மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஒவ்வொரு தொழிலாளியும் ஏன் பொதுவுடைமைக் கட்சியில் சேர வேண்டும்?


 

 

வேலை செய்யும் ஆண் பெண் தொழி லாளத் தோழர்களே! தேவைக்கு அதிகமான பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை யாகாமல் தேங்குவதால் ஏற்படும் வியாபார ஸ்தம்பிப்பு. ஒரு கஷ்டமான பொருளாதார நெருக்கடியை உண்டாக்குகிறது. இப்படிப்பட்ட நெருக்கடியானது அதன் ஆரம்பத்திலேயே தொழிலாளர்களுக்குச் சம்பளப் பிடித்தம், வேலையில்லாத் திண்டாட்டம், அதிக பொருள் உற்பத்தி ஆகியவைகளை உண்டாக்கிவிடுகிறது.

நாமோ முதலாளி, தொழிலாளி வகுப்புப் போராட்டங்களிடையே இருந்து வருகின்றோம். காஸ்டோனியாவில் உள்ள முதலாளிகள் அதிகப் படியான உற்பத்தியின் பெருக்கத்தால் தொழி லாளர்களின் வேலையை இரட்டிக்கச் செய்த தோடு சம்பளத்தைக் குறைத்துக்கொண்டும், தொழிலாளர் சங்கங்களை ஸ்தாபிதம் செய்த தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியும், வேலை நிறுத்தம் செய்யப்பட்டால் அதை ஒடுக்க இரகசிய ஆட்களையும்,  கொலைகார வன் னெஞ்சகர்களையும்  டியூக்ஸ் உபயோகித்தும், பிறகு அரசாங்க சிப்பாய்களையும் போலீஸ் காரர்களையும் கொண்டு அதிகாரத்தையும் பலத் தையும் பிரயோகிக்கச் செய்தும், அதற்கும் முடி யாவிட்டால் தொழிலாளர்களின் வீடுவாசல் களையும், அவர்களது தொழிற்சங்கங்களையும் இடித்து நாசப்படுத்தியும், அதற்கு எதிர்த்து நிற்கும் ஆற்றல் வாய்ந்தவர்களை, அரசாங்க ராணுவத்தினால் அடித்துத் துன்புறுத்தியும், வேலை நிறுத்தத்தைப் பாழ்படுத்தியுமிருக்கின் றார்கள் என்றாலும், மீண்டும் மீண்டும் தொழி லாள வகுப்பார்கள் டிரேட் யூனியன்களை அணைத்து வேலை நிறுத்தம் செய்து போராட் டத்தை நடத்தி வந்தும் இருக்கிறார்கள்.

யூனைடெட் ஸ்டேட்டிலும் – உலகம் முழுவ திலும் ஏற்பட்டிருக்கும் முதலாளி, தொழிலாளி வகுப்புப் போராட்டங்களுக்கு  (இந்த காஸ் டோனியா சம்பவம்) ஒரு உதாரணமாகும். காஸ்டன் தேசத்தில் எல்லா மே விப்ஜின்ஸ் என்பவரை ஈவிரக்கமின்றிக் கொடுமையான முறையில் கொலை செய்ததும், மேரியனில் ஆறு வேலை நிறுத்தக்காரர்களைப் போலீசார் கொலை செய்ததும், நியூயார்க்கில் ஆகாரத் தொழிலிலும் மற்ற சில்லறை வேலைகளிலும் சம்பந்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத் தியதின் மூலம், போலீசார் வேலை நிறுத்தங் களை உடைத்தெறிந்த விஷயங்களும், பருத்தித் தொழிலில் வேலை நிறுத்தம் செய்து வந்த தொழிலாளிகளின் தலைவர்களுக்கு மிருகத்தன மாகச் சிறைத் தண்டனை விதித்ததும், கலி போர்னியாவில் தொழிலாளர்களை ராஜ துவேஷக் குற்றம் சாட்டி 5 முதல் 10 வருஷங்கள் வரை சிறைத் தண்டனை விதித்ததும், பென்சில் வேனியாவில் இதே குற்றம் சாட்டிச் சிலரைச் சிறைப்படுத்தியிருப்பதும், இல்லியோனிஸ் என்ற இடத்தில் தொழிலாள்ரகளுக்கு எதிராக 26 இராஜதுவேஷ குற்றச்சாட்டுகள் செய்ததும் முதலாளிக் கூட்டங்கள், தொழிலாளர் கூட் டத்தை எவ்வாறு வாட்டி வதைத்து, அவர்களது எழுச்சியை நசுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகின்றன.

முதலாளிக் கூட்டம தொழிலாளர்களைக் கஷ்டப்படுத்தி அதிக லாபத்தைக்  கொள்ளைக் கொண்டும் சம்பளப் பிடித்தத்தில் அதிக உற்பத் தியைத் தயார் செய்தும், கட்டுப்பாடில்லாத பாமரத் தொழிலாளர்களை, உலகில் எதிர்பார்க் கப்படும் உலக யுத்தத்தில், அமெரிக்க ஏகாதி பத்தியத்தில் பலியாக உபயோகிக்கவும் தயார் செய்து வருகிறார்கள்.

தொழிலாளர்கள் மிதமிஞ்சிய அதிகமான உற்பத்தியையும், சம்பளக் குறைப்பையும் எதிர்க்க கட்டுப்பாட்டோர் இருக்க வேண்டும்.

முதலாளிமார்கள் மிதமிஞ்சிய அதிகப் பொருள்களை உற்பத்தி செய்துவிடுவதினால், பாடுபட்டு உழைக்கும் தொழிலாளிகளுக்கு நன்மையில்லை. ஏழைத் தொழிலாளியின் வாழ்க் கையில் உண்டாகும் கேட்டை நிரூபிக்க, முத லாளிப் பத்திரிகையின் ஒரு தலையங்கக் குறிப்பே போதிய சான்றாகும். கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம், மிகைப்படக் கூறியதென்று யாரும் சொல்லிவிட முடியாது.

“அமெரிக்காவில் தேவைக்கு மிஞ்சிய சாமான் கள் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்பட்டதின் காரணமாக 1923ஆம்  வருடத்தில் இருந்ததைவிட 1927இல் 4,00,000 தொழிலாளர்கள் அதிகமாக நீக்கப்பட்டதல்லாமல் கூலியிலும், 16 கோடி டாலர்கள் வரை குறைக்கப்பட்டும், தொழிற் சாலையின் மதிப்பு 2 லட்சம் கோடி டாலர்களுக்கு மேல் பெறுமானமுள்ளதாக ஆக்கப்பட்டும் இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருக்கிறது.

தொழிலாளர் சமூகமானது எவ்வித கட்டுப் பாடும், ஒற்றுமையும், இன்றிப் பிரிக்கப்பட்டு இருக்கும்வரை, அவர்கள் முதலாளிகளின் கையில் சிக்கித் தவிக்க வேண்டியதுதான். ஒன்று சேர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான, லட்சக்கணக் கான தொழிலாளர்கள் கூட்டமே, முதலாளி களால் மிருகத்தனமாக அழுத்தி வைக்கப்பட்டி ருக்கும் கொடுமைகளையும், அளவுக்கு மீறி உண்டாக்கப்படும் உற்பத்தியையும் தடைப்படுத்த முடியும். தொழிலாளர்களுடைய கட்டுப்பாட்டி னால்தான், அதிகப்படியான உரிமைகளைப் பெற்று, உலகத் தொழிலாளர்களால் பொது மக்களுக்குப் பயன்படும் முறையில் நடத்தப்படும் ஆட்சிக்கு அடிகோலவும் முடியும்.

தொழிலாளர்களுடைய அமெரிக்கப்                        பெட ரேஷன் ஒரு முதலாளி ஆதிக்கமே ஆகும்

தொழிலாளர்கள் அவர்களுடைய ஸ்தாப னத்தில்,  கேவலம் சாதாரண அங்கத்தினர்களாக இருப்பதினால் மாத்திரம் போதிய பலன் கிடைத்துவிட முடியாது. முதலாளிமார்கள், டிரேட் யூனியன்களைக் கைவசப்படுத்திக் கொண்டு, தொழிலாளர்களை நசுக்குவதற்கான பல வழிகளிலும் முயன்று வருகிறார்கள். இதற்கு உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொழிலாளர்களுடைய அமெரிக்க பெட ரேஷனும் அதனைச் சார்ந்த மற்ற ஸ்தாபனங் களும் இருந்து வருகின்றன.

இந்த ஸ்தாபனங்களில் கஷ்டப்பட்டு உழைக்கும் தொழிலாளர்களே அதிகமாக நிரம்பி யிருந்தபோதிலும், அதன் நிர்வாக முக்கியஸ்தர்க ளாக கிரீன், வூல், லூயிஸ், மெக்மஹான் முதலிய தொழிற்சாலைகளிலுள்ள பாடுபடாத பெரிய உத்தியோகஸ்தர்களை அங்கம் வகித்து வருகின் றார்கள். இந்த முக்கியஸ்தர்களே, நாட்டிலுல்ள முதலாளிமார்களுக்கு உளவாக இருந்து கொண்டு, அவர்களுடைய கட்சியையும் போக் கையுமே அனுசரித்துக்கொண்டும், வேலை நிறுத் தத்தைக் கையோடு கையாகத் தடைப்படுத்திக் கொண்டும் மீறி, தகுந்த சந்தர்ப்பங்களில் ஏற்படும் வேலை நிறுத்தத்தைப் பாழ்படுத்திக்கொண்டும் இருந்து வருகிறார்கள்.

அமெரிக்கத் தொழிலாளர் பெடரேஷ னானது முதலாளி வர்க்கத்தோடு சேர்ந்து கொண்டு இந்த ஒரு வருஷத்திற்குள்ளாகவே, அமெரிக்காவின் தென் பாகத்திலுள்ள காஸ்டோ னியா, எலிசபெத்துடன், மாரியன் நியூ ஆர்லி யன்ஸ் ஆகிய பிரதேசங்களில், நிகழ்ந்த வேலை நிறுத்தத்தைப் பாழ்படுத்தியே வந்திருக்கிறது. இதுமட்டுமல்ல (இல்லினோயிலுள்ள லூயி – பிஷ்விக் பாரிங்டன் நிலக்கரிச் சுரங்கத் தொழிற் சாலையிலும், நியூயார்க், பிலடெல்பியா மற்ற இடங்களிலுள்ள ஊசித் தொழிற்சாலைகளிலும், டாம்னே ஹாலுடன் ஷெலிங்கர் சமுதாயக் கட்சி யின் பகிரங்கத் தொழிலாளர் சம்பந்தக் கூற்று களிலும், மற்றும் அநேக வேலை நிறுத்த சம்பவங் களிலும், இந்த அமெரிக்கத் தொழிலாளர் களுடைய போக்கு யோக்கியமற்றதென்பதும், நாணயமற்ற செய்கையைக் கையாண்டதென் பதும் நன்கு புலனான விஷயமாகும்.

தொழிலாளர்கள் சங்கக் கூட்டங்களுக் குள்ளேயே இந்த அமெரிக்கத் தொழிலாளர் பெடரேஷனான ஒரு முதலாளித்துவ அங்கமாக இருந்து வருகிறது. முதலாளித்துவ ஆதிக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கு முன்பாக இந்த அமெ ரிக்கத் தொழிலாளர்களுடைய பெடரேஷனின் ஆதிக்கத்தை முதலாவதாகச் சீர்குலைக்க வேண் டும்.

தொழிலாளர்களே தங்களுடைய டிரேட் யூனியன்களை வலுப்படுத்த வேண்டும்

தொழிலாளர்கள் எந்தவித முதலாளித்துவப் பிரதிநிதிகளையும் சேர்த்துக்கொள்ளாமலே, அவர்களுடைய டிரேட் யூனியன்களை நிறுவ வேண்டும். இதுபோன்றதான போர் வன்மை கொண்ட டிரேட் யூனியன்களெல்லாம் 1929 ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியிலிருந்து செப்டம் பர் மாதம் 3ஆம் தேதிவரையில், சிலிவ்லெண்டு ஓஹிவில் கூடிய மாபெரும் டிரேட் யூனியன் ஒற்றுமை மகாநாட்டில் கூடியதுண்டு.

டிரேட் யூனியன் ஒற்றுமைச் சங்கமும், அத னைச் சார்ந்த தேசிய சுரங்க யூனியன்களும், ஊசித் தொழில் தொழிற்சாலை யூனியன் வேலைக் காரர்களும் கப்பல் வேலைக்காரர்கள் சங்கங்களி லுள்ள தொழிலாள வகுப்பார்களும், சேர்ந்து முதலாளித்துவ ஆதிக்கத்தையும், ஏகாதிபத்திய யுத்தத்தையும் அதிகப் பொருள் உற்பத்தியையும், முழு வன்மையோடு எதிர்த்ததோடல்லாமல், அவர்களுடைய நன்மைக்கும், மேம்பாட்டிற்கும் உழைக்கும் சக்தியையும், மிகத் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

மத்தியதர வகுப்புக் கோஷ்டி கட்சிகளோடு எதிர்த்துப் போராட வேண்டும்

சர்க்காரில் அங்கம் வகிப்பதிலும், சர்க்காரை நடத்துவதிலும், மத்தியதரக் கோ,டியும், முத லாளிக் கோஷ்டியுமே முனைந்து நிற்கின்றன.

நாட்டில் உள்ள அரசியல் கட்சிக்கெல்லாம் இந்த முதலாளித்துவ சர்க்கார் அதிகாரத்தி லிருக்கும் முதலாளி கோஷ்டியின்  கூட்டுறவுத் தன்மைக்கும், ஜனங்களுடைய அமைப்பற்ற தன் மைக்குமே உதவியளித்து வருகிறது.

நாட்டிலுள்ள குடியரசு ஜனநாயகக் கட்சிக ளெல்லாம் மிக்க வெளிப்படையாகவே முத லாளி கோஷ்டியைப் பிரதிநிதியாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறது. முதலாளிகள் இந்தக் கட்சி களுக்குப்  பொருளுதவி செய்வதோடு, அந்தக் கட்சியில் முக்கிய ஸ்தானத்தையும் வகித்து – தொழிலாளி வகுப்பார்களுடைய உரிமைகளை நாசப்படுத்த அவர்களுடைய உழைப்புக்கும், முயற்சிக்கும், அதிகமாகவே கட்சிகளின் கொள் கைகளை அவர்களுடைய ஆதிக்கத்திற்குப் பிர யோகப்படுத்தி வருகிறார்கள். இதைக் கண்டு குடி அரசு ஜனநாயகத்துவக் கட்சிகளின் அரசாங்க அமைப்பின் மாறுதல்கள் எல்லாம் பொது ஜனங் களிடையே உண்மைத் தோற்றத்தை மறைத்து முதலாளித்துவத்திற்கு ஜனநாயகத்துவ வேஷம் போட்டு யாரையாவது ஒருவரைத் தேர்ந் தெடுப்பதில் முதலாளி அபேட்சகரைத் தேர்ந் தெடுக்க ஓட்டுப்போடுகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் முதலாளிக் கோஷ்டியாரிட மிருந்து கூலிபெற்ற மத்தியதர வகுப்புப் பிரதிநிதி களும் ஆட்சியில் அதிகாரம் செலுத்துகிறார்கள்.

முதலாளிகளுடைய மூன்றாவது கட்சி

சோஷியலிஸ்டு (சமுதாய) கட்சியானது சமு தாயப் போராட்டத்தை விட்டுவிட்டு, மத்தியதர வகுப்பார்களுடைய கட்சியாக மாறிவிட்டது. முதலாளி கோஷ்டியை எதிர்த்ததின் காரணமாக ஏற்பட்ட பழைய செல்வாக்கினால், முதலாளி கோஷ்டியின் சூழ்ச்சியிலிருந்து தப்பி வருபவர் களும், தொழிலாளர்களுக்குச் சமுதாயக் கட்சி செய்த துரோகத்தை இன்னும் உணராதவர் களும், முதலாளித்துவத்திற்குச் சம்மந்தப்பட்டு – மத்தியதர வகுப்பார்களுக்கு, உண்மை ஊழியர் களாக விளங்கும் தொழிலாள வகுப்பாளர் சில ருமே இதில் இருந்து வருகிறார்கள்.

ஒவ்வொரு தேசத்தில் உள்ள எல்லாச் சமு தாயக் கட்சிகளும், மேற்கூறிய நிலையிலேதான் இருக்கின்றன. உதாரணமாக, தோழர் ராம்சே மாக்டொனால்டைக் கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சியைப் போன்றே முதலாளித்துவ அரசாங் கத்தை நடத்துவதோடு – சரியான வேலை நிறுத்த லட்சியத்தைப் பாழாக்கித் தொழிலாளர் களுடைய கூலிக் குறைப்பு விஷயத்தில் உதவி புரிந்து, இயந்திரங்களினின்று அதிகப் பொருள் களை மதிமிஞ்சி உண்டாக்குவதில் உதவி புரிந்து வருகிறது. இது மட்டுமல்ல, குடியேற்ர நாடுகளில் உள்ள மக்களைத் தாழ்த்திக் கொடுமைப்படுத்தி யும் அராபியர் இந்தியர்களைக் கொலைக் கொடு மைக்குள்ளாக்கியும், இந்தியத் தொழிலாள நிர் வாகஸ்தர்களை ஜெயிலுக்கு அனுப்பியும் சீனப் புரட்சியை அடக்குவதில் கேவல உதவி புரிந்தும், ஐக்கிய சோவியத்திற்கும், ஏகாதிபத்திய அதிகார அரசுகளுக்கும், எதேச்சாதிகார யுத்தத்தை நிர் மாணிக்க அடிகோலியும் வருகிறது.

ஜெர்மனியிலுள்ள முயுல்லரின் சமுதாய ஜன நாயகத்துவ சர்க்காரின் யோக்கியதையையும் கனித்துப் பாருங்கள். இது சமுதாயப் பணக்காரத் துவத்திற்கு மாறியே வருகிறது. இது முத லாளித்துவ அரசோடு பிணைக்கப்பட்டதினால், தொழிலாளர்களைப் பலவந்தமாகக் கொடு மைப்படுத்தியும், மத்தியதர வகுப்பார்களுக்கு இந்த இரண்டாவது சர்வதேசக் கட்சியானது ஒரு சர்வாதிகாரத்தை நடத்துவதில் தனக்குள்ள ஆர் வத்தையும் வெளிப்படுத்தி வருகிறது. ஆஸ்டிரி யாவில் உள்ள சமுதாய ஜனநாயகத்துவமானது வேலைத் தொழிலாளர்களுடைய பலங்களை எல்லாம் போக்கி அவர்களை எதிரிகளுக்குச் சரண்புகும்படிச் செய்து பணக்கார இயல்புக ளோடு ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டிருக் கிறது.

எங்கும் – எல்லா இடங்களிலுள்ள சமுதாயக் கட்சிகளானது மேல்கண்ட நாடகத்தையே ஆடி வருகின்றன. ஐக்கிய அமெரிக்க முதலாளிப் பத்தி ரிகைகள் இந்தச் சமுதாயக் கட்சிகளைப் புகழ்ந்து எழுதியும், பகிரங்கமாக ஆதரித்தும் வருகின்றது. டிரேட் யூனியன் இயக்கத்திற்குத் துரோகம் செய்த தொழிலாளர்களுடைய அமெரிக்க பெட ரேஷனுக்குப் பக்தி விசுவாசமுள்ள கூட்டாளி யாக இருந்து வருகிறது. இவைகள் தொழிலாளர் களிடையே நெருங்கிய சம்பந்தம் வைத்திருக் கிறது. சமூதாயக் கட்சிகள் முதலாளி கோஷ்டியி னால் அமைக்கப்பட்டும், பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்டும் இருந்து வருகிறது. இதுவே மத்திய தர வகுப்பார்களுடைய மூன்றாவது கட்சி யாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றே தொழிலாளர்களுக்கு உழைக்கும் ஒரே கட்சியாகும்

எல்லாத் தேசங்ளிலும், எல்லாக் காலத்திலும், தொழிலாளர்களுடைய நன்மைக்கும், மேம்பாட் டிற்கும் உழைக்கக் கூடிய கட்சி ஒன்றே – அதுவே முடிவானதுமாகும்-அதுதான்(பொது வுடைமை) கம்யூனிஸ்ட் கட்சியாகும்.

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பொது வுடைமைக் கட்சியானது, உலகத்திலுள்ள தொழி லாளர் வகுப்பார்களுடைய ஒரு பகுதியாகும் – சர்வதேசப் பொதுவுடைமைக் கட்சியின் ஒரு பிரிவாகவும் இருந்து வருகிறது.

பொதுவுடைமைக் கட்சியின் வேலைத் திட் டத்தின்படி வாழ்க்கையின் ஒவ்வொரு முறையி லுமுள்ள தொழிலாள வகுப்பார்களையும் ஒழுங்குபடுத்தி அமைக்க வேண்டும். சர்வசாதா ரணமாகத் தினசரி உரிமையைப் பாதுகாப்பதி லிருந்து இறுதியாக முதலாளித்துவத்தை அடி யோடு அழிப்பது வரையிலுள்ள போராட்டத் திற்கும், தொழிலாளர்களுடைய சர்க்காரை ஸ்தாபிக்கச் செய்யும் முயற்சிக்கும், கொடுமைக் குள்ளானவர்களின் பூரண ஆட்சியை ஏற் படுத்தும் தத்துவத்திற்கும் பொதுவுடைமைக் கட்சி வழிகாட்டுகிறது.

பணக்கார மத்தியதர வகுப்பார்களிடமிருந்து தொழிலாளர்களுக்கு நல்ல நிலைமையை ஏற் படுத்தவும் உண்மையான போராட்டத்தை நிகழ்த்தக்கூடிய டிரேட் யூனியன்களை ஏற்படுத்த வும் அது வழிகாட்டுகிறது.

பணக்கார – மத்தியதர வகுப்பு சர்க்காரால் கொடுமைப்படுத்தப்படும், மிக்க குரூரமான கொடுமைகளிலிருந்து தொழிலாளர் வகுப்புச் சங்கங்கள் போராடவும், அது வழிகாட்டுகிறது.

தொழிலாள அமெரிக்க பெடரேஷன் சமு தாயக் கட்சி ஆகியவைகளின் துரோகங்களை வெளிப்படுத்துவதோடு, தொழிலாள வகுப்பார் களுடைய பாத்யதையும் அது வற்புறுத்துகிறது.

நீக்ரோ போன்ற மக்களுடைய பரிபூரண சுதந் திரத்திற்காகவும் சமுதாயப் பொருளாதார அர சியல் சமத்துவத்திற்காகவும் அது போராடுகிறது.

பெண்கள், வாலிபத் தொழிலாளர்கள் இவர் களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதிலும், குழந்தைத் தொழிலை ஒழிப்பதிலும் இது முனைந்து போராடுகிறது.

வேலையில்லாதவர்களையெல்லாம் ஒன்று படுத்திப் பணக்காரர்களுடைய வாழ்க்கையின் மீது முழு உத்தரவாதம் செய்யும்படி வேலை யுள்ள தொழிலாளர்களோடு போராட அது அறைகூவி அழைக்கின்றது.

தொழிலாள வகுப்பாரை ஜனசமூகத்தில் அதி கார ஆட்சி அமைக்கும்படித் தயார் செய்தும் வருங்காலப் பொதுவுடைமை மக்களுக்கு அஸ்தி வாரமாக இருக்கும்படிச் சமதர்ம அடிப்படைத் திட்டத்தின் மீது சமூகத்தைத் திருத்தியமைக்கவும் அது முன் நிற்கிறது.

தொழிலாளர்களுக்கு ஏன் பொதுவுடைமைக் கட்சி அவசியமாக இருக்கிறது?

ஏராளமான எண்ணிக்கையுள்ள தனித்தனித் தொழிலாளர்களாலேயே தொழிலாளர் வகுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தனிப் பட்ட தொழிலாளரும், பல ஆயிரக்கணக்கான மற்ற தொழிலாளர்களுடைய நன்மையைக் கருதாமல், தங்களுடைய சுயநலமே பெரிதென மதித்து நடக்கும் வரையில், முதலாளிக் கூட்ட மானது தொழிலாளர்களுடைய உரிமைகளை அபகரித்துக்கொள்ளவும், அவர்களை நிரந்தர மாகக் கொடுமைப்படுத்திப் பணக்கொள்ளை கொள்ளவுமே செய்துவரும்.

முதலாளிக் கூட்டமானது அரசியல் ஆதிக்க அதிகாரத்தோடு, சகல பலத்தையும் கொண்டு ஒன்றாகச் சேர்ந்து நிற்கிறது. இதைத் தகர்த் தெறிய அதாவது மக்களுடைய பரம விரோதி யாக முதலாளி வகுப்பைப் பலமற்றதாக்கும்படிச் செய்ய லட்சக்கணக்கான தொழிலாள மக்களு டைய முழுப் பலத்தையும் பிரயோகிக்க வேண் டியதுதான். இதற்குத் தேவையானது அவர்களு டைய அமைப்பேயாகும். தொழிலாளர்களுடைய அமைப்பானது, அவர்களுடைய பொருளாதார அரசியல் விடுதலைக்கு வழிகாட்டியாக இருக் கிறது.

தொழிலாளர்களுடைய அடிப்படையான அமைப்பு டிரேட் யூனியன்களெல்லாம், பழைய காலத்திலிருந்ததுபோல் முதலாளித்துவப் பிரதி நிதிகளை உட்கொண்டு முதலாளித்துவக் கொள் கைளுக்கும், லட்சியங்களுக்கும் போராட நேரிட லாம். ஆகவே, இதைத் தடுக்கத் தொழிலாளர் களுடைய நன்மையே பெரிதெனக் கொண்டு அவர்களுடைய விடுதலை சர்வதேச தொழிலாள வகுப்பார்களுடைய நன்மையையும், அடிப்படை யாகக் கொண்டு, தொழிலாளர்களுடைய கட்சி யானது இருக்குமானால், அதுவே தொழிலாளர் களுடைய நன்மைக்குப் பாதகத்தை உண்டாக்கும் எதையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றுவிடும்.

வர்க்கப் போராட்டமானது அரசியல் போராட்டமேயாகும். முதலாளி வர்க்கத்தின் கையிலுள்ள அரசியல் ஆதிக்கத்தைத் தொழி லாள வர்க்கம் கைப்பற்ற வேண்டும். அரசியல் கட்சியான பொதுவுடைமைச் சமதர்ம கட்சி யினால் ஏற்படுத்தப்படும் தொழிலாளருடைய சர்க்காரினால்தான் அரசியல் போராட்டம் ஒரு முடிவுக்கு வரக்கூடும்.

பொதுவுடைமைக் கட்சியின் உதவியின்றித் தொழிலாளி வர்க்கம் சரியான வன்மையோடு முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட் முடி யாது. பொதுவுடைமைக் கட்சியின் கீழ்தான் தொழிலாள வகுப்பார்கள் தங்களுடைய பூரண சக்தியை உணர்ந்து சரித்திரபூர்மவான அதிகாரத் துவத்திற்கு முடிவு காணமுடியும். தொழிலாள வகுப்பார்களுடைய உயரிய அமைப்பு திட்டக் கட்சி பொதுவுடைமைக் கட்சியேயாகும். இதுவே அவசியம் ஏற்பட்ட காலத்தில் அவசியமான அமைப்பு முறைகளோடு, அவர்களிடையே தலைமை வகித்து நடத்திச் செல்லும்.

சர்வதே கம்யூனிஸ்ட் கட்சியோடு பொதுவுடைமைக் கட்சி  ஏன் ஒரு

பாகமாக இருக்க வேண்டும்?

சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலக் கட்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பொதுவுடைமைக் கட்சி இருந்து வருகிறது. பிற நாடுகளிலுள்ள தொழிலாளர்களுடைய சம்பந்த மின்றி இருக்கும் எந்தத் தொழிலாளர்களை அமைப்பும் தொழிலாள வகுப்பார்களுடைய முழு பாத்யதைகளையும் உண்மையில் பரிகரிக்கக் கூடியதாக இருக்க முடியாது.

தொழிலாள வகுப்பார்களுடைய உண்மைப் பிரதிநிதித்துவம் பொருந்திய முழுதும் சர்வதேச சம்பந்தமுடையதாகவே இருக்க வேண்டும். அதுவே விடுதலையின் உண்மையான் உழைப் புக்கு உறைவிடமாக விளங்கும். காரல் மார்க்சால் நிறுவப்பெற்ற முதலாவது சர்வதேச சங்கத்தின் போதனை கீழ்வருமாறு:

உங்கள் அடிமைச் சங்கிலிகளைத்தான் நீங்கள்

அறுத் தெறிகிறீர்களே தவிர, வேறு உங்களுக்கு

எவ்வித நஷ்டமு மில்லை.உலகம் பூராவையுமே

நீங்கள் ஜெயிக்க வேண்டி யிருக்கிறது. ஆதலால்

உலகத்திலுள்ள தொழிலாளர்களே

ஒன்று சேருங்கள்.

முதலாவது சர்வதேச சங்கத்தினின்று தோன்றியதுதான் சர்வதேசப் பொதுவுடைமைக் கட்சியாகும். இதுவே இன்றைய சரித்திரபூர்வ மான நிலையின் ஜீவநாடியான கொள்கைகளைக் கொண்டு உழைக்கின்றது.

பலதரப்பட்ட தேசங்களின் முதலாளி வகுப் பாரின் ஆயுதமான சமுதாய ஊழியர்களின் இரண்டாவது சர்வதேச சங்கம் ஒரு காலத்தில் அகில சர்வதேச அமைப்பாக ஆகிவிடமுடியாது. சென்ற 1914 – 18 வருஷங்களில் நிகழ்ந்த மகாயுத் தத்தில் தொழிலாளர்களுக்குத் துரோகம் செய் ததும் இரத்த வெள்ளத்தில் மூழ்குவதற்குமான மற்றொரு கொடிய யுத்தத்திற்கு அடிகோலியதும் அதுவேயாகும்.

அது ஒவ்வொரு தேசத்தில் உள்ள முதலாளி வகுப்புக்கு அடிமைப்பட்டுக் கீழ்ப்படியும் சுபா வத்தைக் கொண்டதேயல்லாமல் சமுதாயத் தொழிற் கட்சிகளுக்கான எந்தவிதமான நன்மை யான திட்டத்தையும் அது மேற்போட்டுக் கொண்டதில்லை.

பொதுவுடைமைச் சர்வதேசக் கட்சியானது உண்மையான சர்வதேச அமைப்பாக விளங்கு கிறது. அதில் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற சகல நாடுகளில் உள்ள எல்லாத் தரப்பட்  மக்களையும் கொண்ட ஒரே உலகக் கட்சியாகவும், உலகம் பூராவும் உள்ள கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களு டைய பிரச்சனைகளை மேற்கொள்வதே லட்சிய மாகவும் கொண்டு இருந்து வருகிறது. ஐரோப் பாவில் மாத்திரம் 47 தேசப் பிரிவினைகளை அதனுள் அடக்கிக் கொண்டிருக்கிறது.

குறிப்பு: இக்கட்டுரையானது அமெரிக்க நாட்டில் வெளியாக்கப்பட்ட

றுhல நஎநசல றடிசமநச ளாடிரடன தடிin வாந உடிஅஅரnளைவ யீயசவல

என்ற நூலின் மொழிப்பெயப்பாகும்!

மொழிபெயர்ப்பு

தோழர் மா. சிங்காரவேலர்,

குடியரசு/20-08-1933)Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: