மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


“தத்துவார்த்த பிரச்சினைகள்” பற்றிய விவாதம் ஒரு வரலாற்றியல் கண்ணோட்டம்


உலகளாவிய அளவில் சமூக மாற்றம், சோசலிச நிர்மாணம் என்பது ஒரு சில ஆண்டு களில் நடைபெறுகிற நிகழ்ச்சிப் போக்கு அல்ல. புராதனப் பொது உடைமைச் சமூகமும் அடிமைச் சமூகமும் மனிதகுல வரலாற்றின் நாகரீக வளர்ச்சி கட்டம் வரை பல ஆயிரக் கணக்கான நூற்றாண்டுகள் நிலவி வந்துள்ளன. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு கூட, பல வடிவங்களில் 15ஆம் நூற்றாண்டு வரை சமூகம் முழுமைக்குமான பிரதான சமூக அமைப்பு முறையாக நிலவிவந்துள்ளது. முதலாளித்துவ சமூக அமைப்பின் பிரவேசம் என்ற, அன்றைய, புரட்சிகரமான மாற்றம் – தொழிற்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சிகளோடு நிகழ்த்தப்பட்டு, கடந்த நான்கைந்து நூற்றாண்டுகளாகத்தான் பிரதான சமூக அமைப்பு முறையாக அது நிலவி வருகிறது. இதை அடுத்த கட்டமான சோசலிச சமூக அமைப்பு முறைக்கு மாற்றுகிற முயற்சியை உலகத் தொழிலாளி வர்க்கம் துவங்கி சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளாகிறது. அதன் அனைத்து அம்சங்களையும் இன்று அலச முடியாது, என்றபோதிலும் அதன் தத்துவார்த்த, நடைமுறைப் போராட்டங்களின் தொடர்ச்சியை நாம் உற்று நோக்கலாம்.

கார்ல் மார்க்சும், ஏங்கெல்சும் 1848ல் கூட்டாக வெளியிட்ட “கம்யூனிஸ்ட் அறிக்கை” சோசலிச நிர்மாணத்துக்கான அடிப்படைத் தத்துவ விளக்கமாக, ஆயுதமாகத் தொழிலாளி வர்க்கத் துக்குக் கிடைத்தது. மார்க்ஸ் வெறும் சித்தாந்த நூல்களைப் படைப்பவராக மட்டும் அல்லாமல் தொழிலாளி வர்க்கத்தின் நேரடி நடவடிக்கை களிலும் ஈடுபாட்டுடன் இருந்தார். 1864ல் அவர் உருவாக்கிய சர்வதேசத் தொழிலாளிகள் சங்கம் (ஐவேநசயேவiடியேட றுடிசமiபே ஆநn’ள ஹளளடிஉயைவiடிn) சோசலிச நிர்மாணத்துக்கான, நடவடிக்கைக்கான அமைப் பாக விளங்கியது. “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையும் – அதன் நோக்கங்களையும் செயல்வடிவத்துக்குக் கொண்டுவர இந்த சர்வதேச அமைப்பு முனைந்தது. உலகெங்கிலும் உள்ள 80 லட்சம் தொழிலாளர்கள் இந்த அமைப்பில் இணைந்தனர். பாரிஸ் நகரத் தொழிலாளர்களின் எழுச்சி 1871ல், `தொழிலாளி வர்க்கத்தின் கையில் ஆட்சியதிகாரம்’ என்ற கனவை நனவாக்குவதற்கான முதல்படியாக அமைந்தது. பின்னர் வீழ்த்தப்பட்டாலும் 71 நாட்கள் தாக்குப்பிடித்த “பாரிஸ் கம்யூன்” உலகத் தொழிலாளர்களுக்கு நல்ல பல நடைமுறைப் படிப்பினைகளை வழங்கியது. கடுமையான அடக்குமுறை காரணமாகவும், தடைகள் காரணமாகவும் இந்த சர்வதேச அமைப்பு 1872இல் கலைக்கப்பட  வேண்டிய தாயிற்று. பின்னர், 1889ல் இரண்டாவது சர்வ தேச அமைப்பு இதே வடிவத்தில் உருவாக்கப் பட்டது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் 1916 வரை நீடித்திருந்த இந்த அமைப்பில் பல நாட்டுத் தொழிலாளர் கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்தன.

ஏகாதிபத்தியப் போரை ஆதிரிக்க மாட்டோம்

ஆனால், 1914 முதல் 1916 வரை நீடித்த முதல் உலகமகா யுத்தம் – அதுபற்றிய மதிப்பீடுகள் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் ஒற்றுமையின்மை யையும் கருத்து வேறுபாட்டையும் உருவாக் கியது. கம்யூனிஸ்ட் அறிக்கையில் விளக்கி யுள்ளது போல், போருக்கு எதிரான நிலையை அந்தந்த நாடுகளில் உள்ள சோசலிஸ்ட் கட்சிகள் எடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முதல் உலகப் போர் துவங்கிய உடனேயே, ஒரு சில நாடுகளில் தவிர அந்தந்த நாட்டு சோசலிஸ்டுகள் அந்தந்த நாட்டு அரசை யும் முதலாளிகளையும் ஆதரிக்கத்துவங்கி விட்டனர். இந்தச் சூழலில் லெனின் தலையிட்டு கூறியது: “இந்த உலக மகாயுத்தம் ஒரு ஏகாதி பத்திய யுத்தம், ஏகாதிபத்திய நாடுகள் தங்க ளுக்குள் காலனிகளை மறு பங்கீடு செய்வதற் கான போர், இதை நாம் ஆதரிப்பதற்கில்லை. அமைதி என்ற பெயரில் சாந்தப்படுத்தும் வாதமோ – போரில் ஒரு பகுதியினரை ஆதரிக்கும் அவசியமோ தொழிலாளி வர்க்கத்துக்கு இல்லை. எனவே அந்தந்த நாடுகளில் மக்கள் எழுச்சிகளைத் துவங்கி சோசலிசத்துக்கு மாறிச் செல்கிற வாய்ப்பாக இந்தப் போரைப் பயன் படுத்த வேண்டும்” என தெரிவித்தார். இந்தக் கருத்துடைய இடதுசாரிகளின் கூட்டத்தை அவர் சுவிட்சர்லாந்தில்  கூட்டினார். ஜிம்மர் வால்ட் லெஃப்ட் என அழைக்கப்பட்ட இவர்கள் ஒரு புதிய கம்யூனிஸ்ட் அகிலத்தை, சர்வதேச இயக்கத்தை அமைக்க முனைந்தனர்.

