ஈரான் மீது போர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பல்துருவ போக்குகள்


ஆறுமுக நயினார்

 

கடந்த நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் குறிப்பாக 1973-இல் நடைபெற்ற “எண்ணை அதிர்ச்சி” (டீடை ளுhடிஉம) உலகப் பொருளாதாரத் தையே ஓர் உலுக்கு உலுக்கியது. அன்று வரை எண்ணை வளமிக்க நாடுகளின் கூட்டமைப்பு (டீஞநுஊ) உற்பத்தி, வினியோகம், விலை- ஆகிய வற்றை நிர்ணயம் செய்துவந்தது.  ஏகாதிபத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா அதில் தலை யிட்டு, பெருமுயற்சி செய்து அவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. நெருக் கடிக்குள்ளான டாலர் நாணயத்தை ஸ்திரப் படுத்தவும், உலக நாடுகளின் சேமிப்புகளை டாலரில் தொடர்ந்து நீடிக்க வைக்கவும், சர்வதேச சட்டங்கள்- சம்பிரதாயங்களைத் தனக்குச் சாதகமாக வளைக்கவும், “எண்ணை அரசியலை” அமெரிக்கா கையில் எடுத்தது. எண்ணை வளங் களையும் – வர்த்தகத்தையும் தனது கட்டுப்பாட் டுக்குள் வைத்துக்கொள்ள அப்போதிலிருந்தே அமெரிக்கா பல வழிமுறைகளைக் கையாண்டது.

நாடுகள் மீதும், பிராந்தியங்களிலும் போர் மிரட்டல் விடுத்து மீறுகிற நாடுகளைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆப்கானிஸ் தானம், குவைத், ஈராக் ஆகிய நாடுகள் ஏதாவது ஒருவழியில் கடந்த 1980களுக்குப் பிறகு,  அமெ ரிக்க இராணுவத் தலையீடு,  மிரட்டல்,  போர் ஆகியவற்றுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது. வெவ் வேறு வழிகளில், இஸ்ரேல் மற்றும் நேட்டோ மூலமாகவும் நேரடியாக அமெரிக்கப் படைகள் மூலமும் பாலஸ்தீனம், சிரியா உட்பட வளை குடாப் பகுதியை ஒட்டிய நாடுகள் இராணுவ அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. பிற வளைகுடா நாடுகள், வடக்கு ஆப்ரிக்க நாடுகள், தென்கிழக்கு ஐரோப்பியாவிலுள்ள சிறிய நாடு கள், மத்திய ஆசியப் பகுதியிலுள்ள சோவியத் இரஷ்யா-விலிருந்து பிரிந்து வந்த புதிய நாடுகள் ஆகியவை மிரட்டலுக்கு ஆட்படுத்தப்பட்டு தற் போது பலவழிகளில் அமெரிக்கக் கட்டுப்பாட் டுக்குள் – ஆதரவில்- இயங்கி வருகின்றன. கிட்டத் தட்ட இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து எண்ணை வளமிக்க பகுதிகள் அனைத்தும் அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன.

அமெரிக்கத் தலையீடு

இந்தப் பின்னணியில், ஈரான் நாட்டில் இன்று என்ன நடக்கிறது என்பது அலசப்பட வேண்டும். பாரசீகம் என்று அழைக்கப்பட்ட இந்த நாடு ஹிட்லர் அடக்குமுறைக் காலத்தில் ஈரான் எனப் பெயர் மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட “எண்ணை அதிர்ச்சி” ஏற்பட்ட அதே காலத்தில், 1979 இல் இங்கே இஸ்லாமியப் புரட்சி நடந்தது. மன்னர் பரம்பரையைச் சார்ந்த  “ஷா” விரட்டப்பட்டு இஸ்லாமியக் குடியரசு அங்கு மலர்ந்தது. உலக எண்ணை வளத்தில் 3-வது இடத்தை வகிக்கும் ஈரானின் மக்கள் தொகை அன்று சுமார் 4 1/2 கோடி; இன்று 7 கோடி ஆகும்,

அடிப்படையில் அமெரிக்க எதிர்ப்பு மனோ பாவம் கொண்ட ஈரானுடைய உள்நாட்டு விவ காரத்தில் தொடர்ந்து அமெரிக்கா தலையிட்டு வந்தது. இஸ்லாமியப் புரட்சி வெடிக்கும் போது அமெரிக்கா செய்த புரட்சி எதிர்ப்பு நடவடிக்கை களைக் கண்டித்து டெகரானில் உள்ள அமெ ரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்டு தூதரக அதிகாரிகள் 444 நாட்கள் சிறை பிடிக்கப்பட்ட னர் என்பது இன்று வரலாறு. ஆனால் அன்றைய காலம் முதல்- அமெரிக்காவின் வெளித்தலை யீட்டை எதிர்த்து சுயேச்சையான நிலைபாடு எடுத்து ஈரான் சர்வதேச அரசியல் வானில் தனி இடத்தைப் பிடித்தது.

ஈரானை “ஒழுங்குக்குக்” கொண்டுவர ஒரு காலத்தில் ஈராக்கைப் கைப்பற்றி 1990-களில் ஈரான்- ஈராக் யுத்தத்தை அமெரிக்கா நடத்தியது. எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்ட மைப்பு, அரபு லீக், வளைகுடா கவுன்சில் உட்பட பல அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஈரானை வளைத்துப்போட அமெரிக்கா பல பத்தாண்டுகளாக முயற்சித்துத் தோற்றுப் போனது.

இன்று ஈரான் மீது தாக்குதல் ஏன்?

ஈராக்கில் ஆக்கிரமிப்பு செய்தபோது(2003) அதற்கு எதிராகவும், இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சினையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், தற்போது சிரியாவுக்கு ஆதரவாகவும் ஈரான் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்தப் பிராந்தியத்தில், அமெரிக்க ஆசியுடன் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் அட்டூழியங்களைக் கேள்வி கேட்கக் கூடிய சக்தியாக ஈரான் திகழ்ந்து வருகிறது.

இந்தப் பின்னணியிலேயே, இன்று ஈரான் குறிவைக்கப்படுகிற நிகழ்ச்சியை அலச வேண்டி உள்ளது. ஏகாதிபத்தியம் உலகளாவிய அளவில் தனது மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்ள, உலகெங்குமுள்ள இயற்கைச் செல்வங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து சர்வதேச அமைப்புகளையும் பயன் படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் அமெ ரிக்காவும் பிற மேலை நாடுகளும் எடுக்கிற நிலைப்பாட்டை ரஷ்யாவும், சீனாவும் சில வளர்கிற நாடுகளும் உறுதியாக எதிர்க்கின்றன. எனவே, தாங்கள் நினைத்தது நடக்காததால் புதிய வழிகளில் தடைகளை விதித்து, மீறினால்  போர் தொடுப்பது உட்பட நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. இதைத்தான் தற்போது ஈரான் விஷயத்தில் அமெரிக்கா செய்கிறது.

தற்போது அவர்கள் கற்பிக்கிற காரணம் ஈரான் அணுஆயுதத்தயாரிப்பில் இறங்கி உள்ளது என்பதுதான். கிட்டத்தட்ட 2008 இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் உலகப் பொருளாதாரமும், அமெரிக்க-ஐரோப்பியப் பொருளாதாரங்களும் 2012 இல் மிகத் தீவிரமான நெருக்கடியில் சிக்கி உள்ளன. அவர்களது இன்றைய தேவை மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் உள்ள எண்ணை வளங்களை மேலும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும், அதன் மூலம் தனது நெருக்கடியி லிருந்து தன்னை மீட்டுக் கொள்வதும் தான். ஈரான் அடங்கவில்லையானால் போர் தொடுத்து அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பதுதான் அமெரிக்காவின் இலட்சியம் . இந்தப் போர் மூலம் மூன்று நோக்கங்கள் நிறை வேறும். ஒன்று, வளங்களும், செல்வங்களும் அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் வரும்; இரண்டு, போர் மூலம் நெருக்கடியை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்; மூன்றாவதாக, இந்தப் பிராந்தியத் திலும், உலக அளவிலும் அமெரிக்காவை எதிர்த் தால் என்ன நடக்கும் என்ற பாடத்தை அனை வருக்கும் புகட்டமுடியும். எனவேதான் இந்தப் போர் தயாரிப்பில் அமெரிக்கா இறங்கி வரு கிறது.

அணுசக்தியா? அணு ஆயுதமா?

இதற்கான நடவடிக்கையில், கடந்த இரண் டாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா  வெகு தூரம் வந்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை (ஐவேநசயேவiடியேட ஹவடிஅiஉ நுநேசபல ஹபநnஉல-ஐஹநுஹ) என்ற அமைப்பு மூலம் ஈரானுக்கு நோட்டீசு அனுப்பப் பட்டது. ஏற்கனவே ஈரான் அணு ஆயுதப்பரவல் தடை (சூஞகூ) ஒப்பந்தத்தில் கையொப்பமிட் டுள்ள நாடு என்ற அடிப்படையில் அந்த நாட்டு அணு உலைகளைப் பரிசோதிக்க சர்வதேச நிபுணர்கள் அனுப்பப்பட்டனர். ஈரான் யுரேனியத்தைச் செறிவூட்டும் வேலையை மட்டும் செய்து வரு கிறது. தங்களது அணு உலைகள் மூலம் மின் சாரம் உட்பட எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யவே யுரேனியம் செறிவூட்டப்படுகிறது; ஆயுதம் தயாரிக்கத் தேவைப்படும் தீவிர செறி வூட்டுதல் எதுவும்  நடைபெறவில்லை என ஈரான் கூறுகிறது.

இந்த விஷயம் அணுசக்தி முகமை-க்குக் கொண்டு வரப்பட்டு, ஈரான்  செய்யும் யுரேனியம் செறிவூட்டல் மூலம் அணு ஆயுதம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக குற்றம் சாட்டி, செறிவூட்டல் நடவடிக்கைகள் மீது தடைவிதிக்கப்பட்டது.இந்த சர்வதேசக் கூட்டங்களில், இந்தியா உட்பட நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித் துள்ளன என்பது மிகப்பெரிய துரதிருஷ்டம். கடந்த இரண்டாண்டுகளில் இரண்டு முறை ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இருந்தபோதும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்த்து வாக்களித்த தாலும் கருத்தொற்றுமை ஏற்படாததாலும் ஈரான் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

பொருளாதாரப் போர்

அமெரிக்கா தன்னிச்சையாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கத் துவங் கியது. வருகிற ஜீன் 30-க்குள், ஈரான் தன்னைத் “திருத்திக் கொள்ளாவிடில்” அவர்கள் மீது போர் தொடுப்பது தவிர்க்க முடியாதது; எல்லா வாய்ப்புகளும் எங்கள் மேஜை மீது உள்ளன; நாங்கள் எதையும் நிராகரிக்கவில்லை; எப்பாடு பட்டாவது ஈரான் கையில் அணுஆயுதம் கிடைப் பதைத் தடுப்போம், என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகிறார்.

மற்ற நாடுகளும் ஈரானுடன் எண்ணை வர்த் தகத்தை படிப்படியாகக் குறைத்துக் கொண்டு ஜூன் 30க்குள் அனைத்து வணிகத்தையும் நிறுத்தி விட வேண்டுமென அமெரிக்கா கூறுகிறது. ஈரானின்  மத்திய வங்கி, வணிக வங்கிகள் அனைத்தும் வெளிநாட்டு வர்த்தக சேவை செய் வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி களின் ஐரோப்பிய மேலை நாட்டு சேமிப்புகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.ரஷ்யா, சீனா, இந்தியா, வெனிசுலா போன்ற நாடுகள் அவரவர்கள் நாணயங்களில் வணிக வர்த்த கத்தை (ளுநவவடநஅநவே ஊரசசநnஉல) சமன் செய்து கொள் கிறார்கள்.

இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு

சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ஈரானிட மிருந்து இறக்குமதி செய்யும் தனது கச்சா எண்ணையைப் படிப்படியாக உடனே குறைத்துக் கொள்ள வேண்டும் என ஹிலாரி கிளின்டன் (அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்) பேசினார். உடனே, இந்தியாவுக்கான அமெ ரிக்கத் தூதர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் கடந்த மூன்றாடுகளில் 20 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணை இறக்குமதி என்பது  படிப்படியாகக் குறைக்கப்பட்டு தற்போது 12 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது என தனது அரசின் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை வெளிப்படுத்திக் கொண்டார்.

ஆனால், கடந்த மார்ச்சு 28,29 ஆகிய தேதி களில் புது தில்லியில் கூடிய பிரிக்ஸ் (க்ஷசுஐஊளு) நாடு களின் கூட்டத்தில் பிற விஷயங்களுக்கு நடுவே, எண்ணை வர்த்தகம் சம்பந்தமான சில முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. ஈரானுடன் தனது வர்த்தகங்களைக் தொடர்வது; இவ்வாறு செய் யப்படும் வணிகத்தின் பணப்பரிமாற்றம் (ளுநவவடநஅநவே) அந்தந்த நாட்டு நாணயங்களிலேயே செய் வது; டாலருக்கு மாற்றான சர்வதேச (சுநுளுநுசுஏநு ஊருசுசுநுசூஊலு) நாணயத்தின் அவசரத்தேடல் தொட ரும்; இந்த 5 நாடுகளின் கூட்டமைப்பில் பிரிக்ஸ் வங்கி (க்ஷசுஐஊளு க்ஷஹசூமு) என்ற பன்னாட்டு வங்கி துவக் கப்படும்- ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது நேரடியாக அமெரிக்க மேலாதிக்கத் தைக் கேள்வி கேட்கக் கூடிய ஒரு நல்ல நட வடிக்கை ஆகும். இதற்குப் பதிலாக மார்ச்சு 31 ஆம் தேதி ஒபாமா அவர்கள் கீழ்க்கண்டவாறு கோரிக்கை வைக்கிறார் “ஈரானைத் தாக்குவதற்கு இதுதான் சரியான தருணம்; சர்வதேசச் சந்தை யில் எண்ணை தங்கு தடையற்ற முறையில் கிடைக்கிறது; தேவையான கேந்திர சேமிப்புகள் உள்ளன; எனவே உலக நாடுகள் உடனடியாக ஈரானுடன் ஆன எண்ணை உட்பட அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று சீனா, ரஷ்யா, இந்தியா உட்பட நாடு களுக்கு பெயர் குறிப்பிடாமல் கோரிக்கை (மிரட் டல் எனப்படிக்கவும்) வைக்கிறார்.

பெட்ரோல் விலை 100 ரூபாயைத்தொடும்:

இந்தியாவின் எண்ணை இறக்குமதியில் இரண்டாவது பெரிய இறக்குமதி ஈரானிலிருந்து வருகிறது, இந்தப் போர் துவங்கப்பட்டால், அது தடைபடும். ஏற்கனவே துவங்கப்பட இருந்த, ஈரான்- பாகிஸ்தான்- இந்தியா (ஐஞஐ) குழாய் வழி எண்ணை கொண்டுவரும் திட்டம் அமெரிக்கத் தலையீட்டால் நின்று போனது. பின்னர் துவங் கப்பட்ட துருக்மேனிஸ்தான்- ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான்- இந்தியா (கூஹஞஐ) திட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. மேலும் இந்தத் திட்டம் அமெரிக்க நலன்களையே பிரதானப்படுத்தும் மாற்றுத் திட்டமாகும்.

இவ்வாறு, இந்தியாவுக்கான எண்ணை குரல் வளை நெறிக்கப்பட்டால் சுலபமாக சில்லறை வினியோகத்தில் பெட்ரோல் ரூ 100 ஐத் தொடும். இதன் பொருளாதார- சமூக- அரசியல் விளைவு களை இந்தியா புரிந்து கொண்டுள்ளதா என் பதை கவலையுடன் பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது.

இந்தியா மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளின் எண்ணைத் தேவைகளும் நெருக்கடிக்கு உள் ளாகும். போர்ச்சுக்கல், இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் (ஞஐழுளு) போன்ற நாடுகள் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

யுத்தத்தயாரிப்பு தீவிரம்

இந்த விளைவுகளைப் பற்றி அமெரிக்கா கவலைப்படவில்லை. போரை என்று துவங்குவது என்று அமெரிக்கா துடித்துக் கொண்டிருக்கிற வேளையில்,  இன்றே துவங்க வேண்டுமென இஸ்ரேல் கொக்கரிக்கிறது. அந்தப் பிராந்தி யத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட அணுஆயுதங் களைக் கொண்ட நாடாக இஸ்ரேல் உள்ளது. அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (சூஞகூ) கையெழுத்திடாத, யாருடைய கட்டுப்பாட்டுக் குள்ளும் அடைபடாத, ஏகாதிபத்திய காவல் முனையமாக (ஐஅயீநசயைடளைவ டீரவயீடிளவ) இஸ்ரேல்-வளைகுடா பிரதேசத்தில் அனைத்து நாடுகளை யும் மிரட்டி வருகிறது.

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர், லியோன் பனெட்டா இன்னும் கூடுதலாக யு.எஸ்.எஸ் என்டர்பிரைஸ் என்ற கடற்படையை “ஹோர்மஸ் வளைகுடா” வுக்கு அனுப்பியுள்ள தாகத் தெரிவிக்கிறார்.ஏற்கனவே, அங்கே அவர் களது 5 வது கடற்படைப் பிரிவு (குகைவா குடநநவ) உள்ளது.மேலும் 30,000 பவுண்டு எடையுள்ள நவீன சாதாரண வகை குண்டு (ஆடீகூழநுசு டீகு  ஹடுடு க்ஷடீஆக்ஷளு- ஆடீஹக்ஷ) இந்தப் போரில் பயன்படுத்தப் படும் என பனெட்டா தெரிவிக்கிறார்.இது 60 அடி ஆழத்துக்கு கான்கிரீட் அமைத்து உருவாக் கப்படும் பதுங்கு குழிகளை (க்ஷருசூமுநுசு) துளைத்துக் கொண்டு உள்ளே சென்று பின்னர் வெடிக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பம் கொண்டது எனவும் தெரிவிக்கிறார்.

ஆனால் ஹோர்மஸ் வளைகுடா (ழுருடுகு டீகு ழடீசுஆருஷ்) பகுதியில் கப்பற்படைக்குவிப்பைப் பற்றி தான் கவலைப்படவில்லை என ஈரான் கூறுகிறது. உலகின் மொத்த ஏற்றுமதியில் 20ரூ கச்சா எண்ணெய் (அதாவது 17 மில்லியன் பீப்பாய்கள்) இந்த  வளைகுடா வழியாகத்தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரான் தாக்கப்பட்டால் இந்த வளைகுடாவை மூடுவோம் என ஈரான் எச்சரித்து உள்ளது. ஈரானின் நவீன பெட்ரோல் படகுகள் ஆயிரக் கணக்கில் பதில் தாக்குதலுக்குத் தயா ராகி வருகின்றன. இதற்கு நடுவில் அமெரிக்கா தனது தீவிரவாத தந்திரங்களைச் சாதுர்யமாக ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்துகிறது.

கொலைவெறி பிடித்த அமெரிக்கா

ஈரானுக்குள் புகுந்து அணு விஞ்ஞானிகள், பௌதிகப் பேராசிரியர், அவர்களது குடும்பத் தினர் ஆகியோரை  குண்டு வெடிப்பு மூலம் அமெரிக்கா கொலை செய்துள்ளது. ஜனவரி 2010 முதல் இன்று வரை அவ்வாறு கொல்லப்பட்ட வர்கள் மசூதுஅல் முகம்மதி, ஷாரியார், அப்பாஸ் மற்றும் அவரது மனைவி, ரசேல்,  எம்.ஏ.ரோசன் ஆகியோர் ஆவர். இருசக்கர வாக னங்கள், கார்களில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்புகள் மூலம் கடந்த இரண்டு ஆண்டு களில் இவர்கள் கொல்லப்பட்டனர்.

மார்ச்சு 5, 2012 அன்று வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமை ஈரான் பற்றிய விவகாரத்தைப் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் 3 நாடுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந் தன. ஜார்ஜியா (கூக்ஷஐடுஐளுஐ),தாய்லாந்து (க்ஷஹசூழுமுடீமு), இந்தியா (சூநுறு னுநுடுழஐ) ஆகிய மூன்று நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் அனைத்தும் இஸ் ரேலைக் குறிவைத்து ஈரானால் நடத்தப்பட்டது என்ற பிரச்சாரத்தை அமெரிக்கா நடத்தி வரு கிறது.  அமெரிக்காவில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தின் மீதும் தாக்குதல் நடத்த ஈரான் செய்த சதி கண்டுபிடிக்கப் பட்டது எனவும் அமெரிக்கா பிரச்சாரம் நடத்தி வருகிறது. ஆனால், அதற்கான எந்தவிதமான ஆதாரங் களும் இல்லை. மாறாக இந்த தீவிரவாதச் செயல்களை இஸ்ரேலைச் சார்ந்த மொசாட் அமைப்பு நடத்தியிருக்க வாய்ப்புள்ளது. ஈரான் மீது இந்த  நாடுகளில் வெறுப்பை உண்டாக்க அமெரிக்கா செய்த  தீவிரவாதச் சதியாகவே இது பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக, அமெரிக்க இராணுவத் துருப்புகள் நடக்கவிருக்கும் போரில் காயமுற் றால் சிகிச்சை அளிக்கும் பொருட்டு, ஜார்ஜியா வில் 30 புதிய மருத்துவமனைகளை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது.  இன்று அமெரிக்காவின் சர்வதேச முன்னுரிமை வாய்ந்த நிகழ்வாக ஈரான் மீதான போர் பார்க்கப்படுகிறது. அமெரிக்க நாணயம் சர்வதேச ரிசர்வ் கரன்சி என்ற அந் தஸ்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில் சர்வதேச வர்த்தகத்தை – குறிப்பாக எண்ணை வர்த்தகத்தை மையப்படுத்தி அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டு மென்ற புவி – அரசியல் (ழுநடி ஞடிடவைiஉயட) நிர்பந்தம் அமெரிக்காவுக்கு உள்ளது.

வளைகுடா யுத்தமும் அமெரிக்க அரசியலும்

நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் மையக் கருத்தாகவும் ஈரான் மீதான போர்தான் இருந்து வருகிறது. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இரண்டு அரசியல் கட்சிகளுமே  போர் தொடுப்பேன் என்று கூறித்தான் அமெரிக்க மக்களிடம் வாக்குக் கோருகிறார்கள். ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஒபாமா போர்ப் பறை முழங்கிவிட்டார். குடி யரசுக் கட்சியின் வேட்பாளர் இறுதித் தேர்வு இன்னும் முடியாத நிலையில் மிட்ரோம்னி, ரிக் சான்டோரம், நியூட் கிங்கிரிச் (ரோன் பால் தவிர) ஆகிய 3 வேட்பாளராக விரும்புகிற தலைவர்கள் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் என்றே கூறி வருகிறார்கள்.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் சதாம் ஹூசைன், ‘இனி டாலரில் வர்த்தகம் செய்யமாட் டேன்’ எனக் கூறினார். ஈராக் மீது 2003 இல் போர் துவங்கப்பட்டது. சதாம் கொல்லப்பட்டார். ஈராக் நாடு சின்னா பின்னமாக்கப்பட்டு அமெ ரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட் டது. ஈரானும் அதே தவறைச் செய்கிறது என அமெரிக்கா பார்க்கிறது. ஈராக்குக்குள் பேரழிவு ஆயுதங்களைத் (றுஆனு) தேடி அமெரிக்கா போர் தொடுத்தது. இன்று ஈரானுக்குள் அணு ஆயுதங் களைத் தேடி அமெரிக்கா போர் தொடுக்க எத்த னிக்கிறது.

லிபியாவுக்குள் நுழைந்து கலோனல் கடாஃபி யையும், அவரது குடும்பத்தினரையும் கொன்று குவித்து அந்த நாட்டை சமீபத்தில் தனது கட்டுப் பாட்டுக்கள் கொண்டு வந்துவிட்டனர். தற்போது சிரியாவுக்குள் கிட்டத்தட்ட “ஆட்சி மாற்றம்” (சுநுழுஐஆநு ஊழஹசூழுநு) என்ற அதே நாடகம் நடத்தப் பட்டுக் கொண்டு வருகிறது.ஜீன் 2012 க்குள், இந்த கோடை காலத்தில் ஈரான் மீது போர் நிச்சயம் என அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய ஒன் றியம் (நேட்டோ நாடுகள்) ஆகிய அனைவரும் தெரிவித்து தயாரிப்புகளைச் செய்து வருகின் றனர்.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் 91,000 அமெ ரிக்கத்துருப்புகளும் 40,000 நேட்டோ துருப்பு களும் அந்நாட்டின் அமைதிக்குப் பங்கமாக இருந்து வருகின்றன. ஈராக் நாட்டிலிருந்து வெளி யேறிய 40000 அமெரிக்கத்துருப்புகள் குவைத்தில் தஞ்சம் அடைந்துள்ளன. தற்போது ஈரானுக்குள் அமெரிக்க, நேட்டோ துருப்புகள் புதிதாக படை யெடுக்க உள்ளன.

உலகமெங்கும் 132 நாடுகளில் 737 அமெரிக்க இராணுவத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன (இந்தியா உட்பட). சுமார் 5,113 அணுஆயுத ஏவு கணைகளை அமெரிக்க ஏவத்தயார் நிலையில் வைத்துள்ளது. ஆண்டுதோறும் 68700 கோடி டாலர் இராணுவத்துக்கான நிதியாக பட்ஜெட் டில் அமெரிக்க அரசாங்கம் ஒதுக்குகிறது. ரிச்செட்ர்ட் நிக்ஸன், ரொனால்ட் ரீகன், பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ் வரிசையில் ஒபாமாவும் தனது “இராணுவ-தொழில் எந்திரமான” (ஆஐடுஐகூஹசுலு-ஐசூனுருளுகூசுஐஹடு ஊடீஆஞடுநுஓ)  அரசை போரில் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார் என்பது வியப்படைய வேண்டிய விஷயமில்லை.

ஆனால் ஷங்கை கூட்டுறவு நாடுகள் (ளுஊடீ), பிரிக்ஸ் (க்ஷசுஐஊளு), லத்தீன் அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பு (ஊநுடுஹஊ) போன்ற அமைப்புகள் இந்த காலத்தில் உருவாகியுள்ளதோடு மட்டு மின்றி அமெரிக்க-ஐரோப்பிய மேலாதிக்கத்தை, அவர்களின் ஒரு துருவ உலக (ருசூஐஞடீடுஹசு) முயற்சி யைக் கேள்வி கேட்பவர்களாக மாறி உள்ளனர் என்பதையும் கூடவே மகிழ்வுடன் கவனத்தில் கொள்ளலாம். ஈரான் விஷயத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை உலகமே கவலையுடன் எதிர்நோக்கி வருகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s