புதிய உலகமய சூழலில் இந்திய மருந்துத்துறை


 

இந்திய மருந்துத் துறையின் வரலாறு நெடியது. உலகிற்கே பல்வேறு உயரிய சிகிச்சை முறைகளை உருவாக்கி தந்தது நமது நாடு தான். இந்தியாவின் பண்பாட்டோடு ஒன்றிக் கலந்திருந்தது. நமது பண்டைய கால சிகிச்சை முறைகள். சித்த மருத்துவம் – ஆயுர்வேதம் – யுனானி என நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கூறிய மருத்துவ முறைகள் பிரபலமாக இருந்தன. ஆனாலும் இவையெல்லாம் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இங்கு வந்து நம்மை ஆதிக்கம் செலுத்தத் துவங்கியதிலிருந்து மெல்ல மெல்ல தங்கள் பிரபலத்தை இழந்திடத் துவங்கியது.

ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியாவை பகுதி வாரியாக கைப்பற்றத் துவங்கியதும் பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியர்கள் பலர் (சிறு, குறு மன்னர்கள் உட்பட) படை திரட்டி போரிட்டனர் என்பதெல்லாம் வரலாறு. அப்படி நடைபெற்ற போர்களில் கணிசமான ஆங்கில படை வீரர்கள் இறந்தனர். காயமுற்றனர். இவர்களுக்கான சிகிச்சை அவர்களின் நடைமுறைப்படி ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட முறைகள் நாளடைவில் நமது வர்த்தகத்திலும் கால் வைத்து பிரபலமாகி இன்று பாரம்பரிய சிகிச்சை முறைகள் நலிவடைந்து வருகின்றன.

இப்படி பிரபலமான ஆங்கில மருத்துவ சிகிச்சை முறைக்கு தேவைப்பட்ட மருந்துகள் அந்நாட்களில் இங்கே உற்பத்தி செய்யப்படாமல் இறக்குமதி செய்யப்பட்டன. வளர்ந்து வந்த தேவைக்கேற்ப இறக்குமதி செய்யப்பட முடியவில்லை. இங்கேயே பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் துவங்கி உற்பத்தி செய்தன. கொள்ளை லாபம் சம்பாதித்தன.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நிறைவுற்று நாடு விடுதலை பெற்றதும் பல துறைகளில் சுயசார்பான கொள்கைகள் உருவாக்கப்பட்டது. பாவம்! மருந்துத்துறை மட்டும் விதிவிலக்கானது. ஆனாலும் நம் நாட்டு அறிஞர் பெருமக்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மருந்து துறையிலும் மாற்றம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்படி வந்தது தான் மருந்து உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்கள். தயாரிக்கும் நிறுவனம் மட்டும் போதாது அடிப்படை கொள்கை களிலேயே மாற்றங்கள் செய்யப்பட்டால் தான் மக்களுக்கு மருந்துகள் எளிதில் கிடைக்கும் என புதுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இந்திய மருந்துத்துறை – பிரம்மாண்ட வளர்ச்சியின் காரணிகள்

மக்களின் அத்தியாவசிய தேவையான மருந்துகள் உற்பத்தியில் உலகிலேயே இன்று இந்தியா நான்காவது இடத்தை அடைந்துள்ளது. சுமார் 200 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கின்றது. ஏழை மற்றும் பல வளரும் நாடுகள் இந்தியாவின் மருந்துகளை நம்பித்தான் இருக்கின்றனர்.(இதெல்லாம் ஒரு பக்கம். நமது நாட்டிலேயே இன்றும் சுமார் 68 கோடி மக்கள் எந்த விதமான மருந்துகளையும் வாங்க முடியாதவர்களாக ஏழ்நிலையில் உள்ளனர் என்பதும் உண்மை.)

இத்தனை சிறப்புகள் வந்ததன் முக்கிய காரணிகள் 1. இந்திய காப்புரிமைச் சட்டம் 1970, 2. பொதுத்துறை நிறுவனங்கள், 3. 1978-இல் உருவாக்கப்பட்ட மருந்துக் கொள்கை.

காலனி நாடாக இந்தியா இருந்த போது 1911-இல் உருவாக்கப்பட்ட தயாரிப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற மருந்துகளை இந்திய நிறுவனங்கள் தயாரிக்க அனுமதிக் கப்பட்டன. அதுநாள் வரை இருந்த மருந்துக்கான காப்புரிமை (ஞசடினரஉவ ஞயவநவே) செய்முறைக்கான காப்புரிமை (ஞசடிஉநளள ஞயவநவே)யாக மாற்றப்பட்டது. வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகள் இரண்டு (அ) மூன்று ஆண்டுகளில் வெவ்வேறு வழிமுறைகளில் தயாரிக்கப்பட்டு குறைந்த விலையில் வழங்கப்பட்டது. அதுவரை சட்டத்தை வைத்து கொள்ளையடித்து / சுரண்டி வந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனையில் சரிவு ஏற்பட்டது. அந்நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்தது.

பெரும்பாலும் இறக்குமதி மட்டும் செய்து உற்பத்தி எதுவும் செய்யாமல் லாபம் மட்டும் ஈட்டி வந்தன பன்னாட்டு நிறுவனங்கள். பொதுத்துறை நிறுவனங் களான ஐ.டி.பி.எல். மற்றும் எச்.ஏ.எல் நிறுவனங்கள் சோவியத் ரஷ்ய உதவியுடன் துவக்கப்பட்டு மருந்துகள் உடனுக்குடன் கிடைக்க வழி செய்யப் பட்டதால் வேறு வழியின்றி பன்னாட்டு மற்றும் தனியார் இந்திய நிறுவனங்களும் தொழிற்சாலைகள் நிறுவி உற்பத்தி செய்தனர்.

மூன்றாவதாக 1978-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மருந்துக் கொள்கை இந்திய பொதுத்துறை நிறுவனங் களுக்கும், தனியார் கம்பெனிகளுக்கும் சாதகமான பல அம்சங்களைக் கொண்டு வந்தது. அன்றைய தினம் பயன்பாட்டில் இருந்த பெரும்பாலான (சரியாக 374) மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு வைத்தது. இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் வேகமாக குறைந்து (25 சதவிகிதம்) போனது.

கொள்கை மாற்றமும் – மக்களின் துயரமும்

இந்திய மருந்துத்துறையின் அபார வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்த மூன்று காரணிகளும் கடந்த இருபது ஆண்டுகளாக ஆட்சியாளர்களின் கொள்கை களால் தேய்ந்து விட்டன. பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட நீர்த்துப் போய்விட்டது. ஐ.டி.பி.எல். நிறுவனத்தில் உற்பத்தி இல்லை. ஹெச்.ஏ.எல். நிறுவனத்தில் சிறு அளவில் (தொழிற்சங்க போராட்டங் களால்) உற்பத்தி நடைபெற்று வருகின்றது.

1978-இல் உருவாக்கப்பட்ட மருந்துக் கொள்கைளில் 1986, 1974 மற்றும் 2001-இல் திருத்தங்கள் செய்யப்பட்டு அன்னிய பகாசுர கம்பெனிகளின் கொள்ளைக்கு கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

1995-இல் உலக வர்த்தக நிறுவனத்தில் கையெழுத் திட்டு வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாலும், 2005-இல் 1970-ஆம் காப்புரிமை சட்டம் மாற்றம் பெற்று, வெளிநாட்டில் காப்புரிமை பெறப்பட்ட மருந்துகள் இந்தியாவில் தயாரிக்க முடியாமல் போனது.

இந்த மூன்று பிரச்சனைகளால் மக்களுக்கு மருந்துகள் எட்டாக்கனியாக மாறி வருகின்றது.

மருந்துகளின் விலைகள் மீதான கட்டுப்பாடு மெல்ல மெல்ல தளர்ந்து வருவதால், அனைவருக்கும் மருந்து என்பது பகல் கனவு தான். சமீபத்தில் வந்த உலக வங்கியின் ஆய்வும் இதையே உறுதிப்படுத்துகின்றது. அதாவது மக்களின் மருந்துக்கான செலவுகள் அதிகமாவதால் மக்கட் தொகையில் சுமார் 2 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே மேலும் தள்ளப்படுவர்.

மனித ஆரோக்கியத்திற்கான பராமரிப்பில் சுமார் 80 சதவிகிதம் மருந்துகளுக்காகவே செலவிடப்படுகின்றன. இதில் வெகுவாக பாதிக்கப்படுவோர். நகர்ப்புற மற்றும் கிராமப்புற அடித்தட்டு மக்களே. சுகாதாரம் இல்லாத சுற்றுச்சூழல், மறுக்கப்படும் அடிப்படை வசதிகள் சுத்தமில்லாத குடிநீர் என அன்றாட பிரச்னைகளோடு மருந்து விலையும் இவர்களை பின்னுக்குத் தள்ளு கின்றது.

மருந்துத் துறையில் தாராளமயம் புகுந்துவிட்டதால், அத்தியாவசியமான மருந்துகள் உற்பத்தி குறைந்து போய் தேவையற்ற மருந்துகளின் உற்பத்தி அதிகமாகிவிட்டது. இதனால் தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், மருந்து நிறுவனங்களின் தவறான நடவடிக்கைகளால் இத்துறை வேகமாக பாழ்பட்டு வருகின்றது. இதற்கு இத்துறையில் அங்கமாக உள்ள மற்றவர்களும் காரணமாக உள்ளனர்.

சமூக நோக்கோடு இருக்க வேண்டிய துறை முற்றிலும் லாபம் மட்டுமே குறிக்கோளாக மாற்றப்பட்டு விலை மதிப்பற்ற மனித உயிர்களுக்கு விலை பேசப்படுகின்றன.

உற்பத்தியிலிருந்து – வர்த்தகத்திற்கு;

கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் உள்ள அரசின் தவறான கொள்கைகளால், பெரும் நிறுவனங்கள் அடிப்படை மருந்துகள் (க்ஷயளiஉ னசரப) தயாரிப்பை குறைத்து, சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்கி பேக்கிங் மட்டும் செய்து பெயர் வைத்து (க்ஷசயனே சூயஅந) விற்பனை செய்கின்றன. பெரும்பாலான மருந்துகளை (அதாவது அதிகமாக பயன்படுத்தப்படும்) சிறு தொழில் நிறுவனங்களே உற்பத்தி செய்கின்றன. அதுமட்டுமல் லாமல், மக்களின் (சந்தைக்கு) தேவைக்கு வெளிநாட்டு இறக்குமதியையே சார்ந்துள்ள நிலையும், அதிலும் மேற்சொன்ன சிறு தொழில் நிறுவனங்கள் மொத்தமாக அவைகளை வாங்கி பெரிய கம்பெனிகளுக்கு விற்கும் தரகர் வேலையில் ஈடுபடுகின்றன. இதற்கு இறக்குமதிக் கான விதிகள் தளர்த்தப்பட்டதே முக்கிய காரணம். உலகமயம், தாராளமயம் மேலும் எல்லா நிறுவனங் களுக்கும் மருந்துகளை அடிப்படை நிலையிலிருந்து உருவாக்குவது என்ற சட்டமும், நீர்த்துப் போனதால் ஆகும்.

அதோடு பெரிய நிறுவனங்கள் தங்களின் சொந்த உற்பத்தி தொழிற்சாலைகளை மூடுவதும், வரியில்லா பகுதிகளில் (கூயஒ குசநந ஷ்டிநேள) இருக்கும் உற்பத்தி கட்டங்களில் மருந்துகளை சிறு கம்பெனிகளிடமிருந்து வாங்கி லேபிள் மட்டும் போட்டு விற்பனையும் செய்கின்றனர். இன்று, மருந்துகள் எல்லாம் விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டு (ஞசiஉந – னுநஉடிவேசடிட) என்ன விலைக்கு வேண்டுமா னாலும் விற்கலாம். (விலையை அரசு தீர்மானிக்காமல்) நிறுவனங்களே தீர்மானிக்கும் எனும் நிலையை அடைந்துள்ளது. இதனால் புற்றுநோய், நீரழிவு – சிறுநீரக பாதிப்பு, ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நீண்ட நாள் மருந்து உட்கொள்ளும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

தாராளமய நிலைக்குப் பிறகு, காப்புரிமை சட்டங்களில் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பில் (வலுவான காப்புரிமை பெற்று) பெரும் முதலீடு செய்து வைத்திருப்பதால், சமீப காலமாக இந்திய நிறுவனங்கள் எதிரகாலம் பற்றி யோசிக்கத் துவங்கி, கூட்டு விற்பனை என முடிவெடுத்தன. பன்னாட்டு பெரு நிறுவனமான கிளாக்சோ (ழுடயஒடி) இந்திய நிறுவனமான ரான்பாக்சியும் (சுயnயெஒல) இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ரான்பாக்சியை ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான டாய்ச்சி-சான்க்கியோ (னுயiஉhi-ளுயமேலடி) ஒட்டுமொத்தமாக வாங்கியது.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு (சுநளநயசஉh & னுநஎநடடியீஅநவே) பெரும் தொகைகளை இந்திய நிறுவனங்களால் முதலீடு செய்ய முடியாதநிலை. ஆகவே, பன்னாட்டு நிறுவனங்களின் இளைய பங்காளிகளாக மாறி இருக்கும் சந்தையையும், விற்பனையையும் தக்க வைத்துக்கொள்வது எனும் நிலை வந்துள்ளது. சுருங்கச் சொன்னால, விற்பனையில் அவர்களை எதிர்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக சமாதானம் – சமாதானம் என்று சொல்லி, இணைவது.

காணமால் போகும் இந்திய நிறுவனங்கள்

சமீபத்தில் தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டிற்கான துறை இந்திய மருந்துத்துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இரு சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் 1994-1995-இல் ரூ,14,200கோடியாக இருந்த வரவு-செலவு (கூரசn டிஎநச) 2008-09-ஆம் ஆண்டில் ரூ,75,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஒப்பீட்டு அளவில் இதே கணக்கீட்டு ஆண்டுகளில் ஏற்றுமதியும் ரூ.39,538 கோடியாக அதிகரித்துள்ளது.

ஏற்றுமதிக்காக பெரும் சலுகைகள் வழங்கப்பட்டது. ஊக்குவிக்கப்பட்டது. அப்படி செய்ததன் விளைவு 2007-08 ஆண்டை விட கடந்த நிதியாண்டில் உள்நாட்டு கொள்முதல் குறைந்தது. இதன் அர்த்தம் என்னவென்றால், சுமார் 50 கோடி இந்தியர்களுக்கு தேவைக்கேற்ப மருந்து வாங்க இயலவில்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் ஆறுக்கும் மேற்பட்ட பெரும் வர்த்தகத்தில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் மொத்தமாக வாங்கப்பட்டுளளன. இப்படி வாங்கும் (தவறு) விழுங்கும் படலம் கண்டிப்பாக தொடரும். விற்கப்படுவதற்காக பல நிறுவனங்கள் வரிசையில் இருப்பதாக தொடர் செய்திகள் வெளியாகின்றது. இந்திய முதலாளிகள் நல்ல விலைக்கு விற்று விட்டு வேறு தொழிலை மேற்கொள்கின்றனர்.

முன்னரே, குறிப்பிட்டதைப்போல, ஒட்டுமொத்த சந்தையை – விற்பனையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்முயற்சிகள் செய்கின்றன. அரசும் தாராளமாக உதவி செய்கின்றது.(சட்டங்களின் மூலமாக).

எட்டாக்கனியாக மருத்துவம்

உலகில் பல நாடுகளை விட இந்தியாவில் தான் மருத்துவ செலவுகள், மருந்துகள்(விலை) குறைவு எனக்கூறப்பட்டு மருத்துவ சுற்றுலாவுக்கான (ஆநனiஉயட கூடிரசளைஅ) சிறந்த இடம் என சொல்லப்படுகிறது. உண்மைதான்.

அதாவது மற்றைய நாடுகளில் மருத்துவ சிகிச்சைகளுக்கு காப்பீட்டு முறையும், அரசோ அரசு நிறுவனங்களோ செலவுகளை ஏற்றுக் கொள்ளும் நிலை. (மேலும் காப்புரிமை சட்டம் வேறு வடிவில் இருப்பதால் மருந்துகள் விலையும் அதிகம்தான்).

ஆனால் நமது நாட்டில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பல லட்சிய திட்டங்களோடு உருவாக்கப்பட்ட மருந்துத்துறை திசை மாறி சென்று கொண்டிருக்கிறது.

மொத்தமுள்ள நமது மக்கட்தொகையில் சரிபாதி மக்களுக்கு மருத்துவ அடிப்படை வசதிகள் கூட கிடைப்பதில்லை. அரசும் தன் பொறுப்பிலிருந்து நழுவி வருகின்றது. சுகாதாரத்திற்கான திட்ட செலவுகள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றது. மருந்துகள் சரிவர கிடைப்பதில்லை. புது மருத்துவமனைகள் கட்டப்படு வதோ, மக்கட் தொகைக்கேற்ப விரிவாக்கமோ இல்லை. இதனால் வறியவர்கள் கூட தனியாரிடம் செல்ல வேண்டிய அவல நிலை. அங்கோ மருத்துவம் சேவையாக இல்லாமல் வியாபாரமாக்கப்பட்டு பெரும் லாபம் ஈட்டப்படுகின்றது.

அரசு மருத்துவமனைகள் கூட இல்லாத சிறு கிராமங்களில் கூட, பிரம்மாண்டமான தனியார் மருத்துவமனைகள் எழுந்துள்ளன. தனியாரே வேண்டாம் என்பது அல்ல நமது நிலை. அரசு கொண்டு வரும் சில கவர்ச்சி திட்டங்களை அரசு மருத்துவ மனைக்கு அனுமதி அளிக்காமல், தனியார் மருத்துவ மனைகளுக்கு மட்டுமே கொடுத்துள்ளது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மக்களின் அத்தியாவசிய தேவையாக இன்று உள்ள மருத்து வமும், மருந்துகளும் தனியார் மற்றும் பன்னாட்டு பகாசூரர்களின் கைகளில் சிக்கி சீரழிகின்றது. இது மாற்றப்பட வேண்டும். நாட்டைத்தவிர, அனைத்துத் துறைகளும் அன்னியரின் கட்டுப்பாட்டில் இருந்தால் மக்களின் பாடு திண்டாட்டம்தான். மருந்துகளின் விலை ஏறும். தேவையற்ற மருந்துகள் அதிகம் லாபத்திற்கே உற்பத்தியாகும். அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

இந்திய மருந்துத்துறையை பாதுகாக்க, மருத்துவம் மீண்டும் சேவையாக தொடர வேண்டுமெனில், மக்களின் அன்றாடப் பிரச்னைகளோடு சேர்ந்து இது பற்றியும் விவாதிக்கப்பட வேண்டும். தேர்தல் காலங்களில் நமது கோரிக்கைகளை மக்களிடத்தில் விரிவான பிரச்சாரம் செய்திடல் அவசியம்.

 

— என். சிவகுரு

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s