நூல் அறிமுகம்: நீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்


– பேரா. ஆர். சந்திரா

“மனித வாழ்வை அறிவுபூர்வமானதாக ஆக்குங்கள். நியாயமான பன்னாட்டு நிதி நிவையை கட்டியெழுப்புங்கள். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத நீடித்த வளர்ச்சியை ஊக்குவிக்க அனைத்து விஞ்ஞான அறிவையும் பயன் படுத்துங்கள். அந்நிய நாட்டின் கடனையல்ல – சூழலியலுக்கு உங்கள் கடனை செலுத்துங்கள். மக்களையல்ல – பசியை எதிர்த்துப் போராடுங் கள்”

ஃபிடல் காஸ்ட்ரோ

தோழர் ஃபிடல் காஸ்ட்ரோவின் 80வயது பூர்த்தியானதையொட்டி, பல துறைகளின் மீது கியூபா நடத்தியுள்ள சாதனைகள் தொடர்பான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேளாண்மை என்ற கருப்பொருளைக் கொண்டு கியூபா வேளாண்துறையில் நடத்தியுள்ள சாதனைகள், இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் பிரச் சனைகளை, நீடித்த வேளாண்மையும், வல்லரசிய எதிர்ப்பும்’ என்ற நூல் விளக்குகிறது. கியூபாவின் சோஷலிச கட்டமைப்பு, தரமான வாழ்க்கையை கியூப மகக்கள் அனுபவித்து வருவதற்கு காரணம் என்று பதிப்புரையிலேயே பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது கியூபா போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளதுதான். ஆனா லும் பசி, பட்டினி இல்லை. அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி என்பதை கியூபா சாதித்து காட்டியுள்ளது. பொருளாதார தடை, சதி வேலைகள் என அமெரிக்கா தொடர்ந்து குறி வைத்து தாக்கியபோதிலும், தொண்ணூறு களுக்குப் பின் சோஷலிச நாடுகளில் ஏற்பட் டுள்ள மாற்றங்களினால் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், துணிவுடன் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, `நகர்ப்புற வேளாண்மை’ மற்றும் இதர முயற்சிகளை மேற்கொண்டு, வேளாண் துறையில் புதிய பாதையை கியூபா உருவாக்கி யுள்ளது.

இந்நூல் பதினைந்து அத்தியாயங்களைக் கொண்டது. நீண்ட முன்னுரை கியூப விவசாய வரலாற்றையும், அரசியல் பின்னணியையும் புரிந்துகொள்ள உதவுகிறது. 1959ல் புரட்சி வெற்றி யடைந்த பின் வர்த்தக மற்றும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1990லிருந்து சோவியத் யூனியனில் ஆதரவும் இல்லை. ஆனால் தொண்ணூற்றுக்குப் பின்னரும் பல இடர்களை எதிர்கொண்டு, உணவு உற்பத்தியில் சாதனை புரிந்தது. எவ்வாறு அதை செய்ய முடிந்தது? “மண் ஒரு முக்கியத் துவம் வாய்ந்த இயற்கை வளம். நீடித்த பல னளிக்கும் இயற்கை விவசாய முறை தேசப் பாது காப்பின் பிரிக்கவியலாப் போர்” என்கின்றனர். அங்கு திட்டம் தீட்டிய தலைவர்கள், 1989ம் ஆண்டுவரை கியூப சர்க்கரைக்கு மாற்றாக சோவியத் யூனியனிலிருந்து கிடைத்த உதவி, 60 சதம் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய உத வியது. சோவியத் யூனியன் சிதறுண்டபின் புரட்சி யின் பலன்களை இழக்க விரும்பாத கியூபா, செய் அல்லது செத்துமடி என்ற நிலையில் 3 வழிகளை பின்பற்றி பிரச்சனைகளை எதிர் கொண்டது. (1) தெருவோர நடைபாதைகள், காலியிடங்களில் வளமான மண்ணை நிரப்பி பயிரிடப்பட்டது.  (2) பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கூட்டுறவு சங்கங்கள், பள்ளிகள், முதியோர் இல்லங்கள் என இவை அனைத்திற்கும் சொந்த மான காலியிடங்களில் உணவுதானியங்கள் பயிரிடப்பட்டன. இவற்றில் உற்பத்தியான உணவு ரேசன் மூலம் மக்களுக்கு தரப்பட்டது (3) வீடு களின் முற்றங்கள், புழக்கடைகள், மொட்டை மாடிகள் என தனி மனிதர்களும் உணவை உற்பத்தி செய்தனர். இதன் மூலம் 81000 ஏக்கர் நிலங்களில் உணவு உற்பத்தியாகியது.

உணவில் தன்னிறைவு பெற இடுபொருட்கள் அளித்தல், நகர்ப்புற விவசாய விற்பனை மீது 5 சதவிகிதம் மட்டுமே வரி, உழவர் சந்தைகள் உருவாக்கம், கூட்டுறவுப் பண்ணைகள்… என ஏராளமான நடவடிக்கைகளை அரசு மேற் கொண்டது. அரிசி உற்பத்தி மும்மடங்கு அதி கரித்தது. மனித, மிருகக் கழிவுகள், குப்பைகள் மறுசுழற்சி முறையில் உரமாகின. ரசாயன உரப் பயன்பாடு, பூச்சிக்கொல்லி பயன்பாடு குறைந் தது. உலக நகர்ப்புற விவசாய இயக்கத்தின் முன் னோடியாக கியூபா திகழ்கிறது.

புரட்சிக்கு முன்பு: கரும்பு விவசாயம் மட்டுமே பிரதானமாக இருந்தது. பின்னர் பெரிய பண்ணைகளில் நெல் உற்பத்தி நிகழ்ந்தது. 1958ல் கிராமப்புறங்களில் 73.3 சதவிகிதம் நிலம், 9.4 சத விகித மக்களிடம் இருந்தது. நிலமற்ற விவசாயக் குடும்பங்கள் 2 லட்சம் என கணக்கிடப்பட் டுள்ளது. வேலையின்மை, கல்வியின்மை, சுகா தாரமற்ற நிலை நிலவியது. வேளாண் விளை நிலங்களில் பாதிக்கு மேல் அன்னிய முத லாளிகளிடமிருந்தது. ஆனால், 1959ல் புரட்சி வெற்றிபெற்ற பின்பு, இரண்டு நில சீரமைப்புச் சட்டங்களின் (1959, 1963) மூலம், 2 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு நிலம் பகிர்ந்தளிக் கப்பட்டது. அன்னிய முதலாளிகளிடமிருந்த பெரும் பண்ணைகளில் 70 சதம் கியூப அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. தொடக்கத்தில் பல பயிர் உற்பத்தியும், இயற்கையையொட்டிய விவசாய முறையும் கடைபிடிக்கப்பட்டது. ஆனாலும், உணவுத் தேவையை கருத்தில் கொண்டு நவீன முறை விவசாயம் பின்பற்றப் பட்டது. முதலில் நல்ல வளர்ச்சி. இருந்த போதிலும், சில பிரச்சனைகள், (காடுகள் அழிப்பு, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மீது சார்பு, கிராமங்களிலிருந்து குடிபெயர்வு (1956ல் கிராமப்புற மக்கள் தொகை 56 சதவிகிதம், 1989ல் 28 சதவிகிதம் 1990ல் 20சதவிகிதம் குறைவு) எழத்தான் செய்தன. ஆனாலும் மக்கள் வறு மையில் வாடாமல் இருக்க புரட்சி ஏற்படுத்திய சமூக மாற்றம் காரணம் என்று வலியுறுத்துகிறார் நூலாசிரியர். அரசிடம் 80 சதவிகித நிலம், தனியாரிடம் 20 சதவிகித நிலம் என்பதாலும், சோவியத் யூனியனிடமிருந்து அதிக செலவு பிடிக்கும் நவீன சாகுபடி முறைக்கான உதவி கிடைத்ததாலும், கியூபா தாக்குப்பிடித்தது. சோவியத் யூனியன் சிதறுண்ட பொழுது, கியூபா பாதிக்கப்பட்டது. நகர்ப்புற வேளாண்மையை மேம்படுத்துதல், வேறு சில சிக்கன நடவடிக்கை களால், 1999ல் வேளாண் உற்பத்தி வெகுவாக அதிகரித்தது. 1993ல் நில உடைமை முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. மூலிகை உற்பத்தி இயக்கம்  தோன்றியது. நீடித்த வேளாண்மைக்கான இயக்கம் பல்கலைக் கழகங் களால் நடத்தப்பட்டது. கரும்பு, அரிசியிலிருந்து, பழம், காய் என இதர உணவுப் பொருள்களின் உற்பத்தியிலும் பிரமிக்கத்தக்க மாற்றம் ஏற் பட்டது. பயிர் சுழற்சி முறையால் மண்வளம் அதிகரித்தது. தவிர, சிறு நில உடைமை யாளர்களுக்கு உதவ கடன், சேவைக் கூட்டுறவு கள் மட்டுமே 1975 வரை இருந்தன. ஆனால் பின்னர் வேளாண் உற்பத்தி கூட்டுறவு அமைப்பு கள் துவங்கப்பட்டுள்ளன.

1989 – 1993 இக்கட்டான காலகட்டம் என்று கருதப்படும் ஆண்டுகளில் விலைவாசி அதி கரித்தது. இறக்குமதி குறைந்ததே இதற்குக் காரணமாகும். இதனால், புதிய சூழலுக்கேற்ப, கியூபா பன்னாட்டு சந்தையில் இணைந்தது தவிர, வர்த்தகத்தில் ஏகபோகம் இல்லாத சூழல் உரு வாக்கப்பட்டது. மேலும், கியூபாவின் மொத்த பரப்பில் 7 சதம் தனியார் விவசாயிகளிடம் கொடுக்கப்பட்டது. நீர்ப்பாசனம் உறுதிப் படுத்தப்பட்டது. நூலாசிரியர் கியூப நெருக்கடி மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகள் 1980களில் எதிர்கொண்டதைவிட மோசமானது என்று தெரிவிக்கிறார். 1993 முதல் மக்கள் உட்கொண்ட உணவு அளவு அதிகரித்தது. ஆனாலும் தேவை யான சத்தை அளிக்க முடியவில்லை என்பதை கணக்கில் கொண்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. பள்ளி, வேலையிடங்களில் குறைந்த விலையில் உணவு வழங்குதல், மருத்துவ மனைகளில் இலவச உணவு வழங்குதல் போன்ற பல நடவடிக்கைகள் மக்களுக்கு உணவுக்கான உத்தரவாதத்தை அளித்தது. குழந்தைகள், கருவுற்றோர், முதியோர் ஆகியோர் மீது தனி கவனம் செலுத்தி, அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு கண்காணிக்கப்படுகிறது. எல்லோருக்கு மான நீதி மற்றும் சமூக நலக் கோட்பாட்டின் அடிப்படையில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. உண்மையான வறுமை இல்லை. மற்ற நாடுகளில் அடிப்படை சந்தைப் பொருட்களை வாங்கும் சக்தியை வைத்து வறுமை மதிப்பிடப்படுகிறது. இந்த அளவுகோல் கியூபாவூக்கு பொருந்தாது. (பக்கம் 73) வேளாண்துறையை முடுக்கிவிடும் நட வடிக்கைகளை (கியூப நாணயமான பெசோவின் வாங்குதிறனை அதிகரித்தல், வருமானப் பகிர்வை ஒழுங்குபடுத்தும் வண்ணம் வரி விதித்தல், மண்டல உணவு வாரியங்களுக்கு வலுவூட்டல்… போன்றவை) உணவு கிடைக்கச் செய்வதுடன், விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளை கியூப அரசு மேற்கொண்டுள்ளது இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தவிர, கியூபாவின் அரசு சாரா நிறுவனங்களின் முதல் முன்னுரிமை உணவு உத்தரவாதமாகும். உணவு பாதுகாப்பில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

“கியூபாவின் நாட்டுப்புறத்தை மாற்றுதல்” என்கின்ற அத்தியாயம் சுவாரசியமான பல தகவல்களை அளிக்கிறது. 1993க்குப் பின்னர் நிலவரியில் முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன என்பதையும் அவற்றினால் ஏற் பட்ட பலன்களும் விளக்கப்பட்டுள்ளன. அரசுத் துறை, அரசு சாராத துறை மற்றும் கலப்புத்துறை என்று பண்ணைகள் பிரிக்கப்பட்டுள்ளன. அரசு பண்ணைகள் செயல்பாடு பற்றி நோக்கும் பொழுது, அரசுத்துறையின் பங்கு 1996க்குப் பின் குறைந்து வந்துள்ளதை புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அரசு சாராத்துறையில் கூட்டு உற்பத்தி பண்ணைகளுடன், தனிப்பட்ட உற்பத்திக்கான சேவை கூட்டுறவுகள், தனியாக குத்தகைக்கு சாகுபடி செய்யும் உழவர்கள் என இரு பிரிவுகள் உள்ளன. கலப்புத்துறையில் அரசு மற்றும் அயல் நாட்டு மூலதனத்துக்கிடையிலான கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆரஞ்சு பழ ஏற்றுமதித் தொழில் அயல்நாட்டு குழுமங்கள் ஈடுபட் டுள்ளன. அரிசி, பருத்தி, தக்காளி சாகுபடிக்கு அயல்நாட்டு நிதி உதவி கிட்டுகிறது. ஆனால், அயல்நாட்டு மூலதனத்தை அரசு முயற்சிகள் மூலமாக மட்டுமே பெறமுடியும். தனிப்பட்ட உற்பத்தியாளர் பெறமுடியாது. “சமூக மற்றும் பொருளியல் வேறுபாட்டை ஒழுங்குபடுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது”. மாறுபட்ட கட்டமைப்பு, தொழில்நுட்பங்கள், ஒவ்வொரு முறைக்கும் உள்ள பிரத்யேக சிறப்பம்சங்கள்,, பன்முகத்தன்மை கொண்ட அமைப்பை வெளிப் படுத்துகிறது. அரசுப் பண்ணைகள். அரிசி, பால், மாட்டிறைச்சி, கோழி, உருளை இதர கிழங்கு களை உற்பத்தி செய்தன. தனியார் பண்ணைகள் காய் கறி, மக்காச்சோளம், புகையிலை, கொக்கோ போன்றவற்றை உற்பத்தி செய்தன. அரசு சாராத துறையின் முக்கியத்துவம், பயன்படாமலிருந்த நிலங்களை தனியாருக்கு குத்தகையில் பகிர்ந் தளித்தது போன்ற நடவடிக்கைகள் வேலை வாய்ப்பு மற்றும் உற்பத்தியில் சாதகமான விளைவுகளுடன் சில பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருந்தது. மக்கள் தொகை வளர்ச் சியைவிட வேளாண் உற்பத்தி பல மடங்கு அதி கரித்தது என்பது பாராட்டத்தக்கது. ஆனால், சந்தை காரணமாக, முன்பு எப்பொழுதும் இல் லாத அளவு சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு கள் அதிகமாகியுள்ளன என்பதும் எடுத்துக் காட்டுகளுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கியூபாவில் தனியார் பண்ணைகளா என்ற கேள்வி பலருக்கு எழக்கூடும். தனியார் மற்றும் கூட்டுறவு உற்பத்தி எப்படி, எவ்வாறு சாத்தியம்? நீடித்த வேளாண்மை என்பதில் சிறு விவசாயி களின் பங்கு என்ன என்பது போன்ற பல கேள்வி களுக்கு சிறு பண்ணையாளர்களின் தேசிய சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த மாவிஸ்                         டி. ஆல்வாரெஸ் விரிவான விளக்கமளித் துள்ளார். அந்த அத்தியாயத்தில் கூட்டுறவு களுக்கு சொந்தமான நிலப்பரப்பு, உற்பத்தி கூட்டுறவுகள், கியூபாவில் உள்ள சொத்துரிமைக் கான சட்டவரையறை, நிதி மற்றும் விலை அமைச்சரகம் செயல்படும் விதம் என ஏராள மான விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் ஆசிரியர்களாகவும், நவீன நீடித்த வேளாண்மைக்கு எடுத்துக்காட்டுகளாக ஆகி விட்டனர் என்று ஆல்வாரெஸ் குறிப்பிட்டுள் ளார்.

சிறிது சிறிதாக ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் மீதான சார்பு குறைக்கப்பட்டு, இயற்கை உரம் பூச்சிக்கொல்லிகள் (வேப்ப மரங்களை கியூபா முழுவதும் பயிரிட்டுள்ளனர்) பயன்பாட்டை அதிகரிப்பது, பன்றி எருவிலிருந்து உரம், சமையல் எரிவாயு தயாரிப்பு… என சுய சார்புக்கான, நீடித்த வேளாண்மைக்கான வழி வகைகள் மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டி யவையாகும்.

கியூப அரசு விவசாயிகளை பயிற்றுவிப்பதை தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளது. கால் நடை பராமரிப்பு, விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்புகள், மாநாடுகள் போன்றவை நடத்தப் பட்டு நம்ப இயலாத அளவு ஆக்கப்பூர்வமான உருமாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். (பக்கம் 127) தொழில்கல்வி நிலையங்கள் பல்கலைக் கழகங்கள், வேளாண் சூழலியல் கல்விக்கான  நிறுவனங்களின் கூட்டணிகள் ஆகியவை ஆற்றும்  பங்கும் குறிப்பிடத்தக்கது.

நவீன வேளாண்மையில் சுற்றுச்சூழலுடன் இணைந்த செயல்பாடு வலியுறுத்தப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் இனம் காணப்பட்டு அவை அழிக்கப்பட்டன. 1975லேயே பூச்சிக் கொல்லி பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது. நல்லுயிரிகளை வளர்த்தல், மாற்றி பயிரிடுதல், உயிரி பன்முகத்தன்மையை பெருக்கு தல் ஆகியவற்றின் மூலம் உயிரியல் தீங்குயிரிக் கட்டுப்பாட்டில் உலகிலேயே முன்னணி நாடாக கியூபா திகழ்கிறது. உலகில் பி.டி. தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. 1960லேயே பி.டியைக்கொண்டு தீங்குயிரிக் கட்டுப்பாட்டு மருந்துகள் கியூபாவில் விற்பனைக்கு வந்து விட்டன. பயிர் சுழற்சி, ஊடு பயிரிடுதல் முறை சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது. பூச்சி கட்டுப் பாட்டில் பல பயிர் சாகுபடி உதவுகிறது. இது தொடர்பாக நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இந்த நூலில் இயந்திரமாக்கலால் ஏற்படும் பாதக விளைவுகள் குறிப்பாக உழவு மாடுகள் மீதான தாக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. அண்மையில் கால்நடை உழவுப்பண்ணை முறை கள் புகுத்தப்பட்டுள்ளன. மண்வளம், எரி பொருள் சேமிப்பு போன்றவற்றை பாதுகாக்க கால்நடை உழவு பயன்படுகிறது. இது ஏதோ தொழில்நுட்பத்தை விலக்குவதாக பார்க்கக் கூடாது என நூலாசிரியர்கள் விளக்குகின்றனர். சமீபகாலமாக மூலிகை பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. “மூலிகை மருத்துவம் ஏழ்மையுடன் சமசரம்ச செய்வதன்று. அது வளமையை தேர்ந்தெடுப்பதாகும்”. (ஜெனரல் ரால் காஸ்ட்ரோ) 1973ல் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டு, ஆராய்ச்சியாளர்கள் 5000க்கும் மேற்பட்ட தாவரங்களை சேமித்துள்ளனர். சோசலிச முகாம் வீழ்ந்தபின் 1990களில் கியூபாவுக்கு வந்து கொண்டிருந்த மருந்து தயாரிப்பு கச்சாப் பொருட்கள் கிடைக்கவில்லை. அச்சூழலில் 1995ல் பாதுகாப்பு அமைச்சரகம் நடத்திய மாநாட்டில், எந்தெந்த மூலிகை, எந்த மருந்து உற்பத்திக்கு பயன்படும் என ஏராளமான ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. “நகரங் களிலும், மாநிலங்களிலும் நோய்கள் உண் டாவதை கணக்கில் எடுத்துக்கொண்டு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. உணவு பயிர்களுடன் ஊடு பயிர்களாகவும் மூலிகை பயிர்கள் பயிரிடப் படுகின்றன. அறிவியலையும், மரபையும் இணைத்து மூலிகை வேளாண்மையில் கியூபா சாதனை படைத்துள்ளது. இதில் அயல்நாட்டு வல்லுநர்களும் பங்காற்றியுள்ளனர்.

மக்களின் அரிசி என்ற அத்தியாயம் அரிசி உற்பத்தி பற்றிய புதிய பார்வையை அளிக்கிறது. கியூபாவில் பல ஆண்டுகள் நீர் அதிகம் தேவைப் படும். அரிசி வகையை உற்பத்தி செய்தனர். இதனால் நீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது உற்பத்தி குறையும், மக்களின் அரிசி என்ற முறை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் தேவையில்லை. கியூபாவில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 44 கிலோ அரிசி தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. மக்கள் அரிசி தேசிய திட்டமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஹெக்டேர் நிலத்தில் ஆண்டுக்கு 110000 முதல் 130000 டன் வரை அரிசி உற்பத்தியாகிறது. பசுந்தாள் உரம்தான் பயன் படுத்தப்படுகிறது. மலைப்பகுதிகளில்கூட, இந்த நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கியூபா புதிய தொழில்நுட்பங்களை கண்டறியும் முயற்சி களை மேற்கொள்ள வேண்டுமென்பது கண்டறி யும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென் பது வலியுறுத்தப்படுகிறது. கரும்பு பயிரிலும் உற் பத்தியை அதிகரிப்பதற்கும், அதன் மிச்சப் பொருட்களை கால்நடைத் தீவனமாக பயன் படுத்துவது போன்றவற்றில் பல புதிய நடை முறைகளை பின்பற்றியுள்ளனர்.

பின்னுரையில்  கியூபாவில் ஏற்படும் பிரச் சனைகளை சமாளிக்க சோஷலிச கட்டமைப்பு உதவுகிறது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “சமச்சீரற்ற தன்மை உருவாகும்போது அவ்வப் போது தீர்க்கப்படுகிறது” (பக்கம் 264) கியூபாவின் வேளாண்மை, ஒரு சோஷலிச வேளாண்மை யாகும். விவசாய சங்கங்களும், உள்ளூர் நிர்வாக அமைப்புகளும் குறிப்பிட்ட உற்பத்தி திட்டங் களை முன்னெடுத்துச் செல்கின்றன. நகரங்களுக் காக, கிராமங்கள் சுரண்டப்படுவதில்லை. ஒவ் வொரு பகுதிக்கும் ஏற்றவாறு நுட்பமான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால், அரசின் கொள்கைகளின் விளைவாக, விவசாயம் சீரழிந்து, லட்சக்கணக்கில் விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலநிலை உள்ளது. நகர்ப்புற வேளாண்மையைப் பொறுத்தவரை கியூபா உலகிற்கே முன்மாதிரியான நாடு என்பது அறிந்ததே. ஆனால், 1959ல் புரட்சிக்குப் பின்னரும், குறிப்பாக 1990க்குப் பின் சோஷலிசம் பின்னடைவை சந்தித்த காலத்தில்,. உணவில் தன்னிறைவு பெற மேற்கொண்ட முயற்சி களிலிருந்து இந்தியா நிறைய  பாடம் கற்றுக் கொள்ள இயலும். என்சிபிஎச் வெளியிட் டுள்ள இந்த நூலை மொழிபெயர்க்க ஏழு பேர் கொண்ட குழு உதவியுள்ளது. எளிய தமிழ் நடையில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. சில வார்த்தைகள் புழக்கத்தில் இல்லாதவை என்பதால் கடினமாகத் தோன்றலாம்.

ஏராளமான புள்ளி விபரங்கள் கொடுக்கப்பட் டுள்ளன. நல உடைமை முறைகள், மாற்றங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருப்பதால், அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றின் பின்னணியை புரிந்துகொள்ள உதவுகிறது. பசுமைப்புரட்சி பற்றிய கடுமையான விமர்சனம் ஏற்கத்தக்கதாக இல்லை. நீடித்த வேளாண்மைக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய வேளாண் முறைகள் கடை பிடிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே சமயம் உற்பத்தி, தன்னிறைவு போன்றவை முக்கிய மானவையாகும். நூலின் ஒட்டுமொத்த செய்தி, “அனைவருக்கும் தரமான, போதுமான உணவு பாதுகாப்பை அளிப்பது சோஷலிச சமுதாயத் தில் மட்டுமே” என்பதாகும். கல்வி, மருத்துவத் துறைகளிலும் கியூபாவின் சாதனைகள் பொறுத்தமான வகையில் நூலில் இடம்பெற் றுள்ளன. (வேளாண்துறையில் உள்ள அரசியல் பின்புலமும் நுணுக்கமாக வெளிவந்துள்ளது.) ஏராளமான படிப்பினைகளை கியூபாவிட மிருந்து கற்க வேண்டியுள்ளதென்பதை இந் நூலின் ஒவ்வொரு பக்கமும் வலியுறுத்துகிறது என்றால் மிகையாகாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s