சோவியத் யூனியன் வீழ்ந்து 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்த 20 ஆண்டுகளில் ஏகாதி பத்திய உலகமயத்தின் ஆட்சியும் நவீன தாராள மய பொருளாதார நடவடிக்கைகளும் உல கெங்கும் பரவியுள்ளது. இந்த காலத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்காக ஏகாதிபத்தியம் அதிரடியாக செயல்பட்டுள்ளது. உலகெங்கும் பொருளாதார தடைகளையும் இராணுவ பலத் தையும் பயன்படுத்தி தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றுள்ளது. சோவியத் யூனியன் வீழ்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று ஏகாதிபத்தியம் எங்கே உள்ளது, எவ்வாறு உள்ளது? 20ஆம் நுற்றாண்டு சோசலிசம் முடிந்து விட்ட நிலையில் 21 அம நுற்றாண்டில் சோச லிசத்தின் எதிர்காலம் என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையில் இன்று உலக அளவில் இடதுசாரிகளின் நிலை, பங்குபாத்திரம், அவர்கள் செய்ய வேண்டிய பணி ஆகியவை குறித்துச் சிந்திக்க வேண்டி யுள்ளது. இரண்டு நிலைகள் ஏகாதிபத்தியத்தின் அதிரடி நடவடிக்கை வளர்ந்து வருவதை லிபியாவில் நடந்து முடிந்துள்ள அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ இராணுவ தலையீடு காட்டுகிறது. லிபிய நிகழ்விற்கு முன்னர், துனிஷி யாவிலும் எகிப்திலும் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் எழுச்சியை நாம் பார்த்தோம். துனிஷியாவிலும் எகிப்திலும் திடீ ரென்று எழுந்த கலகத்தைக் கண்டு அமெரிக்க்கா அதிர்ந்து போனது. ஆனால் ‘மனித உரிமைக் காப்போம், ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் மீட்டு எடுப்போம்’ என்ற போலி முழக்கங் களோடு லிபியாவை ஆக்கிரமித்து தனது மேலாதிக்கத்தை வெளிக்காட்டியது. அரபு நாடுகளின் எழுச்சியை தன் கையிலேடுத்ததுக் கொண்டது. சமீபத்திய லிபிய ஆக்கிரமிப்பு ஒரு உண்மையைத் தெளிவாகக் காட்டுகிறது. நீண்ட காலமாக காலனி ஆதிக்கத்திற்குக் கீழும் ஏகாதி பத்திய மேலாதிக்கத்திற்குக் கீழுமிருந்த மத்தியக் கிழக்கில் இந்த ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் உலகிலேயே அதிக எண்ணெய் வளமிக்க பகுதியாகும். உலகில் எண்ணெய் வளமிக்க நாடுகளை வரிசைப் படுத்தினால், அதில் முதலாவது நாடு சவூதி அரே பியா; இரண்டாவது இரான், முன்றாவது இராக், நான்காவது குவைத், ஐக்கிய அரபு நாடுகள் ஐந்தாவது இடத்திலும் ஆறாவதாக லிபியாவும் உள்ளன. லிபிய ஆக்கிரமிப்பின் மூலம் அதிக எண்ணெய் வளமிக்க முதல் ஆறு நாடுகளில் ஈரானைத் தவிர பிற 5 நாடுகள் இன்று அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடிக்குள் உள்ளன. ஆக இரண்டு நிலைகளை பார்க்க முடிகிறது. ஒரு புறம் ஏகாதிபத்தியத்தின் வளர்ந்து வருகிற ஆக்கிரமிப்பு; மறுபுறம் அதன் ஆக்கிரமிப்புப பகுதிகளில் ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி. 21ஆம் நுற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே மக்கள் எழுச்சிகள் நடைபெறுவதைப் பார்க்கி றோம். எகிப்திய எழுச்சி இராணுவத்திற்கும் இஸ் லாமிய மதத்தலைவர்களுக்கும் இடையிலான உடன்பாடகக் கூட முடிந்து விடலாம். இருப்பி னும் எகிப்து நிகழ்வுகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக நான் நினைக்கிறேன். எகிப்திய எழுச்சியின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவாக இன்று ஐக்கிய நாட்டு சபையில் பாலஸ்தீனத்தை சேர்க்க வேண்டும் என்பதற்கு ஆதரவு பெருகி உள்ளது. எகிப்திய நிகழ்வுகளின் விளைவாகத் தான் பாலஸ்தீனத்தில் எதிரும் புதிருமான கருத் தோட்டங்களைக் கொண்டுள்ள ஹமாஸ் குழு வும் ஹதாஸ் குழுவும் ஒன்றுபட உடன்பட்டுள் ளன. சோவியத் யூனியன் என்ற எதிர்சக்தி இல் லாத இன்றைய சூழலில் ஏகாதிபத்தியம் முன் னெப்போதையும்விட தீவிரமாகவும், கொடூர மாகவும், தான்தோன்றித்தனமாகவும் தாக்குத லில் இறங்கயுள்ளது. நிலைகுலைந்த சோஷலிச ஜனநாயக கட்சிகள் 1991 க்குப் பிறகு உலக அளவில் சோசலிசம் பின்னடைவைச் சந்தித் துள்ளது.இடதுசாரி சக்திகள் பலவீனமடைந் துள்ளன. சோசலிசத்தையும் கம்யுனிசத்தையும் தழுவி நின்ற அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்ட பலவீனமாகவும் இபபின்னடைவு வெளிப் பட்டது. ஆனால் இன்று, சோவியத் யூனியன் வீழ்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கும் ஏகாதிபத்திய உலகமயத் திற்கும் எதிரான மக்கள் எழுச்சியை காணமுடி கிறது. உலகமய கொள்கைகளால் ஏற்பட்ட சீரழிவுகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு உல கெங்கும் வலுப்பெற்று வருவதையும் வளர்ந்து வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. 21 ஆம் நுற்றாண்டு ஏகாதிபத்தியம், உலகெங்கும் தேசங் களின் இறையாண்மைக்கும் , சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் இருப்பதோடு உழைக்கும் மக்களைச் சுரண்டுகிற சக்தியாகவும் உள்ளது. இடதுசாரிகள் இதனை புரிந்து கொள்ளவேண்டும். இதுவே இடதுசாரி சக்தி களின் அடிப்படைப் புரிதலாக இருக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய புரிதலே இடதுசாரிகளை பிற அரசியல் சக்திகளிடமிருந்து வேறுபடுத்து கிறது. துரதிர்ஷ்ட வசமாக கடந்த 20 ஆண்டுக ளாக சோசலிச பின்னடைவின் விளைவுகளைப் பார்க்கிறோம்; இன்றும் பிரபலமான ஊடகங் களும் பத்திரிகைகளும் ஐரோப்பாவில் சமூக ஜன நாயவாதிகளை இடதுசாரிகள் என்கிறார்கள். உண்மையில் சமூக ஜனநாயவாதிகள் இடது சாரிகளே அல்ல. சமூக ஜனநாயவாதிகள் 1980களி லிருந்து வலதுசாரி சிந்தனையின் பக்கம் சாயத் தொடங்கினார்கள். சோவியத் யூனியனின் வீழ்ச் சிக்குப் பின்னர் அந்த மாற்றம் முழுமை பெற்றது. அவர்கள் நவீன தாராளமய கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்கள், ஏகாதிபத்தியம் மற்றும் நேட்டோவின் குறிக்கோளையும் திட்டங் களையும் ஏற்றுக்கொண்டார்கள். இங்கிலாந்தில் பிலேரிசம் என்கிற ‘நவீன உழைப்பு’ என்ற அமைப்பு உள்ளதைப் பார்க்கிறோம். அவர்கள் இடதுசாரிகளா? அவர்களை இடதுசாரிகள் என்று அழைக்க முடியுமா? எவரும் அப்படி அழைக்க மாட்டார்கள். அவர்களே அதனை விரும்பவில்லை. அதனால்தான் தங்களை `நவீன இடதுசாரிகள் என்று சொல்லாமல் `நவீன உழைப்பாளி’ என்று அழைத்துக் கொள்கி றார்கள். ஜெர்மனியை எடுத்துக் கொள்வோம்; ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பாட்டாளி வர்க்க கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்த முந்தைய சோஷலிச ஜனநாயக கட்சி வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அக்கட்சியின் வழி வந்ததுதான் இன் றுள்ள ஜெர்மானிய சமுக ஜனநாயக கட்சி. ஆனால் இன்று அது வலதுசாரி கட்சியாக உள்ளது. கிரேக்க நாட்டில் சோஷலிச அரசே சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் மீது தாக்குதலை தொடுக்கிறது. ‘பாசாக்’ என்றழைக் கப்படுகிற இந்த சோஷலிச ஜனநாயாக கட்சி 1960 ல் எப்படி இருந்தது? இன்று அதன் நிலைப்பாடு என்ன? ஐரோப்பாவிலுள்ள இதர வலதுசாரி கட்சிகளிலிருந்து இக்கட்சி எவ்விதத்திலும் வேறு படவில்லை ஸ்பெயின் நாட்டில் பெருவாரியான இளைஞர்கள் அரசின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அங்கு பதவியிலுள்ள சோஷலிச அரசே சிக்கன நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆக ஒன்று தெளி வாகத் தெரிகிறது. சோசலிசப் பாதையிலிருந்து பின்வாங்கியதால் ஏற்பட்ட மோசமான விளைவு களின் தாக்கம் முதலில் ஐரோப்பாவில் ஏற்பட் டுள்ளது. ஐரோப்பாவில் இடதுசாரிகளின் வரி சையில் பொதுவாகச் சேர்க்கப்பட்டிருந்த சமுக ஜனநாயகவாதிகள் இன்று இடதுசாரிகள் இல்லை. அவர்களிருந்த இடம் இன்று வெற்றிட மாக உள்ளது. கிரேக்கத்திலும் ஐரோப்பாவிலும் போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. இன்று ஐரோப்பாவில் கடன் நெருக்கடி, யுரோ நெருக்கடி என்று அனைத்து நெருக்கடிகளுக்கும் கிரேக்கம் மைய மாக இருக்கிறது. அங்கு உழைக்கும் வர்க்கம் தலைமையேற்று இதர பகுதியினரையும் சேர்த்துக்கொண்டு வலுவான எதிர்ப்பைக் காட்டி வருகிறது. அனைவரும் இணைந்த வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட் டங்களும், காவல் துறையோடு மோதல்களும் நாள்தோறும் நடை பெறுகிறது. எதிர்வரும் நாட்களில் மிகப்பெரிய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. புதிய புதிய சிக்கன நட வடிக்கை என்ற பெயரில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஊதிய வெட்டு, ஓய்வூதிய வெட்டு, சமுக நலன்கள் வெட்டு, வேலை இழப்பு என்று கிரேக்க அரசு மக்கள் மீது தாக்குதல் நடத்து கிறது. கிரேக்கத்தில் இன்றும் வலுவான கம்யூ னிஸ்ட் கட்சி இருப்பதால் நவீன தாராளமய நடவடிக்கைகளுக்கு எதிரான இயக்கம் சாத்திய மாகிறது. அங்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 வாக்கு வங்கி உள்ளது. வலுவான அணி திரட்டப்பட்ட உழைக்கும் வர்க்கமும் தொழிச்சங்க இயக்கமும் இருப்பதால்தான் கிரேக்கத்தில் நவீன தாராள மய நடவடிக்கைகளை எதிர்த்து வலுவான இயக்கம் கட்ட முடிகிறது. சில வருடங்களுக்கு முன்னர் நான் கிரேக்கம் சென்றிருந்தேன். அப்போது அனைத்து தொழிசங்கங்களையும் உள்ளடக்கிய ‘பாமே’ என்ற பேரமைப்பு எவ்வாறு நவீன தாரளமய கொள்கைகளையும் மக்கள் மீது ஐரோப்பிய யூனியன் கட்டவிழ்த்துவிடும் தாக்கு தலையும் எதிர்கொள்ள முடிகிறது என்பதை என்னால் காண முடிந்தது. ஐரோப்பிய கூட்ட மைப்பை விட்டு கிரேக்கம் வெளியே வர வேண் டும் என்றும் பெற்றிருக்கும் கடனை திருப்பி செலுத்த மறுத்துவிட வேண்டும் என்றும் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியும் பிற இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்துகின்றன. ஆக நவீன தாராளமய கொள்கைக்கு எதிராக மாற்று கொள்கையை முன்வைக்கக் கூடிய அரசியல் இயக்கத்தின் பாதை கிரேக்கத்தில் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு சூழ்நிலை ஐரோப்பாவில் வேறங்கும் இல்லை. ஐரோப் பாவில் நடைபெறும் போராட்டங்கள் அடிப் படையில் தற்காப்புப் போராட்டங்களே. தொழி லாளர்களும், மாணவர்களும் இளைஞர்களும் 20 ஆம் நுற்றாண்டில் போராடிப் பெற்ற உரிமை களையும் நலன்களையும் பாதுகாப்பதற்கான போராட்டங்கள்தான் நடைபெறுகின்றன. அவை முக்கியமான போராட்டங்கள்தான். ஆனால் ஒரு அரசியல் மாற்றை, திசைவழியை காட்டக்கூடிய அரசியல் கட்சி இல்லாததால் ஐரோப்பாவில் இந்த போராட்டங்கள் முன்னேற வில்லை.
இத்தாலியில் ஏற்பட்ட தத்துவார்த்த சறுக்கல் ஐரோப்பாவில் இருந்த இடதுசாரிகளில் ஒரு பெரும் பகுதியே இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஐரோப்பாவில் இடது சாரிகளும் கம்யூனிஸ்ட்களும் தடம்மாறிப் போனதை சோவியத் வீழ்ச்சி தொடங்கிவைக்க வில்லை. ஐரோப்பாவின் மிகப்பெரிய கம்யூ னிஸ்ட் கட்சியான இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்கு இல்லை. இத்தாலியில் சோஷலிச ஜனநாயக கட்சி வலதுசாரி பக்கம் நகர்ந்தது. சோஷலிச ஜனநாயக கட்சியின் இடத்திற்கு கம்யூ னிஸ்ட் கட்சி நகர்ந்தது. 1980 வாக்கில் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி சிறந்த ஒரு சோஷலிச ஜன நாயக கட்சியாக மாறுவதென முடிவெடுத்தது. அக்கட்சியின் பெரிய தலைவர் பெலிங்குவா கத்தொளிக்ககளும் கம்யூனிஸ்ட்களும் சமரசம் செய்து கொண்டால் நாம் நேட்டோவின் அணியில் இருப்போம்; அது நமக்குப் பாதுகாப் பாக அமையும். எனவே கத்தோலிக்க தேவாலயங் களின் பிரதிநிதியான கிறித்துவ ஜனநாயக கட்சி யோடு கம்யூனிஸ்ட் கட்சி சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி னார். இதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பை கைவிட முடியும், சோஷலிச ஜனநாயக் கட்சியாக மாற முடியும் என்றனர். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி முதலில் இடது ஜனநாயக் கட்சியாக உருமாறி, சமீபத்தில் ‘இடது நிலை’யைக் கை விட்டு இன்று ஜனநாயாகக் கட்சியாக புதிய அவ தாரம் எடுத்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு 30 வாக்கு வங்கி இருந்த போதும் அதை அரசில் சேர்க்கக் கூடாது என்பதில் ஏகாதிபத்தியமும் இத்தாலிய பூர்ஷ்வாவும் தீர்மானமாக இருந்தனர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயாக கட்சியாக வும் ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாகவும் மாறியவுடன் அரசாங்கத்தில் சேர்த்துக் கொண் டனர். ஆக, இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்த போது சாதிக்க முடியாததை ஜனநாயக கட்சியாக மாறியவுடன் சாதித்திருக்கிறார்கள். ஜனநாயாக கட்சியைச் சேர்ந்த ஒருவர் பிரதம ராகவும் ஆகிவிட்டார். இத்தாலியில் ஒரு சமயத் தில் கலாச்சார தளத்தில் இடதுசாரிகளின் ஆதிக் கம் இருந்தது. இன்று பின்நவீனத்துவவாதி பேலஸ் கோனி பிரதமாராக உள்ளார். அனைத்து இத்தாலிய ஊடகங்களும் அவர் கையிலிருக்கிறது. இத்தாலியில் ஏற்கனவே போராடிப் பெற்றவைகளைப் பாதுகாப்பதற் கான தொழிலாளர்களின் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அங்கு அரசியல் மாற்றத்திற்கான வழியில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முறையாக இத்தாலிய பாராளுமன்றத்தில் ஒரு கம்யூனிஸ்ட் உறுப்பினர் கூட இடம் பெறவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு – இன்றும் இடதுசாரிகளின் இயல்பு ஏகாதி பத்தியம் என்ற ஒன்று இன்றளவும் இருக்கிறது என்பதை அங்கீகரிப்பதே ஆசியாவிலும் ஐரோப் பாவிலும் ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெ ரிக்காவிலும் இடதுசாரிகளின் மறு கட்டமைப் பிற்கு முக்கியமான அடிப்படையாகும். சோவியத் யூனியனின் மறைவோடு ஏகாதி பத்தியமும் மறைந்துவிட்டதாக சிலர் எண்ணு கிறார்கள். இது தவறு. உண்மையில் ஏகாதி பத்தியம் மேலும் மேலும் அதிரடியாகச் செயல் பட்டு வருகிறது. நீண்ட காலமாக அமெரிக் காவின் பொருளாதார பலம் வீழ்ந்திருக்கிறது. ஆனாலும் அதன் இராணுவ பலமோ, உல கெங்கும் தொடர்ந்து மேலாதிக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ, ஏகாதிபத்திய முகாமிற்குத் தலைமைத் தாங்க வேண்டும் என்ற உறுதியோ பலவீனமடையவில்லை.
நேட்டோ லிபியாவைத் தாக்கிய போது அத் தாக்குதலை மனிதநேயமிக்க தலையீடு என்று ஐரோப்பாவிலிருந்த சில கம்யூனிஸ்ட் அல்லாத இடதுசாரிகள் வர்ணித்தார்கள். லிபிய மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்துவதற்கும் ஜனநாயகத்தை மீட்பதற்குமான தலையீடு என்றும் சொன்னார்கள். ஐரோப்பாவில் சில இடதுசாரிகளும் பிரான்சில் சோஷலிச ஜன நாயகவாதிகளும் நேட்டோவின் தலையீட்டை வெளிப்படையாக ஆதரித்தனர். இன்றைய காலகட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு பார்வை உள்ள இடதுசாரிகள் மட்டுமே இடதுசாரிகள் செய்ய வேண்டிய பணியை, போராட்டங்களைக் கட்டும் பணியை செய்கிறார்கள். வெனிசுலா வில் நம்பிக்கைக் கீற்று ஐரோப்பாவில் நிலவுகிற மோசமான சூழலிற்கு நேர்மாறான சூழல் லத்தீன் அமெரிக்காவில் உள்ளது. நவீன தாராளமயம் சிலி நாட்டில் தொடங்கி லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குத்தான் முதலில் வந்தது. 1980 களில் நவீன தாராளமய பரிசோதனைக் களமாக லத்தீன் அமெரிக்க்கா இருந்தது. இந்தியாவில் நாம் நவீன தாராளமயத்தை எதிர்கொள்வதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே லத்தீன் அமெ ரிக்காவில் தனியார்மயத்திற்கும் தாராளமயத் திற்கும் எதிரான போராட்டங்கள் தொடங்கி விட்டன. 20 அண்டு காலமாக லத்தீன் அமெரிக்க நாடுகளின் பலபகுதிகளில் நடந்த பலதரப்பட்ட மக்களின் போராட்டங்களின் விளைவாக அந் நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் வெனிசுலாவும் பொலிவியாவும் சற்று வித்தியாசமானவை. இவ்விரு நாடுகளில் உள்ள இடதுசாரிகள் சோசலிசம் சாத்தியம் என்கிறார்கள். சாவேஸ் வெனிசுலாவின் தலைவரான பின்னர் முதல் 6 வருடங்களுக்கு சோசலிசத்தைப் பற்றி பேச வேயில்லை. ‘நாங்கள் சோஷலிச முயற்சியில் இருக்கிறோம்’ என்று 6 வருடங்கள் கழிந்ததும் சொன்னார். “நாங்கள் சோசலிசத்திற்காக நிற் போம்; சோசலிசத்திற்காகப் பணியாற்றுவோம்; வெனின்சுலாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவோம்; நாங்கள் நவீன தாராள மயத்தை நிராகரிக்கிறோம், மாற்று கொள்கை களை நடைமுறைப்படுத்துவோம் ” இவ்வாறு அறிவிக்கக்கூடிய அரசியல் இயக்கம் வெனி சுலாவில் இருக்கிறது. வெனிசுலாவில் இம் மாற்றம் எளிதாக நடைபெறவில்லை; ஏராள மான பிரச்சினைகளும் சிரமங்களும் உள்ளன. அவர்கள், நாட்டு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், கருத்துக்கணிப்பு தேர்தல் என்று 13 தேர்தலைச் சந்தித்துள்ளனர். இந்தியாவில் நாமும் மேற்கு வங்கத்தில் பல தேர்தலைச் சந்தித் திருக்கிறோம். அதிலுள்ள சிரமங்கள் என்ன என்று நமக்கும் தெரியும். நாம் என்னதான் சிறப் பாக பணியாற்றியிருந்தாலும் இத்தகையத் தேர்தல்களில் எப்போதும் 45 மக்கள் நமக்கு எதிராக வாக்களிப்பார்கள். அதைப் போல வெனிசுலாவிலும் சோசலிச நடைமுறைக்கு எதிர்ப்பு இருக்கும் . இருப்பினும் வெனிசுலா நிகழ்வுகள் அமெரிக்காவின் புறவாசலில் கூட சோஷலிச பரிசோதனைகள் நடைபெறும் என்பதையும் சோசலிசம் மலரும் என்பதையும் நிரூபித்துள்ளது . வெனிசுலாவில் இறுதியாக என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது. அது சாவேஸின் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி எந்த அளவிற்கு மக்களைத் திரட்டி தனது அமைப்பை எவ்வளவு வலுவுள்ளதாக வைத்திருக்கும் என் பதைப் பொறுத்து உள்ளது. பொலிவியா கண்ட புதிய இயக்கம் பொலிவியா ஒரு பின்தங்கிய நாடு. அதில் 60 மக்கள் மலைவாழ் மக்கள். அங்கே ” நாங்கள் சோஷலிசத்திற்காக உழைக்கிறோம்” என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அர சாங்கம் சொல்கிறது. சோசலிசத்தைக் கட்டு வோம் என்று சொல்கிற அரசியல் இயக்கம் அங்கே உள்ளது. ” நான் ஒரு மார்க்சிஸ்ட்; உலகின் பிற பகுதிகளில் பின்பற்றிய அதே முறை யில் பொலிவியாவில் மார்க்சீயத்தை நடை முறைப்படுத்த முடியாது. பொலிவியா நிலைமை களுக்கேற்ப மார்க்சீயத்தை நடைமுறைப் படுத்த முடியும்; மார்க்சீயத்தின் மூலம் பொலிவியா மலைவாழ் மக்களையும் அவர்களின் தேவை களையும் புரிந்து கொள்ள முடியும்; ” என்று பொலிவியாவின் துணைத்தலைவர் சொல்கிறார். பொலிவியா மற்றும் வெனிசுலா நிகழ்வுகள் ஒன்றை தெளிவாக்குகின்றன. 20 ஆண்டுகளாக சோசலிசம் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் ஒட்டுமொத்த நிலைமை நம்பிக்கையற்றதாக இல்லை. ஏகாதி பத்தியத்தை எதிர்க்கிற மக்கள் இருக்கிறார்கள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங் களும் இயக்கங்களும் வளர்ந்து வருகின்றன. சோஷலிசத்தைக் கட்டும் பாதை ராஜ பாட்டை அல்ல. ஏற்றமும் இறக்கமும் இருக்கும். சோச லிசத்தின் இறுதி வெற்றி குறித்து எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. எகிப்தில் மக்கள் எழுச்சி இன்று எகிப்தில் நான்கு இடதுசாரி அமைப்பு ககள் இணைந்து கூட்டணியை உருவாக்கி உள் ளனர். முன்னாள் எகிப்தின் அதிபர் நாசரின் அரபு சோசலிஸ்ட் கட்சி கம்யூனிஸ்ட்கள் மீது கடுமையானத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. அதைத் தாக்குப் பிடிக்க முடியாத சில பகுதியினர் சோசலிஸ்ட் கட்சியிடம் சரணடைந் தனர். இன்று ஏற்பட்டுள்ள புதிய இடதுசாரி களின் கூட்டணி அச்சமின்றி வெளிப்படையாக செயல்படுகிறது. எகிப்தில் இன்று ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி வலை தள பேஸ்புக் அல்லது ட்விட்டர் பரட்சி அல்ல. நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த லட்ச கணக்காண தொழி லாளர்களின்இயக்கங்களின் போராட்டங்களின் வேலைநிறுத்தங்களின் விளைவா இவ்வெழுச்சி ஏற்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்ட அவமானத் தால் ஒருவன் தீக்குளித்ததன் காரணமாக துனிஷி யாவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டுவிடவில்லை. என்கிற அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய இயக்கங்களே துனிஷிய எழுச்சியின் முதுகெலும்பாகும் இக்கூட்ட மைப்பு ஒரு சீர்திருத்தவாத கூட்டமைப்ப்பாகும். ஆனால் அதில் இணைந்திருந்த பல சங்கங்கள், தலைமையேற்று நடத்திய வேலை நிறுத்தங்க ளால் துனிஷியா ஸ்தம்பித்தது. இத்தகைய போராட்டங்களால் எந்த விளைவுகளும் இல் லாமல் போய்விடாது. சில விளைவுகள் இப் பொழுதே ஏற்பட்டுள்ளன. எகிப்திய நிகழ்வு களின் விளைவாகவே இஸ்ரேல் இன்று தனி மைப்பட்டுள்ளது. 1970 களின் அன்வர் சதாத் காலத்திற்கு இனி எகிப்து பின்னோக்கி செல்ல இயலாது. சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கும் லிபியா ஒரு படிப்பினையாகும். அவர்கள் ஆட்சி யைப் பிடிக்கும் போது எகாதிபத்தியத்தை எதிர்ப் பார்கள், தேசிய இறையாண்மை பேசுவார்கள். அதுவரை அவர்களை ஏற்றுக்கொள்ள இய லாது என்று சொல்லும் ஏகாதிபத்தியம் தன் னிடம் சரணடைந்துவிட்டால் அவர்களை இணைத்துக் கொள்ளும். கடாபியும் அவ்வாறு 2009 ல் மேற்கத்திய நாடுகளிடம் சமரசம் செய்து கொண்டார். ஆனால் இப்பொழுது கடாபி அகற் றப்படவேண்டியவர் என்கிறது ஏகாதிபத்தியம்.
21 ஆம் நூற்றாண்டு சோசலிசம் இன்றைய சூழலில் 21 ஆம் நூற்றாண்டு சோசலிசம் 20ஆம் நூற்றாண்டு சோசலிசமாக இருக்க முடியாது என்பது தெளிவு. வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், சூழ்நிலையில் போல்ஷ்விக் புரட்சி நடந்தது; சோவியத் யூனியன் உதய மாயிற்று. ஏகாதிபத்திய சங்கலியின் பலவீனமான கண்ணி என்று ரஷ்யாவை அன்று லெனின் வர் ணித்தார். உலக முதல்லாளித்துவத்தின் முற் றுகை மற்றும் உள்நாட்டு போர் என்ற சூழலுக்கு மத்தியில் சோவியத் யூனியனில் சோசலிசத்தை கட்டுவதற்கான பாதை வகுக்கப்பட்டது. அந்த பாதை 21 ஆம் நூற்றாண்டில் சோஷலிச நிர் மானத்திற்கு ஏற்புடையதல்ல. 20 ஆம் நூற் றாண்டு சோசலிசம் நமக்கு சிறந்த அனுபவங் களைத் தந்துள்ளது, உண்மைதான். அதன் மேன் மையை, 20 ஆம் நூற்றாண்டில் அதன் சிறப்புமிக்க பங்கு பாத்திரத்தை விளக்க வேண்டிய அவசிய மில்லை. அந்த பாரம்பரியத்திலிருந்து அனுபவங் களிலிருந்து நாம் எதை முன்னெடுத்துச் செல்ல போகிறோம் எதை தவிர்க்கப் போகிறோம் என் பதை முடிவு செய்ய வேண்டி உள்ளது. எதைத் தவிர்ப்பது என்ற கணிப்பு அரசியல் ரீதியாகவோ நியாத்தின் அடிப்படையிலானது அல்ல; மாறாக இன்றைய காலத்திற்கு எது பொருத்தமற்றது, எதை முன்னெடுத்துச் செல்ல இயலாது என்ற அடிப்படையில் அமையும். கடந்த 20 ஆண்டுக ளாக இந்த பிரச்சினையைத்தான் நாம் எதிர் கொண்டு வருகிறோம். வரலாற்று முக்கியத்துவ மிக்க தோல்வியையும் பின்னடைவையும் புரிந்து கொண்டு எதிர்கொள்ள 20 ஆண்டுகள் தேவைப் பட்டுள்ளது. வரலாற்றில் 20 ஆண்டுகள் என்பது நீண்ட காலமல்ல. 20 ஆண்டுகளாக மறு சிந் தனை நடந்திருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசப் பாதை ஒன்று இருப்பதாக நான் நினைக்கிறேன். அப்பாதையில் 20 ஆம் நூற் றாண்டில் இருந்ததைப் போல ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது இருக்கும், தொடரும். ஏகாதி பத்திய எதிர்ப்பு தவிர்க்க இயலாதது. இந்த பாடத்தை தவறாக புரிந்து கொள்ளும் இடது சாரிகள் அனைவரும் வரலாற்றின் தவறான பக் கங்களில் இடம் பெறுவார்கள் என்பது உறுதி. ஏகாதிபத்திய உலகமயத்தின் கொடூரத் தாக்குத லுக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிக ளால் தவிர்க்க முடியாத மற்றொன்று உள்ளது. அது, உழைக்கும் வர்க்கத்தை கைகழுவி விடலா மென்பது. ஆம், முதலாளித்துவத்திலும் அதன் உற்பத்தி முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட் டுள்ளன. உழைக்கும் வர்க்கத்திலும் மாற்றங்கள் நடந்துள்ளன. உண்மைதான். அதே போல உழைக்கும் வர்க்க கட்டமைப்பிலும் மாற்றங்கள் நடந்துள்ளன. மக்களில் இன்று பெரும் பகுதி யினர் தினக்கூலியாக உள்ளனர். நேரடியாக ஆலை தொழிலாளியாக இல்லாத இவர்களும் உழைக்கும் வர்க்கம்தான். லெனின் இதைத் தெளிவாகச் சொல்கிறார்: ‘ பாட்டாளி வர்க்கம் என்பது ஆலை தொழிலாளர்களை மட்டும் உள் ளடக்கியதில்லை ஆலை தொழிலாளி முதல் முழுமையான பாட்டாளியாக இல்லாத உழைப் பாளி வரை, உழைக்கும் மக்கள் அனைவரையும் உள்ளடக்கியதே பாட்டாளிவர்க்கம் ‘ என்கிறார் லெனின். அணிதிரட்டப்படாத இவர்கள் நாடெங்கும் பரவிஉள்ளனர். அவர்களில் பெரும் பகுதியினர் முறைசார்ந்த ஆலை உற்பத்தி முறைக்கு வெளியே இருப்பவர்கள் என்பதை இவர்களோடு பணியாற்றுகிற நாங்கள் அறி வோம். மிகக் கொடுமையான சுரண்டலுக்கு உள் ளாகியுள்ள இவர்களை அணித்திரட்ட வேண் டும். இதே போன்ற நிலையை நாங்கள் இந்தி யாவில் பார்க்கிறோம். இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்தின் சேர்மானத்தில் மாற்றம் ஏற்பட் டுள்ளது. இன்று இடதுசாரி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட , அனைத்துத் தொழிற்சங்கங்களிலும் பெரும்பாலானோர் முறைசாரா துறையைச் சார்ந்தவர்கள். அவர்களை புதிய வழியில் அணி திரட்ட வேண்டியுள்ளது. லத்தீன் அமெரிக் காவில் மலைப்பகுதிகளிலுள்ள சேரிவாழ் மக் களை, அவர்கள் வாழும் இடத்திலேயே குழுக்க ளாக அணிதிரட்டி இருக்கிறார்கள். இதுவே இடதுசாரிகளின் பலமாக உள்ளது. இவர்களே சாவேஸின் பின்னே நிற்கும் படையாகும். இவர் கள் தொழிர்சங்கங்களாக மட்டுமல்லாத உள்ளூர் குழுக்களாகவும் அணிதிரட்டபட்டுள் ளார்கள். இதுவன்றி மக்களை அணிதிரட்டு வதற்கு வேறு பல புதிய வழிமுறைகளும் உள்ளன. புதிய சிந்தனை சோசலிசம் குறித்த புதிய சிந்தனை என்று சொல்கிற போது அதில் அரசியல், அமைப்பு, இயக்கம் ஆகியவை குறித்த புதிய சிந்தனை என்பதும் அடங்கும். இதுவே 21 ஆம் நூற்றாண்டின் சிறப்பியல்பாகும். சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஐரோப் பாவில் பல கட்சிகள் கலைக்கப்பட்டன. இப்படிப் பட்ட சீரழிவு விளைவுகளை நாங்கள் இந்தி யாவில் நேரடியாக சந்திக்க வில்லை. இதன் கார ணமாக இந்தியாவில் எங்களுக்கு ஓர் அனு கூலமான சூழ் நிலை இருந்தது. இந்த விளைவு களிலிருந்து நாங்கள் தப்பியதற்கு, எங்கள் கட்சி யின் உயரிய கட்டுப்பாடு காரணமல்ல. எங்கள் கட்சி அணிகள் தாங்களாகவே சிந்திக்க முடியாத அளவிற்கு எங்கள் கட்சி இறுக்கமாக உள்ள தென சொல்லப்படுகிறது. அது உண்மையல்ல. சோவியத் யூனியனின் குறைகளையும் அங்கே கட்டப்பட்ட சோசலிசத்தின் குறைகளையும் நாங்கள் அறிந்திருந்தோம். அதன் காரணமாகவே நாங்கள் சீர்குலைவில் இருந்து தப்ப முடிந்தது. ” போல்ஸ்விக் புரட்சியின் பாரம்பரியத்தையும் சோவியத் யூனியன் அரசு ஒரு சோஷலிச அரசு என்பதையும் நாங்கள் ஆதரித்தோம். ஆனாலும் அவர்கள் மார்க்சீய லெனியத்திலிருந்து தடம் புரள்கிறார்கள் என்பதையும் அவர்கள் செல்கிற பாதை நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் என்பதை யும் நாங்கள் அறிவோம். அவர்கள் செல்கிற பாதையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சீயத்தை கையாள்வோம்; அதன் மூலம் இந்திய நிலைமை களுக்கு ஏற்ற பாதையை உருவாக்குவோம் சோவியத்யூனியனோ இல்லை சீனமோ இந்தியா விற்கான பாதையைக்காட்ட முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் “இவ்வாறு ஒன்று பட்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு பெரும் பகுதியினர் பேசி வந்தனர். அதன் காரண மாகவே நம் இயக்கத்தை நம்மால் சிதறாமல் கட்டிக் காப்பாற்ற முடிந்தது. ஆனால் அது மட்டும் போதுமானதல்ல. எவரையும் சார்ந்தி ராமல் நமக்கான பாதையை நாமே உருவாக்க முயற்சித்தோம் அதனால்தான் இந்திய யதார்த் தங்களை நம்மால் புரிந்து கொள்ளமுடிந்தது; நமக்கான திட்டங்களையும் தந்திரோபாயங் களையும் நம்மால் வகுக்க முடிந்தது. பாராளு மன்ற ஜனநாயகம் இந்தியாவில் வேரூன்றி இருக் கிறது. அத்தகைய சூழ்நிலையில் இந்திய அரசி யலின் ஜனநாயக அடிப்படையை எவ்வாறு சந் திக்கிறோம் என்பது நாம் வகுத்த திட்டங்களிலும் தந்திரங்களிலும் ஒன்று. பாராளுமன்ற ஜனநாய கத்தை நாம் புறந்தள்ளவில்லை; மாறாக அதை எதிர்கொள்கிறோம். இந்திய இடதுசாரிகள் – (இந்திய இடதுசாரி என்று சொல்கிற பொழுது அந்த வரிசையில் சமூக மாற்றத்திற்காகவும் சமு தாய மேம்பாட்டிற்காகவும் போராட வேண்டும் என்று சொல்கிற அனைவரையும் சேர்க்க விரும்பு கிறேன்).- ஏகாதிபத்திய எதிர்ப்பை தவிர்க்க முடி யாது. இது முதலாவது அம்சம். இன்று பிற பன்னாட்டு நிறுவங்களைப் போல, இந்திய நிறு வனங்கள் ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்குகின்றன. ஏகாதிபத்தியத் தோடு கைகோர்த்துக் கொள்கிற இந்த பூர்ஷ்வா வர்க்கம்தான் இன்றைய இந்திய பூர்ஷ்வா வர்க்கம், இந்திய ஆளும் வர்க்கம் என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இதில் தவறு ஏற்படலாம். கடந்த காலத்தில் ஆளும் வர்க்கத்தை ‘இவர்கள் முற்போக்கானவர்கள், இவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், இவர்கள் நில பிரபுத்துவத்திற்கு எதிரானவர்கள் என்று வகைப் படுத்தும் முயற்சியில் ஒரு பிரிவு இடதுசாரிகள் இறங்கினர்; அம்முயற்சியின் விளைவாகாக. அன்றைய ஆளும் வர்க்கத்தோடு உறவு வைத்துக் கொள்ளலாம் என்றனர். அத்தகைய வாய்ப்பு, முன்பு இருந்ததென்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் இப்போது நிச்சயமாக இல்லை. எனவே நம் நாட்டு மக்களை கொடூரமாக சுரண் டுகிற, நம் நாட்டு வளங்களை கொள்ளை யடிக்கிற நவீன தாராளமய நடைமுறையை எதிர்க்க வேண்டியது அவசியம்; புதிய தாராள மய கொள்கைகளை எதிர்க்க வேண்டியது அவசி யம். இது இரண்டாவது அம்சம். சமூக நீதிக்காகப் போராடுவது மூன்றாவது அம்சம்.. ஆணாதிக்கம், சாதிய ஒடுக்குமுறை என்று நம் சமூகத்தில் லட்சக் கணக்கான மேலாதிக்கங்களும் ஒடுக்குமுறை களும் உள்ளன. இத்தகைய சமூக அநீதிகளை எதிர்க்க வேண்டியது அவசியம் இது மூன்றாவது அம்சம். ஏகாதிபத்திய எதிர்ப்பு, புதிய தாராளமய கொள்கை எதிர்ப்பு, சமூக ஒடுக்குமுறை, மேலா திக்க எதிர்ப்பு ஆகிய இம்மூன்று இயல்புகளையும் உள்ளடக்கிய இடதுசாரி இயக்கம் வலுப்பெறு மானால், அத்தகைய இடதுசாரி இயக்கம் முன் னேறும்; புதிய வழிமுறையாக வடிவம் பெற்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெறுகிற இயக்கங்களோடு அது இணையும்; அதன் ஒரு பகுதியாக நாமும் இருப்போம்.
மொழிபெயர்ப்பு:
பேரா. பொன்ராஜ்
Leave a Reply