மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அரசின் கொள்கை மாற்றங்களில் நீதிமன்ற தலையீடு அவசியம்


 

இந்தியாவின் நீதி பரிபாலனம் நடவடிக்கை களில் கீழமை நீதிமன்றங்களுக்குள்ள பொறுப்பு களையும், அதிகார வரம்புகளையும் விட உச்ச நீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றங்களுக்கும் சில கூடுதலான பொறுப்புகளும் அதற்குரிய அதிகார வரம்புகளும் உள்ளன என கூறலாம். மத்திய அரசிற்கும், மாநில அரசு அல்லது அரசுகளுக் கிடையே ஏற்படுகின்ற தாவாக்களை விசாரிப்பது மான அதிகார வரம்பு அரசியலமைப்பு சட்டம் சரத்து 131ன் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப் பட்டிருப்பதுடன், இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி3ல் சரத்துகள் 12 முதல் 35 வரை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு பாதகம் இல்லாத வகைகளில் மத்திய மாநில அரசுகள் செயல்படுகின்றனவா என்பதனையும், இவ்வரசுகள் இயற்றுகின்ற சட்டங்கள், உருவாக்கிக் கொள்கின்ற விதிகள் – விதிமுறைகள், வெளியிடுகின்ற ஆணைகள் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக உள்ளனவா என விசாரிக்கவும் அவ்வாறு அடிப் படை உரிமைகளுக்கு விரோதமாக இருப்பின் அத்தகைய சட்டங்கள், விதிகள், ஆணைகளை செல்லாது என அறிவிக்கும் அதிகாரவரம்பையும் அரசியலமைப்பு சட்டம் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளது. மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளாக இதன் முகப்புரையில் அறிவிக்கப்பட்டுள்ள, இறை யாண்மை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜன நாயகம் மற்றும் மக்களாட்சி ஆகிய கோட்பாடு களுக்கெதிராக மத்திய மாநில அரசுகள் செயல் படாத வண்ணம் மேற்பார்வையிடுவதுடன் நீதி பரிபாலன   நடவடிக்கைகளை  நிர்வாக  நடவடிக் கைகளில்  இருந்து முழுவதுமாக பிரித்து சுதந்திர மான நீதிபரிபாலனத்தை உத்திரவாதப்படுத்து வதும், இந்திய குடிமக்கள் அனைவரும் நீதிபரி பாலனத்தில் பங்கு கொண்டு உரிய நீதி பெற்றி டும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளை வளர்த் தெடுக்க வேண்டிய பொறுப்பினையும் அரசிய லமைப்பு சட்டம் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கி யுள்ளது. சரத்து 131ன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவிர்த்து, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடு களுக்கும் எதிரான மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளிலிருந்து மாநில மக்களை பாது காப்பதும், அடிப்படை உரிமைகளுக்கும் அடிப்படை கோட்பாடுகளுக்கெதிராக மாநில அரசுகள் இயற்றும் சட்டங்கள், உருவாக்கும் விதிகள், வெளியிடும் ஆணைகள் முதலியவற்றை சரத்து 228-ன் கீழ் செல்லாது என அறிவிக்கும் அதிகாரவரம்பினை அரசியலமைப்பு சட்டம் உயர்நீதிமன்றங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும் சரத்து 36 முதல் 51 வரை அறிவிக்கப் பட்டுள்ள அரசை நெறிமுறைப்படுத்தும் கோட் பாடுகளை பின்பற்றி மத்திய மாநில அரசுகள் தங்களது கொள்கைகளை உருவாக்கி செயல்படு கின்றனவா எனவும் அங்ஙனம் செயல்படும் வகையில் உரிய அறிவுறுத்தல்களையும் வழி காட்டுதல்களையும் அரசுகளுக்கு வழங்கிடும் பொறுப்பினையும், அரசியலமைப்பு சட்டம் உச்சநீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றங்களுக்கும் வழங்கியுள்ளது.

பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம், தீண்டாமை ஒழிப்பு, உயிர் வாழ்வதற்கான உரிமை, தனி நபர் உரிமை, வேலை வாய்ப்பில் சம உரிமை, சாதி, இனம், மதம், பாலினம் சார்ந்த வேறுபாடிண்மை, என இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய பல்வேறு அடிப்படை உரிமைகளை சுதந்திர இந்தியாவின் முதல் 50 ஆண்டுகால, நீதிபரிபாலன செயல் பாடுகள் உறுதி செய்து உத்திரவாதப்படுத்திய துடன் மத்திய மாநில அரசுகள் சரத்து 36 முதல் 51ல் குறிப்பிட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திடும் வகைகளில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளையும் வழங்கியுள்ளன. ஆனால் கடந்த 10 ஆண்டு கால செயல்பாடுகள் குறிப்பாக, உலகமயம், தனியார் மயம், தாராளமயம் ஆகிய கொள்கைகள் செயல்பாட்டிற்கு வந்த பின்னர், மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளும், கொள்கைகளும், உச்சநீதிமன்றம்-உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பு களும் இதுவரை வளர்த்தெடுக்கப்பட்ட மக் களின் அடிப்படை உரிமைகளை பலவீனப் படுத்துவதாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் அறிவிக்கப்பட்டுள்ள இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் மக்களாட்சி ஆகிய அடிப் படை கோட்பாடுகளை பலவீனப்படுத்துவதாக வும் அமைந்துள்ளன.

உச்சநீதிமன்றம் கல்வி உரிமை சம்மந்தப்பட்ட     மோகினி ஜெயின் மற்றும் கர்நாடக அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் சரத்து 36 முதல் 51 வரையிலான அரசை நெறிமுறைபடுத்தும் கோட் பாடுகளை அடிப்படை உரிமைகளில் இருந்து பிரித்து பார்க்கக் கூடாது எனவும் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சார்பானவை எனவும், அரசுகள் மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் வகையில் அரசை நெறிமுறை படுத்தும் கோட்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது. அதாவது வேலை வாய்ப்பை ஏற்படுத்துதல், பொது சுகாதாரத்தை பேணுதல், மருத்துவம் வழங்குதல், வாழ் வதற்குரிய கூலியை நிர்ணயித்தல், கல்வி அளித்தல், இலவச சட்ட உதவி வழங்குதல், சத்துணவு வழங்குதல், உணவு உத்திரவாதப் படுத்துதல், சுற்றுச்சூழலை பேணுதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை அரசு மேம் படுத்துவதன் மூலமாகவே மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதை உத்திர வாதப்படுத்த முடியும் எனவும், மேற்கண்ட பணிகளில் அரசின் பங்களிப்பு அவசியமானது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுபோல் குசயnஉளை உடிசயடiஅரடin ஏள ஹனஅinளைவசயவடிச   வழக்கில் நீதிபதி பகவதி அவர்கள் சரத்து 21 வழங்கியுள்ள உயிர்வாழ்வதற்கான உரிமை என்பது, மனிதன் கௌரவமாக வாழ அவசியப் படும் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகா தாரம், ஆகியவைகளை உள்ளடக்கியதாகும் என விவரித்து தீர்ப்பளித்தார். ஆனால் உலகமயம் மற்றும் தனியார்மய கொள்கைகள் சகல துறை களையும் சந்தை நலன்களுக்கேற்ப மாற்றிவரு கின்ற இன்றையவேளையில், மக்கள் நல அரசின் கோட்பாடுகளை சந்தை நிலைமைகளுக் கேற்பவும், பெருவாரியான மக்கள் நலன்களுக்கு விரோதமாகவும் மாற்றி வருகின்றன என்பதனை கடந்த 10 ஆண்டுகளில் இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் மூலமாகவும் கொண்டுவரப் பட்டுள்ள சட்டதிருத்தங்கள் மூலமாகவும் நாம் உணர முடியும். மக்களின் அடிப்படை உரிமை களை பாதுகாப்பதும், அதற்குகந்த வகைகளில் அரசின் நெறிமுறைபடுத்தும் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துவதுமே மத்திய மாநில அரசுகளின் பிரதான பணிகள் என்கிற நிலை பாடு, சந்தை நிலைமைகளுட்பட்டு மக்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வேண்டும் எனவும், சந்தை நிலைமைகளுக்கேற்பவே அரசின் நெறிமுறைபடுத்தும் கோட்பாடுகள் உருவாக் கப்படும் என்கிற திசைவழியில் கொள்கைகள் மாற்றப்படுகிறது. இந்தியாவின் நீதிபரிபாலன நடவடிக்கைகளும் இதற்கேற்பவே மாற்றப் படுகின்றன.

இந்திய அரசிலமைப்பு சட்டத்தின் சரத்து 39(னு) ஒரே விதமான வேலைப்பார்ப்பவர்களி டையே ஒரே விதமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை உத்திரவாதம் செய்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசும் தனது எல்லாத்துறைகளிலும் தற்காலிக பணியாட்களை நியமனம் செய்து குறைந்த பட்ச ஊதியத்தை மட்டுமே வழங்குகிறது. தற்காலிக பணியாளர்கள் நியமனத்தை மறைமுகமாக அனுமதிக்கும் வகைகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு களை வழங்கி வருகின்றன. சரத்து 43 தரமான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற அளவில் ஊதியம் வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினாலும் குறைந்த பட்ச ஊதிய சட் டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியத்தையே பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர் களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் மீது அரசுகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. அரசு நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கும் வகையில் இன்றைய நீதிமன்ற தீர்ப்புகளும் இல்லை. ஒரே விதமான வேலையை செய்தாலும், தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணியாளரை விட மிக மிக குறைவான ஊதியத்தை பெறுவது இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொழிற் தகராறுகள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் இதர தொழிலாளர் நல சட்டங்களில் உலகமய கொள்கைகளில் ஒன்றாகிய அமர்த்து-துரத்து என்கிற கொள்கையை அமல்படுத்தும் வகையில் பல்வேறு சட்டத்திருத்தங்களை அரசுகள் கொண்டு வந்து எவ்வித உரிமைகளும் அற்ற கொத்தடிமைகளாய் தொழிலாளிகளை வேலை வாங்க அனுமதித்துள்ள இன்றைய சூழ்நிலையில் நீதிமன்றங்களும் அமர்த்து-துரத்து என்ற கொள்கையை அங்கீகரிக்கும் வகையிலேயே தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. இந்திய அரசிய லமைப்பு சட்டம் சங்கம் அமைத்தல் உரிமையை அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது. ஆனால் சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சங்கம் அமைக்கும் உரிமைகோரி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் பட்ட 93வது அரசியலமைப்பு சட்டத்திருத் தத்தின்படி சரத்து 21ல் புதிதாக சரத்து 21 (ஹ) இணைக்கப்பட்டு அதன்படி 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி அடிப் படை உரிமையாக்கப்பட்டது, என்றாலும் சமீப காலங்களில் கல்வித்துறையில் தனியார் நிறுவ னங்களின் பங்களிப்பு மிக அதிகமாகியிருப்பதும், (குடிசநபைn நுனரஉயவiடியேட ஐளேவவைரவiடிளே க்ஷடைட) 2010ன் படி அந்நிய நிறுவனங்களையும் அதன் முதலீடுகளை யும் கல்வித்துறையில் அனுமதித்துள்ளதும் கல்வியை வியாபாரமாக மாற்றியுள்ளதே அன்றி நாகரிக வாழ்விற்கு அடிப்படையாக விளங்கும் கல்வியை அனைவருக்கும் உத்திரவாதப்படுத்த வில்லை. சரத்து 41 வழங்கியுள்ள கல்வி உரிமை வயது வரம்புகளுக்குட்பட்டதன்று. அரசுகள் தங்கள் வருமானங்களுக்கு ஏற்பவும் வளர்ச்சிக்கு உகந்த வகையிலும் மக்கள் விரும்புகிற அளவிற்கு அவர்கள் கல்வி பயில வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் என சரத்து 41 கூறுகிறது. இலவச உயர்கல்வியை வசதியற்ற அனைவருக்கும் உத்திரவாதப்படுத்தவில்லையெனில், 14 வயதுக்குட்பட்ட இலவச கட்டாய கல்வி என்பது உலகமய கல்வி கொள்கைகளுக்கான கல்வி சந்தையை உருவாக்கும் பணியாகவே அமையும்.       (ருnnமைசiளாயேn ஏள ளுவயவந டிக ஹனோசயயீசயனநளா) வழக்கில் மக்கள் அவர்களது வசதிக்கேற்ப கல்வி பயிலும் உரிமையை கோரலாம் என தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், இன்று கல்வித்துறையை வியாபாரமாக்கிவரும் இன்றைய அரசின் கொள்கைகள் மீதும் அதன் நடவடிக்கைகள் மீதும் உரிய தலையீடு செய்யவில்லை எனலாம்.

சரத்து-47 பொது சுகாதாரத்தை பேணுவதில் அரசின் பங்களிப்பை வலியுறுத்துகிறது. (ஞயளஉhiஅ க்ஷயபேய முhயவ ஆயணனடிடிச ளுயஅவைல ஏள ளுவயவந டிக றுநளவ க்ஷநபேயட)          வழக்கில் மருத்துவ வசதிகளை மக்களுக்கு வழங்கவேண்டிய கடமை அரசுகளுக்கு உண்டு எனவும், காலம் தாழ்த்தி வழங்கப்படும் மருத்துவ உதவிகளால் ஏற்படும் விளைவுகளுக்கும் அரசே பொறுப்பு எனவும் அத்தகைய மருத்துவ மனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மருத்துவ வசதி பெறுவது சரத்து 21 வழங்கியுள்ள உயிர்வாழ்வதற்கான உரிமையில் உள்ளடங்கியதாகும் என உச்ச நீதிமன்றம் முன்னர் தீர்ப்பு அளித்தது. ஆனால் உலகமய கொள்கைகள் இன்று இந்திய சேவை துறைகளில் ஒன்றாக விளங்கிய சுகாதாரத் துறையையும் மிகப்பெரிய வணிகத்துறையாக மாற்றியுள்ளது. கடந்த ஆண்டு 30.6.2011 வரையில் ரூபாய் 58,824/- கோடிக்கு இந்தியா முழுவதும் மருந்து மாத்திரை வியாபாரம் நடைபெற்றதாக கூறும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதன் மூலம் மேலும் மருந்து சந்தை வளர வாய்ப்புண்டு என இந்திய மருந்து சந்தை குறித்து முதலாளிகள் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். (க்ஷரளiநேளள ஐனேயை னுநஉ. -11, 2011). புற்றீசல் போல் தனியார் மருத்துவமனைகள் பெருகி, வளர்ந்து வந்ததாலும் இன்று பொது சுகாதாரம் பேணிக்காக்கப் படவில்லை. அரசு மருத்துவ காப்பீடு திட்டங்கள் என்கிற பெயரில் மத்திய மாநில அரசுகள் தங்களது பொறுப்பை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிவிட விழை கின்றன. நகரை தூய்மையாக பராமரிக்காதது உயிர் வாழ்வதற்கான உரிமையை பாதிக்கும் செயலாகும் என (டு.மு. முடிடிடறயட ஏள ளுவயவந டிக சுயதயளவயn)   என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் மக்கள் நலன்களுக்கு விரோதமாக பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் மாற்றங்கள் மீதும் உரிய தலையீடு செய்யவில்லை. சுகாதார மான குடிநீரை மக்களுக்கு வழங்குவது அரசின் கடமை என       (ஹவவயமடிலய கூhயபேயட ஏள  ருniடிn டிக ஐனேயை) வழக்கில் தீர்ப்பு வழங்கி உயிர் வாழ்வதற்கான உரிமையை பலப்படுத்தியது உச்சநீதிமன்றம். இன்று இந்தியாவில் குடிநீர் வியாபாரமே கொள்ளை லாபம் கொடுக்கும் அமோக வியாபாரமாகும். இந்தியாவின் பன்னாட்டு நிறுவனங்களும், அந்நிய பன்னாட்டு நிறுவனங் களும் பல லட்சம் கோடி ரூபாய்களுக்கு இந்தியா முழுவதும் குடிநீர் வியாபாரத்தை லாபகரமாக செய்து வருகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சுகாதார மான குடிநீர் சந்தையில், சுத்திகரிக்கப்படாத சாதாரண குடிநீர் அரசின் வினியோகத்தில் என்பதே இன்றைய நிலைமை. பலவிதமான சுகாதார சீர்கேடுகளுக்கு குடிநீர் அடிப்படை காரணமாக இருப்பினும் சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீரை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வழங்க மத்திய மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. நீதிமன் றங்களும் அரசுகளை நிர்பந்திக்கவில்லை.

சரத்து 39(ஹ) அனைவரும் நீதிபெறும் வகை யில் இலவச சட்ட உதவி ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. வரு மானமின்மையால் ஒருவருக்கு நீதி வழங்குவது மறுக்கப்படக் கூடாது என்கிற கொள்கையை இது வலியுறுத்துகிறது. நீதிபெறும் உரிமையை இது அனைவருக்கும் உரித்தாக்குகிறது. இலவச சட்ட உதவி நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் பெறும் அளவில் வளர்த்தெடுக்கப்பட்டு இருப் பினும், உச்சநீதிமன்றத்தை அனைத்து குடிமக் களும் சுலபமாக அணுகி நீதிபெற்றிட உத்திர வாதம் செய்யப்படவில்லை. நூற்றுக்கணக்கான புதிய சட்டங்களும் சட்டத்திருத்தங்களும் கொண்டுவரப்படுகின்ற இன்றைய சூழலில், அனைவரும் சுலபமாக உச்சநீதிமன்றத்தை அணுகக் கூடிய வகையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் துவங்குவது என்பது சட்டத்துறையிலும், நீதித்துறையிலும் ஏற்பட்டுவரும் மாற்றங்களிலிருந்து மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்கு மிகவும் அவசியமானதாகும். இதுவே உச்சநீதிமன்ற நீதிபரிபாலன நடவடிக்கைகளை இன்று மேம்படுத்தும். ஆனால் கௌரவத்தையும், பெருமையையும் முன்னிலைப்படுத்தி பிராந்திய உச்சநீதிமன்றங்களுக்கு மறுப்பு தெரிவிப்பது வருந்தத்தக்கதாகும். அனைத்து குடிமக்களும் உச்சநீதிமன்றத்தினை சுலபமாக அணுகி நீதி பெற்றிட முடியும் என்பதில்தான் அதன் பெருமையும், கௌரவமும் உள்ளது.

சரத்து 50 நீதிபரிபாலன நடவடிக்கையினை நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து பிரித்து வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்து கின்றது. இருப்பினும் பல்வேறு நீதிபரிபாலன நடவடிக்கைகள் (சீட்டு வழக்குகள், கூட்டுறவு வழக்குகள் தொழிலாளர்கள் வழக்குகள்) நிர் வாகம் சார்ந்த நடவடிக்கைளாகவே இன்றும் உள்ளன. உலகமயம் நீதிபரிபாலனத்தில் நிர் வாகம் சார்ந்த நீதிபரிபாலனத்தை வளர்க்கவே விரும்புகிறது.  (ஐவேநடநஉவரயட ஞசடியீநசவல ஹயீயீநடடயவந கூசiரெயேட, ஞடிடடரவiடிn கூசiரெயேட, ஊடிளேரஅநச கூசiரெயேட ) என பல்வேறு வகையான தீர்ப்பாயங்களை ஏற்படுத்தி நீதிபரி பாலனத்தை நிர்வாகம் சார்ந்தவையாக மாற்று கின்றன. நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும்   டுநபயட யீசயஉவiடிநேசள ஹஉவ , 2010 சட்டம் வழக்கறிஞர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் புதியதோர் அமைப்பை வலியுறுத்து கிறது. அந்நிய சட்ட நிறுவனங்களையும், வழக் கறிஞர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி இந்தியாவில் வழக்கறிஞர்கள் பணிபுரிய அனு மதிக்க நடவடிக்கை எடுத்துவரும் மத்திய அரசு, இந்திய வழக்கறிஞர்களுக்கு மட்டும் வழக்கறிஞர் பதிவுக்கு பின்னர் தகுதித்தேர்வை நிபந்தனையாக அறிமுகப்படுத்தியுள்ளது. கார்பரேட் நிறுவனங் களுக்கிடையே ஏற்படும் தாவாக்களை உடனுக் குடன் விசாரித்து தீர்ப்பு வழங்கிடும் வகையிலும், அனைவருக்குமான நீதிமன்ற நடவடிக்கை களிலிருந்து கார்பரேட் நிறுவனங்களுக்கு முன் னுரிமை வழங்கிடும் வகையிலும் உயர்நீதிமன் றங்களில் கமர்சியல் பெஞ்ச் என்கிற சிறப்பு நீதி மன்றத்தினை துவங்குவதற்கான சட்டத்தை இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றி யுள்ளது மத்திய அரசு. இந்நடவடிக்கைகள் உலகமய கொள்கைகள் சார்ந்த நீதித்துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகளாகும்.

வேலை உரிமை, சுகாதார உரிமை, கல்வி உரிமை ஆகிய உரிமைகளை உள்ளடக்கி உயிர் வாழ்வதற்கான உரிமையை உச்சநீதிமன்றம் சுதந்திர இந்தியாவின் முதல் 50 ஆண்டுகளில் பலப்படுத்தியது என்றால், உலகமயம் கடந்த பத்து ஆண்டுகளில் உயிர்வாழ்வதற்கான உரி மையை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் இந்தியா முழு வதும் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை யில் 2 லட்சத்திற்கும் மேல். மோட்டார் வாகன தயாரிப்பில் இந்தியாவில் முதலிடம் என பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழகம் சாலை விபத்திலும் முதலிடத்தில் உள்ளது. இந்திய அரசின் 2006ம் ஆண்டின் புள்ளி விபரப்படி இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட வர்களின் எண்ணிக்கை 118112 ஆகும். இதிலும் தமிழகமே முதலிடம். தற்கொலை செய்து கொள்வோரில் கம்ப்யூட்டர் துறையில் பணிபுரி பவர்களும், சுயத்தொழில் செய்பவரும் 41 சதம் என்பது அதிர்ச்சியான புள்ளி விவரம் ஆகும். குடும்ப பெண்கள் 21.2 தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது உலகமயம் இந்திய குடும்பங்களது மீது ஏற்படுத்தும் பாதிப்பை வெளிப்படுத்துகிறது. தனிநபர் உரிமையை உத்திர வாதப்படுத்துவதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் உலகமய கொள்கைகளின் விளைவுகளே பெருகி வரும் இந்த தற்கொலைகள். சட்டத்தின் ஆட் சியை வலியுறுத்தும் உலகமய கொள்கைகள் சிறை மரணங்களையும் என்கவுண்டர் மரணங் களையுமே பெருகிட செய்துள்ளன.

1993 முதல் 2009 வரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2318 சிறை மரணங்களுக்கான வழக்குகளை பதிவு செய்துள்ளன. இதில் மகாராஷ்ட்ரா மாநிலம் முதலிடமும் தமிழ்நாடு 8வது இடமும் வகிக்கின்றன. போலிசாரையே சிறந்த ஹீரோக்களாக காட்டிவரும் சினிமாக்கள் மறைமுகமாக என் கவுண்டர் மரணங்களை நியாயப்படுத்துகின்றன. சட்டப்படியான வழி முறைகள் அன்றி ஒருவனது உயிர் பறிக்கப்படக் கூடாது என்ற உரிமையை அடிப்படை உரிமை யாக அரசியலமைப்பு சட்டம் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வழங்கி இருந்தாலும், எவ்வித விசாரணையும் இன்றி, நீதிமன்ற தீர்ப்புகளும் இன்றி, மரண தண்டனை வழங்கும் உரிமையை போலிசார் எடுத்துக் கொள்வதையே என் கவுண்டர் மரணங்கள் நிரூபிக்கின்றன. வளர்ந்து வரும் என்கவுண்டர் மரணங்கள், அரசிய லமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கங்களை நிர்மூலமாக்குகின்றன. 1993 முதல் 2009 வரையிலான 16 ஆண்டுகளில் 716 என்கவுண்டர் மரணங்களை நடத்தி உத்திரபிரதேச மாநிலம் முதலிடம் வசிக்கின்றது. பம்பாயை சேர்ந்த காவல் ஆய்வாளர் பிரதீப்சர்மா 104 என் கவுண்டர் கொலைகளையும், துணை ஆய்வாளர் தயாநாயக் 82 என்கவுண்டர் கொலைகள் செய் திருப்பதையும் பெருமையாக பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. தமிழகத்தில் என்கவுண்டர் மரணங்கள் அதிகரித்து வருவது வருந்தத்தக்கது. எல்லா அடிப்படை உரிமைகளையும் விட உயிர் வாழ்வதற்கான உரிமையே மிகவும் பிரதானமான தாகும் எனவும் இவ்வுரிமை எவ்வகையிலும் பாதிக்கப்படாத வண்ணமே அரசுகளின் நட வடிக்கைகள் அமைய வேண்டும் எனவும், இவ் வுரிமை பாதிக்கப்படும் பட்சத்தில் தேவையான நடவடிக்கைள் மேற்கொண்டு உயிர் வாழ்வதற் கான உரிமையை அரசுகள் காக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கியிருப்பினும், சமீபமாக, பெருகி வரும் சாலை விபத்து மரணங்கள்,  மரணங்கள், சிறைச்சாலை மரணங்கள் குறித்து போதிய முக்கியத்துவம், உரிய அறிவுரைகளையும் வழி காட்டுதல்களையும் மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் வழங்க வில்லை என்றே கூறலாம்.

உலகமயம் தனியார்மயம் கொள்கைகள் மக்களின் அடிப்படை உரிமைகளை பலவீனப் படுத்துவதுடன், அரசிலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசின் நெறிமுறைப் படுத்தும் கோட்பாடுகளில் சந்தை நலன்களுக்கு ஏற்ப மாறுதல்களை செய்து செயல்படுத்தி வருவதுடன், அதற்குகந்த வகையில் நீதித்துறை நடவடிக்கைகளையும் மாற்றி வருகின்றன. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் அரசை நெறிமுறைப்படுத்தும் கோட்பாடுகள் மீதான உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் பொறுப்பினையும், அதிகார வரம்பினையும், இன்றைய நிலைமைகளி லிருந்து மறுபரிசீலனை செய்வது மட்டுமே இந்திய நீதிமன்றங்களின் 150 ஆண்டு கால வரலாற்று சிறப்பை பேணிக்காத்திட உதவும்.

பிரிட்டன் பாராளுமன்றத்தால் 1861ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய உயர்நீதிமன்றங்கள் சட்டத்தின் மூலம், 14.8.1862ம் நாள் துவங்கப்பட்ட பம்பாய் உயர்நீதிமன்றம், 15.8.1862ம் நாள் துவங்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மற்றும் செப்டம்பர் 1862ல் துவங்கப்பட்ட கல்கத்தா உயர்நீதிமன்றம், ஆகிய மூன்று உயர்நீதிமன்றங்கள் துவங்கி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை இந்திய நீதிமன்றங்கள் சிறப் பாக கொண்டாடி வருகின்ற இன்றைய சூழலில், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட் பாடுகளையும் அது மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் இதற்கேற்ப வகுக்கப்பட்டுள்ள அரசின் நெறிமுறைப் படுத்தும் கோட்பாடுகளையும் இவைகள் மீதான இந்திய நீதிமன்றங்களின் கடந்தகால பங்களிப் பையும், புரிந்துகொள்வதுடன் இதில் இன்று உலகமயம்-தனியார்மயம்- கொள்கைகள் ஏற் படுத்தி வரும் மாறுதல்களையும் இதற்கேற்ப மாறிவரும் நீதிமன்றங்களின் நிலைபாடுகளையும் புரிந்து கொள்வதே, நீதிமன்ற நடவடிக்கைகளில் சந்தை நலனை புறந்தள்ளி மக்கள் நலனை முன்னிலைப்படுத்த உதவும். இதுவே இந்திய நீதிமன்றங்களின் வரலாற்றிற்கு பலம் சேர்க்கும்.

—   ஐ. ரத்தினவேல்



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: