மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மே மாதத்தின் போராட்ட மகத்துவம்!!!


வரலாறு முன்னை விட அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. வரலாறு முடிந்து விட்டது என எக்காளமிட்ட முதலாளித்துவ ஆதரவாளர்கள், இப்போது தங்கள் முகத்தை எங்கே வைத்து இருக்கிறார்கள்? என்பதைத் தேட வேண்டிய நிலை இருக்கிறது. அந்த அளவிற்கு உலக ஏகாதிபத்தியம் மற்றும் வளர்ந்த நாடுகள் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் திணறு கின்றன. மார்க்சிஸ்ட்டுகள் சொன்ன உண்மை இப்போது உரத்து ஒலிக்கிறது. எங்கெல்லாம் உழைக்கும் மக்கள் சுரண்டலுக்கும், அநியாயக் கொள்ளைக்கும் ஆளாகி வருகிறார்களோ, எங்கெல்லாம் முதலாளித்துவம் தனது லாபம் தேடும் வெறியில், தொழிலாளர் மற்றும் நடுத்தர மக்களின் நலனை பலிகேட்கிறார்களோ, அங் கெல்லாம் போராட்டம் நடைபெற்று வருவது, போராட்ட சக்திகளுக்கு நம்பிக்கை அளிக்கிற விஷயம் மட்டும் அல்ல, முதலாளித்துவம் உலக உழைப்பாளி மக்களுக்கு விடியலை, வாழ்க்கை மேன்மையை தேடித் தராது, என்பதையும் தெளிவு படுத்தியுள்ளது.

மே தின ஆர்ப்பாட்டங்கள் இன்று, காலப் பொருத்தமானதாக இருக்கிறது. உலக அளவில் உழைப்பாளர்கள் தங்கள் கோரிக்கையை ஒருங் கிணைப்பதற்கான, வலிமையை கடந்த 2011 மே தினத்திற்கு பின்,  வால் தெரு உள்ளிட்ட போராட்டங்களின் காரணமாக, தொழிலாளி வர்க்கம் பெற்று இருக்கிறது.  மே மாதம் பல சிறப்புகளைக் கொண்டதாக  இருந்து வருகிறது. தொழிலாளர் தனக்கென பாட்டாளி வர்க்கக் கட்சியை உருவாக்காமல் சமூக மாற்றம் சாத்திய மல்ல, என்பதை முழுமையான வரலாற்று ஆய்வு மூலம் வெளிப்படுத்திய, காரல் மார்க்ஸ், பிறந்த தினமான, மே 5, என்பதும், சீனாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் 1921 ல் உருவாவதற்கு வித்திட்ட பீஜிங் உள்ளிட்ட 13 பல்கலைக் கழகங்களில் துவங்கிய, 1919ன் மே 4ம் தேதி மாணவர் போராட்டமும் வரலாற்றில் மிக முக்கியமானது. இன்றைய மே தின ஆர்ப்பாட்டங்களின் அடிப்படைக் காரண மான மே 1, 1886ல் நடைபெற்ற அமெரிக்கத் தொழிலாளர்களின் போராட்டம் எட்டு மணி நேரம் உழைப்பு, எட்டு மணிநேரம் ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்ற முழக்கத்தின் வெற்றிக்கு வித்திட்ட வரலாற்று சிறப்பு மிக்க நாள்.

உலகம் முழுவதும், உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுவதும், வேலை வாங்கப்படுவதும் அதி கரித்து இருக்கிற காரணத்தால், தொழிலாளி வர்க்கத்தைத் திரட்ட வேண்டிய கடமையும் எழுச்சி மிக்க போராட்டங்களுக்கான தேவையை யும்  மே மாதத்தின் கடந்த கால வரலாறு, நம்மை வலியுறுத்தி வருகிறது.

எட்டு மணி நேர வேலை இன்றும் சரியா?:

அரசியல் பொருளாதாரத்தை விளக்குகிற சமூக மாற்றத்திற்கான ஊழியர்கள், முதலாளித் துவம் தனது லாபத்தை அதிகரிக்க, தொழி லாளிக்கு கொடுக்கப்பட்ட ஊதியத்தை விடவும், பல மடங்கு அதிக நேர உழைப்பைத் தொழி லாளியிடம் பெற்றது. அதன் மூலம் கிடைத்த லாபமே மூலதனத்திற்கான ஆதித்திரட்டலாக (ஞசiஅவைவiஎந யஉஉரஅயடயவiடிn) அமைந்தது, என்று வியாக்கியானம் செய்தார்கள். இந்த உண்மை உலகில் மிகச்சிறிய பகுதி தொழிலாளர்களுக்கு தான் உரைத்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மன், ஃப்ரான்ஸ் ஆகிய நாடு களின் தொழிலாளர்கள், எட்டு மணி நேர வேலைக்காக பல ஆண்டுகள் போராடியுள்ள னர். அதில் போற்றுதலுக்குரிய பங்களிப்பு செய்தது, அமெரிக்காவின் சிக்காகோ நகரத் தொழிலாளர்கள். அன்று இருந்த கொடுமையை தொழிலாளி வர்க்கம் சரியாக உணர்ந்ததால், இடைவெளியற்ற தொடர் போராட்டம், எட்டு மணி நேர வேலைக்காக இருந்தது. 1806ம் ஆண்டு அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரில் தொழி லாளர்கள், ஓய்வு தேவை என்பதை உணர்ந்தார் கள், போராடினார்கள்.  இடைவெளிவிட்டு, இடைவெளிவிட்டு தொழிலாளர்கள்  வேலை நிறுத்தம் செய்துள்ளனர். 70 ஆண்டுகால போராட்டத்தைத் தொடர்ந்து தொழிலாளர் அமைப்புகள் தங்களுக்குள் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளனர்.

எட்டு மணி நேர வேலைக்காக, வேலை நிறுத் தங்கள் செய்வது தொழிலாளர் கூட்டமைப்பின்  மிக முக்கியப் பணியாக மாறிய நிலையில், 1885 ல் 700 நிறுவனங்களில் நடைபெற்ற வேலை நிறுத்தம், 1886 ல் 1572 வேலைநிறுத்தங்களாக உயர்ந்தது. பங்கேற்ற தொழிலாளர் எண்ணிக் கையும் லட்சக்கணக்கில் உயர்ந்தது. தொழிற் சங்கத் தலைவர்களைக் கொலை செய்தது உள் ளிட்ட கொடிய அடக்கு முறைக்குப் பின் தொழி லாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றார் கள் என்பது வரலாறு. இந்த வெற்றி உலகத் தொழிலாளர்களை ஈர்த்தது. மே 14 1889ல் உலகத் தொழிலாளர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூடினர். இதுவே பின்னாளில் இரண்டாவது அகிலம் என அழைக்கப் பட்டதாகவும், அலெக் ஸாண்டர் ட்ராச்டென்பெர்க் கூறுகிறார். அந்த அமைப்பு அமெரிக்காவில் தொழிலாளர் போராட்டம் சாதித்த வெற்றியை, உலகின் எல்லா நாடுகளிலும், எல்லா நகரங்களிலும் உள்ள தொழிலாளர்கள் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதில் உருவாக்கப் பட்ட செயல் திட்டம் தான், மே 1 ம் நாள் அன்று, எல்லா நாடுகளிலும், எட்டு மணி நேர வேலைக்காகப் போராடுவது என்பதாகும்.  இதுகுறித்து எங்கெல்ஸ், தனது எழுத்தில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை ஆய்வு செய்து கொண் டிருக்கிறது. முதன் முறையாக ஒரு கொடியின் கீழ் ஒரு படையாக எட்டு மணி நேர வேலை சட்ட மாக வேண்டும், என்ற ஒரே உடனடி நோக்கத் திற்காகத் திரண்டுள்ளது என்று குறிப்பிட் டுள்ளார்.

