ஆர்.கோவிந்தராஜன்
“உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற் றுமையினை உயர்த்திப் பிடிக்க, மார்க்சிசத்தின் அடிப்படை கொள்கைகளையும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும் பாதுகாக்க, ஏகாதி பத்திய முகாமின் தாக்குதலிலிருந்து சோசலிச முகாமை பாதுகாத்து அக்கொள்கைகளை மாறிக்கொண்டிருக்கும் இந்திய சூழலுக்கேற்ப பொருத்தி செயல்பட, கட்சி அணிகளுக்கு மார்க் சிய-லெனினிய கண்ணோட்டத்தை அளித்து அவர்கள் நேர்கொள்ளும் வரலாற்றுக் கடமை களை- வெற்றிகரமாக மக்கள் ஜனநாயகப்புரட்சி யினை நிறைவேற்றி இந்த நாட்டை சோசலிசத் திற்கு இட்டுச் செல்லும் கடமைகளை – நிறை வேற்ற” என்று 1983ல் ‘மார்க்சிஸ்ட் ஆங்கில இதழ் வெளிவருவதின் நோக்கத்தை அதன் அறிமுகக் கட்டுரையில் ஆசிரியர் தோழர் பி.டி.ரணதிவே குறிப்பிட்டிருந்தார். அந்த நோக்கங்களுக்காகவே தனது 62 ஆண்டு கால பொது வாழ்க்கையை கம்யூனிச இயக்கத்திற்கு அர்ப்பணித்தார். அவர் ஒரு மார்க்சிஸ்டாக உருவானதும், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணி படையாக இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவானதும் ஒன்றோ டொன்று பின்னிப்பிணைக்கப்பட்ட நிகழ்வுகள். கட்சியோடு இணைந்து எந்த வகையான சலனத் திற்கும் ஆட்படாமல், சோதனைகள் வந்த போதும், கட்சி வழியினை உறுதியாகப்பற்றி நின்று செயல்பட்ட தோழராக பி.டி.ஆர் இருந் தார் என்பதை கட்சியின் வரலாறு தெரிவிக்கிறது. தேசிய சர்வதேசிய நிகழ்வுகளை மார்க்சிய-லெனினிய கொள்கை வெளிச்சத்தில் கூர்மை யாக ஆய்வு செய்து அதை கட்சியின் முன் வைத்து கட்சி சரியான முடிவுகளை எடுக்க வழி காட்டிய தலைவர்களுள் ஒருவராக அவர் விளங் கினார்.
- கட்சிப்பணி
அவர் கட்சிக்குள் வந்தபொழுது (1928) கட் சிக்கு அகில இந்திய மையம் என்று எதுவும் கிடையாது. மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் விடுதலையான பிறகுதான், 1934 முதல் மத்தியக்குழு அமைக்கப்பட்டு, கட்சி மையம் செயல்படத் துவங்கியது; தோழர் பிடிஆர் அந்த மத்தியக்குழு உறுப்பினராக இருந்தார். மத்தியக்குழு துவக்கிய “கூhந சூயவiடியேட குசடிவே” இதழின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். அன்றிலிருந்து (இடையில் ஆறு ஆண்டுகால இடைவெளி தவிர) கடைசிவரை மார்க்சிஸ்ட் கட்சி துவக்கப்படுவதற்கு முன்பு செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், மத்திய தலைமையின் ஒரு பகுதியாகவே செயல்பட்டார். பல்வேறு மாநிலங்களின் பிரச்சனைகளையும், இயக்கங் களையும் பரிசீலித்து ஒன்றுபட்ட தேசிய அணுகு முறை உருவாக்கி கட்சியினை கட்டுவதற்கு அவருடைய இந்த அனுபவம் பெரிதும் துணை நின்றது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கால கட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் பெரு மளவிலான மக்கள் இயக்கங்கள் கிளர்ந்தெழுந்த காலமாக இருந்தது. கைது செய்யப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரும் இயக்கம், பல தொழி லாளி வர்க்கப் போராட்டங்கள், வங்காள விவசாயி கள் நடத்திய தெபாகா போராட்டம், திருவிதாங்கூர் பகுதியில் உழைக்கும் மக்கள் மேற்கொண்ட புன்னப்புரா -வயலார் போராட் டம், நீண்ட காலம் நடைபெற்ற தெலுங்கானா போராட்டம் கப்பற்படை வீரர்களின் போராட் டம் என போராட்ட அலைகள் விரிந்து பரவி நாட்டை கவ்விப்பிடித்தன. இந்த போர்க்குண மிக்க இயக்கங்களுக்கு வழிகாட்டும தலைமைப் பொறுப்பில் இருந்து தோழர் பி.டி.ஆர். செயல் பட்டார்.. தோழர் பிடிஆர் கட்சியின் பொதுச் செயலாளராக 1948ல் நடந்த கட்சியின் 2வது காங்கிரசில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கட்சி காங்கிரஸ் எடுத்த அரசியல் திசைவழி குறுங்குழுவாத தன்மையுடன் இருந்தது; பொறுப் பில் இருந்த பிடிஆர் நடவடிக்கைக்கு உட்படுத் தப்பட்டார். கட்சியின் முடிவை ஏற்று அவர் செயல்பட்ட விதம் ஒரு கம்யூனிஸ்ட் எத்தகைய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என் பதை கட்சி அணிகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மீண்டும் கட்சியின் 4வது கட்சி காங் கிரசில் அவர் மத்தியக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப் படும் வரை அவருக்கு மிகவும் அது சோதனை மிகுந்த காலமாக இருந்தது என்பது உண்மை. அவர் இறந்தபிறகு இரங்கல் செய்தி தெரிவிக்கும் முறையில் பலர் வெளியிட்ட சில எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து “மார்க்சிஸ்ட்” ஆங்கில இதழின் ஆசிரியர்குழு, ரோசாலக்சம்பர்க்கை சில திருத்தல்வாதிகள் விமர்சனம் செய்தபோது, லெனின் கூறியதை மேற்கோள் காட்டி எழுதியது-”பருந்துகள் சில சமயம் கோழிகள் பறக்கும் உயரத்திற்கு கிழே பறக்கலாம்; ஆனால் என்றும் கோழிகள் பருந்துகள் பறக்கும் உயரத்தில் பறக்க முடியாது….” அவரிடம் சில தவறுகள் இருந்த போதும், நமக்கு அவர் ஒரு பருந்தாகத்தான் இருக்கிறார்.
- திரிபுகளை எதிர்த்த தத்துவார்த்த போரில்
திருத்தல்வாதத்தையும், இடது அதிதீவிர வாதத்தையும் எதிர்த்து கட்சி நடத்திய போராட் டத்தில் பெரும் பங்காற்றியவர் பிடிஆர். இந்த இரண்டு போக்குகளையும் விமர்சித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள் (“திருத்தல் வாதத்திற்கு எதிராக”, “இடது அதிதீவிரவாதத் திற்கு எதிராக” என்ற புத்தகங்கள்) கட்சி அணி களுக்கு தத்துவார்த்த அறிவை புகட்டியதோடு அதை எதிர்த்து போராடும உறுதியினையும் கொடுத்தது. இந்த இரண்டு திரிபுகளிலிருந்தும் கட்சியினை காப்பாற்றியதில் தோழர் பி.டி.ஆரின் பங்கு மறக்க முடியாததொன்றாகும். தொழிலாளி வர்க்கத்தின் கடமையினை விளக்கும்பொழுது அது முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ ஆட்சி யினை எதிர்த்து செயல்படும் ஜனநாயக கூட் டணியில் நேரடியாக தலையிட்டு அந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்கும் சக்தியாக உருவாக வேண்டும் என்று கூறினார்; இந்த நோக்கங்க ளோடு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) உருவாக்கப்பட்டு ஒரு போர்க்குணமிக்க அமைப்பாக அதை மாற்றியதில் தோழர் பிடிஆரின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை வழிகாட்டுதல் முழுமையாக இருந்தது. விவசாயி களின் கோரிக்கைகளுக்காகப் போராடும் அமைப்பாக உருவாகி தொழிலாளி-விவசாயி கூட்டணியினை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்; தொழிற்சங்கங்களும் மற்ற ஜனநாயக அமைப்புகளும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி விசேஷ கவனம் செலுத்தி சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் அவர் களின் பங்கை உறுதி செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத் திக் கொண்டு வந்தார். “மார்க்சிஸ்ட்” (ஆங்கிலம்) இதழை அறிமுகப் படுததும்போது, அதற்கு வேறு சில கடமைகளும் உள்ளன என்று குறிப் பிட்டார்.மார்க்சியமல் லாத, மார்க்சியத்திற்கு எதிரான தத்துவங்கள் மக்களின் புரட்சிகர உணர்வை மழுங்கடிக்கும் நோக்கத்தோடு பரப்பப்படுகின்றன. மதம், சாதி, பிரதேச உணர்வு மற்றும் சந்தர்ப்பவாதத்தின் பல வடிவங்கள்- இவையாவும் மக்களிடம் மார்க்சிய தத்துவம் வளர்ந்து வருவதை தடுக்க பயன் படுத்தப்படுகின்றன என விவரித்து அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.
- சர்வதேசிய உணர்வோடு …..
சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் “ஐரோப்பிய கம்யூனிசம் (நுரசடி – உடிஅஅரnளையஅ) எப்படி மார்க்சிய-லெனினிய கோட் பாடுகளை சிதைத்தது என்பது பற்றியும், கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியனில் நடை பெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகள் பற்றிய தன் னுடைய விமர்சனங்களையும் கவலையினையும் முன்வைக்கத் தவறவில்லை. முன்பே குறிப்பிட் டது போல், மார்க்சிய-லெனினிய கோட்பாடு களை மாறிவரும் இந்திய சூழலுக்கேற்ப பொருத் தும் நடைமுறையினை, அதற்காக கடைபிடிக்க வேண்டிய உத்தியினையும், கட்சியின் முன் வைத்தார் . ”
- “சாதி பிரச்சனை” குறித்து
அவருடைய வாழ்க்கை பற்றிய குறிப்புகளில், அவர் மனதில் புரட்சிக்கான தீப்பொறி அவ ருடைய இளம் வயதில் தீண்டாமைக்கொடுமை யினை எதிர்ப்பதில் பட்டுத் தெரித்தது என்று குறிப்பிடப்படுகிறது. “சாதி, வர்க்கம், சொத்து உறவுகள்”(நுஉடிnடிஅiஉ யனே ஞடிடiஉவையட றுநநமடல. —-1989/ ளுடிநஉயைட ளைளரந டிn வைள 14வா ஹnniஎநசளயசல) என்ற கட்டுரையில் மார்க்சிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் நிலவியுள்ள சாதிப் பிரச்சனையை ஆய்வு செய்தார்.”சாதி மற்றும் வகுப்புவாதங்களுக்கு எதிரான தத்துவார்த்த போராட்டங்களில் கவனமின்மை உள்ளது என்பது ஒத்துக்கொள்ளப்பட வேண்டும்” என்ற சுயவிமர்சனமும் அந்த கட்டுரையில் உள்ளது. சாதி அமைப்புகள் இந்திய மக்கள் சமூகம் முழுமையிலும் விரவிக்கிடக்கும் அம்சம் என் பதை புறந்தள்ளி இப்பிரச்சனையை ஆய்வு செய்ய முடியாது. சில சமூக ஆய்வாளர்கள் செய் தது போல, ‘சாதி, வர்க்கம்’ என்பதை எதிரெதி ராக நிறுத்தி பிடிஆர் இந்த பிரச்சனையை பார்க்கவில்லை. முதலாளித்துவம் வளர்கிற போது சாதிகள் சிதைந்து போகும் என்ற பொதுவான புரிதல் இந்திய அனுபவத்திற்குள் இணைந்து வரவில்லை. காலனி ஆதிக்கம் நிலவிய காலத்தில் சொந்த நலன்களுக்காக காலனியாதிக் கத்தினரால் சாதி அமைப்பினை வளர்த்து வந்த நிலப்பிரபுத்துவ உறவின் மீது குறைந்த அளவில் தான் நவீன முதலாளித்துவ முறை திணிக்கப் பட்டது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தலைமையின் பிரதானமான பிரிவினர் சாதி அமைப்புகளுடன் சமரசம் செய்து கொண் டனர். “இந்தியாவில் சாதியின் சவால்” என்று ஜெகஜீவன்ராம் எழுதிய புத்தகத்தில் மகாத்மா காந்தியின் கருத்தை மேற்கோள் காட்டியதை பிடிஆர் அந்தப் புத்தகத்தைப் பற்றிய அவருடைய விமர்சனத்தில் குறிப்பிடுகிறார்.
“…. நான்கு வருணங்கள் அடிப்படையானவை; இயற்கையானவை; இன்றியமையாதவை; ஆனால் எண்ணிறந்த சாதிகளும் அவற்றின் உட் பிரிவுகளும் உபரியானவை. மனித சக்தியைப் பாதுகாப்பதற்கும் உண்மையான பொருளா தாரத்திற்குமான இயற்கையின் விதியே வர்ணங் கள். சமுதாயத்தின் நிலைப்பிற்கும் முன்னேற்றத் திற்குமான மிகவும் சாதகமான ஏற்பாடு. அது பிதுரார்ஜித ஏற்பாட்டில் நம்பிக்கை உடையது. ஒரு தனி நபரோ,குடும்பமோ தன் நன்மைக்காக தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள முடிவு செய்தாலும், அப்படி மாற ஒண்ணாமல் ஒரே சாதிப்பிரிவிலேயே அந்த நபரோ, குடும் பமோ நீடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்து வதில் அநீதி எதுவும் இழைக்கப்படுவதில்லை என்று அது கருதுகிறது. இதை விட ஒர் ஒழுங் கமைந்த ஏற்பாட்டை கற்பனை செய்வதே கடினம். இது மனிதனின் கண்டு பிடிப்பு அல்ல; இயற்கை யின் மீற முடியாத நியதி. நியூட்டனின் புவி ஈர்ப்பு சக்தியின் விதி எப்படி எங்கும் செயல்படுகிறேதா, அப்படியே இதுவும் செயல்படும்”. விடுதலைப் போராட்டத்தில் சாதி வேறுபாடுகளை சற்றே தள்ளி வைத்து லட்சக்கணக்கான மக்களை இணைத்த காந்தியின் கருத்து அப்படித்தான் இருந்தது. “தீண்டாமையை நாம் ஒழிக்காவிடில் இந்த உலகத்திலிருந்தே நாம் ஒழிக்கப்பட்டு விடுவோம்” என்று எச்சரித்த காந்தியடிகள்தான் வர்ண அமைப்பு இயற்கையின் மீற முடியாத நியதி என்று கூறுகிறார். காந்தியடிகளின் இந்த முரண்பாடான நிலை இந்தியாவில் நிலவிய நிலப்பிரபுத்துவ உறவுகளை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. விடுதலைக்குப்பின்னும் சாதி வேற்றுமைகள் தொடர்ந்து நீடிக்க இந்த மண் செழிப்புடையதாகத்தான் இருந்தது- இன்றும் இருக்கிறது. “ஏகாதிபத்தியவாதிகள், நிலப்பிரபுக் கள், முதலாளித்துவ தலைவர்கள் ஆகிய மூன்று பலம் வாய்ந்த சக்திகள் நிலப்பிரபுக்களையும் , முதலாளித்துவத்திற்கு முந்தைய நில உறவுகளை யும் பாதுகாப்பதன் மூலம் சாதிய முறையின் பாதுகாவலர்களாக செயல்பட்டனர்” என்று பிடிஆர் சரியாகவே குறிப்பிடுகிறார்.
- எதிர்கால அணுகுமுறை
சாதிகளுக்கும், தீண்டாமைக்கும் உயிரூட்டிக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்பை, நில உறவுகளை மாற்றுவதற்கு ஆளும் வர்க்கங் கள் தயாராக இல்லை. கல்வியிலும், வேலை யிலும், இடஒதுக்கீடு அளிப்பதும், தீண்டாமை யினை தண்டனைக்குரிய குற்றமாக சட்டமியற்றி யிருப்பதும் தாழ்த்தப்பட்ட மக்களின் விழிப் புணர்வை அங்கீகரிக்க வேண்டிய தேவையில் எழுந்தவை. பி.டி.ஆர். அழுத்தமாகக் குறிப்பிடுகி றார் “பகுத்தறிவு படைத்த எந்த நபரும் இட ஒதுக்கீடு முறையை எதிர்க்க முடியாது, எதிர்க்க வும் கூடாது”. சாதியப்பாகுபாடுகளை எதிர்த்து முன்னேற அவர்களுக்கு இது வாய்ப்பளித்து உதவுகின்றன என்பது உண்மை. ஆனால் இதை யும் தாண்டி சாதிய வேறுபாடுகள் நீர்த்துப் போகாமல் இறுகிப்போய் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இன்றைக்கு ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் கொள்கைகளால் கிராமப்புற விவசாயிகளும், விவசாயத்தொழிலாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்; நகர்ப்புற தொழி லாளிகளும் மற்றும் பல உழைக்கும் மக்கட் பகுதியினரும் பாதிக்கப்படுகின்றனர். இதை எதிர்த்துப் போராட்டங்கள் எழுகின்றன; இவை வர்க்கப் போராட்டங்கள்தான், சுரண்டப்படும் வர்க்கங்களின் போராட்டங்கள். ஆனால், சாதி உணர்வை விட்டுக் கொடுக்காத மனிதர்களும் கலந்து கொள்ளும் வர்க்கப் போராட்டங்கள், கிராம்சி சுட்டிக்காட்டியது போல ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளி பணி நேரத்தில் தொழி லாளி வர்க்கத்தின் பகுதியாக இருந்து விடுகிறான்; பணி முடிந்து வீட்டிற்குப் போகும்போது குடும்ப மற்றும் சமூக சூழலில் உழலும் மனிதனாக செயல் படுகிறான். இங்கே குடும்பம், சமூகம் ஆகிய வற்றில் சாதி, மதம், ரத்த உறவுகள் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. ஆகவேதான், ‘சாதி வேறுபாடுகளை அங்கீகரிக்காமல், வர்க்க வேறு பாடுகளை மட்டும் அங்கீகரிப்பது, சாதியின் இடத்தை வர்க்கத்தை கொண்டு நிரப்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று எழுதுகிறார்.
ஆகவேதான், சாதி வேறுபாடு அல்லது, சாதி ஒடுக்குமுறையினால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்நிலை பற்றிய அக்கறை நமக்கு வேண்டும் என்கிறார் பி.டி.ஆர். அவர்களின் பொருளாதார வாழ்க்கையினைப் பற்றி மட்டுமல்லாமல், அவர் களின் சமூகத் தேவைகள், அனைவருக்கும் சம மாக வழங்க வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள், புறக்கணிக்கப்படுகிற அவர்களின் பண்பாட்டு அசைவுகள், இவைகளைப்பற்றியும் கூடுதலான அக்கறை தேவைப்படுகிறது. இதை செய்ய வில்லையென் றால்? கடந்த காலத்தில் குறிப்பாக விடுதலைப் போராட்ட காலத்தில், நாம் சந் தித்தது போல எப்படி சாதி ஒழிப்புக்கான இயக் கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களி லிருந்து தனிமைப்பட்டு வெறும் சீர்திருத்த இயக்கங்களின் தன்மையினைப் பெற்றதோ அதைப் போல, இன்றைக்கு தோன்றும் பல்வேறு சாதி மறுப்பு இயக்கங்களும், பொதுவான ஜனநாயகப் போராட்டத்தோடு இணையாமல் தனிமைப்பட்டு நிற்கக்கூடும். இது சமூக மாற்றம் வேண்டியும், சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியும் நடத்தப்பட வேண்டிய பொது வான மக்கள் ஜனநாயக போராட்டத்தின் வலு வினை பாதிக்கும். உழைக்கும் வர்க்கமும், ஜன நாயக இயக்கமும், விவசாயிகள் சங்கமும் சேர்ந்து சாதி ஆதிக்கத்திற்கு எதிராக தீவிர பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சாதி அடக்குமுறை பிரச்சனைகளில் தலையிடு வதன் மூலமே பொது வர்க்கப் போராட்டம் நடத்த முடியும் என்று பி.டி.ஆர். குறிப்பிடுகிறார். நமது வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்த நோக்கத் தோடு அதன் நட வடிக்கைகளை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. தீண்டாமை சுவர் இடிப்பு என்பதும் கோயில்நுழைவு என்பதும் சாதி அடக்குமுறையினை எதிர்த்த நமது நேரடி தலையீடுகளாகும்.
தோழர் பி.டி.ஆர். கட்சி நடத்த வேண்டிய தத்துவார்த்தப் போராட்டத்தில் முக்கியமான தாக “சாதிப் பிரச்சனை”யை கருதினார். நிலப் பிரபுத்துவ, அரை நிலப்பிரபுத்துவ தத்துவங் களுக்கெதிரான பரவலான போராட்டத்தை தொடங்க வேண்டும் என சால்கியா பிளீனம் எடுத்த முடிவின் அடிப்படையில் இதை விளக்கி னார். மேலே குறிப்பிட்ட கட்டுரையின் முடிவில், “சாதி மற்றும் சாதி அடக்குமுறையை சீராட்டி வளர்க்கும் சொத்துறவின் அடிப்படை யில்தான் தற்போதைய சமூக பொருளாதார அமைப்பு இருக்கிறது என்பது உணர்ந்து கொள்ளப்பட வேண்டும். முதலாளித்துவ – நிலப் பிரபுத்துவ அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை, நிலப் பிரபுக்கள் ஏகபோகவாதிகளின் ஆதிக்கம் இருக்கும் வரை, தீண்டாமையையும், சாதியையும் ஒழித்திட நினைப்பது வெறும் ஏமாற்று வித்தை யாகும். சாதியப்பிரச்சனை தவிர்க்க முடியாத அளவில் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் பிரச் சனையோடும், சோசலிசத்திற்கு முன்னேறிச் செல்லும் பிரச்சனையோடும் இணைக்கப்பட் டுள்ளது” என நமது செயல்முறை எப்படி இருக்க வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த தினத்தில் (ஏப்ரல் 6) தோழர் பி.டி.ஆரை நினைவு கொள்கிறபோது, இன்றைய சூழலில் நாம் சந்திக்க வேண்டிய முக்கிய பிரச்சனையில் அவருடைய வழிகாட்டுதலையும் நினைவில் கொள்வது அவசியம்.
Leave a Reply