மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சோஷலிசமே எதிர்காலம்! (ஏதென்ஸ் மாநாட்டு முடிவுகள்)


 

கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சி களின் சர்வதேச கூட்டம் டிசம்பர் 9-11, 2011, ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. கூட்டத்தின் மையப்பொருள் கீழ்கண்டவாறு விளக்கப்பட் டுள்ளது:

“ சோஷலிசமே எதிர்காலம்”!

சோவியத் யூனியனில், எதிர்புரட்சி நடை பெற்று 20 ஆண்டுகளில், சர்வதேச அளவில் கம்யூனிஸ்டுகளின் அனுபவம், முதலாளித்துவ நெருக்கடி நிலை, ஏகாதிபத்திய போர்கள், தற் போது நடைபெற்று வரும் மக்களின் எழுச்சிகள், போராட்டங்கள் என்ற சூழலில், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான வர்க்கப் போராட் டங்களை  நடத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை வலுப்படுத்த வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணி திரண்டு, முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து விட்டு, சோஷலிசத்தை நிர் மாணிக்க வேண்டும்.’’

இந்த கூட்டத்தில் 59 நாடுகளிலிருந்து 78 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். சூழ்நிலை காரணமாக, பங்கேற்க இயலாத பல கட்சிகள், எழுத்து மூலமாக, தங்கள் செய்திகளை அனுப்பி யிருந்தன. ஏகாதிபத்தியத்திற்கெதிரான, விடு தலை வேட்கை கொண்ட மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் ஏதென்சில் நடை பெற்றதை வாழ்த்துகிறோம். முதலாளித்துவ ஒடுக்குமுறை மற்றும் சுரண்டுலுக்கெதிராக, உலகெங்கிலும், சமூக உரிமை கோரி உழைக்கும் மக்கள் நடத்தியுள்ள போராட்டங்களை வாழ்த்துகிறோம்.

சர்வதேச அளவில் நீடித்த, தீவிரடைந்துள்ள நெருக்கடி, அதையொட்டி லிஸ்பன் உச்சி மாநாட்டில் புதிய ‘நேட்டோ’ தந்திரம் தொடர் பான முடிவுகளால் ஏகாதிபத்திய தாக்குதல் அதிகரித்துள்ள சூழலில் இந்த கூட்டம் நடை பெறுகிறது. 2008ம் ஆண்டு பிரேசிலில் (சா பாலோ), 2009 இந்தியாவில் (புதுதில்லி), மற்றும் 2010ல் தென்னாப்பிரிக்காவில்    (ஷ்வானே) நடை பெற்ற 10வது, 11வது மற்றும் 12வது சர்வதேச கூட்டங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின் கூற்றுகளையே தற்போதைய சூழல் வெளிப் படுத்துகிறது.

கோடிக்கணக்கான மக்களுக்கு, இந்த நெருக் கடி முதலாளித்துவ அமைப்பினால் ஏற்படும் நெருக்கடி என்பது தெளிவாகியுள்ளது. இந்த நெருக்கடி, அமைப்பிற்குள் ஏற்படும் தவறுகளி னால் ஏற்படுவதல்ல. மாறாக, இந்த தவறான அமைப்பே, தொடர்ந்து, அவ்வப்போது நெருக்கடிகளை உருவாக்குகிறது. உற்பத்தி சமூக மயமாகியும், அனுபோகம் தனியார் முதலாளி கையிலிருப்பதற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையேயான முரண்பாடு கூர்மையடைந் துள்ளதன் வெளிப்பாடே இந்த நெருக்கடியாகும். மாறாக நிர்வாக கொள்கையின் துறைபாடுகளி னாலோ அல்லது தனிப்பட்ட வங்கி அதிகாரி கள்/ முதலாளிகளின் பேராசையினாலோ   அல்லது ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் இல்லாததனாலோ நெருக்கடி ஏற்படுகிறது என்பது ஏற்புடையதல்ல. இந்த நெருக்கடி, முதலாளித்துவத்தின் வரலாற்று எல்லைகளை தெளிவுபடுத்துகிறது. ஏகபோகத்திற்கெதிரான, முதலாளித்துவத்திற்கெதிரான போராட்டங் களை வலுப்படுத்துவதும், புரட்சியின் மூலம் முதலாளித்துவத்தை தூக்கி எறிவதும் அவசியம் என்பதையும் இந்த நெருக்கடி எடுத்துக்காட்டு கிறது.

வைத்தியமானதே நோயானது

அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள் என முதலாளித்துவ பொருளா தாரத்தை பின்பற்றும் நாடுகள், நெருக்கடியை சமாளிக்க பல நிர்வாக நடவடிக்கைகளை மேற் கொள்வதை காண முடிகிறது. ஒருபுறம், கட்டுப் படுத்தும் அரசியல் நிலைப்பாட்டினால் பொரு ளாதார மந்தம் நீடித்து, தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம், ஏகபோக நிறுவனங்கள், நிதி மூலதனம், வங்கிகள் ஆகியவற்றிற்கு அரசு வாரி வழங்கி ஆதரவு அளிக்கும் அரசியல் நிலைப்பாட்டினால் விலைவாசி கடுமையாக உயர்வதுடன், பொதுக் கடனும் அதிகரித்துக்கொண்டே போகின்றது. கார்பரேட் நிறுவனங்கள் திவாலாவதை முத லாளித்துவம் சுயாதிபத்திய திவாலாக மாற்றி யுள்ளது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ள முதலாளித்துவத்திடம் ஏதுமில்லை. நெருக்கடி யால், உற்பத்தி சக்திகள் பேரழிவை சந்தித்துள் ளன. தொழிலாளிகள் வேலையிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர். ஆலைகள் மூடப்பட் டுள்ளன. உழைக்கும் மக்கள் மீதும், தொழிற்சங்க உரிமைகள் மீதும் ஒட்டுமொத்தமான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. கூலி, ஓய்வு ஊதியர், சமூக பாதுகாப்பு ஆகியவை பாதிப்புக்குள்ளாகி, மக்களின் வருவாய் வெகுவாக குறைந்து, வேலை யின்மையும் வறுமையும் மிகவும் அதிகரித் துள்ளன.

தாக்குதல் வலுவடைகிறது

மக்களுக்கெதிரான தாக்குதல் வலுவடைந் துள்ளது. சில பகுதிகளில், இது மிகவும் கூடுத லாக உள்ளது. ஏகபோக மூலதன குவிப்பும், மைய மாதலும் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தில் பிற்போக்கு சக்திகளை தீவிர மடைய செய்துள்ளன. மூலதன மறு கட்ட மைப்பும் தனியார் மயமாதலும் ஊக்குவிக்கப் படுகிறது. இதன் நோக்கம் போட்டியை அதி கரித்து, மூலதனம் வழியாக கிட்டும் லாபத்தை அதிகரிப்பதாகும். மலிவான உழைப்பு வலியுறுத் தப்பட்டு, சமூக மற்றும் தொழிற்சங்க உரிமை களை பொறுத்தவரை பல, பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதை  காணமுடிகிறது.

நெருக்கடி தீவிரமாதல் உலக நாடுகள் இணைப்பு, மிகவும்  மெதுவான, பலகீனமான மீட்சி நடவடிக்கைகளால் நெருக்கடியை பூர்ஷ்வா சக்திகள் நிர்வகிப்பதில் பல இடர்களை எதிர்கொள்கின்றன. இதனால் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் போட்டிகள் கூர்மையடைந்துள்ளதுடன், ஏகாதி பத்திய போர்கள் என்ற அபாயம் வலுப் பெற்றுள்ளது.

