ஜனநாயகக் கட்சிகளும், இடதுசாரிகளும் இணைந்து விலைவாசி உயர்வுக்கெதிராக, சாதாரண மக்களின் வாழ்வைப் பாதுகாக்க தீவிரமானப் போராட்டங்களை நடத்தி வருகி றார்கள். இந்தப் போராட்டங்களுக்கு மக்களிடையே பேராதரவு இருந்த போதும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கொள்கைகளிலும், செயல்பாட்டி லும் எந்த மாற்றத்தையும் இதுவரை ஏற்படுத்த முடியவில்லை.
ஒரு நவீன தாராளமய உலகச்சூழலில், இந்திய ஆளும் வர்க்கங்கள் உலகளாவிய நிதி மூலதனத்துக்கு ஆதரவாக அமல்படுத்தக்கூடிய பொருளாதாரக் கொள்கைகளின் நேரடி விளைவே இன்று ஏற்பட்டுள்ள வரலாறு காணாத விலைவாசி உயர்வு என்றால் அது மிகையாகாது.
ஒருபுறம் இந்த நவீன தாராளமயக் கொள்கைகளினால் பயனடைந்த பகுதியினர், சிறுபகுதியாக இருப்பினும் கூட, இந்தக் கொள்கைகளில் இன்னும் தீவிரமான அமலாக்கத்தைக் கோரிக் கொண்டிருக்கிறார்கள்; மறுபுறம் நாடாளுமன்றத்தில் அந்தக் கொள்கைகளுக்கு ஆதரவான பெரும்பான்மையும் இருக்கிறது. எனவே இந்தக் கொள்கையின் விளைவான ‘விலைவாசி உயர்வு’ என்பதை மட்டும் தனியாகத் தடுத்து விடுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நாம் விடை காண வேண்டி உள்ளது.
தனியார் ஆதிக்கத்தில் விவசாய உற்பத்தி , உணவுப்பொருள் வியாபாரத்தில் ஆன் லைன் வர்த்தகம், சட்டமயமாக்கப்பட்ட(!) பதுக்கல், மத்திய அரசு, பெரு முதலாளித்துவ, அன்னிய நிறுவன இலாப வேட்டைக்கு அளிக்கும் ஊக்கம் ஆகிய இவை எவற்றிலும் எந்த கொள்கை ரீதியான அடிப்படையான மாறுதலையும் செய்யாமல் விலையை மட்டும் கட்டுப்படுத்துவது சாத்தியமற்றதே. எனவே, விலைவாசி உயர்வுக்கெதிரான தீவிரப் போராட்டங்களை நடத்திக் கொண்டே, நவீன தாராளமயக் கொள்கைகளுக்கெதிரான எதிர்ப்பையும் தீவிரமாக இணைத்து நடத்துவது மிகவும் அத்தியாவசிய மானதாகிறது.
ஐ.மு. கூட்டணி அரசின்பால் சிபிஐ(எம்)-ன் அணுகுமுறை:
இன்று ஏற்பட்டுள்ள ஐமுகூ அரசு, அதன் பொருளாதாரக் கொள்கைகள், அதன்பால் இடதுசாரிக்கட்சிகளின், குறிப்பாக சிபிஐ(எம்) கைக்கொள்கிற அணுகுமுறை ஆகியவை குறித்த ஒரு ஆழ்ந்த உற்றுநோக்கலைச் செய்ய வேண்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ.மு.கூ) அரசின் இரண்டாம் பதிப்பு அரசாங்கம் 2010-ஆம் ஆண்டு மே மாதம், தொடர்ச்சியாக தனது ஆறாவது ஆண்டை நிறைவு செய்கிறது. எந்தப் பொருளாதாரக் கொள்கை களின் பாதிப்பினால் 2004இல் பாரதிய ஜனதாக்கட்சி (பா.ஜ.க) தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி (தே.ஜ.கூ.) யை மக்கள் தோற்கடித்தார்களோ, அதே பொருளாதாரக் கொள்கை களை இன்னும் தீவிரமாக ஐமுகூ அரசாங்கம் அமல்படுத்தி வருகிறது.
முதல் ஐந்து ஆண்டுகளில் (2004-2009) இதே கொள்கைகளை அவர்கள்(ஐ.மு.கூ.) அமல்படுத்தினாலும் கூட, அன்றைய அரசு இடதுசாரிகளின் ஆதரவில் இருந்ததன் காரணமாக நவீன தாராளமயக் கொள்கைகளை நினைத்த வேகத்தில் அமல்படுத்த அவர்களால் முடியவில்லை. மாறாக இன்று இடதுசாரிகளின் ஆதரவு தேவையற்ற ஒரு ஏற்பாட்டில் ஆட்சி நடத்தும் போது மிக வேகமான சீர்திருத்தங்களை அனைத்துத் துறைகளிலும் அவர்கள் அமலாக்கத் துடிப்பதைப் பார்க்க முடிகிறது.
இடதுசாரிகளின், நவீன தாராளமயக் கொள்கைகள் குறித்த எதிர்ப்பில், எந்தச் சுணக்கமும் இல்லாவிடினும், ஆதரவுக் கட்சியாக இருந்தபோது பல விஷயங்களுக்குத் தடை போட முடிந்ததையும், இன்று அந்த ஆதரவு தேவையற்ற சூழலில் தீவிரமான முறையில் அவை அமலாவதையும் குறிப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. கடந்த எப்ரல் 2005இல் புதுதில்லியில் கூடிய சிபிஐ(எம்)-ன் 18வது மாநாடு ஐமுகூ அரசு குறித்த தனது அணுகுமுறையைத் தெளிவாகக் கீழ்வருமாறு விளக்கியிருந்தது.
“ஒரு மதச்சார்பற்ற அரசு மத்தியில் அமைவதை உத்தரவாதப் படுத்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசுக்கு தனது ஆதரவை நல்க சிபிஐ(எம்) முடிவு செய்கிறது. பெருவாரி யான மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, அவர்கள் கூட்டணியை நிராகரித்துள்ளப் பின்னணியில் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை நாம் அளித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் வர்க்கத் தன்மைக்கு நாணயமாக, அவர்கள் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளையே அமல்படுத்துவார்கள் என்பதினால், இந்தச் சக்திகளின் ஆதரவில் அமைகிற கூட்டணி அரசில் சேர முடியாது என்பதைக் கட்சி தெளிவுபடுத்துகிறது.
…ஒரு குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் அடிப்படையில் இந்த அரசுக்கு ஆதரவு நல்கப்பட்டாலும், அதோடு நின்றுவிடாமல் தன்னுடைய சுயேச்சையான முயற்சி மூலம் இடதுஜனநாயகத் திட்டத்தின் கோரிக்கைகளை கட்சி முன்னெடுத்துச் செல்லும்.”
(அரசியல் தீர்மானம், 18வது கட்சிக்காங்கிரஸ்,
புது தில்லி பாரா 2.66 & 2.71)
எனவே காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி சிபிஐ(எம்)க்கு எந்த வித மயக்கமோ, மாயத்தோற்றமோ என்றுமே இருந்ததில்லை என்பதை மேற்படி தீர்மானம் தெளிவுபடுத்துகிறது.
காங்கிரஸ் முன்தள்ளிய நவீனதாராளமயக் கொள்கைகள்:
இருந்தபோதிலும், ஒருவிதமான கண்ணாமூச்சி ஆட்டத்தை முதல் நான்கு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நடத்தி வந்தது. பென்ஷன் நிதியம், வங்கி, இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம் உட்பட அனைத்துத் துறைகளிலும் அன்னிய நேரடி மூலதனம் (எப்டிஐ) வரவழைக்கப்படுவதற்கான முயற்சியை அரசு எடுத்தது. விவசாயத்தில் முதலாளித்துவ முறைகளைப் புகுத்தி, உற்பத்தி, கொள்முதல், விநியோகம் அனைத்திலும் அன்னிய நிறுவனங்கள் நுழைவதற்கு வகை செய்தது. சேவைத்துறையில் பெருமளவுக்கு அன்னிய நிறுவனங்கள் ஆதிக்கம் செய்ய கதவு திறந்து விடப்பட்டது. மும்பை, புதுதில்லி, விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நிர்வாகப் பணிகள் தனியாருக்குத் தரப்பட்டது. இலாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அனைத்தையும் தனியாருக்கு விற்க முயற்சிகள் செய்யப்பட்டன. கனிமச் சுரங்கங்கள் தனியாருக்குத் தரப்பட்டன. பெருமுதலாளிகளுக்கு ஏராளமான வரிச்சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பெருநிறுவனங்கள் கைக்கு மாற்றப்பட்டன. நிதி மூலதனத்தின் வேட்டைக்கு ஆதரவான சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டன.
இவை அனைத்தையும் எதிர்த்த பிரச்சாரத்தையும், போராட்டங்களையும் இடதுசாரிக் கட்சிகள் நடத்தின. எவற்றுக் கெல்லாம் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் தேவையோ அவற்றையெல்லாம் அதன் நாடாளுமன்ற பலம் மூலம் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்த முடிந்தது. குறிப்பாக பென்ஷன் துறையில் அன்னிய நேரடி முதலீடு வரவு, சில்லரை வர்த்தகத்தில் அந்நியக் கம்பெனிகள் வரவு, இலாபகரமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை ஆகியவற்றை சுமார் 4 ஆண்டுகள்(2004-2008) இடதுசாரிக்கட்சிகள் நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தின. இந்தத் தருணத்தில் கோவையில் (2008 ஏப்ரல்) கூடிய சிபிஐ(எம்)ன் 19வது காங்கிரஸ் ஐ.மு.கூ. அரசு குறித்த தனது அணுகுமுறையை கீழ்க்கண்டவாறு மீண்டும் விளக்கியது:
“…..இடதுசாரிகளின் ஆதரவு நாடாளுமன்றத்தில், இந்த அரசாங்கத்துக்கு தேவைப்படுவதாலும், மக்களைத் திரட்டி இந்த அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கெதிரான தொடர்ந்த போராட்டங்களை நடத்தியதாலும், இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதில் நாம் ஓரளவு வெற்றி பெற முடிந்தது. சில மோசமான சட்டத்திருத்தங்களை-இடதுசாரிகளின் ஆதரவின்றி நாடாளுமன்றத்தில் சட்டமாக்க முடியாது என்ற காரணத் தினால் – நம்மால் தடுத்து நிறுத்த முடிந்துள்ளது. இரண்டா வதாக, மக்களைத் திரட்டி போராடி, நிர்ப்பந்தம் கொடுத்ததன் காரணமாக சில மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை அமல்படுத்த வைக்கவும் முடிந்துள்ளது. இருந்தபோதிலும், ஐ.மு.கூ. அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகளின் திசைவழி தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் முகமாகவே இருக்கும்; அதன் மூலமாக பெருமுதலாளிகளுக்கும் அன்னிய மூலதனத்துக்கும் சாதகமாகவே அவர்கள் செயல்படு வார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்…
எனவே 18வது கட்சிக்காங்கிரஸ் தீர்மானம் வழிகாட்டியபடி, இந்த அரசுக்கு ஆதரவு அளிக்கிற அதேநேரத்தில் கட்சி தனது சுயேச்சையான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்…”.
(கோவை-19வது கட்சிக்காங்கிரஸ் அரசியல் தீர்மானம் பாரா 2.2.2 & 2.23)
எனவே., ஐ.மு.கூட்டணி அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாக இடதுசாரிக்கட்சிகள் எதிர்த்து வந்துள்ளன. பதினைந்தாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான சிபிஐ(எம்) தேர்தல் தந்திரம் கூட இந்த அரசின் பொருளதாரக் கொள்கை ‘எவ்வளவு தீங்கானது, முறியடிக் கப்பட வேண்டியது’ என்பதை மையமாக வைத்தே அது தயாரிக்கப்பட்டிருந்தது.
“தடைகள்” நீங்கியதால் தீவிர அமலாக்கம்:
ஆனாலும், மே 2009 இல் நடைபெற்ற 15வது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு மீண்டும் வெற்றி பெற்றது. இடதுசாரிகளின் முன்முயற்சி, ஆதரவு மற்றும் நிர்ப்பந்தங்களின் காரணமாக அரை மனதுடன் ஐ.மு.கூ. அரசு நிறைவேற்றிய மக்கள் ஆதரவு நடவடிக்கைகள் அவர்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்தன. தேசிய ஊரகவேலை வாய்ப்புத் திட்டம் (சூசுநுழுளு), தகவல் அறியும் உரிமைச்சட்டம் (சுகூஐ), ஆதிவாசி/மலைவாழ் மக்களின் நில உரிமைகளை உத்திரவாதம் செய்யும் சட்டம், விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிப்பு, ஆறாவது சம்பளக்கமிஷன் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் அவர்களுக்கு ஆதரவை நல்கின. மேலும் மக்கள் மத்தியில் இருந்த ‘ஜனநாயக, மதச்சார்பற்ற ஸ்திரமான அரசு தேவை’ என்ற நோக்கம். ஐ.மு.கூ. அரசுக்கு மீண்டும் வெற்றியைத் தேடித்தந்தது.
இன்று ஏற்பட்டுள்ள இரண்டாவது ஐ.மு.கூ. அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளிலும் அதனது வர்க்க நிலை பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த இரண்டாம் பதிப்பு ஆட்சிக்கு வந்த உடனேயே எல்லா முதலாளித்துவ ஊடகங் களும், தங்களது தலையங்கம் மூலமும், செய்திகள் மூலமும் அரசுக்கு அளித்த ஆலோசனை ஒரேவிதமாக இருந்தது. அதாவது, ‘தற்போதைய ஐ.மு.கூ. அரசக்கு இடதுசாரிகள் ஆதரவு தேவையில்லை. உடனே -வேகமாக சீர்திருத்தங்களை தங்கு தடையற்று அமல்நடத்துங்கள்’ என்பதுதான் அவர்களது ஆலோசனை ஆகும்.
இந்தியாவில், 1991இல் நரசிம்மராவ் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசாங்கம், அன்று ஏற்பட்டிருந்த சர்வதேச அரசியல் சூழ்நிலை, சோசலிசத்துக்கு ஏற்பட்டிருந்த பின்ன டைவு, ஏகாதிபத்திய உலகமயச்சூழல், ஆகியவற்றைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நிதி மூலதனத்தின் கட்டளைகளை சிரமேற்கொண்டு அமல்படுத்தத் துவங்கி னார்கள். இந்த நவீன தாராளமயக் கொள்கைகளின் தொடர்ச்சியை நாம் இன்றுவரை பார்க்க முடிகிறது. காங்கிரஸ் அரசு, ஐக்கிய முன்னணி அரசு, பாஜக அரசு, தே.ஜ.கூ. அரசு மற்றும் ஐ.மு.கூ. அரசு என பல வடிவங்களில் அரசுகள் அமைத்தாலும், கடந்த இருபது ஆண்டுகளாக பொருளாதாரக் கொள்கைளில் எந்த மாற்றமு மில்லாத ஒரு தொடர்ச்சியையும், தீவிரத்தையும் ஒவ்வொரு அரசிலும் பார்க்கலாம். பெருமுத லாளிகள், அன்னிய மூலதனம் மேலும் சமூகத்தின் மேல் தட்டிலுள்ள 10 சதவீதத்தினருக்கு சாதகமாகவும், அவர்கள் இலாபத்தைப் பெருக்கவும் வாய்ப்பான சூழலை இந்தப் பொருளாதார கொள்கைகள் உருவாக்கி உள்ளது.
இந்தக் கொள்கைகளின் பல்வேறு பரிமாணங்கள் ஒவ்வொரு துறையிலும், அரசின் கொள்கை வெளிப்பாடாக எவ்வாறு பரிணமிக்கிறது என்பதை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
- விவசாயம்:
உழுது பயிரிட்டு அறுவடை செய்து வாழ்க்கை நடத்துவது (இலாபம் சம்பாதிப்பது என்பது ஏற்கனவே கனவாகி விட்டது) என்பதே நடக்காத காரியம் என்பதுதான் இன்றைய விவசாயத்தின் நிலை. கொள்முதல், உணவு தானிய சேமிப்பு, உணவுப்பொருள் வியாபாரம் (ஏற்றுமதி/இறக்குமதி உட்பட) ஆகிய அனைத்திலும் தனியார்/அந்நிய நிறுவனங்களின் முன் முயற்சியை அரசு ஊக்குவிக்கிறது. கார்கில், மான்சாண்டோ, வால்மார்ட் உட்பட ரிலையன்ஸ் , டாடா, பிர்லா ஆகியோரின் பகாசூர நிறுவனங்கள் விவசாய உற்பத்தி/ விநியோகத்தை நிர்வகிக்கிற பணியை தங்கள் கையில் வைத்துள்ளனர். அரசாங் கத்தின் பங்கு இதில் குறைவாக இருப்பதால் விளை பொருள்க ளுக்கான விலைக்கும், சந்தை விலைக்கும் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. அரசு கொள்முதல் விலைகள் மீது திட்டமிட்டு கட்டுப்பாடு களைத் தளர்த்துகிறது, உணவுப் பொருள் இறக்குமதி /ஏற்றுமதி மீது பல சலுகைகளை மேற்கூறிய நிறுவனங்களுக்கு வழங்குகிறது. உரங்கள் மற்றும் இடுபொருட் கள் விலை மீதுள்ள கட்டுப்பாடு/மானியம் ஆகியவற்றை அரசு விலக்கிக் கொள்கிறது. ஏற்றுமதிக்கான, இலாபம் சம்பாதிப் பதற்கான விவசாய உற்பத்தி, அந்தக் கொள்கைகளின் மைய நோக்கமாக உள்ளது. 1991-95ஆம் ஆண்டுகளில் தலைக்கு உணவுபொருள் உற்பத்தி 192 கிலோ கிராமாக இருந்தது. இதுவே 2004-2007-ஆம் ஆண்டுகளில் 174 கிலோவாகக் குறைந்து விட்டது. கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்துக்கான அரசின் முதலீடுகள் சுருங்கி விட்டன. கடன் தள்ளுபடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அது பயனாளிகளுக்குப் போய்ச் சேருவதில்லை. எனவே, காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை என்பது முடிவுக்கு வரவில்லை, சில பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு விவசாய உற்பத்தி வளர்ச்சி (-) 0.2 சதவிகிதம் ஏன் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையில்லை அல்லவா?
- பொது விநியோகம் :
அரசாங்கம் சாதாரண மக்களுக்கு நிவாரணங்களைக் கொண்டு செல்கிற பொது விநியோக முறையை (ஞனுளு) சீர் கெடுத்து விட முயற்சிக்கிறது. ஏற்கனவே பொதுவிநியோக முறை மூலம் பலன் பெறுகிறவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் (க்ஷஞடு) உள்ளவர்கள்/ மேல் உள்ளவர்கள் (ஹஞடு) என இரண்டு பகுதியாகப் பிரிக்கப் பட்டனர். இதுவே மிகவும் கோளாறான நடைமுறை ஆகும். ரூ. 11.50-க்கீழ் நாள் வருமானம் பெறுபவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்ற கோட்டை அரசு வரைந்து விட்டதன் விளைவு பல கோடிக்கணக்கான ஏழை மக்கள் இந்தப் பயனாளிகள் பிரிவிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு விட்டனர். அதாவது ரூ. 15 நாள் ஒன்றுக்கு (ரூ.450/- மாதச்சம்பளம்) வாங்குபவர்கள் ஏபிஎல் பிரிவைச் சேர்ந்தவர் எனக்கூறி, அவர்களுக்குப் பொதுவிநியோக முறையில் உணவுபொருள்கள் வழங்க மறுப்பது எவ்வளவு குரூரமான விசயம் என்பதை நாம் புரிந்து கொண்டாலும், அரசு தனது முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை. இந்தப் பொது விநியோக முறை ஊழல் நிறைந்ததாகவும், பயனற்றதாகவும் உள்ளது எனக்கூறி இருப்பதையும் மூடிவிட இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் முன்யோசனை கூறப்பட்டுளளது. மேலும், பிபிஎல் பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களுக்குப் பதிலாக உணவு வவுச்சர்களை வழங்கி விடலாம் என கூறப்பட்டுள்ள ஆலோசனை ஏழைக் குடும்பங் களின் வாழ்க்கையையே நிர்மூலமயமாக்கும் நடவடிக்கை ஆகும்.
- உணவுப்பாதுகாப்பு மசோதா:
ஏழை மக்களின் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என அரசு உறுதி அளித்தது. ஆனால் குடும்பத்துக்கு 35 கிலோ அரிசி, அல்லது கோதுமை ரூ.3/- விலையில் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உணவு அமைச்சகம் உருக்குலைக்க முயற்சிக்கிறது. மாதம் 25 கிலோ கொடுத்தால் போதும் எனவும் இது பிபிஎல் பிரிவினருக்கு மட்டும்தான் வழங்கப்படும் எனவும், அதை பண வவுச்சர்களாக நேரடியாகப் பயனாளிகளுக்கு வழங்கி விடலாம் எனவும் மாற்று ஆலோசனைகள் அமைச்சகத்தால் பரிசீலிக்கப்படுகின்றன. இது உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை கண்துடைப்பு நடவடிக்கை யாகவும், ஊழல் மலிந்ததாகவும் மாற்றிவிடும்; சாதாரண மக்களின் வயிற்றிலடிக்கும் நடவடிக்கை ஆகும்.
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் (சூசுநுழுளு):
இன்று இந்தத் திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப் ளுபட்டுள்ளதைத் தவிர எந்த மாற்றமும் இதில் ஏற்படவில்லை. கடந்த 2004 தேர்தலின்போது குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்களித்த இந்தத் திட்டம் இன்று சுமார் ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியும் அதிகார வர்க்கமும் ஆட்சிக்கு வந்தவுடனேயே இந்தத் திட்டத்துக்கு 25000கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவழியும், இது பொருளாதார வளர்ச்சியில் ஒரு சதவிகிதம். எனவே, இதைச் செய்ய முடியாது என்று எதிர்த்தனர். அன்று இடதுசாரிகள் தலையிட்டு இதை அமலாக்க ஆவண செய்தனர். இன்றும் இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு உட்பட பல வழிகளில் இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தை இழுத்து மூட மிகப்பெரிய சதி நடந்து வருகிறது. எதிலும் மானியம் கூடாது, சலுகை கூடாது, நிதிச்சுமை கூடாது, அரசு தலையீடு கூடாது என்று வலம் வருகிற நவீன தாராளமயக் கொள்கைகளுக்கே நேர் எதிரான திட்டம் இது என்பதனால் இதை மெல்லச் சாகடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
- தொழில் உற்பத்தி:
ஏராளமான புதிய மூலதன வரவு ஏற்பட்டிருப்பதாக அரசாங்கப்புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், கடந்த ஆறாண்டுகளில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது என்பது மிகவும் குறைவு. வருகிற மூலதனம் அனைத்தும் பங்குச் சந்தையிலும், நிதிச்சந்தையிலும் சூதாடுவதற்கு வருகின்றனவே தவிர இந்தியாவின் தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதற்காக அவை வரவில்லை. ஆங்காங்கு துவங்கப்படும் புதிய தொழில்கள் அனைத்தும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் – ஏற்று மதிக்கான உற்பத்தி என்ற முறையிலேயே ஏற்படுகின்றன. மாறாக, பாரம்பரிய பெரிய, சிறிய தொழில்கள் இந்தக்கால கட்டத்தில் மூடப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி வளாகங்களில் ஏற்படும் தொழில்களில் கூட வேலைவாய்ப்புகள் மிகக்குறைவாகவே ஏற்படுகின்றன. கட்டுமானத்துறை, கனிம வளங்களைச் சுரண்டி ஏற்றுமதி செய்யும் சுரங்கங்கள், எண்ணை, வாயு, பூமிக்கடியி லிருந்து எடுத்தல் போன்ற தொழில் களுக்கு மூலதனம் வந்தாலும் அது இந்திய கனிமச் செல்வங் களைச் சுரண்டிச் செல்வதற்கான ஏற்பாடாகவே உள்ளது. இந்தக்கால கட்டத்தில் ஏற்பட்டுள்ள சிறிய தொழில்துறை வளர்ச்சி கூட பொருளாதார நெருக் கடியால் சீர்குலைந்துள்ளது.
- அந்நிய மூலதன வரவு (குனுஐ)
கடந்த 2004ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, நிதிமூலனதத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன்,2005 மார்ச் மாதம் இந்திய அமெரிக்க தொழிலதிபர்களின் கூட்டுக்கூட்டம், ஜார்ஜ் புஷ் இந்திய வருகையை ஒட்டி புதுதில்லியில் நடைபெற்றது. இந்த ஊநுடீ-க்களின் கூட்டத்தின் முடிவுகளையே இந்திய அரசாங்கம் தனது தொழிற்கொள்கை மற்றும் அந்நிய மூலதன வரவேற்புக் கொள்கையாக அமலாக்கி வருகிறது.
‘இந்தியா தற்போது 400 கோடி அமெரிக்க டாலர்கள் அளவு அந்நிய முதலீடுகளைப் பெற்று வருகிறது. வருகிற 15 ஆண்டுகளில் 15,000 கோடி (அதாவது ஆண்டுக்கு 1000 கோடி) அளவில் இந்தியாவுக்கு அந்நிய மூலதனம் வரும்’ என அந்தக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார். அதன் விளைவுதான் இந்த அரசாங்கம் தற்போது நிதித்துறையில் எடுத்துவரும் நடவடிக்கைகள் ஆகும். இந்திய வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தொலைத் தொடர்புத்துறை, தொழில் உற்பத்தி, விவசாயம், கனிமவளத் துறை, சில்லரை வர்த்தகம் உட்பட அனைத்திலும் இன்று அந்நிய நேரடி முதலீடுகள் (குனுஐ) பாய்ந்து வருகின்றன. இதற்கான சட்டத்திருத்தம் ஐ.மு.கூ. அரசின் முதற்பதிப்பால் செய்ய முடியவில்லை. இன்று அதைச் செய்ய வேகமாக இந்திய அரசு நிர்ப்பந்திக்கப்படுகிறது.
- பொதுத்துறை பங்கு விற்பனை:
நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் அமலாக் கத்தின் பிரதான அம்சமாக விளங்குவது பொதுத்துறை பங்கு விற்பனை ஆகும். அரசின் சேமிக்கப்பட்ட மூலதனம் பொதுத்துறை நிறுவனங்கள். இவற்றை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதன் மூலம் தேசத்தின் சேமிக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் தனியார்/அந்நிய மூலதனத்தின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன.
கிட்டத்தட்ட இராஜிவ் காலத்திலேயே இதற்கான முயற்சிகள் நடைபெற்றாலும், 1991 முதல் துவங்கி கடந்த 20 ஆண்டுகளாக இது மிகவேகமாக நடைபெற்று வருகின்றன. பொதுத்துறை பங்கு விற்பனை விபரம் :
வ.எண் வருடம் அரசு பங்கு விற்பனை மூலம்
திரட்டப்பட்ட பணம்
1 1991-1995 காங்கிரஸ் ரூ. 9794 கோடி
(நரசிம்மராவ்)
2 1996 -1998 ஐக்கிய முன்னணி ரூ. 1458கோடி
3 1999-2004 தேசிய ஜனநாயக ரூ.33655 கோடி
முன்னணி (வாஜ்பாய்)
4 2004-2009 ஐக்கிய முற்போக்கு ரூ8516கோடி
கூட்டணி (மன்மோகன்சிங்)
5 2009-2010 ஐக்கிய முற்போக்கு ரூ. 26000 கோடி(சுநு)
கூட்டணி
6 2010-2011 ஐக்கிய முற்போக்கு ரூ.40000 கோடி (க்ஷநு)
கூட்டணி
ளுடிரசஉந : னுநயீயசவஅநவே டிக னுளைinஎநளவஅநவே,
ழுடிஎவ. டிக ஐனேயை, சூநற னுநடாi.
புதிய இரண்டாம் பதிப்பு ஐமு கூட்ட ணி அரசு பதிவுயேற்ற பின் ஜனாதிபதி 04-06-2009 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்.
“பெரும்பான்மைப் பங்குகளையும் கட்டுப்பாட்டையும் அரசு தன் கையில் வைத்துக் கொண்டாலும் கூட, நமது நாட்டு மக்கள், பொதுத்துறையின் பங்குகளின் சொந்தக்காரர்களாக மாறுவ தற்கு எல்லா உரிமையும் அவர்களுக்கு உண்டு.” அதாவது மக்கள் சொத்தாகப் பொதுத்துறையை மாற்றுவது என்றால், தற்போது அது யாருடைய சொத்தாக உள்ளது? என்ற கேள்வி எழுகிறது.
இரண்டாவதாக, சூஊஹநுசு என்ற அமைப்பு 2007-08இல் சேகரித்த புள்ளி விவரம் இந்தியக் குடும்பங்களில் 0.5 சதத்தினர் மட்டுமே பங்குச்சந்தையில் (பொதுத்துறை மட்டுமல்ல) முதலீடு செய்கிறார்கள் எனத் தெரிவிக்கிறது. அதாவது இந்தியாவின் மிகச்சிறிய பணக்காரப் பகுதிக்கு பொதுச்சொத்துக்களை மாற்றிக் கொடுப்பதே இதன் நோக்கமாகும். மேலும், இந்தப் பங்கு விற்பனையில் திரட்டப்படும் பணம் அனைத்தையும் பட்ஜெட் பற்றாக்குறைக்கு /அன்றாடச் செலவுக்குமே பயன்படுத்துகிறார் கள் என்பது நகைப்புக்கிடமானது.
பொது நிறுவனங்கள் புள்ளியியல் ஆய்வு (ஞரடெiஉ நுவேநசயீசளைநள ளுரசஎநசல) என்ற அமைப்பு தெரிவித்துள்ள 2007-08க்கான புள்ளி விவரப்படி மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.19423 கோடியை பங்குத்தொகை ஈவு ஆக /வருமானமாக மத்திய அரசுக்கு 2007-08ஆம் ஆண்டு வழங்கியுள்ளது. இது 2006-07 ஆண்டுக்கான வருமானத்தை விட 4000 கோடி ரூபாய் அதிகம் எனவும் கூறியுள்ளது. ஆண்டு வருமானம் சுமார் ரூ.20000 கோடியை அள்ளி வழங்குகிற பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் நடப்புச் செலவுக்காக தனியாருக்கு விற்று விடுவது என்றால் அது பொன்முட்டையிடுகிற வாத்தை அறுப்பதற்குச் சமம்.
இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ‘அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் பங்குச்சந்தைக்குக் கொண்டு வருவோம், ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனத்திலும் கட்டாயம் 10 சதம் வரை பங்குகளை தனியாருக்கு விற்று விடுவோம்’ என்ற கொள்கை அறிவிப்பை பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வரிசையில் தலையை வெட்ட பலி பீடத்தில் வரிசையில் நிற்கின்ற நிறுவனங்கள் சூழஞஊ, டீஐடு, சூகூஞஊ, ளுதுருசூ, சுநுஊ, சூஆனுஊ, ளுஹஐடு, க்ஷளுசூடு, ஊஐடு ஆகியவை ஆகும்.
- வேலைவாய்ப்பு :
கடந்த 20 ஆண்டுகளில் திரட்டப்பட்ட துறைகளில் வேலை வாய்ப்பு கணிசமாக சரிந்து வந்துள்ளது. முறைசாராத் தொழில் களிலும், சேவைத்துறையிலும் வேலை வாய்ப்புகள் ஓரளவு பெருகி உள்ளன. பெரும்பாலும் அனைத்து வேலைகளுமே ஒப்பந்தத் தொழிலாளர் பணிகளாகவே உருவாகி உள்ளன. எந்தப் பணிப்பாதுகாப்போ, ஊதிய உயர்வோ, சங்கம் அமைக்கும் உரிமையோ, எட்டு மணிநேர வேலையோ இவற்றில் இல்லை. விவசாயத்தில் தொழில் நசிவு ஏற்பட்டு நகர்ப் புறங்களுக்கு விவசாயக்கூலிகள் இடம் பெயர்தல் என்பது இந்தக் காலத்தில் பெரியஅளவுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படித்த வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 சதத்துக்கு மேல் அதிகரித்து வருகிறது. சுமார் 4 கோடிப்பேருக்கு வேலையில்லை என்பது குறித்த கவலை அரசுக்கு ஏதும் இல்லை.
சமீபத்தில் அரசுத்துறையில் 242 பணியிடங்களுக்கு 2 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததாகப் பத்திரிகைகளில் செய்தி போடுகிறார்கள். வங்கி, இன்சூரன்ஸ் போன்ற நிதி நிறுவனங் களிலும், நிலைமை இப்படித்தான். சில நூறு பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் பல நூறு மையங்களில் இலட்சக் கணக்கான வர்கள் பரிட்சை எழுதுகிறார்கள். கொடுமை என்னவென்றால் 2 லட்சம் பேருக்கு 300 ரூ. கட்டணம் வசூலித்தால் 6 கோடி ரூபாய். இதைக்கூட இந்த நிறுவனங்கள் சாதாரண மக்களின் தலையில்தான் சுமத்துகின்றன. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் ரூ.100க்கு ஆள் எடுக்கும் அரசு, படித்த இளைஞர்களின் படிப்புத் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்க மறுக்கிறது.
- பொதுச் செலவினங்கள்:
கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படைக் கட்டுமான வசதிக்கான பொதுச் செலவினங்களை அரசு செய்யக்கூடாது, அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது அரசின் பொருளா தாரக் கொள்கைகளின் பகுதியாக உள்ளது. அதைப்பல வழிகளில் செய்கிறார்கள் ஐ.மு.கூ. அரசாங்கத்தினர். ஒன்று நேரடியாக தனியார்/அந்நிய மூலதனத்தின் முன் முயற்சியில் இந்தச் சேவைகளை ஒப்படைப்பது, இரண்டாவதாக, பொது-தனியார் கூட்டு (ஞரடெiஉ-ஞசiஎயவந ஞயசவநேசளாiயீ – ஞஞஞ) என்ற முறையில் அரசு/பொது மூலதனத்தை உபயோகித்து தனியார் இலாப மீட்டும் முயற்சியை ஆதரிப்பது, மூன்றாவது அரசு/பொது நிதி முழுவதையும் தன்னார்வக் குழுக்கள் (சூழுடீ) வசம் ஒப்படைத்து அரசு செய்ய வேண்டிய பணிகளை அவர்கள் வசம் விட்டுவிட்டு அரசு ஒதுங்கி விடுவது.
அரசு தனது நிர்வாகச் செலவுகள், ஊழியர்களுக்கான சம்பளம், வட்டி செலுத்துதல் போன்ற நிரந்தர செலவுகளை அதனால் குறைக்கவோ, மாற்றவோ முடியாது, ஆனால் அதேநேரத்தில் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பது என்று முடிவு செய்தால் – அது தனது பொதுச் செலவினத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமெனப் பொருள்படுகிறது. பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் பொதுச்செலவினம் 2003-04இல் 7,09 சதவிகிதமாக இருந்தது. 2006-07இல் 6.17 சதவிகிதமாகக் குறைந்தது, இப்படித்தான் 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இது இன்னும் வேகமாகச் சரிந்துள்ளது.
கல்வி ஒதுக்கீடு 2003-04இல் 4.5 சதவிகிதம் ஆக இருந்தது. 2007-08இல் 2.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. (6 சதத்தை அடைவோம் என ஊஆஞ-யில் தெரிவித்தார்கள்), சுகாதாரத்தில் இதேகாலத்தில் ஒதுக்கீடு 1.02 சதத்துக்கு மேல் போகவேயில்லை, இலக்கு 2 சதவிகிதம் ஆகும்.
குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு, சாலைகள் அமைப்பது ஆகிய பொதுச்சேவைகள் வேகமாகத் தனியாருக்கு வழங்கப் படுகின்றன. உபயோகிப்பாளர்கள் அவற்றுக்கான பணத்தைத் தர வேண்டும் (ருளநச ஊhயசபநள) என்ற வழிகாட்டு தல்களைத் திணித்து சாதாரண மக்கள் கூட தங்கள் அனைத்துச் சேவைக்கும் பணத்தைக் கொட்டியழ வேண்டியுள்ளது. இந்தத் தனியார் இலாப வேட்கையில் இருந்து தப்பாத பொதுச் சேவைகளே இல்லை எனலாம் என்ற அளவுக்கு நிலை மாறியுள்ளது.
- ஐ.மு.கூ அரசின் நிதிநிலை அறிக்கைகள் (பட்ஜெட்)
2004ஆம் ஆண்டு அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஐந்தாண்டுகளும், கடந்த/நடப்பு இரண்டாண்டுகளுக்கான பட்ஜெட்டை பிரணாப் குமார் முகர்ஜி அவர்களும், முன் மொழிந்தனர். இத்தனை ஆண்டுகளும் பொருளாதார ஆய்வறிக் கைகளும், பட்ஜெட்டும் விரைவான தாராளமயக் கொள்கை களின் பிரச்சாரக் கையேடுகளாகவே விளங்கின. முதல் பட்ஜெட்டிலேயே, பேசும்போது சிதம்பரம் அவர்கள் ‘நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் ஒழுங்குச்சட்டம் (குசுக்ஷஆ ஹஉவ) வழிகாட்டுகிற நெறிகளை அட்சரம் பிசகாமல் அமலாக்குவேன்’ என அறிவித்தார். யஷ்வந்த் சின்கா(பாஜக) நிதியமைச்சராக இருந்து சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளையை ஏற்று நிறைவேற்றிய அந்தச்சட்டத்தை காங்கிரஸ் தரப்பு சார்பாக சிதம்பரம் ‘உள்ள சுத்தியோடு நான் நிறைவேற்றுவேன்’ என அறிவித்தது – இந்தக் கொள்கைகளின் வெட்கங்கெட்ட தொடர்ச்சியை அம்பலப்படுத்தியது. இன்று சர்வதேச அளவில் அமெரிக்காவும், பிரிட்டனும், ஜப்பானும் ஐரோப்பியப் பொருளாதாரங்களும் 2008க்குப் பிறகு கிட்டத்தட்ட இரட்டைச் சதவீத பற்றாக்குறை பட்ஜெட்டுகளைப் போட்டுக் கொண்டி ருக்கும்போது, இந்த ஆண்டு பற்றாக்குறை 6.5 சதவீதமாகி விட்டது எனவும், எப்படியும் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் அதை 3 சதவிகிதத்துக்குள் கொண்டு வந்து விடுவோம் என இராஜாவை மிஞ்சிய இராஜ விசுவாசியாக பிரணாப் குமார் முகர்ஜி பட்ஜெட் உரையில் தெரிவிக்கிறார். ஏனென்றால் பற்றாக்குறை பட்ஜெட்டுகள் அரசு கடன் வாங்குவதை அனுமதித்து, அரசு முதலீடுகளையும், தலையீட்டையும் கூட்டி, நிதி மூலதனத்தின் இலாபவேட்டைக்குக் குறுக்கே நிற்கிறது. எனவே வர்க்க ரீதியாக இவர்கள் பாசம் யார் பக்கம் என்பது இதன் மூலம் வெளிப்பட்டது.
பட்ஜெட்டில் பிற அறிவிப்புகள் ஒருபக்கம் இருப்பினும், கூர்மையாகப் பார்க்க வேண்டியது அரசின் செலவுகளுக்கு வரிவிதிப்பின் மூலம் நிதி திரட்டுதல் ஆகும். கடந்த சில ஆண்டுகளின் நிகர வரி வருமானம் கீழ்க்காணுமாறு இருந்தது.
1990 – 7.9ரூ; 1991 – 7.6ரூ; 1992- 7.7ரூ; 1998- 6.0ரூ; 1999 – 6.6ரூ; 2001 – 6.6ரூ.
மொத்த வரி வருமானம் ழுனுஞ-யுடன் ஒப்பிடுகையில் சுமார் 19 சதம் ஆக இருந்தாலும் நிகர வருமானம் 10 சதத்துக்கு மேல் போகவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகள் வரியை விதித்துவிட்டு பின்னர் வரியைத் தள்ளுபடி செய்ததன் மூலம் அரசுக்கு இழக்கப்பட்ட மொத்த வருமானம் மட்டும் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் ஆகும். பொருளாதார நெருக்கடி யிலிருந்து மீள ஊக்கமாக (ளுவiஅரடரள) இந்த வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன. இன்றும் இவை ரத்து செய்யப்படாததால் பெரு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பயன் அடைந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் நேர்முக வரிச்சலுகை மூலம் ரூ.26000 கோடி ரூபாயும், மறைமுக வரிகளை சாதாரண மக்கள் மீது சுமத்தி, அதன் மூலம் முதலாளிகளுக்கு சலுகையாக ரூ.46500 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 82500 கோடி ரூபாய் அளவுக்கு வரிச்சலுகை முதலாளிகளுக்கு வழங்கப்பட்டது. (வரிச்சலுகை மூன்றாண்டுகளில் = 2008-09 426000 கோடி/2009-10இல் ரூ.418000 கோடி /இந்த ஆண்டு ரூ.82,500 கோடி). ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் மீது வரிச்சுமையை ஏற்றியதன் மூலம் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிவேகமாக ஏறுவதற்கான நிலைமையை அரசாங்கத்தின் இந்த பட்ஜெட் மூலம் செய்யப்பட்டது.
பெரும் பணக்காரர்களின் தேசம் – இந்தியா
இவ்வாறாக, ஏராளமான வழிகளில் இந்த அரசின் நவீன தாராளமயக் கொள்கைகள் சாதாரண மக்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் முதலாளிகளின் இலாபம்/சொத்து எல்லையற்ற முறையில் வளர்ந்து கொண்டி ருக்கிறது. கடந்த 2006ஆம் ஆண்டில் டாலர் பில்லிய னர்கள்(ரூ,4000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளவர்கள்) இந்தியாவில் 25 பேர் இருந்தனர். ஒரே ஆண்டில் 2007இல் அவர்கள் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. போர்பஸ் இதழின் கணக்குப்படி உலகப்பணக்காரர்கள் முதல் 10 பேரில் 4 பேர் இந்தியர்கள். இந்தியாவைச் சேர்ந்த இலட்சுமி மிட்டல் இன்றும் தென் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் முதற்பெரும் பணக்காரர் என்றும் அது தெரிவிக்கிறது.
இது நிச்சயமாக இந்திய மக்கள் வாழ்வின் ஏற்றத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை என உறுதிபடச் சொல்ல முடியும். ஏனென்றால் இந்திய மக்களின் தலைகளில் ஏற்றப்பட்டுள்ள பொருளாதாரச் சுமையின் பயனாளிகளாக மாறியிருப்பவர்கள் தான் மிட்டலும், அம்பானிகளும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எனவே இந்தப் பொருளாதாரக் கொள்கைகளை முறியடிப்பது என்பது மக்கள் பிரச்சனைகளின் தீர்வுக்கு அத்தியாவசியமான முன் நிபந்தனை ஆகும்.
காங்கிரஸ்-பாஜக இரண்டையும் சமகாலத்தில் வீழ்த்துவது அரசியல் தேவை
பாஜக தலைமையிலான தே.ஜ.கூ. அரசு இரட்டை ஆபத்தை – வகுப்புவாதமும், நவீன தாராளமயக் கொள்கைகளும்-உள்ள டக்கிய ஆட்சியாக இருந்தது. எனவே, அது வீழ்த்தப் பட்டது சரி, அதற்கு எக்காரணம் கொண்டும் புத்துயிர் கொடுத்து விடக் கூடாது என்ற சிபிஐ(எம்)-ன் நிலைபாடும் சரியானதே. ஏனென்றால் 1998-2004 ஆகிய ஆறாண்டுகளில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, அதன் வகுப்புவாத வெறியாட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஆட்சியாக அமைந்தது. கூடுதலாக அவர்கள் இதே நவீன தாராளமயக் கொள்கைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்களாகவும் விளங்கி னார்கள்.
பின்னர் ஆட்சிக்கு வந்த ஐ.மு.கூ. அரசு தே.ஜ.கூ. ஆட்சியில் மக்கள் வாழ்வின் அனைத்து பகுதியிலும் இருந்த வகுப்புவாத விஷத்தை முறியடிக்க நடவடிக்கை எடுத்தது.
எனவே, 2004 முதல் 2008 வரை ஐ.மு.கூ. அரசுக்கு சிபிஐ(எம்) கொடுத்து வந்த ஆதரவு அன்றைய சூழலில் சரி. ஆனால் வகுப்புவாத சக்திகளைத் தனிமைப்படுத்த எடுத்த முயற்சி வர்க்க எதிரிகள் காங்கிரஸ் தலைமையில் பலப்படுவதில் சென்று முடிந்திருக்கிறது.
இந்தியப் பெருமுதலாளிகளும், சர்வதேச நிதிமூலதனமும், மிதமான, மைய வழியில் (ஆடினநசயவந & ஊநவேசயட) செல்லும் காங்கிரஸ் கட்சியை தனது பக்கம் சேர்த்துக் கொண்டனர்.
அதிலும் குறிப்பாக மன்மோகன்சிங், மான்டேக் சிங் அலுவாலியா , ப.சிதம்பரம் உட்பட நவீன தாராளமயக் கொள்கைகளின் பிரச்சாரகர்களைத் தலைமையில் கொண்ட காங்கிரஸ் நவீன தாராளமயத்தின் தத்துவார்த்த தலைமை யிடமாக இன்று செயல்படுகிற அளவுக்கு நிலைமை மாறி யுள்ளது. உலக வங்கி, ஐஆகு. றுகூடீ கூட்டங்கள் ஜி8, ஜி20 மாநாடு. புவி வெப்பமயமாதல் எதிர்த்த மாநாடு உட்பட பல சர்வதேசக் கூட்டங்களில் கலந்து கொள்கிற இந்தியப் பிரதிநிதிகள் ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக அவர்களுக்கு நம்பகத் தன்மை அளிப்பவர்களாக, முன் யோசனைகளை உருவாக்குபவர் களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சிக்குள் இதுகுறித்து அதிருப்தி ஆங்காங்கு தென்படுகின்றன. காலகாலமாக, காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள ஜனநாயக முற்போக்கு எண்ணங்கொண்டோரின் நல்ல உணர்வுகளைத் தூண்டிவிட்டு காங்கிரசுக்குள் நெருக்கடியை முற்றச் செய்ததும், இப்போது அதைச் செய்ய வேண்டியதும் முக்கியமான அரசியல் தந்திரத்தின் பகுதிதான்.
இந்திய சமூகச்சூழலின் கைதியான காங்கிரஸ், வகுப்புவாதம் குறித்து மென்மையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. அவர்களை வகுப்புவாத அபாயத்தைக் கட்டுப்படுத்த தற்காலிக மாற்று என்று கூட துணை சேர்க்க முடியவில்லை. ஏனென்றால், 1980களில் துவங்கி 2004 வரையான சுமார் 25 ஆண்டுகளில் நடந்ததைவிட, கடந்த ஆறாண்டு (2004-2010) பொருளாதாரக் கொள்கைகளின் திசைவழியின் வேகம் கட்டுக்கடங்காமல் பல மடங்காகக் போய்க் கொண்டிருக்கிறது.
மேற்கூறிய காரணங்களால் காங்கிரஸ் -பாஜக இருவரையும் சமகாலத்தில் வீழ்த்த வேண்டிய அரசியல் தேவை இன்று உள்ளது.
மூன்றாவது அணியும் – மாநிலக் கட்சிகளும்
இதைச் செய்ய வேண்டுமானால் மூன்றாவது அணியானது, சில குறைந்தபட்ச ஜனநாயகக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அதன் வழிப்பட்ட போராட்டத்தை நடத்தி, போராட்டத்தில் வலுப்பட்டவர்களாக இருக்க வேண்டும், ஆனால், இந்திய அமெரிக்க அணுசக்திப் பிரச்சனையிலும், 15வது நாடாளுமன்றத் தேர்தலிலும், அதன் பின்னர் இன்று விலைவாசி உயர்வுக் கெதிரான போராட்டம், நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் காங்கிரஸ் அல்லாத பாஜக அல்லாத கட்சிகளின் நிலைபாடு (ஓரிருவரைத் தவிர) மற்றும் செயலாக்கம் தொடர்ந்து நம்பகத்தன்மை குறைந்ததாகவே காணப்படுகிறது.
மேலும், பல மாநிலக் கட்சிகள் நவீன தாராளமயச் சூழலின் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெருமுதலாளிகளின் பகுதியாக மாறிப்போய் உள்ளன. மாநிலக்கட்சிகள் மத்திய ஆட்சியில் பங்கு கோரி காங்கிரஸ் – பாஜக இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் கையில் விழுந்துவிடக்கூடிய அபாயம் எப்போதும் உள்ளது. நவீன தாராளமயக் கொள்கைகளை மாநிலங்களில் வலியில்லாமல் அமல்படுத்துகிற வழிகள் உள்ளனவா என இந்த மாநிலக் கட்சிகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். சலுகை மழையில் மக்களை மகிழ்வித்து வாக்குகளை ஐந்தாண்டுக்கொரு முறை திருடிக் கொள்ளலாம் எனவும் நம்புகிறார்கள்.
எனவே, மாநிலக்கட்சிகளைப் பயன்படுத்துவதன் எல்லை இந்தக்காலத்தில் உணரப்பட்ட உண்மையாக உள்ளது.
மூலதனத்திற்கு எதிரான மோதல்
இந்தப் பின்னணியில், சிபிஐ(எம்)-ன் முன்னுரிமை என்பது உடனடியாக நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் தறிகெட்ட ஓட்டத்துக்கு எப்படிக் கடிவாளம் போடுவது என்பதை நிர்ணயிப்பதில்தான் உள்ளது.
குடிமனைப்பட்டா, நிலம், வேலை, உணவு போன்ற அடிப்படைக் கோரிக்கைகளுக்கான இயக்கங்கள் வலுப்பெற வேண்டும், இவற்றில் பெருமளவு மக்கள் பங்கேற்பு உறுதிப் படுத்தப்பட வேண்டும்.
தொழில்வாரியாக, துறை வாரியாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைத் திரட்டி அந்தத் துறைகளில் வர்க்கப் போராட்டத்தை நடத்துவதும், பொருளாதாரக் கொள்கைகளுக் கெதிரான ஒட்டுமொத்த அரசியல் போராட்டத்தில் அவர்களை இணைப்பதும் ஆகிய பணிகள் முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
மூலதனத்துக்கு எதிராக, அந்நிய மூலதனம் ஆதிக்கம் செலுத்துகின்ற பகுதிகளில் அதற்கெதிராக, அவைகளின் இலாப வெறிக்குத் துணை போகிற அரசின் நாணயமற்ற செயல்களை அம்பலப்படுத்தி, வர்க்க ரீதியான மோதல்களைத் தீவிரப்படுத் துவதன் மூலமே இந்தப் பொருளாதாரக் கொள்கைகளை முறியடிக்க முடியும்.
–ஐ. ஆறுமுக நயினார்