தோழர் என்.வி. இன்று நம்மோடு இல்லை. ஆனால் அவரது வாழ்க்கை நமக்கு வழிகாட்டும் ஆற்றலோடு நிலைத்து நிற்கிறது
உறுதி, அடக்கம், தியாகம் இம்மூன்றுக்கும் இலக்கணமாக இருந்தார். அதை எடுத்துக் காட்டுகிற முறையில் சில நிகழ்வுகளைத் தருகி றோம்.
உறுதி
அரசுகள், மக்களின் நண்பனாக இருக்கும் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடிய காலதத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்.வி. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந் தார். அன்று கம்யூனிஸ்ட்டு களுக்கு சிறைத்தண்ட னையோ தூக்குமேடையோ பரிசாக அரசு கொடுத்த காலம். அது தெரிந்தே கட்சிப் பணியில் ஈடுபட்டார்.
என்.வி. கட்சி ஊழியராக, தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்ட அந்த நாட்களில் நடந்த ஒரு நிகழ்வு நிச்சயமாக நினைவுகூறத் தக்கதாகும்.
திண்டுக்கல் வட்டாரப் பஞ் சாலைகளில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட் டம் நடைபெற்றது. நிர்வாகங் கள் அளித்த புகார் அடிப் படையில் காவல்துறையினர் வரதராஜனைக் கைது செய்தனர். சிறையில் அடைப்பதற்காக அவரை நகர நீதிமன்றத்தில் நீதிபதி முன் நிறுத்தி னர். நீதிபதி முறைப்படி குற்றச்சாட்டை வாசித்துவிட்டு கேட்டார்: “மில் தொழிலாளர் களை வேலை நிறுத்தம் செய்யத் தூண்டியதாக உம் மீது குற்றச்சாட்டு, இந்தக் குற்றச்சாட்டை நீர் ஏற்றுக்கொள்கிறீரா அல்லது மறுக்கிறீரா?’
அதற்கு என்.வி. அளித்த பதில்: “நான் ஒரு கம்யூ னிஸ்ட் கட்சித் தொண்டன். தொழிலாளர்கள் போராடினால்தான் நியாயம் கிடைக்கும். அவர்களிடம் போராட்ட உணர்வை வளர்க்க வேண்டும் என்றுதான் கம்யூனிஸ்ட் கட்சி கூறு கிறது. ஆகவே நான் அந்தப் பணியைச் செய்தேன். தொழிலாளர்களைப் போராடத் தூண்டினேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.”
இந்த திடட்டவட்டமான பதில் நீதிபதியை நிமிர்ந்து பார்க்க வைத்தது. வரதராஜனின் இயக்க வாழ்க்கை நெடுக இப்படிப்பட்ட கறாரான, துணிச்சலான, நேர்மையான வெளிப்பாடு களைக் காணலாம்.
1949 முதல் 50 வரை மதுரை சிறையில் ஏ.என்., என்.வி. ஆகியோர் இருந்த காலத்தில்தான் தியாகி பாலு தூக்கிலேற்றப்பட்டார். அரசின் அடக்கு முறைக்கு எதிராக சிறைக்குள்ளேயும் வெளியேயும் போராட்டங்கள் வெடித்தன.
தோழர் பாலுவின் சடலத்தைக்கூட பார்ப்ப தற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பாலு வின் உடலைப் பார்த்துவிட முயன்ற தோழர் களை காவலர்கள் கடுமையாகத் தாக்கினர். ஒரு வக்கிரத்தோடு என்.வி.யின் தலையில் அரைகுறை யாக மொட்டையடித்து அசிங் கப்படுத்தினர்.
கட்சி தடை செய்யப்பட்டு தலைமறைவாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் அந்த வட்டாரத்தில் கட்சியமைப்பு நிலைகுலையாமல் பாதுகாத் ததில் என்.வி. முக்கியப் பங்காற் றினார். வெளிப்படையாக மக்க ளோடு கலந்திருக்க முடியாத அந்த சோதனைமிக்க நாட் களில் மூன்று வேளை உணவு என்பது ஒரு கனவாகவே இருந்தது. கிடைத்த நேரத்தில் கிடைத்த உணவை உண்டார். பல நேரங்களில் பட்டினிதான். ஒரு ரம்ஜான் நோன்பின்போது மாலைத் தொழுகை வரை காத் திருந்து, தோழர்கள் இஸ்லாமியக் குடும்பங்களி லிருந்து வாங்கி வந்த நோன்புக் கஞ்சியை அமிர்த மாக அருந்தினார். தாழ்த்தப்பட்ட தொழிலாளர் களின் குடிசைகளில் தங்கி அவர்கள் சாப்பிடும் கஞ்சியையும், மாட்டிறைச்சி உப்புக்கண்டத்தை யும் உண்டார். அந்தத் தொழிலாளர்களின் உணவில் பங்கேற்றதோடு, உணர்விலும் இரண் டறக் கலந்தார். திண்டுக்கல் நகரத்தில் பண பலத் தோடு செயல்பட்ட காங்கிரஸ் கட்சியின் செல் வாக்குக்குள் ஊடுருவி தோல், சுருட்டு, பூட்டு, துப்புரவுத் தொழிலாளர்கள் மத்தியில் செங் கொடி இயக்கம் பரவி வளர்ந்ததென்றால் என்.வி.யின் இப்படிப்பட்ட பங்களிப்புகளுக்கும் தலையாய இடம் உண்டு.
அந்த அடக்குமுறைக் காலத்தில் திண்டுக்கல் வட்டாரத்தில் தேவசகாயம் என்ற காவல்துறை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஒரு கொடுங் கோலாட்சியே நடத்தினார். அந்தக் கொடூரமான நடவடிக்கைகளை முறியடிக்க அன்று என்.வி.யு டன் தோழர்கள் எஸ்.ஏ.டி. மதனகோபால் ஆகியோரும் பணியாற்றினர்.
அடக்குமுறை காலத்தில் கட்சித் தோழர் களின் செயல்பாடு எவ்வாறு இருந்தது?
“நாடு விடுதலைக்காகப் போராடிக்கொண்டி ருந்த காலத்திலும் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும் தலைமறைவு நேரத்திலும் கட்சியின் உறுப்பினர்கள் சோர்வைடையாமல் உற் சாகத்தை இழக்காமல் ஊக்கத்தோடு பணி யாற்றினார்கள். அதே வேளையில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி என்பது ஒரு வரம்புக்கு உட்பட்டதாகவே இருந்தது. கட்சி இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு என்பதும் அவ்வாறே ஒரு வரம்புக்குள்தான் இருந்தது.
இருந்தபோதிலும், கட்சியின் உறுப்பினர்கள் எதிர்கால நம்பிக்கையோடும், கட்டுப்பாட் டோடும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந் தார்கள். இன்னல்களைத் தாங்கிக்கொண்டார் கள். அவற்றை முறியடிக்கும் உறுதியைப் பெற்றி ருந்தார்கள். பிற்காலத்தில் இயக்கம் கண்ட வளர்ச்சிக்கு அன்றைய காலகட்டத்தில் நமது தோழர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது. கட்சி அமைப்பைக் கட்டுவதில் இந்த காலகட்டமும் முதல் கட்டமாக அமைந்தது எனலாம்.”
அன்றைய சூழல் பற்றி தனது நிர்ணயிப்பை என்.வி. மிகச் சரியாக இந்த வரிகளில் வெளிப் படுத்துகிறார்.
அடக்கம் + தியாகம்
தோழர் என்.வி. வாழ்க்கையே பல்கலைக்கழக மாய் அமைய நேர்ந்தது. அவர் புத்தகத்தின் மூலம் கற்றது குறைவு, வர்க்கப் போராட்டமே அவரது ஆசானாக இருந்தது. இவரது முன்னோடிகளின் செயல்பாட்டிலிருந்து இவர் கற்றது அதிகம்.
தோழர் சங்கரய்யாவின் வார்த்தைகளில் கூறுவதென்றால், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு தலைவர் எவ்வாறு உருவாக்கப்படு கிறார் என்பதை அறிந்துகொள்ள என்.வி. வாழ்க்கை அமைந்துள்ளது எனலாம். என்.வி.யிடம் கேட்டபொழுது அவர் கூறியது:
“எனக்கு வழிகாட்டிய எம்.ஆர். வெங்கட் ராமன், ஏ. பாலசுப்ரமணியம், அவர்களைப் போன்ற மற்ற தலைவர்கள் எல்லோரும் உன்னதமானவர்கள். கட்சிப் பணத்தை அனாவசியமாக செலவு செய்துவிடக்கூடாதே என்று கண்ணும் கருத்துமாக இருந்தவர் எம்.ஆர்.வி. வசதிமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர் சிக்கனம் கருதி சாலையோரக் கடை களில் சாப்பிட்டு மீதமுள்ள பணத்தை `இந்தாடா என்.வி. மிச்சக் காசு’ என்று என்னிடம் கொடுப் பார். கடின உழைப்பிலும் வறுமையிலும் தோழர் களின் வியர்வையிலும் கிடைத்த ஒவ்வொரு காசையும் எண்ணியெண்ணிச் செலவு செய்ய வேண்டும் என்ற பாடத்தை அவரிடம் கற்றேன். அதையே நானும் கடைபிடிக்கிறேன். தோழர் ஏ.பி. கட்சிக்காகத் தனது சொத்துக்களை விற்று அதில் வந்த பணத்தைக் கட்சிக்கே வழங்கியவர். அவருடைய தியாகம், எளிமை என் மனதில் என்றும் சுடராக இருக்கின்றன. அவர்களின் வழியில் நான் மட்டுமல்ல, கட்சி முழுவதும் கட்டுப்பாட்டுடன் அப்படியே பின் தொடர வேண்டும் என்ற பேராசை எனக்கு உண்டு,” எனக் கூறுகிறார் என்.வி.
ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் தோழர் என்.வி. பணியாற்றிக்கொண்டிருந்த காலம் அது. டெர்லின் சட்டை ஆடம்பரமானது, எனவே அதை கட்சி ஊழியர்கள் அணியக்கூடாது என்று கட்சி மாவட்டக்குழு முடிவு செய் திருந்தது. எனினும் கட்சி கமிட்டி.யிலிருந்த இளைஞர்களுக்கு இந்த முடிவு உடன் பாடானதாக இருக்கவில்லை.
இதுகுறித்து தோழர் பி.டி.ஆர். அறிந்து, டெர்லின் சட்டை என்பது ஆடம்பரமானது அல்ல. பம்பாய் போன்ற நகரங்களில் ஏழை எளிய மக்கள் அணியும் சாதாரண துணிதான் அது. எனவே டெர்லின் சட்டைபோடுவது தவறில்லை என்று கூறிவிட்டார். பிறகு மாவட்டக்குழு தனது முடிவை மாற்றிக்கொண்டது.
கட்சி பொறுப்புக்கள்
1942ல் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக என்.வி. சேர்ந்தார். அதன் பின் 1944ல் திண்டுக்கல் நகர்க்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1947ல் நகரச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1953ல் மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1955ல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநிலக் கவுன்சில் உறுப்பின ராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டார்.
1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதய மானபின் அதன் திண்டுக்கல் நகரச் செயலாள ராகவும், மதுரை மாவட்டச் செயற்குழு உறுப் பினராகவும் மாநிலக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். 1978, 1981ல் (மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளடங்கிய) மதுரை மாவட்டச் செயலாளராக இருமுறை என்.வி. தேர்வு செய்யப்பட்டார். இதே காலத்தில் மாநில செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு பெற்றார்.
1995ல் மத்தியக்குழு உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட் டார்.
2002ல் கோவையில் நடந்த தமிழ்நாடு மாநில மாநாட்டில் அவர் மாநிலச் செயலாள ராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2005ல் நாகர் கோவிலிலும், 2008ல் மதுரை யிலும் நடந்த தமிழ்நாடு மாநில மாநாடுகளும் அவரை மாநிலச் செயலாளராகத் தேர்வு செய் தன.
20 ஆண்டுகள் திண்டுக்கல் நகரச் செயலாளராகவும், 20 ஆண்டுகள் மதுரை மாவட்ட மையத்திலும், 25 ஆண்டுகள் மாநில மையத்திலும் தொடர்ந்து பொறுப்பு களை சோர்வின்றி நிறைவேற்றி வந்தார்.
பஞ்சாலை மில் தொழிலாளியாக துவங்கி பாட்டாளி வர்க்கப் படைத் தளபதியாய் மூன் றாவது முறையாக மாநிலச் செயலாளராக அவர் செயல்படுவது அவருக்கும் கட்சிக்குமான பெரு மைக்குரிய உறவின் சிறப்பையே காட்டுகிறது.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு சென்னையில் மாநில மையத்திலிருந்து பணியாற்றிட வேண்டுமென கட்சி பணித்தது. அதன் அடிப்படையில் 1985ஆம் ஆண்டிலிருந்து மாநில மையத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். மாநில மையப் பணி என்பது அரசியல், அமைப்பு இரண்டும் இணைந்ததாகும். மாவட்டங்களில் திடீரென வரக்கூடிய பிரச்சனைகளுக்கு சரியான வழி காட்டுதல் மற்றும் மக்கள் மத்தியில் எழக்கூடிய தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு வழி காட்டுதல், மாநிலத்தில் அரசியல், பொருளா தார, சமூக நிகழ்வுகள் அனைத்திலும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை உடனுக்குடன் கொண்டு செல்வது போன்ற பணிகளை சிறப்பாக நிறைவேற்றிடும் இடம் அது. “தோழர்கள் எம்.ஆர்.வி., ஏ. நல்லசிவன், பி. ராமமூர்த்தி, வி.பி. சிந்தன், ஆர். ராமராஜ், பி. ராமச்சந்திரன், ஆர். உமாநாத், என். சங்கரய்யா ஆகியோரோடு இணைந்து பணி யாற்றிய வளமான அனுபவங்கள் எனக்கு இன் றளவும் வழிகாட்டுகின்றன. முக்கியமாக அமைப்பு சார்ந்த பணிகளை முறைப்படுத்துவதி லும் பக்குவமாகக் கையாள்வதிலும் அந்த அனுபவங்கள் ஒரு பயிற்சிப் பட்டறையாக என்னைச் செதுக்கின,” என்றார் என்.வி.
ஆதாரம்: பாலபாரதி எழுதிய மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் என்ற நூல்
Leave a Reply