மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஏ.கே. கோபாலன் வாழ்க்கையில் காந்தியிசம்


 

 

நான் சோவியத் யூனியனுக்கு வந்து சுமார் எட்டு மாதங்களாகின்றன. உடனடியாக தாயகம் திரும்ப வேண்டுமென்று கட்சி தந்தியடித் திருந்தது. ஆயினும் திரும்புவதற்கு முன் சில இடங்களைக்கூட பார்க்க வேண்டுமென் றெண்ணினேன். ருஷ்யாவின் மிகப்பழமை வாய்ந்த பஞ்சாலை ஒன்றைப் பார்க்கச் சென் றேன். அன்று அதற்கு 145 வருடத்திய பழக்கம் இருந்து வந்தது. அக்டோபர் புரட்சியில் உயிர் நீத்த தொழிலாளிகளின் நினைவுச் சின்னத்தைத் தான் அந்த பஞ்சாலைக்குள் புகும்பொழுது நாம் முதல் முதலாகப் பார்ப்பது, அந்தச் சின்னத்திற்கு அருகாமையில் ஆலையின் மாதிரித் தொழிலாளி களின் படங்கள் தொங்கவிடப் பட்டிருந்தன. சீனாவிலும், ருஷ்சியாவிலும்,  இதர சோஷ லிÞடு நாடுகளிலும் நான் கண்ட பிரத்தியேகத் தன்மை இது. ஆலைகள், கல்வி நிலையங்கள், மருத்துவ நிலையங்கள் ஆகியவற்றிலெல்லாம் மற்றவர் களுக்கு எடுத்துக்காட்டாக செயல் புரிபவர்களின் படங்களை முன் வரிசையிலேயே பார்க்க முடியும். மனிதனின் உழைப்பிற்கும், திறமைக்கும் வெகுமதியளிக்கும் இந்த முறை என்னை மிகவும் கவர்ந்தது. உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்கிச் சுரண்டிக்கொழுக்கும் பகா சூரர்களின் படங்களை ஆலைகளில் முக்கிய இடங்களில் மாட்டியிருப்பதைக் கண்டிருக்கி றேன். ஆனால் உழைப்பாளி வெகு ஜனங் களுக்குத் தொழிலில் உணர்ச்சியூட்டும் இந்த முறை சோஷலிÞடு நாடுகளில் தவிர வெறெங் கும் நான் கண்டதே கிடையாது.

நான் மாÞகோவிற்குத் திரும்பினேன். தாய கத்திற்குத் திரும்புவது உடனடிக் கடமையாகி விட்டது. டாக்டர்கள் என்னை பரிசோதித்தனர். பூரண திருப்தி அவர்களுக்கு ஏற்படாவிடனும், நான் போவதற்குச் சம்மதம் தந்தனர். ஆனால் விமானத்தில் பிரயாணம் செய்யக்கூடாதென்று யோசனை கூறினர். ரெயில் வழியாகச் சீனா விற்குப் போகலாம் என்றனர். ஒரு பிரத்தியேக ரெயில்வண்டியில் ஒரு டாக்டருடனும் இரு உதவியாளர்களுடனும் நான் கிளம்பினேன். ரெயில் பிரயாணம் மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. ருஷ்யாவைப் போன்ற, வேறுபட்ட ஜனப் பகுதிகளும், இயற்கை அமைப்புகளும் நிறைந்த ஒரு பெரிய நாட்டில் ரெயிலில் பிரயாணம் செய்வது உல்லாசமாகவும் பய னளிப்பதாகவும் இருந்தது. ஒவ்வொரு நிலையத் திலும் வண்டி நிற்கும் பொழுது மாறுபட்ட மொழியைப் பேசுபவர்களையும், மாறுபட்ட உடை அணிந்திருப்பவர்களையும் பார்க்கலாம். மாறுபட்ட, இயற்கைத் தோற்றம், காலநிலை ஆகியவை குதூகலமளிக்கின்றன. பத்துநாள் பிரயாணத்தின் முடிவில் சீனாவின் எல்லையை  அடைந்துவிட்டோம். அங்கு சீனத் தோழர்கள் எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

