வெங்கடேஷ் ஆத்ரேயா
கார்ல் மார்க்ஸ் மறைந்து ஏறக்குறைய 130 ஆண்டுகள் ஆகிவிட்டன; அவர் பிறந்தது மே 5,1818; அவர் பிறந்து 190 ஆண்டுகள் ஆகின் றது. இவ்வளவு நீண்ட நாட்களுக்குப் பின்னும், உலகத்தின் அறிவுத் தளத்திலும் நடைமுறை வாழ்க்கைப்பாதையிலும் தொடர்ந்து அவர் செல்வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார். அவர் வரப்போகும் சோஷலிச எதிர்காலத் தைக் குறித்து முன்கூட்டியே உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அவ்வாறே பலரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் உலக அளவில் இந்நம்பிக்கை இன்னும் மெய்ப் படவில்லை. முதலாளித்துவ பொருளாதாரம் அடிக்கடி நெருக்கடிக்குள்ளாகும் அமைப்பு என்றும், வரலாற்று நிகழ்வில் போகப் போக அழிந்துவிடும் என்றும் அவரால் அடை யாளம் காணப்பட்டிருந்தது; ஆனால் அந்த அமைப்பு இன்றளவும் சமகால உலகை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆதிக்கம் மிகுந்த உலகில், இதற்கு முன்னால் சோஷலிச அமைப்பை நிறுவுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரும் சவால்களை எதிர் கொண்டன. இருந்த போதிலும் இந்நிகழ்வுகள் மார்க்ஸை இக் காலத்துக்கு பொருத்தமற்றவ ராக ஆக்கிவிடவில்லை; அவ ருடைய கோட்பாட்டின், தீர்க்க தரிசனத்தின் சக்தியையும் உயிர்த்துடிப்பையும் குறைத்து விட முடியவில்லை. முதலில், மார்க்ஸ் தன் அடிப்படையான பங்களிப்பு மூலம் மனிதகுலச் சிந்தனைக்கு புதிய அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். மனித குல வரலாற்றின் வளர்ச்சியை விஞ்ஞான ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நிரூபித்தார்; மனித சமூகங்களின் உருவாக்கம் மனித சமூகங் களின் மறு உற்பத்தி ஆகிய வற்றை விஞ்ஞான ரீதியாக அவர் கண்டறிந்தார். இதன் மூலம், வரலாறு என்பது அரண்மனைச் சதிகள், பதவிப் போட்டிகள், போர்கள், வம்சாவழி அரசர்கள், அவர்கள் செய்த சுரண்டல்கள் என்று இருந்த கண்ணோட்டத்தை மாற்றி வரலாறு என் பதும் ஒரு விஞ்ஞானமே என்பதை நிறுவினார். மனிதகுல வரலாற்றைப் பகுப்பாய்வுசெய்வ தற்கு அவர் மனிதர்களையும் அவர்களது பிரக்ஞ்ஞை பூர்வமான செயல்பாடுகளான மனித உழைப்பையும் மையப் பொருளாக அவர் ஆக்கிக் கொண்டார். பிரக்ஞ்ஞை பூர்வ மான செயல்பாடுகளின் மூலம் இயற்கையுடன் ஊடாடி, இயற்கையை மாற்றியதன் மூலம் மனிதன் உயிர்பிழைத்து வாழ்வதற்கான சாதனங்களை உருவாக்கியதே மனித குலத்தின் தனிப்பட்ட சிறப்பம்சம் என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். இத்தகைய செயல்பாடுகளின் விளைவாக மனித குலமும் பல்வேறு மாற்றங்களை அடைந்தது; படிப்படியான வளர்ச்சிகளையும் அடைந்தது; புதிய அறிவுச் செல்வங்களையும் திறன்களை யும் கைவரப்பெற்றது; இயற்கை இயங்கும் விதம் குறித்து மேலும் மேலும் அறிந்து கொண்டே இருந்தது. இவ்வாறு அடையப் பெற்ற அறிவைப் பயன்படுத்தி மனித சமூகத் தின் உற்பத்தி ஆற்றலை மேம்படுத்தியது. உற்பத்தி சக்திகளின் இத்தகைய முடிவுறா வளர்ச்சியே மனித குல வரலாறு அடைந்த வளர்ச்சியின் நிரந்தர அம்சமாகும். மனித குலம் தனக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ள இயற்கையோடு மட்டும் உறவாடுவதுடன் நின்றுவிடவில்லை; உற் பத்தி செய்வதற்கு மனிதர்கள் ஒருவருக் கொருவர் உறவாட வேண்டிய தேவையும் இருந்தது என்பதே மனிதகுல வரலாற்றின் வளர்ச்சியை பொறுத்த வரையில் மார்க்ஸ் சுட்டிக்காட்டிய இரண்டாவது கருத்து ஆகும். மனிதன் என்பவன் ஒரு தனிமனிதன் என்ற கருத்து நவீன பூர்ஷ்வா சமூக அமைப்பின் உருவாக்கம் ஆகும். மாறாக மனிதன் எப் போதும் ஒரு சமூக அமைப்பாகத்தான் இருந்திருக்கிறான் என்பதே வரலாற்றின் உண்மை . மேலும் வரலாற்றின் வளர்ச்சியின் எல்லாக் கட்டங்களிலும் அனைத்து உற்பத்தி யும் சமூகத்திற்குள்ளும், சமூகத்தின் மூலமாக வுமே நடைபெற்று வந்துள்ளதுஎன்பதே உண்மை ஆகும்.
இவ்வாறு மனித சமூகத்தின் உற்பத்தி ஆற்றல்கள்- அதாவது உற்பத்தி சக்திகள் வளர்வது தவிர்க்கமுடியாததாகும். அவ்வாறு அவைவளரும்போது உற்பத்தி மற்றும் மறு உற்பத்திக்காக நடப்பில் இருக்கும் சமூகக் கட்டமைப்புடன் இச்சக்திகள் முரண்படு கின்றன. இதையே மார்க்ஸ் மூன்றாவது அம்சமாக எடுத்துக் காட்டினார்.
நான்காவதாக மார்க்ஸ் எடுத்துக்காட்டிய அம்சம் உற்பத்தியில் உபரியின் தோற்றத்தை குறித்தாகும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தொடர்ந்து நிகழும் போது சமூக மறு உற் பத்திக்கான தேவைகளைப் பூர்த்தி செய்தது போக உற்பத்தியில் உபரி உருவாகின்றது. இதன் மூலம் சமூகத்தின் ஒரு பகுதியினரின் உழைப்பைப் பயன்படுத்தி சமூகத்தின் மற் றொரு பகுதியினர் வாழ முடியும் என்ற நிலை சாத்தியமாகிறது. அதாவது உபரியின் தோற்றம் தர்க்க ரீதியாகவே வர்க்கப் பிரி வினை கொண்ட சமூகம் உருவாகும் நிலைக்கே இட்டுச் செல்லும். அச்சமூகத்தில் பெரும்பான்மையோர் உழைப்பவர்களாகவும், சுரண்டப்படுபவர்களாகவும் இருப்பர்; சிறு பான்மையோர், பெரும்பான்மையோரின் உழைப்பில் வாழ்பவர்களாகவும், சுரண்டுபவர் களாகவும் இருப்பர். சிறுபான்மையிரான சுரண்டல்காரர்களின் கையில் ஒட்டுமொத்த சமூக உற்பத்தி இருப்பதை அடிப்படையாகக் கொண்டே இவ்வர்க்கப் பிரிவினை சாத்திய மாகின்றது. இச்சிறுபான்மை சுரண்டல் காரர்கள் அனைத்து உற்பத்தி சாதனங்களின் ஏகபோக சொந்தக்காரர்களாக இருப்பதன் மூலம் இது உறுதி செய்யப்படுகின்றது. இத் தகைய அசமத்துவ சமூக அமைப்பை நிலை நிறுத்தவும், சுரண்டப்படும் பெரும்பான்மை யோரை சுரண்டும் சிறுபான்மையோரின் நலன்களுக்காகவே கட்டாயமாக உழைப் பதை உறுதி செய்யவும் பலத்தை பிரயோ கிக்கும் வழிமுறைகள், இணக்கமான வழி முறைகள் ஆகிய இரண்டு வழிமுறைகளின் தேவைகள் ஏற்படுகின்றன..இதில், அரசு, பலப் பிரயோக வழிமுறைகளை அமல்படுத்தும் ஊடகமாக உள்ளது. இதன் மூலம் அரசு தனியார் சொத்துடைமையைப் பாதுகாக்கும் உறுதியை அளிக்கிறது; சிறுபான்மை சொத் துடைமை சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள் , ஒட்டுமொத்த சமூகத்தின் உற்பத்தியும் இருப் பதை அரசு உறுதி செய்கிறது. அரசு அதி காரத்தின் மூலம் பலப்பிரயோகம் செய்வது நீண்ட காலப் போக்கில் பலன் தராது என்ப தால், அசமத்துவ சமூக அமைப்பை தொடர்ந்து நிலை நிறுத்த ,சமூக அங்கீகாரம் பெற்ற பல ஆயுதங்கள் இணக்கமான முறை யில் பயன்படுத்தப்படுகின்றன; இவற்றில் மதம், கலாச்சாரம், இலக்கியம் போன்ற பல ஆயுதங்கள் அடங்கும்.
சமூக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியுடன் கூடவே, வரலாற்று ரீதியாக, வர்க்கங்கள் கொண்ட சமூக அமைப்புகள் உருவாவது தவிர்க்க முடியாது, என்பதை எடுத்துக் காட்டியதோடு, கார்ல் மார்க்ஸ் தன் பணியை நிறுத்திக் கொண்டிருப்பாரேயானால் , அவ ருடைய பணிகளும் எழுத்துக்களும், வர்க்கச் சுரண்டலையும், வர்க்க ஆட்சியையும் நியாயப் படுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் மார்க்ஸ் தன் பணிகளை அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அவருடைய சிறந்த பங்களிப்பு மனித குல வரலாற்றில் வர்க்கச் சமூகங்கள் என்பவை இயற்கையான வையும் அல்ல; நிரந்தரமானவையும் அல்ல என்பதைத் துல்லியமாக நிரூபித்ததுதான். ஒவ்வொரு கால கட்டத்திலும் நிலவும் வர்க்க சமூகம் தன்னுடைய அழிவின் காரணத்திற் கான வித்துக்களை தன்னுள்ளேயே கொண் டுள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். ஒவ்வொரு சமூகமும் அதை விட மேம்பட்ட வளர்ச்சியைக் கொண்ட புதிய சமூகத்தால் வெற்றி கொள்ளப்படுகிறது என்பதையும் கூறினார் .இத்தகைய மாற்றங்களின் இயக்கப் போக்குகள் வர்க்கப் போராட்டங்கள் மூல மாகவே நடந்தேறுகின்றன என்பதையும் அவர் நிறுவினார். எனவே மார்க்ஸின் தன் னிகரில்லாத பங்களிப்பு என்பது வரலாற்றை இயக்கும் காரணியாக இருக்கும் முக்கியமான வர்க்கத்தை மிகச் சரியாக அடையாளம் கண்டதுதான். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட வர்க்கமே, நடப்பில் செல் வாக்கில் உள்ள வர்க்க சமூகத்தை தூக்கி எறிந்து விட்டு, பதிலுக்கு ஒரு புதிய சமூகத்தை நிறுவும். இவ்வாறு மார்க்ஸ் முந்தைய சமூக அமைப்பிலிருந்து மனித சமூகம் முதலாளித் துவத்துக்கு மாறியதில் பூர்ஷ்வாக்கள் ஆற்றிய பங்கினை அடையாளம் காட்டினார்; இந்த முக்கியமான கோட்பாட்டுப் பாய்ச்சலை, மறக்க முடியாத வரிகளில், கம்யூனிஸ்டு அறிக் கையில் அமரத்துவம் வாய்ந்த வகையில் அவர் பதிவு செய்துள்ளார். பதினேழாம் நூற்றாண்டு முதல் முதலாளித்துவம் எழுச்சி பெற்றது, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் மத்தியில் அது உலகை வென்றெடுத்தது, இருந்த போதிலும் முதலாளித்துவ அமைப்பு ஒரு நிரந்தரமான அமைப்பாக நிலைத்திருக்கும் என்பதற்கு இவையெல்லாம், எந்த வகையிலும் சான்றுகள் ஆகாது என்று ஆணித்தரமாக அவர் முன் வைத்த வாதம் தான்மிக மிக முக்கியமான விஷயம் ஆகும். அவர் மேலும்- முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் உழைக்கும் வர்க்கம் ஸ்தாபன ரீதியாக திரட்டப்பட்ட சக்தியாக உருவாகும்; இவ்வர்க்கந்தான் மனித குலத்தை அடுத்த கட்ட மேம்பட்ட சமூக அமைப்புக்கு எடுத்துச் செல்லக்கூடிய உள்ளுறை திறன் கொண்ட வர்க்கமாக இருக்கும்; உழைக்கும் வர்க்கம் அப்பாதையில் சோஷலிச சமூகத்தை முதல் கட்டமாக நிறுவும்; இறுதியாக, ஏராளமான பொருட்செல்வங்கள் நிறைந்த, ஒத்திசைவான சமூக உறவுகள் கொண்ட சமூகத்துக்கு இட்டுச் செல்லும். அக்கடைசி கட்ட சமூகமே பொதுவுடைமைச் சமூகம் என்ற வாதத்தை நிறுவினார்.
நிகழ் காலத்தில் முதலாளித்துவம் எதிர் கொள்ளும் நெருக்கடிகள், மார்க்ஸின் தேவை யையும், அவர் கூறிய கோட்பாடுகள் இன்றைக் கும் பொருத்தமுடையதாக இருப்பதையும் உறுதி செய்கின்றன. முதலாளித்துவத்தின் இயக்க விதிகள் குறித்து சில முக்கியமான கருத்துக்களை மார்க்ஸ் பதிவு செய்துள்ளார். முதலாளித்துவப் போட்டிகளின் வளர்ச்சிப் போக்கில் முதல் மையப்படுத்தப்படுவதும், ஓரிடத்தில் சென்று குவிவதும் தவிர்க்க முடியாதவை என்று சுட்டிக்காட்டினார். இப்போக்குகள் ஏகபோகங்கள் வளர்ந்து பெருகுவதற்கே வழி வகுக்கும். முதலாளித் துவ அமைப்பில் முதலாளிகளிடையே போட்டிகள் ஏற்படுகின்றன; தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளிகளுக்கும் இடையே வர்க்கப் போரட்டங்களும் நடக்கின்றன. இவை சமூகத்தில் ஒரு நிரந்தரமான தொழி லாளர் பட்டாளத்தை உருவாக்கியும் புதுப் பித்தும் செய்து கொண்டே இருக்கின்றன. இப்பட்டாளம் தொடர்ந்து அளவில் பெரி தாகிக் கொண்டே இருக்கும். இப்பட்டாளத் தின் தொழிலாளர்கள் அவ்வப்போது வேலை வாய்ப்புகளை பெறுவதும் இழப்பதுமாக இருக்கின்றனர். அதே சமயத்தில் அதிக எண் ணிக்கையில் நிரந்தரமாக வேலையற்ற தொழி லாளர்கள் இப்பட்டாளத்தில் இருப்பர். இது ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இருக்கும். முதலாளித்துவ அமைப்பில் ஏற்படும் முதலின் சேர்க்கைப் போக்குகள் செல்வங்களையும் வருமானங்களையும் ஒரு சிலர் கையிலேயே சென்று சேர்க்கும் நிலையை உருவாக்குகிறது; இதனால் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கின்றன. மார்க்ஸின் மிகச் சிறந்த கணிப்பு முதலின் சேர்க்கைப்போக்குகளின் பொதுவான விதி பற்றியதாகும். செல்வம் ஒரு துருவத்தில் குவியும் போது மற்றொரு துருவத்தில் அவலங் களும் துயர்களும் குவிகின்றன என்பதை துல்லியமாக எடுத்துக் கூறினார். இதன் முக்கிய விளைவு முதலாளித்துவத்தில் கிராக் கிகள் உருவாக்கும் பிரச்சனைகளே. முத லாளித்துவ உற்பத்திமுறை உற்பத்திச் சக்தி களை அதிவேகமாக வளர்ச்சி பெறச் செய் கிறது. ஆனால் அதே சமயம் அந்த அமைப்பு லாப வேட்கையால் உந்தப்பட்டு செயல்படும் அமைப்பாக இருப்பதால் சமூகத்தின் நுகர்வுச் சக்தியின் வளர்ச்சிக்கு, அதாவது, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நுகர்வுச் சக்தியின் வளர்ச்சிக்கு, தடைகளை உருவாக்குகின்றது. இதனால் அந்த அமைப்பு கிராக்கிகள் உருவாக்கும் வரம்புகளுக்கு உட் பட்டு செயல்படும் அமைப்பாகவே உள்ளது. மேலும் முதலாளித்துவ அமைப்பு திட்ட மிட்டு செயல்படுத்தப்படும் அமைப்பாக இருப்பதில்லை; அதனால் ஒரு சில துறை களில் அதீத உற்பத்திகளும் மற்ற சிலவற்றில் போதுமான உற்பத்தியின்மையும் நிலவு கின்றன. இத்தகைய சமச் சீரற்றத் தன்மைகளே முதலாளித்துவ அமைப்பின் பொதுவான நெருக்கடிகளுக்கு காரணங்களாகும். மேலும் முதலாளிகளுக்கிடையே ஏற்படும் போட்டி களை சமாளிக்கவும், தொழிலாளர்களின் கூட்டுபேர சக்தியை முறியடிக்கவும் உற்பத்தி முறைகள் மேலும் மேலும் இயந்திரமயம் ஆக்கப்படுகின்றன; நேரடி மனித உழைப்பின் பங்கு மேலும் மேலும் குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் உண்மையில் இந்நேரடி மனித உழைப்புதான் முதலாளியின் லாபத் துக்கும் உபரி மதிப்புக்கும் ஆதாரமாக இருப் பவை. இவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்ச மாக பொருளாதாரத்தில் லாப விகிதம் குறையும் போக்குகளை உருவாக்குகின்றன. இவை அனைத்தையும் ஒரு சேரப் பார்க்கும் போது முதலாளித்துவத்தில் அதி வேக வளர்ச்சிக் கால கட்டங்கள் இருப்பதைப் போன்றே , பொருளாதாரம்,நிலைகுலைந்து விழும், வளர்ச்சியற்ற மந்தமான கால கட்டங்களும் அவ்வப்போது உருவாகும் என்பதைக் காண முடிகின்றது. இவை பெரும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், சந்தைச் சரிவுகளையும் ஏற்படுத்துகின்றன. கார்ல் மார்க்ஸின் பெரும் படைப்பான தாஸ் காபிடல் எழுதப்பட்டதிலிருந்து, முதலாளித் துவத்தின் வரலாற்றைப் பார்த்தால் முத லாளித்துவம் நெருக்கடிக்கு ஆளாகும் அமைப்பு என்று கூறி, அது குறித்து அவர் செய்த பகுப்பாய்வுகள் மிகச் சரியே என்பது புலனாகும். தற்காலச் சூழ்நிலையே இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். இருபது ஆண்டு களுக்கு முன் காணப்பட்ட நிலைமைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளை இப் போது நாம் காண்கிறோம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு-புத்தாயிரம் ஆண்டு வருவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு-சுரண்டல்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்ட, தனியார் லாப வேட்கை என்னும் உந்து சக்தியை அடிப்படையாகக் கொண்டிராத ஒரு சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் கைவிட்டுப் போன போராட்டமாகவே தோற்றமளித்தது. உலக அளவில் அமெரிக்க நாட்டின் ஆதிக்கம் ஒற்றைத் துருவ ஆதிக்க மாக உருவெடுத்திருந்தது; பலம் மிகுந்த சோவியத் யூனியன் சிதறுண்டது: சோஷ லிசத்தை அடிப்படையாகக் கொண்ட சமூ கத்தை உருவாக்க முனைந்திருந்த சோவியத் நாட்டிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், முதலாளித்துவ அமைப்புச் சமூகங்கள் மீண்டும் நிறுவப்பட்டன. உலகளாவிய முத லாளித்துவ ஆதரவாளர்கள்வரலாற்றின் முடிவை ஆரவாரத்துடன் அறிவித்தனர். ஆனால், முதலாளித்துவம் மக்கள் இதயத் தையும் மனதையும் ஒரு சேர வென்று விட்டது என்றும், வரலாறு என்பது தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டது என்றும் நினைத்து மகிழ்ந்தவர்களுக்கு,துரதிர்ஷ்டவசமாக, இன்றைய உலகம் மாறுபட்ட தோற்றத்தை அளிக்கிறது. 2007 ம் ஆண்டின் கடைசி கால் பகுதியில் அமெரிக்க நாடு மந்த நிலையை எட்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டதிலிருந்து வளர்ச்சியடைந்த முதலாளித் துவ நாடுகளில் ஒரு நீண்ட கால பொருளா தார வீழ்ச்சி தொடர்கிறது . (லேஹ்மான் பிரதர்ஸ் திவாலாவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே இந்நிலை இருந்து வந்தது- ஆனால் இதை தவறான பொருளில் உலக நிதி நெருக்கடி என்றழைத்தனர்) உண்மையில் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் ஒருமித்த கருத்து இந்நாடுகள் இரட்டைத்தொய்வு மந்த நிலையை அடைவதை தவிர்க்க முடியாது என்பதுதான். இதன் பொருள் முதல் நெருக் கடியிலிருந்து மீண்டு வருவதற்குள் பொரு ளாதரத்தில் மீண்டும் உற்பத்திச் சரிவு ஏற் படும் என்பதுதான். மார்க்ஸ், முதலாளித்துவம் குறித்து செய்த பகுப்பாய்வுகள் மற்றும் அவருடைய வரலாற்றுப் பொருள்முதல் வாதக் கண்ணோட்டம் ஆகியவை காலாவதி யாகிப் போன கருத்துக்கள் அல்ல; அவை இன்றைய சூழ்நிலைமைகளுக்கும் பொருத்த மானவையே ; ஏற்றுக்கொள்ளப்படவேண்டி யவையே என்பதை முதலாளித்துவ அமைப் பில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கிளம்பும் இத்தகைய நெருக்கடிகளே உறுதிப்படுத்து கின்றன. உண்மையில் தற்போது சுற்றுச்சூழல் குறித்து எழுப்பப்படும் கவலைகளையும் உள் ளடக்கிய அளவில் சமூகம் குறித்து மார்க் ஸின் எதிர்பார்ப்புகள் இருந்தன என்பதை நாம் காணலாம். இவற்றை மார்க்ஸ் தாஸ் காபிடல் நூலின் முதல் தொகுதியில் அற்புத மாக பதிவு செய்துள்ளார்; முதலாளித்துவம் விவசாயத்தின் வளர்ச்சியை , அதன் அடிப் படைச் செலவங்களான மண் வளத்தையும், மனித உழைப்பையும் உறிஞ்சிக் குடித்து சக்கையாக்கி விடுவதன் மூலமே சாதிக்கின்றது என்பதை துல்லியமாக அவர் குறிப்பிட்டுள் ளார்.
கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்கள், முதலாளித்துவ அமைப்பின் தனிப்பண்பாகிய அந்நியமாதல், பால் சமத்துவப் பிரச்சனை கள், காலனி ஆதிக்க சூறையாடல்கள், மேலை நாடுகளில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கத்தின் பங்கு ஆகியவை குறித்து அவர் செய்துள்ள ஆய்வுப்பதிவுகள் அனைத்தும் இன்றைய கால கட்டத்துக்கும் பொருத்தமான, இசைவான கருத்துக்க ளாகவே உள்ளன. ஏகாதிபத்தியங்கள், உலக மயமாக்கல் மூலமாக வளர்ந்து வரும் நாடு களை அடிமைப்படுத்த முயற்சிக்கின்றன; இப்பாதையில் நாம் வாழும் உலகத்தின் சுற்றுச்சூழலுக்கு மீட்டெடுக்கமுடியாத அள வுக்கு சேதத்தை உருவாக்குகின்றன. இந் நிலையில் மார்க்ஸின் பொருத்தப்பாடு இன்று பல மடங்கு அதிகமாக உணரப்படுகின்றது; வரலாற்றையும் வரலாற்று நிகழ்வுகளையும் ஆண்டுக் கணக்கிலோ, பத்தாண்டுகளின் கணக்கிலோ, நூற்றாண்டுகளின் கணக்கிலோ அளவிட முடியாது; அளவிடவும் கூடாது. ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே, பூவுலகம் முழுவதும் பரவி விரி வடைந்து இன்றைய ஆதிக்க நிலையை எட்டிப் பிடிக்க பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. இடைவிடாது லாபத்தை விடாப் பிடியாக துரத்தும் இயல்பு கொண்ட முத லாளித்துவ உற்பத்தி சமூக அமைப்பு முறை , வரலாற்றில் இதற்கு முந்தைய அமைப்புகள் போல் அல்லாமல், விரிவாகிக் கொண்டே செல்லும் தன்மையை சுய இயல்பாகக் கொண்ட அமைப்பாக இருந்த போதிலும் இந் நிலையை எட்டிப் பிடிக்க இவ்வளவு காலம் ஆகிவிட்டது. வர்க்க சுரண்டலற்ற சுய உணர் வுடன் கூடிய ஒழுங்கமைப்பு கொண்ட சமூ கத்தை நிறுவ மனிதன் எடுத்த முதல் முயற்சி கள் தொடர்ந்து நிலைத்திருக்க முடியவில்லை; மனிதன் கண்ட எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற இம்முயற்சிகளால் சாத்தியமாக வில்லை என்றாலும் அவைகள் தோல்விகள் அல்ல. ஏனெனில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எடுக்கப்பட்ட இம் முயற்சிகள் அனைத்தும் சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலப்பகுதிகளில் எடுக் கப்பட்டன. இந் நிலப்பகுதிகள் வன்மத்துடன் கூடிய எதிர்ப்பு உணர்வு கொண்ட ஏகாதி பத்தியங்களால் சூழப்பட்டிருந்தன. இந்த ஏகாதிபத்தியங்கள் சோஷலிச சமூகம் நிறுவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நாடுகளை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தன. இந்நாடுகளுடன் போர் புரிதல், ஆயுதப் போட்டியைத் தூண்டி விடுதல், தொழில் நுட்பங்கள், சந்தைகள், வளர்ச்சிக்கான சாதனங்கள் அனைத்தையும் பெற முடியாத வகையில் வழிமுறைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அந்நாடுகளின் கழுத்தை நெறித்து அழிக்கும் முயற்சிகளில் ஏகாதிபத்தியங்கள் ஈடுபட்டன. உலகின் எந்தப் பகுதியிலும் முழுமையான சோஷலிச சமூகத்தை இன்னும் நாம் காண வில்லை; எனவே பொதுவுடைமை சமூகம் குறித்த பேச்சே தற்போதைக்கு எழவில்லை. நாம் இதுவரை கண்டதும், தற்போது காண்பதும், சுமூகமற்ற உலக சூழலின் நடுவே சோஷலிசத்தை கட்டமைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளைத்தான். இவை கடந்த கால வரலாற்றிலிருந்து பெறப்பட்ட படிப்பினை களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை; மார்க்சும் லெனினும் வழங்கிய பகுப்பாய்வுக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எடுக்கப் பட்டவை; ஸ்தூலமான வரலாற்று அனுப வங்கள் தந்த கோட்பாட்டு பாடங்கள், நடை முறை அனுபவப்பாடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பலரால் செம்மைப்படுத்தப் பட்ட கண்ணோட்டங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை.
நம் முன்னால் உள்ள போராட்டம் மிக நீண்ட போராட்டம் ஆகும்;மிகக் கடுமை யான போராட்டமாகும் ஆனால் முடிவில் இம்முயற்சிகளுக்கு கிடைக்கும் பரிசோ ஒட்டு மொத்த மனித குலத்தின் விடுதலை ஆகும். எனவே அக்குறிக்கோளுக்காக அடுத்தடுத்த தலைமுறைகள் எடுத்த முயற்சிகள் வீணா னவை அல்ல;மிக மிக தேவையானதும் கூட. இம்முயற்சியில் நம் பங்கை அளிப்பதே, மார்க்சுக்கு செய்யப்படும் சிறந்த அஞ்சலி ஆகும். மார்க்சின் மாண்புக்கு ஏற்றதும் அதுவேயாகும்.
தமிழில் : அபராஜிதன்
Leave a Reply