ஆர். ராம்குமார்
அவுட்லுக் இதழில் மானாஸ் பட்டாச் சார்யா என்பவர் இடதுசாரிகளின் தீண்டாமை என்ற தலைப்பில் இந்திய மார்க்சிஸ்ட்டுகளும் சாதியமும் என்ற பிரச்னை குறித்து விவாதித் துள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் பொது வாக அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட இடது சாரிகளைப் பற்றி அவதூறு பொழிவதும் குறிப் பாக இ.எம்.எஸ்.நம்புதிரிபாட் அவர்களை இழிவு படுத்துவதுமேயாகும். ஆகவே மானாஸ் பட்டாச் சார்யா சாதியப் பிரச்னையில் கட்சியின் நிலை பாடு என்ன என்பதை கட்சி ஆவணங்களில் இருந்து பார்த்து புறச் சான்றுகளின் அடிப்படை யில் முடிவுக்கு வர முயற்சிக்கவில்லை. இத்தகைய எழுத்துக்கள் பொதுவான சில போக்குகளை கொண்டிருக்கின்றன: ஆதாரங்களைப் பற்றி அவை கொஞ்சமும் கவலைப்படுவதில்லை வேண்டுமென்றே ஒரு பிரச்சனையில் கட்சியின் நிலை குறித்து சம்பந்தமில்லாத தவறான புள்ளி விவரங்களை அள்ளிவிடுவது தகுந்த மேற்கோள் களை பிய்த்து எடுத்துக் காட்டுவது மற்றும் மேலோட்டமான ஆய்வு ஆகியனவே அவை.
இதன் விளைவாக இந்தக் கட்டுரையின் உள் நோக்கமான சாதியப் பிரச்னையில் இடது சாரி களை சிலுவையில் அறைய வேண்டும் என்ற நோக்கமும் நிறைவேறவில்லை அதே போன்று அதன் வெளிப்படையாக தெரிவித்திருக்கும் இடதுகளும் சாதியமும் என்ற பிரச்சனை குறித்து ஒரு பயன்படத்தக்க ஆய்வு என்பதும் நிறைவேற வில்லை.
நான் மானாஸ் பட்டாச்சாரயாவின் வாதங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்கிறேன்.
காலம் காலமாக தவறாகவே சிந்திக்கும் எழுத் தாளர்கள் எழுதி எழுதி புளித்துப் போன இ.எம்.எஸ். எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு மேற்கோளை மானாஸ் பட்டாச்சார்யாவும் பயன்படுத்தியுள்ளார். இந்த மேற்கோள் இ.எம்.எஸ். எழுதிய சுதந்திரப் போராட்ட வர லாறு என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. மானாஸ் பட்டாச்சார்யா எழுதியுள்ளது என்ன வெனில் அம்பேத்கார் 1932ஆம் ஆண்டு புனே உடன்படிக்கைக்கு வலியுறுத்திக் கொண்டி ருந்த போது இந்திய இடதுசாரிகள் அதனை எதிர்த் தனர் இது குறித்து இ.எம்.எஸ். கீழ்கண்ட வாறு பதிவு செய்துள்ளார்: அது (புனே உடன் படிக்கை) இந்திய சுதந்திரப் எழுதியதாக கீழ்க் கண்ட வாச கத்தை குறிப்பிடுகிறார். “அது (புனே உடன் படிக்கை) இந்திய சுதந்திரப் போராட் டத்திற்கு பேரிடியாக அமைந்தது. ஏனெனில் இது மக் களின் கவனத்தை முழு சுதந்திரம் என்பதி லிருந்து திசை திருப்பி சலிப்பு தட்டக்கூடிய வாடிக்கை நடவடிக்கையான ஹரிஜனங்களை முன்னேற்று வது என்பதற்கு மாறியது. இந்த மேற்கோள் இ.எம்.எஸ்.ன் நிலையை முற்றிலும் தவறாக சித்தரிக்கின்றது. இந்த தவறான எடுத்துக் காட்டிற்கு என்றென்றைக்குமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. தலித் துகள் விடுதலைக்கான விஷயத்தில் இ.எம்.எஸ் எந்த காலத்திலும் அப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தவில்லை. இந்த கட்டுரையின் மூலம் இ.எம்.எஸ் அவர்களால் 1975-76ஆண்டுகளில் மலையாளத்தில் தொடராக கட்சியின் நாளே டான தேசாபிமானியில் எழுதப்பட்டு பின்னர் சிந்தாவில் 76-77ல் பிரசுரிக்கப்பட்டது. இது பின்னர் 1986ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு சோசியல் சயின்டிஸ்ட் பத்திரி கையில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலரறு என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. நாம் ஒரிஜினல் மலையாளத்தில் இந்தப் பாரா எவ் வாறு வந்துள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.
இதன் துல்லியமான பொருள் கீழே கொடுக் கப்பட்டுள்ளது:
“இருப்பினும் இது சுதந்திர இயக்கத்திற்கு மிகப்பெரிய அடியாக அமைந்தது. இதன் விளை வாக மக்களின் கவனம் முழுமையான சுதந்திரம் என்ற நோக்கிலிருந்து திருப்பப்பட்டு குறிப்பிட்ட பகுதிசார் நோக்கமான ஹரிஜன்கள் மேம்பாடு என்பதற்கு மாறியது.
இதிலிருந்து மொழிபெயர்ப்பில் தவறு ஏற் பட்டுள்ளது என்பது விளங்கும். இந்த மொழி பெயர்ப்பை இ.எம்.எஸ். செய்ய வில்லை. குறிப் பிட்ட பகுதியினரின் நோக்கு என்றிருக்க வேண் டிய வாசகம் தவறுதாலாக சலிப்பு தட்டக்கூடிய வாடிக்கை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இ.எம்.எஸ். மூலத்தில் எழுதிய மலையாள கட்டு ரையை வாசிக்காத பலர் நீண்ட காலமாக தோழர். இ.எம்.எஸ். அவர்களை (இந்த தவறான) மொழிபெயர்ப்பின் அடிப்படையில் தொடர்ந்து சிலுவையில் அறைந்து வருகின்றனர். அவரை தலித்துகளின் விரோதி என்று தொடர்ந்து முத்திரை குத்தி வருகின்றனர். இந்த தெளிவு படுத்தலுக்குப் பிறகாவது இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஒரு வேளை மூல நூல் கிடைக்கவில்லை என் றாலும்கூட மானாஸ் பட்டாச்சார்யா தன்னிடம் உள்ள தகவல்களை சரிபார்க்க இரண்டு வழி களை கையாண்டிருக்கலாம். முதலாவது புனா உடன்படிக்கைக்கு இட்டு சென்ற நிகழ்வுகளைக் குறித்தும் அதற்குப்பின் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் தனது புத்தகத்தில் விவரிக்கும் போது இ.எம்.எஸ். காந்தி எடுத்த நிலையையும் ஆதரிக்க வில்லை அம்பேத்கர் எடுத்த நிலையையும் ஆதரிக்கவில்லை. மேலும் புனா உடன்படிக்கை குறித்த சர்ச்சைகளுக்கு இட்டு சென்ற சூழ்நிலை கள் இரண்டாம் சிவில் ஒத்துழையாமை இயக் கத்தை பலவீனப்படுத்தியது என்று தனது புத்த கத்தில் இ.எம்.எஸ். வாதாடுகிறார். புனா உடன் படிக்கைக்குப் பின் காந்தி தன்னை சிறையிலிருந்து விடுவிப்பது எளிதாக இருக்க வேண்டும் என்பதற் காக ஆங்கில அரசுக்கு எழுதிக் கொடுத்த உறுதி மொழியில் தான் இனி சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்கப் போவதாகவும் தன்னுடைய கவனம் முழுவதும் தாழ்த்தப்பட்ட சாதிகளின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். ஆகவே காந்தியைப் பற்றி இ.எம்.எஸ். எழுது கையில்:
“சுயராஜ்யத்திற்கான போராட்டத்தை தினந் தோறும் செய்திட வேண்டிய தொடர் நட வடிக்கையான தாழ்த்தப்பட்ட சாதியினர் மேம் பாடு என்ற நோக்கத்திற்கு கீழே கொண்டு சென்று விட்டார். ஏன் இதற்கும் மேல் காந்தி தார்மீக (மதரீதியான) குணாம்சத்தை அரசியல் அணுகுமுறையில் புகுத்தி விட்டார். இவ்வாறு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்திய நாட்டை விடுவிப்பது என்ற நோக்குடன் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் இயக்கமும் மற்றும் அதன் ஒப்பற்றத் தலைவர் காந்தியும் அதை கைவிட்டனர். தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் இதர இந்துக்கள் தீண்டாமை என்ற சாபக் கேட்டினால் கிட்டத்தட்ட முழு இந்து சமுதாயமும் பாதிக்கப்பட்டிருந்த நிலை யில் அவர்களை விடுவிக்கிறோம் என்று அதில் கவனம் செலுத்தினர். இதன் நேரடி விளைவு என்னவெனில் சிவில் ஒத்துழையாமை இயக்கம் பலவீனப்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அதன் பிரபல்யமான தலைவர்களான ராஜ கோபாலாச்சாரி போன்றவர்கள் கடந்த சில மாதங்களில் சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் மிகவும் முனைப்பாக செயல்பட்டு வந்தவர்கள் தங்களின் அந்த நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட்டுவிட்டனர். ஹரிஜனங்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக ஈடு படுத்திக் கொண்டனர். (இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு).
இந்த பின்னணியில்தான் முழு சுதந்திரம் என்பதிலிருந்து குவி மையம் பெயர்ந்து ஹரி ஜனங்களின் மேம்பாடு என்பதற்கு மாறியது என இ.எம்.எஸ் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை கவனமாகப் படிக்கக்கூடிய எவரும் இ.எம்.எஸ். தலித்துக்களின் பிரச்னைகளை எந்த பிரச்னைக் கும் இரண்டாம் தரமாக கீழே வைத்து தனது ஆய்வை செய்ய மாட்டார் என்பதை உணர்வர்.
தீண்டாமை ஒழிப்பில் இ.எம்.எஸ்.
மானாஸ் பட்டாச்சார்யா அந்த மேற்கோளை எச்சரிக்கையாகக் கையாண்டிருக்க வேண்டும் என்பதற்கு இரண்டாவது காரணமும் உள்ளது. 1932ஆம் ஆண்டு இளம் இ.எம்.எஸ். அவர்களே மிகவும் உற்சாகத்துடன் காந்தியின் அழைப்பை ஏற்று மலபார் பகுதியில் மிகப்பெரிய அளவில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக பெரிய போராட்டங்களை நடத்தியுள்ளார். இ.எம்.எஸ் தவிர ஒன்றாயிருந்த கேரள கம்யூனிஸ்ட் கட்சி யின் ஸ்தாபிதர்களான இரண்டு பெரிய தலைவர் களான ஏ.கே.கோபாலனும் பி.கிருஷ்ணபிள்ளை யும் புகழ்பெற்ற 1932ஆம் ஆண்டு குருவாயுர் கோயில் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு தலைமை ஏற்று தலித்துகள் மற்றும் இதர பிற் படுத்தப்பட்ட மக்களை திரட்டி குருவாயூர் கோயில் நுழைவுப் போராட்டத்தினை தென் மலபார் பகுதியில் நடத்தினர். சத்தியாகிரகம் நடைபெற்ற போது கோபாலன் கோயில் வாயிலில் உயர்சாதி நாயர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இதற்கு முன்பு 1931ஆம் ஆண்டு கோபாலன் வட மலபாரின் பையனூர் கோயிலில் தலித்துகளை அழைத்துக் கொண்டு நுழைய முயன்ற போது ஈழவர்களால் மிகக் கொடூர மாகத் தாக்கப்பட்டார்.
தீண்டாமைக்கு எதிரான போராட்டங்க ளோடு மலபார் பகுதியின் கம்யூனிஸ்ட் தலைவர் கள் தலித்துகள் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு களை மேம்படுத்துவதற்கான போராட்டங்களை யும் இணைத்தனர். உதாரணமாக 1926ஆம் ஆண்டு வடக்கு மலபாரின் கல்லிச் சேரி கிராமத் தில் இரண்டு தலித் சிறுவர்கள் ஆரம்பப்பள்ளி யில் சேருவதற்காக வந்தபோது அவர்கள் கடு மையாகத் தாக்கப்பட்டு பள்ளியின் வாசலுக்கு வெளியே நாயர்களாலும் ஈழவர்களாலும் தூக்கி எறியப்பட்டனர். இதனைத் தடுக்க முயற்சித்த சுகுமாறன் என்ற தலித் இளைஞரும் அரசாங்க சாலையிலேயே தாக்கப்பட்டார். கேரளாவின் இரண்டாவது கம்யூனிஸ்ட் முதன்மந்திரியாக இருந்த இ.கே.நாயனார் 2003ல் இந்த கட்டுரை யாளர் எடுத்த பேட்டியின் போது தான் 1920களின் பிற்பகுதியில் தேசிய அரசியலுக்கு வரக் காரணமாக இருந்ததே இந்த சம்பவம்தான் என்று தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டி யின் போது நான் மிகவும் ஆழமாக பாதிக்கப் பட்டேன். ஏன் தலித் குழந்தைகள் இதர குழந்தை களுடன் சேர்ந்து அமரக் கூடாது மற்றும் படிக்கக் கூடாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்த நாயனார் மேலும்
“நாங்கள் கே.பி.ஆர்.கோபாலன் தலைமை யிலும் ஏ.கே.கோபாலன் தலைமையிலும் காந்தி யின் அறிவுறுத்தலின் பேரில் தலித்துகள் மேம் பாட்டிற்காக உழைக்க ஆரம்பித்தோம். நானும் இதர இளம் காங்கிரஸ்காரரகளும் தலித் குழந்தைகளை கிராம பொதுக்குளங்களில் குளிப்பாட்டுவதில் முன்னணியில் இருந்தோம். குளிப்பாட்டி ஆடைகளை அணியச் செய்து பள்ளிகளுக்கு தூக்கிக் கொண்டு சென்று அவர் களை உயர்சாதியினர் தாக்காமல் பாதுகாத் தோம்.”
இதற்கும் மேலே சொல்லவேண்டுமானால் காந்திதான் குருவாயூர் சத்தியாகிரகத்தை திடுதிப் பென முடிவுக்கு கொண்டுவந்தார் அதைப் போலவே சிவில் ஒத்துழையாமை இயக்கத் தையும் பாதியில் திடீரென முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தார். இதன் காரணமாக மலபார் பகுதியில் காங்கிரஸ் இயக்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதன் விளை வாக காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி 1934ஆம் ஆண்டும் பின்னர் 1939ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மலர்ந்தன.
வேறு வார்த்தைகளில் சொல்வதானல் இ.எம்.எஸ் மற்றும் இதர தோழர்களுக்கு தீணடாமைக்கு எதிரான போராட்டங்கள் அன்றாட அரசியல் நிகழ்ச்சி நிரலாக 30களி லும் 40 களிலும் இருந்தன. இந்த சான்றுகள் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். இருப்பினும் மானாஸ் பட்டாச்சார்யா இத்தகைய சான்று களை புறக்கணித்து விட்டு தன்னுடைய வாழ்க் கையையே சுரண்டப்பட்டவர்களுக்காக தியாகம் செய்த அப்பழுக்கற்ற ஒரு தலைவனை அவதூறு செய்த வேண்டும் என்ற நோக்குடன் எழுதி யுள்ளார்.
சாதியம், முதலாளித்துவத்திற்கான மாற்று
சாதி குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் அறிஞர் பெருமக்கள் காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகி யோர் சாதிகளின் துவக்கம் மற்றும் அவற்றின் அடிப்படை குறித்து செய்த ஆய்விற்கும் இ.எம்.எஸ் அவர்கள் செய்த ஆய்விற்கும் பெரிய வித்தியாசம் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இ.எம்.எஸ் அவர்களைப் பொறுத்த வரை சாதி என்பது வெறும் வர்க்கம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல ஆனால் அவர் அவ்வாறு மட்டும் பார்ப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. அவர் எப்பொழுதும் கூறி வந்துள்ளது என்ன வெனில் சாதி அமைப்பு சமூக ஒடுக்குமுறை மற்றும் வர்க்க ஒடுக்குமுறை என்ற இரண்டு கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது என்றும் இந்த இரண்டு கூறுகளும் இரண்டறக் கலந்தது ஒன்றே போன்று தோற்றமளித்தாலும் அவை ஒவ் வொன்றும் தங்களது தனித்தன்மையை தொடர்ந்து இந்த அமைப்பில் பாதுகாத்து வருகின்றன என்பதாகும். இதன் காரணமாகவே மலபார் சமுதாய அமைப்பின் குணாம்சத்தை குறிப்பதாக இ.எம்.எஸ் தெரிவித்த ஜாதி-ஜன்மி-நடுவழி மோதாவித்வம்(உயர்சாதி-நிலப்பிரபுத் துவம்-மேற்குடிபிரபுக்களின் மேலாதிக்கம்) பிரபல்யமான கருத்தாக இருந்தது. மலபார் சமூகம் என்பது பொருளாதார அரங்கில் நிலப் பிரபுக்களின் ஆதிக்கத்திலும் சமூக வாழ்வில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்தும் உயர் சாதிகளின் பிடியிலும் அரசியல் அரங்கில் பிர புக்கள் கையிலுமாக இருந்தது என இ.எம்.எஸ் தெரிவிக்கிறார். அவர் கேரள சமூகத்தில் சாதியம் குறித்த தன்னுடைய ஆய்வாக தெரிவிப்பது என்னவெனில்.
“இந்தப் பிரச்சனையை அணுகும் போது இதனை வர்க்கப் போராட்டம் மட்டுமே என்றோ அல்லது சாதிய மோதல் என்று மட்டுமோ புரிந்து கொள்வது யதார்த்தத்திற்குப் புறம் பானது. உண்மை என்னவெனில் வர்க்கம் மற்றும் சாதியம் குறித்த ஒரு கறாரான விளக்கம் உள்ளது.. நடைமுறையில் கேரள சமூகச் சூழலில் ஜனநாயக இயக்கங்களின் வளர்ச்சி சாதிய இந்து ஆதிக்கத் திற்கு எதிரான இயக்கத்தில் உள்ளது(மீண்டும் ஒரு முறை சாதியம் மற்றும் வர்க்கம் சோசியல் சயன்டிஸ்ட் 1981: 9 (12)
இ.எம்.எஸ் சாதி குறித்து கொண்டிருந்த கருத் துக்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமாயின் 1930 களில் சிவில் ஒத்துழையாமை இயக்கம் தோல்விக்கு இட்டுச் சென்ற சம்பவங்கள் குறித்து அவர் செய்த பகுப்பாய்வுகளை நாம் மீண்டும் வாசிக்க வேண்டும். அவரைப் பொறுத்த வரை மையமான பிரச்னையே அடிப்படையில் இருந்த மிகப்பெரிய பலவீனம் தேசிய சுதந்திர இயக்கம் இந்திய பூர்ஷ்வாக்காளால் தலைமை தாங்கப் பட்டதேயாகும். சிவில் ஒத்துழையாமை இயக்கம் தோல்வி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கார ணங்களைத் தேடி அலைந்து கொண்டிருந்த போது அவர்களுக்கு இ.எம்.எஸ் 1979ல் கீழ் கண்டவாறு எழுதுகிறார்:
எல்லா தோல்விகளுக்கும் காரணம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தந்திரமான நடவடிக்கைகளும் மற்றும் சாதியத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களின் தேசப்பற்றின்மையும்தான் என்று சுலபமாக குற்றம் சுமத்துகின்றனர். மகாத்மா காந்தி வீரஞ்செறிந்த அறிக்கை ஒன்றை வெளி யிட்டார். அது ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் இந்தியா அதன் தலைவிதிப்படி நடக்கட்டும் என்று விட்டிருந்தால் அனைத்து விதமான சாதி மற்றும் மதப் பிரச்னைகளும் உடனடியாகத் தாங்களாகவே தீர்வைக் கண்டுவிடும் என்றார். நடைமுறைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத வாய்ச்சவடால் இது என்பதை நிருபிக்கும் வகையில் இந்திய பிரிவினையின் போது நடை பெற்ற, மனிதகுல வரலாற்றிலேயே மிகவும் மோசமான மனிதத் தன்மையற்ற கணக்குவழக்கே இல்லாத அளவிற்கு நடந்த படுகொலைகள் மட்டுமல்ல சுதந்திரம் அடைந்து 31 ஆண்டுகள் கழிந்த பின்னரும்(இ.எம்.எஸ் கட்டுரை எழுதிய ஆண்டு மொ-ர்) இந்தியா இன்றும் அரசியல் ரீதியாக சுதந்திரம் பெறுவதற்கு முன்பு எப்படி மத மற்றும் சாதி ரீதியாக பிளவுண்டிருந்ததோ அதே நிலையில்தான் இப்பொழுதும் சான்றாக உள்ளது. நமது நாட்டைப் பீடித்திருக்கும் அனைத்து விதமான தீயநிகழ்வுகளுக்கும் சாதி மற்றும் மதவாத அமைப்புகளை மட்டுமே இப் பொழுதும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் தேசியவாதிகள் ஒரு விஷயத்தை ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். எவ்வாறு சாதி மற்றும் மதத் தலைவர்கள் மிகவும் மோசமான உணர்வுகளை மக்கள் மத்தியில் எழுப்பி அதன் காரணமாக மிகவும் மனிதாபிமானமற்ற வகையில் ஷெட்யூல் சாதியினர் பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப் பட்ட சாதிகள் மீது வன்கொடுமைகளை நிகழ்த்துகின்றனர் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.(சாதி சண்டைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகளின் வளரும் ஒற்றுமை: எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி 1979: 14(7-8)333-334).
ஏன் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் உள்ள ஒடுக் கப்பட்ட மக்கள் காங்கிரஸ் போன்ற முதலாளித் துவக் கட்சிகளின் தலைமையை ஏற்க மறுக் கின்றனர்? இ.எம்.எஸ். கீழ் வருமாறு விளக்கு கின்றார்:
“தேசிய இயக்கம் அதனுடைய முதலாளித் துவத் தலைவர்களால் கட்ட விரும்பிய இயக்கம் அடிப்படையில் தொன்மையான இந்திய நாக ரீகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான முயற்சியாகும். நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டியது இந்தக் கலாச் சாரம் மற்றும் நாகரீகம் எதுவென்றால் அவை கிராமப்புற சமூகங்களின் மீது கட்டமைக்கபட்டு அதன் சாரமாக சமூகம் பல்வேறு படிமங்களில் (கீழ்-மேல்) சாதிகளால் பிளவுண்டு இருப்ப தாகும். லட்சோப லட்சம் மக்கள் வேறு மார்க்க மின்றி இந்த சாதி அடிப்படையிலான இந்த சமூகத்தின் பாரத்தை சுமக்க வேண்டியவர்களாக இருந்தவர்கள் முதன் முறையாக இந்த வர்ணா சிரம தர்மம் இனியும் தங்களை கட்டுப்படுத்தாது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நவீன முத லாளித்துவ தத்துவமான சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை உட்கிர கித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொண்டுவந்துள்ள புதிய கலாச்சாரத்திற்குப் பதிலாக அந்த இடத்தில் மீண்டும் பழைய வர்ணாசிரம தர்மங் களால் கொண்டு வர நடத்தப்படும் ஒரு இயக் கத்தைப் பொறுத்துக் கொள்ளத் தயாரில்லை.”
அப்படியெனில் மாற்று என்ன? இ.எம்.எஸ் எழுதுகிறார்: .
.இந்தியாவின் பழைய நாகரீகம் மற்றும் கலாச் சாரத்தையும் போற்றிப் புகழ்பாடுவதை முதலில் நிறுத்த வேண்டும். இந்தியாவை நவீன ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவை கட்டமைக்க விரும்பும் ஒருவர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டியது சாதி அடிப்படையிலான இந்து சமுதாயம் மற்றும் அதன் கலாச்சாரத்திற்கு எதிராக சமரசமற்ற போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதைத்தான்.இந்தியாவின் பழமை வாய்ந்த நாகரீகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய வற்றின் கோட்டையாக விளங்கும் சமூகத்தை பல்வேறு நிலைகளில் உள்ள சாதிகளால் பிளவு படுத்தி வைத்திருக்கும்- இந்த சமூகத்தை நொறுக்கினாலன்றி மதச்சார்பற்ற ஜனநாயகம் என்ற கேள்வியே எழவாய்ப்பில்லை அதில் சோசலிசம் பற்றி பேச வாய்ப்பேது! வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தீவிரமான ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டங்களை சாதி சமூகத்திற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடி யாது.
மானாஸ் பட்டாச்சார்யா இன்னும் சில பொய்யான தகவல்களை தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். இ.எம்.எஸ். சாதி சமூகத்தை உயர்ந்த பொருளாதார அமைப்பு ஆதலால் முறையான உழைப்பு பகிர்ந்தளித்தலின் வழியாக கட்டுக் கோப்பான உற்பத்திக்கு பாதையமைத் தது என்று வாதாடுகிறார். மானஸ் பட்டாச்சார் யாவைப் பொறுத்தவரை சாதிபிரிவினைகளின் கீழான உற்பத்தி முறையில் உழைப்புப்பிரிவினை மற்றும் உழைப்பாளிகளின் பிரிவினை என்பதற்கு இடையிலான வேறுபாட்டை அம்பேத்கர் உணர்ந்திருந்தார் ஆனால் இ.எம்.எஸ். அறிந் திருக்கவில்லை என்று தெரிவிக்கிறார். இந்த குற்றச்சாட்டு மானாஸ் பட்டாச்சார்யா இ.எம்.எஸ். எழுதியவற்றைப் பற்றி முழு அறியா மையில் உள்ளார் என்பதை சந்தேகமற நிரூபிக் கிறது. இந்த அறியாமையிலிருந்து இவர் இ.எம்.எஸ் அவர்களை பொரும்பாலும் உயர் சாதி மனோபாவத்தில் இருப்பவர் என்று முத்திரை குத்தும் அளவிற்கு சென்று விடுகிறார்.
இ.எம்.எஸ்.எழுகிறார்:
பல தட்டுக்களைக் கொண்ட சாதிய அமைப்பு முறையை அடிப்படையாகக் கொண்ட அமைப்பின்சாரம் என்னவெனில் செக்கு மாடு போன்று ஒரே வேலையையே தலைமுறை தலைமுறையாக செய்ய வேண்டிய நிலை ஏற் பட்டது. ஒவ்வொரு மானிடனும் அவனுடைய சாதிக்கு அல்லது உபசாதிக்கு விதிக்கப்பட்ட பணியையே செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டான். இதன் காரணமாக புதிய கண்டுபிடிப்புகளுக்கோ அதன் காரணமாக தொழில்நுட்ப வளர்ச் சிக்கோ இடமில்லாமல் போய்விட்டது. அந்த சமூக அமைப்பின் தூண்களாக சாதியம் தவிர கிராம சமூகம் மற்றும் கூட்டுக் குடும்பம் ஆகியன இதர இரண்டு தூண்களாக விளங்கின…
இறுதியாக மானாஸ் பட்டாச்சார்யா மற்றும் அவரைப் போன்றவர்கள் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமானால் அவர்களின் சந்தேகங் களைப் போக்க சி.பி.ஐ.எம் கட்சித் திட்டத்தை படிப்பது நலம். உதாரணமாக மானாஸ் பட்டாச் சார்யா என்ன நினைக்கிறார் என்றால் இடது சாரி விமர்சகர்கள் தலித் இயக்கத்தை வெறும் அங்கீகாரத்திற்கான அரசியல் என்று மட்டுமே பார்க்கிறார்களே தவிர அதில் புரட்சிகர உள் ளடக்கம் உள்ளதை அங்கீகரிக்கவில்லை. சி.பி.ஐ.(எம்) திட்டம் 2000 வருடத்தில் திருத்தப் பட்டது இந்த விஷயம் குறித்து விவரமாக கீழ்கண்டவாறு தெரிவிக்கிறது:
“சாதிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதிலும் முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ முறை தோல்வி கண்டுள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட வகுப் பினர் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள் ளனர். தீண்டாமை என்பது சட்டவிரோத மானது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் தலித் மக்கள் தீண்டாமை மற்றும் பாரபட்சத்தின் இதர வடிவங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதற்கு எதிராக தலித் மக்களிடம் வளர்ந்து வரும் விடுதலை உணர்வு கொடூரமான ஒடுக்குமுறை மற்றும் வன்செயல் மூலம் எதிர்கொள்ளப் படுகிறது. சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியான தலித் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியில் ஒரு ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது. சாதிகளாக பிரிக்கப்பட்ட சமூகத்தில் பிற்படுத்தப் பட்ட சாதியினரும் தங்கள் உரிமைகளை நிலை நாட்டுகிறார்கள்.
அதே நேரத்தில் வாக்கு வங்கிகளை திரட்ட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காகவே சாதிய உணர்வுகள் தூண்டிவிடப்பட்டு சாதிய பகைமைகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் பொது வான ஜனநாயக இயக்கங்களிலிருந்து அடித் தட்டு மக்களைப் பிரிக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. சாதித் தலைவர்கள் பலரும் சில முதலாளித்துவ அரசியல் கட்சித் தலைவர் களும் சுத்த சுயம்புவான சாதிய அறைகூவல் மூலம் மக்களிடமுள்ள சாதிப் பிரிவுகளை குறுகிய தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி அனைத்து சாதியிலும் உள்ள ஒடுக்கப்பட்ட பகுதியினரின் பொதுவான இயக்கத்தை கட்டு வதற்கு எதிராக உள்ளனர். பழைய சமுதாய அமைப்பு தூக்கியெறியத் தேவையான அடிப் படை வர்க்கப் பிரச்னைகளான நிலம் கூலிக்கான போராட்டம் மற்றும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானப் போராட்டம் ஆகியவற்றை இவர்கள் புறக்கணிக்கிறார்கள்.”
சாதியம் குறித்து மார்க்சிய அறிஞர்களின் கருத்துக்களை முழமையாக தவறாக வியாக் யானம் செய்யும் மானாஸ் பட்டாச்சார்யாவின் எழுத்துக்கள் சாதியத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணியில் பிளவுகளையே ஏற்படுத்தும். இடதுசாரி மார்க்சிஸ்ட்டுகள் எல்லா காலத் திலும் அம்பேத்கர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ள அதே சமயம் சாதிய ஒடுக்கு முறைக்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் உள்ள பிரச்னைகளை ஒன்றிணைக்க வேண்டிய அவ சியத்தை வெற்றிகரமாக நிறுவியுள்ளனர். அம் பேத்கர் அவர்களே என்ன சொல்லியுள்ளார் என்றால் பிரஞ்சு புரட்சி மனித விடுதலையின் முதல் படி என்றும் ரஷ்யபுரட்சி இரண்டாவது கட்டம் என்றும் தெரிவித்துள்ளார். இவை அரசியல் நடவடிக்கைக்கான மிக முக்கியமான ஒருங்கிணைக்கும் புள்ளி. அம்பேத்கர் மீது மதிப்புள்ள மார்க்சீய வாதிகள் மற்றும் மார்க்சின் மீது ஆர்வமுள்ள அம்பேத்கார் வாதிகள் ஆகி யோர் எந்த புள்ளியில் இணையலாம் என்பதைக் கண்டறிந்து அதிலிருந்து புதிய புதிய இடங் களைக் கண்டுபிடித்து முன்னேறிச் செல்ல வேண் டும். வாதங்களில் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி அவரவர் இயக்கங்களை ஒன்றிணைத்து விடு தலைக்காக முயற்சிக்க வேண்டும். இத்தகைய ஒன்றுபட்ட இயக்கம் பரிணாமம் அடைவதை வலுவிழக்கச் செய்யும் வகையில் பொய்களையும் தவறான விளக்கங்களும் பரப்பக்கூடாது.
தமிழாக்கம்: ஜி. ஆனந்தன்
Leave a Reply