டாக்டரும் உதவியாளர்களும் திரும்பிச் சென்றார்கள். நான் அவர்களுக்கு நன்றி தெரி வித்தேன், சீனத் தோழர்களுடன் பிரயாணத்தை மேற்கொண்டேன். உண்மையைக் கூறிடில் ருஷ்ய எல்லையைத் தாண்டியபொழுது நான் கவலை யடைந்தேன். சொந்த நண்பர்களிடமிருந்தும் உற்றார் உறவினர்களிடமிருந்தம் விடைபெற்றுச் செல்வது போல் எனக்குப்பட்டது. இந்த எட்டு மாத காலத்தில் அந்த அளவு பாசமும் நேசமும் அவர்கள் என்மீது செலுத்தினர். இந்தியாவின் பால் அவர்கள் கொண்டுள்ள பாசம் எல்லை யற்றது. எனக்கு நோய் அதிகரித்தபொழுது அவர் கள் காட்டிய கவலையும் உணர்ச்சியும்தான் என்னே! மனித வாழ்வினை இந்த அளவு விலை மதிப்பவர்களும் உண்டா என்று என் இதயம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

சீனத் தோழர்களுடன் நான் பீக்கிங்கை அடைந்தேன். அங்கு மூன்று நான்கு நாட்கள் தங்கினேன். அங்கு நான் தங்கியிருந்தபொழுது புகழ்பெற்ற மே தின அணிவகுப்பைப் பார்வை யிட்டேன். குறைந்ததொரு கால கட்டத்திற்குள் எல்லா துறைகளிலும் பெரும் அபிவிருத்தியைக் கண்ட, உணர்ச்சியும் உற்சாகமும் கொண்ட, அந்நாட்டின் லட்சக்கணக்கான தொழிலாளி-விவசாயி-மாணவ வீரர்களை நான் கண்டேன். அந்த மனித மகா சமுத்திரம் ஆனந்தத்தின் எல்லைகள் அனைத்தையும் தாண்டிக் குதித்து முன்னேறுவதைக் கண்டேன். சீனம் அன்று பல அரங்கங்களிலும், குழந்தை நடையைத்தான் போட்டுக்கொண்டிருந்தது. ஆனால், அன்றே தன்நிறைவும் எதிர்கால நம்பிக்கையும் உள்ள தோர் ஜனப்பகுதியை என்னால் பார்க்க முடிந்தது. சீனத்தின் வெற்றியின் பெரும் இரகசிய மென்னவென்றால் எதிர்கால நம்பிக்கை கொண்ட ஒரு ஜன சமூகத்தை அதனால் படைத் தெடுக்க முடிந்தது என்பதேயாகும்.

நான் சீனாவிலிருந்து ரெயில் வழியாக ஹாங் காங்கிற்குச் சென்றேன். அங்கிருந்து விமானத்தில் டில்லிக்குப் பறந்தேன். இவ்வாறு எட்டு மாதம் நீடித்த எனது அயல்நாட்டுச் சுற்றுப்பிரயாணம் முடிவுற்றது.

