மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


திரிபுராவில் மீண்டும் இடது முன்னணி அரசு மாற்றுப் பாதைக்கு கிடைத்த வெற்றி


திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி அரசு தொடர்ந்து 5-வது முறையாக 6-3-2013 அன்று அரசுப்பொறப்பேற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. தோழர் மாணிக் சர்க்கார் தலைமையில் இடதுமுன்னணி 5 வது முறையும், ஒட்டுமொத்த இடது முன்னணி 7-வது முறையும் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் மொத்த முள்ள 60 தொகுதிகளில் இடதுமுன்னணி 49ல் வெற்றி பெற்றது. தற்பொழுது 50 தொகுதிகளில் வெற்றி பெற்று (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 49, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1) சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி இடதுமுன்னணி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும், செயல் முறைக்கும் கிடைத்த வெற்றி என திரிபுரா மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

1978-ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி ஒரு முறையைத் தவிர (1988-1993) தொடர்ந்து திரிபுராவில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வருகிறது. பதிவான வாக்குகளில் 52.30 சதவிகித வாக்குகளை இடதுமுன்னணி பெற்றுள்ளது. பழங்குடி மக்களுக்கான 20 தொகுதிகளில் 19 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை திரிபுராவில் தோற்கடிப்பதோடு நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக மகுடம் சூட்டப்பட்ட ராகுல் காந்தி திரிபுரா தேர்தல் பிரச்சாரத்தில் கொக்கரித்தார். மார்க்சிஸ்ட்டுகள் விரட்டப்பட வேண்டியவர்கள் அல்ல வளர்க்கப்பட வேண் டியவர்கள் என திரிபுரா மக்கள் தீர்ப்பளித்துள் ளனர். தொடர்ந்து 17-வது முறையாக இடது முன்னணி மக்கள் ஆதரவோடு வெற்றி பெறு வதற்கான பின்னணி என்ன?

தேசிய அளவிலும், திரிபுராவிலும் காங்கிரஸ், பாஜக கடைபிடிக்கும் அரசியல் பொருளாதார கொள்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும்  மாற்றுக்கொள்கையை திரிபுராவின் நிலைமைக் கேற்ப அமலாக்குவதன் மூலமே தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று வருகிறது. திரிபுராவின் மூன்று பக்கங்களும் வங்காள தேசத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. நமது நாடு 1947ல் சுதந்திரம் அடைந்தபோதிலும், மன்னராட்சியின் கீழ் இருந்த திரிபுரா 1949ல் தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. 1972-ல் திரிபுரா விற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. திரிபுரா உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களும் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலைமையில் இருந்தன. 1978- வரையில் காங்கிரஸ் கட்சியே திரிபுராவில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது.

1978-ம் ஆண்டு மறைந்த தோழர் நிருபன் சக்ரவர்த்தி தலைமை யில் இடதுமுன்னணி ஆட்சிக்கு வந்தது.  30 சதவிகிதம் மலைவாழ் மக்களும், 70 சதவிகிதம் வங்காளிகளும் வாழக்கூடிய இம்மாநிலத்தின் தற்போதைய மக்கள் தொகை 37 லட்சம். 1978-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இடதுமுன்னணி ஆட்சி அமைத் ததை பொறுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி வங்காளிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கும் இடையில் மோதலை உருவாக்கி திரிபுராவை கலவர பூமியாக மாற்றியது. மலைவாழ் மக்களின் வறுமைக்கும், ஏழ்மைக்கும் காரணம் வங்காளி கள்தான் என மலைவாழ் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டுமென கோரிக்கை வைத்து மலைவாழ் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை காங்கிரஸ் கட்சி தூண்டி விட்டது. மறுபுறத்தில் வங்காளிகளையும் மலைவாழ் மக்களுக்கு எதி ராக காங்கிரஸ் கட்சி மோத விட்டது.

1980ல் துவங்கி தொடர்ந்து பல ஆண்டு காலம் மலைவாழ் மக்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையில் மோதல் நீடித்தது. திரிபுரா யுவஜாதி சமிதி TUJS) என்ற தீவிரவாத அமைப்புடன் காங்கிரஸ் கட்சி இணைந்து மாநிலத்தின் பல பகுதிகளில் கலவரத்தை உருவாக்கியது. மலை வாழ் மக்களுக்கும் மற்ற பகுதி மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு காங்கிரஸ் டி.யு.ஜே.எஸ். உரு வாக்கிய கலவரத்தில் இதுவரையில் 1300க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தவர்களும், வங்காளி களும் கொல்லப்பட்டனர். 1980ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி மாநிலத் தலைநகரம் அகர்தலா விற்கு 30 கிலோ மீட்டருக்கு அருகில் உள்ள மந்த்வி என்ற கிராமத்தில் டியுஜேஎஸ் அமைப் பைச் சார்ந்தவர்கள் தாக்கி மலைவாழ் மக்கள் அல்லாதவர்கள் சுமார் 350 பேர் கொல்லப்பட்ட னர். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதா னோர் உள்ளிட்டு படுகொலை செய்யப்பட்டனர். வியத்நாம், மைலாய் படுகொலையை விட மோச மானது என பத்திரிகைகள் இச்சம்பவத்தை விளக்கியது. தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மலைவாழ் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்க காங்கிரஸ் கட்சியும், தீவிரவாத அமைப்புகளும் மோதலை உருவாக்கின. திரிபுரா மாநிலத்தின் மூன்று பகுதிகள் வங்காளதேசத்தால் சூழப்பட்டுள்ள நிலைமையைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் வங்காளதேசத்திற்குள் சென்று அங்கு பயிற்சி பெற்று திரிபுராவிற்குள் நுழைந்து கலவரத்தை உருவாக்கினர். அனைத்து திரிபுரா புலிகள் இயக்கம் மற்றும் பல பெயர்களில் பல தீவிரவாத அமைப்புகள் திரிபுராவில் காங்கிரஸ் ஆதர வோடு இயங்கி வருகின்றன. 1980ல் துவங்கிய வன்முறை தொடர்ந்து நீடித்தது. 2003ம் ஆண்டு நிகழ்ந்த 311 சம்பவங்களில் 38 பாதுகாப்பு படையைச் சார்ந்தவர்கள் உள்ளிட்டு 241 பேர் கொல்லப்பட்டனர். 2009ம் ஆண்டில் நிகழ்ந்த 24 சம்பவங்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட திரிபுரா பழங்குடி தேசியவாத கட்சி  என்ற தீவிரவாத அமைப்புடன் உடன்பாடு வைத்து கலவரத்தை உருவாக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து தோல்வியுற்றது.

இந்நிலையில் துவக்கத்திலிருந்தே ஒற்றுமை, முன்னேற்றம் என்ற இரண்டு முழக்கங்களை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக் களைத் திரட்டியது. கலவரத்தை உருவாக்கி 1988ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அடுத்து நடந்த தேர்தலில் மீண்டும் இடது முன்னணி ஆட்சிப் பொறுப்பேற்றது. திரிபுராவில் அமைதியையும், மக்கள் ஒற்று மையையும் உருவாக்குவதோடு பின்தங்கிய நிலைமையில் உள்ள மலைவாழ் மக்கள் முன் னேற்றத்திற்காக திட்டமிட்டதோடு திரிபுரா முழுவதும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளர்ச்சிக்கான ஒரு திட்டத்தை உரு வாக்கி இடது முன்னணி அரசு அமலாக்கி வரு கிறது. குறிப்பாக திரிபுரா உள்ளிட்டு நாடு முழு வதும் நாட்டு மக்கள் தொகையில் 8 சதவிகிதமாக உள்ள மிகவும் பின்தங்கிய மலைவாழ் மக்கள் பொருளாதார சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப் பட்டவர்கள். 1947க்குப் பிறகு மத்திய அரசு கடைபிடித்து வரும் கொள்கையினால் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நிலத்தி லிருந்தும் அவர்கள் வாழக் கூடிய வாழ்விடத்தி லிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகி றார்கள். அவர்களுக்கு நவீன கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒட்டு மொத்தத்தில் நாட்டு வளர்ச்சியிலிருந்து புறக் கணிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்களின் பொரு ளாதார, கலாச்சார, சமூக பிரச்சனைகளில் முன் னேற்றம் காணவேண்டும். இல்லையேல் அவர் கள் அந்நியப்பட்டு பிரிவினைவாத இயக்கத்திற்கு ஆட்படக்கூடிய ஆபத்து ஏற்படும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு மலை வாழ் மக்கள் பிரச்சனை பற்றி விவாதித்து உரு வாக்கிய அணுகுமுறை சுட்டிக்காட்டியுள்ளது. மலைவாழ் மக்களின் கீழ்க்கண்ட பிரச்சனை களை தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு ஆவணம் வலியுறுத்துகிறது.

  1. நிலத்திலிருந்து மலைவாழ் மக்கள் வெளி யேற்றப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
  2. வனவளத்தை பயன்படுத்திட மலைவாழ் மக்களை அனுமதித்திட வேண்டும்.
  3. வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றப் படுவது தடுக்கப்பட வேண்டும்.
  4. மலைவாழ் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றம்
  5. மலைவாழ் மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.
  6. கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்
  7. மலைவாழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
  8. மலைவாழ் மக்களுக்கு அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சுயாட்சி கவுன்சில் அமைக்கப் பட்டு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

மேற்கண்ட மத்தியக்குழுவின் வழிகாட்டு தலின் படி திரிபுராவில் இடது முன்னணி அரசு திரிபுரா முழுவதற்கும் மற்றும் மலைவாழ் மக்களுக்கு பல வளர்ச்சித் திட்டங்களை உரு வாக்கி அமலாக்கி வருகிறது. 1984ம் ஆண்டு மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளை கொண்ட சுயாட்சி மாவட்டக் கவுன்சிலை (அரசியல் சட்டத்தின் 7வது அட்ட வணையின்படி) இடது முன்னணி அரசு அமைத்தது.  ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் சுயாட்சி கவுன்சில் தேர்வு செய் யப்பட்டு அதன் தலைவரும் தேர்வு செய்யப்படுகிறார். சுயாட்சி கவுன்சிலுக்கு உட்பட்ட மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சிக்காக திட்டமிடும் அதிகாரமும் இந்த கவுன்சிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் சுயாட்சி கவுன் சில் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அமலாக்கி வருகிறது.

மலைப்பகுதியான இப்பிர தேசங்களில் கல்வி, சுகாதாரம், சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு விவசாயமும் வளர்ந்து வருகிறது. சுயாட்சி கவுன்சிலுக்கு உட்பட்ட கில்லா ஒன்றியம் கடந்தாண்டு சிறந்த வளர்ச்சிக்கான அகில இந்திய அளவிலான விருது பெற்றுள்ளது. மேலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமலாக்குவதிலும் திரிபுரா மாநிலம் முன்னணியில் உள்ளது. மூன்று புறமும் வங்காள தேசத்தால் சூழப்பட் டுள்ளதால் இந்தியாவின் மற்ற மாநிலங்களி லிருந்து இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் சரியான வாய்ப்பு இல்லை, வங்க தேசத்தில் உள்ள சிட்ட காங் துறைமுகத்திலிருந்து திரிபுராவிற்கு இறக்கு மதி, ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பை இந்திய அரசு ஏற்படுத்தி கொடுக்காததாலும் மற்ற மாநிலங்களிலிருந்து பல வகைகளில் சாலை மற்றும் ரயில்போக்குவரத்து இல்லாத நிலையில் திரிபுரா உள்ளது. மேற்குவங்கத்திலிருந்து தரைப் போக்குவரத்து மற்றும் ரயில்வே போக்குவரத்து மூலம் திரிபுரா செல்லவேண்டுமென்றால் சுற்றி வளைத்து அசாம் வழியாக நீண்டதூரம் செல்ல வேண்டும். இது பொருளாதார ரீதியில் லாபகர மானதல்ல. இத்தகையச் சூழலிலும் திரிபுரா மற்ற வடகிழக்கு மாநிலங்களை விட வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. வறுமை ஒழிப்பு:

திரிபுராவிற்கு மலைவாழ் மக்கள் பகுதி அல்லாமல் மற்ற பகுதிகளிலும் இடது முன்னணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எல்லா அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய திட்டக்குழுவின் ஆய்வின் படி 2004-05லிருந்து 2009-10 ஆண்டுகளில் திரிபுராவில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

வறுமைக்கோட்டின் அளவு
மாநிலம் 2004-05 2009-10
திரிபுரா 40 ரூ 17.4 ரூ
மணிப்பூர் 37.9 ரூ 47.1 ரூ
மிசோரம் 15.4 ரூ 21.1 ரூ
நாகலாந்து 8.8 ரூ 20.9 ரூ

மற்ற மூன்று மாநிலங்களில் வறுமையில் வாடுபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போது திரிபுராவில் வறுமைக்கோட்டின் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை என்பது 22.6 சதவிகிதம் குறைந்துள்ளது.

கல்வி

இந்தியாவில் உள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வியில் 2001ல் 13வது இடத்திலிருந்த திரிபுரா, 2011ல் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்க் கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோடு அவர் களுடைய கலாச்சாரமும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தேவைக்கும் மேலாக திரிபுராவில் மின்சார உற்பத்தியானாலும் (எரிவாயுவை பயன்படுத்தி) உபரி மின்சாரத்தை வேறு மாநிலத் திற்கு விற்பதற்கான பவர் கிரிட் ஏற்பாட்டை மத்திய அரசு செய்து தர மறுக்கிறது. மேலும் மாநில அரசு தொடர்ந்து வற்புறுத்திய போதி லும் சிட்டகாங் துறைமுகத்தை திரிபுரா பயன்படுத்துவதற்கு வங்கதேச அரசிடமிருந்து அனுமதி பெற்றுத்தரவும் மத்திய அரசு உதவி செய்ய மறுத்து வருகிறது.

இத்துனை தடைகள் இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடது முன்னணி அரசு மாற்றுப் பொருளாதாரக் கொள் கையை அமலாக்கிடுவதன் மூலம் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திரிபுரா மாநிலத்தில் மக்கள் ஒற்றுமையை உருவாக்குவதற்கு பிரிவினைவாத இயக்கத்தை எதிர்கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவத்தை மட்டும் நம்பியில்லை.

பிரிவினைவாத இயக்கத்தை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக இடது முன்னணி அரசு பார்க்கவில்லை. தீவிரவாதத்திற்கு எதிராக போலீசை பயன்படுத்தினாலும் பிரச் சனைகளுக்கு அரசியல் தீர்வுகாணவே இடது முன்னணி அரசு முயற்சித்தது. இத்தகைய அணுகுமுறையினால் இதுவரையில் காவல் துறையினராலோ, எல்லை பாதுகாப்பு படையின ராலோ மனித உரிமை மீறல் என்ற பிரச்சனை எழவில்லை என 2011ம் ஆண்டு ஆளுநர் டி.என். சகாய் கூறினார்.

அரசியல் தத்துவார்த்த போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வரு கிறது. பிரிவினைவாத இயக்கங்களை எதிர்த்து மலைவாழ்மக்களுக்கும், மற்ற பகுதி மக்களுக்கும் இடையில் ஒற்றுமையை உருவாக்குவதற்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சார்ந்த ஊழியர்கள் சுமார் 1800 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல நூறு தோழர்கள் காயமுற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை குறிவைத்தே பிரிவினைவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். அளப்பறிய தியாகத்திற்குப் பிறகு தான் மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பதோடு மாநில வளர்ச்சியையும் உருவாக்க முடிந்துள் ளது. 1940களில் திரிபுராவில் மன்னராட்சிக்கு எதிராக மலைவாழ்மக்கள் உரிமைகளுக்காக கம்யூனிஸ்டுகள் மகத்தான இயக்கத்தை நடத்தினார்கள். அக்காலத்திலும் மலைவாழ் மக்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையில் மோதல் உருவாவதை கம்யூனிஸ்டுகள் அனுமதிக்கவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி வெற்றிபெற்றுள்ளது என்ற செய்தி வந்த போது இந்த வெற்றி மக்கள் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் நேர்மையான, சிறந்த அரசு நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி என்று மாநில முதலமைச்சர் தோழர் மாணிக்சர்க்கார் கூறியுள்ளார்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: