மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


புதிய சூழலில் காப்புரிமை சட்டத் திருத்தங்கள்


என். சிவகுரு

உலகிலேயே இன்றும் அதிக லாபம் ஈட்டும் துறைகளில் ஒன்றாக உள்ளது மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை. மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள சூழலில், வேகமான மாற்றங்கள் (சமூக-பொருளாதார-கலாச்சார) காரணமாகவும், இத்துறையில் முன்னெப்போதும்  விட கூடுதல் முதலீட்டாளர் கள் இறங்கிவருகின்றார்கள். இது ஒருபுறம் இருக்க, இத்துறையில் ஏற்படும் வளர்ச்சிகளின் காரணமாக பல்வேறு புதிய வகை மருந்துகள் மக்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. அப்படிப் பெறப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் பயன் படுத்தும் வகையில் (விலை) இருக்கின்றதா என் றால் ஒரு வரியில் ஆம் (அ) இல்லை என பதில் சொல்லிவிட முடியாது.

காரணம் புதிய மருந்து ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு என்பது பெரும் முதலீட்டுக்கு உட்பட்டது. அந்த அளவுக்கு முதலீடு செய்திட இன்று இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு குறைவு தான். இதனால் பெரும் பணபின்புலத்தோடு உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் இத் துறையில் (சுநளநயசஉh யனே னுநஎநடடியீஅநவே) கவனம் செலுத்தி புதிய மருந்துகளை கண்டுபிடிக்க முடி கின்றது.

இதை கருத்தில் கொண்டு இன்று இந்திய அளவில் நடைபெற்றுள்ள சில முக்கிய விஷயங் களை நாம்காண வேண்டியுள்ளது.

காப்புரிமை என்றால் என்ன?

ஒரு பொருளை முதன்முறையாக உருவாக்கு வதற்கு தனிநபரோ (அ) குழுவோ முனைப்போடு பணியாற்றி தயாரிக்கப்படும் பொருள் வெற்றிகர மாக பயன்படுத்தப்படும் போது, மனித சமூகமே பயனீட்டாளர்களாக மாறுவர். அப்படிப்பட்ட அந்தர் பொருளை உருவாக்கக் காரணமாயிருந் தவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பொரு ளின் விற்பனை மூலம் ஈட்டப்படும் லாபம் அவரையோ (அ) சார்ந்துள்ள நிறுவனத்தையோ (குழு) சாரும் என நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட காப்புரிமைச் சட்டம் உலக அளவில் இருந்து வருகின்றது. இச்சட்டம் பெரிய அளவில் பிரபலமாகாமல்தான் இருந்தது. எண்பதுகளில் துவங்கிய உலகமயக் கொள்கை கள் இதை பிரபலமடைய வைத்தன. நம்மைப் போன்ற மூன்றாம் உலக வளரும் நாடுகளில் சட்டம் நேரடியாக வராமல் வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் (கூசுஐஞளு) என்றும், உருமாறி வந்து கையெழுத்துப் போட்டுஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டும் சட்டமாகிப்போனது. இப்படி கொல் லைப்புறமாக இதுவரும்போது எதிர்த்தது மார்க் சிஸ்ட் கட்சியும் மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட சில அறிவியல் விஞ்ஞானிகளும் அமைப்புகளும் மட்டுமே என்பதை நினைவில் கொள்வது அவசியம். அப்படி என்றால் கை யொப்பம் இடுவதற்கு முன்னர் இருந்த சட்டங்கள் இந்தியாவின் சுகாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது என்றால் மிகையாகாது.

இந்தியாவின் வேகமான சுயசார்பு வளர்ச் சிக்கு பெரிதும் காரணமாக இருந்த 1970 காப் புரிமைச் சட்டம் 2005ல் பலத்த எதிர்ப்புகளுக் கிடையே திருத்தப்பட்டது. இதிலும் மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டு நம் நாட்டின் நிலைமை களுக்கேற்ப திருத்தங்களையும், ஆலோசனை களையும் சொன்னது. சில ஏற்றுக்கொள்ளப் பட்டது. பெருமளவுக்கு நிராகரிக்கப்பட்டது. இந்தக் காலத்திலிருந்து செய்முறைக்கான காப் புரிமைச் சட்டம் மாறி (ஞசடிஉநளள ஞயவநவே) பொரு ளுக்கான காப்புரிமையாக (ஞசடினரஉவ ஞயவநவே) மாறியது.

விளைவுகளை பல்வேறு வகைகளில் இநதிய மக்கள் சந்திக்கின்றனர். இன்று அதில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதை சற்று விவரமாக பார்ப்போம்.

கட்டாய லைசென்சிங் – நல்ல தீர்ப்பு

மருத்துவத்துறையில் பல்வேறு நோய் தடுப்புக் கான தொடர் ஆராய்ச்சிகள் நடந்து வந்த போதிலும் புற்றுநோய்க்கான சிகிச்சையில் குறிப் பிடத்தக்க முடிவுகள் இல்லாவிட்டாலும், அந் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை முறையில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதே. இந்த விஷயத்தில் நீண்ட நாட்கள் உட் கொள்ள மருந்து என்பதால், “விலை” என்பது முக்கிய பங்காற்றுகிறது. இதை சாதகமாகப் பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காப்புரிமை வளையத்திற்குள் கொண்டுவந்து, நியாயமற்ற கூடுதல் விலையில் விற்று கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்ட நோயாளி கட்டாயம் தினமும் மருந்து சாப்பிட வேண்டும் என்பதால் என்ன விலை கொடுத்தேனும் வாங்க வேண்டும். இது தான் கொள்ளை லாபம் ஈட்டுவோரின் வெற்றி. இந்த விளையாட்டில் இந்த மாதம் ஒரு நல்ல தீர்ப்பு இந்தியாவில் வந்துள்ளது.

கல்லீரல் (டுiஎநச) மற்றும் (முனைநேல) ஆகிய உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கு சோரா பெனிப் டாசிலேட் (ளுடிசயகநnளை கூடிளலடயவந) எனும் மருந்து உலக மற்றும் உள்ளூர் சந்தையில் பாயர் (க்ஷயலநச) எனும் பன்னாட்டு நிறுவனம் நெக்ஸ் சாவர் (சூநஒயஎயச)  என்ற வர்த்தகப் பெயரில் விற் பனை செய்கின்றது.

1970ல் இயற்றப்பட்ட காப்புரிமைச் சட்டத்தின் 84வது பிரிவின்படி ஒரு மருந்து என்ன நோக் கத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதோ அதன் தேவைகள் முழுமையாக வெகுமக்களைச் சென் றடையவில்லை என்றால், அதன் காரணிகள் என்ன என்பதை அறிந்து உண்மையான நோக்கம் நிறைவேற்றப்பட எது தடையாக உள்ளது என்பது கண்டறியப்பட்டு அதற்கான மாற்றங்கள் செய்யப்படலாம் எனும் விதி உள்ளது. அவ்விதி யின்படி, காப்புரிமை காலம் முடிவுறும் தரு வாயில் குறைந்த விலையில், எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் எவரேனும் கொடுக்க (தயாரித்து) அவர்களுக்கு கட்டாய லைசென்சிங் முறை மூலம் அனுமதி வழங்கப்படும்.

அதுபோன்ற ஓர் அனுமதியை இந்திய நிறுவனம் (சூஹகூஊடீ ஞாயசஅய) ஒன்றிற்கு மார்ச் மாதம் வழங்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. கட்டாய லைசென்சிங் விதியின்படி வழங் கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப் பிடத்தக்கது.

அப்படி என்ன இருக்கிறது அந்த தீர்ப்பில்!

பன்னாட்டு நிறுவனமான பாயர் தயாரித்து விற்ற நெக்ஸ்சாவர் மருந்து மாதம் ஒன்றுக்கு ரூ. 2,80,000/-க்கு நோயாளி வாங்கிட வேண்டும். ஆனால் நாட்கோ நிறுவனம் ரூ. 8,800/-க்கு (ஒரு மாதத்திற்கு) வழங்குகின்றது. இது கிட்டத்தட்ட 97 சதவிகித விலை குறைவாகும்.

இது எப்படி சாத்தியம்? மருந்துகளை உற்பத்தி செய்திட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதில் ஒரு முறையை பயன்படுத்தி இம்மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

கட்டாய லைசென்சிங் முறையை பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்த்தும் இந்திய நிறுவனங்கள் வரவேற்றும் உள்ளன.

கட்டாய லைசென்சிங் முறை மூலம் குறைந்த விலையில் தயாரித்து வர்த்தகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நன்கு தேர்ச்சிபெற்ற விஞ்ஞானிகள் நெடுங்காலம் தயாரிப்பதற்கான மாற்று முறையினை (ஹடவநசயேவiஎந ஞசடிஉநளள) கண்டுபிடிக்க வேண்டும். பின்னர், மூலத்தயாரிப்பாளரிடம் லைசென்சிற்கு மனு செய்து பெற வேண்டும். பெறாத பட்சத்தில் நாட்டின் காப்புரிமைச் சட்டம் மற்றும் அமலாக்க அலுவலரிடம் மேல் முறையீடு செய்து  கட்டாய லைசென்சிங் பெறலாம்.

கட்டாய லைசென்சிங் என்பது எப்போது வழங்கப்படுகிறது என்றால் – ஒரு மருந்து எதற்காக தயாரிக்கப்படுகின்றதோ அதன் தேவைகளை முழுமையாக நிறைவேற்றாத போதும், வெகு மக்களின் பயன்பாட்டிற்கு தேவையான அள விற்கு கிடைக்காமல் இருந்தாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாங்க முடியாத விலைக்கு இருக்குமேயானால் மேற்சொன்ன முறை மூலம் வேறு ஒருவருக்கு தயாரித்திட அனுமதி அளிக் கப்படும்.

நெக்ஸ்சாவர் பிரச்சனையில், “விலை” என்பது குறிப்பிடத்தக்க அளவிற்கு வித்தியாசம் இருந்த தால்,  இந்திய அரசின் பதிவாளர் (காப்புரிமை) திரு. பி.எச். குரியன் இம்முறையை அமலுக்கு கொண்டுவந்துள்ளார். இம்முடிவு வரவேற் கத்தக்க, வரலாற்று சிறப்புமிக்க தைரியமான தீர்ப்பு.

“கிளிவெக்” தீர்ப்பு

மூன்றாம் உலக நாடுகளில் ஏராளமான நோய் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரு கின்றது. வாழ்நிலை மாற்றங்கள், உணவு பழக் கங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் மாற்றங்கள் – நகரமயமாதலின் தாக்கங்கள் காரணமாக புதிய நோய்கள் வேகமாக உயருகின்றது.

சுவிஸ்நாட்டு நிறுவனமான “நோவார்டிஸ்” (சூடிஎயசவளை) இரத்த புற்றுநோய்க்காக கிளிவெக் (ழுடiஎநஉ) எனும் மருந்தை உருவாக்கியது. 2005ல் இந்திய காப்புரிமைச் சட்டத்திருத்தத்தின்போது 3(ன) எனும் சட்டவிதியின் படி, புதிய மருந்து எனும் வரையறைக்குள் ஒரு கண்டுபிடிப்பு வராத பட்சத்தில், அம்மருந்துக்கு காப்புரிமை வழங்கிட முடியாது. அதே நேரத்தில், அம்மருந்து கூடுதல் விலைக்கு விற்கப்படக்கூடாது என்று கூறப் பட்டுள்ளது.

இந்தியாவில் புற்றநோயால் பாதிப்போருக்கு உதவி செய்யும் அமைப்பு “கிளிவெக்” மேற் சொல்லப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு நிற்பதால், இதை கூடுதல் விலைக்கு விற்பது அல்லது செய்வது இயலாது எனும் முடிவுக்கு வந்தது. இந்திய காப்புரிமை அலுவலகமும் இது நியாயம் என்று ஏற்றுக்கொண்டு, “நோவார்டிஸ்” நிறு வனத்திற்கு காப்புரிமை வழங்கிட மறுத்தது. இந் நிறுவனம் மனு செய்ததையும் ஒதுக்கியுள்ளது.

இந்திய காப்புரிமை அலுவலகம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இறுதித்தீர்ப்பு ஜூலை மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்திட நோவார்டிஸ் நிறுவனம் முன் னாள் சொலிசிட்டர் ஜெனரலான கோபால் சுப்ரமணியத்தை ஆஜராக வைத்துள்ளது. எவ் வளவு செலவழித்தேனும் மக்களை கொள்ளை யடிக்க வேண்டும்.

நோவார்டிஸ் இவ்வளவு செலவு செய்வதற்கு காரணம் இல்லாமலா இருக்கும்? இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் “கிளிவெக்” மருந்தை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண் டும். ஒரு மாதம் இம்மருந்து வாங்கிட செலவிடப் படவேண்டிய தொகை (வெறும்!) ரூ. 1,20,000 மட்டும்தான். ஆனால் பல இந்திய நிறுவனங்கள் இம்மருந்தை மாதம் ரூ. 8,000/-க்கு தயாரித்திட லாம் என்று நிரூபித்து வெற்றிகரமாக வர்த்தக மும் செய்தனர்.

நோவாப்டிஸ் நிறுவனத்தின் கோபம் இந்திய நிறுவனங்கள் குறைந்த விலையில் தயாரித்து விட்டார்களே என்பதல்ல, மாறாக இம்மருந்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 20,000 கோடி சம் பாதிப்பது (கொள்ளையடிப்பது) தடுக்கப்பட்டுள் ளதே என்பதுதான். 20,000/- கோடி என்பது இந்தியாவின் 2010 – 11 ஆண்டிற்கான மொத்த பட் ஜெட் தொகை. ஒரு நாட்டின் ஆண்டு பட் ஜெட்டை ஒரு நிறுவனம் குறிப்பிட்ட மருந்தில் சம்பாதிக்க எத்தனிக்கிறது.

கண்டுபிடித்தவரின் வேண்டுகோள்

“கிளிவெக்” மருந்தின் உட்கூறு மருந்தான இமாடினிப் மெசிலேப் (ஐஅயவinib ஆநளலடயவந)  ஆரம்ப நிலையிலிருந்து இரத்த புற்றுநோய் சிகிச்சைக் காக உருவாக்கியவர் பிரையன் டூரூகெர் (க்ஷசயin னுசரமநச). 2007ல் அவர் இதற்கான ஆராய்ச்சியை முடித்தவுடன் “எனது இந்தப் பணி கோடிக் கணக்கான நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளித்திட வேண்டும். அதற்காகத்தான் நோவார்டிஸ் நிறுவனத்திற்கு எனது கண்டு பிடிப்பை கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்ற, வாழ்நாளை நீட்டிக்க வைக்கவுள்ளேன். என் னுடைய பல நாள் கண்டுபிடிப்புக்கு உண்மை யான பரிசு என்பது இம்மருந்தால் பலரும் பயன்படுத்துவதுதான் என பொது நோக்கோடு அவர் சொன்னதை காலில் போட்டு மிதித்து விட்டு பலதரப்பட்ட மக்களையும் கொள்ளை யடிப்பது எப்படி நியாயமாகும்?

எதிர்பார்க்கப்படும் தீர்ப்பு

புற்றநோய் சிகிச்சையில் பன்னாட்டு நிறுவ னங்களின் கொள்ளை முயற்சியை ஓரளவுக்கு தடுத்திட சமீபத்தில் வந்திருக்கும் கட்டாய லைசென்சிங் தீர்ப்பும் – ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பும் இந்தியாவின் உள்நாட்டு மருந்து உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு பெரும் ஆதாரமாய் அமையும்.

ஆனாலும் எதிர்தரப்பில் உள்ள பன்னாட்டு பகாசூர நிறுவனங்கள் சாதாரணமானவையல்ல. நாம் ஏற்கெனவே பார்த்தது போல் ஒரு மருந்தின் விற்பனையில் நமது நாட்டின் ஓராண்டு வரவு செலவே உள்ளது. இருந்தாலும் மக்கள் சக்திக்கு முன்னர் எதுவானாலும் தூசுதான்.

பிரச்சனை என்னவென்றால், இது போன்ற மக்களின் வாழ்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எப்போதுமே முன்னுக்கு வருவதில்லை. சமீ பத்திய புள்ளிவிபரப்படி தனியார் மருந்து கடை கள் மூலம், சென்ற ஆண்டு மட்டும் ரூ. 56,000/- கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

அரசு பொது சுகாதாரத்தையும், மருத்துவ மனைகள், மருந்துவிலை என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிலிருந்து மெல்ல விலக்கி வருகின்றது. விளைவு மருந்துகளின் விலை வெளிச்சந்தையில் கட்டுப்பாடற்ற முறையில் உள்ளது.

மருந்து துறையில் பொதுத்துறை நிறுவனங் கள் இருந்த வரையிலும் விலைகளில் கட்டுப்பாடு இருந்தது. இன்று பொதுத்துறை நிறுவனங்களே இல்லாத நிலையில் தனியார் நிறுவனங்கள் காப்புரிமை என்ற பெயரிலும், கட்டுப்பாடு இல் லாத நிலையில் தங்கள் இஷ்டப்படி விலைகளை தீர்மானித்து மக்களை சுரண்டுகின்றனர்.

இன்றும் நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேலானோர் எந்தவித மருத்துவ வசதிகளற்று  உள்ளனர். இதற்கும் மேல் சில பகுதியினர் அடிப்படை சுகாதார வசதி களைக்கூட பெறாதவர்கள். இச்சூழலில், மக்க ளின் உயிரைக் காக்க மருந்துகளா அல்லது பறிக் கவா எனும் விவாதத்திற்கு புதிய கோணத்தில் நமது மருந்து துறை சென்றுகொண்டிருக்கிறது.

மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள மருத்துவ வசதிகள், மருந்துகள் எல்லோருக்கும் கிடைத்திடும் வகையில் இதை அனைத்து மக்கள் மன்றங்களிலும் விவாதப் பொருளாக்குவோம்! இந்தியாவின் சுயசார்பை காத்திட, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு காட்டும் திசை வழியில் மக்களை அணிதிரட்டி நாட்டை பாதுகாப்போம்!Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: