கடந்த சில மாதங்களாக உணவு தானியங்களின் தொடர் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கச் செய்துள்ளது. மறுபுறம் உணவு தானியங்களின் விலை உயர்வை பற்றி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் கேள்விகள், தொடர் நடவடிக்கைகள் பற்றிய விவாதம் தொடர்ந்து நடைபெறும் போது மத்திய வேளாண் மற்றும் நிதி அமைச்சகங்கள் பல்வேறு வகையான அறிவுப்புகள் செய்து நடைமுறைப் பிரச்சனைகளுக்கு போதிய நடவடிக்கைகள் எடுக்காமல் உண்மை நிலையை மறைக்கும் நடைமுறையைக் காண முடிகிறது. குறிப்பாக வேளாண் விளைப்பொருட்களின் கடுமையான விலை உயர்வை பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய நிதி அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் பேசும் போது உணவு தானியங்களின் கொள்முதல் அதிகரிப்பு மற்றும் உணவு தானிய பற்றாக்குறையே விலை உயர்வு பிரச்சனைக்கு காரணம் என்று கருத்து தெரிவித்தார். சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், வேளாண் பொருட்களின் தொடர் விலை உயர்வு (ஞசiஉந சுiஉந டிக குயசஅ inயீரவள) மற்றும் பல உயர்ந்து வரும் நடைமுறை செலவுகளை ஈடு செய்யவும் விவசாய சங்கங்கள் இடதுசாரி இயக்கங்கள், பிராந்திய அரசியல் இயக்கங்கள் வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தளவு கொள்முதல் விலையை (ஆiniஅரஅ ளரயீயீடிசவ யீசiஉந) அதிகரிக்க விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் உயர்த்துவது ஒரு நடைமுறை தேவை மற்றும் வாடிக்கை. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கூட கரும்பின் கொள்முதல் குறித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல லட்சம் வடமாநில விவசாயிகள் டெல்லியையும், நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்டு பின்னர் மத்திய அரசின் தவறான கரும்புக் கொள்முதல் விலை பற்றிய கொள்கையை, நடைமுறையை மாற்றி அறிவிக்கச் செய்தனர். இத்தகைய நடைமுறை சூழலில் விவசாயிகளின் நலன்கள் மற்றும் தொடர் பொருளாதாரத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச விற்பனை விலையை காரணம் காட்டி மத்திய அரசு உணவு தானியங்களின் விலை உயர்வை நியாயப்படுத்துவது ஒரு மிகப் பெரிய மோசடியாகும். மறுபுறம் மத்திய அரசின் குறைந்தபட்ச விற்பனை விலை உயர்வை புள்ளி விபரங்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும்போது மத்திய அரசின் கொள்முதல் விலை உயர்வுக்கும், தற்போதைய உணவு தானியங்களின் தொடர் விலை உயர்வுக்கும் எந்த விதமான சம்பந்தம் இல்லை என்பதை எளிதில் நாம் புரிந்து கொள்ள முடியும்.
வேளாண் கொள்முதல் விலை கொள்முதல் விலை
விளைபொருட்கள் 2008-09 2009-10
- நெல் 850 950
- கோதுமை 1080 1100
- மக்காச்சோளம் 750 840
- ராகி 915 915
- சோளம் 840 840
- கரும்பு 840 840
- நிலக்கடலை 2100 2100
- உளுந்துப்பயிறு 2520 2520
- சோயா 1850 1850
- பச்சைப்பயிறு 2520 2760
- துவரம்பருப்பு 2000 2300
- பருத்தி 3000 3000
– ளுடிரசஉந : கூhந ழiனேர – க்ஷரளiநேளள டுiநே னவ. னுநஉ. 29, 2009.
மத்திய மற்றும் மாநில அரசுகள், வேளாண் அமைச்சகம், பல பொருளாதார அமைப்புகள் பல ஆய்வுகள், சந்தை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் குறைந்தளவு விற்பனை விலை நமது நாட்டில் நிர்ணயம் செய்யப்படுகிறது. விவசாயிகளின் அதிகப்படியான இடுபொருள் விலை உயர்வு, மற்றும் நடைமுறை சூழலை அடிப்படையாகக் கொண்டு குறைந்தளவு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் விவசாயிகள், விவசாய சங்கங்களின் கோரிக்கைகள், போராட்டங்களை கருத்தில் கொண்டும் சில சமயங்களில் கடுமையான உற்பத்தி இழப்புகள் மற்றும் சாகுபடி பரப்பளவு வெகுவாகக் குறைவதை கருத்தில் கொண்டும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்கிறது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு வருடமாக மிகக் குறைந்தளவு மட்டும் குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வும் செய்யப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் என்ற அளவில் பார்க்கும் போது ஒரு ரூபாய் என்ற அளவில் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. சில விவசாய விளைபொருட்களின் கொள்முதல் விலை உயர்த்தப்படவே இல்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக நீர்ப்பாசனம் குறைந்த நிலங்களில் சாகுபடி செய்யப்படும் ராகி, சோளம், கம்பு, மானாவாரி உளுந்து, நிலக்கடலை, சோயா போன்ற வேளாண் பொருட்களின் கொள்முதல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நாட்டில் பருத்தி சாகுபடி பிரச்சனையில் பல்லாயிரம் விவசாயிகள் மாண்ட போதும் குறைந்தபட்ச கொள்முதல் விலை கடந்த ஒரு வருடமாக உயர்த்தப்படவில்லை. பச்சைப்பயிறு மற்றும் துவரம்பருப்பின் கொள்முதல் விலை அதிகப்படியாக உயர்த்தப்பட்டாலும், சந்தையில் விவசாயிகள் குறைந்தபட்ச கொள்முதல் விலையை விட பச்சைப்பயிரில் 2008-2009ஆம் ஆண்டில் 2900ரூபாய் என்ற அளவிலும், 2008-2009ஆம் ஆண்டில் 4600 ரூபாய் என்ற அளவிலும், 2009-2010ஆம் ஆண்டில் 4600 ரூபாய் என்ற அளவில் இருந்தால் விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை. இதேபோன்ற நிலைதான் துவரம் பருப்பு விற்பனையிலும் காணப்பட்டது. 2008-2009ஆம் ஆண்டில் 4000 ரூhய் என்ற அளவிலும், 2009-2010ம் ஆண்டில் 4600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையிலும் பயன் இல்லை. இத்தகைய நடைமுறை சூழலில் தற்போதைய உணவு தானியங்களின் தொடர் விலை உயர்வு உணவு தானியங்களின் கொள்முதல் விலை உயர்வே காரணம் என்ற மத்திய நிதி அமைச்சரின் கருத்து தவறானது என்பதும் தற்போதைய விலை உயர்வுக்கு உரிய உண்மையான காரணங்கள் புறந்தள்ளப்பட்டு தவறான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வேளாண் விளை பொருட்களின் விலை உயர்வு – பிற உண்மை காரணங்கள்
மத்திய மற்றும் மாநில அரசுகள் வேளாண் சந்தையில் தனியார் பெரும் நிறுவனங்களை சந்தைப்படுத்தும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பொருளாதாரக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட அனுமதித்தது. இத்தகைய சூழலில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் குறைந்தபட்ச விலையை விட அதிகமாக வழங்கி பல ஆயிரம் டன்கள் உணவு தானியங்களை நேரடியாக கொள்முதல் செய்து ஒரு செயற்கையான உணவுப் பற்றாக்குறையை உணவுச் சந்தைகளில் உருவாக்கி மொத்த மற்றும் சில்லறை விலையை கடுமையாக உயர்த்தி உணவு தானிய விலையை விஷம் போல உயர்த்தி வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை உணவுக் கொள்முதல் செய்யும் பணியை பஞ்சாப், சண்டிகர் போன்ற வடமாநில சந்தைகளில் கொள்முதல் பணியை முடித்து விட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து அதிக விலைக்கு வேளாண் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு இந்தியா உணவுச் சந்தைகளில் வேளாண் பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் நிலை நடைமுறையில் காணப்படுகிறது.
அடுத்ததாக, நமது நாட்டில் வேளாண் பொருட்களின் கட்டுப்பாடு, பற்றாக்குறை இருக்க, தொடர்ந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஒப்புதல் வழங்கி வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் கரும்பு உற்பத்தி பரப்பளவு வெகுவாகக் குறைந்து சர்க்கரையின் பற்றாக்குறை காரணமாக அதிக விலைக்கு விற்கப்படும் நிலையில் வெளிநாடுகளுக்கு முந்தைய வர்த்தக ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்று சர்க்கரை ஆலைகள் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது மேலும் விலைவாசி உயர்வையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
மூன்றாவதாக, கடந்த பல ஆண்டுகளாக, வேளாண்மை பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள் வேளாண்மை உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் பெருக்கத்தில் அதிகளவு முனைப்புடன் செயல்பட்டு பல புதிய ரகங்களை அறிமுகம் செய்து வேளாண்மை உற்பத்தியை வெகுவாகப் பெருக்கியது. ஆனால் வேளாண் விளைபொருட்களை சந்தைப் படுத்துவதிலும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதிலும் போதிய கட்டமைப்பு வசதிகள், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் கெட்டுப் போய்விடும் நடைமுறையில் நிலவுகிறது. இத்தகைய இழிநிலை நடைமுறையில் நிலவுகிறது. இத்தகைய நிலை மாற்றப்பட்டு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணவு மற்றும் புரதத் தேவையை நிறைவு செய்ய மத்திய மற்றும் மாநிலத் தொடர் விற்பனை மற்றும் விரிவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இறுதியாக, தற்போதைய தொழில் வளர்ச்சி மற்றும் வர்த்தகக் கொள்கையை மையமாகக் கொண்டு பல நல்ல பாசன வசதியுடைய வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தி குறைந்த மானிய விலையில், அதிகளவு வரிச்சலுகைகள், வரி விடுமுறைகளுடன்(கூயஒ ழடிடனையலள) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பல தலைமுறைகளாக கிராமங்களில் வாழ்ந்த மக்களின் நிலங்களை, வாழ்வுரிமைகளை தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சிறைப்பிடித்து மாற்றுவதால் உணவு தானியங்கள் பற்றாக்குறை செயற்கையாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொடர் தவறான தொழிற்கொள்கைகளால் ஏற்பட்டு வருகிறது.
மாற்று செயல்திட்டங்களும், நடைமுறைகளும்
¨ உணவு தானியங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் தனியார் வேளாண் நிறுவனங்களுக்கு போதிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுத்துறை உணவு தேவைகளுக்கு போக மிகுதியான உணவு உற்பத்தி காணப்பட்டால் மட்டுமே தனியார் வேளாண் நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும், உணவு தானியக்குறைபாடு மற்றும் பற்றாக்குறை காலங்களில் தனியார் வேளாண் நிறுவனங்கள் பல ஆயிரம் டன்கள் உணவு தானியங்களை வாங்கி, சில்லறை மற்றும் மொத்த சந்தையில் விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
¨ நமது நாட்டில் உணவு தானியங்கள், மற்றும் பிற உணவுப் பொருட்களின் போதிய உற்பத்தி, விளைச்சல் இல்லாத போது கட்டாயமாக உணவு ஏற்றுமதியை செய்ய வேளாண் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது.
¨ நமது நாட்டில் போதிய உணவு பதப்படுத்தும் மற்றும் மதிப்பு கூட்டும் வசதிகள் இல்லாத காரணத்தால் பல கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் மற்றும் வேளாண் பொருட்கள் கெட்டுப்போய் விடுகிறது. இந்த நிலை தவிர்க்க மத்திய அரசு நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உணவு பதப்படுத்தும் மற்றும் மதிப்புக்கூட்டும் கூடங்களை அமைக்க வேண்டியது அவசியம். படித்த, பட்டதாரி கிராம இளைஞர்கள், சுயஉதவிக்குழுக்களுக்கு போதிய கடன் உதவி மற்றும் பயிற்சிகள் வழங்கி விவசாயிகளின் விளைபொருட்களை நல்ல முறையில் பயன்படுத்தி உற்பத்தி இழப்புகளை பெருமளவில் தடுக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் இயங்கும் அனைத்து உழவர் சந்தைகளில் சுயஉதவிக்குழுக்கள் வாயிலாக குளிர்பதன அறைகள், மதிப்புக்கூட்டும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
¨ தற்போது தொழில்வளர்ச்சி என்ற போர்வையில் உழவர்களின் விளை நிலங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பறிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள் அமைக்கும் முயற்சியை கைவிட்டு பிற்படுத்தப்பட்ட வறண்ட பகுதிகளில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை பெருக்கும் முயற்சியில் புதிய தொழில் கொள்கைகள், நடைமுறைகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்
சுநகநசநnஉநள யனே ளுரயீயீடிசவiபே னுடிஉரஅநவேள:
- ஆ.சு. ளுரசெயஅயni, 2009 ஆயசமநவள பைnடிசந கயசஅ ளரயீயீடிசவ யீசiஉநள வiஅந யனே யபயin
– கூhந ழiனேர, க்ஷரளiளேளள டுiநே, னயவநன னுநஉநஅநெச 29. (ஊhநnயேi நுனவைiடிn)
- மு.ஹ. க்ஷயனயசiயேவா, 2009. ஊநவேசந னநகநசள ளரபயச நஒயீடிசவ டிடெபையவiடிn
– குiயேnஉயைட ஊhசடிniஉடந னயவநன னுநஉ.30 (ஊhநnயேi நுனவைiடிn)
- கூ.சுயத ஞசயஎin, 2001. ளுறடிவ யயேடலளளை டிn ருணாயஎயச ளுயவோயi, ருnயீரடெiளாநன ஆ.ளுஉ. (ஹபச) வாநளளை, ளுரbஅவைவநன யவ ஹபசiஉரடவரசந ஊடிடடநபந யனே சுநளநயசஉh ஐளேவவைரவந, ஆயனரசயi 625 104 (க்ஷநளவ ஆ.ளுஉ.(ஹப) கூhநளளை யறயசன கசடிஅ கூயஅடையேனர ஹபசiஉரடவரசயட ருniஎநசளவைல, ஊடிiஅயெவடிசந கடிச வாந லநயச 2001-2002)
–முனைவர் தி. ராஜ்பிரவீன்
Leave a Reply