உழவர் சந்தையும் விலைவாசி உயர்வுப் பிரச்சனையும்


 

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேசிய அளவில் நடந்த மாநில முதல் அமைச்சர்கள் மாநாட்டில் உழவர் சந்தையின் வாயிலாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்றும் இந்தியா முழுவதும் தமிழகத்தைப் போல் உழவர் சந்தைகள் துவக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் சார்பில் பேசிய துணை முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களின் கருத்தாக அமைந்தது. பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களை பின்பற்றி அப்போதைய மதுரை மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் திரு. ரத்தனவேலு பாண்டியன் அவர்களின் கருத்துரை, பரிந்துரையை ஏற்று வேளாண் விற்பனை துறையில் விவசாயிகள் செலுத்திய செஸ் வரி விதிப்புகள் வாயிலாக துவக்கப்பட்ட உழவர் சந்தைகளின் செயல்பாடுகள், பலம், பலவீனம், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றிய விரிவான வேளாண் விரிவாக்க ஆராய்ச்சியின் வாயிலாக எளிதில் புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நிதி உதவியுடன் முழுநிலை ஆராய்ச்சியாக மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ்விரிவாக்க ஆய்வு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் சிறந்த முதுநிலை ஆராய்ச்சி விருதையும் பெற்றது.

உழவர் சந்தையின் பலம், பலவீனம், வாய்ப்புகள் மற்றும் சவால்கள்:

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை என்று மதுரையின் சிறப்பை இலக்கியம் எடுத்துக் கூறும். அத்தகைய உழவர் பெருந்தகைகளின் உழைப்பை, பெருமையை எடுத்துக் காட்டுகின்ற மதுரை மண்டலத்தில், தமிழக அரசின் சார்பில் இன்றைக்கு உழவர் சந்தை தொடங்கப்பட்டுள்ளதாக அப்போதைய தமிழக முதல்வர். கருணாநிதி உழவர் சந்தையை 14.11.1999 அன்று துவக்கி வைத்து தனது பேரூரையில் தெரிவித்தார். உழவர் துயர் தீரா “வாராது வந்த மாமணி”யே என்று போற்றப்பட்ட உழவர் சந்தையில் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளும், பொது மக்களும் நேரடித் தொடர்பில் நேர்மையான வணிகம், நியாயமான விலை, சரியான எடை என்ற உயரிய நோக்கங்களுடன் துவங்கப்படும் மொத்தச் சந்தை விலையை விடக் கூடுதலான விலை விவசாயிக்கும், சில்லரைச் சந்தை விலையை விடக் குறைவான விலைக்கு பொதுமக்களுக்குக் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டதால் தமிழக விவசாயிகள், நுகர்வோர் பயன் பெறுவர் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, செயல்படுத் தப்பட்ட தமிழக உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் பற்றி தமிழக விவசாயிகள், நுகர்வோர் தெரிந்து கொள்வது அவசியம். முதன் முதலாக தமிழகத்தில் மதுரை, சென்னை நகரில் தேர்வு செய்யப்பட்ட 120 சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் விரிவாக்கப் பணியா ளர்கள், உழவர் சந்தை அலுவலர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகள் மற்றும் நேர்காணல் வாயிலாக பின்வரும் கண்டுபிடிப்புகளும், நடைமுறை உண்மைகளும் கண்டறியப் பட்டது.

உழவர் சந்தையின் பலன்கள்:

மதுரை அண்ணாநகர் உழவர் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆராய்ச்சிகள் பின்வரும் முடிவினை தந்தது. தர வரிசை குறியீடு (சுயமே யௌநன ளூரடிவநைவே) அடிப்படையிலான தர வரிசை பட்டியலில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அதிகப் படியான நல்ல விலை (94.33 மதிப்பெண்) என்ற சிறப்பு அம்சம் முதல் பலமாகவும், இடைத்தரகர்கள் இல்லாத நடைமுறை சூழல் (94.33 மதிப்பெண்) சுகாதாரமான வசதி (93.82 மதிப்பெண்) என்று முறையாக கட்டணம் இல்லாத சந்தை செயல்பாடுகள், இலவச போக்குவரத்து வசதிகள் வெளிப்படையான சந்தை செயல்பாடுகள், பசுமையான காய்கறிகள், எளிதாக சந்தைக்கு வரும் நிலை போன்றவை உழவர் சந்தையின் பலன்களாக கண்டறியப்பட்டது. பாரம்பரிய வேளாண் சந்தைகள் போல் இடைத்தரகர்கள் இல்லாத சூழல், சுகாதா ரமாக சந்தையின் தூய்மை உள்ள நிலை, விவசாயிகளுக்கு நல்ல விலை, உடனடி விற்பனை வாயிலாக உழைப்பிற்கு ஏற்ப பணம் போன்றவையும் மாநில போக்குவரத்து துறை பேருந்துகள் வாயிலாக நேரடியாக கிராமங்களில் இருந்து உழவர் சந்தைக்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலை விவசாயி களுக்கு மிகவும் பயன் தந்தது. எனவே, விவசாயிகள், விரிவாக்கப் பணியாளர்கள், பண்ணை மகளிர் மேற்கண்ட காரணிகளை உழவர் சந்தையின் பலன்களாக (ளுவசநபேவா டிக ருணாயஎயச ளுயவோயை) குறிப்பிட்டனர்.