ஒரு புதிய உணர்வு புதிய பார்வை

நான் இங்கு இல்லாமலிருந்தபொழுது ருசிகர மான பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வேண்டு மென்றே முதல்தரமான கட்டுக்கதைகளை எதி ராளிகள் புனைந்து பிரச்சாரம் செய்தனர். நான் ஸ்டாலினைப் பின்பற்றுபவன் அல்ல. ஸ்டாலின் கொள்கையை எதிர்ப்பவன், ஆகவே என்னை ருஷ்யாவிற்கு அழைத்துச் சென்று `லிக்விடேட்’ செய்துவிட்டனர். இது ஒரு மாதிரிக் கதை. பிற்போக்குப் பத்திரிகைகள்கூட என் மீது அளவு கடந்த அன்பைச் செலுத்தின. நாடாளுமன் றத்தில்கூட இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டது. வடிகட்டின கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்கள்கூட, கோபாலன் ஒரு நல்ல மனிதனென்றும், அவருக்கு என்ன நேர்ந்துவிட்டது என்பதைத் தெரிய வேண்டுமென்றும், நாடாளுமன்றத்தில் கூக்குரல் எழுப்பினர். அது நெறியின்றி பொய்க் கதை களைப் புனைவதன் துவக்கமாகவே இருந்தது. இதைவிட ஏளனத்திற்குரிய பண்பாடற்ற எவ் வளவோ புனைச் சுருட்டுகளை கம்யூனிஸ்டு கட் சிக்கு எதிராக அவர்கள் கட்டவிழ்த்து விட்டி ருக்கின்றனர். அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இந்தப் பிரச்சாரம் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக இருந்தது எனலாம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியைப் பொறுத்த வரையில் அந்தக் காலகட்டம் முக்கியமான பல படிப்பினைகள் கொண்டதாக இருந்தது. 1948-60 வருடங்களில் கட்சிக்குப் பல குறைபாடுகள் இருந்தன. அது பல தவறுகளை இழைத்திருக் கிறது. சரியானவை பலவற்றையும் அது செய் திருக்கிறது. இந்த குண தோஷங்களைப் புரிந்து கொண்டு ஒரு புதுப்பாதையில் அது பிரயாணம் செய்யத் தொடங்கியிருந்தது. 1948-50 வருடங் களில் இந்திய மக்களின் உடனடித் தேவை களுக்குப் பரிகாரம் காண்பதற்கான நடவடிக் கைகளில் ஈடுபடவும், மக்களுடன் ஒன்றிணைந்து நிற்கவும் கட்சி தயங்கவில்லை. அதனால்தான், ஏராளமான தவறுகளைச் செய்தபோதிலும், எல்லாவிதமான அடக்குமுறைகளும் ஒன் றிணைந்து கட்சியின் மீது ஏவிவிடப்பட்ட போதி லும் அவை அனைத்தையும் சமாளித்துக் கொண்டு, கேரளம், ஆந்திரம், தமிழகம் முதலிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஏராளமான கம்யூனிஸ்டு தலைவர்களும் தோழர் களும் வெற்றிவாகை சூடினர். ஒரு புதிய பொறுப்பு கட்சி மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இதை எவ்வாறு செயலில் கொண்டுவருவது? இந்தப் பாதையில் முன் செல்வது பலனளிக்கக் கூடியதுதானா? இவ்வாறான விவாதங்கள் நாடு பூராவிலும் கட்சிக்குள் நடைபெற்று வந்தன. கடுமையான கருத்து வேற்றுமைகள் தலை தூக்கின. புதிய நிலைமைகளையும், சூழ்நிலைமை களையும் மதிப்பீடு செய்து தெளிவான பாதையை உருவாக்க வேண்டிய அவசிய மேற்பட்டது. அதையொட்டி, கட்சியின் மூன்றா வது காங்கிரஸ் மதுரையில் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக் கணக்கான தோழர்கள் அதில் பங்கு கொண்ட னர். உயிருள்ள விவாதங்கள் நடைபெற்றன. சில தெளிவான முடிவுகளுடன் கட்சிக் காங்கிரஸ் முற்றுப்பெற்றது. கொள்கைக் குழப்பத்தில் ஆழ்ந்து நின்ற தோழர்களை முன்னேறிச் சென்று செயலாற்ற அந்தக் காங்கிரஸ்தான் கொள்கைத் தெளிவைக் கொடுத்தது. இந்தியா முழுவது முள்ள இடதுசாரி சக்திகளை ஒன்று திரட்டவும், ஆளும் கட்சியான தேசியக் காங்கிரசிற்கெதிராக இடதுசாரி ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் இந்தக் காங்கிரஸ் முடிவெடுத்தது. ஒரு புதிய சிந்தனைப் போக்கு, செயல்முறை ஆகியவற்றின் வெற்றிகரமான துவக்கமாக விளங்கியது மதுரைக்காங்கிரÞ.

மதுரைக் காங்கிரÞ முடிந்து சில நாட்க ளுக்குள் திரு-கொச்சியில் ஓர் மந்திரி சபை நெருக்கடி வளர்ந்து வந்தது. தேசியக் காங்கிர சுக்குள் பிளவு தலைதூக்கிற்று. இதர கட்சிகளி லிருந்து எந்தவிதமான நிர்ப்பந்தமின்றியே அந்த மந்திரிசபை தகர்ந்து விட்டது. ஜனநாயகத்தின் பெருமையைப் பற்றித் தேவைப்படும் பொழுதும் அல்லாமலும் கூக்குரலிடும் காங்கிரசின் முத லமைச்சர் சாட்சாத் பனம்பள்ளி கோவிந்த மேனன் ராஜினாமா செய்த போதிலும், ‘ஜவர் ஜன்னிங்’ஸின் நூல்களை ஆதாரம் காட்டி ‘காவல் மந்திரி சபை’ (கேர்டேக்கர்)யாக ஆட்சி நடத்தினார். கம்யூனிÞடு, பிரஜா சோஷலிÞடு, புரட்சி சோஷலிÞடு ஆகிய எதிர்க்கட்சியின ருக்கு மந்திரி சபையை அமைக்க ஒரு சந்தர்ப்பத் தைக் கூடக் கொடுக்காமல் இந்நிலைமையை அவர்கள் கையாண்டனர். எப்படியும் ஆட்சியில் ஒட்டிக்கொண்டு, நடைபெறவிருக்கும் தேர்தலில் அரசாங்க இயந்திரத்தைப் பயன்படுத்தி, தாங்கள் வெற்றிபெற வேண்டுமென்ற நோக்கத்துடன் செய்த தந்திரம் இது. இந்த அப்பட்டமான, ஜ்னநாயகப் பண்புகளுக்கு விரோதமான நட வடிக்கையை மத்திய அரசாங்கம் கண்மூடி ஏற்றுக்கொண்டது. நாங்கள் இந்தப் பிரச் சினையைப் நாடாளுமன்றத்தில் எழுப்பிய பொழுது இது அந்த ராஜ்ஜியத்தின் உள்விவ காரமென்று சொல்லி மத்திய உள்துறை மந்திரி நழுவிக்கொண்டார். எனினும் அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பிரஜா சோஷலிÞடு, புரட்சி சோஷலிÞடு, கேரளா சோஷலிÞடு ஆகிய கட்சிகளுட;ன சில உடன்பாடுகளைச் செய்து கொண்டு கம்யூனிÞடு கட்சி போட்டியிட்டது. இடதுசாரி கட்சிகளின் இந்த ஒற்றுமையை மக்கள் வரவேற்றனர். ஆனால், கேரளாவிலுள்ள ஜனநாயகஇயக்கங்களின் துரதிஷ்டம் என்று சொல்லக்கூடிய முறையில் பிரஜா சோஷலிÞடு கட்சி என்றும்போல் துரோகத்தனமான ஒரு கொள்கையைக் கடைப்பிடித்தது. ஒன்றுபட்டு நின்று வெற்றிபெற்றால் ஒன்று சேர்ந்து ஆட் சியை நடத்துவோம் என்று தேர்தல் காலத்தில் வாக்குறுதி கூறிய பிரஜா சோஷலிÞடு கட்சி, காங்கிரசுடன் ஒன்று சேர்ந்து ஒரு மந்திரி சபையை அமைத்தது. ஆனால் இந்த ஒற்றுமை அதிக நாட்கள் நீடித்து நிற்கவில்லை. ஆதர வளித்துத் தாங்கி நிற்கும் ஒரு எதிர்க்கட்சியாகக் காங்கிரÞ செயலாற்றியது. பிரஜா சோஷலிÞடு மந்திரிசபை ஒரு நிலச்சீர்திருத்த மசோதாவைக் கொண்டு வரமுயன்றது. காங்கிரÞ கட்சி, வெட்கமின்றி, அது வரை ஆதரவளித்து வந்த மந்திரிசபையைக் கவிழ்த்து விட்டு “திருவாங்கூர் தமிழ் நாடு காங்கிரசு”டன் ஒன்றுபட்டு தனிக் காங்கிரÞ மந்திரிசபையை அமைத்துக்கொண் டது. பிரஜா சோஷலிÞடு மந்திரிசபையின் ஆட்சிக் காலத்தில் தான் புகழ் மிக்க Þடேட் டிரான்Þபோர்ட் தொழிலாளிகளின் போராட் டமும் தமிழ் மக்கள் குடியிருக்கும் பிரதேசங் களைத்  தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் மென்பதற்காக நடைபெற்றன. அவ்வாறு பிரஜா சோஷலிÞடு மந்திரிசபையை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திய பிறகு தான் காங்கிரÞ கட்சி அதை கீழே தள்ளி விட்டது.

மொழிவாரியாக மாகாணங்களையும் பிரிக்க வேண்டுமென்ற கிளர்ச்சி ஏற்கெனவே உருப் பெற்றிருந்தது. திரு. பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திர மாகாணம் தனியாக அமைக்க வேண்டு மென்பதற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். காங்கிரஸ் கட்சிக்காக வாழ்நாள் பூராவும் செயலாற்றிய அந்த வீர தேசபக்தனின் மரணத்தினால் மட்டும்தான் காங்கிரஸின் கண்களைத் திறக்க வைக்க முடிந்தது. ஆந்திரப் பிரதேசம் அமைக்கப்பட்டது. ஆனால் அத்துடன் விசாலாந்திரா, கேரளா முதலிய மொழிவாரி மாகாணப் பிரிவினை வேண்டுமென்ற கிளர்ச்சி இந்தியாவில் வளர்ந்து வலிமை பெற்றது. இந்தப் பிரச்சனை நன்கு கற்றுத்தெரிந்து அரசாங் கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு கமிஷனை அமைப்போம் என்று நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி அறிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்து பல்வேறு ஜனப் பகுதிகள் நடத்தும் கிளர்ச்சிகளிலும் போராட் டங்களிலும் பங்கெடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

புதிதாக அமைக்கப்பட்ட ஆந்திரப்பிரதேசத் தில் கால தாமதமின்றியே தேர்தல் நடத்தப்பட் டது. இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தனிமையாக நின்று போட்டிபோட்டது. திரு – கொச்சியில் கிடைத்த படிப்பினைகளின் கசப் பான அனுபவம்தான் பிரஜா சோஷலிஸ்டு கட்சியுடன் கூட்டுசேரக் கம்யூனிஸ்டு கட்சியைத் தடுத்தது என்று சொன்னால் அது சரியாகும். ஒவ்வொரு கட்சியும் வெற்றிபெற மிகப் பிடிவாத முடன் போராடிற்று. கம்யூனிஸ்டு கட்சி அனேக மாக எல்லா தொகுதிகளிலும் அதன் வேட்பாளர் களை நிறுத்தி போட்டியிட்டது. இந்தத் தேர்தலின்பொழுது நான் ஆந்திரப்பிரதேசம் முழுவதிலும் சுற்றுப்பிரயாணம் செய்து பொதுக் கூட்டங்களில்  சொற்பொழிவாற்றிவந்தேன். பத்தாயிரக்கணக்கில் விவசாயிகளும் வெகு ஜனங்களும் அந்தக் கூட்டங்களில் பங்கெடுத்து வந்தனர். ஆவேசத்தின் அலை மோதலை அங்கு எங்கும் பார்க்க முடியாதது. கட்சி பெருவாரி யான இடங்களில் வெற்றிபெறும் என்ற நம் பிக்கை மேலோங்கி வந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் சோர்வைத் தந்தன. கட்சிக்கு வாக்கு கள் அதிகரித்துவிட்டன. ஸ்தானங்கள் மிகக் குறைந்தன. கட்சிக்கு விவசாயிகளையும் சாதாரண பொதுமக்களையும் தேர்தல் போராட் டத்தில் அணிவகுக்கச் செய்ய முடிந்தபோதிலும், மத்தியதர வர்க்கப் பகுதி மக்களிடம் ஆழ்ந்து செல்ல முடியவில்லை. கொள்கைக் குழப்பத் தையும் தெளிவின்மையினையும் அவர்களிடம் புகுத்த ஆளும் கட்சிக்கு  முடிந்தது. நேருஜியை யும் இந்தியாவையும் பற்றிய “பிராவ்தா”வின் கட்டுரைகளைக் கூட ஆளும் கட்சி அச்சிட்டு துண்டுப் பிரசுரங்களாக விநியோகம் செய்தது. ஆளும் கட்சியின் பயமுறுத்தல்களையும் ஆசை வார்த்தைகளையும் கட்சியால் சமாளிக்க முடியவில்லை. தோல்விக்குப் பாதையை வகுத்த காரணங்களில் அத்துமீறிய ஆத்ம நம்பிக்கையும் ஒன்றாகும் என்று சொன்னால் அதில் தவறு இல்லை.

1955ல் (கேரளத்தில்) திரும்பவும் காங்கிரஸ் மந்திரி சபை கவிழ்ந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் ஒருவருக்கொருவர் காலை வாரிவிட்டதன் விளை வாகத்தான் அவ்வாறு நேர்ந்தது. கம்யூனிஸ்டு கட்சியும் இதர எதிர்க்கட்சிகளும் சேர்ந்து மந்திரிசபையை அமைக்க முன்வந்தன. பெருவாரி யான சட்டசபை உறுப்பினர்கள் கையொப்ப மிட்ட மகஜர் ஒன்றை தோழர் டி.வி. தாமஸ் ராசப்பிரமுகரிடம் ஒப்படைத்தார். ஆயினும் எதிர்க்கட்சித் தலைவர் தாமஸை மந்திரிசபையை அமைக்க ராஜப்பிரமுகர் அழைக்கவில்லை. இத்துடன் ஜனாதிபதியின் ஆட்சி அமலுக்கு வந்தது.

இந்த சந்தர்ப்பத்தில்தான் ஐக்கிய கேரளத்திற் கான கிளர்ச்சி வலுப்பெற்றது. முற்போக்கு சக்தி களின் கைகளில் கேரளாவின் ஆட்சிப் பொறுப்பு வந்துவிடும் என்ற கருத்து, பிற்போக்காளர் களைத் “தட்சிணப்பிரதேச” வாதத்திற்கு அழைத் துச் சென்றது. அதே கருத்து காங்கிரஸ் கட்சிக் குள் கணிசமான பகுதியினரைக் கூட இழுத்துச் சென்றது. கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை ஒன்றுசேர்த்து பெரியதோர் தென் மாநிலத்தை அமைக்க அவர்கள் பெரும் முயற்சி செய்தார்கள். ஆனால் இந்த தென்மாநிலவாதி கள் மக்கள் மகாப்பிரவாகத்தைக் கண்டு நடுங் கினர். அதனால்தான் இந்த மாநிலங்களின் ஆட்சியாளர்களால் ஒருமித்த கருத்துக்கு வர முடியவில்லை. குறிப்பாக திரு. காமராஜருக்கு இதைப்பற்றி பகிரங்கமாகத் தன் கருத்தை தெரி விக்க தைரியமேற்படவில்லை. இந்தத் தென் மாநிலவாதம் வெளிக் கிளம்பியதும் கேரளத்திற் குள்ளேயும் வெளியிலும் ஐக்கிய கேரளக் கிளர்ச்சி வலுப்பெற்றது. என்றும்போல் இதர மாநிலங்களிலுள்ள மலையாளிகள் இந்தக் கிளர்ச்சியில் சிறந்த பங்கை ஆற்றினர். இது மிகைப்படுத்திக் கூறுவது அல்ல. பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் ஐக்கிய கேரள மாநாடுகள் கூட நடைபெற்றன.  என் னைப் பொறுத்தவரையில் மற்ற மாநில மலை யாளிகளுடன் அதிகமான தொடர்பை ஏற் படுத்த முடிந்த ஒருவன்தான் காங்கிரஸ் காரன், சோஷலிஸ்டு, கம்யூனிஸ்டு ஆகிய எல்லா முறை களிலும் நான் அவர்களை அணுகியிருக்கிறேன். அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் கேரள மக்களின் இயக்கங்களுக்கு இதய பூர்வமாக நன்கொடை களை அவர்கள் அள்ளி அள்ளித் தந்திருக்கி றார்கள். பணமாகவும் பொருள்களாகவும் தந்திருக்கிறார்கள். இலங்கை, பம்பாய், கல்கத்தா, சென்னை, அகமதாபாத், பூனா ஆகிய இடங் களில் குடியிருக்கும் மலையாளிகள் அளித் துள்ள உதவிகள் கொஞ்ச நஞ்சமன்று. எனக்கு மட்டுமல்ல, எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் அவர்கள் உதவியிருக்கிறார்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று பாராமல் நாட்டின் பொது நலனை மனதிலிருத்திக்கொண்டு அவர்களுக் கெல்லாம் உதவிக்கரங்களை நீட்டியிருக்கி றார்கள், இந்த மலையாளித் தோழர்கள். ஒரு மலையாளி அவன் உலகின் எந்த மூலையி லிருந்தாலும் அங்குள்ள முற்போக்கு இயக்கத் துடன் இணைந்து விடுவான் என்பது என்னை என்றென்றும் பெருமிதமடையச் செய்திருக் கிறது. அவன் தனது தாயகத்தையும் பண்பினை யும் பற்றிப் பெருமையுடன் பேசுவான். முடிந்த அளவு எந்த உதவியையும் தன் நாட்டிற்காகச் செய்யச் சித்தமாயிருப்பான். அந்நிலைமை இன்ன மும் தொடர்ந்துகொண்டேயிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

மற்ற மாநில மலையாளிகளின் இந்த நாட்டுப் பற்றுதல் ஐக்கிய கேரளத்தை உருவாக்கும் பிரச் சனையில் மிகப்பெரியதோர் பங்கினை ஆற்றி யிருக்கிறது. கேரளத்திற்கு என்றென்றும் இவர் கள் உற்ற துணைவர்களாக இருப்பார்கள் என்று கணக்கிடுவதில் தவறு ஏற்படாது என்றே சொல்லலாம்.

மாகாணப் புனரமைப்புக் குழுவினர் கேரளத் தில் சுற்றுப்பிரயாணம் செய்தபொழுது மலை யாளக் கரையில் எங்கும் மாபெரும் ஆர்ப் பாட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடை பெற்றன. குழுவினர் பல்வேறு இடங்களைச் சந்தித்து புள்ளி விபரக் கணக்குகளை எடுத்தனர். மக்கள் பிரதிநிதிகளுடன் விவாதித்தனர். மக்களை நேரடியாக விசாரிக்கவும் செய்தனர். இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப் பாட்டங்கள் பிற்போக்கு சக்திகளுக்குக் கடி வாளமிட்டன.

நான் என்றும் மக்கள் ஊழியனே என்ற புத்தகத்திலிருந்து



2 responses to “ஏ.கே. கோபாலன் வாழ்க்கையில் காந்தியிசம்”

  1. Ramanan Ramaiyer Avatar
    Ramanan Ramaiyer

    தலைப்புக்கும் கட்டுரைக்கும் தொடர்பே இல்லையே?

    Like

    1. சிந்தன் ரா Avatar
      சிந்தன் ரா

      சற்று விரிவாக குறிப்பிடுங்கள்.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: