர் ஆகஸ்ட் 1997இல் அமைக்கப்பட்ட சூயவiடியேட ஞாயசஅயஉநரவiஉயட ஞசiஉiபே ஹரவாடிசவைல மூலம் பொது விநியோகத் திற்காக பெருமளவில் வாங்கும் மாத்திரைகளுக்கு மட்டும் அரசே விலையை நிர்ணயித்துக் கொள்ள வகை செய்யப்பட்டது. மருந்து விலையை மறு நிர்ணயம் செய்யவும், மறு ஆய்வு செய்யவும் மத்திய அரசிற்கு அதிகாரம் இருப்பினும் இவ்வதிகாரம் பயன்படுத்தப்பட்டதில்லை. எவ்வாறாகினும் பொது மக்கள் சந்தையில் வாங்கும் மருந்துகள் மீதான விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டு மருந்து கம்பெனிகளின் லாபவேட்டைக்கேற்ப விலைகளை நிர்ணயித்துக் கொள்ள 1999ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப் பட்டாகிவிட்டது. சர்க்கரை நோய்க்கான இன்சுலின் மருந்து, காசநோய் மருந்து, மற்றும் வைட்டமின்-ஏ மருந்து ஆகியவைகளின் விலை பிப்ரவரி 2010இல் ஒரே சமயத்தில் 20சதவிகிதம் உயர்த்தப்படும் என இதற்குரிய நிறுவனங்கள் சமீபத்தில் அறிவித்துள்ளது, இந்நிறுவனங்களின் அதிகாரத் தையும், நோக்கத்தையும் புலப்படுத்துகின்றன.

இந்தியாவில் மருந்து உற்பத்திக்கான உற்பத்தி செலவு குறைவு என்பதால், இந்திய மருந்து கம்பெனிகள் உலக மருந்துச் சந்தையில் நல்ல வாய்ப்பை பெறும் என கணிக்கப்ட்டது. 1999-2000ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொத்த மருந்து உற்பத்தியான ரூ.19737 கோடியில் ரூ.6631 கோடிக்கான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட இந்திய மருந்துக் கொள்கை 2002 ஆனது அதற்கு முந்திய 1986ஆம் ஆண்டு மற்றும் 1994ஆம் ஆண்டு மருந்து கொள்கைகளில் றுகூடீ ஒப்பந்தத்திற்கு ஏற்ப பெரும் மாற்றங்களை செய்தது. அதாவது மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் இறக்குமதியை அனுமதித்து அதனுடன் பொதுத்துறை மருந்து நிறுவனங்களை போட்டியிடச் செய்தல், வாய்ப்புள்ள பொதுத்துறை மற்றும் மருந்து நிறுவனங்களை தனியார் மயப்படுத்துதல், மருத்துவம் மற்றும் சுகாதார முதலீடுகளில் நேரடி அந்திய முதலீடுகளை 100 சதம் அனுமதித்தல், முதலிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. இதனால் 5 ஆண்டுகளுக்குள்ளாக பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய மருந்து உற்பத்தி 44சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய மருந்து நிறுவனங்களது உற்பத்தியானது 16சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் உலக மருந்துச் சந்தைக்கு தேவைப் படக்கூடிய 60 வகையான புதிய க்ஷiடிடடிபiஉ மருந்துகள் உற்பத்திக்கு கடந்த 5 ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருப்பதுடன் மேலும் 400 வகையான மருந்துகளை உற்பத்தி செய்யவும் அனுமதிக்காக தனியார் நிறுவனங்கள் காத்திருக்கின்றன. மேற்படி மருந்துகளுக்கான உலகளாவிய சந்தை மதிப்பு 80 பில்லியன் டாலராம். இதை 2011 ஆண்டுக்குள் 114 பில்லியன் டாலருக்கு உயர்த்த முடியுமாம். பிரதம மந்திரியின் ஹனஎளைடிசல உடிரnஉடை டிn கூசயனந யனே ஐனேரளவசல, யானது மருந்து உற்பத்தியை, அறிவுசார் தொழிலாக (முnடிறடநனபந யௌநன ஐனேரளவசநைள) அறிவித்துள்ளதுடன் மற்ற தொழில் துறையை காட்டிலும் மருந்து மற்றும் சுகாதாரத் தொழில்துறைக்கு பிரகாசமான வாய்ப்பிருப்பதால், தொடர்ந்து பல சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவித்தும் வருகின்றன.

அரசின் திட்டமிடுதலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

இந்திய மொத்த வருவாயில் பொது சுகாதாரத்திற்கு தேவைபடும் 5சதவிகிதத்தை திட்ட ஒதுக்கீட்டில் ஒதுக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்தாலும் 1985இல் 1.05சதவிகிதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1986இல் 1.35சதவிகித மாகவும் 1999இல் 1.04சதவிகிதமாகவும் இது உயர்த்தப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் அதன் உடிஅஅடிn அiniஅரஅ யீசடிபசயஅஅநல் பொது சுகாதாரத்திற்கு 3 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் காங்கிரஸ் அரசு 3 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யவில்லை. 2001-2002இல் 5.2சதவிகிதம் நிதி சுகாதாரத்திற்கு அவசியப்பட்ட நிலையிலும் அரசு 1 சதவிகிதம்  மட்டுமே ஒதுக்கீடு செய்தது. 2008-09 திட்ட காலத்தில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் மருத்துவச் செலவு 5 சதவிகிதம் ஆனால் அரசின் செலவு 0.9 சதவிகிதம் மட்டுமே. இதில் மீதி 4.1 சதவிகிதம் செலவானது தனியார்துறை முதலீடுகள் மூலமாகவே ஈடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் ஆண்டுதோறும் இறக்குமதியாகும் மருந்துகள் உட்பட ஆண்டு மொத்த மருந்து விற்பனைமட்டும் ரூ.30,000/- கோடியாம். 2009ஆம் ஆண்டிற்கான சுகாதார தொழில்துறையின் மொத்த வர்த்தகம் ரூ.1,50,000/- கோடிகளாகும்.  2001ஆம் ஆண்டில் இது ரூ.68,000/- கோடி அளவுக்கு இருந்ததாம். கடந்த 10 ஆண்டில் இரண்டு மடங்கிற்கும் மேல் வளர்ந்துள்ளதாம். இத்துறையின் எதிர்கால வளர்ச்சியானது 2010இல் ரூ.2 லட்சம் கோடிகளாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடிகளாகவும் வளர்ச்சியடையும் படி திட்டமிட்டுள்ளனர் இந்திய ஆளும் வர்க்கங்கள். இந்தியாவின் மொத்த வருவாயில் 5.2சதவிகிதத்திலிருந்து 8.5சதவிகிதத்துக்கான வளர்ச்சியாம் இது. இவர்கள் மருத்துவ மனைகளையும் வளர்க்கப் போகிறார்களாம். அதாவது இந்தியாவில் 1000 நபருக்கு 1.3 மருத்துவ படுக்கை வசதி தான் உள்ளதாம். சீனாவில் 4.3 ஆக உள்ளதாம். சீனா அளவிற்கு வளர முடியாவிட்டாலும் 2012ம் ஆண்டிற்குள் 1000 நபருக்கு 2 மருத்துவ படுக்கை வீதம் மருத்துவ மனைகளை உருவாக்க வேண்டுமாம். இக்கணக்கின்படி இன்னும் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ மனைகளை நாடெங்கிலும் உருவாக்க வேண்டுமாம். இதில் 8,96,500 படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனைகள் தனியார் துறையினர் மூலம் ஏற்படுத்தப்படுமாம். இதற்கென ரூ.2,55,000/- கோடி ரூபாய் தனியார் முதலீடுகள் மற்றும் அந்நிய முதலீடுகள் எதிர்பார்க்கப் படுவதாக இந்திய அரசே அறிவித்துள்ளது.

இவ்வண்ணம் இந்திய மருத்துவ தொழில் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை கணக்கிடுகையில் 2012ஆம் ஆண்டில் 4,50,000 மருத்துவர் பற்றாக்குறை ஏற்படுமாம். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் 3 1/2 ஆண்டு மருத்துவக் கல்வி ஒன்றையும் அறிமுகம் செய்ய உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

தனியார் மயமாக்கலுக்கு ஏற்ப புதிய சுகாதார கட்டமைப்புகள்

பல்லாயிரக்கணக்கான தனியார் மருத்துவமனைகளுக்கும் நூற்றுக்கணக்கான மருத்துவம் சார்ந்த பன்னாட்டு கம்பெனிகளுக்கும் அனுமதியளித்து பல லட்சம் கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கான சந்தையை உத்தரவாதப்படுத்தவும் வளர்க்கவும் வேண்டுமெனில், பெரும்பான்மை மக்களை இவர்களது மருத்துவ வலைப்பின்ன லுக்குள் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கேற்ப புதிய கட்டமைப்பு வசதிகளையும் இந்திய ஆளும் வர்க்கங்கள் உருவாக்கி வருகின்றனர். அதாவது மோட்டார் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனைக்காக கடன் சந்தையைஏற்படுத்தி எங்ஙனம் பெரும்பான்மையோரை கடன்காரர்களாக இத்துறையினர் ஆக்கியுள்ளனரோ, அதுபோல மருத்துவச் சந்தையை பலப்படுத்த ஏற்பட்டுள்ள “மருத்துவக் காப்பீடு சந்தைகளும்” “ஆiஉசடி குiயேnஉந முறைகளும்” பெரும்பான்மை மக்களை நோயாளிகளாக்கிவிடும் ஆபத்து  உள்ளது எனலாம்.

கணிசமான எண்ணிக்கையில் உள்ள இந்திய மத்திய தர வர்க்கத்தினரது, வருவாய்களில் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தை நிரந்தரமாக மருத்துவத்திற்காக ஒதுக்கச் செய்யும் வகையில் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் வளர்த்தெடுக்கப் படுகின்றன. பெரும்பான்மையான இந்திய மக்கள் அத்தியா வசியத் தேவைகளான உணவு, உடை, கல்வி ஆகியவற்றிற்கே செலவிட முடியாத, வருமானம் உடையவர்களாக இருப்பதால் இவர்களுக்கென மத்திய அரசும், தமிழகம், ஆந்திரபிரதேசம் உட்பட பல மாநில அரசுகளும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டங்களை அறிமுகப்படுத்தி யுள்ளன. 2002ஆம் ஆண்டு ஐளேரசயnஉந சுநபரடயவடிசல னுநஎநடடியீஅநவே ஹரவாடிசவைல, இத்தகைய மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு, னுநஎநடடியீஅநவே டிக ழநயடவா சநiஅரெசளநஅநவே iகேசயளவசரஉவரசந என்பதன் அடிப்படையில் அனுமதியளித்துள்ளது. மருத்துவ காப்பீட்டின் 2009 ஆண்டின் சந்தை ரூ.5100 கோடி என்றால் இது 2015 ஆண்டில் இது ரூ.28000/-ஆம் கோடியாக வளர்ச்சியுறுமாம். இந்திய மருத்துவத் தொழிலின் (ழநயடவா ஐனேரளவசல) ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இது அவசியம் என இந்திய பெரு முதலாளிகளின் சங்கங்களான ஊஐஐ மற்றும் ஹளளடிஉhயஅ கருத்து தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவத் தொழிற்துறையை ஊக்குவிக்கும் வகையில் மருத்துவ சுகாதாரக் காப்பீடு திட்டங்களை அரசே அறிமுகப்படுத்தியிருப்பதுடன் இத்தகைய மருத்துவக் காப்பீடுகளில் தனியார் துறையை அனுமதித்திருப்பதுடன், அதில் 100சதவிகிதம் அந்திய நேரடி முதலீடுகளையும் இந்திய அரசு அனுமதித்துள்ளது. பரந்துபட்ட, கோடிக்கணக்கான இந்திய கிராமப்புற மக்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் ரூ.5000 கோடியை காப்பீடு திட்டங்களுக்கென இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழக அரசும், கலைஞர் காப்பீடு திட்டம் என்கிற திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.72,000/-த்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசக் காப்பீடு திட்டத்தை அறிமுகப் படுத்தியிருப்பதுடன் ஸ்டார் காப்பீடு நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் பிரீமியமாக ரூ.515 கோடி செலுத்துவதெனவும் திட்டமிட்டுள்ளது. ஆந்திர மாநில அரசும் ஆரோக்யாசிரி சமூகக் காப்பீடு திட்டம் எனும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை தன்னுடைய 6.54 கோடி மக்களுக்கு ஏப்ரல் 2007 முதல் அறிமுகப்படுத்தியுள்ளதுடன் இத்திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் 50000 அறுவை சிகிச்சைகளையும் நடத்தி வருகிறதாம். இத்தகைய மருத்துவ காப்பீடு திட்டங்கள் வளர்ந்து வரும் மருத்துவ தொழிற்துறையின் சந்தையை பலப்படுத்துமாம். மேலும் இச்சந்தையை பலப்படுத்தும் வகையில் மருத்துவ செலவுக்கான கடன் எனும் ஆiஉசடி குiயேnஉந கடன் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதுடன் இதிலும் 100 சதவிகித அந்நிய முதலீடுகளை அனுமதித்துள்ளது.

அரசின் நுளுஐ மருத்துவ வசதி பெரும் தொழிலாளிகளையும் இந்த இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்திற்குள் கொண்டு வருவதன் வாயிலாய் அரசு தனது சுகாதாரப் பொறுப்பினை விட்டு விலகுகிறது. அரசு மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை பெரும் கோடிக்கணக்கான மக்களையும் இந்த இலவச மருத்துவ காப்பீடு திட்டத்திற்குள் கொண்டு வந்து, அரசு தனது பொறுப்பிலிருந்து விலகுகிறது என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் னுச.ழு.சு.ரவீந்திரநாத்.

தனியார் மருத்துவ நிறுவனங்களில் ஹஎநவேளை என்கிற மருத்துவ நிறுவனத்திற்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் வசதியும் ஆiஉசடி குiயேnஉந வழங்கும் வசதியும் உள்ளதாம். சூடிஎயசவளை மருத்துவமனை மருந்து நிறுவனங்களுடனும், சூழுடீ அமைப்புகளுடனும் இணைந்து கூட்டு சேர்ந்துசெயல்பட உள்ளதாம். ளுவயச ழநயடவா ஐளேரசயnஉந நிறுவனம் தனக்கென 120 மருத்துவமனை தொடர்பு களையும் 4000 மருத்துவமனை இணைப்புகளையும் வைத்துள் ளதாம். மருந்து உற்பத்தி, மருத்துவமனை மருத்துவக் காப்பீடு, மருத்துவக் கடன் வசதி மற்றும் சூழுடீ ஆகிய எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய நிறுவனங்களாய் இந்திய மருத்துவ நிறுவனங் களும், பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களும் இந்தியாவில் உள்ளன.

ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் என்பதன் பெயரில் இந்திய முதலாளிகள் மற்றும் பன்னாட்டு ஏகாதிபத்தியங்களின் லாபவேட்டைக்கேற்ப பிரம்மாண்ட வலைப்பின்னல்கள் உருவாக்கப்படுகின்றன.

தனியார் மருத்துவ மனைகளும் அதன் வணிகமும் இலக்குகளும்

இருதய அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சை போன்ற பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு வசதி உள்ளவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு சென்று வந்த நிலை மாறி ஆசிய மக்கள் மேற்படி அறுவை சிகிச்சைகளுக்காக இந்தியா வந்து செல்லும் அளவிற்கு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மருத்துவக் கல்வி பயின்றவர்களுக்கு வெளிநாடு களில் நல்ல வேலைவாய்ப்புகள் என்றிருந்த நிலை மாறி இவர்களுக்கு இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாட்டு மருத்துவமனைகளில் இந்தியர்கள் வரிசையில் காத்திருந்து உயிர்வாழும் நிலையை மாற்றும் வகையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகவே ழலனநசயயென ழுடடியெட ழடிளயீவையட துவங்கப்பட்டதாக இதன் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான னுச.மு.ரவிந்தரநாத் பெருமை கொள்கிறார். இதுவரையில் இம்மருத்துவமனையில் 5000 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாம். மேலும் இந்த மருத்துவமனை இங்கிலாந்தை சேர்ந்த கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனையுடன் கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி இந்தியாவில் ஊநவேநச டிக நஒஉநடடநnஉந in கூசயளேயீடயவேயவiடிn ஏற்படுத்தப் போகிறார் களாம். இம்மருத்துவமனை மும்பை, புவனேஷ்வர், டில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்த உள்ளதாம். இங்ஙனம் பிரத்தியேகமாக தனித்தனி நோய்களுக்காகவே, சிறப்பு மருத்துவமனைகள் கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மருத்துவமனைகளும் தொழிற் துறையை போன்றே  இலாப இலக்குகளையும் வளர்ச்சிக்கான திட்டங்களையும் தீட்டுகின்றனர். மக்களின் ஆரோக்கியத்தை விட லாப நோக்கமே இவர்களது திட்டங்களில் மேலோங்கி உள்ளது.

இத்தகைய மருத்துவ மனைகளில் சிலவற்றின் எதிர்கால திட்டங்களை கவனிப்போம். டீnஉடிடடிபல -க்கென துவங்கப்பட்டுள்ள ழநயடவா உயசந ழுடடியெட நுவேநசயீசiஉநள எனும் மருத்துவமனை குநb, 2009இல் 115 கோடி வர்த்தகத்தைக் கொண்டிருந்ததாம். பிப்ரவரி 2010க்குள் ரூ.250 கோடி வர்த்தகம் எதிர்பார்க்கப்படுகிறதாம். 2012இல் 500 கோடி வர்த்தக இலக்கு வைத்திருப்பதுடன் மருத்துவ மனையின் பிரிவுகளை 16லிருந்து 24 ஆக உயர்த்தவும் திட்டமிட்டிருப்பதாக இதன் தலைவர் டாக்டர் அஜய்குமார் கூறுகிறார். ருசடிடடிபல  மற்றும் டுயயீசடிளஉடியீலக்கென துவங்கப் பட்டுள்ள சுழு ளுவடிநே ழடிளயீவையட குநசெரயசல, 2009 வரையில் ரூ.40 கோடி வர்த்தகத்தை கொண்டிருந் ததாம். பிப்ரவரி 2010க்குள் ரூ.50 கோடி வர்த்தகம் எதிர்பார்க்கப் படுவதுடன், 2011ஆம் ஆண்டுக்குள் ரூ.100 கோடிக்கான வர்த்தக இலக்கு நிர்ணயித்துள்ளதுடன் இம்மருத்துவமனையின் பிரிவுகளை 2011க்குள் 16லிருந்து 50க்கு உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக இம்மருத்துவமனையின் இணை மேலாண்மை இயக்குநர் னுச.ஆயniளா க்ஷயளேயட கூறியுள்ளார். வாசன் கண் மருத்துவமனையின் தலைவர் னுச.ஹ.ஆ.ஹசரn பிப்ரவரி 2009 வரையிலான தங்களது வர்த்தகம் ரூ.100 கோடி எனவும், பிப்ரவரி 2010க்கான இலக்கு ரூ.225 கோடியெனவும். 2011ஆம் ஆண்டுக்கு ரூ.500 கோடி வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது 31 மையங்களை 100 மையங்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள தாகவும் கூறுகிறார். இவர்களுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் மருத்துவ மையங்கள் உள்ளனவாம். இதுபோல் சூடிஎய ஆநனஉயைட ஊநவேநசளன் தலைவர் னுச.மகேஷ் ரெட்டி தற்போதைய மருத்துவ மையங்களை 2012ஆம் ஆண்டுக்குள் 30ஆக உயர்த்துவதுடன் அதன் வர்த்தகத்தை ரூ.500 கோடிக்கு உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகிறார். சுநயேட னுயைடலளளைக்காக துவங்கப்பட்டுள்ள ழு.ளு.மு.ஏநடர ஹடடயைnஉந ஆநனiஉடியீ மருத்துவமனையும் தனது வர்த்தகத்தை ரூ.5 கோடியிலிருந்து 2012க்குள் ரூ.100 கோடிக்கு உயர்த்தவும் தனது ஒரே மையத்தை 100 இடங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றார். கேன்சர் மருத்துவத்திலும் 16 மருத்துவமனைகளை கொண்ட ழநயடவா உயசந ழுடடியெட நிறுவனம் பிரம்மாண்டமாய் வளர்ந்து வருகிறது.  இதில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம் ஜி என்பவர் ரூ.100 கோடி முதலீடு செய்துள்ளாராம். மேலும் ழு.நு.ழநயடவா உயசநள ஐனேயை நிறுவனம் மருத்துவமனை மட்டுமின்றி சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ.மிஷன் போன்ற உயரிய மருத்துவக் கருவிகளின் உற்பத்தியிலும் ரூ.2313 கோடியை 2008-09 ஆண்டில் முதலீடு செய்துள்ளதாம். ஏராளமான தனியார் துறை மருத்துவமனைகள் லாப நோக்குடைய கம்பெனிகளாய், நிறுவனங்களாய் துவங்கப் பட்டுள்ள நிலையில் இந்த மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளின் தேவையும் ஆண்டுக்கு 15சதவிகிதம் உயர்ந்து வருகிறதாம்.

தனியார் மருத்துவமனைகளின் 400சதவிகிதம் லாபதிட்டத் திற்கேற்ப மருந்து விற்பனையும் இதே காலகட்டத்தில் பல மடங்கு கூடியுள்ளது. இந்திய முதல் 10 மருந்து நிறுவனங்களின் 2009 ஆண்டு மருந்து விற்பனையை கவனித்தல் அவசியம். 1) ஊiயீடய  ரூ. 2020 கோடி 2)சுயnயெஒல ரூ. 1837 கோடி, 3) ழுடயஒஉடி ளுஅiவாடiநே ரூ.1618 கோடி, 4) ஞசையஅயட ரூ.1533 கோடி, 5)ஷ்லனரள- ரூ.1362 கோடி 6) ளுரnயீhயசஅய ரூ.1333கோடி 7) ஹடமநஅ ரூ.1185 கோடி 8) டுரயீin ரூ.1028 கோடி, 9) ஆயமேiனே ரூ.993 கோடி, 10) ஹசளைவடி  ரூ.906 கோடி. ஒரே வருடத்தில் இந்தியாவில் மருந்து விற்பனை இரட்டிப்பாகி உள்ளதாம். மருத்துவமனைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையிலும், மருந்து விற்பனை இரட்டிப்பாகிய போதிலும், இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவதற்கு மாறாக, பல மடங்கு கூடியுள்ளது என்பதே இன்றைய எதார்த்தமாகும்.

மருந்து கம்பெனிகளுக்கும், மருத்துவமனை நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் லாப வேட்டைக்கானவாய்ப்புகள் எவ்வளவு ஏற்பட்டாலும், இவர்களுக்கிடையிலான கடுமையான போட்டியும் முடிவில்லாது தொடர்கின்றது. பன்றிக் காய்ச்சல் சம்மந்தமாக அளவுக்கு மிகுந்த பீதியை மக்கள் மத்தியில் பரவச் செய்து பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மிகுந்த லாபம் அடைந்ததாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ழஐசூஐ ஸ்வைன் ஃப்ளு தொற்று நோய்க்கான மருந்து வியாபாரத்திலும், தடுப்பு நடவடிக்கைக்கான வியாபாரத்திலும் ஊiயீடய, சுயnயெஒல மற்றும் சுநடபையசந நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவியதாம். கல்லீரல் புற்றுநோய்க்கான மருந்தாகிய சூநஒயஎயசஇன் வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனமான க்ஷயலநச  நிறுவனத்திற்கும் இந்தியாவின் ஊiயீடய நிறுவனத்திற்கும் காப்புரிமையை அடிப்படையாகக் கொண்டு பயங்கர மோதல் நிலவி வருகிறதாம். னுசரபள உடிவேசடிடடநச ழுநநேசயட டிக ஐnனைய வின் ஆதரவால் உiயீடய நிறுவனம் தற்காலிகமாக போட்டியில் வென்றுள்ளதாம். வளர்ந்து வரும் மரபணு மருந்து சந்தையில் உரிய சந்தையைப் பிடிக்க இவர்களுக்குள் நடக்கும் மோதலாகவும் இது உள்ளது. மரபணு மருந்து தொழிலில் இந்திய முதலாளிகளுக்கு நல்ல வாய்ப்புள்ளது என்கின்றனர் இத்தொழில் துறையினர். அமெரிக்காவின் மைக்ரோ சாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் இந்தியாவில் மரபணு மருத்துவத் தொழிலில் மிகுந்த முதலீடுகள் செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஆரோக்கியம்,  சுகாதாரம்,  மருத்துவம் ஆகியவை இனி சேவைத் துறை அல்ல. நல்ல லாபம் கிடைக்கும் சந்தைகளாகும். ரான்பாக்சி லேபரட்டரிஸ், ஜி.எஸ்.கே.பார்மா மற்றும் சிப்லா போன்ற 7 முன்னணி மருந்து நிறுவனங்கள் நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 255சதவிகிதம் நிகரலாபம் ஈட்டியுள்ளதாம். அப்பலோ குழுமத்தின் நிறுவனமான இந்திர பிரஸ்தா மெடிக்கல் கார்ப்பரேஷன் நடப்பாண்டில் ரூ.400 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாம். இவர்களது லாபம் குறைவடையாமல் இருக்க வேண்டுமெனில் இவர்களுக்கு நோயாளிகள் குறைவில் லாமல் கிடைக்கவேண்டும். தீபாவளிக்கு அளிக்கப்படும் போனஸ் பொங்கலுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை முதலாளித்துவச் சந்தையை ஊக்கப்படுத்த எங்ஙனம் பயன்படுகின்றனவோ, அதுபோலவே அவ்வப்போது ஏற்படும் மற்றும் ஏற்படுத்தப்படும் மர்ம நோய்களும் தொற்று நோய்களும் மருத்துவச் சந்தையை ஊக்கப்படுத்த உதவுகின்றன.

சமீபத்திய மர்மநோய்களும் தொற்று நோய்களும் குறுகிய காலங்களே மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் இவைகள் இந்திய மருத்துவ தொழில்துறைக்கு உந்து சக்தியாக விளங்கியதாம். குறுகிய காலங்களிலேயே இத்தொற்று நோய்களுக்கான மருத்துவ வர்த்தகம் மூலம் இந்திய மருத்துவ தொழில் துறை நல்ல லாபங்களை ஈட்டியுள்ளன. சமீபத்தில் பரவிய ஸ்வைன் ஃப்ளு வைரஸ் நோய்க்கு இந்தியாவில் 3 மாதத்திற்குள் 63 பேர் பலியானர்கள். 3000 பேருக்கு இந்த வைரஸ் நோய் பாதிப்பு இன்னமும் உள்ளது. இந்த நோய் பரவிய ஆகஸ்ட் 2009 மாதத்தில் மட்டும் டெல்லியில் உள்ள சுநடபையசந எனும் மருந்து கம்பெனி 60000 மாஸ்க்கையும் 5000 டிஸ்போஸல் கையுறைகளையும் விற்பனை செய்துள்ளதுடன் இந்திய தொழிற்சாலைகளிலிருந்து நிறைய க்ஷரடம டீசனநச களையும் இதே நிறுவனம் பெற்றுள்ளதாம். ளுசுடு  எனும் ஒரு மருத்துவக் கம்பெனி ஸ்வைன் ஃப்ளுவுக்கான டெஸ்டுகளை டெல்லியில் மட்டும் தினம் 1000த்துக்கும் மேலாக பெற்றதாம். ஒரு டெஸ்ட்டுக்குரிய கட்டணம் ரூ.4500/-. இந்த டெஸ்ட்டுக்காகவே 10 நடமாடும் லேப்-பை ஏற்படுத்தியதாக இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் சௌத்திரி கூறியுள்ளார். இந்திய சுகாதார அமைச்சகம் இந்திய முழுவதுமுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சப்ளை செய்யும் விதமாக இந்நோய்க்கான 20 மில்லியன் மாத்திரைகளை உடனடியாக தயாரித்து சப்ளை செய்ய டெண்டர் அறிவித்துள்ளது. 1 முறைக்கான மாத்திரையின் விலை ரூ.300/-. இந்த டெண்டரை எடுக்க சிப்லா, சுயnயெஒல நிறுவனங் களிலேயே கடும் போட்டி நிலவியதாம். முடிவில் ஊiயீடய நிறுவனத் திற்கே கிடைத்ததாம். சுயnயெஒல அடுத்த சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறது.

லாப வளர்ச்சி முதலாளித்துவத்தை எங்ஙனம் கட்டுக் கடங்காத வகையில் இழுத்துச் செல்கிறது என்பதை மாமேதை மார்க்ஸ் பின்வருமாறு விளக்குகிறார். இயற்கை ஒரு வெற்றிடத்தை வெறுப்பதாக முன்னர் கூறப்பட்டது போல மூலதனம் லாபமெதுவும் இல்லாமல் போகுமோ அல்லது மிகச்சிறு லாபம் மட்டுமே கிடைக்குமோ என்று அஞ்சுகிறது. போதுமான லாபமிருந்தால் மூலதனம் மிகவும் தைரியம் பெறுகிறது. நிச்சயம் ரூ. 10 லாபம் கிடைத்தால் எங்கானாலும் அது ஈடுபடுத்தப்படுவது உறுதி. நிச்சயம் ரூ. 20 கிடைத்தால் ஆவல் தூண்டப்படும். ரூ. 50 கிடைத்தால் திட்டமான போக்கிரித்தனம் தோன்றும். ரூ. 100 லாபம் கிடைத்தால் சகல மனித விதிகளையும் துவம்சம் செய்யத் தயாராகிவிடும். ரூ. 300 என்றால் அதன் மனசாட்சி உறுத்தக் கூடிய குற்றச்செயலே மிச்சமிருக்காது. அதன் சொந்தக்காரர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும் கூட அது இறங்கிப்பார்க்காத விஷப்பரிட்சையேதும் பாக்கி நிற்காது. கொந்தளிப்பும் குமுறலும் லாபமளிக்கும் என்றால் அது இரண்டையுமே இஷ்டம்போல் ஊக்கப்படுத்தும் என்றார் மாமேதை மாணக்ஸ். 300 சதவீத லாப நோக்கில் துவங்கப்படும் மருத்துவமனைகள், 4 மடங்கில் அல்லது 5 மடங்கில் வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டும் மருத்துவமனைகள் மற்றும் மருந்து கம்பெனிகள், இலக்கை அடைய இவர்களிடையே நடக்கும் கடுமையான வியாபாரப் போட்டி, இந்திய மக்களுக்கு ஆரோக்கிய வாழ்வைஅளிக்காது மாறாக தொற்று நோய்களும், மர்ம நோய்களும் தான் இவர்களது நிறுவனங்களுக்கு லாபமளிக்கும் என்றால் அவைகளையே இஷ்டம்போல் ஊக்கப்படுத்தும். இந்திய மருத்துவத் தொழில் துறையை தங்களது அசுர வளர்ச்சிக்குரிய துறையாக இந்திய ஆளும் வர்க்கமும் பன்னாட்டு பகாசூர கம்பெனிகளும் மாற்றி வருகின்றன.

அதே நேரத்தில் மருத்துவச் செலவுகளை தாக்குபிடிக்க முடியாமல் 24சதவிகிதம் நோயாளிகள் ஆண்டுதோறும் மருத்துவ செலவுக்குப்பின் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டு வருகின்றனர். ஆக இந்திய மருத்துவத் தொழில்துறை இந்திய பெரு முதலாளிகளுக்கும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங் களுக்கும் பிரம்மாண்டமாய் லாபங்களை அள்ளி வழங்கும் அதே நேரத்தில் இந்திய வெகு ஜனங்களின் வருமானங்களை கொள்ளையிடு வதுடன் அவர்களை நோயாளிகளாக மாற்றுவதாகவும், உள்ளது.

1991 முதல் அமலாக்கப்ட்டு வரும் உலகமய, தனியார் மய, தாராளமய கொள்கைகளால் மருத்துவம் மற்றும் சுகாதார வாய்ப்புகள் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்திருந்தாலும் சந்தை சக்திகளே இவற்றை தீர்மானிப்பதாலும், இவர்களது நோக்கம் “மக்கள் நலன்” “எல்லோருக்கும் மருத்துவம் மற்றும் சுகாதாரம்” என்பதாக இல்லாமல், இவர்களது நிறுவனத்தை விரிவுபடுத்துதல், லாபத்தை பெருக்குதல் என்பதாகவே உள்ளது. “வாங்கும் சக்தி இல்லாதவர்களை” இவர்களது மருத்துவ மனைகளும், விஞ்ஞான வளர்ச்சியும் கண்டு கொள்வதில்லை. ஆக தனியார்மயமும் உலகமயமும் சுகாதாரத்தை சந்தைப் பொருளாக மாற்றியுள்ளது.

இந்நிலையிலும் மத்திய சுகாதார அமைச்சர் அவர்களோ, “மருத்துவச் சந்தையை” மேலும் ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் “ஆநனiஉயட ஞயசமள”ஏற்படுத்தப்படும் என்பதுடன் மருத்துவக் கருவிகளின் தொழிற்சாலைகளுக்கென “சிறப்பு பொருளாதார மண்டலங்கள்”  ஏற்படுத்தப்படும் என கூறுகிறார். வளர்ச்சி என்பதன் பெயரில் இந்திய முதலாளிகளின், பன்னாட்டு முதலாளிகளின் லாப வேட்டை முடிவில்லாமல் தொடரவிருக்கின்றன.

நோய் நாடி, நோய் முதல் நாடி:-

எத்தனை லட்சம் கோடிகள் மருத்துவத் தொழிலில் முதலீடுகளாக செலுத்தப்பட்டாலும், ஆயிரமாயிரமாய் நவீன மருத்துவ மனைகள் கட்டப்பட்டாலும், பிரம்மாண்டமாய் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டாலும், எத்தகைய நவீன கருவிகள் விஞ்ஞானத்தால் படைக்கப் பட்டாலும், இந்திய ஆளும் வர்க்கத்தினரால் எல்லோருக்கும் சுகாதாரத்தையும், ஆரோக்கிய வாழ்வையும், வழங்க இயலாது. இந்திய முதலாளிகளுக்கும் பன்னாட்டு ஏகாதிபத்தியங்களுக்கும் இத்தகைய நோக்கங்கள் கிடையாது. இவர்களது நோக்கங்கள் எப்படியாகிலும் கொள்ளை லாபம் ஈட்டுவதே. தெருவுக்கு தெரு சாராயக் கடையை திறந்து வைத்துக் கொண்டு, ஆரோக்கியம் பேசும் ஆளும் வர்க்கங்களே இவர்கள். மக்களை சாதிய பழக்கங்களிலும் மத சம்பிரதாயங்களிலும் தொடர்ந்து ஆட்படுத்த திட்டமிட்டுக்கொண்டே ஆரோக்கியத் திற்கும் திட்டமிடுவர். பெரும்பான்மையான நோய்களுக்கு அடிப்படை காரணமாக உள்ள வறுமையை ஒழிக்க இவர்களிடம் திட்டமில்லை. மாறாக இவர்களது திட்டங்களே வறுமையை ஏற்படுத்துகின்றன.  நோய் தடுப்பு முறை குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் எல்லா மக்களுக்கும் ஏற்படுத்த இவர்கள் தயாரில்லை. உலகமயம், தனியார்மயம் கொள்கை களால் லட்சோப லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு, பிழைப்பு தேடி புதிய இடங்களுக்கு செல்வதால் ஏற்படும் சுகாதார இடர்பாடுகளை தீர்க்க இவர்களிடம் திட்டம் இல்லை. இவர்கள் தங்களின் தொழில் வளர்ச்சிக்கு காட்டும் அக்கறையை மக்களின் உடல் வளர்ச்சிக்கு காட்டுவதில்லை. வாங்கும் சக்தி உள்ளவனுக்கே மருத்துவ வசதி என்பதே இவர்களது விதி. இன்றையத் தொழிலாளர்களை நோயாளிகளாக மாற்றக்கூடிய “மன அழுத்தம் தரும் வேலை சூழலையும்” மாற்ற இவர்களால் முடியாது. “மன அழுத்தத்திற்கு இவர்களே காரணமானவர்கள். ஆரோக்கியமின்மைக்கு அடிப்படை காரணமாகும், “பெரும் பான்மையோர் வாழ்வை சிலரே தீர்மானித்தல்” என்பதையும் இவர்களால் மாற்ற முடியாது. முடிவாக ஆரோக்கியத்தின் அடிப்படையாகிய சுதந்திர வாழ்வையும் இவர்களால் வழங்க முடியாது. நோய் தீர்க்கும் மருத்துவம் என்றாலும் நோய் தடுக்கும் மருத்துவம் என்றாலும், இரண்டுமே இவர்களது லாபத்திற்காகவே. மருத்துவ இலவசக் காப்பீடு திட்டங்கள் மருத்துவ சந்தையை ஸ்திரப்படுத்தி இந்திய முதலாளிகளின் இலாபங்களை உத்தரவாதப்படுத்துவதே. இவர்களின் மருத்துவ ஆய்வுகளும், விஞ்ஞான வளர்ச்சிக்கான திட்டங்களும், இவர்களது தொழில்துறை லாபங்களுக்கு என மாற்றப்பட்டு விட்டது. இவர்களது தொழில்துறைக்கு லாபம் என்பதால், கோடானு கோடி மக்களுக்கு பயன்பட்டுவரும் அரசின் அடிப்படை சுகாதார பணிகளின் முக்கியத்துவமும் அரசின் பொது சுகாதாரப் பணிகளின் முக்கியத்துவமும் சிறிது சிறிதாக மறுக்கப்பட்டு வருகிறது.

பொதுத்துறையால் வளர்ந்த இந்திய ஆளும் வர்க்கங்களே பொதுத்துறையை தனியார் மயப்படுத்தியது மட்டுமின்றி கட்டுப்பாடற்ற வாணிபத்தை கட்டுப்பாடுகள் ஏதுமின்றி அனுமதித்துள்ளன. விலைவாசி உயர்வைக் கூட கட்டுப்படுத்த முடியாதென பிரதம மந்திரியே கூறிவிட்டார். மூலதனத்தை கட்டுப்படுத்திய காலம் முடிந்தது. மூலதனம் இன்று எல்லா துறைகளிலும் கொந்தளிப்பையும் குமுறலையுமேஏற்படுத்தி வருகின்றன. மூலதனத்தை வீழ்த்துவதே அமைதியையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தும். சோசலிசமே மூலதனத்தை வீழ்த்தும். மாபெரும் சமூக மாற்றத்திற்கான, நீண்ட கால போராட்டமே சோசலிசப் போராட்டம் என்றாலும், அதுவே சந்தைமயமாகிவிட்ட மருத்துவத்தையும் சுகாதாரத்தையும், மக்களது சேவைத் துறைகளாக மாற்றியமைக்கும்.

சமூக மாற்றத்திற்காகப் போராடுவோம்! சோசலிசத் திற்காகப் போராடுவோம்!

-ஐ. ரத்தினவேல்



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: