முன்னுரை
சொத்துடமையை முதன்மை படுத்தி, மனித உரிமைகளை அடியில் தள்ளி உருவான இந்திய அரசியல் நிர்ணய சட்டம், நல்ல வேளையாக இந்திய குடிமகன்,மகள் அனைவருக்கும் சமத்துவ அடிப்படையில் தண்ணீர் பெறும் உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தை வடிவமைக்க நடந்த விவாதங்களை இன்று பரிசீலிக்ககிற ஒருவர் அன்று அரசியல் நிர்ணய சட்ட சபையில் மனித உரிமையை முதன்மைபடுத்தும் சமத்துவ சித் தாந்தமும், சொத்துடமையை முதன்மை படுத்தும் சனாதன முதலாளித்துவ சித்தாந்தமும் மோதியதை காண்பர், அதே வேளையில் அன்று முதலாளித்துவமும், பிரபுத்துவமும் ரோடு ரோலர் போல் மனித உரிமைகளை எழுத் திலேயே நசுக்க இயலாமல் போனதையும் காண்பர். அந்த மோதலில் மக்களின் தண்ணீர் உரிமை அங்கிகாரம் பெற்றது சமத்துவ உணர் விற்கு கிடைத்த வெற்றியாகும் .இருந்தாலும் இதுவரை ஆட்சியில் அமர்ந்தோர் நீர் பகிர்விற்கு இந்த கொள்கைப்படியாகவும், சட்டப்படி யாகவும் சரியான ஏற்பாட்டை உருவாக்குவதில் தவறி விட்டனர்.
இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமும் நீர் தட்டுப்பாடும் கொண்ட ஒரு நாட்டில், சொத்துடமை அடிப்படையிலும், சந்தை முறை மூலமும் நீர் பகிர்வை செய்ய இயலாது, மனித உரிமை கோட்பாட்டு அடிப்படையில்தான் நதி நீர் பகிர்வு அமைய முடியும். வேறு மாதிரி சொல்வதென்றால் அரசாங்கத்தில் முத லாளித்துவ முறையே கோலோச்சினாலும், தண்ணீர் பிரச்சினையை முதலாளித்துவ அடிப் படையில் தீர்க்க முயன்றால் கலவரமும், அடக்கு முறையுமே மிஞ்சும். பிரச்சினை தீராது. சமத்துவ அடிப்படையில் அதாவது சோசலிச கோட் பாட்டின் அடிப்படையில் தீர்வை உருவாக்குகிற பொழுதுதான் அமைதியும், பொருளாதார வளர்ச்சியும் உத்தரவாதப்படும். இது எதார்த்த மாகும்.
இந்தியாவைப் பொறுத்த வரையில் தண்ணீர் அதிக முள்ள இடத்திலிருந்து தவிப்புள்ள இடத்திற்கு ஓரளவு நீரை மாற்ற குறுக்கே எந்த உடமைக் கோட்பாடும், வரலாறும் நிற்க முடியாது. எவ்வளவு நீர், எங்கு, எதற்கு என்பதில் தான் தவா எழ வாய்ப்புண்டு .
அன்றும்- இன்றும்
பிரிட்டீஷ் ஆட்சி காலத் தில் நதி நீர் பகிர்வு என்பதன் அடிப்படையே வேறு. அது ராணுவ பலத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் அரசின் வருவாய் என்பது பெரும்பாலும் நிலவரியை சார்ந்து இருந்தது, அது ஒழுங்காக வரவேண்டுமானால் பாசன வசதி செய்யாமல் நடக்காது. மார்க்ஸ் குறிப்பிட்டது போல் இந்திய மன்னர்கள் காலத்தில் முக்கியமாக இருந்த நீர் பாசனவசதித் துறையை இழுத்து மூடிய ஈஸ்ட் இந்தியா கம்பேணி ஆட்சி மாறி பிரிட்டீஷ் அரசின் நேரடி ஆட்சி வந்த வுடன் 1858 லேயே பாசன வசதி செய்யாமல் இந்தியாவை ஆள்வது நஷ்ட தொழிலாகும் என்று கருதியது, பிரிட்டீஷ் அரசு பொதுப் பணித்துறையை அமைத்து பாசன வசதிக்கு திட்டமிட்டது.அன்று மன்னர்கள் வசமிருந்த அண்டை ராஜ்யங் களில்லிருந்து நீரை கொண்டுவர நடிவடிக்கைகள் எடுத்தது.இதற்கு அரசின் வருவாயை உத்தர வாதப்படுத்தும் நோக்கமே தவிர வேறு நோக்கம் கிடையாது . நமது நாட்டு விவசாயிகளை வாழ வைக்கும் நோக்கம் கொண்டது என்று யாராவது நம்பினால் அது மூடநம்பிக்கையாகும், அன்றைய காலத்து குடிமராமத்து என்ற பெயரில் கிராமமக்களின் செய் கூலி இல்லா பாசன மராமத்து வேலை முறை, .நில உரிமை கோர இயலாத விவசாயிகள், ஓர் அறை கொண்ட குடிசை, சேரி வாழ்வு, கடன் சுமை, வரி வசூல் கெடுபிடி, பஞ்சத்திற்கு முதலில் சாவது, இவைக ளெல்லாம் அன்றைய விவசாயம் செய்பவனின் வாழ்வு நிலையாகும். அந்த விவசாயிகளின் அடையாளமாக காந்தி விளங்கினார் என்பதே அவரது சிறப்பு அந்த வரலாற்றை அறியாத அரசியல் தலைவர்கள் இன்று நம்மிடையே இருப்பது வெட்க கேடாகும்.
இந்திய நீர் நிலவரம்
சர்வதேச அளவுகோலின்படி தலைக்கு வருடத்திற்கு 1700 கனமீட்டருக்கு குறைவாக நீர் கிடைக்கும் நிலை இருந்தால் அந்தப் பகுதி நீர்பற்றாக் குறை உள்ள பகுதியாகும்.தலைக்கு வருடத்திற்கு 1000 கனமீட்டருக்கும் குறவாக கிடைக்குமானால் நீர் தவிப்பு உள்ள பகுதியாகும். இந்தியாவைப் பொறுத்தவரை தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடு. இந்தியாவின் 40 சத பகுதி நீர் வளமிக்கதாகவும், 60 சத பகுதி பற்றாக் குறை பகுதியாகவும் உள்ளது. வருடத்தில் சுமார் 690 பில்லியன் கனமீட்டர் நீர் பயன்படுகிறது. இதில் 432 பி.சி. எம் நிலத்தடி நீராகும். இந்தியாவில் கிடைக்கிற நீரை தலைக்கு வருடத் திற்கு எவ்வளவு என்று கணக்கிட்டால் ஒரு புள்ளிவிபரப்படி 1951ம் ஆண்டில் 5177 கனமீட்ட ராக இருந்தது, 2001ல் 1820 கனமீட்டராக குறைந்துவிட்டது, வெகு சீக்கிரம் தொழில் வளர்ச்சி தேவையாலும்,மக்கள் தொகை பெருக்கத்தாலும் நீர் தவிப்பு பகுதிகள் உருவாகும் அபாயம் உண்டு என்று நிபுணர்கள் கணக்கிடு கின்றனர். முன் யோசனையுடன் கொண்ட நீர் பகிர்வு திட்டமும், நிதி ஒதுக்கீடும், மாநிலங் களுக்கிடையே ஒத்துழைப்பிற்கான கோட் பாடும் அவசியம் என்று நிபுணர்கள் விவாதிக் கின்றனர். நதிகளை இனைப்பது அல்லது கால்வாய்கள் மூலமோ, குழாய்கள் மூலமோ, மலைகளை குடைந்து சுரங்க வழியாகவோ, தடுப்பணைகள் கட்டி நீரை இறைக்கும் திட்ட மூலமோ நீரை தவிக்குமிடத்திற்கு கொண்டுவர நிபுணர்கள் கடந்த 60 வருடமாக எழுதியும், கருத்தரங்குகள் நடத்தியும் விவாதிப்பதையும் காண்கிறோம். அரசுகள்தான் அக்கறையற்று இருக்கின்றன.
எனவே சமத்துவ அடிப்படையில் நீர் பங்கீடு தவிற சிக்கனமான மாற்று இன்று எதுவுமில்லை. இந்த பொதுவான அம்சங்களை கொண்டு முல்லை பெரியார் பிரச்சினைகளின் தன்மை களை இங்கே பரிசீலிப்போம்.
நதி நீர் பகிர்வு பிரச்சினையில் மாநில அரசுகள் மோதுவதும், மத்தி அரசு வேடிக்கை பார்ப்பதும் முதல் தடவையல்ல. அரசியல் ஆதயம் தேடுகிற போட்டியாலும், செய்திகளை பரபரப்பாக்கும் வெறி கொண்டலையும் ஊடகங் களாலும் சமரசம் என்பது தொடுவானமாகிவிடு கிறது. இழந்த செல்வாக்கை மீட்கவும்,பெற்ற செல்வாக்கை காக்கவும் சில அரசியல் தலைவர் கள் நதி நீர் பிரச்சினைகளில் பழையதை பேசி முறுக்கி விடுகின்றனர். “நான் சொல்வதை கேட்கத்தவறினால் தேச ஒற்றுமை கெடும்” என்று மிரட்டுகின்றனர். தீர்வை நோக்கி விவாதிக்க கருத்துக் கூறுகிற மார்க்சிஸ்ட் கட்சி போன்ற அரசியல் இயக்கங் களையும், நிபுணர் களையும் முத்திரை குத்தி தாக்குவதில், இறங்கு கின்றனர். விவேகமாக விவாதிக்க மறுக்கின்றனர்.
முல்லை பெரியார் அணை- வரலாறு
மேற்காக எந்த பயனுமின்றி முல்லை பெரியார் ஆறு ஓடிக் கொண்டிருந்த காலத்தில் அதாவது நீர் மின்நிலையங்கள் நிறுவப்படாத காலத்தில் அந்த நீரை கிழக்காக ஓடும் வைகைக்கு திருப்பிவிடும் திட்டத்திற்கு முதலில் 1789ல் விதை போட்டவர் திவான் முத்திருளப்ப பிள்ளை ஆவார். அன்றைய தேதிகளில் ராமநாதபுரம் ஈஸ்ட் இந்தியா கம்பேணி ஆட்சிக்கு உட்படாத தனி நாடாக இருந்தது. ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் வர்த்தக கப்பல்களுக்கு சுங்கவரி வசூலித்து வந்தது.ஈஸ்ட் இந்தியா கம்பேனி இப்பகுதியை ராணுவ பலத்தின் மூலம் கைப்பற்றி கப்பம் கட்டுகிற பகுதியாக ஆட்சியை விரிவு படுத்த காரணங்களை தேடிக்கொண்டிருந்தது. படை எடுக்க திட்டமிட்டு, ஈஸ்ட் இந்தியா கம்பேணி மன்னரை மிரட்டிக்கொண்டிருந்தது. ஒழுங்காக கப்பத்தை கட்டி கம்பேணியின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பலாம் என்பது திவான் முத்திருளப்ப பிள்ளை யின் பார்வை. கப்பத்தை தவறா மல் கட்ட வேண்டுமானால் விவ சாயம் செழிக்க வேண்டும். குறை வான மழை பெய்கிற பகுதியாக இருப்பதால் ஏரி, குளங்கள் ஏராளம் உருவாக்கினாலும் போதுமான தண்ணீர் சேமிக்க கிடைக்காது, மலை முகட்டிற்கு சென்று முல்லை பெரியார் ஆற்றை திருப்பிவிட்டால் ஏரி குளங்கள் நிரம்பி முப் போகம் விளையும் பூமியாக ஆகி உணவுப் பஞ்சம் இல்லாமல் இருக்கலாம், என்பது முத்திருளப்பபிள்ளையின் கருத்து, கம்பெனி யுடன் நல்லுறவு, முல்லைபெரியார் நதி நீர் இந்த இரண்டும் ராமநாதபுர ராஜயத்தை காக்கும் என்பது அவரது கணிப்பு.
மன்னரின் வழி!
ராமநாதபுர மன்ன ருக்கோ கம்பெனியின் மிரட்டலை டச்காரர் களின்(நெதர்லாண்ட்) உதவியுடன் எதிர்த்து வெல்ல முடியும் என்ற கணிப்பு. அதற்காக பீரங்கிகள் தயாரிப்பில் இறங்கினார்.முதலில் பிரிட்டீஷ் படையை வெல்லும் அளவிற்கு மன்னரின் ராணுவ பலமில்லை.அடுத்து டச்சுக்காரர்களை நம்பி நின்றது ஆபத்தானது. ஐரோப்பிய ஏகாதிபத்திய வாதிகளில் பிரிட்டீஷ்- டச் உறவு மானை வேட்டையாடும் சிங்கத்திற்கும், அது அடித்துப் போட்டதில் பங்கு கேட்கும் ஓநாய்க்கும் உள்ள உறவு என்பதை மன்னரால் ஊகிக்க முடிய வில்லை.
1795ல் பிரிட்டீஷ் கம்பெனி அரசு கர்னல் மார்ட்டினிஸ் தலைமை யில் ஒரு படையை அணுப்பி ராமநாடை கைப்பற்றியது. மன்னரை கைது செய்து சென்னை கோட்டையில் 1805(?)ல் சாகும்வரை சிறை வைத்தது. கலவரம் விளை விக்கிற, தொந்திரவு கொடுக்கிற நாடு என்று முத்திரை குத்தி அதை கப்பம்கட்டுகிற பகுதியாக ஆக்குவது என்ற முடிவை நிறைவேற்ற கர்னல் மார்ட்டினிஸ்சை அங்கேயே முகாமிடவைத்தது.
நிலவரியும், நீர்பாசனமும்
நிலவரி வசூலை உத்தரவாதப்படுத்த வேண் டிய அவசியம் இப்பொழுது கம்பேனி நிர் வாகத்திற்கு ஏற்பட்டது. குடிமராமத்து என்ற பெயரில் கிராமமக்களை செய் கூலி கொடுக் காமல் வேலை செய்யவைத்து பாசன வசதியை உத்தரவாதப்படுத்தும் முறையை தவிர வரி வசூலில் ஒரு பகுதியை ஒதுக்கி வேலை ஆட்களை கூலிக்கு அமர்த்தி பாசன வசதி செய்ய கம்பேனி என்றுமே விரும்பியதில்லை. இன்னொரு நாட்டு ஆற்றை திருப்பிவிட அந்த நாட்டு அரசனோடு ஒப்பந்தம் செய்யாமல் சண்டையில் வெல்லலாம் என்பதும் கம்பேனியின் கணக்கு, குடிமராமத்து போல் செய் கூலி கொடுக்காமலும், மன்னரின் சம்மதம் பெறாமலும் பெரியார் ஆற்றை திருப்பி விட முடியமா என்று 1808ல் கேப்டன் ஜே.எல் கால்டுவெல் ஆய்வினை மேற்கொண்டார். பைசா செலவில்லாமல் வேலை நடக்காது என்று அறிந்த இன்ஜினியர் கேப்டன் ஜே.எல் கால்டு வெல் திட்டத்தை நடைமுறை சாத்தியமற்றது என்று பைலை மூடிவிட்டார்.
1850ல் முத்திருளப்ப பிள்ளையின் யோசனையில் உள்ளபடி மண்ணா லும் கற்களாலும் தடுப்புச் சுவர் கட்டி நீரைத் திருப்ப கம்பேனி யோசித்தது. செய் கூலி கொடுக்கத் தயங்கி திட் டத்தை கைவிட்டது. மழையை நம்பியே விவசாயிகள் இருந்ததால் பஞ்சம் தலைவிரித் தாடியது. வரிவசூல் கொடுமை பிரிட்டீஷ் நாடாளு மன்றத்திலேயே எதிரொலித்தது
சிப்பாய் எழுச்சிக்குப் பிறகு 1886ல் தான் அதாவது பிரிட்டீஷ் அரசின் நேரடி ஆட்சி வந்த பிறகுதான் திருவாங்கூர் மன்ன ருக்கும், பிரிட்டீஷ் அரசிற்கும் 999 வருடத்திற்கு குத்தகை ஒப்பந்தம் வந்தது. இந்திய சிப் பாய் களின் எழுச்சியால் பாடம் கற்ற பிரிட்டிஷ் அரசு 1858ல் நிலவரி வசூலை மேன்மைபடுத்திட பொது மராமத்து துறையை உருவாக்கி அரசே முதலீடு செய்து பாசன வசதிக்கு ஏற்பாடு செய்தது. ஆனால் தாங்கள் போட்ட முதலுக்கு வரி வசூல் மூலம் லாபம் கிடைக்குமென்று கணக்குப் போட்ட பிறகே முதலீடு செய்யும் கொள்கை அதற்கு இருந்தது.
1862ல் ராணுவ என்ஜினியர் கேப்டன் ஜே.ஜி. ரைஸ் முத்திருளப்ப பிள்ளையின் யோசனையைப் போல் கல்லாலும் மண்ணாலும் 62 அடிக்கு சுவர் எழுப்பி ஆற்றை கிழக்காக ஓடவைக்க ஒரு திட்டத்தை கொடுத்தார். அது நிராகரிக்கப் பட்டது. கொடிய பஞ்சம் வரவே மீண்டும் நீரின்றி அரசின் வருமானம் பாதிக்கும் என்ற நிலையில் பொது மராமத்துதுறை ஒரு திட்டத்தை தயாரித்து மராமத்து துறையில் பணிபுரிந்த மேஜர் ஜான் பென்னி குயிக்கை பொறுப்பாக்கி, பணமும் ஒதுக்கியது.
முல்லை பெரியார் ஆறும் தடுப்புச் சுவரும்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 853 மீட்டர் (2800 அடி) உயரத்தில் நடுக்காட்டில் கட்டப் பட்ட இந்த அணை மனித உழைப்பின் மகோன் னதத்தை பறை சாற்றும் ஒரு சாதனை என லாம்.அணை கட்டுவதில் அன்றைய தொழில் நுட்ப கூறுகள் இன்றளவு இல்லை என்பதை வைத்துப் பார்த்தால் அது ஒரு இமாலய சாதனை ஆகும்.இந்த அணைகட்டுவதற்கான தொழில் நுட்பம் மேஜர் ஜான் பென்னிகுயிக் கண்டுபிடிப் பல்ல. நீரின் அழுத்தம் சுவரை தள்ளி உடைக் காமல் இருக்க கையாண்ட தொழில் நுட்பமும் நமக்குத் தெரியாததல்ல. ஏல்லா ஏரி குளங்களும் உடையாத கரைகளை கொண்டதாக அமைய நமது முன்னோர்கள் பின் பற்றிய தொழில் நுட்பமே இதிலும் பயன்படுத்தப்பட்டது, அதாவது அணைச்சுவரின் ஒரு பக்கத்தை சாய்தளமாக அமைப்பது(படத்தை பார்க்கவும்)
அணைச்சுவர்கள் கட்ட கையாண்ட தொழில் நுட்பமும் நமது முன்னோர்கள் கண்டுபிடித் தவைகளே. சிமென்ட்டிற்கு பதிலாக சுண் ணாம்பு,செங்கல் தூள், கருப்பட்டி, கடுக்காய் முட்டை இவகளை கலந்து தயாரித்த நீரில் கரையா பசை பயன்படுத்தப்பட்டது, அணை கட்டுமானத்தைவிட மலையைக் குடைந்து 1738.5மீட்டர் சுரங்கப்பாதை வழியாக தண்ணீரை கொண்டுவந்தது மனித உழைப்பின் அற்புத மாகும் . துளைக் கருவிகள் நவீன, எந்திரங்கள் இல்லாமல் நூற்றுக் கணக்கான உழைப்பாளிகள் கடப்பாறை, மண் வெட்டி மூலம் சுரங்கம் அமைத்தது பெரிய சாதனையாகும்.
80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல்லையும் இதர பொருட் களையும் எடுத்துச் செல்ல நூதன வழிகளை கண்டனர். கூடலூரிலிருந்து தேக்கடி வரை வாளிகளில் நிரப்பி வட்டு தொகுப்பும் கயிரும் கொண்டு தூக்கி இழுத்துச் சென்றனர், அதன் பிறகு மாட்டுவண்டிகளை பயன் படுத் தினர்.காட்டிற்குள் மீண்டும் வட்டுத் தெகுப்பு கயிற்று வாளி இறவை, பெரியாரில் கலக்கும் ஒரு சிற்றாரை(மூலிய பாஞ்சான்) தடுத்து குளமாக்கி படகுகள் மூலம் கட்டுமானப் பொருளை கொண்டு சென்றனர்.
கொசுக்கடி மலேரியாவை வெற்றி கொள்ள அலோபதி மருந்தை நாட வில்லை, தென்னம் பாளை, பாக்கு பாளை, கறுப்பட்டி இன்னும் சில மூலிகைகளை கலந்து நொதிக்கவைத்து வடிகட்டி தயாரித்த சாராயமே கை கண்ட மருந்தாக பயன்பட்டது. அணை கட்டுகிற பொழுது நீர் பெருகி உறுதிபடாத சுவரை அடித்துச் செல்லக் கூடாது என்பதற்காக இரவு பகல் என்று பாராமல் நமது ராணுவ வீரர்கள் மனித சுவராகி நின்று சுண்ணாம்பு பசை உறுதிபடுகிற வரை காத்தனர். 1889ல் ஆரம்பித்த திட்டம் 1895ல் முடிவுற்றது.
அடி மட்டத்திலிருந்து அணையின் உயரம் 53.6 மீட்டர்(176 அடி) சென்னை லைட்கவுசை விட (151அடி) 25 அடி கூடுதல் உயரம்.அணை அடி மட்டத்தின் அகலம் 42.2 மீட்டர்(138 அடி ) அணையின் உச்சியின் அகலம் 3.6 மீட்டர்( 12அடி) அணையின் அடிமட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் நீர் வைகையை நோக்கி வரும்1738.5மீட்டர்(5704 அடி நீளமுள்ள)சுரங்க அமைப்பு உள்ளது.104 அடிக்கு மேல் உள்ள நீர் சுரங்கங்கப்பாதை வழியாக வழிந்துவிடும், அதனை வழிப்படுத்த மதகு கதவுகள் உள்ளன.
மேஜர் ஜெனரலின் பென்குயிக்கின் திறமை
மேஜர் ஜெனரலின் பென்குயிக்கின் திறமை நமது பராம்பரிய தொழில் நுட்பத்தை பயன் படுத்தியது. பல நூற்றுக்கணக்கான உழியர்களை இனைத்து செயல்படவைத்தது. சவாலாக எடுத்து அணையை கட்டி முடித்தது .சிமெண்டைபோல் சுற்றுப்புற சூழலை கெடுத்து தயாரிக்கப்படாத இயற்கையாக கிடைக்கும் சுண்ணாம்பு கலவையை பயன்படுத்தியது. இதற்காக அவரை பாராட்டலாம். ஆனால் கும்பிட தகுதி படைத்தவர்கள் நமது முன்னோர் களும், அன்றைய தொழிலாளர்களும் ஆவர். அணை தாவா எழவில்லையானால், ஆதிகால தொழில்நுட்பங்களையும். அணைகட்ட உழைத்தவர்களையும், உயிர்த் தியாகம் செய்தவர்களையும் மறந்தது போல் இவரும் நினைவிற்கு வந்திருக்க மாட்டார் . அணைப் பிரச்சினையை அடையாள அரசியலாக்கும் நோக்கத்தை ஈடேற்ற அவரை மட்டும் தூக்கி வைத்து பாராட்டுவது 2000ல்தான் தொடங்கியது என்பதை நாம் கவனிக்க தவறக் கூடாது.
உழைப்பின் மேன்மை
அணை கட்டுகிற போது விபத்திலும், கொடிய மலேரியா ஜுரத்திலும் பலியானவர்கள் எண் ணிக்கை பல நூறுகளை தாண்டி நின்றது. இந்த அணை உருவாக சாதித்தது பெரும்பாலும் தமிழ் சிப்பாய்களைக் கொண்ட முதலாவது, ஐந்தாவது மதராஸ் பட்டாலியன் ஆகும். உண்மையில் உடல் தசைகளை மட்டுமே சார்ந்து சாதித்த உழைப் பாளிகள், உயிரைக் கொடுத்து உயிர் கொடுத்த தெய்வங்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் . இறந்த வெள்ளையர்களுக்கு அங்கே சமாதி உண்டு, நூற்றுக்கணக்கில் விபத்திலும், ஜுரத்தி லும் இறந்த நம்மவர்களுக்கு எந்த நடுகல்லும் கிடையாது. இன்று பென்குயிக்கை தூக்கிவைத்து ஆடுபவர்கள் ஏன் தண்ணீர் கொடுக்க சம்மதித்த திருவாங்கூர் மன்னரையோ, ஆற்றை திருப்ப முடியுன்று முயற்சித்த முத்திருளப்ப பிள்ளை யையோ, உயிர் தியாகம் செய்த சிப்பாய் களையோ நினைவு கூறக் கூட மறுப்பதேன்!
பெரியபுராணம் பாடிய சேக்கிழார் இருந் திருந்தால் அந்த உழைப்பாளிகளை நாயன்மார் களாக்கி பாடி நமது விவசாயிகளை கும்பிட வைத்திருப்பார். செய் கூலி கொடுக்காமல் வேலை வாங்கிய மேஜர்ஜெனரலை நமக்கு அடையாளம் காட்டியிருப்பார்.அவர் பிரிட்டீஷ் அரசு ஒதுக்கிய தொகையைவிட கூடுதல் செலவு செய்ய மனைவியின் நகையை விற்கவேண்டிய சூழலையும் நமக்கு அறியவாப்பு கிடைத்திருக்கும். பாரதி தாசனுக்கு மனித சுவராக நின்று அணையை தாங்கிய ராணுவ வீரர்களைப்பற்றிய தகவலை சொல்லியிருந்தால்
ஏ ! 44கோடி கனமீட்டர் நீரே! அதனைத் தாங்கும் ஏ! அணையே!,ஏ சுரங்க கால்வாயே! நீங்கள் நிலைக்க எம் தோழர்கள் சிந்திய வேர்வை. குறுதி, உயிர்கள் எத்தனை எத்தனை
என்று கேட்டு சாகா வரம் பெற்ற கவிதைகளை புனைந்திருப்பார். பென் குயிக்கை புகழும் தமிழக அரசியலில் ஊடக தயவால் பிரபலமான தலைவர்களுக்கு பாட்டாளிகளின் உழைப்பை அங்கிகரிக்கும் பண்பாடு இனிதான் வரவேண்டும் என்பதை பார்க்கிற பொழுது, வருத்தப்படவா? வெட்கப்படவா? வாசகர்கள் முடிவு எடுக்கட்டும்.
தாவா!
முல்லை பெரியார் அணைப் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பது என்ற முடிவிற்கு இரு அரசுகளும் வருமானால் அதுவே வரவேற்க வேண்டிய தீர்வாகும். ஏன் எனில் அரசியல் ஆதாயம் தேடுகிற முறையில் மத்திய அரசும் நடக்கிறது என்ற சந்தேகம் இருக்கிற நிலையில் இதுவே சிறந்த முடிவாக இல்லாவிட்டாலும் சாத்தியமான தீர்வாகும். சிறந்த தீர்வு என்பது இரு முதலமைச்சர்களும், பிரதமரும், அமர்ந்து வெளிப்படையாக பேசி தீர்வுகாண்பது என் பதே முல்லை பெரியார் அணை சம்மந்தமாக மன்னர் போட்ட ஒப்பந்தம் தவிர, 1970ல் கேரள அரசிற்கும், தமிழக அரசிற்கும் ஏற்பட்ட ஒப்பந்தமும் உண்டு. மன்னர் காலத்து ஒப்பந்தம் போல் 70ம் ஆண்டு ஒப்பந்தமில்லை. இது இரு அரசுகளும் ஏற்றுக் கொண்ட இரு மருங்கிலும் பயன் தருகிற ஒப்பந்தம், இப்பொழுதும் இரு மருங்கிலும் மக்கள் நலனைக் கருதினால் தீர்வு சாத்தியமே. பெரியார் அணைப்பிரச்சினை கேரளம்- தமிழகம் இரு மாநில மக்களின் பயங்களை மனதில் கொண்டு தீர்க்க வேண்டிய பிரச்சினை. அங்கே அணை உடையுமோ என்ற பயம். இங்கே நீர் கிடைக்காமல் போகுமோ என்ற பயம். இது கேரள நதி, தமிழகம் உரிமை கோரமுடியாது என்று கேரளம் கூறமுடியாது.
அது போல், 999 வருட ஒப்பந்தத்தை காட்டி, அணை எங்களது, அதில் கேரளம் மூக்கை நுழைக்க கூடாது என்று துரைமுருகன் பாணியில் தமிழகம் சொல்லவும் கூடாது. 1970 ஒப்பந்தமே எதைக்காட்டுகிறது. பிரச்சினை எழுமானால் இரு தரப்பும் கலந்து பேசவேண்டும் என்பது தானே. கேரளா புதிய அணை கட்ட திட்டமிட்டபொழுது தமிழகத்தை கலக்காமலே போட்ட திட்டமென்று ஏன் குற்றம் சாட்டு கிறோம். நீர் தவிப்புள்ள இடத்திற்கு நீரை கொண்டு செல்ல சிக்கல் எழும் என்பதால் தானே.
புதிய அணை கட்ட தமிழகத்திடம் கேட்க வேண்டாம் என்ற நிலையை கேரள அரசு எடுத்தால் அது தவறு. குழப்பமேன்? எத்தனை டி. எம். சி நீர், மின்சாரம் எவ்வளவு ,நிதி ஆதாரம், பாரமரிப்பு பொறுப்பு பிரச்சினை, மத்திய மற்றும் இரு மாநில அரசுகளின் பொறுப்பு கடமை இவைகளைச் சுற்றி வெளிப்படையான விவாதம் நடை பெறாமல் இருப்பதாலேயே இரு மருங்கிலும் பதட்டமும் , குழப்பமும் நிலவுகிறது என்பதை இரு மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பல காரணங்களால் இரு மருங்கிலும் நீர் பகிர்வு, நீர் மின்நிலையங்கள் அமைப்பது பற்றிய பிரச்சினைகள் பைலுக்குள் மறைக்கப்பட்ட தாலேயே அணை உடையுமா உடையாதா என்பதை முன் நிறுத்தி அடையாள அரசியல் இரு மருங்கிலும் தலைவிரித்தாடி வருகிறது.
அணைக்கு ஆபத்து என்பது ஒரு புரளி பென்குயிக் என்ற தெய்வாம்சம் பொருந்திய நபரால் கட்டப்பட்ட அணை. பழுதடையா வரம் பெற்ற அணை என்று இங்கே பில்டப் செய்யப் படுகிறது.
அணைக்கு ஆபத்து என்றபயம் கேரளத்திற்கு இருப்பதை ஊடக பில்டப் என்று தமிழக முன்னாள் முதல்வர் கூறுவதும் சரியல்ல, கடந்த டிசம்பரில் அணையை மையமாக கொண்டு ஏற்பட்ட ஏற்பட்ட பூமி அதிர்ச்சிகளும் பயத்தை கிளப்ப பங்களித்துள்ளது.
கேரளத்தில் புதிய அணை கட்டுவதற்கான திட்டங்களை பரிசீலிக்கும் நடுநிலை நிபுணர்கள் கூறுவது: அது அதிக கொள்அளவுள்ள அணை யாக இருக்கிறது. அது இப்பொழுது ஏற்பட்ட பூமி அதிர்ச்சியைக் கூட தாங்க இயலாது.அது தவிர காடுகள் தண்ணிரில் மூழ்கி, சுற்றுப்புர சூழலும், வன விலங்குகளின் இனங்கள் எடுபட்டு போகும் ஆபாயம் இருக்கிறது . பெரியார் அணை உடைந் தால் என்னென்ன நிகழுமோ, அவைகள் புதிய அணைகட்டினால் நிகழும் என்று நடுநிலை நிபணர்கள் சுட்டிக்காட்டு கின்றனர். இந்த சர்ச்சை கேரளத்திலேயே நடை பெறுகிறது.
இதை ஒட்டி சில நிபுணர்கள் சில ஆலோ சனைகளை வைக்கின்றனர். அவைகளாவன:
1) கேரள மக்களே பயப்படுகிற புதிய அணையும் வேண்டாம், இப்பொழுது இருக்கிற அணை யின் நீர் மட்டத்தின் அளவை கூட்டவும் வேண்டாம்,
2)காலத்தால் சிதலமடையும் பழைய அணையை புதுப் பிப்பது,நீர் இன்றி தவிக்கிற தமிழக மக்களுக்கு நீர்கிடைக்க புதிய கால் வாய்கள் அல்லது இருக்கிற வழியை பெரிது படுத்துவது,
தமிழக பகுதியில் ஏரி குளங் களை சரி செய்வது இதற்கெல்லாம் ஐந்தாண்டு திட்டமாக கருதி மத்திய அரசு நிதி கொடுப்பது.
படத்தைப் பாருங்கள் 104 அடி உயரத்தில் சுரங்க வழி உள்ளது, இப்பாழுதும் பெரியாறு மின் நிலையமியங்க தண்ணீர் வருகிறது. எனவே நீர் மட்டத்தை உயர்த்து என்று குரல் கொடுப் பதை விட நீர் வரும் அளவை கூட்ட புதிய கால்வாய்கள் அமைப்பது. பழைய வழிகளை தூர்வாரி பெரிதாக்குவது,தமிழக மக்களின் பயத்தை போக்க நீரை உத்தரவாதப்படுத்துவது.
3) மின்நிலையம் இயங்க கட்டப்பட்ட அணையில் கம்பம் பகுதி விவசாயத்திற்கான நீரை கொண்டு செல்ல மடைகளும் உள்ளன. எனவே உபரி நீரை, கால்வாய்கள் வழியாக இதர ஏரி குளங்களுக்கு கொண்டு செல்ல முடியும்.
4) அணை பராமரிப்பை தமிழக அரசே கவனிப்பது அல்லது இரு தரப்பும் ஏற்கிற சமரச வழி காண்பது.
இதை ஒட்டி விவாதங்களை தூண்ட அரசியல் தலைவர்கள் முன்வந்தால்,இரு மருங்கிலும் பதட்டமும் பயமும் குறையும். நமக்கு நீர் கிடைக்காது என்ற பயம் போகும், அவர்களுக்கு அணை உடையும் என்ற பயம் போகும்.
இடதுசாரி அரசியல்
தண்ணீர் அதிகமுள்ள இடத்திலிருந்து நீர் தவிப்புள்ள இடத்திற்கு தருவது என்ற கோட் பாட்டை முதன் முதலாக ஏற்று ஒப்பந்தம் போட்ட பெருமை ஈ.எம். எஸ் அமைச்சரவை யைச் சாரும். கேரளத்தில் இடது சாரி ஆட்சியின் போது சுமூக தீர்விற்கு முயன்றது என்பதை யாரும் மறுக்க முடியாது, இப்பொழுதும் விவேகமான விவாதத்தை தூண்டுகிற முறையில், நீர் கொடுப்பது தனது கடமை என்ற உணர்வில் தனது பக்க நிலையை மார்க்சிஸ்ட் கட்சி வைக்கிறதே தவிர, வேற்று மையை விதைத்து ஆதயம் தேட விரும்ப வில்லை என்பதை பத்திரி கைகளை படிப்பவர்கள் அறிவர்.
அடிக்காதே, அடிக்காதே நீர் கொடுப்பவனை அடிக்காதே என்று முழக்க மிட்டு பரபரப்பை உருவாக்க முயன்ற கட்சியின் சில பகுதியினர் செயலை கேரள மாநிலக்குழு மறுத்து தனது நிலைபாட்டை தெரிவித்துள்ளது. தமிழகத் தில் செல்வாக்கிழந்த சில அரசியல் கட்சிகளின் வெறிப் பேச்சு தூண்டுதலால் நடைபெறும் சிறு, சிறு சம்பவங்களை பெரிது படுத்துவதை அங்கு மார்க்சிஸ்ட் கட்சி விரும்பவில்லை என்பதை காணமுடியும். இங்கும் சமரச தீர்விற்கு மார்க் சிஸ்ட்கட்சி துணை நிற்பதை காணமுடியும். தமிழக மக்கள் வேற்றுமையை விதைக் கும் அரசியல் தலைவர்களைவிட விவேகமான வர்கள் என்பதை வெகு சீக்கிரம் உலகம் அறியும் .
Leave a Reply