இரா. ஸ்ரீதர்
பிப்ரவரி 2012 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டு 164 ஆண்டுகள் நிறைவடை கின்றன.
குரான், பைபிள் ஆகியவற்றிற்கு பிறகு உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட முதன்மையான நூல் என்பது மட்டுமா இந்த அறிக்கையின் பெருமை?
உலகில் அதிக பதிப்புகள் கண்ட நூல் என்பது மட்டுமா இந்த அறிக்கையின் பெருமை?
தனது விடுதலை மற்றும் வர்க்கங்கள் அற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தில் அது ஒரு தத்து வார்த்தக் கருவி. உலகில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் அனைவருக்கும் அடிப்படையான முதல் தத்துவ ஆவணம். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய வேலைத் திட்டங்களுக்கு அடிப்படை. மனித குலத்தின் கம்யூனிசத்தை நோக்கிய பயணத்தை மார்க்சியம் இந்த அறிக்கை மூலம் துவக்கி வைத்தது.
இந்த அறிக்கை வெளியானபோது இருந்த சூழல், அறிக்கையின் நோக்கம், அறிக்கையின் உருவாக்கம், அறிக்கையின் சுருக்கப்பட்ட உள் ளடக்கம் தற்போதைய சூழலில் அறிக்கையின் பொருத்தப்பாடு ஆகியவற்றை சுருக்கமாக கூறுவது இக்கட்டுரையின் நோக்கம்.
அறிக்கை பிறந்தகால சூழல்
15ம் நூற்றாண்டின் முடிவில் மற்றும் 16ம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ சகாப்தத்தில் முதலாளித்துவ உற்பத்தி வளரத் துவங்கியது. இந்த காலத்தில் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மட்டும் அல்ல இடையறாது மேம்படுத்தப்பட்டன. இவை கைத்தொழில் உற்பத்தியை அகற்றின, பல்வேறு பொருட்களின் உற்பத்தியை பெருக் கின, புதிய நிலப்பரப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டு காலனி களாக மாற்றப்பட்டன. இதன் மூலம் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முதலாளி வர்க்கமும், மறுபுறம் பாட்டாளி வர்க்கமும் உருவாயின. 1841ல் இங்கிலாந்தில் மட்டும் 40 லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். இவர்களின் உழைப்புச்சூழல் என்பது சிறைச்சூழலை விட கடுமையானதாக இருந்தது. ஊதியமும் மிகக் குறைவு. இதனால் தொழிலாளர்களின் அதிருப்தி ஆத்திரம் மேலும் மேலும் வளர்ந்து வந்தது. இதன் வெளிப்பாடாக தொழிலாளர் அமைப்பு கள் உருவாகத் துவங்கின. தங்களின் அரசியல் உரிமைகள் குறித்து அவர்கள் உணரத் துவங் கினர். இதன் மூலம் தொழிலாளர் போராட்டம் பொருளாதார ரீதியானதாக, அரசியல் ரீதியான தாக, தத்துவார்த்த ரீதியானதாக இருந்தது.
1824ல் இங்கிலாந்து தொழிலாளர்கள் “தொழிலாளர் அமைப்புகளை உருவாக்குவதை தடை செய்யும்” சட்டத்தை எதிர்த்து போராடி அச்சட்டத்தை திரும்பப்பெற வைத்த எழுச்சி மிக்க போராட்டம்.
இங்கிலாந்து தொழிலாளர்களின் முதல் வெகுஜன பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்க மானது “சார்ட்டிஸ்ட் இயக்கம்” 1830 – 1840ல் உருவான எழுச்சி.
1831 மற்றும் 1834 ஆண்டுகளில் பிரான்சில் லியோன் நூற்பாலை தொழிலாளர்களின் ஆவேசமான எழுச்சி.
1842ல் இங்கிலாந்தில் சர்வபொது வாக்குரிமை கோரி நடைபெற்ற பிரம்மாண்டமான கையெழுத்து இயக்கம்.
1844ல் ஜெர்மனியில் நடைபெற்ற சிலேனிய நூற்பாலை தொழிலாளர்களின் எழுச்சி.
இப்படி தொழிலாளி வர்க்கம் போராட்டப் பதாகையை உயர்த்திப்பிடித்த போது தொழி லாளி வர்க்கத்திற்கு தேவையானது எல்லாம் ஒரு தத்துவ ஆயுதம்…! அந்தத் தத்துவ ஆயுதம் எது? அதை தயாரிப்பது யார்? என்ற கேள்விகள் எழுந்தது. சமூகத்தை மாற்றுவதற்கும், வெற்றிகர மானதொரு சமூகப் புரட்சி நடத்துவதற்கும் உலகம் பற்றிய முழுமையானதொரு புரிதல்களும் தேவையாக இருந்தது. அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் தத்துவம் எது?
அறிக்கையின் நோக்கம்
ஐரோப்பாவின் கம்யூனிசம் என்னும் பூதம் பிடித்து ஆட்டுகிறது. இந்த பூதத்தை விரட்ட வேண்டுமென ஐரோப்பிய கண்டத்தின் அனைத்து ஆதிக்க சக்திகளும் புதிய கூட்டு சேர்ந் துள்ளன.
இதன் மூலம் கம்யூனிசம் என்பது தனிப்பெரும் சக்தியாகிவிட்டது என்பதை ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் அனைத்தும் ஒப்புக்கொண்டுவிட்டன. மேலும் கம்யூனிஸ்டுகள் உலகம் முழுவதையும் நேருக்கு நேர் பார்த்து தங்களின் கண்ணோட்டங் களையும் குறிக்கோள்களையும், போக்குகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. “கம்யூனிச பூதம்” என்று கூறி பூச்சாண்டி காட்டுவதை கட்சியின் அறிக்கை மூலம் சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அறிக்கையின் பிறப்பு
பாட்டாளி வர்க்கத்தின் முதல் சர்வதேச அமைப்பான கம்யூனிஸ்ட் லீக் 1847ல் ஜூன் 2ல் லண்டனில் உருவானது. இதன் உருவாக்கத்தில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் தீவிரப் பங்கினை வகித்தனர்.
கம்யூனிஸ்ட் லீகின் இரண்டாவது காங்கிரஸ் 1847 நவம்பர் – டிசம்பரில் லண்டனில் நடை பெற்றது. அந்த காங்கிரஸின் நீண்ட நெடிய விவாதத்தின்போது மார்க்சும் ஏங்கெல்சும் விஞ்ஞானப் பூர்வமான கம்யூனிசத்தின் கோட் பாடுகளை ஆதரித்துப் பேசினர். இதன் விளை வாக அறிக்கையை மார்க்சும் ஏங்கெல்சும் தயாரிக்க பணிக்கப்பட்டனர்.
மார்க்சும் ஏங்கெல்சும் அறிக்கை உரு வாக்க அமர்ந்த போது கவனத்தில் இருந்தது எல்லாம் “தத்துவார்த்த ஆயுதம் தோற்று விக்கப்பட வேண்டும். தொழிலாளர் கரங்க ளில் தரப்பட வேண்டும். விஞ்ஞான சோச லிசம் பாட்டாளிவர்க்க நடைமுறை போராட்டத்துடன் இணைந்து கலக்க வேண்டும்” என்பதுதான்.
இதனைக் கருத்தில் கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன் உருவாக்க கட்டங் களை 3 கட்டங்களாகப் பிரிக்கலாம்.
முதல் கட்டமாக 1847 ஜூன் மாத துவக்கத்தில் “நம்பிக்கை குறித்து ஒரு கம்யூனிஸ்டின் வாக்கு மூல நகல்” ஏங்கல்சால் இயற்றப்பட்டது. இதில் சமுதாய வளர்ச்சி பிரச்சனைகள், வரலாற்றை பற்றிய பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் ஆராயப்பட்டது. இது கம்யூனிஸ்ட் லீகின் ஜூன் காங்கிரஸ் அங்கீகரிக்கப்பட்டது என்றாலும் சில கருத்துக்கள் காங்கிரசின் மற்ற பிரதிநிதிகளின் முன்மொழிவிற்கேற்ப சேர்க்கப்பட்டன.
இரண்டாவது கட்டமானது “நம்பிக்கை குறித்து ஒரு கம்யூனிஸ்டின் வாக்குமூல நகல்” இணைக்கப்பட்டு “கம்யூனிசத்தின் கோட்பாடு கள்” என்ற வகையில் 1847 அக்டோபர் மாத இறுதியில் ஏங்கெல்ஸ் தயாரித்தார். இது அக் காலத்தில் தொழிலாளர்களுக்கான பழக்கமான தாக இருந்த வினாவிடை வடிவில் இருந்தது. மூன்றாவது கட்டமாக மார்க்சும் ஏங்கெல்சும் இணைந்து கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதினர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை ஜெர்மன் மொழியில் 1848 பிப்ரவரியில் முதல் பதிப்பாக வெளியானது. லண்டனில் உள்ள எண். 46 லிவர்பூல் தெருவில் உள்ள சிறு அச்சகத்தி லிருந்து 23 பக்கங்களைக் கொண்ட துண்டுப் பிரசுரம் வெளியானது. லெனின் வார்த்தைகளில் சொன்னால் “மிகப்பெரிய நூல் தொகுதிகளுக்கு சமமான” சிறு பிரசுரம் வெளியானது.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் உள்ளடக்கம்
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை 4 அத்தி யாயங்களை உடையது.
* முதலாளிகளும் பாட்டாளிகளும்
* பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்
* சோசலிச. கம்யூனிச இலக்கியம்
* எதிர்க்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்டுகளின் நிலை
ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுருக்கமாகக் காண்போம்.
முதலாளிகளும் பாட்டாளிகளும்
உலக வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறு: முதல் அத்தியாயம் உலக வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறு என்பதை வலியுறுத்தி துவங்குகிறது. பண்டைய கால வர்க்கங்கள் பிரபுத்துவ சமுதாயத்தில் வர்க்கங்கள், முதலாளித்துவ வர்க்கங்கள் என வர்க்கங்கள் ஒவ்வொரு காலத்திலும் முரண் பட்டே வந்துள்ளன.
முதலாளிகளின் தோற்றுவாய்: கடல் வழி கண்டுபிடிப்பு அதிகரிக்க அதிகரிக்க வியாபாரம் அதிகரித்தது. வியாபாரம் அதிகரிக்க அதிகரிக்க பண்டையகால உற்பத்திமுறை வீழ்ந்து நவீன முதலாளி வர்க்கம் உருவானது.
முதலாளி வர்க்க முற்போக்கு பாத்திரம்: இவ்வாறு உருவான முதலாளி வர்க்கம் மிகவும் புரட்சிகரமான பங்கு ஆற்றியது. அதாவது எல்லா பிரபுத்துவ உறவுகளுக்கும் முடிவு கட்டி யது. வர்க்கப் பகைமைகளை சுருக்கி எளிமை யாக்கியது. சமுதாயத்தை தொழிலாளி, முத லாளி என இரு வர்க்கங்களாய் பிளவுபடும் போக்கை வேகப்படுத்தியது.
பொருளாதார விதிகள், நெருக்கடி (உலகமயம்): முதலாளி வர்க்கம் தோன்றி நூறு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அது முந்திய தலைமுறை உருவாக்கிய அனைத்து உற்பத்தி களையும் விஞ்சியது. அதன் விளைவு எதிர்மறை யாகப் போனது. நவீன முதலாளி சமுதாயம் மாயவித்தை போல பிரம்மாண்டமான பொரு ளாதார சாதனங்களையும், பரிவர்த்தனை சாத னங்களையும் தோற்றுவித்து அதை அடக்கியாள தெரியாமல் தவிக்கிறது. ஒரு புறத்தில் வலுக் கட்டாயமாக உற்பத்தி சக்திகளின் பெரும் பகுதியை அழிப்பதன் மூலமும், மறுபுறத்தில் புதிய சந்தைகளை வென்று கைப்பற்றுவதன் மூலமும், மறுபுறத்தில் புதிய சந்தைகளை வென்று நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.
பாட்டாளி வர்க்கத்தின் தோற்றம்: மூல தனம் வளர வளர முதலாளித்துவம் வளர்வது போல பாட்டாளி வர்க்கமும் அதே அளவு வளரும். எல்லா விற்பனை பொருள் போல் சிறுக சிறுக பாட்டாளிகளும் ஒரு பரிவர்த்தனை பொருளாக மாறுகிறார்கள். சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு இரையாகிறார்கள். ஆலை முதலாளியால் சுரண்டப்பட்ட தொழிலாளி பின் வீட்டு சொந்தக்காரராலும், கடைக்கார ராலும் அடகு வட்டிக் கடைக்காரராலும் தாக் கப்படுவார்கள். இதன் விளைவாக மத்திய தர வர்க்க கீழ் தட்டைச் சேர்ந்த சிறு உற்பத்தியாளர், கடைக்காரர், சிறு வாடகை, வட்டி வருவாயினர், கைவினைஞர், விவசாயிகள் ஆகிய எல்லோரும் பாட்டாளி வர்க்கத்தை வந்தடைகிறார்கள்.
பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி: பாட் டாளி வர்க்க வளர்ச்சி பல்வேறு கட்டங்களைக் கொண்டது. பிறந்ததுமே முதலாளி வர்க்கத்தை எதிர்த்து தன் போராட்டத்தை துவக்கி விடுகிறது. முதலில் இந்தப் போராட்டத்தை தனிப்பட்ட தொழிலாளர்களும் பின் ஒரு ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்களும், பிறகு ஒரு வட் டாரத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்களை சுரண்டும் தனிப்பட்ட முதலாளிகளை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். முதலில் முதலாளித்துவ பொருள் உற்பத்தி உறவுகளை எதிர்த்து தாக்குதல் தொடுக்காமல் உற்பத்தி கருவிகளை அதாவது இயந்திரங்களை, ஆலைகளை தாக்கினார்கள். நாடு முழுவதும் சிதறிக் கிடந்த தொழிலாளர்களை முதலாளி வர்க்கம் தன் சுயநலத்திற்காக அதாவது தன் பகைவர்களை அழிப்பதற்கு ஒன்று சேர்ந்தனர். அவர்களுக்கு பொதுக் கல்வியும், அரசியல் கல்வியும் வழங்கப்பட்டன. ஆனால் தொழி லாளர்கள் பெருகப் பெருக மோதல் என்பது தொழிலாளிக்கும் முதலாளிக்குமாக மாறுகிறது. இந்த மோதல் மூலம் தொழிலாளி சங்கம் வைக்க முயல்கிறான். சிற்சில சந்தர்ப்பங்களில் தொழி லாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரம்: முதலாளித்துவத்தை எதிர்த்துநிற்கும் எல்லா வர்க்கங்களிலும் பாட்டாளி வர்க்கம் மட்டுமே உண்மையான புரட்சிகரமான வர்க்க மாகும். பாட்டாளி வர்க்கம் மட்டுமே நவீன தொழிலுக்கு ஏற்ப தொழிலை புதிப்பித்துக் கொள்கிறார்கள். மத்தியதர வர்க்கத்தின் கீழ் பகுதிகளாகிய சிறு பட்டறையாளர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள் இவர்கள் அனைவரும் தங்களை மத்திய தர மற்றும் சொத்துடைமை வகுப்பினராக தக்க வைத்துக் கொள்ள மட்டுமே முதலாளி வர்க்கத்தை எதிர்க்கிறார்கள். பாட்டாளி வர்க்கம் மட்டுமே உண்மையான புரட்சிகரமான வர்க்கமாகும். வர்க்கமற்ற சமுதாயம் உருவாகப் போராடும் புரட்சிகரமான வர்க்கமாகும்.
சமூகமாற்றத்தின் தவிர்க்க இயலாமை: பண்ணை அடிமைமுறை நிலவிய காலத்தில் பண்ணை அடிமையானவன் தன்னை நகர உறுப்பினராய் உயர்த்திக்கொள்ள முடிந்தது. அதே போல் பிரபுத்துவ எதேச்சாதிகாரத்தில் ஒடுக்குமுறையில் ஒரு குட்டி முதலாளி ஒரு முதலாளியாய் வளர முடிந்தது. ஆனால் நவீன முதலாளி வர்க்கத்தில் ஒரு தொழிலாளியானவன் மேலே உயர்ந்து செல்வதற்கு பதில் தாழ்ந்து செல்கிறான்.
பாட்டாளிகளும், கம்யூனிஸ்டுகளும்
கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்க கட்சியினருக்கு எதிரான ஒரு கட்சியல்ல. அவர் கள் பாட்டாளி வர்க்கம். அனைவருக்கும் பொது வானவர்கள். ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சி யினருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் வித்தியாசங்கள் இரண்டு மட்டுமே! ஒன்று எந்த நாட்டில் பாட் டாளி வர்க்கம் போராட்டம் நடத்தினாலும் அவர்களின் தேசிய இனம் கடந்து பொதுநலனை சுட்டிக்காட்டி முன்னுக்கு கொண்டு வருகி றார்கள். இரண்டாவது, முதலாளி வர்க்கத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்க போராட்டத்தின் அனைத்து வளர்ச்சி கட்டங்களிலும் இயக்க நலனை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்து வார்கள். கம்யூனிஸ்டுகளின் உடனடி நோக்க மானது, பாட்டாளிகளை ஒரே வர்க்கமாக உருப் பெறச் செய்வதும், முதலாளித்துவ மேலாதிக் கத்தை வீழ்த்துவதும், பாட்டாளி வர்க்க அர சியல் ஆட்சி அதிகாரம் வெல்வதும்தான்.
கம்யூனிசத்திற்கு எதிரான
விமர்சனங்களும், பதில்களும்
அ) கம்யூனிசத்தின் சிறப்பியல்பு என்பது பொதுப்பட சொத்துரிமையை ஒழிப்பது அல்ல, முதலாளித்துவ சொத்துரிமையை ஒழிப்பது.
ஆ) சுதந்திரத்தையும் தனித்தன்மையையும் ஒழிப்பது அல்ல. முதலாளியின் தனித்தன்மை, முதலாளியின் சுதந்திரம் ஒழிப்பது கம்யூனிசத் தின் நோக்கம்.
இ) தனிச் சொத்துரிமை ஒழிந்தால் வேலை கள் நின்றுவிடும். எல்லோரும் சோம்பேறிகளாக மாறுவார்கள் என்று கூறுவோருக்கு முதலாளித் துவ சமுதாயத்தில்தான் உழைப்போருக்கு ஏதும் இல்லை, சோம்பேறிகளுக்கும் எது வேண்டு மானாலும் கிடைக்கிறது.
ஈ) தனிச் சொத்துரிமை மறைந்தால் பண் பாடும் சட்டமும் மறையும் என்போருக்கு உங்கள் பண்பாடு மக்களை இயந்திரமாக செயல்பட வைக்கும் என்றும் உங்கள் சட்டம் உங்கள் வர்க்கத்தின் விருப்பத்தை அனைவருக்கும் பொது வாக்குவது ஆகும். இது ஒழிக்கப்பட வேண்டும்.
உ) தற்போது மூலதனத்தைக் கொண்டும் தனிப்பட்ட இலாபத்தை அடிப்படையாகக் கொண்டும் இயங்கும் முதலாளித்துவ குடும்பம் ஒழிக்கப்படும்.
ஊ) பெண்களை பொது உடைமை ஆக்கு வார்கள் என்பதற்கு பெண்கள் வெறும் உற்பத்தி கருவிகளாக இருக்கும் நிலையை ஒழித்து ஆண், பெண் சமத்துவத்தை நிறுவுவதுதான் கம்யூ னிஸ்டுகளின் நோக்கம்.
கம்யூனிச புரட்சியானது பாரம்பரிய சொத்து உறவுகளை தகர்க்கக்கூடிய புரட்சி. எனவே இது பாரம்பரிய கருத்துக்களையும் தகர்க்கும். பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக மலரும் – முதலாளி வர்க்க மூலதனத்தைக் கைப்பற்றும் – உற்பத்திக் கருவிகளை ஆளும் வர்க்கமான பாட் டாளி வர்க்கக் கைகளில் மையப்படுத்தும் உற் பத்தி சக்திகளை அதிகரிக்கும் – இதன் வளர்ச்சிப் போக்கில் வர்க்கமற்ற சமூகம் அமையும்.
ஒவ்வொரு வர்க்கமும் தனது நலனை முன் னிறுத்தியே சோசலிச கருத்தை உருவாக்கும். அந்த இலக்கியங்களை விமர்சிக்கிற பகுதி.
அ. பிரபுத்துவ சோசலிசம்: பிரபு குலத் தோர் தம்மீது அனுதாபம் உண்டாகும் பொருட்டு, முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தை கடுமையாகச் சுரண்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வகுத்தனர். பிரபுத்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதர வளித்து முதலாளி வர்க்கத்தை வஞ்சம் தீர்த்துக் கொண்டனர். இவர்களுடன் சமயவாதிகளும் சேர்ந்து கொண்டனர். இதுவே பிரபுத்துவ சோசலிசம் ஆகும்.
ஆ. குட்டி முதலாளித்துவ சோசலிசம்: நவீன நாகரிகம் முழு அளவிற்கு வளர்ந்துவிட்ட நாடுகளில் குட்டி முதலாளித்துவம் உருவாகி இருந்தது. இந்த வர்க்கம் தனக்கும் விவசாய வர்க்கத்திற்கும் ஏற்பட்ட அழிவையும், பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்hபட்ட கொடுந்துயருக்காகவும் பொருளுற்பத்தியில் நிலவும் அராஜகத்திற் காகவும், செல்வத்தை விநியோகத்தில் ஏற்படும் படுமோசமான ஏற்றத் தாழ்விற்காகவும் அது முழக்கமிட்டது. இது குட்டி முதலாளித்துவ சோசலிசமாகும்.
இ. ஜெர்மானிய அல்லது மெய்யான சோசலிசம்: ஜெர்மனியில் வரைமுறையற்ற பிரபுத்துவ ஆதிக்கத்தை எதிர்த்து முதலாளித் துவ வர்க்கம் தன் போராட்டத்தை ஆரம்பித்த நேரத்தில் சோசலிசம் பற்றிய இலக்கியம் ஜெர் மனிக்கு வந்தது. மெய்யான சோசலிசம் என்ற பெயரில் மனிதனின் சாராம்சம், ஆன்மா, இதயம் பற்றி சித்தாந்தவாதிகளின் குழப்பமான, தெளி வற்ற வாதங்களை வைத்தனர்.
பழமைவாத அல்லது முதலாளித்துவ சோசலிசம்: முதலாளித்துவ வர்க்கத்தில் ஒரு பகுதி முதலாளித்துவ சமுதாயம் தொடர்ந்து நிலவ அது சமூக குறைபாடுகளை அகற்ற விரும்பு கிறது. முதலாளிகளில் பொருளியலார், கொடை வள்ளல்கள், மனிதாபிமானிகள், ஜீவகாருண்ய சங்கத்தாரும் இதில் சேர்ந்திருந்தனர். தொழி லாளி வர்க்கத்திற்கு அரசியல் சீர்திருத்தம் தேவை யில்லை. வாழ்க்கையில் பொருளாதார சீர் திருத்தம் செய்தால் போதும் என்ற கொள்கை உடையது. இதன் உண்மையான நோக்கம் முத லாளிகள் தொழிலாளர் நலனுக்காக இருக்கி றார்கள் என்ற கருத்தை விதைப்பதுதான்.
விமர்சன கற்பனாவாத சோசலிசமும், கம்யூனிசமும்: இது அனைவரும் துறவி மனப் பான்மை கொள்ள வேண்டும் என்று போதித் தது. தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ளும் எந்த அரசியல் நடவடிக்கைக்கும், வர்க்க பேதம் இல்லாமல் எல்லா சமுதாயத்திற்கும் ஏன் முத லாளி வர்க்கத்திற்கும் சேர்த்து வேண்டுகோள் விடுக்கும். முதலாளிகளின் உதவியோடு சமா தான வழியில் வர்க்கப் பகைமை இல்லா சமு தாயத்தை உருவாக்க விரும்புகின்றனர்.
எதிர்க்கட்சிகள் பற்றிய கம்யூனிஸ்டுகளின் நிலை
தொழிலாளி வர்க்க உடனடி நோக்கங்களுக் காகவும், நலன்களுக்காகவும், கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள். ஆனால் நிகழ்கால இயக் கத்தின் போதே எதிர்கால இயக்கத்தையும் சேர்ந்தே கவனிக்கிறார்கள். தற்போதைய சமூக அரசியல் நிலைமையை எதிர்க்கும் புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கிறார்கள். இப்போது உள்ள சமூக நிலை மைகளை தூக்கி எறிவதால் மட்டுமே தங்களது குறிக்கோள்களை அடைய முடியும் என கம்யூ னிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்.
கம்யூனிச புரட்சியை கண்டு
ஆளும் வர்க்கங்கள் நடுநடுங்கட்டும்!
பாட்டாளிகள் இழப்பதற்கு அடிமைச் சங்கிலி யைத்தவிர ஏதும் இல்லை. ஆனால் வெல்வதற்கு ஒரு பொன்னுலகம் இருக்கிறது. உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்.
21ம் நூற்றாண்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையும்
21ம் நூற்றாண்டில் உள்ள நாம் கம்யூனிச அறிக்கையோடு கீழ்க்கண்ட விவரங்களையும் நாம் ஒப்பீடு செய்ய வேண்டியுள்ளது.
* அறிக்கையின் அடிப்படைக் கருத்தாகிய வர்க்கப் போராட்டம் உலகமயச் சூழலில் செயல்படும் விதம்.
* நமது சமகால வர்க்கப் போராட்டத்தின் இயல்புகள்
* அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள தொழி லாளிகள் – முதலாளிகள் குறித்த விளக்கங்கள் தற்போதைய வளர்ச்சியில் தற்போது கொண் டுள்ள புதிய தன்மைகள்.
* உலகமயம் குறித்த அறிக்கையின் ஆய்வு முறையும் நமது சமகால உலகமயப் போக்கும்.
* அறிக்கை விளக்கும் நெருக்கடிக்கும் தற்கால நெருக்கடிக்கும் உள்ள பொதுத் தன்மை.
* வர்க்கப் போராட்டத்தில் தேசியத்திற்கும் சர்வ தேசியத்திற்கும் இடையிலான இணைப்பு
* கம்யூனிஸ்டுக் கட்சியின் அடிப்படைத் தன்மை மற்றும் பிற உழைக்கும் வர்க்கக் கட்சி களுடன் அதற்குள்ள உறவு நிலை.
* அறிக்கையில் கம்யூனிஸ்டுகள் குறித்த அவ தூறுகளுக்கு பதில்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் சமகால அவதூறுகளை எதிர்நோக்குவது
* பலவகைப்பட்ட மார்க்சியமல்லாத கம்யூ னிஸ்டு திட்டங்கள் அல்லது லட்சியங்கள் குறித்த விமர்சனங்களில் நமது சமகாலத்துக்கு பொருந் தக்கூடிய விமர்சனங்கள்.
* அரசு ஆட்சியதிகாரம் குறித்த அறிக்கையின் நிலைபாடு.
* அறிக்கையில் குறிப்பிடப்படும் வேலைத் திட்டம் தற்போதைய நிலைமைகளில் பெற் றுள்ள வளர்ச்சி.
* இந்திய/தமிழகச் சூழலில் அறிக்கையின் பொருத்தப்பாடு போன்றவற்றை கவனத்தில் கொண்டு விவாதித்து, பொருள் புரிந்து 21ம் நூற்றாண்டில் சோசலிசத்தை நோக்கிய பயணத்தில் நாம் பயணம் செய்வோம்.
Leave a Reply