பல நாடுகளிலும், ஜனநாயக சக்திகள் மீதும் சுயாதிபத்தியத்தின் மீதும் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. அரசியல் அமைப்புகள் மேலும் பிற்போக்காக ஆகியுள்ளன. கம்யூனிச எதிர்ப்பு வலு ஊட்டப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் கட்சிகளுக்கெதிரான நடவடிக்கை கள், தொழிற்சங்கத்திற்கு எதிர்ப்பு, அரசியல், ஜனநாயக சுதந்திரத்திற்கு எதிரான பொதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் அதிருப்தியை பயன்படுத்தி, அரசியல் அமைப்புகளில் மாற்றங்களை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை ஆளும் வர்க்கங்கள் மேற் கொண்டுள்ளன. ஏகாதிபத்தியத்திற்கு ஆதர வான தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களை பயன்படுத்துதல், அரசியல் அல்லாத, பிற்போக்கு அம்சங்களைக் கொண்ட இயக்கங்களை மக்கள் அதிருப்தியை வடிகாலாக பயன்படுத்த தூண்டுதல் – என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

மக்களின் எழுச்சி

துனிசியா, எகிப்து போன்ற மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க நாடுகளில் மக்கள் விரோத அரசுகளை எதிர்த்து, ஜனநாயக, சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான விரி வடைந்து மக்கள் எழுச்சிப் போராட்டங்களை வாழ்த்துகிறோம். தற்போதைய சூழலில் முரண் பாடுகள் நிலவிய போதும், கம்யூனிச இயக்கம், இந்த அனுபவங்களை படித்து, பயன்பெற வேண்டும். அதே நேரத்தில், லிபிய மக்கள் மீது நேட்டோவும், ஐரோப்பியக் குழுமமும் நடத்தி யுள்ள தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். அதே போல, சிரியா, இரான் ஆகிய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் வன்மை யாக கண்டிக்கிறோம். ஏதாவது காரணத்தைக் கூறி இரானில் அன்னிய தலையீடு செய்வது, அந்நாட்டு உழைப்பாளர்களின் நலன்கள் மீதும், அவர்கள் ஜனநாயக விடுதலை மற்றும் சமூக உரிமைகளுக்காக நடத்தும் போராட்டங்களின் மீதும் நடத்தப்படும் தாக்குதல் என்றே கருது கிறோம்.

கம்யூனிஸ்ட்டுகளின் கடமை

இத்தகைய வளர்ச்சிப் போக்குகள், கம்யூ னிஸ்ட்   மற்றும் தொழிலாளர் கட்சிகள் தங்க ளுடைய வரலாற்று பங்கினை செலுத்த வேண் டியதன்அவசியத்தை உணர்த்துகின்றன. மேலும், தங்கள் உரிமகள், அபிலாஷைகளுக்கான தொழி லாளர்கள் மற்றும் மக்கள் நடத்தும் போராட் டங்களை வலுப்படுத்துதல், அமைப்பில் உள்ள முரண்பாடுகளை பயன்படுத்துதல், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளை பயன்படுத்தி, பொருளாதார அதிகாரத்தை கைப்பற்றி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் செய்லபட வேண்டியது அவசியமாகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் கட்சிகளும், பிரதான பங்கு வகிக்கத் தவறினால் தொழிலாளி வர்க்கமும், மக்களும் குழப்பத்திற்கு ஆட்படுவார்கள். ஏக போகங்களையும், நிதி மூலதனத்தையும் ஏகாதி பத்தியத்தையும் தில்லுமுல்லுகளை மக்கள் புரிந்து கொள்ள இயலாமல் போய்விடும். எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் கட்சிகளும் முக்கிய பங்காற்ற வேண்டும்.

சர்வதேச அளவில், பல சக்திகளின் அணிச் சேர்க்கையில் மாற்றம் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் நிலைபாட்டில் சிறிது பலவீனம் ஏற்பட்டு வருகிறது. அத்துடன், வளர்ந்த முத லாளித்துவ நாடுகளில் உற்பத்தியில் தேக்கம் ஏற் பட்டுள்ளது. புதிய உலக பொருளாதார சக்திகள் குறிப்பக, சீனா முன்னுக்கு வந்து கொண்டிருக் கின்றன. ஏகாதிபத்திய மையங்களுக்கும், புதிதாக முன்னுக்கு வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படும் பொருளாதார அமைப்புகளுக்கும் இடையே உள்ள அதிகரித்து வரும் முரண்பாடுகள் வலுப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியம் முழுவீச்சுடன் தமது தாக்கு தலை தொடுத்து வருகிறது. ஏற்கனவே உலகின் பல பகுதிகளிலும் பதட்டமும், போரும் நிலவுகின்றன. இதுமேலும் கூடியுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில், குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கெதிராக இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது. அதே சமயம், ஐரோப் பாவில் புதிய நாஜிக்கள் மற்றும் தேசீய வெறி சக்திகள் வளர்ந்து வருவதையும், லத்தீன் அமெ ரிக்காவில், முற்போக்கு அரசியல் சக்திகளுக் கெதிரான, மக்கள் இயக்கங்களுக்கெதிரான, மக்கள் இயக்கங்களுக்கெதிரான தாக்குதல்கள், பலவகை தலையீடுகள் தொடர்ந்து நடை பெறுவதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. ராணுவ மயமாதல் மீண்டும் வலியுறுத்தப்படு கிறது. மண்டல அளவில் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த பின்னணியில், ஏகாதி பத்திய எதிர்ப்பு முன்னணியை விரிவுபடுத்தி, வலுவாக்கி, ஏகாதிபத்திய போர்களுக்கான காரணங்களை முறியடிக்க, அமைதிக்கான போராட்டங்களை நடத்த வேண்டியது அடிப் படையான விஷயமாகும்.

பொருளாதார வளர்ச்சிக்கு

இரண்டு பாதைகள் உண்டு.

* முதலாளித்துவ பாதை – மக்களை சுரண்டும், ஏகாதிபத்திய போர்களை உருவாக்கும் பாதை. தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் பாதை.

* தொழிலாளர்கள் மற்றும் மக்களின் நலன் களை காப்பதற்கான, ஏராளமான வாய்ப்பு களைக் கொண்ட விடுதலைக்கு வழிகோலும் பாதை. சமூக நீதி, மக்களுக்கு சுயாதிபத்தியம், அமைதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை அளிக்கும் பாதை. தொழிலாளர்கள் / மக்கள் போராட்டங்களுக்கான, சோஷலிசம், கம்யூனிசத்திற்கான பாதை, வரலாற்று ரீதியிலும் தேவைப்படும் பாதையாகும்.

ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுக்கும், வர்க்க உணர்வு கொண்ட தொழிற்சங்க இயக்கத்திற்கும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். உலகம் முழுவதும், போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. மத்திய கிழக்கு, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன், அமெரிக்க நாடுகளில், மக்களின் விடாப்பிடியான எதிர்ப்பை எதிர்கொள்ள ஏகாதிபத்தியம் அடக்குமுறையை ஏவி விடுகிறது. இதுவரை கிட்டியுள்ள அனுப வங்கள், குறிப்பாக, லத்தீன் அமெரிக்க அனுபவங் களின் எதிர்ப்பு இயக்கங்கள், வர்க்க போராட் டங்களுக்கான வாய்ப்புகளை வெளிப்படுத்தி யுள்ளன. இவற்றின் மூலம், ஏகாதிபத்தியத்தை தாக்க வலுவான தளம் அமைத்து மக்கள் முனனோக்கி அடியெடுத்து வைப்பதன் மூலம், ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தை தூக்கி எறிவது என்ற நோக்கம் நிறைவேறும்.

தொழிலாளர்கள், மக்கள் போராட்டங்களை வாழ்த்துவதுடன், அவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டுமென குறிப்பிட விரும்புகிறோம்.  வர்க்க போராட்டத்தை தீவிரமாக்குதல், தத்துவார்த்த அரசியல் மக்கள் போராட்டங்களை தீவிர மாக்குதல் ஆகியவை அவசியமாகிறது. அவற்றின் மூலம் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கம் கொண்ட போராட்டங் களை நடத்தவும் இயலும். தவிர, ஏகபோகத்திற் கெதிராக, ஏகாதிபத்தியத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டி மறுதாக்குதல் நடத்த வேண்டும். மனிதனை, மனிதன் சுரண்டும் முதலாளித்துவ அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இன்று, ஏகபோகத்திற்கெதிரான, ஏகாதி பத்தியத்திற்கெதிரான அணிகளை கட்டும் தருணம் ஏற்பட்டுள்ளது. இந்த அணிச் சேர்க்கை ஏகாதிபத்தியத்தின் பன்முக தாக்குதலை முறி யடிக்கவும், அதிகாரத்திற்கெதிரான போராட் டத்தை நடத்தி, புரட்சிகரமான மாற்றங்களை கொண்டுவர இயலும். உழைக்கும் விவசாயிகள், நகர்புற மத்தியதர வர்க்கம், மகளிர், இளைஞர் இயக்கங்களுடன் வலுவான முறையில் அணியை கட்டுவதற்கு (வர்க்க ஒற்றுமையுன், தொழிலாளர் இயக்க ஸ்தாபனமும், வர்க்க பார்வையும்) தேவையானதாகும்.

இந்த போராட்டத்தில், மண்டல, தேசிய, சர்வதேச அளவில் கம்யூனிஸ்டுகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சிகள் தங்களுக்கிடையே யான கூட்டுறவை வலுப்படுத்துவது இன்றியமை யாததாகும். இவற்றின் கூட்டு செயல்பாட்டுடன், கம்யூனிச இளைஞர் அமைப்புகள், கம்யூனிஸ்டு கள் முக்கிய பங்கு வகிக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை விரிவாக, வலுவாக கொண்டு செல்லவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை வலுப்பெறச் செய்யவும் முடியும்.

விஞ்ஞான சோஷலிசத்தை பாதுகாக்கவும், வளர்க்கவும், தற்போது நிலவும் கம்யூனிச எதிர்ப்பை எதிர் கொள்ளவும், விஞ்ஞானத்திற்கு புறம்பான கோட்பாடுகளை சந்திக்கவும், வர்க்க போராட்டத்தை நிராகரிக்கும் சந்தர்ப்பவாத போக்குகளை எதிர் கொள்ளவும், ஏகாதிபத்தியத் திற்கும், மூலதனத்திற்கும் ஆதரவான தந்திரங் களை கடைபிடித்து மக்கள் விரோத ஏதாதி பத்திய ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக சமூக, ஜனநாயக சக்திகளின் பங்கினை செலுத்தவும், கம்யூனிச இயக்கம் தத்துவார்த்த போராட் டத்தை நடத்துவது மிகவும் முக்கியமானதாகும். கம்யூனிச இயக்கம் தத்துவார்த்த ரீதியாக எதிர் தாக்குதல் தருவதற்கு சோஷலிச மாற்றுக்கான,  சமூக. தேசிய, வர்க்க விடுதலைக்கான போராட் டத்தின் தன்மை, கடமைகள் பற்றிய புரிதல் தேவையாகும்.

முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து, சோஷ லிசத்தை நிர்மாணிப்பது மக்களின் தேவை யாகும். முதலாளித்துவ நெருக்கடியும், அதன் விளைவுகளும், சோஷலிச நிர்மாணம் தொடர் பான சர்வதேச அனுபவங்களும், சோஷலிச மேம்பட்ட அமைப்பு என வெளிப்படுத்து கின்றன. சோஷலிசத்திற்காக, சோஷலிசத்தை நிர்மாணிப்பதற்காக போராடுகின்றவர்களுக்கு எங்களுடைய ஆதரவை அளிக்கிறோம்.

போர்கள், வேலையின்மை, பட்டினி, துன்பம், கல்லாமை, கோடிக்கணக்கான மக்களின் நிச்சய மற்ற வாழ்வு, சுற்றுச்சூழல் அழிவு ஆகியவற்றை ஒழிக்க வேண்டுமெனில், அதற்கான சூழலை சோஷலிசம் மட்டுமே உருவாக்க இயலும். மக்களின் சமகால தேலைகளை பூர்த்தி செய்யும் வளர்ச்சியை சோஷலிச அமைப்பு மட்டுமே உருவாக்கித் தரும்.

உழைக்கும் மக்கள், விவசாயிகள், நகர்ப்புற, கிராமப்புற தொழிலாளர்கள், பெண்கள், இளை ஞர்களே! முதலாளித்துவ காட்டுமிராண்டித் தனத்தை முடிவுக்கு கொண்டுவரும் போராட் டத்தில் இணையும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். நம்பிக்கை உள்ளது. வாய்ப்பு உள்ளது. எதிர்காலம் சோஷலிசத்திற்கே உரித்தானது.

தமிழாக்கம்: ஆர். சந்திரா.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: