மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


“லண்டன் கிராடு”


போதுமான லாபம் கிடைத்தால் மூலதனம் துணிவு பெறுகிறது. 20 சதம் லாபம் எனில் எங்கு வேண்டுமானாலும் அது முதலீடு செய்யப்படுவது உறுதி. 50 சதம் லாபம் எனில் அது திமிராக நடக்கும். 100 சதம் லாபம் எனில் மனித நியதிகளை துவம்சம் செய்யத் தயாராகும். 300 சதம் லாபம் எனில் குற்ற உணர்வின்றி, எந்த குற்றமும் செய்யும். அதன் உடைமையாளர் தூக்கிலிடப்படும் அபாயம் இருப்பினும், எந்த விஷப்பரீட்சையிலும் இறங்கும். லாபம் கிடைக்குமெனில் குழப்பம், சண்டை இரண்டையும் ஊக்குவிக்கும்….”
(கார்ல் மார்க்ஸ் – “மூலதனம்” நூலில் உள்ள அடிக்குறிப்பு)
தொண்ணூறுகளுக்குப் பிறகு, முதலாளித்துவத்தை யாராலும் அழிக்க முடியாது என்றும், சோஷலிசம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்றும் முதலாளித்துவ அமைப் பின்ஆதரவாளர்கள் கொக்கரித்தார்கள். ஆனால், இன்று முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்து, மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியிருப்பதைக் காணமுடிகிறது. முன்னாள் சோஷலிச நாடுகள் மட்டுமின்றி, முதலாளித் துவத்தின் தொட்டில் என அழைக்கப்படும் நாடுகளின் நிலை 2008 உலகப்  பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை தினமும் உலகின் பல பாகங்களிலும் நடந்து வருகின்ற போராட்டங்கள் மூலம் புரிந்துகொள்ள முடியும். உலக நாடுகளில் பலவற்றிலும், அதிபர்களுக்கு தங்கள் பதவியை தக்கவைத்துக்கொள்வதே பெரும்பாடாக உள்ளது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரஷ்யாவில் சக்தியான எதிர்ப்பு இல்லை. விளாதிமிர் புடின் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் ரீதியாக எந்த நபர் / கட்சியிட மிருந்து எதிர்ப்பு வருகிறதோ, அந்த நபர்களும், அக்கட்சிகளும் ஒடுக்கப்பட்டுள்ளன என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். தேர்தல் விதிமுறைகள் நிறைய மாற்றப் பட்டுள்ளன. யதார்த்தமாகப் பார்த்தால், “ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும்”, கூட்டணி அமைப்பான “த அதர் ரஷ்யா”வும் (முன்னாள் செஸ் வீரர் காரிகாஸ்பரோவ் அதன் தலைவர்களில் ஒருவர்)தான் புடினுக்கு சவால் அளிக்கும் கட்சிகளாகும். இந்த கட்சிகள் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து இயக்கங்கள் நடத்திய பொழுதெல்லாம் புடின் அரசு அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளது. காரிகாஸ்பரோவ், பாதுகாவலர்களின்றி வெளியே நடமாட முடிவதில்லை. போலீஸ் ரெய்டு என்ற பெயரில் ஏராளமான கெடுபிடிகள். மொத்தத்தில் மக்கள் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.
2006ல் உலக வங்கி, அரசியல் ஸ்திரத்தன்மை குறித்த 208 நாடுகளின் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில் ரஷ்யா 151வது இடத்தில் உள்ளது. இருப்பினும் விளாதிமிர் புடின் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி நிறைய சர்ச்சைகள் எழுந்துள்ளன. 4.3.2012 அன்று ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

புடின் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன என தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 1/3 வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு (–) குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 8, 2012 அன்று மாஸ்கோவில், புடினுக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் புடின் சர்வாதிகாரியாக மாறியுள்ளதை அவருடைய அரசின் கொள்கைகள் தெளிவுபடுத்துகின்றன என்கின்றனர். ஐரோப்பிய அரசியல் ஆய்வாளர்கள், பழைய சோஷலிச அமைப்பைக் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

லண்டன் கிராடு
மேலே கொடுக்கப்பட்டுள்ள பின்னணியில், சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் ரஷ்யாவில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கியுள்ள நூலான `லண்டன் கிராட்’-ஐ படிப்பது உதவியாக இருக் கும். இம் என்றால் சிறைவாசம் என்ற நிலையி லிருந்து ஜார்மன்னனின் கொடுங்கோல் ஆட்சி யிலிருந்து மக்களை விடுவித்து, சோஷலிசப் பாதை சாத்தியமே என உலகிற்கு பறைசாற்றி யது சோவியத் யூனியன் திட்டமிட்ட பொருளா தாரம் என்றால் என்ன என்பதையும், அதனால் ஏற்படும் வளர்ச்சி எவ்வாறு இருக்குமென்பதை யும் உலகிற்கு எடுத்துக்காட்டியது சோவியத் யூனியன். அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து, எந்த நாட்டிட மிருந்தும் நிதி உதவி பெறாமல், அரிய பல சாதனைகளை புரிந்தது சோவியத் யூனியன். கம்யூனிச எதிர்ப்பாளர்களைக்கூட, அந்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான நாடு என்று பேச வைத்து. அறிவியல், வான்வெளி ஆராய்ச்சி, விளையாட்டுத்துறை, கலைகள்…. என அனைத்துத் துறைகளிலும் பிரமிக்கத்தக்க சாதனைகளை புரிந்த நாடு சோவியத் யூனியன். சோஷலிசத்தை வளரவிடக்கூடாது என்று வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் இரண்டாம் உலகப் போரின் பொழுது, கூட்டாக தாக்குதல் நடத்தியும், ஏராளமான பொருட்சேதம், மக்கள் சேதத்தையும் மீறி, வளர்ந்த நாடு சோவியத் யூனியன்.
என்ன ஆயிற்று சோவியத் யூனியனுக்கு?
மிகைல் கோர்பசேவ், பெரஸ்த்ரோய்கா, க்ளாஸ்நாஸ்ட் என்ற பெயரில் அடிப்படைக் கட்டமைப்பில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் சிதறுண்டது. 1991 முதல் 2010 வரை ரஷ்யாவில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கும் நூல் `லண்டன் கிராடு’ இந்நூலை எழுதியவர்கள் மார்க் ஹாலிங்ஸ்வொர்த் மற்றும் ஸ்டூவர்ட் லான்ஸ்லீ ஆவர். ஏராள மான புள்ளி விபரங்கள், தகவல்கள் சேகரிக்கப் பட்டு, மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள் ளது. ரஷ்ய தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், அரசியல் அதிகாரம் பெற்றவர்கள், வக்கீல்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கப்பல், கார் மற்றும் கலைப்பொருட்கள் விற்கும் புரோக்கர் கள்…. என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களி டம் பேட்டிகள் நடத்தி, தகவல்கள் சேகரிக்கப்பட் டுள்ளன. மாஸ்கோ, லண்டனைச் சேர்ந்த பத்திரி கையாளர்கள் கே.ஜி.பி. மற்றும் லண்டனில் உள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகள், நிபுணர் களிடம் தொடர்பு கொண்டு, ரகசியமாகவும் பகிரங்கமாகவும் பெற்ற தகவல்களை நூலாசிரி யர்கள் இருவரும் நேர்த்தியாக தொகுத்துள் ளனர்.
லண்டன் கிரேடு என்ற இந்த நூல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின்னர், ரஷ்யாவின் இயற்கை வளங்களைச் சுரண்டி கொழுத்த புதுப் பணக்காரர்கள் சொத்துக்களை லண்டனுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்று அதிகாரம் படைத்தவர்களாக மாறினார்கள் என்பதை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துகிறது. போரிஸ் எல்ட்சின், விளாடிமிர் புடின், மெட்வடெவ் ஆகியோர் செயல்பட்டவிதம், சோஷலிசம் மீண்டும் தழைக்காமல் இருக்க, அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள், தங்கள் புலனாய்வுத் துறையை பயன்படுத்திய விதம் விவரிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டு அத்தி யாயங்களைக் கொண்ட இந்த நூல், ஸ்டீபன கர்டிஸ் என்ற லண்டனைச் சேர்ந்த வக்கீலின் மரணத்துடன் துவங்குகிறது. ரோமன் அப்ர மோவிச், மிகைல் கொதொர்கோவ்ஸ்கி, போரிஸ் பெரெசோவ்ஸ்கி, பட்ரி படர்கட்ஷிஷ்விலி ஒலேக் டெரிபஸ்கா ஆகிய செல்வாக்கு மிகுந்த புதிய செல்வந்தர்கள் (டீடi ழுயசஉhள) சட்டங்களை வளைத்தும், உடைத்தும், தனியார்மயம் என்ற பெயரில் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாக சுரண் டியதன் விளைவாக, இன்றைய ரஷ்யாவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதையும் இந் நூல் தெளிவாக விளக்குகிறது.
2000த்திற்கு  முன்பு இங்கிலாந்தில் பெரும் எண்ணிக்கையில் ரஷ்யர்களை காணமுடியாது. 1991ம் ஆண்டிற்குப் பின் கொஞ்சம், கொஞ்சமாக, ரஷ்யாவின் புதிய செல்வந்தர்கள் லண்டனில் செட்டிலாகத் துவங்கினர். 2008ம் ஆண்டு புள்ளி விவரப்படி, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்தவர்கள் லண்டனில் வசிக்கத் துவங்கிவிட்டனர். ரஷ்ய மொழி செய்தித்தாள்கள் (நியூ ஸ்டைல் என்ற பளபளப்பான ரஷ்ய பத்திரிகை உட்பட), ரஷ்ய கிளப்புகள், ரஷ்யர்களின் இணையதளங்கள், ரஷ்யர்களின் சமூக, கலாச்சார நிகழ்வுகள்… ஆகியவை லண்டனில் ரஷ்யர்கள் அதிகம் இருப்பதை உணர்த்தின.இவர்களில் பலரும் ரஷ்ய நிறுவனங்கள், லண்டனிலுள்ள சர்வதேச நிறுவனங்கள் அலுவலகங்களில் பணிபுரிபவர் கள், வேறு சிலர், அரசியல், பொருளாதார நிகழ்வுகளாலும், சட்டவிரோத நடவடிக்கை களில் ஈடுபட்டு, ரஷ்யாவிலிருந்து தப்பித்து, லண்டனில் அடைக்கலம் புகுந்தவர்கள், ஏற்று மதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டோர், பன் னாட்டு வங்கி அதிகாரிகள், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் போன்றோர், வாரம் முழுவதும் மாஸ்கோவில் இருப்பார்கள். இவர்கள் குடும்பங் கள் லண்டனில் இருக்கும். வெள்ளிக்கிழமை மாலை மாஸ்கோவிலிருந்து கிளம்பி, மீண்டும் திங்கள் காலை வந்து சேருபவர்கள். (மாஸ்கோ – லண்டன் 4 மணி நேர பயணம்) இவர்களை “ஞாயிற்றுக் கிழமை கணவர்கள்” (ஏடிளமசநரேல அரணா) என அழைப்பது உண்டு. இப்படி நிறைய ரஷ்யர்கள் லண்டனில் வசிப்பதால் “தேம்ஸில் உள்ள மாஸ்கோ” என இவர்கள் வசிக்கும் பகுதிகளை அழைப்பதுண்டு.
தொண்ணூறுகளின் இறுதியில்:
ரஷ்யாவின் செல்வங்களை கொள்ளை யடித்து, வெளிநாடுகளில் தளங்களை உருவாக்கி, மலை, மலையாக குவித்த செல்வத்தை இடமாற் றம் செய்து கற்பனைக்கெட்டாத அளவு ஆடம் பர வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் அப்ர மோவிச், பெரேசோவ்ஸ்கி, கொதொர் கோவ்ஸ்கி போன்ற புதிய செல்வந்தர்கள் இஸ்ரேல், நியூயார்க், ஸ்விட்சர்லாந்து போன்ற இடங்களை சிலர் தேர்ந்தெடுத்தாலும் லண்டன் தான் இவர்களின் விருப்பமான நகரமாக இருந்தது. லண்டனில் 1920ம் ஆண்டிற்குப் பின் 2000ல், ஆடம்பரப் பொருட்களின் சில்லறை சந்தை விரிவடைந்தது.  லண்டனில் வரிச் சட்டங் கள், சொந்த விமானம், கப்பல், பிரத்யேக கல்வி நிறுவனங்கள், சுதந்திரமான நீதி அமைப்பு ஆகியவை லண்டனை தேர்ந்தெடுக்க சில முக்கிய காரணங்களாகும். ரஷ்யாவில் கைது செய்யப் படும் அபாயம் இருந்ததால், இந்த புதிய பணக் காரர்கள் “சர்வதேச நாடோடிகளாக” மாறி னார்கள். அன்னிய மூலதனத்தை ஒழுங்குபடுத் தும் சட்டம், தாராளமயம், வரி ஏய்ப்புக்கான சாதகமான சூழல் லண்டனில் நிலவியது. 9/11 சம்பவத்திற்கு பின்னர், வால் ஸ்ட்ரீட்டின் பல நிதி ஊழல்களின் காரணமாக அமெரிக்கா புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. சர்பேன்ஸ்-ஆக்ஸ்லி சட்டம் (ளுயசயெநேள – டீஒடநல ஹஉவ) நியூயார்க் பங்குச் சந்தையில் பதிவு செய்து கொள்ள/தகவல்கள் வெளியிட/கணக்குகள் பராமரிப்பு தொடர்பாக சில கடுமையான ஷரத்துக்களை கொண்டுவந்தது லண்டன். அதனால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டது. சட்ட பூர்வ வரி விலக்கு பிரதான காரணி என நூலா சிரியர்கள் ஆதாரபூர்வமாக விளக்குகின்றனர். “ரஷ்யாவில் சம்பாதித்த பணத்தை லண்ட னுக்கு எந்தப் பிரச்சனையுமின்றி கொண்டு வரமுடியும். புதிய பணக்காரர்கள் லண் டனை விரும்ப இதுவே முக்கிய காரணம்” என்கிறார், நடாஷா சௌவேவா என்ற ரஷ்ய பத்திரிகையாளர். 2008ல் உலகப் பொரு ளாதார நெருக்கடி வெடிக்கும். முன்பு, பல டிரில்லியன் பவுண்டுகள் லண்டனுக்குள் அன்னிய மூலதனமாக வந்து, லண்டனை உலக நிதிமூலதனத் தலைநகராக மாற்றியிருந்தது. ஆனால், 2008க்குப் பின்னர் இதில் சில பிரச் சனைகள் ஏற்பட்டன.
லண்டனில் ஏற்பட்ட பாதிப்புகள்
லண்டனுக்கு வரும் புதிய ரஷ்ய பணக்காரர் கள் தொடர்பு கொள்வது ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளை எனில் மிகையாகாது.  கடனெல் லாம் கிடையாது. அப்படியே பணத்தைக் கொடுத்து பிரம்மாண்டமான மாளிகைகளை அவர்கள் விலைக்கு வாங்கினர்.
* 2006 – லண்டன் நகர ரியல் எஸ்டேட் புள்ளி விபரப்படி, அந்த ஆண்டு விற்கப்பட்ட மாளிகை களில் ( 8 மில்லியன் பவுண்டுக்கும் அதிகம் ஒரு மாளிகை) 20 சதம் ரஷ்யர்களுக்கு விற்கப்பட் டுள்ளது. ரஷ்ய கோடீஸ்வரர்கள் தேர்வு செய்த பகுதி, தெரு (செயின்ட் ஜார்ஜ் ஹில், வென்ட் வொர்த் பார்க்…)சாதாரண மக்கள் நெருங்க இயலாத இடங்களாகும்.
* 2008ல் பிரபல / செல்வந்தர்கள் படிக்கும் பள்ளிகள் / பல்கலைக் கழகங்களில் ரஷ்யர்கள் எண்ணிக்கை அதிகரித்ததில் ஆச்சரியமில்லை. ஓராண்டு பள்ளிக் கட்டணம் 30 ஆயிரம் பவுண்டு கள். (1 பவுண்டு = 75 – 80 ரூபாய்). ஒரு ரஷ்ய கோடீஸ்வரரின் மகள் நுழைவுத் தேர்வில் தோற்ற பொழுது, அவர் அந்த பள்ளிக்குத் தேவையான, ஜிம், வகுப்பறைகள், நீச்சல் குளங்கள் என எதுவேண்டுமானாலும் கட்டித்தருகிறேன் என்று கூறியும், அதன் தலைமையாசிரியை மறுத்து விட்டார். வேறொரு கோடீஸ்வரர் தனது மகளை பார்க்க பள்ளிக்கு வருகையில் தனது ஹெலிகாப் டரை நிறுத்த பள்ளி கிரிக்கெட் மைதானம் வேண்டுமென அனுமதி கேட்டுள்ளார். “பிரிட் டிஷ் கல்விக்கு ரஷ்யாவில் மவுசு அதிகம்” என் கிறார் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்சில் உள்ள ரஷ்யன் சொசைட்டியின் தலைவர் போரிஸ் யரிஷ் வெஸ்கி. அன்று லெனின், இன்று கோடீஸ்வரர்கள்:
ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர் களுக்கு அடைக்கலம் தந்த நாடு பிரிட்டன் என் பதை ரஷ்யர்கள் மறுக்க மாட்டார்கள். 1907ல் லெனின் லண்டனிலிருந்தபோது, “பிரபல புரட்சி யாளர் லெனின் லண்டனில்… ரஷ்யா திரும்பி னால் கைது செய்யப்படுவார்” என செய்திகள் வெளியாகின. 1902 – 1911 வரை லெனின் 6 தடவை லண்டன் சென்று வந்துள்ளார். லண்டனில் உள்ள பிரபல “செவன் சிஸ்டர்ஸ் சர்ச்”சில் பிரிட்டிஷ் தொழிலாளர்களுடன் உரையாடிய பொழுது, அவர்கள் சோஷலிசம் வேண்டு மென்கின்றனர் என்றார். 1902ல் லண்டனில் அருங்காட்சியகத்தில்தான் சைபீரியாவிலிருந்து தப்பி வந்த ட்ராட்ஸ்கியை லெனின் சந்தித்தார். 1917 புரட்சிக்குப் பின் சில பணக்கார ரஷ்யர்கள் லண்டனில் தஞ்சமடைந்தனர். 1919ல் 15ஆயிரம் ரஷ்யர்கள் லண்டனில் இருந்தனர். முதல் கட்ட மாக குடிபெயர்ந்த ரஷ்யர்களில் பல கலைஞர் கள், தத்துவவியலாளர்கள் அடங்குவர். 1917க்குப் பின் கே.ஜி.பி.யிலிருந்து வெளியேறிய உயர் அதி காரிகள் லண்டன் சென்றனர்.
1991க்குப் பின் லண்டன் சென்ற ரஷ்யர்களின் பிரதான நோக்கம் செல்வக் குவிப்பாக இருந்தது. 1991ல் பிரிட்டனின் மக்கள் தொகை கணக் கெடுப்பில், 27,011 ரஷ்யர்கள் இருந்துள்ளனர். 1991ல் மாஸ்கோவிலிருந்த பிரிட்டிஷ் தூதரகம் 100 விசாக்கள் மட்டுமே அளித்தது. ஆனால் 2006ல் 2,50,000 விசாக்கள் அளிக்கப்பட்டிருந்தன. 1991, பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற ரஷ்யர் ஒருவர் மட்டுமே. 2006ல் 1830பேர் குடியுரிமை பெற்றனர். “பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரெஞ்சு மொழி பேசிய ரஷ்யர்கள் பிரான்சுக்கு குடி பெயர்ந்தனர்.  அதற்குப் பின் ஆங்கிலம் கற்ற ரஷ்யர்கள் லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். மிகப்பெரிய குடிபெயர்தல் இது என்கிறார் பெரெசோவ்ஸ்கி.
தனியார்மயமாதலின் முதல் அலை:
போரிஸ் எல்ட்சின் பதவியேற்றப்பின்னர் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்கள் ரஷ்ய பொருளாதாரத்தை மிகவும் பாதித்தன. 1991ல் கோர்பசேவ் பதவி விலகிய பின்னர் ரஷ்ய பொருளாதார சிக்கல்களை கூர்ந்து கவனித்து வந்த அதன் முன்னாள் எதிரி அமெரிக்கா ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளை அனுப்பி, கிரெம்ளினுக்கு நெருக்கமான ரஷ்ய பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த வைத்தது. கட்டுப்பாடற்ற சந்தைப் பொரு ளாதாரத்தை பின்பற்றவும், குறிப்பாக, அரசு கட்டுப்பாட்டிலிருந்த வளங்களை தனியார் மயமாக்கவும், “மார்க்சியத்தைப் பின்னுக்குத் தள்ளும்” கொள்கையை விரைவாக அமல்படுத் தும் ஏற்பாடுகளைச் செய்தது. முழு வீச்சுடன் சந்தைப் பொருளாதார கொள்கைகள் அமலுக்கு வந்தன. 1992ல் முதல் கட்ட தனியார் மயம் துவங்கியது. “ரசீது திட்டம்” (ஏடிரஉhநச ளுஉhநஅந) என்ற திட்டத்தின் மூலம், ரஷ்ய குடிமக்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்த சொத்துக்களுக்கு கூட்டாக, உரிமையாளர்களாக ஆகலாமென யெல்ட்சின், ரஷ்ய மக்களை ஏமாற்றினார். பணத்தைக் கொடுத்து ரசீதுகளை வாங்கி, பின்னர் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். சில அப்பாவிகள், தாங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இதில் முதலீடு செய்து, அழிந்த விலைக்கு பின்னர் விற்க நேரிட்டது. இப்படி ரசீதுகளை வாங்கி, ஒழுங்குபடுத்தப்பட்ட ரஷ்ய பங்குச்சந்தையில் ஊக வணிகத்தில் ஈடுபட்டு கொள்ளை லாபம் ஈட்டியவர்களில் சிலர் இக் கட்டுரையின் துவக்கப் பகுதியில் குறிப்பிடப்பட் டுள்ள செல்வந்தர்கள். கோடிக்கணக்கான மக்கள் பங்குச் சந்தைகளின் செயல்பாட்டைப் பற்றி அறியாமல், மிகக் குறைந்த விலைக்கு விற்றனர். `அரசு நிறுவனங்களுக்கு நாமும் உடைமை யாளர்’ என்ற அவர்கள் கனவு பலிக்க வில்லை.
1995ம் ஆண்டின் இறுதியில் பல சிறு/நடுத்தர நிறுவனங்கள் முற்றிலும் தனியார் மயமாகி இருந்தன. “இரண்டாம் ரஷ்ய புரட்சி” என ஆட்சியாளர்கள் அறிவித்தது என்ன? அரசுக்கு சொந்தமான, மிகப் பெரிய கேந்திரமான எண் ணெய் கம்பெனிகள், தொலைத்தொடர்பு, கனிம வளங்கள் தனியார் மயமானதைத்தான் யெல்ட் சின் புரட்சி எனக் கருதினார். 1995-1997ல் இரு பதுக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார் கைகளுக்கு மாறின.
தனியார்மயமாதலால், ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகமாகியது. சாதாரண மக்கள் கடும் கோபமடைந்தனர். 2004ல் உலக வங்கி அறிக்கை, “ரஷ்ய பொருளாதாரத்தின் மிக முக்கிய இயற்கை வளங்களின் மதிப்பில் (225 பில்லியன் அமெரிக்க டாலர்கள்), 40 சதம், 30 ரஷ்யர்கள் வசம் இருந்தன. சொத்துக் குவிப்பு மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் ரஷ்யாவில் தீவிரமடைந்துள்ளது. எனக்குறிப்பிட் டுள்ளது. இந்த சொத்துக் குவிப்பால் மிகமிக சிறிய அளவே ரஷ்ய வணிகத்துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பெருமளவு சொத்து, வரி ஏய்ப்பு கணக்குகள் மூலம் வெளிநாடுகளில் முடக் கப்பட்டது. அதை கண்டுபிடிப்பதே கடினமான வேலையாக ஆயிற்று. சொத்து ஈட்டக் காரண மான இடம் ரஷ்யா. ஆனால் வரிச் சட்டங்கள் கடுமையானவை. எந்த நிமிடமும் கொல்லப்படும் அபாயமும் இருந்தது. எனவே, இந்த சட்ட விரோதமாக பணம் ஈட்டிய முதலைகள், லண் டனில் நிரந்தரமாகத் தங்க முடிவு செய்தனர். 1990ல் பிரிட்டன் குடிபெயர்வு நிபந்தனைகளை தளர்த்தியது. இதனால் விசா கிடைப்பது எளி தாகியது. 1996ல் பிரிட்டிஷ் அரசு, “முதலீடு செய்வோர் விசா” என்ற புதிய முறையை அறி முகப்படுத்தியது. இப்படி பிரிட்டனில் முதலீடு செய்வோர் 5 ஆண்டுகள் கழித்து அங்கு நிரந்தர மாகத் தங்கலாம். பின்னர் சிறிது காலம் சென்ற பின் குடியுரிமையையும் பெறலாம்.
2006ல் ஃபோர்ப்ஸ் பத்திரிகை, லண்டன் உலக கோடீஸ்வரர்களை காந்தம்போல் கவர் கிறது என்று குறிப்பிட்டது. 2004  மே மாதம் “ஃபோர்ப்ஸ் ரஷ்யா” வின் முதல் பதிப்பு வெளியாகியது. 100 செல்வந்தர்கள் பட்டியலிடப் பட்டிருந்தனர். அவர்களில் 36 பேர் டாலர் கோடீஸ்வரர்கள். 33 பேர் மாஸ்கோவைச் சேர்ந்த வர்கள். 100 செல்வந்தர்களின் சொத்து ரஷ்யா வின் மொத்த உற்பத்தியில் (ழுனுஞ) 25 சதமாகும். அமெரிக்காவில்கூட அந்நாட்டின் 277 செல் வந்தர்களின் சொத்து அந்நாட்டின் மொத்த உற் பத்தியில் 6 சதம் மட்டுமே. சொத்துக் குவிப்பு ரஷ் யாவில் தீவிரமடைந்துள்ள தையே இது எடுத்துக் காட்டுகிறது.

ரஷ்யாவின் புதுப்பணக்காரர்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதை அவர்கள் விரும்ப வில்லை (குறிப்பாக பெரெசோவ்ஸ்கி). ரஷ்யா ஃபோர்ப்ஸ் முதல் பதிப்பைத் தயாரித்த பால்க்ளெனிகோஷூக்கு அதுவே கடைசி அறிக்கையாக அமைந்தது. ரஷ்யா ஃபோர்ப்ஸ் அறிக்கை வெளியிட்ட ஆறு வாரங்களுக்குள், அவரது மாஸ்கோ அலுவலகத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நூல் எழுதி முடிக்கும் வரை (2010) யார், எப்படி அவரை கொலை செய்தார்கள் என தெரியவில்லை.
ரஷ்ய அரசின் பிரம்மாண்டமான நிறுவனங் களை அடிமாட்டு விலைக்கு வாங்கி பயன் பெற்றவர்கள்பெரெசோவ்ஸ்கியும், அப்ரமோ விச்சும் எனலாம். 1995ல் சைபீரியன் ஆயில் (ளுib நேகவ) என பிரம்மாண்ட எண்ணெய் கம்பெனியை இவர்கள் குறைந்த விலைக்கு வாங்கினர். அதே போல்  போரிஸ் யெல்ட்சினின் நெருங்கிய நண்பர் கொதர்கோவ்ஸ்கியும், ரஷ்ய வளங்களை சுரண்டி, பணக்காரர் ஆனார். 1996ல் உலக பொரு ளாதார அமைப்பு (றுநுகு) அமைப்பு தேவோசில் கூடியபோது, யெல்ட்சினின் பொருளாதார சீர்திருத்தங்களினால் செல்வந்தர்களான “ஏழு பேர் குழு” (ழுயபே டிக ளுநஎநn)  கொதர் கோவ்ஸ்கி, பொடாளின், ஸ்மோலென்ஸ்கி, பீட்டர் அவென், விளாடிமிர் குசின்ஸ்கி, மிகைல் ப்ரிட்மென், பெரெகோவ்ஸ்கி, b/ல்ட்சினை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட் பாளரைத் தோற்கடிக்கும் அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டனர். பிரிட்டனில், மார்க ரெட் தாட்சருக்கு 3 தேர்தல்களில் (1979-90), வெற்றிபெற உதவியவர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் யெல்ட்சினின் மகள் தாத்யானாவின் உதவியும் அமெரிக்கர்களுக்கு கிடைத்தது. ரஷ்ய மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்தும், யெல்ட் சின் 13 சதம் கூடுதல் வாக்குகள் பெற்று வென் றார். ரஷ்யாவில் மீண்டும் கம்யூனிஸ்டுகள் தலைதூக்காமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டன. 1998ல் ரஷ்யாவில் வட்டி விகிதம் உயர்ந்து வங்கிகள் திவாலாகின. ஆனால் இந்த செல்வந்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ரஷ்யாவின் சொத்துக்கள், வளங்கள் தனி யார் மயமாகிப்போனதால், சாதாரண மக்கள் வாழ்க்கைத்தரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மார்கரெட் தாட்சரின் ஆட்சிக் காலத்தில் `பிரிட் டிஷ் கேஸ்’, `பிரிட்டிஷ் டெலிகாம்’ போன்ற தேசிய மயமாக்கப் பட்ட நிறுவனங்கள் அடி மாட்டு விலைக்கு தாட்சரின் நண்பர்கள் கன்சர் வேடிவ் கட்சிக்கு நன்கொடை தந்தவர்களின் கைகளுக்கு மாறின. ரஷ்யாவில் அரசு நிறுவனங்கள் தனியார்மயமானது அதைப் போன்றது எனலாம்.

2000 – விளாடிமிர் புடின் ஜனாதிபதி:
புடின் அதிபராக பதவியேற்றதும் 28.7.2000 அன்று 21 புது செல்வந்தர்களை (டீடபையசஉhள) அழைத்து க்ரெம்ளினில் கூட்டமொன்றை நடத்தி னார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடைபெற்ற அக்கூட்டத்தில் சூடான விவாதம் நடைபெற்றுள் ளது. இறுதியில் அவர்களிடம் “தனியார்மய மாக்கல் எப்படி நடைபெற்றது என்பது பற்றி பரிசீலனை செய்யமாட்டேன். ஆனால் நீங்கள் க்ரெம்ளினுக்குள் பிரத்யேக சலுகைகள் பெறு வதை அனுமதிக்க மாட்டேன். அரசும், தொழி லதிபர்களும் கலந்தாலோசிக்க நிரந்தர ஏற்பாடு கள் செய்வேன். சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துக்களை வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் வரி செலுத்த வேண்டும். அரசியலில் தலையிடுவதை அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து 8.7.2000 அன்று ரஷ்ய மக்களுக்கு விடுத்த செய்தியில், ரஷ்யாவில் கொள்ளையடிக்கும் செல்வந்தர் கூட்டம், ஊடகங்களையும் தங்கள் பிடியில் வைத்துள் ளதை புடின் சாடியுள்ளார். ஆனால், அதைத் தாண்டி அவரால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை. ரஷ்யாவின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மேலும் அதிகரித்தன.

“புதிய ரஷ்யர்கள் பிரிட்டிஷ் அரசு குடும் பத்தின் வாழ்க்கை முறைகளை பின்பற்றினர்.  2007ல் லண்டனில் விற்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார்களில் 40 சதம் இவர்களால் வாங்கப் பட்டவை. பிரிட்டனின் தனியார் விமானத் தொழில்துறை இவர்களால் ஊக்கமடைந்தது. லண்டனின் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் (ஹெராட்ஸ், ஹார்வி நிக்கல்ஸ்) இந்த `ரூபிள் புரட்சி’க்கு சாட்சியங்களாக விளங்கின”.
ரஷ்ய செல்வந்தர்களால் அமைதியுடன் வாழ இயலவில்லை. கசப்பும், பகைமை உணர்வும் அவர்களிடையே நிரம்பக் காணப்பட்டது. 2006 டிசம்பரில் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி அலெக்சாண்டர் லிட்வினென்கோ, `பொல னியம்’ என்ற நச்சு கொடுக்கப்பட்டு இறந்த தன் விளைவாக, லண்டனில் ரஷ்ய புதுப்பணக் காரர்கள் மீது காவல்துறை, புலனாய்வுத்துறை களின் கவனம் கூடுதலாகியது. இப்படிப்பட்ட சம் பவங்கள் பற்றிய கருத்தை ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகத்தை சேர்ந்த ரஷ்ய வரலாற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற பேரா. ராபர்ட், “அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளால் ரஷ்ய மூலதனத்தை கவரும் போட்டியில் வெற்றி பெற இயலவில்லை. ஆனால், பிரிட்டனால் அதை சாதிக்க முடிந்தது. ஏனெனில், ரஷ்யாவி லிருந்து எவ்வளவு செல்வம், எப்படி, யார் மூல மாக லண்டனுக்குள் கொண்டுவரப்படுகிறது என்று கேள்விகள் கேட்கப்படுவதில்லை. அத னால் சில வன்முறை சம்பவங்கள் நடப்பது தவிர்க்க இயலாது” என்கிறார்.
ரொட்டி வாங்க வரிசையில் நின்ற பெரே சோவ்ஸ்கி 1995ல் மாஸ்கோவுக்கு வெளியே மாளிகை வாங்கினார். 1996ல் அவரும், அவரது சகாக்கள் 6 பேர் சேர்ந்து ரஷ்ய பொருளாதாரத் தின் 50 சதத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத் திருப்பதை பெருமையாக பேசும் அளவுக்கு வளர்ந்திருந்தார் என்றால் தனியார்மயம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என புரிந்து கொள்ள முடியும். 2005ல் ரஷ்ய செல்வந்தர்கள் பற்றி எழுதிய டொமினிக் மிட்ஜ்லி, கிரிஷ் ஹட்சின்ஸ் ஆகியோர், “சில நூறு  ரஷ்யர்கள் கோடீஸ்வரர்களாக மாறினார் கள். ஆனால், அதே காலகட்டத்தில் 1.5 கோடி ரஷ்யர்கள் இயற்கை வளங்கள் முழுவதும் சுரண்டப்பட்ட ரஷ்யாவில் மோசமான நிலையில் வாழ்கின்றனர் என்ற யதார்த்தத்தை யாரால் மறுக்க இயலும்?” என்ற வினாவை எழுப்பியுள் ளனர். 1990களின் இறுதியில், அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 35 சதம் ரஷ்யர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தனர். முதலில் செல் வந்தர்களின் செல்வாக்கை குறைக்கும் புடினின் சில நடவடிக்கைகள் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் நாளடைவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில செல்வந்தர்கள் நாட்டின் வளங்கள் அனைத்தையும் தங்கள் வசம் வைத்திருப்பதைக் கண்ட மக்கள் கம்யூனிச அமைப்பின் கீழ் (1990க்கு முன்பு) பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை இருந்தது என்றும் பழைய கம்யூனிச அமைப்பு வேண்டும் என்றும் பேசத் துவங்கிவிட்டனர். வரிசையில் நின்றாலும் ரொட்டி கிடைத்தது. வேலை கிடைத்தது. தலைக்கு மேல் கூரை இருந்தது. அடிப்படைத் தேவைகள் நிறைவேறின. மனிதன் என்ற கௌரவம் இருந்தது. இன்று….? என அங்கலாய்க் கின்றனர்.
கார்ல் மார்க்ஸ் கூறியதைப்போல், முதலாளித் துவ அமைப்பில் சுரண்டல் இருக்கும். நாட்டின் வளங்கள் அனைத்தையும் தனியார்மயம் என்ற ரத்தக் காட்டேரி உறிஞ்சி, சுரண்டிக் குடித்துவிட் டது. ஒரு துளி ரத்தம் இருந்தாலும் அதைக் குடிக்காமல் விடாது. ரஷ்யாவில் நிலவும் நிலை “ரத்தத்தை உறிஞ்சும் முதலாளித்துவம்” (ஏயஅயீசைந ஊயயீவையடளைஅ)  என்றால் மிகையாகாது என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர்கள் சோஷலிஸ்டுகள் அல்லர். 1990க்கு முன்பும் சோவியத் யூனியனில் நிலவிய ஊழல் பற்றி விளக்குகின்றனர். அதேபோல ஸ்டாலின் பற்றி யும் நூலில் கடுமையான விமர்சனங்கள் உள்ளன. சர்ச்சைக்குரிய சில நிலைபாடுகள் இருப்பினும், கண்மூடித்தனமான தனியார்  மயம், தாராள மயம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை எப்படி சீர்குலைத்துள்ளது என்பது துல்லியமாக வெளிப் படுகிறது. ஒரு `க்ரைம் நாவல்’ போன்று கையில் எடுத்தால், கீழே வைக்க இயலாத அளவு சுவா ரசியமாக எழுதப்பட்டுள்ளது. 1990க்குப் பின் ரஷ்ய நிகழ்வுகளை அரசியல் பின்னணியை புரிந்துகொள்ள உதவும் நூல் எனில் மிகை யாகாது.
பக்கங்கள்: 402
வெளியீடு: ஃபோர்த் எஸ்டேட், லண்டன், 2010
விலை: 8.99 பவுண்டு (700 ரூபாய்)



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: