இன்று…இப்போது…என்ன செய்வது? நூல் விமர்சனம்


 

 

புதிய ஜீவா  எழுதிய”இன்று…இப்போது… என்ன செய்வது”? என்ற நூல் ஒரு புதிய முயற்சி. ஒரு பெரிய தொழிற்சாலையில் பன்னிரெண்டு ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நெருக்கமாக இருந்து பார்த்த அனுபவ அடிப்படையில் தொழிற்சங்கத்தின் இன்றியமையாமையையும், அது சந்திக்கும் சவால்களைத்தீர்ப்பதற்கான அணுகுமுறைகளையும், முன்மொழிவுகளையும் ஆலோசனைகளாக முன்வைக்கிறார். நூலின் முன்பாதியில் சென்னை போன்ற பெருநகரங் களில் தொழிற்சங்கம் சந்திக்கும் பிரச்சனை களைப் பற்றி விவரிக்கிறார். பின்பாதியில் வேக மாக உலக மயம் அமலாகும் இன்றைய கால கட்டத்தில் தொழிற்சங்கம் எதிர்நோக்கும் புதிய வடிவங் களைப்பற்றி அலசுகிறார்.

ஒரு தொழிற்சங்கத்தின் தேவையை உணருகிற, தன்னைப்புதிதாக தொழிற்சங்கத்தில் இணைத் துக்கொள்கிற எவருக்கும் இந்த நூல் பெரிதும் பயனுள்ளதாக, கையேடாக விளங்கும். தொழிற் சங்கத்தின் பால பாடத்தை மிக எளிமையான வார்த்தைகளில் சலிப்பேற்படுத்தாமல் விவரித் துச்செல்வதில் இந்நூல் வெற்றி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம். தொழிற்சங்கத்தின் அவ சியம், தொழிலாளர் ஒற்றுமை,வர்க்க அரசியல் புரிதல், சரியான தொழிற்சங்கத் தலைமையை தேர்வு செய்தல் பற்றியெல்லாம் தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் வழிகாட்ட முயற்சியெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஒரு ஆலையில் தொழிலாளர்களும், தொழிற்சங்க மும் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது நன்மை பயக்கும் என்ற இவரது ஆலோசனைகள் நூல் முழுவதும் விரவிக்கிடக் கின்றன.   தோழமையோடு தொழிலாளியின் கரம் கோர்த்து தொழிற்சங்க உலகத்துக்குள் மெல்ல நுழைந்து, கொஞ்சங் கொஞ்சமாக அதன் பிரம்மாண்டங்களை காட்சிப்படுத்த அவர் எடுத்திருக்கும் முயற்சியில் அவருடைய பெரும் உழைப்பு அடங்கியுள்ளது என்பதில் ஐயமில்லை. எனினும் வரலாற்றுப்பின்புலமின்றி இருப்பது இந்நூலின் பலவீனம்.   இடதுசாரி தொழிற்சங்க முன்னணி ஊழியர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் அறிந்த செய்தி கள் மற்றும் அனுபவங்கள் பதிவாக இது உள்ளது. ஒன்றுபட போராடுவதும், போராட ஒன்றுபடுவதும் தொழிலாளி வர்க்கத்தின் பணி களில் அடிப்படையானது என்ற தொழிற்சங்க பிதாமகர் பி.டி.ரணதிவேயின் கருத்தை நூலின் சாரமாக பிழிந்து தந்திருக்கிறார்.

தாங்கள் ஒரு வர்க்கம் என்ற புரிதலைப் பெறு தலும், தங்களுக்கான வர்க்க அரசியல் போதத்தை பெறுவதின் தேவையையும் தொழிலாளர்க்கு எவ்வளவு அவசியம் என்பதை இந்நூலில் வலி யுறுத்தியிருப்பது இடதுசாரி சங்கங்களில் உள்ள முன்னணி ஊழியர்கள் அன்றாடம் செய்து வரும் பணியே. நிகழ்காலத்தில் நின்று கொண்டு இந்நூல் தொழிற்சங்க நிகழ்வுகளை அலசுகிறது. அதனதன் தொடர்பான வரலாற் றுப்பின்ன ணியை தொழிலாளியின் கவனத்திற்கு கொண்டு வராமல், என்னதான் ஏற்கும் விதத்தில் விளக்கி னாலும் தொழிலாளியின் புரிதல் அதன் முழு பரிமாணத்தை எட்ட இயலாது. தொழிலாளர் கள் நடத்திய போராட்டங்களின் பலத்திலேயே தொழிற்சங்க உரிமைகள்,  தொழிற்சங்க சட்டங் கள் கிடைத்தன என்று ஒரு வரியில் சொல்லிச் செல்வது அதனை மிக எளிமையாக தொழிலாளி புரிந்து கொள்ளும் தவற்றை ஏற்படுத்தும். தொழிற்சங்கத்தின் தோற்றமும் அதன் வளர்ச்சி யும் அவ்வளவு சுலபமாக நடந்துவிட வில்லை. அதன்பின்னே எவ்வளவு உயிரிழப்புக்கள்,  தியாகங்கள், சொல்லொணா சோகங்கள் அடங்கியுள்ளன. துரோகங்களையும், காட்டிக் கொடுத்தல்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் பலவற்றைச்சந்தித்தே தொழிற்சங்க இயக்கங்கள் வளர்ந்தன.

எனவே இவைகளை கொஞ்சங்கூட கோடிட்டு காட்டாமல் எவ்வளவுதான் வர்ணித் தாலும், அக்கருத்துக்கள் அதன் ஆழத்தையும் அகலத்தையும் அளிக்காது.     இந்தியாவில் முத லாளித்துவம் உருப்பெற்று வளர்ந்த காலந் தொட்டே, தொழிலாளி வர்க்கமும் வளர்ந்து வந்தது. முதலாளி–தொழிலாளி முரண்பாடு சமரசங்களால் தீராது என்பதனை, தொழிற் சங்கம் என்ற ஒரு அமைப்பு இல்லாத காலங் களிலேயே நடைபெற்ற எண்ணற்ற போராட் டங்கள் உணர்த்தின. இந்தியாவில் 1918ல் அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட முதல் சங்கம் என்ற பெருமை பி அண்ட் சி மில்லில் பி.பி.வாடியாவால் ஏற்படுத்தப்பட்ட மெட்ராஸ் லேபர் யூனியனையே சாரும். அதே ஆண்டில் குஜராத்தில் காந்தியடிகளால் தன் கண்ணோட் டத்திற்கேற்ப மஜூர் மஹாஜன் என்ற ஒரு அமைப்பை அகமதாபாத் பஞ்சாலை ஒன்றில் ஏற் படுத்தினார். முதலாளிகள் தர்மகர்த்தாக்களாக இருந்து தங்கள் சொத்தை நிர்வகிக்க வேண்டும். முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரச் சனை ஏற்பட்டால் நடுவர் மத்யஸ்தம் மூலம் பிரச் சனையை தீர்க்கவண்டும் என்பதே அவர் நிலை. வர்க்க அரசியல் குறித்து அவருக்கு நம்பிக்கையு மில்லை, தொழிலாளர்க்கு அவசியமுமில்லை என்பதே அவரின் கருத்தாக இருந்தது. ஆனால் முதலாளிகள் தர்மகர்த்தாக்களாகவும் இல்லை, நடுவர் மன்றங்களால் பிரச்சனை தீர்ந்துவிடவு மில்லையென்பதே யதார்த்தம். காந்தி இன்றிருந் தால் தன் கருத்தை அவரே நிச்சயம் மாற்றிக் கொண்டிருப்பார்.    சோவியத் புரட்சியின் வீச்சும், பிரிட்டனில் தொழிற்சங்க செயல்பாட் டையும் கண்டு அதனால் கவரப்பட்ட சில தேசியத்தலைவர்கள் 1920ல் ஏ.ஐ.டி.யு.சி அமைப்பை உருவாக்கினர். தொழிலாளி வர்க்கம் பொருளாதார சுதந்திரம் பெற்றால் மட்டும் போதாது. அரசியல் சுதந்திர மும் பெற வேண்டுமென அவர்கள் அறைகூவல் விடுத்தனர். அவர்களைப்பொறுத்தவரை அர சியல் சுதந்திரம் என்பது பிரிட்டிஷாரை நாட்டை விட்டு வெளியற்றுவதோடு மட்டுமே நின்றது. தொழிலாளி வர்க்கம் தன்னை ஒரு வர்க்கமாக உணர்வதோடு, அனைத்துவித சுரண்டல்களில் இருந்தும் விடுபடவேண்டுமென்றால், நிலவும் அமைப்பை மாற்றுவதைத்தவிர வேறு வழி யில்லையென்பதை சோவியத் யூனியனில் ஏற் பட்ட புரட்சியும், மார்க்சியமும் தெளிவாக போதித்தன. இதனை உள்வாங்கிய ஏராளமான நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள், தொழிலாளர்கள் மத்தியில் ஏ.ஐ.டி.யு.சி தலைமையில் செயல்பட ஆரம்பித்தனர்.

நாடு முழுவதும் உள்ள சங்கங் கள் இதில் இணைந்த போது, காந்தி தொடங்கிய தொழிற்ச ங்கம் இதில் சேரவில்லையென்பது மட்டுமல்ல, பின்னால் காங்கிரஸ் கட்சி தனக்கென ஐ.என். டி.யு.சி அமைப்பைத் தொடங் கவும் காரணமாக  இருந்தது. ஒவ்வொரு கட்சியும் தனக்கென ஒரு தொழிற்சங்க அமைப்பைத் தொடங்கவும் இது வழி வகுத்தது.    1926ல் கொண்டுவரப்பட்ட தொழிற்சங்க சட்டம் சுலபமாக வந்துவிட வில்லை. 1924ல்  ஏ.ஐ.டி.யு.சி கொடுக்கும் தகவல் படி பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்களை உள்ளடக்கிய 187 தொழிற்சங் கங்கள் இருந்துள்ளன. இவர்கள் நடத்திய எண்ணற்ற போராட்டங்களின் விளைவே பிரிட்டிஷாரை அரைகுறையாகவாவது ஒரு தொழிற்சங்க சட்டத்தைக்கொண்டுவர  நிர்ப் பந்தித்தது.  இப்படித்தான் தொழிலாளர் தொடர்பாக கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு சட்டத்தின் பின்னே தொழிலாளி வர்க்கத்தின் அளப்பரிய தியாகம் இருந்தது.    முத லாளித்துவ கட்சிகள் மற்றும் சாதிய அமைப்புக்கள் தங்களுக் கென ஒரு தொழிற்சங்க அமைப் பைத் தொடங்கி, அதைத் தங்கள் இயக்கத்தின் துணை அமைப் பாக வைத்திருப்பது மட்டுமல்ல தொழிலாளர் கள் ஒற்றுமையைக் குலைத்து பிளவினையும் ஏற்படுத்தியுள்ளது. முழு விடுதலை என்ற இலக்கை நோக்கி தொழிலாளர்களை சுயேச்சை யாக அணிதிரட்டுவதில் ஈடுபட்டுள்ளவை இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்களே. இவைக ளெல்லாம் நூலில் இடம் பெற்றிருந்தால் படிப்ப வர்க்கு மேலும் தெளிவு கிடைத்திருக்கும்.   கடந்து போன 2011ம் ஆண்டு உலக அளவில் வீச்சான தொழிலாளர் போராட்டங்களும், சர்வாதிகாரத்திற்கெதிரான பொது மக்களின் போராட்டங்களும் போராட்ட ஆண்டாகவே இருந்தது.

கடந்த செப்டெம்பர் 17 அன்று தொடங்கிய வால் ஸ்டிரீட்டைக்கைப்பற்றும் போராட்டம், தற்போது 80க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட  நகரங்களில் பரவி தீவிரமாக நடந்து வருகிறது. நாங்கள் 99சதம் என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த போராட்டம் ஒரு சதவீத பணக்காரர்களை எதிர்த்தே நடை பெறுகிறது. இதில் வியத்தகு உண்மை என்ன வென்றால், இந்த போராட்டக்காரர்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டதற்கு அரசின் முதலாளித்துவ ஆதரவு கொள்கையே காரணம் என்பதையும், முதலாளிகளை ஆத ரிக்கும் சமூக அமைப்பு மாற வேண்டுமென்று கோருவதும்தான். முன்பு போர்டு முதலாளிக்கு எது நல்லதோ அது அமெரிக்காவுக்கு நல்லது என்று கூறப்பட்டது. இப்போது வால்ஸ்டிரீட் டுக்கு எது நல்லதோ அது அமெரிக்காவுக்கு நல்லது என்று கூறப்படுகிறது அமெரிக்காவின் இந்த கொள்கை தங்களை எங்கு கொண்டுபோய் விட்டுள்ளது என்பதை தெளிவாக அறிந்தே இந்த போராட்டம் நடைபெறுகிறது என்பதே இதன் தனித்தன்மையாகும்.    இன்று நாடுகள் மத்தியிலேயும் சரி, மக்கள் மத்தியிலேயும் சரி ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கு காரணம் முத லாளித்துவம் என்பதை உணர்ந்த பின்தான் அதற்கான மாற்றை மார்க்ஸ் எழுதிய மூல தனத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

மார்க்சிய லெனினியத்தைப் பயி லவும் அதை அறியவும்  லட்சக்கணக்கான இளை ஞர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே முதலாளித்துவத்திற்கு மாற்று மார்க்சிய லெனினியமே என்று தைரியமாக உரத்து முழங்க லாம். மார்க்சியம், முதலாளித்துவ பொருளா தார வல்லுநர்கள் கூறுவது போல காலாவதி யானது என்ற வாதம்தான் காலாவதியானது. இதைச் சொல்ல இனியும் தயங்கவேண்டிய தில்லை என்பதை நூலாசிரியர் உணர்வார் என நம்பு கிறோம்.    தொழிற்சங்கம் குறித்து மார்க்சும், லெனினும் கூறிய வார்த்தைகள் எவ்வளவு பொருத்தப்பாட்டை இன்றுங்கொண்டிருப்பது ஒன்றே அவர்களின் தீர்க்க தரிசனத்தை உணர்த் தும். “தொழிற்சங்கங்களின் உடனடி நோக்கம் என்ன? முதலாளித்துவத்தை எதிர்த்து அன்றாட போராட்டம் நடத்துவது,கூலியிலும், வேலை நேரத்திலும்,முதலாளித்துவம் செய்யும் தினசரி தில்லுமுல்லுகளை எதிர்த்து பாதுகாப்பு போர் நடத்துவது. தொழிற்சங்கங்களின் இந்த நட வடிக்கை நியாயமானது மாத்திரம் என்பது மட்டுமல்ல;அது அவசியமானதுங்கூட.தற்கால உற்பத்தி முறை நீடிக்கும் வரையில், இதைப் புறக்கணிக்க முடியாது. அதற்குமாறாக இது எங்கும் பரவ வேண்டும்.

சகல தேசங்களிலும் தொழிற்சங்கங்களை உருவாக்கி ஒன்றுபடுத்தி, இந்த அன்றாட போராட்டத்தை உலகெங்கும் நடத்த வேண்டும்.”  “முதலுக்கும் தொழிலுக்ககும் நடக்கும் கொரில்லா போராட்டத்துக்கு தொழிற் சங்கங் கள் அத்தியாவசியமானால், கூலிக்கு உழைப்பை விற்கும் அமைப்பையே ஒழிப்பதற்கு தொழிற்சங்க ஸ்தாபனங்கள் அதிமுக்கியமா கின்றன.”(1866ல் ஜெனீவாவில் நடைபெற்ற முதல் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன மாநாட்டில் மார்க்ஸ்)   “தொழிலாளி வர்க்கமானது தனது சொந்த முயற்சியின் மூலமாகவே தொழிற்சங்க உணர்வை மட்டுமே, அதாவது சங்கங்களில் இணைந்து கொள்வது அவசியம் என்ற கருத் தோட்டத் தைப்பெறுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராட வேண்டும்,தேவையான சட்டங்களை நிறைவேற்ற அரசை வற்புறுத்து வதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும் என்பது போன்ற, கருத்துக்களை மட்டுமே உருவாக்கிக் கொள்ளும் திறன் படைத்ததாக இருக்கிறது என்பதை அனைத்து நாடுகளின் வரலாறும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. எனினும் சோஷலிஸத் திற்கான தத்துவம் என்பது சொத்துரிமை பெற்ற வர்க்கங்களின் கல்வியறிவு பெற்ற பிரதி நிதிக ளால், அறிவுஜீவிகளால் விளக்கிக்கூறப்படும் தத்துவார்த்த, வரலாற்று மற்றும் பொருளா தாரக் கொள்கைகளிலிருந்துதான் வளர்ந் தெழுகிறது. அவர்களது சமூக அந்தஸ்தின்படி நோக்கினால்,நவீன விஞ்ஞான சோஷலிஸத்தின் நிறுவனர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய இருவருமே முதலாளித்துவ அறிவுஜீவிகள் பிரிவைச்சேர்ந்தவர்கள்தான” -லெனின். இத் தகைய விவரங்களையும் நூல் உள்ளடக்கியிருக்கு மானால், மேலும் அழுத்தமும், பொலிவும் பெற்றிருக்கும்.

–வே. மன்னார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s