பிரிட்டிஷாரால் இந்தியா மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடுமைஎன்பது இதுவரை இந்தியா சந்தித்த துன்ப துயரங் களையெல்லாம் விட அடிப்படையில் வேறுபட்டதும் மிகக் கூடுதல் கடுமையானதும் ஆகும்.. இந்திய சமூகத்தின் முழு கட்டமைப்பையும் இங்கிலாந்து தகர்த்துவிட்டது. கட்டமைப்பின் மறு உருவாக்கத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பழைய உலகம் அழிக்கப்பட்டு எந்த ஒரு புதிய உலகமும்கிடைக்க வில்லை என்ற நிலை இந்திய மக்களுக்கு பெரும் சோகமாய் அமைந் துள்ளது. பிரிட்டனால் ஆளப்படும் இந்தியா தனது பெரும் பழமை வாய்ந்த பாரம்பரியத்திலிருந்தும் தனது முழு வரலாற்றிலிருந்தும் துண்டிக்கப்பட்டு நிற்கிறது. (இந்தியாவில்பிரிட்டிஷ் ஆட்சி பற்றி மாமேதை கார்ல் மார்க்ஸ்)
1853ம்ஆண்டு நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன் என்ற அமெரிக்க பத்திரிகையின் ஜூன் 25ஆம் தேதி இதழில் எழுதிய
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி என்ற கட்டுரையிலிருந்து.
ஆங்கிலேய மில் முதலாளிகள் பருத்தியையும் உற்பத்திக்குத் தேவையானஇதர மூலப்பொருட்களையும் மலிவாக எடுத்து செல்லுவது என்ற ஒரே நோக்கத்திற்காகவே அங்கு இரயில் பாதைகளை அமைக்க உள்ளனர் என்பதை நான் அறிவேன். ஆனால், நிலக்கரியும் இரும்புத்தாதுவும்உள்ள ஒரு நாட்டில் போக்குவரத்துக்கான இயந்திரங்களைப் புகுத்திவிட்டால் அவற்றை வடிவமைக்கும்திறனை அந்நாடு பெறாமல் தடுக்க முடி யாது. இத்தகைய விரிந்து பரந்த நாட்டிலே இரயில் போக்கு வரத்தைபராமரித்திட அதற்கு உடனடித் தேவையான தொழில் சார் செயல்முறைகளை அறிமுகம் செய்யாமல் முடியாது. காலப் போக்கில், இரயில் துறையுடன் தொடர்பில்லாத தொழில் துறைகளிலும் இவ்வியந்திரங்கள்பயன்படுவதை தவிர்க்க முடி யாது. ஆகவே இந்தியாவில் இரயில்வே தொழில் நவீன தொழில் வளர்ச்சிக்குமுன்னோடியாக அமையும். இந்தியாவின் வளர்ச் சிக்கும் ஆற்றலுக்கும் தீர்மானகரமான தடையாகஉள்ள சாதி அமைப்பிற்கு அடித்தளமாக உள்ள பிறப்புசார் உழைப்பு பிரி வினையை இரயில்வேயின்தொடர்ச்சியாக உருவாகும் நவீன தொழில்வளர்ச்சி (காலப்போக்கில்) கரைத்து விடும்.
(ஆனால்)
பிரிட்டனில் ஆளும் வர்க்கங்கள் தொழிலாளி வர்க்கத்தால் தூக்கிஎறியப்பட்டோ அல்லது இந்திய மக்கள் வலுப்பெற்று ஆங்கிலேயச்சங்கிலிகளை தகர்த்து தூக்கிஎறிந்தாலோ அன்றி பிரிட்டிஷ் முதலாளி வர்க்கம் இந்திய மக்கள் மத்தியில் தூவி விட்டுள்ள நவீன அம்சங்களின் பலன்களை இந்திய மக்கள் அனுபவிக்க முடியாது.
நியூயார்க் டெய்லி டிரிப்யூன் என்ற ஆங்கில ஏட்டின்
ஆகஸ்ட் 9, 1853 தின இதழில்
மாமேதை கார்ல் மார்க்ஸ் எழுதிய
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள் என்ற கட்டுரையிலிருந்து
மார்க்சிய பதாகையை உயர்த்திப்பிடிப்போம்!
Leave a Reply