உழவர் சந்தையின் பலவீனங்கள்: (றுநயமநேளள டிக ருணாயஎயச ளுயவோயi)

உழவர் சந்தையின் பலவீனங்களாக குறைந்தளவு பழ விற்பனை (94.14 மதிப்பெண்) பாரம்பரிய சந்தைகளில் விலை ஏற்ற, இறக்கங்களினால் உழவர் சந்தையின் பாதிப்புகள் (88.91 மதிப்பெண்) குளிர்பதன வசதி இல்லாத நடைமுறை (86.16 மதிப்பெண்), குறைந்தளவு கடைகள்(81.33 மதிப்பெண்), மழைக்காலங்களில் நுகர்வோர் ஒதுங்க இடம் இல்லாத சூழல், காலையில்மட்டும் உழவர் சந்தைகள் செயல்படுவது, ஒழுங்கான தர நிர்ணய முறைகள், கடைகளில் போதிய வசதிகள் இல்லாத சூழல் முறையே உழவர் சந்தையின் பலவீனங்களாக தெரிவிக்கப் பட்டுள்ளது. பாரம்பரிய சந்தைகளில் நுகர்வோரின் தேவையை கருத்தில் கொண்டு பலவிதமான பழங்கள் பல மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தையில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடம் மட்டும் பழங்கள், காய்கறிகள் கொள்முதல் செய்யப்படுவதால் பல வெளிமாவட்ட மற்றும் வெளி மாநில பழங்கள் விற்பனை வாயிலாக நுகர்வோரின் தேவையை சந்திக்க முடியவில்லை. இத்தகைய பலவீனத்தை நிவர்த்தி செய்ய மதுரை உழவர் சந்தையில் கொடைக்கானல் பழ விவசாயிகள் பதிவு செய்யப் பட்டு பழங்களின் விற்பனை தொடர்ந்து செய்யப்பட்டாலும் நுகர்வோரின் தேவையை நிறைவு செய்ய முடியாத நடைமுறை சூழல் மட்டுமே நிலவுகிறது. மேலும் மழை காலத்தில் நுகர்வோர் ஒதுங்க இடம் இல்லாத சூழல், பாரம்பரிய சந்தைகள் போல் அல்லாமல் காலை மட்டும் உழவர் சந்தைகள் செயல்படுவது, ஒழுங்கான தர நிர்ணயம் இல்லாமல் விலை நிர்ணயம் செய்யப்படும் நடைமுறை சூழல் பல நுகர்வோரின் நலன்கள், தேவைகளை நிறைவு செய்யாமலும் விவசாயிகள் பொருளாதார நலன்களை பாதிக்கக் கூடியதாகவே அமைந்தது. குளிர்பதன வசதி இல்லாத சூழலில் விவசாயிகள் ஒரே நாளில் தங்களின் விளை பொருளை விற்பனை செய்யும் நிலையே நடைமுறையில் காணப்படுகிறது.

உழவர் சந்தையில் வாய்ப்புகள்: (டீயீயீடிசவரnவைநைள டிக ருணாயஎயச ளுயவோயi)

உழவர் சந்தையில் நுகர்வோர் சந்திக்கப்படவும், பதிவு செய்த விவசாயிகள் நலன்கள் பாதுகாக்கப்படவும் புதிய வாய்ப்புகள், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் போன்றவை எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தேவையாக கண்டறியப் பட்டது. புதிய மதிப்பு கூடிய பொருட்கள் உற்பத்தி கூடம் (96.9) மதிப்பெண்), விவசாயிகளை விரிவாக்க தேவைகளை சந்திக்க தகவல் மையம் (94.50 மதிப்பெண்), பாரம்பரிய சந்தைகள் போல் காலையிலும், மாலையிலும் சந்தை செயல்பாடுகள் (93.83 மதிப்பெண்), குளிர்பதன வசதி, வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வங்கி சேவைகள், சுய உதவிக்குழுக்களின் பொருட்கள் விற்பனை போன்ற விரிவாக்க மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது நிகழ் மற்றும் எதிர்காலத்திற்கு உகந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்ட தேவைகள், புதிய நடைமுறைகள், கட்டமைப்புகள் வசதிகளே உழவர் சந்தையின் பலன்களை நுகர்வோர் மற்றும் விவசாயிகள் பெற உதவும்.

உழவர் சந்தையின் சவால்கள்: (கூhசநயவள டிக ருணாயஎயச ளுயவோயi)

உழவர் சந்தை சந்திக்கும் நிகழ் மற்றும் எதிர்கால சவால்களாக அரசியல் மாற்றங்களால் சந்தை பாதிக்கப்படும் சூழல் (98.5 மதிப்பெண்), தனியார்மயமாக்கப்படும் விரிவாக்க சேவைகள் (86.33 மதிப்பெண்), அரசியல் தலையீடுகள் (83.83 மதிப்பெண்), ஒழுங்கான தர நிர்ணயம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் தரத்தில் கவனம் செலுத்தாத நடைமுறை சூழல் (77.58 மதிப்பெண்) நகர் திட்டமிடுதல், உலக வர்த்தக மையத்தின் ஒப்பந்தத்தின் படி குறைந்த விலையில் வேளாண் விளை பொருட்கள் இறக்குமதி, மொத்தமாக விளை பொருட்கள் விற்பனை காரணமாக வாடிக்கையான நுகர்வோர் தேவை சந்திக்கப்படாத நடைமுறை சூழல் போன்றவை உழவர் சந்தை சந்திக்கும் சவால்களாக கண்டறியப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் வெற்றிகரமாக வேளாண் நலத் திட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் போதிய ஆதரவு இல்லாத நடைமுறை சூழலில் விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலன்களை பாதுகாக்க முடியவில்லை. மேலும் அரசியல் தலைவர்களே விற்பனை குழுவில் நியமிக்கப்பட்டது பல அரசியல் தலையீடுகளை சந்தை செயல்பாட்டில் ஏற்படுத்தி பல நடைமுறை பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்தது. தனியார்மயமாக்கப்படும் விரிவாக்க சேவைகள், நகரத் திட்டமிடுதலில் புதிய குடியிருப்பு பகுதிகள் உருவாகுதல், உலக வர்த்தக விதிகளின் படி அதிகப்படியான வேளாண் இறக்குமதிகளை உழவர் சந்தை சந்திக்கும் பெரிய எதிர்கால சவால்களாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் மொத்தமாக காய்கறி விற்பனையில் வாடிக்கையான நுகர்வோரின் நலன்கள் பாதிக்கப்பட்டாலும் உழவர் சந்தை செயல்பாடுகளில் சவாலாக கருதாமல் ஒரு நல்ல வர்த்தக வாய்ப்பாகவே பல விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உழவர் சந்தை விவசாயிகளின் பயிற்சி தேவைகள்: (கூசயiniபே நேநனள டிக ருணாயஎயச ளுயவோயi கயசஅநசள)

உழவர் சந்தை வாயிலாக தங்களின் விளை பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளாக உருமாறி விட்ட உழவர் சந்தை விவசாயிகள் தங்களுக்கு வேளாண் மற்றும் பிற வளர்ச்சி துறைகள் வாயிலாக புதிய பயிற்சிகள் தேவை என்று விரிவாக்க ஆராய்ச்சியாளரிடம் தெரிவித்தனர். மிக முக்கிய பயிற்சி தேவைகளாக நுகர்வோர் மற்றும் வேளாண் சந்தையின் தேவைக்கேற்ப சாகுபடி பணிகளை மேற்கொள்வது (ஆயசமநவ டீசநைவேநன பயசனநniபே) மதிப்பு கூடிய பொருட்கள் உற்பத்தி செய்வது (ஞசடினரஉவiடிn டிக எயடரந யனனநன யீசடினரஉவள), இரண்டாம் தர வேளாண் விளை பொருடகள் விற்பனை, நல்ல ரகங்களை தேர்வு செய்து சாகுபடிப் பணிகளை மேற்கொள்வது, வேளாண் விளை பொருட்களின் தரத்தை உயர்த்துவது போன்றவை மிக முக்கிய பயிற்சி தேவையாக வேளாண் விரிவாக்க ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. உழவர் சந்தையின் விதிகள் மற்றும் நடைமுறைகள், வேளாண் பொருட்களை அடுக்கிவைக்கும் முறை, தரம் பிரிக்கும் முறையில் குறைந்தளவு பயிற்சிகள் தேவை என்று தெரிவிக்கப்பட்டது. பணப் பரிமாற்றத்தின் எந்த விதமான பயிற்சியும் தேவையில்லை என்றும் தங்கள் கிராமங்களில் உள்ள ஊர் பள்ளிக் கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்களில் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு பயிற்சி தந்தால் போதுமானது என்று விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

முடிவுரை:

பஞ்சாப், ஆந்திர மாநிலங்களில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்த உழவர் சந்தைகள் வாயிலாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை நிலவரம். குறிப்பாக பெரிய சந்தைகளின் மொத்த விலையை விட அதிகமாகவும், சில்லரை சந்தைகளை விட குறைவான விற்பனை செய்வது நுகர்வோர் மற்றும் உழவர்களின் பொருளாதார நலன்களை பாதுகாப்பதாக கொண்டாலும் சந்தைகளின் விலைவாசி உயர்வை உழவர் சந்தைகளால் கட்டுப்படுத்த முடியாது என்பதே உழவர் சந்தையின் செயல்பாடுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். முதல் உழவர் சந்தை துவங்கிய நாளில் இருந்த மாநிலம் முழுவதும் நூறு உழவர் சந்தைகள் என்ற இலக்கை நோக்கி வேகமாக வேளாண் மற்றும் வளர்ச்சித் துறைகள் பயணம் செய்த காரணத்தால் பல மாவட்டங்களில் தவறான இடத்தேர்வுகள், கட்டமைப்பு வசதிகள் இல்லாத நடைமுறை போன்றவை காரணமாக பல உழவர் சந்தை முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. மக்கள் ஆதரவு, விவசாயிகளின் பங்களிப்பு, சிறந்த இடம் தேர்வு வாயிலாக தற்போது சிறந்த முறையில் செயல்பட்டு வரும் மதுரை அண்ணாநகர் உழவர் சந்தை, கோவை ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை போன்றவை பொறுமையான திட்டமிடுதலுக்கு கிடைத்த வெற்றியாகும். தமிழகத்தில் தற்போது நல்ல முறையில் செயல்படாத உழவர் சந்தைகளை மூடியும், புதிய மக்கள், விவசாயிகள் எளிதாக கூடும் போக்குவரத்து வசதிகள் உள்ள இடங்களில் புதிய கட்டமைப்பு வசதிகளுடன் உழவர் சந்தைகள் துவங்கப்பட்டால் மட்டுமே வெற்றி பெறும். உழவர் சந்தைகள் வாயிலாக சமச்சீரான உணவை (க்ஷயடயnஉநன னுநைவ) குழந்தைகள், பெரியவர்கள் பெற முடியும் என்றாலும் மாநில அரசின் அரசியல் கட்டுப்பாடுகளில் சந்தையின் செயல்பாட்டை விடுவித்து விவசாய சங்கங்களின், விவசாய சங்க பிரதிநிதிகளாக கொண்டு உழவர் சந்தைகள் செயல்படும் போது உயரிய நோக்கங்களை அடைய வழிவகை பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தேசிய அளவில் அனைத்து மாநிலங்களில் உழவர் சந்தைகளை துவங்க தமிழக அரசின் ஆலோசனை நமது அண்டைய கேரள மாநிலத்தில் கூட பயன்தராது. தமிழகத்தில் இருந்து தங்களின் காய்கறிகளை பெற்று வரும் கேரள மாநிலம் போல தேசிய அளவில் பல மாநிலங்கள் தங்களின் காய்கறி தேவைகளை பிற மாநிலங்களில் சந்திக்கும் சூழலில் தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் உழவர் சந்தைகள் துவங்கி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட வேளாண் ஆலோசணை ஒரு நல்ல நகைச் சுவை. உணவுப் பொருட்களின் முன்பேர வணிகத்தை கட்டுப்படுத்தாமல், உழவர் சந்தைகள் போன்ற வேளாண் முயற்சிகள் போதிய பலன்கள் தராது; ஆலங்கார பொருளாதார மற்றும் வேளாண் முயற்சிகளாகவே இருக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தரமான விதைகள், வேளாண் இடு பொருட்கள், இடைவிடாத மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள், போதிய நிதி மற்றும் விற்பனை வசதிகளை உருவாக்கி சிறு மற்றும் குறு விவசாயிகள், நடுத்தர விவசாயிகளின் தேவையை நிறைவு செய்வதன் வாயிலாக நமது நிகழ் மற்றும் எதிர்கால உணவு தேவைகளை சந்திக்க முடியும். இடதுசாரிகள் தரும் ஆலோசனைகள், விவசாய சங்கங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஒரு நீண்ட, நெடிய செயல் திட்டம் வாயிலாக செயல்படுவதன் வாயிலாகவே விலைவாசி உயர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும். உழவர் சந்தை போன்ற முயற்சிகளும் ஆலோசனைகளும் சிறந்த அலங்காரங்களாக இருக்குமேயன்றி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் பலன் பெற்று தராது.

 

–முனைவர் தி. ராஜ்பிரவீன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s