ரஷ்யப் புரட்சி இயக்கம் மே தினத்தை வெகு வாகப் பயன்படுத்திக் கொண்டது. 1896ம் ஆண்டில் லெனின் சிறையில் இருந்த போது, மே தினத் துண்டுப் பிரசுரம் எழுதியதாகவும், அதை 200 பிரதிகள் எடுத்து, 40 தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடம் விநியோகித்ததாகவும், அது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக வும் கூறப் படுகிறது. 1900ம் ஆண்டில் மே தினக் கொண்டாட்டத்திற்காக 6 மாதங்களாக லெனின் திட்டமிட்டு செயலாற்றியதையும் குறிப்பிடுகின் றனர். இதை ரஷ்ய மக்களின் அரசியல் விடு தலைக்கான அடக்க முடியாத போராட்டத் திற்கும், பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோசலிசத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் அணிதிரளச் செய்வதற் கான ஒரு சந்தர்ப்பமாக இதைக் கொள்ள வேண்டும் என லெனின் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் மே தினத்தின் புரட்சிகர முழக்கத்திற்கான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வந்த நிலையில், சீர்திருத்தவாத கருத்துக்களும் உருவாகி குழப்பம் விளைவிக்கும் முயற்சி அந்தக் காலத்திலும் நடைபெற்று உள்ளது. உண்மை யான போராளிகள், மே தினத்தன்று நடை பெறும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள், உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூகமாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப் பது மற்றும் உலகம் முழுவதும் எல்லா மக்க ளுக்கும் அமைதியை ஏற்படுத்துவது ஆகும். மே தின அணிவகுப்புகள் எட்டு மணி நேர வேலைக் காக மட்டுமல்லாமல், இந்த சமூக மாற்றத்திற் கான நோக்கத்திற்கும் பயன் படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளனர். அதேநேரத்தில், பல முதலாளித்துவ கட்சிகளின் தலைவர்கள், மே தினத்தை கேளிக்கை மற்றும் ஓய்வு நாளாக பின்பற்றுவதன் மூலம், மே தினத்தின் ரத்தம் தோய்ந்த தியாக வரலாற்றை சீர்குலைக்க முயன் றனர். இந்த விவாதங்களுக்கு மத்தியில் 1893ல் ஜூரிச் நகரில் நடைபெற்ற அகிலத்தின் மாநாடு,  சீர்திருத்தத் தலைவர்களுக்கு மே தினம் பார்க்கில் விளையாடுவதற்கும், கலைநிகழ்ச்சிக்குமான உலக விடுமுறை நாளாகும். ஆனால் கம்யூனிஸ்ட் அகிலத்தைப் பொருத்த அளவில், முதலாளித் துவ சுரண்டல், அடிமைத் தனம், வர்க்க வேறு பாடுகள் ஆகியவற்றை அழித்தொழிப்பதற்காக போராடும் நாள் என்று தீர்மானித்தது.

1905ம் ஆண்டு ரஷ்யாவின் முதல் புரட்சி தோல்வியுற்ற போது, லெனின்,  ரஷ்யாவெங்கும் நடந்த மாபெரும் மே தின வேலை நிறுத்தங் களும் அதையொட்டிய தொழிலாளர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் புரட்சிகர பிரகடனங்களும், பேச்சுக்களும் ரஷ்யாவில் மீண்டும் புரட்சிகர சூழ்நிலைக்கு சென்று விட்டதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார். மே தினத்தின் மகத்துவத்தை, 1917ம் ஆண்டில் புரட்சி வெற்றி பெற்ற பின், மே முதல் நாளை உலகத் தொழிலாளர் தினமாகவும், தொழிலாளர் வர்க்க விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தொழிலாளி வர்க்கத் துக்குரிய நாளாகும் எனக் குறிப்பிட்டனர். மற்றொரு புறத்தில், அமெரிக்கா மே முதல் நாளை குழந்தைகள் தினமாக அறிவித்தது. குழந்தைகள் மீதான அக்கறையை வெளிப்படுத்துவதன் மூலம், தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட் டத்தை திரையிட்டு மறைக்க முயற்சி செய்தது முதலாளித்துவம்.

மேற்படி இரண்டு கருத்துக்களில் சோசலிச ரஷ்யா தொழிலாளர் உரிமைக்காகவும், முத லாளித்துவ அமெரிக்கா அதை திசைதிருப்பும் வகையிலும் நடந்து கொண்டதை அறிய முடி கிறது. இன்றைக்கும் உலகில் பல நாடுகளில் மே தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி, என்ற கருத்துருவாக்கத்தில் வெற்றி பெற்று இருக்கிறார் கள். ஆனால் உரிமைக்கான வரலாறு குறித்தோ, புதிய உரிமைகளுக்கான, கோரிக்கைகளை உரு வாக்குவது குறித்தோ, விவாத்திக்கவில்லை. ஃபிரான்சில் வாரம் 35 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் என்ற கொள்கை பின்பற்றப்படு கிறது. 5 நாள் வேலை நாள் என்ற நிலையில், ஒரு நாளைக்கு தொழிலாளரின் வேலைநேரத்தைக் கணக்கிடும் போது, 7 மணிநேரமாக இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என்ற விகிதத்தில் வாரம் 5 நாள் வேலை நாளாக இருக்கிறது. எனவே அமெரிக்கத் தொழி லாளி வாரத்தில் 40 மணி நேரம் உழைக்கின்றனர்.

எட்டு மணிநேரமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை 1806ல், நூறு ஆண்டுகளுக்கு முன்பு வைத்தது. அதன்பின் தொழில் நுட்பம் உலக அளவில் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள் ளது. தொழில்நுட்பத்தின் வருகை உற்பத்தியை அதிகரிக்கவும், தொழிலாளரின் எண்ணிக் கையைக் குறைக்கவும் தான் பயன்பட்டுள்ளதே தவிர, எந்த வகையிலும் தொழிலாளரின் வேலைப்பளுவைக் குறைக்கவில்லை. சார்லி சாப்ளின் உருவாக்கிய “மாடர்ன் டைம்ஸ்” என்ற திரைப்படம் தொழில்நுட்பத்தின் வருகை எப்படி வேலைப்பளுவை அதிகரிக்கிறது, எப்படி வேலை வாய்ப்பைக் குறைக்கிறது என்ற சமூக அவலத்தை காட்சிப்படுத்தியிருக்கும். திரைப்படம் வந்து 80 ஆண்டுகள் முடிந்த நிலையில், மேலும் புதியதாக கண்டறியப்பட்ட  தொழில்நுட்பங்கள் உற் பத்திப் பெருக்கத்திற்கும், வேலை ஆள் குறைப் பிற்கும் துணைபுரிந்து உள்ளது. எனவே சாப்ளின் காலத்தில் தொழிற்சங்கம், எழுப்பிய வினாக் களின் மீது, உலகத் தொழிலாளி வர்க்கம் புதிய கோரிக்கைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டி யுள்ளது.

இன்றைக்கு மூலதனம் வளரும் நாடுகளை நோக்கி குவிகிறது. இதன் விளைவாக இந்தியா போன்ற நாடுகளில் மனிதவளம் மிகக் கொடிய முறையில் சுரண்டப்படுகிறது. முதலாளித்துவத் தின் நோக்கமான அடிப்படை மூலதனத் திரட் டலுக்கு மிக அதிக பங்களிப்பு செய்கிற நாடு களில் முதல் இடம் பெறும் அளவிற்கு இந்தியத் தொழிலாளர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். அமெரிக்கா, ஃபிரான்ஸ் உள் ளிட்ட பல வளர்ந்த நாடுகளின் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில், தொழிற்சாலைகள் துவங்குகின்றன. அவர்கள் நாட்டில் வாரம் ஒன் றுக்கு 40 அல்லது 35 மணி நேரம் என்பதை உழைப்பு நேரமாக அமலாக்குபவர்கள், இந்தி யாவில் 48 மணி நேரம் அமலாக்குகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களை அதைவிடவும் கூடுதலாக வேலை வாங்கும் ஏற்பாடும் உள்ளது. எனவே மே தினத்தின் கோரிக்கைகளை புதிய கோணத்தில் முன் வைப்பதும், அதை நோக்கித் தொழிலாளர்களைத் திரட்டுவதும் மிக அவசிய மாகிறது. சுரண்டலுக்கு எதிரான போராட் டத்தின் துவக்கம் மே தினம் என்பதைப் புரிந்து கொண்டால்தான், புதிய கோரிக்கைகளை உரு வாக்க முடியும்.

இந்தியாவில் தொழிலாளர் போராட்டங்களின் நிலை:

இந்தியாவில் உள்ள வேலையின்மையும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசுகளின் வளைந்து கொடுக்கும் போக்கும், விடுதலை இந்தியாவின் துவக்கத்தில் உருவாக்கிய தொழி லாளர் சட்டங்களைப் பாதுகாக்கும் வகையி லேயே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மாருதி சுசுகி போல் டில்லிக்கு அருகில் இருந் தாலும், ஹூண்டாய் போன்று தொலைவில் இருந்தாலும், சட்டங்களையும், உரிமைகளையும் மதிப்பதில்லை. லிபியாவில், சிரியாவில், ஈரானில் ஜனநாயகம் இல்லை எனத் தலையீடு செய்கிற, அமெரிக்கா, தங்கள் நாட்டு நிறுவனமான, ஃபோர்டு இந்தியா தொழிலாளர் ஜனநாய கத்தை பின்பற்றவில்லை, என்பதற்காக, என்ன நட வடிக்கை எடுத்தது, என்பதை இடதுசாரித் தொழிற்சங்கங்கள் தவிர யாரும் கேட்பதில்லை. மனித உரிமைகள் குறித்து வாதிடுபவர்களும் பேசுவதில்லை. தொழிலாளர்கள் மீதான சுரண்டல் மனித உரிமை மீது தொடுக்கப்படும் தாக்குதல், என்ற உணர்வும் கொள்வதில்லை.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்திய அரசு, இணக்க விதிகள் 87 மற்றும் 98 ஆகிய வற்றை அமலாக்கவில்லை, என குற்றம் சாட்டி யுள்ளது. 87 சங்கம் சேரும் சுதந்திரம் குறித்தது. 98 கூட்டு பேர உரிமை சார்ந்தது. இவை இரண்டிற் கும் ஒப்புதல் கொடுப்பதும், இந்தியாவில் இவை இரண்டையும் அமலாக்குவதற்கான, நடவ டிக்கை எடுப்பதும் மிக அவசியமானது. இந்தி யாவை விட பின் தங்கிய நாடுகள், மேற்படி இரண்டு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித் துள்ள நிலையில் இந்தியா, ஒப்புதல் தர மறுப் பது, இன்றைய பன்னாட்டு நிறுவனங்களின் உழைப்பு சுரண்டலுக்கு துணை போகிற ஏற்பாடு ஆகும். இதன் காரணமாகவே இந்தியாவில், சி.ஐ.டி.யு தலைமை தாங்கிய ஹூண்டாய் தொழிலாளர் போராட்டமும், ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டமும், ஃபோர்டு இந்தியா தொழிலாளர் போராட்டமும், முழுமையான வெற்றியைப் பெற இயலவில்லை. எட்டு மணி நேர வேலை கோரிக்கையின் மகத் துவம் எட்டு மணிநேர ஓய்வுடன் இணைந்தது. ஆனால், இந்தியாவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், தொழிலாளர் குடியிருப்பில் இருந்து குறைந்தது 40 நிமிடப் பயணத்தில் இருந்து, 2 மணி நேர பயண தூரத்தைக் கொண்டி ருக்கின்றனர். இதனால் நிறுவனம் சார்ந்த பேருந்துகளில் தொழிலாளரின் ஓய்வு நேரம் சுமார் 4 மணி நேரம் பறி போகிறது. இரண்டா வது, இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் தொழி லாளர்களுக்கு குடியிருப்பு வசதி செய்து கொடுக் காமலேயே, கொள்ளை லாபம் ஈட்டுவதை செய்து வருவது. எட்டு மணி நேர வேலை என்ற முழக்கத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை, எட்டு மணி நேர ஓய்விற்கு தொழிற்சங்கங்கள் கொடுக்க வில்லையோ, என்ற சந்தேகம் வருகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழி லாளர் குடியிருப்பிற்கும் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதைத் திருத்தமாக முன்மொழிந்த ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. இன்றைக்கும் அதை அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.

செவிலியர்கள் போராட்டம். அப்பல்லோ, மலர், ஃபோர்ட்டீஸ், கோவை பி.எஸ்.ஜி, காஞ்சி புரம் மீனாட்சி ஆகிய மருத்துவ மனைகளில் ஒருவார கால அளவில் நடைபெற்ற வேலை நிறுத்தம், சில மருத்துவ மனைகளில் சம்பள உயர்வுடன் முடிவுக்கு வந்தது. சிலவற்றில் அதுவும் நிறைவேறாமல் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது. இதில் விவாதிக்க வேண்டிய அம்சம், வேலைநிறுத்தம் செய்த செவிலியர், சம்பள உயர்வு கோரிக்கையை முன் வைத்தனரே அல்லாது, எட்டு மணி நேர வேலை என்ற கோரிக் கையை முன் வைக்கும் துணிச்சலைப் பெற்றிருக்க வில்லை. 12 மணி நேரம் செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களை வேலைவாங்குவது அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் இருக்கிற உழைப்புச் சுரண்டல் ஏற்பாடு. மக்கள் நல் வாழ்வுத் துறையில் பணிபுரிவதால், ஓய்வின் அவசியம் குறித்த புரிதல் கொண்டிருந்தாலும், எட்டு மணி நேர வேலை மூலம்தான் ஓய்வு உறுதி செய்யப்படும் என்பதை செவிலியர்கள் உணர வில்லை. இந்த மருத்துவமனைகள் தங்கும் விடுதிகள் நடத்துவது, செவிலியர்களின் நலன் காக்க என்பதை விடவும், 12 மணிநேர வேலை வாங்குவது என்பதை நோக்கமாகக் கொண்டுள் ளது.

அரசுகள் கட்டுகிற கட்டுமானப் பணிகளில் உள்ள தொழிலாளர்களிடம், 8 மணி நேரத்திற் கும் அதிகமாக வேலை வாங்குகிற, ஒப்பந்ததாரர் களைத் தாராளமாக அனுமதிக்கும் போக்கை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.  மாநில அரசு கட்டிய புதிய சட்டமன்ற வளாகத் தில் பார்க்க முடிந்தது. சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் இப்போதும் நடைபெறு கிறது. மெட்ரோ ரயில் பணிகள் முழுவதும் அத் தகைய சுரண்டல் அரங்கேறுகிறது. வேலியே பயிரை மேய்கிற நிலையில், கேம்ப் கூலி என்று அழைக்கப்படுகிற முறையை எப்படி கட்டுப் படுத்துவார்கள்? தமிழகத்தில் பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டம் என்ற கேம்ப் கூலி முறை நடைமுறையில் இருக்கிறது. 12 முதல் 14 மணி நேரம் வேலை வாங்கப் படுவதான உண்மை மீது எந்த நடவடிக்கையையும், அரசுகள் எடுக்க வில்லை.

கம்யூனிஸ்ட் அறிக்கை குறிப்பிட்டதைப் போல் உழைப்புக்கு வேண்டிய திறன் மற்றும் உடல் வலிமையின் தேவை குறைய குறைய சம் மந்தப் பட்ட ஆடவரின் உழைப்பு அகற்றப் பட்டு, அந்த இடங்களில் பெண்கள் குழந்தைகளின் உழைப்பு ஈடுபடுத்தப் படுகிறது. அவர்களுக்கு கூலி குறைவாக கொடுப்பதன் மூலம் லாபமும், புதிய தொழிலாளர் என்பதால் உற்பத்தியில் முன்னேற்றமும் உருவாக்கப் படுகிறது. இக் கொள்கை இன்று சுமங்கலித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளது. இத்தகைய தொழிற்சாலைகளில் பாதிக்கப் பட்ட பெண்கள் கொடுத்த பாலியல் புகார் மீது அல்லது  தொழி லாளர் பாதிப்புகள் குறித்து, தொழிலாளர், மாதர், வாலிபர் அமைப்புகள்  கூட்டாக நடத்திய போராட்டங்களின் மீது, மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் இல்லை. மற்றொருபுறம் கருத்தால் உழைக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிவோர், இந்த போராட்ட வரலாற்றை அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு வாரம் இரு நாள்கள் விடுமுறை என்பதை மட்டுமே கணக்கில் கொள்கிறார்கள். ஒரு நாளில் செய்யும் வேலையின் அளவும் அதன் மூலம் ஈட்டித் தருகிற லாபத்தையும் ஒப்பீட்டு பார்க்கிற குணாம்சத்தை அவர்கள் படித்த கல்வியும், குடும்ப சூழலும் உருவாக்காத காரணத்தால், பல மணி நேரம் உழைப்பவர்களாக உள்ளனர். எனவே இந்திய நாடு முழுவதிலும் மே தினக் கோரிக்கைகளை முன்வைத்து கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் வர்க்கம் ஒன்று சேருவதற்கான தேவை, முன்னை விட, இன்றைய நவ காலனியாதிக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்திய உலகமயமாக்கல் காலத்தில் அதிகரித்துள்ளது.

வால் தெருவைத் தொடர்ந்து:

கடலில் துவங்கிய குறைவான காற்றழுத்தம் ஒரே இடத்தில் மையம் கொண்டால், எப்படி யதார்த்த வாழ்வு பாதிக்கப் படுமோ, அதுபோல் வால்தெருவைக் கைப்பற்றுவோம் இயக்கத்தினர் செப் 2011 முதல் போராடி வருகின்றனர். இது முதலாளித்துவத்தை முடமாக்கவில்லை என் றாலும், ஒரு எச்சரிக்கையாக நீடித்து வருகிறது. வரலாற்றில் நெடுங்காலம் கழித்து, அமெரிக்க தொழிலாளர்கள் எல்லா முக்கிய நகரங்களிலும் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர். பல இடங்களில் கைதுகளும், கண்ணீர் புகைக் குண்டு களும் போராட்டக் காரர்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. பூங்காக்களில் போராடுகிற தொழி லாளர் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாகக் கூறியுள்ளனர். போராட்டக்காரர் களின் செய்திக்குறிப்பு, ஒரு சதவீதத்தினருக்கு, 99 சதம் பேரின் ஒத்துழைப்பு இல்லையென்றால், எவ்வளவு சிரமம் என்பதை உணர்த்துவதற்கும், வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு எதிராக தொழிலாளர், மாணவர் உள்ளிட்ட அனைத்துப் பகுதியினர் எப்படி ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதையும் நிரூபித்துக் காட்டுவோம் என்கிறது.

தற்போது மீண்டும் ஒரு நாள் விடுமுறை எடுக்கும் நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதாவது பிழைப்பு ஊதியத்திற்காக ஒரு திருவிழா என்பதை அறிவித்து உள்ளனர். வரும் ஜூன் 20 அன்று, நாடு முழுவதும் நாங்கள் 99 சதம் இயக்கத்தவர், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அளவுக்கு அதிகமான அன்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்டாடும் காலமாக கோடை காலத்தின் நடுப்பகுதி அமெரிக்காவில் கருதப் படுகிறது. மே தின வரலாற்றை வலது சாரிகள் அல்லது முதலாளித்துவக் கட்சியினர் எப்படி திசை திருப்ப முயற்சித்தார்களோ, அதுபோல் இந்த பிழைப்பு ஊதியத்திற்கான திருவிழா ஏற்பாடும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால், இந்த திருவிழாவிற்கான இணையதள அறிவிப்பு உண்போம்  குடிப்போம்  பாடுவோம்  ஆடுவோம் (நுயவ -னுசiமே – ளுiபே – னுயnஉந) என்பதாக இருக்கிறது. இது பண்பாட்டு அம்சம் என்று மட்டும் கருதிட முடியாது. சமீபத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 20 வது அகில இந்திய மாநாடு, முதலாளித்துவத்திற்கு எதிராக நடைபெறும் தொழிலாளர் போராட்டம், அரசியல் மாற்றுக்கான முழக்கத்தை முன்வைக்க வில்லை என கூறி இருப்பதை இங்கு ஒப்பு நோக்க வேண்டியுள்ளது.

அதே நேரத்தில் வருகிற மே 12 அன்று நாங்கள் 99 சதம் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை அரசையும், வங்கிகளையும் எதிர்த்து நிற்போம் என்ற முழக்கத்துடன் ஒருங்கிணைப்பு ஏற்பாடு நடைபெற்று வருகிறது. மே 6 முதல் 9 வரை பாங்க் ஆஃப் அமெரிக்காவின் பங்குதாரர்களுடைய வருடாந்திரக் கூட்டம் நடைபெற்ற போது, போராட்டக்காரர்கள் எங்கள் பொருளா தாரத்தை திவால் ஆக்குவதையும், எங்கள் வாழ்க் கையை உடைத்து நொறுக்குவதையும் கைவிடுங் கள் என்ற முழக்கத்துடன் பெரும் திரளாகப் போராடியுள்ளனர். மே 2 அன்று நியூயார்க் நகரின் புரூக்ளின் மருத்துவக் கல்லூரி மாணவர் கள்,  எங்களை இந்த ஒரு சதவீதம் நபர்களிடம் இருந்து காப்பற்றுங்கள் என்ற முழக்கத்தை முன் வைத்துப் போராடியுள்ளனர். இவை அனைத் தும் சுட்டிக் காட்டுகிற செய்தி, முதலாளி வர்க் கத்தை நேரடியாக எச்சரிக்கிற போராட்டமாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்கள் கடந்த 6 மாதமாக நிலைத்து நிற்கிறது என்ப தாகும். கோரிக்கைகளும், முழக்கங்களும் மிக முக் கியமானதாக இருக்கிறது. இது அரபு நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து வெளி வந்த போராட்ட எழுச்சி என்பதனால், இடது சாரிகள் முன்வைக்கிற மாற்று கொள்கைகள் மீதான முழக்கத்தையும், அணிவகுப்பையும், போராட்ட சக்திகளிடையே அதிகரிக்க வேண்டி யிருக்கிறது. இருந்தாலும் உழைக்கும் வர்க்கம் தன் மீதான சுரண்டல்களுக்கு எதிராக போராட முன் வருகிற நம்பிக்கைக்குரிய காலம் இது.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: