இலக்கியத்திற்கான விருதுகள் பல வழங்கப்பட்டாலும், இந்திய அரசின் சாகித்திய அகாடமி அளிக்கும் விருது மிக உயரியதாகக் கருதப்படுகிறது. 1955 ல் இருந்து 56 ஆண்டுகளாக தமிழ் இலக்கியப் படைபாளிகள் இவ்விருதினைப் பெற்று வருகின்றனர். 1957, 59, 60, 64 76 ஆகிய ஐந்தாண்டுகளை விடுத்து, எஞ்சிய 51 ஆண்டு களில் தமிழின் சிறந்த படைப்பாளர்கள் கௌர விக்கப்பட்டுள்ளனர். கல்கி கிருஷ்ணமூர்த்தி தன் அலை ஓசைக்காகவும், ராஜாஜி தன் சக்கரவர்த்தி திருமகனுக்காகவும், அகிலன் வேங்கையின் மைந்தனுக்காகவும், பிசிராந்தையார் நாடகம் எழுதியமைக்காக பாரதிதாசனும், சில நேரத்தில் சில மனிதர்கள் நாவலுக்காக ஜெயகாந்தனும், கண்ணதாசன், தி. ஜானகிராமன், தொ.மு.சி, ல.ச.ரா, வல்லிக்கண்ணன், சு. சமுத்திரம், கி.ராஜ நாராயணன், பொன்னீலன், தி.க.சி, மேலாண்மை. பொண்ணுசாமி, ராஜம் கிருஷ்ணன், திலகவதி ஆகியோர் வரிசையில் இந்த ஆண்டு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் சாகித்திய அகாடமி விருதினைப் பெற்றுள்ளார். காவல் கோட்டம் நாவல் விருது பெறுவதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. வர லாறு, இலக்கியம், ஆகியவற்றுடன் இணைந்து, மானுடவியலின் முக்கிய அலகான இனவரை வியலை நாவல் கொண்டிருப்பது சிறப்பு அம்சம். இலக்கிய பரிசு பெற்ற நாவலை, ஆய்வு சார்ந்த இதர துறைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் தன்மையை காவல் கோட்டம் உருவாக்கி இருக்கிறது. பேரா. வெங்கடாஜலபதி, காவல் கோட்டம் நூல் வெளியீட்டு விழாவின் போது, இது புனைவு இலக்கியமாக பார்க்கப் படுவதை விட, காவல் வரலாறு குறித்த ஆய்வு நூலாகப் பார்க்கப் படவேண்டும் என்றார். இந்த வார்த்தை களின் உண்மையைப் படிக்கிற போது உணர முடியும். பேரா. கே.என். பணிக்கர் கடந்த பத் தாண்டுகளாக உள்ளூர் வரலாறு குறித்த விவா தத்தை முன்னிறுத்தி வருகிறார். அந்த வகையில் மதுரையின் வரலாறு காவல் கோட்டத்தில் சொல்லப் பட்டுள்ளது. 600 ஆண்டுகால வர லாறு குறித்த விவரங்களைச் சேகரித்ததால், 1048 பக்கங்களில் எழுதப் பட்டிருக்கிறது. எழுத்து வடிவம் பெறாத வாய்மொழி வரலாற்றினை, இந்த நாவல் சிறப்பாக கையாண்டுள்ளது. ஆனந்த மடம் நாவலில் பக்கிம் சந்திரர், வங்கத்தின் சந்நியாசிகள் எழுச்சியை, உணர்ச்சி மயமான வாக்கியங்களில் வடிவமைத்ததைப் போல், மதுரையைச் சுற்றிய பிறமலைக் கள்ளர்களின் வரலாறு இலக்கியமாக்கப்பட்டுள்ளது. மது ரையை பாண்டிய மன்னர்களிடம் இருந்து டில்லி சுல்த்தான்கள் கைப்பற்றி, அதைத் தொடர்ந்து, விஜய நகரப் பேரரசுவின் ஆதிக்கத்திற்குள் வந்த வரலாறு தான் நூலின் துவக்கம். பெரும் குதிரைப் படைகள் அணிவகுத்து வருவது திரைக்காட்சி போல் துவங்குகிறது. கங்காவின் படைவரிசையின் ஆவேசம் மதுரையைக் கைபற்றி, சுல்த்தான்களின் தோல்வியில் வெற்றிக் கழிப்பு கொள்கிறது.. அதைத் தொடர்ந்து, விஸ்வநாதன், கிருஷ்ணன், வேங்கட கிருஷ்ணன், முத்து வீரப்பன், மங்கம்மாள், திருமலை ஆகிய மன்னர்களின் காலம் வரலாற்றை வெகு ஆர்வமுடன் நகர்த்திச் செல்வதாக அமைந்துள்ளது. சடச்சி தன் குழந்தைகளுடன் மலைப் புடவுக்குள் தஞ்சம் புவதில் துவங்கும் தாதனூர் கிராமம், காக்கு வீரன், சின்னக்கருப்பு ஆகிய வீரர்கள் தங்கள் கிராமத்தின் தன்மானம் காப்பதற்காக ஜல்லிக் கட்டில் மரணத்தை தழுவதும், பின்னத் தேவன், கழுவன், மாயாண்டி, வீரணன் ஆகிய கதாபாத் திரங்களின் உணர்ச்சி குன்றாத அணிவகுப்பும் திகட்டாத வார்த்தைகளில் பின்னப்பட்டுள்ளது.
மதுரா விஜயம் பக்கங்களில் விஜய மன்னர் களின் வாரிசுகள், தன் மணைவி மக்களுடன் படையெடுத்து வந்ததையும், கொல்லவாரு, சக்கிலியரு, சில்லவாரு, வல்லக்கவாரு, பாலம வாரு, குருவாரு, வெக்கிலியரு, காவன்னகாரு, இர்ரிகாரு, குறிபாலமவாரு என்ற வரிசையில் ஒவ்வொருவரும், தங்கள் குலப் பெருமையை பாடலாக பாடி, கங்கையம்மன் வழிபாட்டுக்கு அணி வகுப்பதும், போர்களத்தில் அணிவகுப் பதும் சொல்லப் பட்டிருக்கும் விதம் உணர்ச்சி வசப்படுத்துகிறது. பொருள் முதல் வாத கண் ணோட்டத்தில் பார்க்கும் போது, வேலைப்பிரி வினையில் துவங்கிய, மேற்படி வரிசை, இன்று சாதியப் பட்டியலாக படம் எடுத்து ஆடுகிறது. உணர்ச்சியின் உச்சத்தில் இருந்து சொல்லப் படும் போது, இந்த மக்கள், சமஸ்கிருத மயமாக்க லுக்குள் விழுவதற்கான காரணங்களாக இதுவே அமைந்திருக்குமோ என எண்ணத் தோன்று கிறது. கனக நுகா தன் கழுத்தை அறுத்து தன் னைத் தானே பலியிட்டுக் கொள்வது ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் பசிக்கு இரையாகும் எளியோரை நினைவுபடுத்துகிறது.
மதுரையிலும் பிரிட்டிஷ் தன் ஆட்சியை படிப்படியாக நிலை நிறுத்திக்கொள்ளும் போது, ஏற்படும் மாற்றங்களை எளியமக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வாசகர் அதன் வலியை உணரும் வகையில் அமைத்திருக்கிறார். அதிகாரத்திற்கான போரில் தேவைக்கு ஏற்ப, தன் சுய பேதங்களை மறந்து, ஒன்றினைந்து போர் செய்ய உழைக்கும் மக்கள் ஆள்வோருக்கு சாதக மாக வழி நடத்தப்பட்டுள்ளனர், என்பதை 32 பாகம் மூலம் அறியலாம். நாயக்க மன்னர்களின் இறுதிக்காலத்தில், மருதநாயகம் என்ற யூசுப் கானை ஆங்கிலப்படை பயன்படுத்திய விதம், படையில் பெரும் பகுதியினர் மறவர், கள்ளர், இவர்களுடன், மருதநாயகம் யூசுப் கானாகி விட்டார், என்பதனால் உண்டான இஸ்லாமிய ஆதரவு, அவர் மணைவி மாஸா பறையர் குல கத்தோலிக்கர் என்பதனால், மிஷினரி உதவி செய்தது. இந்த இனைப்பு ஏன் எல்லா நேரங் களிலும் சாத்தியப் படவில்லை என்ற கேள்வியை நாவல் எழுப்பிச் செல்கிறது. பின் ஃப்ரெஞ்சுக் காரர்களுடன் சேர்ந்து, யூசுப்கான் ஆங்கி லேயர்களை எதிர்த்து மடிந்த வரலாறும் சொல்லப்பட்டுள்ளது.
மதுரை கலெக்டராக இருந்த டேனியல் டெனில்சன் கையாண்ட ஒரு பிரச்சனையை நாவலின் 43வது அத்தியாயத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். கலெக்டர்களும், வேறு சில அதிகாரிகளும் மதுரை குறித்த விவரங்களை, தன் கீழ் நிலை அதிகாரிகள் மூலம் அறிந்து கொண்டு, இங்கு கிடைத்த விலை மதிக்க முடியாத பொருள்களை தங்கள் சொத்தாக கவர்ந்து சென்றனர். சாளுவ கட்டாரி, வளரி ஆகிய ஆயுதங்கள், போர்களின் போது, மிக முக்கியப் பங்காற்றின. சாளுவ கட்டாரி என்ற ஆயுதத்தின் மதிப்பை அறிந்த டெனில்சன், அதை சுருட்டிச் சென்ற கதை, சாதிய ஒடுக்கு முறை யையும், வீரத்தையும் ஒரு சேர விளக்குகிறது.
1817 ல் மதுரை மாவட்ட கள்ளர்கள் பற்றி டர்ன்புல் என்பவர், ஆய்வு செய்து, கள்ளர் என்ற சொல் திருடர்களைக் குறிக்கப் பயன் படும் சொல் என்கிறார். அதே நேரத்தில் மிகுந்த உணர்ச்சிமயமான மனிதர்கள் என்பதை எட்கர் தர்ஸ்டன் கூறுகிறார். தன் மீது சுமத்தப் பட்ட பழியை இல்லை என்று நிரூபிக்க, பழி சுமத்தியவர் வீட்டு முன் நின்று தன் பிஞ்சுக் குழந்தையை வெட்டிப் போடவும் தயங்குவ தில்லை என்கிறார். சின்னி வீரன் பட்டியில் செத்துப் போன, மாத்தூர்க் காரன் காரணமாக, வந்த பழியைப் போக்க, தங்கள் ஊரைச் சார்ந்த, அதே வயதை கொண்ட இளைஞன், நல்லை யாவை பழி கொடுக்க சம்மதித்து, பின் ராசைய்யா என்ற இளைஞன் பழி எடுக்கப் பட்ட கதையை நாவலில் பதிவு செய்ததன், மூலம், இம் மக்கள் தாங்கள் உருவாக்கிக் கொண்ட நியாயத் திற்காக உணர்ச்சி வசப்படுதலின் உச்சத்திலிருந்து செயல் படுவதை வெங்கடேசன் வெளிப்படுத்து கிறார். காவல் நிலையங்கள் உருவான போதும், அதே காலத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட் டதைத் தொடர்ந்து கிருத்துவ மெஷினரிகளின் செயல் பாடுகள் காரணமாக ஏற்பட்ட வளர்ச்சி களாலும், நாவலின் கதை மாந்தர்கள் மேல் சில பண்பாட்டுத் தாக்கங்கள் சவாரி செய்வதையும் வாசிக்க முடியும். நிலப்பிரபுத்துவ மன்னன் பண்பாட்டு மாற்றம் மூலம், தன் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டிய தேவைக்கு ஆளாகவில்லை. ஆனால் காலனியாதிக்க ஆட்சியில், பண்பாட்டு சிதைவை அரங்கேற்றுகிற போது, முதலாளித் துவ ஆட்சிக்கு உகந்த சூழலை, உருவாக்க முடியும், என்பதை, நாவல் விவரிக்கிறது.. மதுரை நகரத்தின் புதிய படித்த வர்க்கம், ஆளும் பிரிட்டி ஷாருக்கு நன்றியுணர்வுடன் செயல் படுவதையும், தாதனூர் காவல்காரர்கள் மீது கொண்ட வன்மம் காரணமாகவும், காவல் சாதியினர் தாக்குதலுக்கு ஆளாவது நாவல் சுட்டும் உண்மை.
காலனி ஆதிக்கம் தனது ஆட்சி அமைப் பைப் பலப்படுத்த காவல் நிலையங்களை உரு வாக்குகிற போது, பல சாதியினர் அத்துறையில் வேலைக்கு சேர்வதையும், அவர்கள் செயல்பாடு நையாண்டிக்குரியதாக பதிவு செய்யப் பட்டிருப் பதையும் ரசிக்க முடிகிறது. திருமலை மன்னன் பிறமலைக் கள்ளர்களுடன் மோதி அழிக்க முற்படவில்லை என்பதும், மாறாக அவர்கள் வசம் மதுரையைக் காவல் காக்கும் உரிமையைக் கொடுத்து, குடிமக்களிடம் இருந்து கூலி வசூ லித்துக் கொள்ளும் முறையை உருவாக்கியது, மாறுபட்ட கோணம். இதிலிருந்து திருமலை மன்னன் தனது ஆளுகைக்கு உட்பட்ட ஒரு பிரச் சனையை கையாண்ட விதம் வெளிப்படுகிறது. ஒன்று காவல் சாதியினராக கருதப் பட்ட கள்ளர் களைப் போரின் போது வீரர்களாகவும், மற்ற நேரங்களில் அதே வீரத்திற்கு ஏற்ற காவல் வேலையையும் கொடுத்து, அதிகார தோர ணையில் அமர்த்தியது. இரண்டு நிலக்கிழார் களின் நிலங்களில் நடந்த கொள்ளைகளை, களவு செய்பவர்கள் மூலமே காவல் காத்து, சாமர்த்திய மாக தடுத்தது. மூன்று எல்லாக் காலங்களிலும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒன்று திரளுகிற வீரம் இருந்தும், விவேகம் இல்லாமையால், தொடர்ந்து காவல் சாதி என்ற பெருமையில் வாழும் மனநிலைக்கு, தாதனூர் காரர்கள், தங்களை சுயதிருப்திக்கு ஆளாக்கிக் கொண்டது. இதன் காரணமாக தங்கள் வீரமும், அதைப் பயன்படுத்துவதற்கான இருளும் மட்டுமே வாழ் வதற்கான சூழலை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையிலேயே மேற்படி உழைப்பாளி மக்கள் காலம் கழித்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
காவல் பணியை கள்ளர்களிடம் இருந்து பறிக்க வேண்டும் என்பது பிரிட்டிஷ் அரசாங் கத்தின், அதிகாரத்தை நிலை நிறுத்தத் தேவைப் பட்டது, என்பதை விளக்கம் தராமலேயே நாவல் மூலம் உணரலாம். ஏனென்றால் பாளையப் பட்டு அமைக்கப்பட்டு, விளைச்சல் கண்ட நிலங்கள், வருமானம் ஆகியவை அதிகரிக்கிற போது, பிரிட்டிஷாரின் ஆட்சி, வரிவருவாயில் மட்டும் திருப்தி கொள்ளவில்லை. எனவே மேற்படிப் பாளையப்பட்டு ஆட்சியாளர்களுடன் மோதி யது. கண்டமனூர், விருப்பாட்சி மேடு, கன்னி வாடி, காளையார் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்த பாளையக்காரர்களுடன் இணைந்து போரிட்டவர்கள் கள்ளர்கள். கொந்தளிப்பான 18ம் நூற்றாண்டு முழுவதும், குறிப்பாக நாயக்க மன்னர்களின் வீழ்ச்சியின் போதும், கள்ளர் களுக்கும் மதுரையை நிர்வகித்த பிரிட்டிஷா ருக்கும் பகைமை முற்றியது. 1755 லிருந்து ஐந்து முறை பிரிட்டிஷ் பட்டாளங்கள் மேலூர் கள்ளர் களுடன் மோதியதாகவும், இதில் ஆயிரக்கணக் கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மடிந்துள்ளதாகவும் மானுடவியலாளர் ஆனந்த் பாண்டியன் (அமெரிக்க பல்கலைக் கழகம்) தெரி விக்கிறார்.
காடுகள் அழிக்கப் பட்டு, மரங்கள் வெட் டுண்டு, விவசாய வளம் மன்னர்கள் காலத்தில் தீவிரம் காட்டியது. மன்னர்களுக்கான வருவாய் விளை நிலங்களில் இருந்து வரிகளாக வந்து குவிந்தது, என்பதை பலவாறு அறிந்திருந்தாலும், மதுரையைச் சுற்றி, நாயக்க மன்னர்கள் உரு வாக்கிய பாளையப்பட்டு என்ற நிர்வாக ஏற்பாடு, பெரும் பங்கு வகித்ததை அறிய முடிகிறது. காவல் கோட்டம் மிக விரிவாக இந்த அம்சத்தை விளக்கு கிறது. நாவலின் மையக் கருவான காவல் பணியின் தேவை இந்த விவசாயப் பொருளா தாரத்தைப் பாதுகாக்கவே உருவாகி இருக்கும் என்பதும் தெளிவாகிறது. மதுரையை தலை நகராகக் கொண்டு, சத்தியமங்கலம் வரையிலும், பரவிய பாளையப்பட்டு முறை குறித்தும், தென் காசி விஸ்வநாதன் ஆலய உருவாக்கத்தின் பின் னணியையும் பாடப்புத்தக வரலாற்றை விடவும், நல்ல முறையில் விளங்கிக் கொள்ள முடிகிறது. கூடவே நாயக்க மன்னர்களின் வைதீக பண்பாட்டு அணுகுமுறை, மதுரையைச் சுற்றிய பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஊரின் முன் னோர்களையும், கிராம தேவதைகளையும் பக்தி யுடன் வழிபட்டு வந்த மதுரை மக்கள் படிப் படியாக வைதீக மரபுகளுக்குள்ளும், சடங்குகளுக் குள்ளும் சென்று விழுந்த கதைகள், பல காவல் கோட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த வைதீக பண்பாட்டுத் தாக்கத்தினால் நடை முறையில் இருந்த எண்ணற்ற கலை நிகழ்வுகள் அழிந்து போய் இருப்பதையும் தெரிந்து கொள்ள முடியும். தாசியாக வாழ்ந்த குஞ்சரத்தம்மாள் தான் சேர்த்து வைத்த தானிய சேமிப்புகளை, பஞ்சத்தில் தவித்த மதுரை மக்களுக்கு வழங்கி, பசி போக்கிய காரணத்திற்காக போற்றப்படு வதையும், நாவல் சுட்டிக்காட்டுகிறது. சாஸ்த் திரத்திற்கும், அடிப்படைப் போற்றுதலுக்குமான வித்தியாசத்தை குஞ்சரத்தின் கதை மூலம் தெளிவு பெறலாம். இதேபோல் ராஜம்மாள் கதை உருவாக்கிய நிலையூர் கண்மாய் வரலாறும் ஆச்சர்யமளிக்கிறது.
நீதிபதி ராபர்ட் ஆண்டர்சன் வீட்டிற்கு தமிழ் கற்றுத் தர சென்ற, சோமநாத சாஸ்த்திரி, கோபமாக, வீடு திரும்பி பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள் சனாதானத்தை வெளிபடுத்து பவை. பட்லராக வேலை பார்த்த சுப்பன் என்ற பறையனின் மகனும், நகர பிரமுகரும், மேயரு மான சிவானந்தையரின் மகனும், ஒரே பள்ளியில் படிக்க நேர்ந்ததை சுட்டிக் காட்டி நடைபெறும் விவாதம், அதைத் தொடர்ந்து சாதி இந்துக் களின் குழந்தைகள் பள்ளியில் இருந்து நின்று விடுவதும், படி நிலை அந்தஸ்த்தில், பிற நில உடைமையாளர்கள் நடத்திய போட்டியை வெளிப்படுத்தும் செய்திகள்.
பிளாக்பர்ன் என்ற கலெக்டர் மதுரையை நிர்வகித்த போது, கோட்டைகளை உடைத்து மதுரை நகரத்தை விரிவாக்கத் திட்டமிட்டார். இம்மிடி என்ற வணிகர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அப்போது, நகரத்தின் விரி வாக்கம் கருதித்தான் இதைச் செய்கிறேன், வேறு எந்த நோக்கமும் இல்லை. நம்புங்கள் உங்கள் பண்பாட்டின் மீது எந்த அவமரியாதையும் இல்லை. உங்கள் கோவில்கள் பற்றி எனக்கு பிரமிப்பு தான் இருக்கிறது. மதராஸ் பிரசிடென் ஸியில் 8292 கோவில்கள் முக்கியமானவை என்று கணக்கிட்டு இருக்கிறோம்.அவற்றை எப்படிப் பாதுகாக்கிறோம் என்பது உங்களுக்கே தெரியும் என்று வாதிடுகிறார். அதன் தொடர்ச்சியாக கோட்டை, கொத்தளங்கள் இடிக்கப் படும் போது, ஏற்படும் அதிர்வுகள் சற்றுத் தூக்க லாகவே வெளிப்படுகிறது. இதை சிலர் விமர் சனமும் செய்துள்ளனர். நாவல் வரிகளில் உள்ள தூக்கல் இயல்பாக இல்லை. மானுடவியலில் ஆய்வு செய்கிற போது, ஆய்வாளர்கள், பங் கேற்று செயல் படுவதும், பங்கேற்காமல் விலகி நின்று ஆய்வு செய்வதும், கூடாது, என்கின்றனர். இதை , என விளக்குகின்றனர். இரண்டிலும் நல்லது, கெட்டது என்ற இரண்டு அம்சங்களும் இருப்பதுதான் காரணம். வெங்கடேசன் மதுரைக் காரர் என்பதனால், ஆக இருப்பதும், நாவல் வடி வத்தில் எழுதியதும் இதற்கு காரணங்களாக இருக்கலாம். அன்றைய மனிதர்களுடன் அவர் வாழ்ந்ததுடன், நம்மையும் அழைத்துச் செல் கிறார். அதன் காரணமாகவே, மொட்டைப் பாறைகளாக உள்ள அமணமலை அழகையும், அதைச் சுற்றிய பகுதியையும் நாமும் ரசிக்க முடிகிறது. தாதனூர் கிராமத்தில் நடைபெறும் குழந்தைகள் வளர்ப்பு, மத்தியப் பிரதேஷத்தில் வாழும் கோண்ட் பழங்குடி மக்களின் பயிற்சி முறையை நினைவு படுத்துகிறது. அந்தக் கால கள்ளர் சமூகத்தினர், சிறுவர்களுக்கு ஐந்து விதமான பயிற்சிகள் அளித்துள்ளனர். ஓடுறது, தாண்டுறது, எறியிறது, தூக்குறது, சாப்பிடுறது. இந்த ஐந்தையும் கத்துக் கொண்டே வளரனும், வளர்ந்து கொண்டே கத்துக்கனும். இறுதியாக வளரி எறியப் பழக்குவார்கள். மூன்று மாத பயிற்சி இதற்குத் தேவைப்படும். கள்ளர்களின் தொழி லுக்குத் தேவையான திறன்களாக இது அறியப் பட்ட காரணத்தினால், இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இது அவர்கள் வாழ்வுக்குரிய தொழில் நுட்பம், என் பதை நாவல் விவரித்துச் செல்கிறது.
தாதனூரில் அதிர்ச்சி தரத் தக்க நிகழ்வாக கதையோட்டம் குறிப்பிடுவது, செங்கன் என்கிற கதாபாத்திரம் ஆகும். கள்ளர் சமூகத்தில், தண்டட்டி அணிந்த நீண்டு தொங்கும் காது களைக் கொண்ட பெண்கள். முக்கியமான வர்கள். வெங்கடேசன் தனது நாவல் போக்கில், இந்த பெண்களின் காது வளர்ப்புப் பணிக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார். தாதனூரில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு, காது வளர்க்கும் ஏற்பாட்டிற்காக, ஒரு நபரை அழைத்து வரச் செய்து, தினம் அல்லது மூன்று தினங்களுக்கு ஒரு முறை, செய்யும் வேலைப்பாட்டினால் காது நீண்டு தொங்கும் நிலை உருவாகும். இதற்காக அழைத்து வரப்பட்ட செங்கன் என்னும் நபர், கள்ளர்களிடையே உள்ள பொருள்களை திருடிய துடன் மச்சம் வைக்காமல், மறைந்து விடுவது தான் அதிர்ச்சிக்கு காரணம் ஆகும். யானைக்கும் அடி சருக்கும்.
தாதனூர் கிராம மக்களின் அடிபணியாத காவல்ப் பணி மீது ஆத்திரம் கொண்டு, சாலை வசதிகளைச் செய்து அவர்களைக் கைது செய் யவும், ஒடுக்கவும் முயற்சி எடுத்தது பிரிட்டி ஷாரின் காவல்துறை. அதையொட்டி தாதனூரின் ஆலமரத்தடியில் ஊர்க்காரர்களுக்கும், காவல்த் துறை அதிகாரிகளுக்குமான உரையாடல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அன்றைக்கு இருந்த தாது வருடப் பஞ்சம் காரணமாக, பல்லாயிரக் கணக்கான மக்கள் சாரை சாரையாக, செத்து மடிந்தனர். அல்லது புலம் பெயர்ந்து பிழைத்துக் கொள்ளலாம் என கடற்கரையை நோக்கி அணி வகுத்தனர். இதன் ஒரு பகுதியாக முல்லைப் பெரியாறு அணை உருவான வரலாற்றையும் நாவல் தொட்டுச் செல்கிறது. பஞ்சத்தில் செத்ததை போல், அடர்காட்டில் அணை கட்டு வதற்காக சிந்திய ரத்தமும், உயிரிழப்பும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.. உயிர்களை, உடைமை களை இழந்து கட்டப்பட்ட அணை கள்ளர்கள் வாழ்வில் மட்டுமல்ல, அனைத்து சமூக மக்களின் வாழ்விலும் புதிய விடியலைத் தந்தது.
ஃப்ரெஞ்சு நாட்டு மானுடவியலாளர் லூயிஸ் டூமாண்ட், 1957 ல் தென்னிந்தியாவின் உபசாதி எனும் தலைப்பில், பிறமலை கள்ளர் சாதியினரின் சமூக கட்டமைப்பு குறித்த தனது ஆய்வு நூலை 501 பக்கங்களில் வெளியிட்டுள் ளார். டூமாண்ட் தனது ஆய்வு எல்லையாக சமூக கட்டமைப்பையும், மதத்தையும் கொண்டிருந் தார். அவர்களின் உணவுப் பழக்க வழக்கம், அதற்கான பொருளீட்டல் உள்ளிட்ட சமூக, பொருளாதார வாழ்வியல் முறைகளை கொக் குளம், தெங்கலப் பட்டி, ஆகிய இரு கிராமங் களில் சேகரித்த, தரவுகளில் இருந்து தெளிவு படுத்தியுள்ளார். கள்ளர்கள் தனது முதன்மைக் கடவுளாக வழிபடும் பேய்க்காமன் எனும் தெய்வம், பறையர் சாதியைக் சார்ந்த ஒரு பூசாரி யால் தீபாராதணை காட்டப் படுபவர், என்பதை சுட்டிக் காட்டுகிறார். இதை கள்ளர்கள் தங்கள் வழிபாட்டு முறையாக கொண்டுள்ளனர். இன்றும் இது தொடர்கிறது. இதன் பொருள் பிறமலைக் கள்ளர் சாதியினர், தங்களுக்கென்று தனித்த இனக்குழு அடையாளங்களைக் கொண் டிருக்கின்றனர், என்பதாகும். சமஸ்கிருதமயமாக்க லுக்குள் வழிபாட்டு முறையில் அவர்கள் சிக்கிக் கொள்ளவில்லை என்பதற்கான உதாரணம். வெங்கடேசனின் எழுத்துக்களிலும் அவர்களின் தனித்த பண்பாட்டு நடவடிக்கைகளைப் பார்க்க முடியும். ஆய்வு நூலுக்கும் புனைவு இலக்கியத் திற்கும் வேறுபாடுகள் இருந்தாலும், ஆழி சூழ் உலகு, மறுபக்கம், சோளகர் தொட்டி, சங்கம் போன்ற நாவல்களில் தூத்துக்குடி மீனவர், குமரி மாவட்ட நாடார், சோளகர் மற்றும் மலையாளி ஆகிய பழங்குடியினர் போன்றோர் விவாதிக்கப் பட்டுள்ளனர். அறியாமை காரணமாக அவர்கள் மீது நடத்தப் படும் சுரண்டலும், அதிகார வர்க்கம் மற்றும் ஆதிக்க சக்திகள் நிகழ்த்தும் ஒடுக்கு முறையும் மைய கருவாக முன் சொன்ன நாவல்களில் சூழ் கொண்டிருந்தது. கூடவே அவர்களுடைய பண்பாடு மிகச் சிறந்த முறையில் விவாதிக்கப் பட்டுள்ளது. அந்த வரிசையில் காவல் கோட்டம் மிகுந்த சுவையுடன் எழுதப் பட்டிருக்கிறது. வெளிநாட்டு ஆய்வாளர்கள் இந்தியாவில் நடத்திய கள ஆய்வு கொண்டு, காலணி ஆதிக்கத்தை வலுப்படுத்தவும், பண் பாட்டு ஒடுக்கு முறையை பிரிட்டிஷ் காலணி யாதிக்கம் கையாளவும், பயன் படுத்தியுள்ளது. சென்னை அருங்காட்சியகத்தில் எட்கர் தர்ஸ்டன் எனும் ஆய்வாளர், 1885 முதல் கால் நூற்றாண்டு காலம் கண்காணிப்பாளராகப் பணியாற்றி, தென் இந்தியா முழுவதும் பயணம் செய்து, 2000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் சாதியினர் குறித்த விவரங்களை சேகரித்துள்ளார். பிரிட்டி ஷாரின் நோக்கம் ஒடுக்கு முறை அரசியலை வலுப்படுத்துவதாக இருந்தாலும், அவர்கள் சேகரித்து விட்டுச் சென்ற விவரங்கள் தான் இன்றைய நமது பண்பாடு குறித்த விவாதங் களுக்கு அடித்தளமாக இருக்கிறது, என கல்வி யாளர்கள் பேசி வருகின்றனர். இதில் ஓரளவு உண்மை உள்ளது.. அதே நேரத்தில், வாய் மொழி வரலாறு மூலமும், கள ஆய்வு மூலமும் நமது பண்பாட்டை அறிந்து கொள்ள முடியும் என் பதற்கு சிறந்த உதாரணமாக, காவல் கோட்டம் எடுத்துக் கொள்ளப் படவேண்டும். சுல்த்தான் களின் படையெடுப்பு, நாயக்க மன்னர்களின் படையெடுப்பு தொடர்ந்து 400 ஆண்டுகள் ஆட்சி, என்றபோதிலும், பண்பாட்டு ரீதியில் பிறமலைக் கள்ளர்கள் எந்த வித மாற்றத்திற்கும் ஆளாக வில்லை என்பதை நாவலை வாசிப்பவர் புரிந்து கொள்ள முடியும். காரணம் கள்ளர் சமூகத்தவர் தொடர்ந்து ஆளும் வர்க்கத்துடன் மோதல் போக்கையே கொண்டுள்ளனர். மோதல் கள் பெரும் பாலும் பழங்குடி மக்களுக்குரிய நம்பிக்கைகள், வாழ்வுரிமைகள் ஆகியவற்றிற் கானதாகத் தான் நடந்துள்ளது. நாவல் முழு வதும் தாதனூர்க்காரர்கள் நயவஞ்சகமாகத் தான் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார்களே யொழிய, நேரடிப் போரில் இல்லை. திருமலை மன்னரின் அரண்மனையில் ராஜமுத்திரையை திருடியது, யார் என்று கண்டறிய முடியா ஏமாற்றத்தால், பிடித்து வருபவனுக்கு ஒரு ஜாகீர் பரிசாக தரப் படும் என அறிவிப்பதும், நான் தான் திருடினேன், எனப் பின்னத்தேவனும், கழுவனும் தர்பாரில் வந்து ஜாகிரைப் பரிசாக கேட்டதும் பதிவாகி யுள்ளது, இதைத் தொடர்ந்து திருடியவனுக்கு ஜாகிரைப் பரிசளித்த மன்னன், திருடிய குற்றத்திற் காக கழுவனைச் சிரச் சேதமும் செய்து விட்டான். நாவலில் மட்டுமல்ல தர்ஸ்டன் பதிவு செய்த ஆய்விலும் இடம் பெற்றுள்ள உண்மை சம்பவம் இது. இப்படி வீரம், இருள், களவு, உணர்ச்சி, பெண்மை, மன்னர் கால நிலபிரபுத்துவம், காலணியாதிக்கம், பண்பாட்டு சிதைவு அல்லது பாதுகாப்பதற்கான முயற்சி, சுரண்டல், பசி பட்டினி, மதமாற்றம், நிறுவனங்களின் பணி என அனைத்து வித சுவைகளையும் கொண்ட நாவ லாக காவல் கோட்டம் அமைந்திருக்கிறது. எந்த இடத்திலும் மலைப்பாகவோ, திகட்டவோ செய்யவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த உழைப்பின் காரணமாக, சேகரித்த விவரங்கள் அனைத்தும் மிகுந்த கவணத்துடன் தொகுக்கப் பட்டுள்ளது. தீவிர உழைப்பிற்கு கிடைத்த பரிசாக சாகித்ய அகாடமி விருது அமைந்ததில் ஆச்சரியம் இல்லை.
சேகரித்த ஆவணங்கள், அதற்குத் துணை புரிந்தவர்கள் மற்றும் பலவகையில் உதவி புரிந்த வர்கள், அமைப்புகள் பற்றிய விவரங்கள் கொடுக் கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வர லாற்று ஆவணங்களை பயன்படுத்துகிறபோது இது குறிப்பிடப்படுவது அவசியம். அடுத்த பதிப்பில் இந்த விவரங்கள் வெளிவரும் என நம்புகிறேன்.
Leave a Reply