முன்னதாக, முதல் உலகப் போர் நடந்து கொண்டிருக்கும்போதே 1916ஆம் ஆண்டின் நடுவில் `இரண்டாவது அகிலம்’ கருத்து வேறுபாடுகள் முரண்பாடாகி கலைந்துபோனது. யுத்தத்தை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்பதில் கருத்து வேறுபாடு முற்றியதால் இந்த நிலைமை வந்தது. ஆனாலும் சோவியத் புரட்சி நெருக்கத் துக்கு வந்துவிட்டதால் புதிய சர்வதேச அமைப்பு உருவாவது தள்ளிப்போனது. 1917இல் மாபெரும் போல்ஷெவிக் புரட்சி மூலம் சோவியத் ரஷ்யா உருவானது. அது முடிந்த கையோடு, 1919ல் மார்ச் மாதம் கோமின்டர்ன்  (ஊடிஅiவேநசn)  என்று அழைக்கப்பட்ட மூன்றாவது அகிலம் /உலகக் கம்யூனிஸ்ட்/சோசலிஸ்ட்/தொழிலாளர் கட்சி களின் இயக்கம் – உருவாக்கப்பட்டது.

கோமின்டர்ன் கலைக்கப்பட்டது ஏன்?

ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியா, ஆப் பிரிக்கா கண்டங்களில் அடிமை நாடுகளாக இருந்த நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ரஷ்யப் புரட்சியின் ஊக்கத்தால் தங்கள் தங்கள் நாடுகளிலும், ஒட்டுமொத்தமான உலக ளாவிய அளவிலும், சோசலிசத்தை நிர் மாணிக்கத் துடித்தனர். அதற்கான திட்டத்தை, மூன்றாவது அகிலத்தின் இரண்டாவது காங் கிரஸ் மாஸ்கோ நகரில் 1920இல் கூடியபோது, லெனின் முன்வைத்தார். ‘தேசீய மற்றும் காலனி நாடுகளின் நிலைமை குறித்த ஆய்வு நகல்’ அறிக்கையாக அது சமர்ப்பிக்கப்பட்டது.  (னுசயகவ கூhநளநள டிn சூயவiடியேட யனே ஊடிடடிnயைட ணுரநளவiடிளே). அது – முதலாளித்துவ வளர்ச்சியின் அன்றைய கட்டம், உள்நாட்டுக்குள்ளும், தேசங்களுக்கிடையேயும் உள்ள வர்க்க சக்திகளின் பலாபலன், தொழி லாளி வர்க்க சர்வதேசீயம், காலனிகளின் தேச விடுதலை ஆகியவை பற்றி விளக்கியது. மேலும் கம்யூனிஸ்டுகளின் முன் உள்ள கடமையையும் வகுத்துக்கொடுத்தது. பன்னிரெண்டு அம்சங் களைக் கொண்ட அந்த நகல் 34 நாடுகளிலிருந்து பங்கேற்ற 52 பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. வெகுகாலத்துக்கு கட்சித் திட்டம் இல்லாதிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத் துக்கு லெனினுடைய இந்தத் திட்டமே வழி காட்டும் திட்டமாக இருந்தது.

வரலாற்று ரீதியாக முதலாளித்துவம் பெரும் பொருளாதார நெருக்கடியில் மாட்டிக்கொண்ட காலமாக இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி இருந்தது. இந்த நெருக்கடியின் உடன் விளைவாக பாசிசம் தலையெடுத்ததும் இந்தக் காலத்தில் தான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் – 1919 முதல் 1939க்குள் 7 காங்கிரஸ்களை மூன்றாவது அகிலம் நடத்தியது. ஒரு பெரிய, ஆட்சியில் இருக்கும் கட்சி என்ற முறையில் கம்யூனிஸ்ட் அகிலத்துக் குள்ளும் அதன் முடிவுகளுக்குள்ளும் சோவியத் ரஷ்யாவின் கருத்துத் தாக்கம் இருந்தது. 1924இல் லெனின் மறைந்த பிறகு ஸ்டாலின் பொறுப்புக்கு வந்து 1953 வரை சோவியத் நாட்டையும் ஊஞளுரு வையும் வழிநடத்தினார். கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒரு மையத்திலிருந்து வழி நடத்துவது தேவை யில்லை என்ற காரணத்தினால் மூன்றாவது அகிலம் கலைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலந்துபேசும் கூட்ட மாகியது.

பாசிசம் வீழ்த்தப்பட்ட பின்

புதிய உலக நிலைமைகள்

இது தவிர இரண்டாவது உலக மகா யுத் தத்தைப் பற்றிய மதிப்பீடும் மூன்றாவது அகி லத்தின் கலைப்புக்குக் காரணமாக அமைந்தது. கிட்டத்தட்ட முதல் உலக யுத்தத்தைப் போன்றே இதுவும் வளர்ந்த ஏகாதிபத்தியங்களுக்கிடையே யான போர்தான்; எனவே கம்யூனிஸ்ட் அகிலம் எந்தப் பக்கமும் சேராத ஒரு நிலைபாட்டைத் தான் எடுக்க வேண்டும் எனப் பெரும் பகுதியினர் வற்புறுத்தினர். ஆனால், ஜூன் 22, 1941இல் ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனுக்குள் ஆக்கிரமிப்பு செய்தபோது கோமின்டர்ன் தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. ரஷ்யா போருக்குச் சென்றது, பாசிசம் வீழ்த்தப் பட்டது.

ஆகவே முதலில் ஜினாயவேவ், வெகுகாலத் துக்கு பின்னர், புக்காரின், இறுதியாக ஜார்ஜ் டிமிட்ரோவ் தலைமையில் செயல்பட்ட கம்யூ னிஸ்ட் அகிலம் முடிவுக்கு வந்தது. இது உலக ளாவிய சோசலிசத்துக்கான முயற்சி பற்றிய ஒரு முக்கியமான படிப்பினையாகும்.

1945இல் பாசிசம் வீழ்த்தப்பட்ட பின்பு சர்வ தேச அளவில் சோசலிசத்துக்கான உத்வேகம் உலக மக்களிடையே கிளர்ந்தெழுந்தது. சோவியத் படைகளின் வீரம், ஹிட்லர் வீழ்த்தப் பட்ட நிகழ்ச்சி, ரஷ்யப் படையின் சுமார் 4 கோடிப் போர் வீரர்கள் செய்துள்ள உயிர்த்தி யாகம், “கூட்டாளிகள்”  (ஹடடநைள) என்றழைக்கப் பட்ட பிரிட்டன், அமெரிக்கா, அவர்களின் நட்பு நாடுகளின் கபடத்தனம் ஆகியவற்றை மக்கள் பார்த்தனர். புரட்சிகளும், மக்கள் இயக்கங்களும் உலகெங்கும் வெடித்தன. காலனி நாடுகள் அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தன. புதிய சோசலிச நாடுகள் மலர்ந்தன. மக்கள் சீனம், கொரியா, வியட்னாம், கியூபா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என சுமார் 95 கோடி மக்கள் (285 கோடி உலக ஜனத் தொகை) சோசலிசப் பாதையைத் தழுவினர் என்பது புதிய உலக நிலைமைகளை உரு வாக்கியது.

1957 சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு

இந்தப் புதிய சூழலின் தன்மையை மதீப்பீடு செய்வதற்கும் அதிலிருந்து உலக சோசலிசத் துக்கான பாதையை வகுப்பதற்கும், கடமைகளை இறுதி செய்யவும் 1957இல் மாஸ்கோவில் கூடிய சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் கூட்டம் முயற்சி செய்தது. இறுதி யாக ஒரு அறிக்கையையும் அது வெளியிட்டது. இந்த சகாப்தத்தின் முக்கிய உள்ளடக்கம் என்பது, `முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத் துக்கு மாறிச் செல்வதுதான்’ எனத் துவங்கும் அறிக்கை கீழ்க்கண்ட கருத்துக்களையும் தெரி விக்கிறது.

`சோசலிசத்தின் முன்னேற்றம், தேசீய விடு தலை இயக்கங்களின் வெற்றி ஆகியவை ஏகாதி பத்தியத்தின் சிதைவு வேகத்தை பெருமளவுக்கு அதிகப்படுத்துகிறது. மனிதகுலத்தின் மீது ஒரு காலத்தில் இருந்த ஏகாதிபத்திய ஆதிக்கம் இன்று வெகுவாக இழக்கப்பட்டுள்ளது” என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,

“வரலாற்றில் முதல் முறையாக வர்க்க சக்தி களின் பலாபலனில் மாற்றம் தீர்மானகரமாக சோசலிசத்துக்குச் சாதகமாக ஏற்பட்டுள்ளது. சோசலிசக் கருத்துக்கள் உழைக்கும் வர்க்கத் தையும், விவசாயிகளையும், அறிவு ஜீவிகளையும் வெகுவாகக் கவர்ந்திழுத்து ஒரு பெரிய சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது சோசலிசத்தின் வெற்றிக்கு மிகச் சாதகமான சூழலை உருவாக்கி உள்ளது” – என்றும் அந்த 1957 பிரகடனம் தெரி விக்கிறது.

அடுத்த ஆண்டு கூடிய சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு நவீன திருத்தல் வாதத்தின் விதைகளை உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் விதைத்தது. லெனின் முன்மொழிந்த “சமாதான சகவாழ்வு” கொள்கையை பொரு ளிலும், சூழ்நிலையிலிருந்தும் பிரித்து, சிதைத்து அன்றைய சூழலுக்கு அது பொறுத்தப்பட்டது. சமாதான பொருளாதாரப் போட்டி, சமாதான மாற்றம் போன்ற முன்மொழிவுகள் சோவியத் கட்சியின் 20வது காங்கிரஸ் (1958) முன்மொழிவு களுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது. மேலும் ஸ்டாலின் அவர்களின் பங்களிப்பு பற்றி ஒரு தவறான, பொருந்தாத மதிப்பீட்டைச் செய்து, 20வது காங்கிரசுக்கு ஒரு இரகசிய ஆவணத்தையும் குருஷ்சேவ் தலைமையிலான சோவியத் கட்சி சுற்றுக்கு விட்டது. இது ஏகாதி பத்திய சக்திகளின் கையில் கிடைக்கப்பெற்று, ஸ்டாலினுக்கு எதிராக மட்டுமல்ல, சோசலிச சமூக அமைப்பு முறைக்கு எதிரான பிரச்சாரத் துக்கு அது பயன்பட்டது. சோவியத் கட்சி அதை அதிகாரப்பூர்வமற்ற ஆவணம் எனக் கூறிக் கொண்டே அதன் உள்ளடக்கத்தைப் பகுதி பகுதி யாக தனது பிரசுரங்கங்களில் வெளியிட்டது.  ஒரு பக்கம் 1957 பிரகடனம் ஏகாதிபத்தியம் பலவீனம் அடைவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது, 1958ல் 20வது  ஊஞளுரு காங்கிரஸ் சோசலிசத் துக்கான பின்னடைவுகளுக்குப் பாதை அமைத்தது.

1960 சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு

இந்தப் போக்கின் தொடர்ச்சியாகத்தான் 1960இல் நடைபெற்ற 81 நாடுகள் கலந்துகொண்ட சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு பார்க்கப்பட வேண்டும். யூகோஸ்லோவியாவின் நவீன திருத்தல்வாதம் உச்சகட்டத்துக்குப் போன நிலையில், அவர்களின் சந்தர்ப்பவாதத்தை அந்த மாநாடு தனது பிரகடனத்தில் கண்டித்தது. சகோதர சோசலிச நாடுகளுடன் ஒருங்கிணைப் பற்ற தன்மையை 1960 மாநாட்டின் தீர்மானம் வெளிப்படுத்தியது. வியட்னாம் மீது அமெரிக்கத் தாக்குதலைக் கண்டித்து ஒருங்கிணைந்த நட வடிக்கைக்கு மறுப்பு; சீனக் கட்சி மீது குருஷ்சேவ் தெரிவித்த வெளிப்படையான கண்டனம்; அணு ஆயுத ஒத்துழைப்பு ஒப்பந்தம் சீனாவுடன் போட மறுப்பு – ஆனால் அமெரிக்கா, பிரிட்டனுடன் அணுஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்டது; மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளையே சிதைத்து, திருத்தி சகோதரக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது திணித்தது ஆகிய நடவடிக்கைகளில் சோவியத் கட்சி இறங்கியது. இவையனைத்தும் 1960ல் நடைபெற்ற மாநாட்டில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும், 1960ஆம் ஆண்டு கூடிய மாநாடு வெளியிட்ட அறிக்கை ஒப்புமையற்ற சோவியத் கட்சியின் கருத்துத்தாக்கம் நிறைந்த அறிக்கை யாகத்தான் வெளிவந்தது.

இவ்வாறாக, உலக சோசலிசத்துக்கான பாதை யில் சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழி லாளர் கட்சிகளும் – பல பாராட்டத்தக்க, தீரம் மிக்க நடவடிக்கைகளில் இறங்கி இருந்தபோதும் – காலப்போக்கில், வரலாற்று நிகழ்ச்சிகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதிலும், அதிலிருந்து உரிய பாடங்களைப் பெற்றுக்கொண்டு சோசலிச சமூக மாற்றத்தைக் கொண்டுவரவுமான முயற்சியில் பல தவறுகளைச் செய்துள்ளதை வரலாறு பதிவு செய்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு

ஏற்பட்ட பாதிப்பு

இதன் நேரடிப் பாதிப்புக்கு உள்ளான இயக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் என்றால் அது மிகையாகாது. 1920இல் துவங்கி அதனது 92 ஆண்டுகால வரலாற்றில் முதல் 44 ஆண்டுகள் அதற்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட “கட்சித் திட்டம்” என்பதே இல்லை என்பது ஒரு வரலாற்று உண்மை. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஏற்ற இறக்கங்கள், தவறான மதிப் பீடுகள் ஆகியவற்றின் தாக்கம் இந்தியக் கம்யூ னிஸ்ட் இயக்கத்தில் மிகவும் ஆழமாக இருந்தது. முதலாளித்துவப் பொது நெருக்கடியின் தன்மை, தேச சுதந்திரம், இந்திய ஆளும் வர்க்கத்தின் வர்க்கத் தன்மை, இந்தியப் புரட்சியின் தன்மை, கட்டம், வர்க்க அணி சேர்க்கை உட்பட மிக  அடிப்படைப் பிரச்சனைகளில் நேரெதிர் நிலை பாடு எடுக்கக் கூடியவர்களின் கூட்டாக ஆறு கட்சிக் காங்கிரசுகள் நடந்தேறின.

தேச விடுதலைக்குப்பின்பு, ஆங்காங்கே நடை பெற்றுக்கொண்டிருந்த தொழிலாளர், விவசாயி களின் எழுச்சிகள் உலக நிலைமையின் பின்னணி யில், மிக விரைவான சமூக மாற்றத்தை இந்தி யாவில் கொண்டுவரும் என இந்தியக் கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகள் கருதினர். ஆனால் இந்தியப் புரட்சியின் தன்மை, இந்திய ஆளும் வர்க்கத்தின் வர்க்கத்தன்மை நமது அணியில் திரள வேண்டிய நேச சக்திகள் யார் என்பன குறித்து ஆழமான கருத்துவேறுபாடுகள் நீடித்துக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் இந்தியப் புரட்சி என்பது ஜனநாயகப் புரட்சியா, சோசலிசப் புரட்சியா அல்லது மக்கள் ஜன நாயகப் புரட்சியா என்பன போன்ற குழப்பங்கள் கட்சித் தலைமையிலும், அணிகளிடமும் நில வியது. 1951இல் இந்தியக் கம்யூனிஸ்ட்  இயக் கத்தில் முக்கியத் தலைவர்களான எஸ்.ஏ. டாங்கே, அஜய்கோஷ். எம். பசவபுன்னையா, சி. இராஜேஸ்வரராஜ் ஆகிய நான்கு பேர் கொண்ட குழு மாஸ்கோவுக்குச் சென்று ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய மண்ணில் சோசலிசத்துக்கான புரட்சி இந்தியாவின் விசேஷ நிலைகளுக்குத் தக்கதான் நடைபெறும். எனவே அது இந்தியப் பாதைதான் என்பது தெளிவுபடுத்தப்பட்டது.

இருந்தபோதும் 1952க்குப் பிறகு, கிட்டத்தட்ட 1964 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இந்தக் குழப்பம் நீடித்தது என்பது மறுப்பதற் கில்லை.

எனவே ஸ்டாலினுக்குப் பிந்தைய சோவியத் நவீன திருத்தல்வாதக் கண்ணோட்டத்துடனும், இசைவான மதிப்பீடுடனும் இருந்தவர்களுடன் இனியும் இணைந்து செயல்பட முடியாது என்ற நிலைபாட்டை ஒரு பகுதித் தலைமை எடுத்தது. இந்தியாவுக்கான சோசலிசப் புரட்சியின் பாதையை நிர்ணயிக்கிற மாநாடாக கட்சியின் ஏழாவது காங்கிரஸ் 1964ல் கல்கத்தாவில் கூட்டப் பட்டது. அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம், அதன் போராட்டப் பாரம்பரியத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)ஆக உருவெடுத் தது.

1968 பர்துவான் பிளீனம்

`கட்சியின் ஏழாவது மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட கட்சித் திட்டம், நமது கடமைகள் பற்றிய தீர்மானம், அரசியல் ஸ்தாபன அறிக்கை ஆகியவை இந்தியச் சூழலைப் பற்றிய வலது, சந்தர்ப்பவாத, திருத்தல்வாத தத்துவார்த்த – அரசியல் நிலைபாடுகளிலிருந்து முடிவாகக் கணக்குத் தீர்த்துக்கொண்ட நடைமுறைத் தந்திரம் மற்றும் யுத்த தந்திரமாக அமைந்தன’ என்று பர்துவான் பிளீனம் முடிவுகள் – என்ற சிபிஐ(எம்)-ன் தீர்மானம் அதன் முதல் பக்கத்தி லேயே எழுதி வைத்திருக்கிறது. சர்வதேசீய தத்துவார்த்த பிரச்சனைகள் சம்பந்தமான உள்கட்சி விவாதம் என்பது வரலாற்றில் அவ் வப்போது நடைபெறுகிற ஒன்றுதான். ஆனால் 1968ல் பர்துவானில் கூடி சிபிஐ(எம்) செய்துள்ள மதீப்பீடும், தீர்மானமும் என்பது இந்தியக் கம்யூ னிஸ்ட் இயக்கத்தில் ஒரு அகநிலைப்பார்வை யற்ற, ஸ்தூலமான, வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலான முதன் முதல் வழிகாட்டும் தத்துவார்த்த கையேடாக அமைந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் மார்க்சிய-லெனினிய சித்தாந்த அடிப்படையில் நின்று விருப்பு வெறுப்பற்ற முறையில் தத்துவார்த்தப் பிரச்சனைகள் பற்றி செய்யப்பட்ட மதிப்பீடு அது ஆகும். `சர்வதேச அனாதைகள்’ என்ற குதர்க்கமான பரிகாசங்களையும், காட்டிக் கொடுத்ததன் காரணமாக இந்திய ஆளும் வர்க் கங்களால் நடத்தப்பட்ட வேட்டையாடுதலை யும், உள்கட்சியில் திருத்தல்வாதம் மற்றும் அதிதீவிரவாதம் ஆகிய இரண்டு திரிபுகளால் ஏற்பட்ட பிளவுகளையும், குழப்பங்களையும் எதிர்கொண்டு உறுதியுடன் இந்த விவாதத்தை சிபிஐ(எம்) நடத்திட வேண்டியிருந்தது.

சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் 1957, 1960 ஆவணங்களின் `புதிய சகாப்தம்’ பற்றிய மதிப்பீடு  குறித்தும், முரண்பாடுகளின் அன்றைய தன்மை குறித்தும் ஒரு சரியான புரிந்து கொள்ளுதலை பர்துவான் பிளீனம் ஏற்படுத்து கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பல தவறான புரிந்துகொள்ளுதலை சரியான மார்க்சீயக் கண்ணோட்டத்துடன் அது மறு தலிக்கிறது. போர், சமாதானம், ஆயுதக் குறைப்பு, அணு ஆயுத ஒப்பந்தம், சமாதான சக வாழ்வுக் கோட்பாடு ஆகியவற்றில் சந்தர்ப்பவாத நிலை பாடு எடுத்து சில சோசலிஸ்ட் கட்சிகளும் அவர் களின் அரசுகளும் செய்திருக்கிற சமரசங்களை பர்துவான் பிளீனம் தயவு தாட்சண்யமின்றிச் சாடுகிறது. தேசீய ஜனநாயகம் – முதலாளித்துவ மற்ற பாதை, சோசலிசத்துக்கு மாறிச் செல்லும் வழிமுறை ஆகியவற்றில் வர்க்கப் போருக்குப் பதிலாக வர்க்க சமரசம் எவ்வாறு புகுந்துகொண் டது என்பதை அந்த ஆவணம் தெளிவுபடுத்து கிறது. ஸ்டாலின் அவர்களின் பங்களிப்பு பற்றிய ஒரு ஸ்தூலமான மதிப்பீட்டை மார்க்சியப் பார்வையில் உலகுக்கு முன் வைக்கிறது பர்து வான் பிளீனம்.

“உலகில் உள்ள அனைத்துக் கட்சிகளின் வெற்றி தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ளும் அதே வேளையில், வெளித் தலையீடுகளிலிருந்து தன்னை தற்காத்து தன்னுடைய சுயேச்சைத் தன்மையையும், சுயேச்சையான அரசியல் வழியையும் சிபிஐ(எம்) பாதுகாத்துக்கொள்ளும்” என்று பர்துவான் பிளீனம் தன்னடக்கத்துடன் தெரிவிக்கிறது. இந்த விவாதம் நடந்து தீர்மானம் நிறைவேற்றிய பின், ஒரு சித்தாந்த ரீதியான ஒற்றுமையைக் கட்சிக்குள் உருவாக்க முடிந்தது. உலக நிகழ்வுகளை `பர்துவான்’ வெளிச்சத்தில் சரியாகப் பார்க்க முடிந்தது.

இரண்டு திரிபுகளுக்கு எதிராக

இந்தியப் புரட்சியைப் பற்றிய கணிப்பிலும் அதனது பாதை பற்றிய மதிப்பீட்டிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த குழப்பம் ஸ்தாபனச் சீர்குலைவில் சென்று முடிந்தது. நவீன திருத்தல்வாதப் போக்கும், அதிதீவிரவாதப் போக்கும் ஆகிய இரண்டு திரிபுகள் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபடுவதற்கு இட்டுச் சென்றது. லெனினது சமாதான சகவாழ்வுக் கோட்பாட்டை கால நிலையோடு பொருத் தாமல் வர்க்க சமரச நிலைபாட்டுக்கு ஆதாரமாக வலதுசாரி சக்திகள் பயன்படுத்தினர்.  ஊஞளுருவின் 20வது கட்சிக் காங்கிரஸ் தீர்மானமும், ஸ்டாலின் பற்றிய மதிப்பீடும் ஆகியவை இந்திய ஆளும் வர்க்கத்துடன், தேசீய முதலாளிகளுடன் சமரசப் பாதைக்கு இட்டுச் சென்றதன் விளைவுதான் 1964ல் சிபிஐ(எம்) உருவாவதில் வந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து இடது அதிதீவிரக் குழுக்கள் நக்சல்பாரியில் தொடங்கி நாடு முழுவதும் தனி நபர் கொலைகள், நிலப்பிரபுக்களை அழிப்பது உட்பட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சீனப் பாதையே இந்தியப் புரட்சியின் பாதை என்று சிபிஐ(எம்)க்கு எதிரான ஸ்தாபனச் சீர் குலைவு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 1968 பர்துவான் பிளீனம் முடிவுகள் உலக நிலைமை கள், சகோதரக் கட்சிகள், இந்தியப் புரட்சி ஆகியவை குறித்து செய்த மிகச் சரியான மதிப் பீடும், அந்தத் தத்துவார்த்த ஆயுதத்தைக் கைக் கொண்டதன் பலனாக சீர்குலைவிலிருந்து அன்று கட்சி காப்பாற்றப்பட்டது.

சோசலிசத்துக்கு சோதனைக் காலம்

அடுத்த சுமார் கால் நூற்றாண்டு காலம் சோச லிசத்துக்கு சோதனை காலமாக அமைந்தது. உலக முதலாளித்துவம் சோசலிசத்தை வெளி யிலிருந்தும், உள்ளே ஊடுருவியும், சுற்றி வளைத்து வீழ்த்தியது. குறிப்பாக 1991ஆம் ஆண்டுக்குப்பின், சோவியத் ரஷ்யா என்ற உலகின் முதல் சோசலிசக் குடியரசு இனி இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. ஓரி ராண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள சோசலிச நாடுகள் முதலாளித்துவப் பாதையைத் தழுவின.

அன்றைய முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் தன்மை, தொழில்நுட்ப வளர்ச்சியில் – தகவல் தொடர்பு, கணினி விஞ்ஞானம் ஆகிய வற்றில் ஏற்பட்ட அபரிமிதமான மாற்றங்கள் – சோசலிசத்தின் மீது தாக்குதலைத் தொடுக்க முதலாளித்துவத்துக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியது.

1986இல் கூடிய 27வது சோவியத் கட்சிக் காங்கிரஸ் பெரஸ்ட்ரோய்கா (சீர்திருத்தங்கள்), கிளாஸ் நாஸ்ட் (வெளிப்படைத்தன்மை) ஆகிய இரண்டு கோஷங்களுடன் கட்சியைச் சீர் குலைத்தது. மிகயில் கோர்பச்சேவ் தலைமையி லான சோவியத் கட்சி 28வது கட்சிக் காங்கிரசுக்கு 1988ல் செல்லும்போது இன்னும் சீரழிந்து போனது. `மனிதாபிமானமிக்க சோசலிசம்’ என்று துவங்கி சோவியத் கட்சியை ஒரு சமூக ஜனநாயகக் கட்சி என்ற நிலைமைக்கு எப்படிக் கொண்டு சென்றார்கள் என்பதை விளக்குகிற வேலையை பின்னர் சிபிஐ(எம்)-ன் 14வது கட்சிக் காங்கிரஸ் செய்தது.

சென்னை காங்கிரஸ் நிறைவேற்றிய

தீர்மானம் – 1992

சென்னையில் நடைபெற்ற இந்த மாநாடு “சில தத்துவார்த்த பிரச்சனைகள் பற்றி” என்ற தீர் மானத்தை 1992 ஜனவரி மாதம் நிறைவேற்றியது. அது இந்த சகாப்தத்தின் பிரதான உள்ளடக்கம் என்பது முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத் துக்கு மாறிச் செல்வதுதான் என்பதை மறுபடியும் வலியுறுத்தியது. சுய விமர்சனமான முறையில், எவ்வாறு சகோதரக் கட்சிகள் “ தங்களது ஆட்சி, மார்க்சிய – லெனினியத்தின்பால் நம்பிக்கை” பற்றி தெரிவித்த கருத்துக்களை சிபிஐ (எம்) அப்படியே ஏற்றுக்கொண்டது என்பதை விளக் கியது.

இன்று மாறியிருக்கிற சூழலில் சர்வதேச நிகழ்ச்சிப் போக்குகளால் எவ்வாறு 1957/1960ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பொருளற்றதாக மாற்றப்பட்டுவிட்டது என்ற விளக்கத்தை சிபிஐ(எம்) மாநாட்டுத் தீர்மானம் விளக்குகிறது. 1960 தீர்மானத்தின் மதிப்பீடுகள் எவ்வாறு பொய்யாய் போனது என்பதை 14வது காங்கிரஸ் விளக்கியது.

¨              “சமூக வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிப் பதில் உலக சோசலிச அமைப்பு, தீர்மானகரமான பங்கை வகிக்கும்  சக்தியாக மாறிக்கொண்டிருக் கிறது என்பதுதான் இந்தக் காலத்தின் பிரதான குணாம்சம் ஆகும்.”

¨              “இன்று சோவியத் யூனியனில் மட்டுமல்ல, பிறசோசலிச நாடுகளிலும் கூட முதலாளித் துவத்தின் மீட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது உறுதிப்பட்டுள்ளது.”

மேலே கூறிய இரண்டு மதிப்பீடுகளும் 1960ம் ஆண்டு சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. “மார்க்சும் ஏங்கெல்சும் முதலாளித்துவ வளர்ச்சிப் போக் கைப் பற்றி கம்யூனிஸ்ட் அறிக்கையில் தெரி வித்துள்ள கருத்துக்களை அன்று அவர்கள் சரி யாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. எனவே முத லாளித்துவத்தின் பொது நெருக்கடி என்பது அவர்களால் யாந்திரீகமாகப் புரிந்துகொள்ளப் பட்டது; வரலாற்று ரீதியாக இனி முதலாளித் துவம் நிலைத்து நீடித்து இருக்க முடியாது; அது விரைவில் வீழ்ந்துவிடும் என்பதும் அன்று அவர்க ளால் யாந்திரீகமாகப் புரிந்துகொள்ளப்பட்டது.” இவை அனைத்தும் தவறான மதிப்பீடுகள் என்று சரியாகவே 14வது கட்சிக் காங்கிரஸ் தீர்மானம் தெளிவுபடுத்துகிறது.

உலகின் முதல் சோசலிச நாடு என்ற முறையில் அதன் 70 ஆண்டுகளின் அளப்பரிய சாதனை களை நிராகரித்துவிட்டு அதனால் முன்னேற முடியாது என்ற உண்மை சுட்டிக்காட்டப் பட்டது. ஏகாதிபத்தியம், இருப்பதையே – அதுவும் கூடிய வலுவுடன் ஸ்திரப்பட்டு இருப் பதை – அங்கீகரிக்காதது மட்டுமல்ல `ஏகாதி பத்தியம் என்று ஏதுமில்லை; பாதுகாப்பான நாகரீக உலக அமைப்பை நோக்கி நடைபோடு வோம்’ என சோவியத் கட்சி 1985 முதல் கூறியது. இறுதியாக இந்த நிகழ்ச்சிப் போக்குகள் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மிகயில் கோர்பச் சேவ் – பாரம்பரியம் மிக்க, புகழ்மிக்க,  போல்ஷ் விக் கட்சியை, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை சட்ட விரோதம் என்று அறிவித்து கலைத்ததில் போய் முடிந்தது. சோவியத் ரஷ்யா துண்டு துண் டானது. முதலாளித்துவ ரஷ்யா மீண்டும் உரு வானது. இது ஏன்,எப்படி நடந்தது என்பது குறித்த தத்துவார்த்த விளக்கத்தை, சிபிஐ(எம்)-ன் 14வது கட்சிக் காங்கிரசின் தத்துவார்த்த தீர் மானம் தருகிறது.

“சோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்கத்தன்மை, சோசலிச ஜனநாயகத்தை பலப்படுத்துவது, ஆழப்படுத்துவது, பொருளாதார நிர்வாக முறை களில் காலத்துக்கேற்ற மாற்றங்களைச் செய்ய முடியாமல் போனது, புரட்சிகர நற்குணங்களின் தரத்தில் அரிப்பு ஏற்பட்டது, தத்துவார்த்தத் துறையில் ஏற்பட்ட அபாயமான திரிபுகள், ஆகிய தடம் மாறிப்போன நிகழ்ச்சிப் போக்குகள், சோவியத் மக்களை அரசிடமிருந்தும், கட்சியிட மிருந்தும் அன்னியப்பட்டுப் போகும் நிலைக்குக் கொண்டு சென்றது. இதன் மூலம் எதிர்ப்புரட்சி சக்திகள் உள்ளேயும் வெளியேயும் ஊடுருவி கூட்டாக செயல்பட்டு சோசலிசத்தை வீழ்த்துகிற நிலைமை என்பது உருவானது.” (14வது காங் கிரஸ் தீர்மானம் 5.6.iஎ.) இவற்றின் மொத்த வெளிப்பாடே சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி என்பதை “சென்னை” காங்கிரஸ் படம் பிடித்துக் காட்டுகிறது.

கடந்த இருபதாண்டுகளாக நடைபெறும் முயற்சிகள்

பதினான்காவது கட்சிக் காங்கிரஸ் (1992) சென்னையில் நடந்து முடிந்த கையோடு சிபிஐ (எம்) -இன் முன்முயற்சியில் கல்கத்தா நகரில் சர்வதேச அளவில் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் பங்கு பெற்ற சர்வதேசக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் 25 நாடுகளி லிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். “இன்றைய உலகில் மார்க்சிய சித்தாந்தத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் நடைபெற்ற அந்தக் கருத்தரங்கத்தில் சகோதரக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அன்றைய உலக நிலைமை பற்றிய தங்களது மதிப்பீடுகளைத் தெரிவித்தனர்.

மூன்றாவது அகிலத்தின் தகர்வுக்குப் பின் பொதுவாகவும், சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்ட 1990களுக்குப் பிறகு குறிப்பாகவும் சர்வ தேச அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக் குள் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் நடத்திக் கொண்டனவே தவிர, ஒருவர் மீது மற்றவர் தங்களது மதிப்பீடுகளைத் திணிப்பது எனபது அறவே இல்லை; மேலும் சர்வதேச அளவிலான முடிவு என்று அனைவரையும் அதை அமல் படுத்தச் செய்கிற கட்டுப்பாடும் இல்லை.

இந்தப் பின்னணியில் நடைபெற்ற 1993 கல் கத்தா கருத்தரங்கம் சர்வதேச அளவில் சகோ தரக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே ஒரு பரஸ் பரம் புரிந்து கொள்ளுதலை உருவாக்கப் பயன் பட்டது. இதன் தொடர்ச்சியாக கிரேக்க நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் முயற்சியால் மே மாதம் 21-23, 1999 ஆம் ஆண்டு “கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேசக் கூட்டம்” (ஐவேநசயேவiடியேட ஆநநவiபே டிக ஊடிஅஅரnளைவ யனே றுடிசமநசள ஞயசவநைள – ஐஆஊறுஞ) கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் முதன்முதலாக நடத்தப்பட்டது. அது “முதலாளித்துவ நெருக்கடி, உலகமயமாக்கல் மற்றும் தொழிலாளர்களின் எதிர்ப்புகள்” – என்ற பொருள் பற்றிய கருத்தரங்கத்தை நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஐஆஊறுஞ-இன் மாநாடு தொடர்ந்து 2011 வரை, 13 மாநாடு கள் நடத்தப்பட்டுள்ளன. முதல் ஏழு மாநாடுகள் கிரீஸ் – (ஏதென்ஸ்)சிலும், பின்னர் போர்ச்சுக்கல் (லிஸ்பன்), பெலாரஸ் (மின்ஸ்க்), பிரேசில் (சாவ் பவ்லோ), இந்தியா (புதுதில்லி), தென் அமெரிக்கா (ஜோகன்னஸ்பார்க்) ஆகிய நாடு களில் 5 மாநாடும், மீண்டும் 2011 டிசம்பர் 9 முதல் 11 வரை 13 வது மாநாடு கிரீஸ் (ஏதென்ஸ்) நாட்டி லும் நடைபெற்றுள்ளது. இந்த மாநாடுகளில் இன்று வரை 59 நாடுகளிலுள்ள 78 கட்சிகள் பங் கேற்று வருகின்றன. அனைத்து மாநாடுகளும் மார்க்சீய – லெனினிய சித்தாந்த அடிப்படையில், உலக நிலைமைகளைப் பற்றிய மதிப்பீடு செய் வதற்கும், உலகளாவிய சோசலிசத்துக்கான பாத யைப் பற்றிய சரியான புரிந்து கொள்ளுதலை உருவாக்குவதற்குமான மிகப் பெரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.

கோழிக்கோடு மாநாட்டின்

தத்துவார்த்த தீர்மானம் – 2012

சோசலிச சமூக அமைப்புக்கு மாறிச் செல்ல விரும்புகிற உலகத் தொழிலாளி வர்க்கம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளன. இந்தியா போன்ற நாட்டில் புரட்சி நடத்த விரும்புகிற கட்சி, சோவியத் கட்சி சிதைத்து அழிக்கப்பட்டதற்கான காரணங்களை ஆழமாக ஆய்ந்து அவற்றைச் சென்னை மாநாட்டில் தீர்மானமாக்கித் தந்துள்ளது. உலக நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்த்து சரியான மதிப்பீடுகளுக்கு வருவதற்கான போராட்டத் தையும் நடத்தி வருகிறது.

1992க்கும் 2012க்குமிடையேயான 20 ஆண்டு கள் என்பது வரலாற்றைப் பற்றிப் பேசும் போது மிகச் சிறிய காலம்தான். ஆனால் நிதிமூல தனத்தின் அமோக வளர்ச்சி, ஏகாதிபத்தியத்தின் உலகமேலாதிக்கம், ஆங்காங்கே நடத்தப்படும் போர்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் – ஏகாதி பத்தியத்தின் ஆட்கொல்லித் தாக்குதல்கள், இன்றைய முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் தன்மை, முரண்பாடுகளின் இன்றைய நிலைமை, வர்க்க சக்திகளின் பலாபலன், கம்யூனிஸ்ட் கட்சி களின் முன் உள்ள கடமை ஆகிய அனைத்தைப் பற்றியும் மார்க்சிய சித்தாந்த அடிப்படையில் ஒரு மறு மதிப்பீட்டுக்கு, புதிய மதிப்பீட்டுக்கு வரவேண்டிய தேவை இன்று உள்ளது.

2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அது தீவிரமடைதல், ஐரோப்பிய கடன் நெருக்கடி, உலக நாடுகளில் உள்ள  வேலையற்ற வளர்ச்சி, தொழிலாளிகளின் வருமான இழப்பு, கடன் நெருக்கடி, சலுகைகள் வெட்டு, ஓய்வூதிய வெட்டு, வளைகுடா நாடுகளிலும், ஆப்பிரிக்க – அரபு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள வெடிப்பு, வளர்ந்த நாடுகளிலேயே நடைபெற்றுவரும் போராட்டங்கள், லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், உலகளாவிய அளவில் சோசலிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், சர்வதேச அமைப்பு களுக்குள் முற்றிவரும் மோதல் இவை அனைத் தையும் பற்றிய மார்க்சீய – லெனினிய சித்தாந்த அடிப்படையிலான பார்வையை இறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

எனவே சிபிஐ(எம்)இன் மத்தியக் கமிட்டி இந்த விவாதத்தை இந்தத் தருணத்தில் நடத்து வது சாலப் பொறுத்தமனது என முடிவு செய் துள்ளது. இந்திய நிலைமைகளைச் சரியாகப் புரிந்து கொள்ள, அங்கு கட்சியின் திட்டத்தை நிறைவேற்ற இன்றைய உலக நிலைமையின் தன்மைகளை ஆழமாகப் புரிந்துகொள்வது மிக மிக அவசியம் என்ற அவசரத்தன்மையுடன் சிபிஐ(எம்)இன் இருபதாவது கட்சிக் காங்கிரஸ் “தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த” – ஒரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.

ஆதார நூல்கள்

கம்யூனிஸ்ட் அறிக்கை (1848)

னுசயகவ கூhநளநள டிn சூயவiடியேட & ஊடிடடிnயைட ணுரநளவiடிளே – ஏ.ஐ. டுநnin (1920)

மூன்றாவது அகிலத்தின் தகர்வு – சோவியத் பப்ளிகேஷன்

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் பிரகடனம் – 1957

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் பிரகடனம் – 1960

சிபிஐ(எம்) 7வது மாநாட்டு ஆவணங்கள் – 1964

சர்வதேசிய தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்த சிபிஐ(எம்) தீர்மானம்

(பர்துவான் பிளீனம்) – 1968

ஊஞளுரு  மாநாட்டு ஆவணங்கள் – 20வா ஊடிபேசநளள 1958,

27வா ஊடிபேசநளள 1986, 28வா ஊடிபேசநளள 1988

சில தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த சிபிஐ(எம்) தீர்மானம் – 1992

சென்னை(14வது காங்கிரஸ் ஆவணங்கள்)

டீn ஊடிஅஅரnளைவ ருnவைல – ழ.ளு. ளுரசதiவா,

கூhந ஆயசஒளைவ,  ஏடிட ஓஐஐ, சூடி 1, 1995

 

 

 Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: