மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நினைவில் வாழும் தோழர் ஸ்டாலின்


 

ஸ்டாலினிசம் என்ற வார்த்தை  நீண்டகால மாக கம்யூனிச எதிர்ப்பாளர்களால் தங்கள் வெறுப்பினை அள்ளிக்கொட்டப்பயன்படுத்திய வார்த்தை. சோவியத்  கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசில் குருஷ்சேவ் தலைமயில் துவக் கப்பட்ட அவதூறு நாடகம் உலக வரலாற்றில் ஸ்டாலினின் பங்கை மறைத்தது மட்டுமல்லாமல், சோவியத் யூனியனின் சாதனைகளை வரலாற்று ஏடுகளிலிருந்து நீக்கிவிடும் முயற்சியாகவும் இருந்தது. ஹிட்லரோடு இணைத்து பேசப்பட்டு சர்வாதிகாரிகளின் பட்டியலில் ஸ்டாலினை வைப்பதை ஏகாதிபத்தியம அதன் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தின் பகுதியாக மாற்றி யிருந்தது. இன்றும் அது தொடர்ந்தாலும், வரலாற்று ஆய்வாளர்கள் ஸ்டாலின் காலத்து நிகழ்வுகளையும் ஸ்டாலினையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பதாக பல்வேறு ஊடகச் செய்தி கள் தெரிவிக்கின்றன. ஒருமுனையிலிருந்து மறு முனைக்குத் தாவிச் சென்று `எல்லாம் நன்றாகவே நடந்தது’ என்று பதிவு செய்வது இக்கட்டுரை யின் நோக்கமல்ல. 1956ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டதை நினைவில் கொள்வது சரியாக இருக்கும்.  “இந்தப் பிரச்சனையின் முழுமையான தன்மையினை பரிசீலித்தால், `ஸ்டாலினிசம்’ என்று சிலர் குறிப்பிடுவதுகூட, முதலில் அது கம்யூனிசம் மற்றும் மார்க்சிசம்-லெனினிசம் என்று குறிப்பிடுவதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும், அதுதான் பிரதானமான அம்சம். இரண்டாவதாகத்தான் அந்த வார்த்தை மார்க் சிய-லெனினிய கோட்பாடுகளை மீறி செய்யப் பட்ட தவறுகளைக் கண்டு சரி செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடுவதாக பொருள்கொள்ள வேண்டும். சரி செய்வதற்காக அந்த தவறுகளை வலியுறுத்திச் சொன்னாலும், அவைகளை சரி யாகவும் மக்களை திசை திருப்புவதை தவிர்க்கும் முறையிலும் ஆய்வு செய்வதற்கு அதற்குரிய சூழலில் பொருத்திப்பார்ப்பது அவசியம் ஆகும். எங்களுடைய கருத்தின்படி, ஸ்டாலினின் தவறு களை அவரின் சாதனைகளுக்குக் கீழேதான் வைக்க வேண்டும்…. இது கம்யூனிச அணிக்குள் எது சரி எது தவறு என்று முடிவு செய்ய வேண் டிய விஷயமே தவிர, வர்க்கப் போராட்டத்தில் நமக்கும் நமது எதிரிக்குமிடையே உள்ள பிரச் சனை அல்ல..”. தவறை சரி செய்துகொண்டு வர்க்கப் போரை தொய்வின்றி நடத்த வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

“சாகுந்தறுவாயிலுள்ள பூர்ஷ்வா மற்றும் அதன் பின் ஓடிக்கொண்டிருக்கும் குட்டி பூர்ஷ்வா நாய்களும் பன்றிகளும் சோவியத் அமைப்பு உருவாக்கத்தில் ஏற்படும் நமது பின்னடைவுகள், தவறுகள் மீது தங்களின் சாபத்தையும், பழித்தலையும், இகழ்ச்சியினையும் நம் தலைமீது குவிக்கட்டும். ஒரு வினாடி கூட நாம் தவறு செய்திருக்கிறோம் என்பதையோ பல தவறுகளை செய்துகொண்டிருக்கிறோம் என்ப தையோ, பல பின்னடைவுகளால் இடர்படு கிறோம் என்பதையோ நாம் மறக்கவில்லை. உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அரசு வடிவத்தை உருவாக்குவதில் எப்படி தவறுகள் விழைவதையும் பின்னடைவுகளையும் தவிர்க்க முடியும்? பின்னடைவுகளை தடுத்து நிறுத்தவும் தவறுகளை சரி செய்யவும் சோவியத் கோட் பாடுகளை  செயல்படுத்தும் முறையில் முன் னேற்றம் காணவும் நாம் இடைவிடாமல் போராட்டங்களை நடத்துவோம். அந்த முன் னேற்றம் முழுமை அடைய வெகுதூரம் செல்ல வேண்டும்” என்று லெனின் 1921ல் எழுதியதை நினைவில் கொள்வோம்.

புரட்சிக்குப் பிறகு

‘அமைதி, நிலம், சோவியத்துகளுக்கு அதி காரம்’ என்ற கட்டளைகளோடு புரட்சி அரசு லெனின் தலைமையில் செயல்படத்துவங்கியது. அரசு அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. நிலங்களை இழந்த நிலப்பிரபுக்கள், ஜார் ஆட்சி கால பதவி சுகங்களை இழந்த அதிகாரிகள், தளர்நடை போடத் துவங்கிய சோவியத் அரசை முடமாக்க ஏகாதிபத்தியம் எடுத்த முயற்சிகள்,  சுற்றி வளைத்து அனைவரும் சேர்ந்து நடத்திய தாக்கு தல்கள், உள்நாட்டு போர்கள் – இதையெல்லாம் தாண்டி வர வேண்டிய நிலை இருந்தது. அன் றைய ரஷ்யாவின் பொருளாதாரம் மிகவும் சிதைந்து போயிருந்தது. 1920, 1921ம் ஆண்டுகள் பஞ்சம் நிலவிய காலம், பல்லாயிரக்கணக்கில் மனிதர்கள் மாண்டுபோனார்கள். பள்ளிகள் இருந்தாலும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை, குளிர்தாங்காமல் அடுப்பு வெப் பத்தில் மக்கள் முடங்கிக் கிடந்தார்கள். கிராமப் புறம், நகர்ப்புறம் என்று எந்த வேறுபாடுமின்றி பொருளாதார வளர்ச்சி மிகவும் குன்றியிருந்தது. ஆகவே பொருளாதார மீட்சியினைக் கொண்டு வர “புதிய பொருளாதார கொள்கை” (சூநற நுஉடிnடிஅiஉ ஞடிடiஉல – சூநுஞ) நடைமுறைப்படுத்தப்பட்டது. சோஷலிச, கூட்டுறவு மற்றும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அம்சங்களைக் கொண்டதாக அது இருந்தது. ஆனால் மக்களுக்கு ஒரு புதிய சமூகம் படைப்பது குறித்த நம்பிக்கை இருந்தது. ரஷ்யா, சோஷலிச வழிமுறையில் ஒரு முற் போக்கான வளம் நிறைந்த நாடாக மலரும் என்று லெனின் பார்வையினை மக்கள் முழுமையாக கிரகித்துக்கொண்டார்கள் என்று “அன்னா லூயிஸ்டிராங்” தன்னுடைய “ஸ்டாலின் சகாப்தம்” (கூhந ளுவயடin நுசய) என்ற நூலில் எழுது கிறார். அப்போதுதான், 1924ல் (லெனின் மறைவுக்குப் பிறகு) ரஷ்யா தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும், சோஷலிசத்தை கட்ட வேண்டும் என்ற கோட்பாட்டினை ஸ்டாலின் முன்வைக்கி றார். `தேசிய கம்யூனிசம்’ பேசுகிறார் ஸ்டாலின் என தத்துவார்த்த அடிப்படையில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதற்கு 1925ல் சோவியத் கட்சி யின் பதினான்காவது காங்கிரசின் ஒப்புதலை கோரியபோது, எவ்வித தடையுமின்றி அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மக்களின் விருப்பம், சிந்தனையோட்டம் ஆகியவைகளை மிகவும் துல்லியமாக மதிப்பீடு செய்யும் திறம் கொண்ட தலைவராக ஸ்டாலின் இருந்தார். “அன்னா” எழுதுகிறபோது அந்த மக்கள் விருப்பத்தை செயலாக்கும் திறனையும், அந்த செயல் மனிதகுல மேன்மைக்கு இட்டுச்செல்லும் என்ற தன்னுடைய நம்பிக்கையினை மக்களுடையதாக மாற்றும் திறனையும் அவர் கொண்டிருந்தார் என குறிப்பிடுகிறார். பின்பு சோவியத்தின் சாதனைகளை குறிப்பிட்டு ஒரு அமெரிக்க நிருபர் ஸ்டாலினிடம் “எப்படி நீங்கள் இந்த முடிவுகளை எடுத்தீர்கள்?” என்று கேட்டதற்கு ஸ்டாலி னுடைய பதில் இதுதான். “எங்களிடம் தனி மனிதர்களின் முடிவு என்று எதுவுமில்லை… மற்றவர்களால் சரி செய்யப்படாத தனி மனித முடிவுகளில் தவறுகளின் சதம் அதிக அளவு இருக்கும் என்பதை அனுபவத்தில் நாங்கள் உணர்ந்திருக்கிறோம்”. அதோடு அவர், கட்சியின் மத்திய மிட்டியில் அறிவியல், தொழில்துறை, விவசாயம் மற்றும் உலக நிகழ்வுகள் ஆகியவற்றை சிறப்பாக கற்றறிந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களைக் கொண்டுதான் முடிவு எடுத்து சோவியத் வெற்றியினை உறுதி செய் திருக்கிறோம் என்று கூறுகிறார்.

திட்டமிட்ட வளர்ச்சி

இந்த அடிப்படையில் உருவானதுதான் சோவியத் யூனியனின் ஐந்தாண்டு திட்டங்கள். “திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி” என்ற கோட்பாடு முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருந்துவதில்லை. மக்களின் தேவைகளை புறக்கணித்து லாபத்தை குறிவைத்து செயல்படுவ தால் கட்டுப்பாடில்லாத சுதந்திர சந்தை அதற்கு தேவைப்படும். சோவியத் திட்டம் எதைக் கொண்டுவந்தது? 1933ம் ஆண்டு ஜனவரியில், கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஸ்டாலின் கொடுத்த அறிக்கையில் முந்தைய பின்தங்கிய விவசாய நாடான ரஷ்யா தொழில்துறை வளர்ச்சியில் உலகின் இரண்டாவது இடத்திற்கு வந்திருப்பதை குறிப்பிடுகிறார். 5 ஆண்டு திட் டத்தின் இலக்குகள் நான்கேகால் ஆண்டுகளில் – அக்டோபர் 1928லிருந்து டிசம்பர் 1932 வரை  முடிக்கப்பட்டுவிட்டன, தொழிலாளர் எண் ணிக்கை 11 மில்லியனிலிருந்து 22 மில்லியனாக உயர்ந்தது, உற்பத்தி இரு மடங்கானது, “முன்பு இரும்பு எஃகு ஆலைத் தொழில் நம்மிடையே இல்லை இப்பொழுது நம்மிடையே இருக்கிறது. டிராக்டர் தயாரிக்கும் நிறுவனம் முன்பு இல்லை, இப்போது இருக்கிறது. கார் தயாரிக்கும் தொழிற் சாலை முன்பு இல்லை,  இப்போது இருக் கிறது”என்று வேறு பல துறைகளிலும் ஏற்பட்ட முன்னேற்றத்தை குறிப்பிட்ட ஸ்டாலின். “நம் முடைய இந்த சாதனங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளின் சாதனைகளை ஒளிமங்கச் செய்திருக் கின்றன” என்று கூறினார். துன்ப துயரங்கள் பலவற்றை தாண்டித்தான் இந்த முன்னேற்றத்தை சோவியத் யூனியன் கண்டது. உலக வரலாற்றில் இவ்வளவு வேகமான வளர்ச்சியினை எந்த நாடும் பதிவு செய்தது கிடையாது. இந்த வளர்ச்சியின் வேகம் குறைக்கப்பட்டோ அல்லது தடைப் பட்டிருக்குமேயானால், சோஷலிச சமூக அமைப்பு ஏற்படுவது தள்ளிப்போகும், இல்லை யென்றால் நாடே பெரும் ஆபத்துக்குள்ளாகும் என்று சோவியத் மக்கள் கருதினார்கள். அந்த பொருளாதார மீட்சியின் விளைவு? ஐரோப் பாவின் முக்கிய பகுதியில் சோவியத் யூனியன் வலுவான சக்தியாக எழுந்தது. அது முத லாளித்துவ – ஏகாதிபத்திய சக்திகளைக் காட்டி லும் உள்ளார்ந்த  குணாம்சத்தில் வேறுபட்ட தாக இருந்தது என்பது வரலாற்று உண்மை. அது ஒன்று திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கத்தின் சக்தி என்பதும், எதையும் சந்திக்கும்  உறுதி படைத்தது என்பதும்தான் அடிப்படையான வேறுபாடு. ஆகவே இந்த அமைப்பை அழித்து விடும் நோக்கத்தோடு ஏகாதிபத்தியம் செயல் படத் துவங்கியது ஜப்பான். மஞ்சூரியா பகுதியி லிருந்து சோவியத் எல்லையினை தொட்டுப் பார்க்க துவங்கியது, நாஜி ஜெர்மனி உக்ரைன் பகுதி  ஜெர்மனியைச் சேர்ந்தது என்ற செய்தி யினை வெளியிட்டது. தங்களின் பொருளாதாரம் வலிமை பெறாதிருந்தால் கிழக்கு மேற்கு எல் லைகளில் படையெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கும் என்று மக்கள் உணர்ந் தார்கள். தன்னுடைய ஜனவரி அறிக்கையில் ஸ்டாலின் “100 ஆண்டுகளாக பின்தங்கிய நாட்டை முடுக்கிவிடுவதிலிருந்து நாங்கள் ஒதுங்க முடியாது, ஏனெனில் நாடு பேரழிவை சந்தித் துக்கொண்டிருந்தது. அப்படி இருந்திருந்தால் மிகவும் நவீனரக ஆயுதங்களோடு உள்ள முத லாளித்துவ சூழலில் நிராயுதபாணியாக நாங்கள் நின்றிருப்போம்” என்று குறிப்பிட்டார்.

விவசாயம் – புதிய மனிதர்கள்

30-களில் சோவியத் யூனியன் தன்புரட்சிகர செயல்பாட்டினை விவசாய அரங்கினில் மேற் கொண்டது, கூட்டுப்பண்ணை முறை அறிமுகப் படுத்தப்பட்டது. ஐந்தாண்டு திட்டத்தின் விளை வாக டிராக்டர் உற்பத்தி பெருகியது. அதை முழுமையாக பயன்படுத்தி உற்பத்தியினைப் பெருக்க துண்டு துண்டாக உள்ள நிலங்களை கூட்டுப் பண்ணையாக மாற்ற வேண்டிய தேவை எழுந்தது.  சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி அதற் கான அறைகூவல் விடுத்தது. உற்சாகமாக விவ சாயிகள் பங்கேற்றனர். ஆனாலும் விவசாயிகள் மீது சில இடங்களில் கட்சி தலைமை நிர்பந்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது. மிகவும் ஆர்வத்துடன் விவசாயிகள் கூட்டுப்பண்ணை யில் சேர்வது எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக வேகத்துடன் நிகழ்ந்தது. அந்த உற்சாகத் தில் சில தவறுகள் நடந்தன. ஸ்டாலின் “வெற்றியி லிருந்து எழுந்த மயக்கம் (னுணைணiநேளள கசடிஅ ஏiஉவடிசல) என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அது நிலைமையினை சரி செய்ததுடன் ஸ்டாலினை விவசாயிகளின் உன்னதத் தலைவன் என்ற நிலைக்கு உயர்த்தியது. அவர் அந்த புகழுரை களை ஏற்றுக்கொள்ளவில்லை. அது மத்திய கமிட்டியின் அறிக்கை என்று விளக்கினார்.  ஆனாலும் சுயவிமர்சனாக சோவியக் கட்சி கூட்டுப்பண்ணை நடவடிக்கையினை பரிசீலனை செய்தது. கூட்டுப் பண்ணையினை நிர்வகிக்கும் திறன் படைத்த மேலாளர்கள் இல்லை, அதன் கணக்குகளை சரியாகவைத்துக்கொள்ளும் பயிற்சி பெற்றவர்கள் இல்லை, இயந்திரங்களை கையாள பயிற்சி பெற்றவர்கள் இல்லை. விவ சாயிகளின் பின் தங்கிய நிலை, நிலப்பிரபுக்களின் (குலாக்) வன்முறை, அதிகாரிகளின் முட்டாள் தனம் – இவையாவும் உற்பத்தியில் சிக்கலை உருவாக்கின. இதையெல்லாம் சரியாக கணிக்க வில்லை என மத்திய கமிட்டி கூட்டத்தில் ஸ்டாலின் ஒப்புக் கொண்டார். மாற்றம் காண துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்றே ஆண்டுகளில் விவசாய உற்பத்தி அதிக மானது. `பஞ்சம், வறட்சி’ போன்ற வார்த்தை களுக்கு இடமில்லாமல் போனது.

ஐரோப்பா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் மாட்டிக்கொண்டிருந்த வேளை யில், குறிப்பாக அதன் தென்பகுதி கடுமையான வறட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த சூழலில், இந்த மாற்றம் நிகழ்ந்தது. பொருளாதார பலன்களைக் காட்டிலும் விவசாயிகளின் கல்வி மற்றும் பண்பாட்டு ரீதியான வளர்ச்சி போற்றத் தக்கதாக இருந்தது.  விஞ்ஞானிகள், கலை இலக் கியங்களில் பயிற்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள் என புதிய சமூகத்தின் பிரதிநிதிகள் தோன்றினார்கள் என `அன்னா’ குறிப்பிடுகிறார்.

புரட்சிக்குப் பிறகு பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த புதிய சமூகத்தில் பிரதிபலித்தது. புரட்சி அவர்களுக்கு அரசியல் மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை வழங்கியது. தொழில் வளர்ச்சி அவர்களுக்கு சமமான பொரு ளாதார அடித்தளத்தை கொடுத்தது. பாரம் பரியம் என்ற பெயரில் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உட்பட்ட பெண்களை அதிலிருந்து விடுவிப்பது அவ்வளவு எளிதான செயலல்ல. கல்வி, பிரச் சாரம், சட்டம், வேலை வாய்ப்பு என அனைத்து அம்சங்களிலும் அவர்கள் நிலை உறுதிப்பட்டது  அந்த ஸ்டாலின் சகாப்தத்தில்தான். துவக்கத்தி லிருந்தே ஏழு ஆண்டுகள் யுத்தங்களை சந்தித்த நாடு, மிகப்பெரும் இளைஞர் பட்டாளத்தை, வாழும் பூமியை அனைத்து அம்சங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஆர்வம் கொண்ட பட்டாளத்தை உருவாக்கியது. அறிவியல், கலை, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சோவியத் யூனியன் பிற்காலத்தில் உயர்ந்து நின்றதற்கான சமூக, பொருளாதார அடிப்படையினையும் பண்பாட்டு தளத் தினையும் அந்த இளைஞர்கள் பெற்றதும் கறுப்பு வண்ணம் பூசப்படுகிற அந்த ஸ்டாலின் சகாப் தத்தில்தான். ஆனால் அது தனிமனித மேன்மை யினால் அல்ல, மார்க்சிய-லெனினிய அடிப்படை யில் உருவான கூட்டு சக்தியின் விளைவு. பாராசூட் பயிற்சி பெற்று தரையில் வந்து இறங்கிய நினா காமெனோவா என்ற இளம் பெண் சொன்னது, “என்னுடைய நாட்டின் வானம்தான் உல கிலேயே உயர்ந்த வானம்” – இதுவே சோவியத் இளைஞர்களின் புரட்சி கோஷமாக மாறியது.

ஏகாதிபத்திய சதி வலைகள்

இந்த வளர்ச்சியினை ஏகாதிபத்தியம் விரும்புமா? எதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை ஸ்டாலின் சுட்டிக் காட்டியதை, முன்பே குறிப்பிட்டதைப்போல், சோவியத் மக்கள் நிராயுதபாணியாக இருப்பதற்கு தயாரில்லை என்பதை நினைவில் கொள்வது சரியாக இருக்கும். பிரிட்டன், பிரான்ஸ் ஏகாதி பத்திய சக்திகள் வளர்ந்து வரும் சோவியத் யூனி யனை ஒழித்துவிட வேண்டுமென்று விரும்பினர். ஹிட்லரும் `கிழக்கில் வாழும் இடம்’ வேண்டு மென்று சோவியத்தை விழுங்க வேண்டும் என்று முடிவு செய்தான். ஹிட்லரின் ஆசையினை பயன்படுத்திக்கொண்டு சோவியத் யூனியனை முடித்துவிடலாம் என்று ஏகாதிபத்திய சக்திகள் நினைத்தன. 1936ல் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட  ஸ்பெயின் நாட்டின் மக்கள் முன் னணிக்கு எதிராக ஜெனரல் “பிராங்கோ”வின் ராணுவப் பிரிவு கலகத்தை துவக்கியது. முறை யாக பயிற்சிபெற்ற ராணுவம் இல்லாத காரணத் தால் மக்ள் முன்னணியின் குடியரசு அரசாங்கம் அதற்கென ராணுவம் ஒன்றினை தயார் செய்ய முயற்சித்தது, அதற்கு வெளிநாட்டு உதவி தேவைப்பட்டது. இதற்கிடையில் நாஜிச ஹிட்லரும்  பாசிச முஸோலினியும் பிராங்கோ வுக்கு அனைத்து வகை உதவிகளையும் கொடுத் தனர். 1937 மார்ச் மாத முடிவில் சுமார் 1 லட்சம் துருப்புகளை முஸோலினி பிராங்கோவுக்கு கொடுத்தான். ஸ்பெயினின் குடியரசு ஆட்சி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடு களிடம் உதவி கேட்டது. ஸ்பெயினின் உள்நாட்டு போரில் நாங்கள் தலையிடமாட்டோம் என்று சொல்லி அந்த நாடுகள் உதவி செய்ய மறுத்தன. இந்த ஏகாதிபத்திய நாடுகளும் பாசிஸ்ட் பிராங்கோ வெற்றிபெறுவதையே விரும்பி னார்கள் என்பது தெளிவானது. ஆனால் சோவியத்  யூனியன் ஸ்பெயின் குடியரசுக்கு உதவி செய்ய முடிவெடுத்தது. 1936லிருந்து 1939 வரை உள்ள கால இடைவெளியில் 648 விமானங்கள், 347 டாங்கிகள், 60 ஆயுதந்தாங்கிய மோட்டார் வண்டிகள், 1186 கனரக துப்பாகிகள், 20648 இயந்திர துப்பாக்கிகள், 4,97,813 கைதுப்பாக்கிகள் பெருமளவில் துப்பாக்கி ரவைகள், வெடிகுண்டு கள் ஆகியவற்றை சோவியத் யூனியன் கொடுத்தது. 1938ல் 85 மில்லியன் டாலர்  நிதி உதவியினையும் கொடுத்தது. ஸ்பெயின் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் “ஸ்பெயின் புரட்சிகர மக்க ளுக்கு உதவி செய்வது சோவியத் யூனியனின் உழைக்கும் மக்களின் கடமை. பாசிஸ்ட் ஒடுக்கு முறையிலிருந்து ஸ்பெயினை விடுவிப்பது ஸ்பெயினின் தனிப்பட்ட போராட்டமல்ல, முற்போக்கான மனிதகுலத்தின் நோக்கம் அது தான்” என்று எழுதினார். மார்க்சிசம் கம்யூனிசம் என்ற உன்னத லட்சியங்களால் உத்வேகம் பெற்று பல நாடுகளிலுமுள்ள கம்யூனிஸ்டுகள் அந்தப் போரில் பங்கேற்றனர். 10 லட்சத்திற்கும் மேற் பட்டோர் உயிரிழந்தனர். ஏகாதிபத்தியத்தின் விருப்பத்திற்கேற்ப அங்கே பாசிசம் வெற்றி பெற்றது. ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியன் ஆற்றிய அந்த சர்வதேச வரலாற்றுக் கடமை யினை நாம் மறக்கமுடியுமா?

இதற்கு முன்பு முதல் உலகப் போருக்குப்பின் ஜெர்மனியை கட்டுப்படுத்தும் வார்செல்ஸ் ஒப்பந்தத்தை ஜெர்மனி மீறுவதை பிரிட்டனும், பிரான்சும் கண்டும் காணாதது போல் இருந்தன. ஜெர்மனி மீண்டும் ராணுவ மயமாவதை தடுக்கும் நோக்கம் கொண்டது. அந்த ஒப்பந்தம். ஆனால் பிரிட்டனோ 1935ல் ஜெர்மனி அதன் கப்பல்படை கட்டுவதை (பிரிட்டனின் படை அளவில் 35 சதத்திற்கு மிகாமல்) அனுமதித்தது, பிரான்சை ஒட்டி இருந்த ராணுவ நடவடிக்கை விலக்கப் பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட ரைன் லாண்ட் பகுதியினை 1936 மார்ச் மாதத்தில் ஹிட்லர் கைப்பற்றினார். பெரும்படையினை வைத்திருந்த பிரான்சு எந்த எதிர்ப்புக்குரலையும் எழுப்ப வில்லை, `எதிர்ப்பினை காட்டாதே’ என பிரிட் டனும் ஆலோசனை வழங்கியது.

தாங்கள் விரும்புகிறபடி சோவியத் யூனியனை அழிக்கும் பணியினை ஹிட்லர் செய்து முடிப் பான் என்ற நம்பிக்கையில் “இந்த தலையீடாக் கொள்கையினையும், பகை தவிர்க்கும் கொள்கை யினையும்  பிரிட்டனும், பிரான்சும் கடைப் பிடித்தன.

இரண்டாம் உலகப்போர்

சோவியத் நிலை

சோவியத் கட்சியின் 18வது காங்கிரஸில் ஸ்டாலின் பேசும்போது, அவர்களின் நோக்கங் களை துல்லியமாக எடுத்துரைத்தார்.  இந்த தலையிடாக் கொள்கை என்பது தாக்குதல் நடத்துபவர்களின் மோசமான நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கம் கொண்டதல்ல, சீனாவுடன் அதற்கும் மேலாக சோவியத் யூனியனுடன் போரிடத் துடிக்கும் ஜப்பானை தடுத்து நிறுத்து வதற்கு அல்ல, ஜெர்மனி ஐரோப்பிய விஷயங் களில் நுழைவதையோ சோவியத் யூனியனோடு போரில் சிக்குவதையோ தடுக்கும் நோக்கம் கொண்டதல்ல, அனைத்து போர் வெறியர் களையும் போரில் ஆழமாக ஈடுபட அனு மதிக்கும் நோக்கம் கொண்டது. ரகசியமாக அதற்கு உதவும் நோக்கம் கொண்டது. ஒருவருக் கொருவர் போரிட்டு பலமிழந்து அவர்களை சோர்வுறச் செய்யும் நோக்கம் கொண்டது, பிறகு அவர்கள் போதுமான அளவு பலமிழந்த நிலையில் முழு பலத்துடன் உள்ளே நுழைந்து அமைதிக்கான முயற்சி என அறிவித்து பல மிழந்தவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் நோக்கம் கொண்டது. எளிமையான முயற்சி ஆனால் மலிவான முயற்சி. “மேலை நாடுகளின போர் தந்திரத்தை இதைக்காட்டிலும் தெளிவாக யாரும் சொல்ல முடியாது. ஹிட்லரின் நோக்கம் வேறுமாதிரியிருந்தது சோவியத் யூனியனோடு மோதுவதற்கு முன் ஜெர்மனியை அனைத்து வகையிலும் வலிமைப்படுத்திக்கொள்ள வேண் டும் என்று முடிவெடுத்தான். 1938ல் ஆஸ்திரியா வீழ்ந்தது. அதே ஆண்டின் இறுதியில் செக்கோஸ்லோவேகியாவின் சுடேடான் பகுதியை மேலை நாடுகளின் ஒப்புதலோடு கைப் பற்றினான். 1940ல் டென்மார்க், நார்வே, ஹாலந்து, பெல்ஜியம், பிரான்சு (11 நாட்களில் விழுந்தது) என வசப்படுத்திக்கொண்டு ஹிட்லர் பிரிட்டனின் கதவை தட்டிக்கொண்டிருந்தான். ஆனால் கிழக்கே சோவியத் யூனியன் நிமிர்ந்து நிற்பதை அவனால் பொறுத்துக்கொள்ள இயல வில்லை. உடனே படையெடுக்க இயலாதபடி 1939ல் கையெழுத்திடப்பட்ட சோவியத் – ஜெர்மனி அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் தடுத்தது. ஏகாதிபத்திய நாடுகளிடையே (ஜெர்மன் உட்பட) உள்ள முரண்பாட்டை கூர்மையாக கவனித்து அதை சோவியத் யூனியன் பயன்படுத்திக் கொண்டது. ஜெர்மனியை போரில் சந்திக்க தன்னை தயாரித்துக்கொள்ள 22 மாத கால அவகாசம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் சோவியத் துக்குக் கிடைத்தது. ஸ்டாலினுடைய நுட்பமான ஆய்வுத்திறன் இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெளிப்பட்டது. ஜெர்மனி எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என்பதை அவர் அறிந்திருந்தார். அதைத் தள்ளிப்போடும் உத்தியினை இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொண்டது கடைசி யில் சோவியத் யூனியனை பாதுகாத்தது. 1941 ஜூலை 3, ஹிட்லர் சோவியத் யூனியனை தாக்கி னான். அப்போதுதான் துவங்கியது சோவியத் மக்கள் குறிப்பிட்ட “மிகப்பெரிய தேசபக்த யுத்தம்”. லெனின்கிராட், ஸ்டாலின்கிராட் என பல போர்முனைகளை சோவியத் மக்கள் தீரமுடன் சந்தித்தனர். மாஸ்கோ தாக்கப்படும் என ஜெர்மனி படைத் தலைமை அறிவித்தபோது ஸ்டாலின் மாஸ்கோ வீதிகளில் இறங்கி செஞ் சதுக்கத்தில் வீரர்களை பார்வையிட்டபோது மக்கள் உறுதியோடு போராடும் உணர்வினை வெளிப்படுத்தினார்கள். மாஸ்கோவிலிருந்து 60 மைல் தூரத்திற்கு ஜெர்மன் படைகள் துரத்தி யடிக்கப்பட்டன. ஸ்டாலின்கிராட் போர் ஒரு திருப்புமுனையாக இருந்தது என வரலாற்றாசிரி யர்கள் குறிப்பிடுகின்றனர். 182 நாட்கள் அந்த நகர மக்கள் சோதனைமிகுந்த அந்தப் போரை வெற்றிகரமாக சந்தித்தார்கள். 1943ன் துவக் கத்தில் செஞ்சேனை வெற்றிபெறும் நிலையில் இருந்தது. 6 லட்சம் ஜெர்மன் ராணுவ வீரர்கள் அழிக்கப்பட்டனர். அதன்பிறகுதான், 1944 ஜூன் மாதத்தில், 1942லேயே அமெரிக்காவும் பிரிட் டனும் துவங்குவதாக ஒப்புக்கொண்ட இரண்டா வது போர் முனை துவங்கப்பட்டது. போரின் துவக்க கட்டத்தில் அன்று அமெரிக்க செனட் சபையின் உறுப்பினராக இருந்த ஹாரி எஸ். ட்ரூமன் “போரில் ஜெர்மனி வெற்றி பெறும் நிலையிலிருந்தால் ரஷ்யாவுக்கு உதவுவோம்”. ரஷ்யா வெற்றிபெறும் நிலையில் இருந்தால் ஜெர்மனிக்கு உதவுவோம் என்று சொன்னதை கவனத்தில் கொண்டால் இரண்டாவது முனை துவக்கப்பட அவர்கள் எடுத்துக்கொண்ட கால தாமதத்தை புரிந்துகொள்ள முடியும். 1941-45 வரை நடந்த அந்த உலகப்போர் பாசிசத்தின் தோல்வியில் முடிந்தது. ஒன்றுக்கொன்று முரண் பட்டு நிற்கும் இரண்டு சமூக அமைப்புகளிடையே நடந்த போர் அது. சோஷலிசத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டிருந்தது. சோவியத் மக்கள் ஸ்டாலின் தலைமையிலிருந்த சோவியத் கம்யூனிஸ்ட கட்சி அதற்கு மனிதகுலம் போற்றும் விடையினைக் கண்டார்கள். ஹிட்லர் கைப்பற்றி யிருந்த நாடுகளெல்லாம் விடுதலை பெற்றன. மிகப்பிரபலமான ஜெர்மன் எழுத்தாளர் தாமன் மான் பெர்லின் நாடாளுமன்றக் கட்டடத்தில் அரிவாள்-சுத்தியல் சின்னம் பொறித்த கொடி ஏற்றியபொழுது, “இந்த உன்னத நேரம் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஜெர்மனிக்கும் கூட, கொடிய விலங்கு வீழ்த்தப்பட்டுவிட்டது. தேசிய சோஷலிசம் என்ற அச்சமூட்டும் மற்றும் அறிவற்ற அரக்கனின் காலம் முடிந்துவிட்டது. ஹிட்லர் என்ற கறைபடிந்த ஜெர்மனி விடுதலை பெற்றுவிட்டது” என்று எழுதினார். சோவியத் யூனியனை பாதுகாத்துக்கொண்டே உலகத்தை பாசிச பேராபத்திலிருந்து காத்து கடுமையான சோதனைகளையும் அளப்பரிய தியாகங்களை யும் உட்கொண்ட இந்த போரை வெற்றிகரமாக முடிப்பதில் ஸ்டாலின் ஆற்றிய பங்கை மறத்தல் அல்லது மறைத்தல் கூடுமா?

சோவியத் மறு கட்டுமனத்தில்

போர் முடிந்த பிறகு போரின் அழிவிலிருந்து சோவியத் யூனியன் மீண்டும் கட்டப்பட்டது. அதன் வேகமான வளர்ச்சி அதிசயிக்கத்தக்க வகையில் இருந்தது. 2 கோடி மக்களை இழந்து, 1700 நகரங்கள் மற்றும் 27000 கிராமங்கள் முற்றிலு மாக அழிக்கப்பட்டு, 38000 மைல் ரயில்வே வழித் தடங்கள் சிதைக்கப்பட்டு, 3000 தொழில் நிறு வனங்கள் நொறுக்கப்பட்டு, பெரிய அணைக் கட்டுகள் உடைக்கப்பட்டு நின்ற சோவியத் யூனியன் எழுந்தது. சோஷலிசம் ரஷ்யாவில் கட்டமுடியமா? என்று தத்துவார்த்த நிலையில் இருந்து கேள்வி எழுந்தபோது ஸ்டாலின் விடுத்த அறைகூவல் இதுதான். “கட்டுங்கள் இல்லை யெனில் பத்து ஆண்டுகளில் வெளிநாட்டு படை யெடுப்பாளர்களால் சிதைந்துபோய்விடுங்கள்”. சோவியத் மக்கள் ஒரு புதிய சமூகத்தை உரு வாக்கினார்கள். ஸ்டாலினின் அந்தக் குரலை அவர்கள் மீண்டும் கேட்டார்கள். தவிர்க்க முடி யாத பலம் வாய்ந்த உலக சக்தியாக சோவியத் யூனியன் மலர்ந்தது. செயற்கைகோளை விண் வெளியில் அனுப்பியது, 1959ல் யூரிகாகரின் விண் வெளி ஓடத்தில் உலகை வலம் வந்தது, வாலன்டினா டெரஷ்கோவா என்ற பெண்மணி விண்வெளியில் பறந்தது – இந்த அறிவியல் சாதனைகளை செய்து முடிப்பதற்கான அடித் தளம் இருந்தது. புதிதாக விடுதலை அடைந்த நாடுகளுக்கு ஏகாதிபத்திய தாக்குதலை தடுக்கும் அரணாக சோவியத் யூனியன் மாறியது. ஏற் கெனவே அதன் சமூகநலத் திட்டங்கள் முத லாளித்துவ நாடுகளில் தாக்கத்தை உருவாக்கி யிருந்தன. உலகம் முழுமையும் கம்யூனிச இயக்கங் கள் கிளர்ந்தெழுந்தன. கிழக்கு ஐரோப்பா, சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா என புரட்சி யின் தளங்கள் விரிவடைந்தன. அற்புதமான மாற்றங்களை கொண்டுவந்த சோவியத் யூனியன் நிலைத்து நிற்கவில்லை என்பது கம்யூனிஸ்டுகள் சந்தித்த சோகமான அனுபவம்தான். அதனையும் அதையொட்டி நிகழ்ந்த மாறுதல்களையும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் கடந்தகால வரலாற்று நிகழ்வுகளையும் அவைகளினூடே நின்று செயலாற்றிய மனிதர் களையும் நினைவிற்கு கொண்டுவருவது நாம் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையாக உள்ளது.

அந்த மகத்தான மனிதர்

அப்படித்தான் ஸ்டாலினை நினைவில் கொள் கிறோம். தன்னுடைய கருத்தை மற்றவர் மேல் வலிந்து திணித்த சர்வாதிகாரி என்ற குற்றச்சாட்டு அவர் மீது வீசப்பட்டதுண்டு. நமது இயக்கம் பெற்ற அனுபவம் அதை நிரூபிக்கவில்லை. நமது தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து இந்தியாவில் புரட்சிகர மாற்றம் கொண்டுவருவது குறித்து அவரிடம் விவாதித்தனர்.  “எனக்கு இந்தியா வைப்பற்றி அதிகம் தெரியாது. எங்களுக்கு தெரிந்தது பொதுவான மார்க்சிய-லெனினிய மற்றும் இயக்க இயல் கோட்பாடுகள்தான். அந்த பொதுவான புரிதலிலிருந்து நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறோம். அதை ஏற்றுக் கொள்வதோ திருத்துவதோ அல்லது ஏற்க மறுப்பதோ என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண் டும்”. இதுதான் ஸ்டாலின் நம் தலைவர்களுக்கு கொடுத்த ஆலோசனை. எல்லாம் தெரிந்த மாதிரி ஸ்டாலின் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வில்லை. மிகவும் தன்னடக்கத்துடன் பொறு மையாக செயல்பட்டார் என்று தோழர் பசவ புன்னையா தன் நினைவு குறிப்புகளில் எழுதி யிருக்கிறார். போரின் துவக்கத்தில் சோவியத் யூனியன் சில பின்னடைவுகளை சந்தித்தது. முடிவு எடுப்பதில் ஏற்பட்ட தவறுகளுக்காகவும், காலதாமதம் ஆனதற்கும் ஸ்டாலின் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கூட தயங்கவில்லை. மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ளும் மனிதராக இருந்தார். ஒரு  விவசாய பெண்மணி, “புல் வளர்கிற சப்தத் தைக்கூட அவரால் கேட்க முடியும்” என்றார். கமிட்டி கூட்டங்களில் அதிகம் பேசாமலேயே பொதுக்கருத்தை உருவாக்கும் திறன் கொண்ட வராக இருந்தார் என்று எழுதுகிறார் `அன்னா’. சிறந்த மார்க்சிய-லெனினிய தத்துவ ஆசானாக விளங்கினார். நாட்டையும் கட்சியினையும் காப்பாற்றும் முயற்சியில் நடந்த சில அத்துமீறல் நடவடிக்கைகள் அவரைப்பற்றிய எதிர்மறையான கருத்தை உருவாக்கியிருப்பதை மறுக்கமுடியாது. அவருடைய நினைவுநாளில் அனைத்தையும் பரிசீலித்துத்தான் நாம் நமது கருத்தினை உரு வாக்கிக்கொள்கிறோம். சாதனைகள் தவறுகளை விஞ்சி நிற்கின்றன என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தில் நமக்கு முழு உடன்பாடு உண்டு.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: