உலகமயமாக்கல் என்ற வார்த்தையை நாம் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பேசிக் கொண்டிருக்கிறோம். உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் மற்றும் இவற்றிற்கு பின் உள்ள ஏகாதிபத்தியம் பற்றியும், இவற்றால் நாட்டின் சுயசார்பு தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நிலை ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம் ஆகியவை பற்றியும் மிகவும் அதிகமாகவே தெரிந்து வைத்திருப்போம். ஆனால் இந்த உலகமயமாக்கல் கடந்த இருபது வருடங்களாக இந்தியமக்களின் நலவாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து குறைவாக நமக்குத் தெரியும்.
- உலக வங்கியும் புதிய பொருளாதார கொள்கையும்
¨ உலக வங்கியால் வழிகாட்டப்படக் கூடிய இந்த புதிய பொருளதாரக் கொள்கை என்பது மக்களின் நலவாழ்வை சந்தை சக்திகளிடம் அடகு வைப்பதே.
¨ மக்கள் நலவாழ்விக்றான அரசு முதலீட்டை குறைத்து பொது சுகாதாரத்துறையை அழிப்பது.
¨ நோயாளிகளிடமிருந்தே கட்டணங்களை வசூலிப்பது (ஸ்கேன், சி.டி, எம்ஆர்ஐ போன்றவற்றிற்கு அரசே அரசு மருத்துவமனையில் கட்டணம் நிர்ணயிப்பது).
¨ அரசு தன்னிடம் உள்ள மக்களின் சுகாதாரம் குறித்த பொறுப்பை தனியார்களிடம் ஒப்படைப்பது, இந்த தனியார் மருத்துவமனைகள் நோய் தடுப்பு விசயங்களில் ஈடுபடுவதில்லை. மாறாக நோய் வந்த பின் அதற்கான மருத்துவத்தை மட்டும் செய்கின்றன. (சூடிவ யீசநஎநவேiஎந, டீடேல ஊரசயவiஎந ஊயசந)
¨ தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்துதல்
¨ தனியார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துதல்
¨ தனியார் மருத்துமனைகளுக்கு தேவையான வரிச் சலுகைகளை அளித்தல்
¨ மருந்து உற்பத்தி மற்றும் விலைக் கட்டுப்பாட்டு, மருந்து விநியோகத்தில் அரசு கட்டுப்பாட்டை தளர்த்தல்
- இந்திய சுகாதாரத்துறையில் உலகமயம் :
புதிய தாராளமயக் கொள்கை இந்தியாவில் 1991-ஆம் ஆண்டு மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருக்கும்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. (இதன் பயனாகவே கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக பிரதமர் பதவியை அவர் அனுபவித்து வருகிறார்). இந்த கொள்கையின் விளைவாக உடனடியாக தேசிய நிதிநிலை அறிக்கையில்(பட்ஜெட்டில்) சுகாதாரத்திற்கான செலவீனம் வெட்டப்படுகிறது. இன்றைக்கும் பொது சுகாதாரத் துறைக்கு அரசினுடைய செலவீனம் என்பது சில ஆப்பிரிக்க ஏழை நாடுகளை விடவும் குறைவு. (காண்க அட்டவணை) அருகில் உள்ள இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளை விடவும் குறைவு. இதன் காரணமாக இன்றைக்கு தனியார் மருத்துவத் துறை பெரிய வளமான, லாபகரமான கட்டுப்பாடில்லாத துறையாக வளர்ந்து நிற்கிறது.
- அதிகரிக்கும் சுகாதார செலவுகள் :
ஒட்டுமொத்த சுகாதார செலவின் அரசின் பங்கு
வளர்ந்த நாடுகளில்
நாடுகள் எண்ணிக்கை
இங்கிலாந்து 96
நார்வே 82
ஜப்பான் 80
ஜெர்மனி 78
பிரான்ஸ் 76
கனடா 72
ஆஸ்திரேலியா 72
ஸ்பெயின் 70
அமெரிக்கா 44
வளரும் நாடுகளில்
எத்தியோப்பியா 36
பாகிஸ்தான் 23
நைஜீரியா 28
இந்தியா 16
மேலே கூறப்பட்ட அட்டவணையிலிருந்து இந்தியாவில் வளர்ச்சியடைந்த நாடுகளைவிட மிகப்பெரிய அளவில் சுகாதாரம் தனியார் மற்றும் சந்தை சக்திகளின் (கிட்டத்தட்ட 84 சதவிகிதம்) கையில் உள்ளது. இதற்கு இன்னொரு அர்த்தம் காசு உள்ளவனுக்கு மட்டுமே மருத்துவம் என்பதுதான்.
(உ.தா) தற்போது மருத்துவத்துறையில் ஏற்பட்டு வரும் பாய்ச்சல் வளர்ச்சியின் காரணமாக மக்களின் ஆயுட்காலம் (டுகைந நுஒயீநஉவயnஉல சுயவந) அதிகரித்துள்ளது. இதனால் அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதம் 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே ஒன்று சர்க்கரை வியாதியாலோ அல்லது உயர் இரத்த அழுத்தத் தாலோ (க்ஷடடிடின ஞசநளளரசந) பாதிக்கப்பட்டு மீதம் உள்ள தங்களின் வாழ்நாள் முழுவதையும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியவர்கள் என்ற நிலைக்கு ஆளாகிறார்கள். அரசின் கொள்கையின் காரணமாக இவர்கள் தனியார் மருந்து சந்தைகளுக்கு தள்ளப்பட்டு தங்கள் வருமானத்தில் 30-40 சதவிகிதம் வரை ஆண்டிற்கு செலவு செய்கின்றனர். இதுவே 1970-80 மற்றும் 1980-90 கால கட்டங்களில் ஒரு குடும்பம் தங்கள் சுகாதாரத்திற்கு ஆண்டிற்கு செலவு செய்யும் தொகை என்பது தங்கள் வருமானத்தில் ஆண்டிற்கு 2 சதவிகிதத்திற்கும் கீழ் (இதுவுமே மேட்டுக்குடி மக்கள் மட்டுமே).
- காப்புரிமை சட்டம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை சட்டம் (ஞயவநவே யனே கூசயனந சநடயவநன iவேநடடநஉவரயட யீசடியீநசவல சiபாவள)
90களுக்கு முன்பெல்லாம் புதிதாக மருந்து கண்டு பிடிக்கப்படும்போது காப்புரிமை என்பது அந்த மருந்திற்கான சூத்திரத்திற்கு (குடிசஅரடய) மட்டுமே. அந்த மருந்திற்கான காப்புரிமையை யாரும் கோர முடியாது. அந்த மருந்தை வெறோரு சூத்திரத்தின் மூலம் உற்பத்தி செய்வதை யாரும் தடை செய்ய முடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் அரசின் பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்களும், தடுப்பு ஊசி நிறுவனங்களும் மிக குறைந்தவிலையில் (வளர்ந்த நாடுகளை விட பலமடங்கு) மருந்துகளை உற்பத்தி செய்ததுடன் நம்மை விட பின் தங்கிய ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் அளிக்கவும் செய்தது.
உதாரணத்திற்கு சிப்சோபிளாக்ஸின் மருந்தை 100 ரூபாய்க்கு வளர்ந்த நாடுகள் உற்பத்தி செய்தால் அந்த மருந்தை வாங்கி சூத்திரத்தின் (குடிசஅரடய) மூலம் 4 ரூபாய்க்கு இந்திய மருந்து கம்பெனிகள் உற்பத்தி செய்தது. புதிய தாராளமயக் கொள்கை வந்தபின் உலக வர்த்தக நிறுவனம் (றுகூடீ) காட்ஸ் (ழுஹகூளு) ஒப்பந்தத்தின் மூலம் நாடுகளின் உள்நாட்டு சட்டங்களை நீர்த்து போகச் செய்கிறது. புதிய காப்புரிமைச்சட்டங்களின் மூலம் புதிதாக கண்டறியப்படும் மருந்தை அல்லது தடுப்பு ஊசியை வேறொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ ஆய்வு செய்வதைத் தடை செய்கிறது. இதன் மூலம் நம்முடைய பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் புதிய மருந்துகள் தயாரிப்பதிலும், புதிய தடுப்பூசிகள் தயாரிப்பதிலும் இருந்து விலக்கி வைக்கப் படுகின்றன. பன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை நம் நாட்டில் உள்ள தனியார் மருந்து கம்பெனிகள் கூட தயாரிக்க முடியாத நிலை.
இதன் காரணமாக சின்னஞ்சிறிய மருந்து கம்பெனிகள் தங்களை புனரமைத்துக் கொள்ள முடியாமல்பன்னாட்டு கம்பெனிகளுக்கு விலைபோக நேரிடுகிறது. இந்த பன்னாட்டு கம்பெனிகள் நாட்டில் உள்ள நடுத்தர வர்க்க மக்களுக்கான (வாங்கும் சக்தி உள்ள) மருந்துகளை மட்டுமே உற்பத்தி செய்கின்றன. பெருவாரியான வாங்கும் சக்தியில்லாத மக்களுக்கு வரக்கூடிய தொற்று நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதில்லை. (உ.தா. மலேரியா, காசநோய், தொழுநோய்) ஏற்கனவே பழக்கத்தில் உள்ள மருந்துகள் (ஆரடவi னுசரப சுநளளைவயnஉந) செயல்படாமலே போகும்போது புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுவதில்லை.
- தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தொண்டு
சில தன்னார்வ அமைப்புகள் மட்டுமே நோய்தடுப்பு விசயங்களிலும், சுகாதார விழிப்புணர்வு சேவைகளிலும் ஈடுபடுகின்றன. ஆனால் பெரும்பாலானவை பன்னாட்டு கம்பெனிகளின் நிதி உதவியை பெற்றே இயங்குகின்றன. மேலும் இத்தகைய அமைபபுகள் சில துறைகளில் மட்டுமே (உ.தா. எய்ட்ஸ், குடும்பக்கட்டுப்பாடு, கவனம் செலுத்துகின்றன. இவை மக்கள் நலவாழ்வில் அரசுக்குள்ள பொறுப்பை மறுதலிக்கின்றன. மக்களின் கோபம் அரசுக்கு எதிராக திரும்பா வண்ணம் ஒரு கட்டுக்குள் வைக்கின்றன.
இதனால் அரசு சுகாதாரத்தை தன்னார்வத் தொண்டு அமைப்புகளிடம் ஒப்படைத்து தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறது. மேலும் இத்தகைய அமைப்புகளும் (கிட்டத்தட்ட அரசு பதிவு பெற்ற அமைப்புகளேஇந்தியாவில் 40000க்கும் மேலே உள்ன. எந்தவித கட்டுப்பாடோ, அதை ஒருங்கமைக்கிற ஏற்பாடோ அவைகளில் சேவைகளை கண்காணிக்கிற பொறுப்போ அரசிடம் இல்லை. இதனால் சில தன்னார்வ அமைப்புகளே பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் மருந்துகளை மக்களின் மீது சோதனை செய்து பார்க்கும் ஏஜெண்டாக உள்ளன.
- காப்பீட்டுத்திட்டம் :
இதுவும் நோயாளிகளுக்கு நன்மை செய்ய வந்தது போல் தோன்றினாலும் பிரீமியம் செலுத்தும் ஒருவருக்கு விபத்து அல்லது சில வகை அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் உதவும். பொதுவாக வரக்கூடிய நோய்களுக்கோ(காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு, தொற்று நோய்கள், பேறுகாலம், குழந்தை களுக்கான நோய்கள்) அல்லது நீண்ட நாட்களுக்கு மருந்துகள் தேவைப்படும் நோய்களுக்கோ (இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, ஆஸ்துமா, காசநோய்) இந்த திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை.
தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம் இதற்கு சிறந்த உதாரணம் . அரசு இத்திட்டத்திற்கு ரூபாய் 750 கோடி ஒதுக்கி உள்ளது. இதுவும் சில அரிதாக நடக்கக்கூடிய (ளுரயீநச ளுயீநஉயைடவல) அறுவை சிகிச்சை மற்றும் விபத்துகளுக்கு மட்டுமே. இதன் மூலம் ஆண்டிற்கு 750 கோடியை தனியார்களிடம் அரசு ஒப்படைக் கின்றது. இந்நிதியை அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கி அவற்றின் தரத்தை உயர்த்தி இருக்க முடியும்.
- நலவாழ்வுக் குறியீட்டு முன்னேற்றத்தில் தேக்கம் :
பொதுவாக மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில் (ழரஅயn னநஎநடடியீஅநவே ஐனேநஒ) இந்தியா 132 வது இடத்தில் உள்ளது. இது நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இலங்கை, பங்களாதேஷை விட பின்னால் உள்ளது. அதேபோல 1 வயதிற்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதம் (ஐகேயவே ஆடிசவயடவைல சுயவந) கடந்த இருபது ஆண்டுகளில் சற்று முன்னேறி இருப்பதுபோல அரசு தெரிவித்தாலும் இது 1970-80 ஆண்டுகளில் 15 சதவிகிதம் குறைந்து கொண்டும், 80-90ல் 27சதவிகிதம் குறைந்து கொண்டும் வந்தது. ஆனால் 1990-2000ல் புதிய தாராளமயக் கொள்கையால் இந்த குறையும் விகிதம் ஆண்டிற்கு 10 சதவிகிதம் என்ற அளவிற்கு தான் உள்ளது.
இதேபோல் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதமும் (ருனேநச கiஎந ஆடிசவயடவைல சுயவந) 1970-80இல் ஆண்டிற்கு 20 சதவிகிதம் என்ற அளவிலும், 80-90களில் ஆண்டிற்கு 36 சதவிகிதம் என்ற அளவிலும் குறைந்து கொண்டு இருந்தது. ஆனால் 1990-2000இல் இது ஆண்டிற்கு 15 சதவிகிதம் என்ற அளவில் சுருங்கி விட்டது.
- அதிகமாகும் சமத்துவமின்மை :
சமூகத்தினுடைய அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளும் மக்களுடைய சுகாதாரத் துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஒட்டுமொத்த நோயாளிகளில் 60-70 சதவிகிதம் மக்கள் ஒடுக்கப்பட்ட பிரிவினரே. பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆண்டிற்கு 1,30,000. இதில் 80 சதவிகிதத்திற்கான இறப்பு தவிர்க்கப்பட வேண்டியு ள்ளது. தேசிய சுகாதார திட்டம் (சூயவiடியேட ழநயடவா ஞடிடiஉல) 1983-இன் படி 2000 ஆண்டிற்குள் பேறுகால இறப்பை 1,00,000 குழந்தைகள் பிறந்தால் (டுiஎந க்ஷசைவா) 200க்கு குறைவான தாய்மார்களே இறக்கும் படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பத்து ஆண்டுகள் கழிந்த நிiலாயிலும் 407 தாய்மார்கள் 1,00,000 குழந்தைகள் பிறப்பதால் இறக்க நேரிடுகிறது. இதில் 70சதவிகிதம் பேர் தலித் மற்றும் பழங்குடி, சிறுபான்மை இன பெண்களே. இது அரசு கடைபிடிக்கும் ஒருவகையான தீண்டாமைக் கொடுமை.
- அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை
1997 முதல் 2008 வரை 2,00,000 மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் நடக்கும் இத்தகைய விவசாயி களின் தற்கொலையைப் பற்றி ஆய்வு செய்த இந்து நாளிதழ் ஆசிரியர் சாய்நாத் அவர்களின் கூற்றுப்படி விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் அவர்களின் கடன் சுமை என்றும் (விவசாயத்துறையில் அரசு கடைபிடிக்கும் கொள்கை காரணமாக) அந்த கடன் சுமையில் 50 சதவிகிதம் அளவிற்கு அவர்களின் சுகாதாரத்திற்கானது (மகளின் பேறுகால செலவு, குழந்தைகளின் நோய்களுக்கான செலவு) என்பதும் தெரிய வருகிறது.
- முடிவாக
இப்படிப்பட்ட வழிகாட்டுதலை வழங்கி மக்களின் நலவாழ்வை சீரழிக்கும் உலக வங்கி நாடுகளில் உள்ள தேசிய அரசுகளை மட்டுமல்லாது கடந்த காலங்களில் உலக மக்களின் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்திய று.ழ.டீ. (உலக சுகாதார அமைப்பு) ருniஉநக (ருnவைநன சூயவiடிn ஐவேநசயேவiடியேட ஊhடைனசநn நுஅநசபநnஉல குரனே) அமைப்புகளின் செயல்பாடுகளையும் தன் லாப வெறிக்கேற்றவாறு மாற்றி வைத்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து மூன்றாம் உலக நாடுகளும் கடந்த முப்பது வருடங்களாக இதைப் பின்பற்றிய தால் தங்களுடைய சுகாதார முன்னேற்றக் குறியீட்டில் போதுமான அளவில் முன்னேறவில்லை அல்லது பின்ன டைவைச் சந்தித்தார்கள் என்றே கூற வேண்டும்.
லத்தீன் அமெரிக்க நாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளை விட பத்து வருடங்களுக்கு முன்பாகவும், மேலும் அதி விரைவாகவும் இந்த கொள்கைகளை பின்பற்றியதால் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளானார்கள். (பொலிவியாவில் தனியார் மயமாக்குதலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்தது). அதுவே அந்த மக்களை மிகப்பெரிய எழுச்சிக்கு இட்டு சென்று இன்று அந்த மக்களை மிகப்பெரிய எழுச்சிக்கு இட்டுச் சென்று இன்று அந்த நாடுகளில் ஓரளவிற்கேனும் மக்கள் நலன் சார்ந்த அரசுகள் அமைந்துள்ளன, இந்தியாவிலும் இந்த நிலைமை மாற வேண்டுமானால் இடது ஜனநாயக சக்திகளின் தலைமை பலப்படுத்தப்பட வேண்டும.
–டாக்டர். லட்சுமி சிவசங்கரன்