தடுப்பூசிகள் என்று சொல்லப்படும் வகை மருந்துகள் அடிப்படை சுகாதார பாதுகாப் பிற்கும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார மேம் பாட்டிலும் தேவையிலும் முக்கிய பங்கு வகிக் கிறது. சர்வதேச அளவில் வழிகாட்டும் உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மையமும் நோய் தடுப்பிற்கு பல்வேறு வகைகளை சுட்டிக்காட்டினாலும், தடுப்பூசிகள் மூலம் குழந்தை பருவத்திலிருந்து செய்வது என்பது அடிப்படையானது. ஆனா லும், ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கேற்ப தன்மை கள் மாறுபடும். 700 கோடியைத் தாண்டும் உலக மக்கள் தொகையில் நமது நாடு இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் தடுப்பூசி சந்தையின் மதிப்பு சுமார் 260 மில்லியன் டாலராகும். இக்கட்டுரையின் மூலக் கருவே. இந்த சந்தை மதிப்பிற்கு பின்னால் உலகமய பன்னாட்டு நிறுவனமய, உள்நாட்டு ஊழல் மய சூழலில் எழும் பிரச்சனைகளே. திட்டமிட்ட பொருளா தாரமும், அரசு முதலீடும் இருந்த காலத்தில் இந்தியா இந்த தடுப்பூசி உற்பத்தியில் கொண் டிருந்த பெருமைகளை – செய்த சாதனைகளை வேகமாக இழந்து வருகின்றது. பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம், போட்டி இவை களால் மருந்தின் தரம், திறன் இவைகள் கேள்விக் குறியாகி நிற்கிறது.
தடுப்பூசிகள் – உற்பத்தி – துவக்க காலம்
முதல் இன்றுவரை
இந்தியாவில் தடுப்பூசிகள் என்பது சென்ற நூற்றாண்டிலேயே (19வது நூற்றாண்டு) பயன் படுத்தப்பட்டுள்ளது என்பதன் பின்னணி சுவாரஸ்யமானது. இந்தியாவில் இருந்த ஆங்கிலேய வீரர்கள் பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். குறிப்பாக கொள்ளை நோய்களாக பிளேக் மற்றும் வெப்ப மிகுதியான நாடுகளில் உள்ள நோய்கள் தாக்கின. இதைக் கண்டு பயந்த ஆங்கில அரசு, இந்த நோய் தடுப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இதன் தொடர்ச்சியாக, 1890ல் கிட்டத்தட்ட 15 தடுப்பூசி நிறுவனங்களை நிறுவிட முயற்சி எடுத்தது. அப்படி செய்யப்பட்ட முயற்சியில் மும்பையில் ஹாப்கெய்ன் நிறுவனத்தைத் துவக்கியது. மும்பையில் இந்த நிலையம் துவக்கப்பட்ட சமயத்திலேயே, கொல்கத்தாவில் காலராவுக் கான தடுப்பூசி உருவாக்கப்பட்டது.
இதற்கு பிறகு இந்திய நிறுவனங்கள் டெட் டானஸ்(கூகூ), டிப்தீரியா (னுகூ)மற்றும் டிப்த்தீரியா-பருடச்சீஸ், டெட்டானஸ் (னுஞகூ) ஆகிய மூன்று நோய்களுக்கான ஒரு தடுப்பூசியை உருவாக்கியது. இம்மருந்துகளை சந்தையில் வர்த்தகம் செய் வதற்கு ஆங்கில காலனி அரசு பெரும் தடைகளை உருவாக்கியது. அதனால் இந்நிறுவனங்களின் தயாரிப்புகள் விற்பனையில் மற்றவர்களோடு ஈடு கொடுக்க முடியவில்லை. ஆனாலும் ஆங்கில ஆட்சியாளர்கள் விதித்த தடைகளை மீறி இந்திய விஞ்ஞானிகளின் கடும் முயற்சியால், உலகின் எந்த நாட்டுக்கும் சளைக்காமல், அனைத்து தடுப்பூசி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு, வேகமாக விற்பனைக்கு வந்தன. இப்படி மருந்து கள் வந்தபோதிலும், போதிய பொருளாதார வசதியில்லாததால் மற்றைய பன்னாட்டு நிறு வனங்கள் இந்திய நிறுவனங்களின் விற்பனையை மட்டுப்படுத்தின. அதன் தொடர்ச்சியாக நாடு 1947ல் விடுதலை யடைந்தது. சுதந்திர இந்தியா விற்கான தடுப்பூசி கொள்கை உருவாக்கப் பட்டது.
அதன் அடிப்படையில் 1948ல் தடுப்பூசி ஆய்வகம் சென்னையில் நிறுவப்பட்டது. ஆராய்ச்சி நிறுவனங்கள் திட்ட முடிவுகளுக் கேற்ப அரசுடைமையாக்கப்பட்டது. 1950 முதல் 1970 வரை வெளிநாட்டு நிதி உதவியோடு, பல்வேறு நிறுவனங்கள் துவக்கப்பட்டன. ஆனாலும் 2000ல்அனைவருக்கும் சுகாதாரம் எனும் உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு (ழநயடவா குடிச ஹடட லெ 2000 ஹனு) படி தடுப்பூசி கொள்கை கள் (ஏயஉஉiயேவiடிn ஞடிடைஉல) அமல்படுத்திட – குழந்தை கள் இறப்பு விகிதத்தை குறைத்திட முப்பது ஆண்டுகள் தேவைப்பட்டது. மேற்குறிப்பிடப் பட்டுள்ள முடிவின்படி 1978ல் கக்குவான் இருமல், இரண ஜன்னி, காசநோய், டைபாய்டு ஆகிய ஆறு நோய்களுக்கும், 1985ல் தட்டம்மை தடுப்பூசி சேர்க்கப்பட்டு, உலகளாவிய தடுப்பூசி திட்டம் (ருஎநசளயட ஐஅஅரளையவடி ஞசடிபசயஅஅந) முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் மாறிய நிலைகள்
இந்திய நாட்டின் மருந்துத்துறை வளர்ச்சியில், தடுப்பூசி நிறுவனங்களின் பங்கு மகத்தானது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை இறப்பு எனும் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித் திருந்த நமது நாட்டை காப்பாற்றியது சுயேட்சை யான, சுயசார்பான மருந்து கொள்கை கள். இப்படியான மருந்து கொள்கைகள் உரு வாக்கப் பட்டதற்கு நம் நாட்டு விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும காரண மாகும்
மூடுவிழா
இந்தியாவில் அமைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி மகத்தானது. உதாரணத்திற்கு 1967-1977 ஆண்டுகளில் கடும் முயற்சியால் போலியோ சொட்டு மருந்து குன்னூரில் உள்ள பாஸ்டர் இந்தியா நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால், பின்னாட்களில் இந்திய அரசு தயாரிப்பை பல்வேறு காரணங்களை சொல்லி முடக்கி வைத்தது. அதற்கு பின்னர் 1987ல் மும்பையில் உள்ள ஹாப்கின்ஸ் நிறுவனம் போலியோ சொட்டு மருந்து தயாரித்தது. அதையும் மத்திய அரசு பின்னர் உற்பத்தியை நிறுத்தச் சொன்னது.
அதற்கு பிறகு 1988ல் மத்திய அரசு ஒரு புதிய நிறுவனத்தைத் துவக்கியது. அந்நிறுவனமும் தனது முழு உற்பத்தியை செய்ய முடியாமலும், தேவைக்கேற்ப கொடுக்க முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தது. உற்பத்தியும் நிறுத்தப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் தேவைகளுக்கேற்ப நவீனமயம் செய்யப்படாததால், நஷ்டம் என்று சொல்லப்பட்டு, பாரத் இம்யூனோலாஜிக்கல்ஸ் நிறுவனம் மூடப்பட் டது. ஆனாலும் தனி யார் நிறுவனங்களுக்கு கிடைத்த ஆர்டர்கள் குறையாமல் அதிக ரித்துக்கொண்டே இருந்தது.
மேற்குவங்க மாநிலத் தில் செயல்பட்டு வந்த பெங்கால் இம்யூனிட்டி (க்ஷநபேயட ஐஅஅரவைல) நிறு வனம் அரசின் தவறான கொள்கையாலும், தனி யார் மயத்தை ஆதரிக்க வேண்டும் எனும் கொள்கை முடிவாலும் திட்டமிட்டு மூடப்பட் டது.
பின்னர் 1989, குர் கானில் துவக்கப்பட்ட ஐஏஊடீடு நிறுவனம் (பிரெஞ்சு தொழில் நுட்ப உதவி) தட்டம்மை தடுப்பூசி தயாரிப்புக்கு வேலைகளை செய்தன. இதிலும் பிரெஞ்சு அரசுடன் போடப் பட்ட ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற முடியாமல் போனதால், போடப் பட்ட மூல தனம் மொத்தமும் விரயமாகி, மூடப் பட்டது. நமது நாட்டில் இருந்த தட்டம்மை தடுப்பு மருந்து தேவையை தனியார் நிறுவ னங்கள் தங்கள் லாப வேட்டைக்கு அற்புதமாக பயன்படுத்திக் கொண்டனர்.
பொதுத்துறையும் – தனியார் துறையும்
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி உலக தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் தாராளமாக கிடைப்பதில்லை. ஒரு தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கும். அது யெற்கை யான தடுப்பாடுதான். இந்த தட்டுப்பாடுகள் 1990களில்தான் துவங்கியது. இந்த ஆண்டு களில்தான் உலகமெங்கிலும் தனியார்மயம் வேகமாக பரவத் துவங்கியது. இந்தியாவின் அந்த நாசகர திட்டம் துவங்கிய காலம். 1998 முதல் 2001 வரை உட்பட்ட காலத்திற்குள், மக்களின் அடிப்படை தேவைகளுக்காக கொடுக்கப்படும் பாரம்பரியம மிக்க தடுப்பூசிகளின் உற்பத்தியை குறைத்துக்கொண்டு அதிக லாபம் தரக்கூடிய தடுப்பூசிகள் சந்தைக்குள் வரத் துவங்கியது.
இந்தியாவில் இருந்து 15க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி திட்ட மிட்டு முடமாக்கப்பட்டது. மத்திய அரசின் தீவிர தனியார் மயக் கொள்கைகளை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள பன்னாட்டு – இந்திய நாட்டு தனியார் நிறுவனங்கள் வெவ்வேறு விளம்பர யுத்திகளையும், கொல்லைப்புற அரசியல் சித்து வேலைகளையும் செய்யத் துவங்கினார்கள். விளைவு இந்திய மக்கள் சக்கை யாக பிழியப்பட்டார்கள். இந்திய மக்கள் மட்டு மல்ல, உலக மக்களும் அடிப்படை தடுப்பூசிகள் கிடைக்காமல் அவதியுற்றனர். காரணம் இந்திய உற்பத்தியாளர்களில் பெரும்பான்மையினர் (கிட்டத்தட்ட 9 நிறுவனங்கள்) உலகத் தேவைக் காக ருசூஐஊநுகு மூலம் கொடுத்து வந்தனர். இதில் 8 பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும்.
இது ஒரு புறம் நடக்க, நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதைப் போல, லாபகரமான தடுப்பூசிகளை இந்திய நாட்டு அட்டவணையில் (றுடி ஐஅஅரளையவடி ளுஉநனரடந) சேர்த்திட திட்டமிட சதி வேலைகள் செய்யப்பட்டது. மேற்கத்திய வளர்ந்த நாடுகளில் அட்டவணை திருத்தியமைக்கப்பட்டதைப் போல நமது நாட்டிலும் மாற்ற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது.
பொருளாதார தாராளமயத்தின் விளைவாக, பெரும் லாப சந்தை தங்களுக்கு இருக்கின்றது என்பதை புரிந்துகொண்ட பன்னாட்டு மற்றும் தனியார் நிறுவனங்கள் தேசிய தடுப்பூசி திட்டத்தையே தமதாக்கிக்கொள்ள பகிரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் விளைவாக சத்தம் இல்லாமல் பெரும் மோசடிகள் நடைபெற்றது.
மோசடிகளின் பட்டியல்
லாபகரமான தடுப்பூசிகளை தயார் செய்து விற்காமல் இருக்க முடியுமா? புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமல்லவா? மஞ்சள் காமாலை (ழநயீயவவைளை-க்ஷ) -க்கு என தடுப்பூசி வந்தது.
ஏராளமான விளம்பரங்கள் பயத்தை உண் டாக்கும் தகவல்கள் – பொய்யான ஆராய்ச்சி முடிவுகள் -இட்டுக்கட்டப்பட்ட விவரங்கள் என அனைத்தும் சேர்த்து முதலில் இந்திய மருத் துவர்களை கவிழ்த்தனர். மூளைச் சலவை செய் தனர்.
இந்தியா முழுவதும் தடுப்பூசி குறைந்த விலை யில் கிடைக்கச் செய்ய (விற்பனைத் திட்டம்) பெரும் முகாம்கள் நடத்தப்பட்டது. மக்களிடம் உருவாக்கப்பட்ட அச்சம் லாப அறுவடை ஈன்றது. மத்திய அரசு இதைப்பற்றி எந்த அக் கறையும் – கவலையும் கொள்ளாமல், மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்களே என எண் ணாமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பளம் விரித்தது.
இப்படி ஆறு ஆண்டு காலம் செய்ததின் விளைவு – அட்டவணை திருத்தியமைக்கப்பட்டு, மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயமாக்கப் பட்டது.
இதற்கு பின்னர் டைபாய்டு தடுப்பூசி. இந்த தடுப்பூசி போட்ட பிறகும் கூட பல இடங்களில் / குழந்தைகளுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தது. ஒன்று இந்தியாவில் உள்ள சுற்றுப்புறச் சுகாதார கேடுகள், சுத்தமான தண்ணீர். முறையாக பராமரிக்கப்படாத கழிவறைகள் என இந்தப் பட்டியல் நீளும். இரண்டு இந்தியத் தன்மை களுக்கேற்ப தடுப்பூசி தயாரிக்கப்படவில்லை. ஆனாலும் இன்று அட்டவணையில் உள்ளது.
இதுபோல், இன்று வெவ்வேறு நோய்களுக்கு (மூளைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை (ழநயீயவவைளை-உ) உள்ள தடுப்பூசிகள் கட்டாய அட்டவணைக்குள் இல்லாவிட்டாலும், போட்டுக்கொண்டால் நல்லது – வேறு என்ன சொல்வது என்று மருத் துவர்கள் சொல்லும்போது தவிக்கும் பெற் றோர்கள் பலர் விளம்பர யுத்திக்கு ஆட்கொள் ளப்பட்டு, சுரண்டப்படுகின்றனர்.
யாரும் இல்லாத வீட்டில் கொள்ளையர்கள் நுழைந்ததுபோல, பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் – இது இந்திய நிறுவனங்களும் சந்தையை ஆக்கிரமித்து தங்கள் இஷ்டம்போல் ஆட்டிப் படைக்கின்றனர்.
லாப வேட்டைக்குத் துணை நிற்கும் அரசுகள்
மத்தியில் ஆண்ட காங்கிரஸ் – பிஜேபி அரசுகள் திட்டமிட்டு தடுப்பூசி உற்பத்தி – ஆராய்ச்சி – வளர்ச்சி என்று அனைத்து துறைகளையும் நிர்மூலமாக்கியது. ராஜீவ்காந்தி துவங்கி இன்று மன்மோகன் சிங் வரை நாட்டின் சுகாதாரத் துறை பற்றி கிஞ்சிற்றும் கவலைப் பட்டதேயில்லை.
காங்கிரஸ் அரசுகள் நிறுவனங்களை மூடியது. பிஜேபி அரசோ அரசுத்துறையை விற்பதற்கு தனி அமைச்சர் போட்டு, பல வேலைகளை கச்சிதமாக செய்தது. இரண்டு அரசுகளும் நாடாளுமன்றம் என்பதற்கெல்லாம சிறு மதிப்பு கூட கொடுக்காமல், தானடித்த மூப்பாக சட்டங்களை மாற்றியமைத்து தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனஙஅகளுக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டிக்கொண்டன.
இப்போது கூட இந்தியாவில் பெண்களின் கர்ப்பப்பையின் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் எனும் புரளி (வியாபார யுத்தி) கிளப்பி விடப்பட்டு, அதற்கான விளம்பரங்கள் வரு கின்றது.
இதற்கென ஏதுமறியா படிப்பிறிவில்லாத பெண்களை பன்னாட்டு நிறுவனங்கள் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதை பாராளுமன்றத்தில் கண்டனக் குரலாக மார்க் சிஸ்ட் கட்சி உறுப்பினர் பிருந்தா காரத் எழுப்பியபோது மத்திய அமைச்சரவை வாய் மூடிக் கொண்டிருந்தது.
தொய்ந்து இருந்த மத்திய அரசுகள் செய்து வந்த மக்கள் மற்றும் – தேச விரோத கொள்கை களைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே பாராளுமன்றத்திலும் – மக்கள் மன்றத்திலும் குரல் கொடுத்தது. மக்களிடம் பொதுத்துறை நிறுவனங்களின் அதிலும் குறிப்பாக தடுப்பூசி தயாரித்த ஆலைகளை திட்டமிட்டு மூடியதை அம்பலப்படுத்தியது.
இருகும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடி
சுகாதார மேம்பாட்டில் மிக முக்கியமாந பங்கு வகிக்கும் தடுப்பூசிகள் தயாரிப்பு மற்றஉம் வர்த்தகம், பயன்பாட்டிற்கு பின்னால் பெரும் அரசியல் சதி வலைப்பின்னல் உள்ளது. தேசத் தின் எதிர்காலம் உருவாகும் சந்ததிகளின் கையில் தான் உள்ளது. அந்த பிஞ்சுக்களின் உயிரே இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கியுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாக மத்திய அரசு திட்டமிட்டே இந்த கொடுஞ்செயலை செய் துள்ளது. அரசு நிறுவனங்களை முடக்கிட கீழ்த் தரமான அதிகாரிகளை நியமிப்பது, தனியார் கம்பெனிகளுக்கு மறைமுகமாக உதவி செய்திட உள்ள வேலைகளை செதவையெல்லா பத்திரிகை களின் மூலம் இந்தியாவிற்கே வெளிச்சமானது.
இன்று உலகம் முழுவதும் பல்வேறு நோய் களுக்கான தடுப்பூசிகள் தயாரிப்பிற்கு ஆராய்ச்சி கள் நடைபெறுகின்றது. அதிலும் குறிப்பிடத் தக்க, முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளது.
மற்றொரு புறத்தில், தனித்தனியாக தடுப்பூசி கொடுத்திடாமல் எல்லாவற்றிற்கும் ஒரே ஊசியில் கொடுக்கும் புதிய தயாரிப்புகள் சந்தைக்கு வந்துள்ளது. முன்பே போல் அல் லாமல் மருத்துவர்களே இன்று தடுப்பூசிகளை தருகின்றனர். இதில் பெரும் மறைமுக லாப வேட்டை இருக்கின்றது.
வர்த்தகப் போட்டி இல்லாத நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாப வேட்டைக்கு மக்களை இரையாக்குகின்றனர். ஏற்கெனவே இக்கட்டுரைகள் முற்பகுதியில் சொல்லியதுபோல், தங்களுக்கு ஏதுவாக சந்தையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கிட்டத் தட்ட கொண்டுவந்துவிட்டன. உதாரணமாக சமீபகாலத்தில் திடீரென்று பறவைக் காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் அபாயங்கள் பற்றி பெரும் பீதி கிளப்பப்பட்டது. அதற்கு பின்னணி யில் பன்னாட்டு நிறுவனத்தின் பெரிய விளம்பர சூழ்ச்சி இருந்தது. தங்களிடம் தேங்கிப்போய் இருப்பில் (ளுவடிஉம) கூடுதலாக இருந்த தங்கள் மருந்தை விற்பதற்காக இந்த விளம்பர யுத்தியை பயன்படுத்தியதாக பல தகவல்கள் வெளி வந்துள்ளது.
இப்படி தங்கள் தேவைக்காக மக்களை பகடைக் காயாக்கி விளையாடும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில்தான் கோடிக்கணக் கான வருவாயை ஈட்டும் தடுப்பூசி விற்பனை யும், தேசத்தின் எதிர்காலமும உள்ளது.
நமது ஆட்சியாளர்கள் எதைப்பற்றியும் நமது பிரதமர் 42 சதவீத இந்திய குழந்தைகள் போஷாக்கு போதாமையால் அவதிப்படுவதாக கூறியுள்ளார். …. நாம் வெட்கப்படும்படியான நிலைமையே உள்ளது. அவரது தனியார் மயக்கொள்கை நீடிப்பதே இதற்கு காரணம் என்று தெரியாமல் பேசுகிறார். கிஞ்சிற்றும் கவலையும் அக்கறையும் கொள் ளாமல் இலகுவாக இந்திய சந்தையை சுரண்டிட அனுமதி கொடுத்துள்ளனர்.
மக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அம்ச மான சுகாதாரத்திற்கு அரசு திட்ட ஒதுக்கீடு படிப்படியாக குறைத்து வருகின்றது. இந்நிலை யில் பிறந்த குழந்தையே பன்னாட்டு நிறுவனத் தின் சுரண்டலில் அடிபட்டு வளறப் போகின்றது. இந்த வலத்தைப் போக்கிட தேச சுயசார்பு மீது பற்று உள்ளவர்களும், ஜனநாயகம் எண்ணம் கொண்டவர்களும் இணைந்து நின்று அரசின் கொள்கை முடிவுகளை வெகு மக்களிடத்தில் எளிமையாக எடுத்துரைத்து தடுப்பூசியில் நடைபெறும் கொள்கையை – எதிர்த்து மீண்டும் இந்தியா சுயசார்பு நிலையை அடைந்திட பணிகள் செய்வோம்!