நடந்து முடிந்த 48 மணி நேர வேலைநிறுத்தம் இந்திய தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். இந்த வேலை நிறுத்தம், ஆட்சியாளர்களிடமும் சில பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நியமித்த 4 அமைச்சர்களைக் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தித் தோற்றுப்போனது. அதே நேரத்தில் அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ளவும் தயாரில்லை. ஆனாலும் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத என இரு பிரிவு தொழிலாளர்களும் கணிசமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இவ்வேலை நிறுத்தம் மூலம் தொழிற்சங்கத்தினர், நாட்டின் மொத்த உற்பத்தியில் பல்லாயிரம் கோடிக்கு இழப்பு ஏற்படுத்தினர், என்று மத்திய அரசும், முதலாளிகள் அமைப்பும், தொழிலாளர் வர்க்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளன. இந்தியாவில் பிரதான எதிர்கட்சிகள் அனைத் தும் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரித்துள்ளனர். கேரளத்தில் முஸ்லீம் அமைப்புகள் உள் ளிட்டு வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துள்ளன. வங்கத்தில் மம்தாவின் அச்சுறுத்தல் பலனளிக்கவில்லை. தெலுங்கு தேசம், பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் வேலை நிறுத்தத்தை ஆதரித்துள்ளன. தமிழகத்தில் அதிமுகவிற்கு தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் முடிந்த அடுத்த நாள், 22ம்தேதி தனித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இந்த கட்சிகள் நவதாராளமயத்திற்கு எதிராக செயல் படவில்லை என்றாலும், தாங்கள் ஒதுங்கி இருக்க முடியாது என்பதை வேலை நிறுத்தம் மூலம் தொழிலாளி வர்க்கம், மேற்படிக் கட்சிகளுக்கு உணர்த்தியுள் ளது. குர்கான், நொய்டா உள்ளிட்ட, இந்தியா வின் பல்வேறு தொழில் மற்றும் மூலதனக் குவி மையங்களில் லட்சத்திற்கும் அதிகமான தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள னர். இவை இந்திய வரலாறு காணாத ஒன்று. இந்த முறை வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற வேண்டுகோளை, அரசுடன் சேர்ந்து, அசோசெம், சி.ஐ.ஐ, எஃப்.ஐ.ஐ.சி.ஐ ஆகிய முதலாளிகளின் சங்கங்களும் முன்வைத் தன. அந்த அளவிற்கு வேலை நிறுத்தத்திற்கானத் தயாரிப்பு இருந்துள்ளது.
அரசின் கொள்கைக்கு எதிராக 10 கோடிக்கும் அதிகமானத் தொழிலாளர்கள் பங்கெடுத்த பேரியக்கமாக, தொழிற்சங்கங்களின் 15வது வேலை நிறுத்தம் அமைந்தது. உலகின் பல நாடுகளில், இது போன்ற வேலை நிறுத்தங்கள் இக்காலத்தில் நடந்தாலும், இந்த எண்ணிக் கையை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. 10 கோடி குடும்பத்தில் தலா 3 நபர்கள் எனக் கொண்டாலும், 30 கோடி மக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர், என்பதைத் தொழிலாளி வர்க்கம் உணருவதும், தொடர்ந்து எதிர்ப்பியக் கத்தைத் தீவிரப் படுத்தவுமான அனுபவங்கள், மேற்படி வேலைநிறுத்தத்தின் மூலம் ஏராளமாகக் கிடைத்து உள்ளன.
விடுதலைப் போராட்ட வரலாறும் தொழிலாளர் இயக்கங்களும்:
இன்றைய பொது வேலைநிறுத்தம் நவ காலனியாதிக்கத்தை எதிர்த்த ஒன்று என்பதில் மாறுபட்ட கருத்து ஐ.என்.டி.யு.சி, பி.எம்.எஸ், எல்.பி.எஃப் போன்ற தொழிற்சங்கங்களுக்கும் கூட இருக்க முடியாது. தாராளமயக் கொள்கை களுக்கு எதிரான போராட்டம், வெறுமனே வேலை நிறுத்தம் மட்டும் அல்ல, மாற்று அரசிய லுக்கானது என்ற புரிதலில் தான் கம்யூனிஸ்ட்டு கள் பணிபுரிய முடியும். தேசிய அரசுகள் தங்க ளின் சுயாதிபத்தியத்தை விட்டுக் கொடுக்கும் அளவிற்கு, நிதிமூலதனம் மற்றும் ஐ.எம்.எஃப், உலக வங்கி ஆகிய அமைப்புகளின் ஆதிக்கம் வலுத்துள்ளது. இந்நிலையில் மாற்றுக் கொள் கையுடன் கூடிய வேலைநிறுத்தப் போராட்டங் கள், இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளா தார சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன் இணைந் தது. இந்தத் தன்மையில், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமை தாங்கிய தொழிற்சங்கங்கள் மட்டும் அல்லாது, வ.உ.சி, அம்பேத்கர் உள்ளிட்ட தேசியத்தலைவர்கள் தலைமையிலான தொழிற் சங்கங்களும் செயல்பட்டு வந்துள்ளன. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள்தான், தொழிலாளர் போராட்டங்களுடன் இணைந்து, இந்தியாவிற்கு முழுச் சுதந்திரம் என்ற முழக்கத்தை 1922ம் ஆண்டில் முன்வைத்தனர். அடுத்தடுத்த போராட்டங்களை யும் மக்கள் எழுச்சியையும் கண்ட ஆங்கிலேய அரசு, சைமன் என்பவர் தலைமையில் குழு அமைத்து, இந்திய மக்களுக்கு சில சட்ட திருத் தங்களின் மூலமாக அதிகாரத்தை அதிகப் படுத்த முயற்சித்தது. ஆனால் இந்தியாவில் இதை அன்று இருந்த காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளும், கம்யூனிஸ்டுகளும் மிகக் கடுமையாக எதிர்த்தனர்.
குறிப்பாக, பிரிட்டிஷ் பஞ்சாலை உரிமையாளர் கள் மீது, தொழிலாளர்களுக்கு இருந்த கோபத் தைக் கம்யூனிஸ்ட்டுகள், சைமன் குழுவிற்கு எதி ரான போராட்டத்துடனும், விடுதலைப் போராட்டத்துடனும் இணைத்தனர். அதாவது தொழிலாளர்களின் பொருளாதாரத் தேவையை, தேச விடுதலைக்கான ஏகாதிபத்திய எதிர்ப்புடன் இணைந்து கம்யூனிஸ்ட்டுகள் பணியாற்றினர். 1926 துவங்கி 1930 வரை அன்றைய பம்பாயில், 3,17,46,000 வேலை நாட்கள், வேலை நிறுத்த நாட்களாக இருந்தது என கிட்டி மேனன் குறிப் பிடுகிறார். அதாவது பஞ்சாலைகளில் பணி புரிந்த 70 சதமான தொழிலாளர்கள், கினி காம்கர் யூனியன் (செங்கொடிச் சங்கம்) என்ற அமைப் பின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சோலாப்பூர் நகரில் பஞ்சாலைத் தொழிலாளர்களும், ரயில் வேத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய வேலை நிறுத்தம் தீவிரம் பெற்றது.
அந்த சமயத்தில் சோலாப்பூர் நகருக்கு காங்கிரஸ் கட்சியின் வேலையாகச் சென்று இருந்த சி.ராஜ கோபாலாச்சாரி வேலை நிறுத்தத்தை சோலாப் பூர் நகர மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார். காந்தி கைது செய்யப்பட்ட போது தொழிலாளர்கள் ஆர்த்தெழுந்தனர், அது பிரிட்டிஷாரை அச் சுறுத்தும் வகையில் அமைந்தது என்றால் மிகை அல்ல. இத்தகையப் போராட்டங்களைத் தொடர்ந்து தான், 1928 கல்கத்தா காங்கிரஸ் வரையிலும், டொமினியன் அந்தஸ்து கேட்டுக் கொண்டிருந்த தலைவர்கள், 1929 ல் லாகூரில் நடைபெற்ற மகாசபையில் பூரண சுதந்திரம் என்ற முழக்கத்தையும், அதை அடைவதற்கான சத்தியா கிரஹப் போராட்டத்தையும் அறிவித்தனர். இதில் தொழிலாளர்களுக்கும், அவர்கள் சார்ந்த தொழிற் சங்கங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. யுனைடெட் பிரோவின்சஸ் ஒர்க்கர்ஸ் அண்ட் பெசண்ட் பார்ட்டி, பெங்கால் ஜூட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஜான்சி நகர் முனிசிபல் ஒர்க்கஸ் யூனியன், டிரேடு யூனியன் காங்கிரஸ், கிர்னி காம்கர் யூனியன், பெங்கால் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஈஸ்ட் பெங்கால் ரயில்வே யூனியன், லண்டனைச் சார்ந்த அமால்கா மேட்டட் எஞ்சினியரிங் யூனியன் (பி.எஃப். பிராட்லி), மதராஸ் பிரஸ் லேபர் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்களின் பொறுப்பாளர்கள், அன்றைய தினம் நடைபெற்ற போராட்டங்களின் காரணமாகக் கைது செய்யப்பட்டனர்.
இதே காலத்தில் தான் பகத்சிங்கும் அவரின் தோழர்களும், நாடாளுமன்றத்தில் யாரும் பாதிக்கப்படக் கூடாது, ஆனால் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை மிகுந்த வீரியத்துடன் வெளிப் படுத்த வேண்டும், என்ற நோக்கத்துடன் வீசிய வெடி குண்டாகும். வெடிகுண்டு வீசிடும் திட்டத்தை உருவாக்குகிற போது, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு, இந்தியத் தொழிலாளர்களையும், கம்யூ னிஸ்ட்டுகளையும் நசுக்கிட இரண்டு சட்டங் களைக் கொண்டு வந்ததை எதிர்க்க வேண்டும், என்பதை மையப்படுத்தித் திட்டமிட்டனர். ஒன்று பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெய ரிலும், மற்றொன்று தொழிலாளர் மசோதா என்ற பெயரிலும் தாக்கல் செய்யப் பட இருந்தது. 1929, ஏப்ரல் 8 அன்று, தொழிலாளர் மசோதா தாக்கல் செய்யப்பட்டவுடன், பகத்சிங்கும், பட்டு கேஸ்வர் தத்தும் நாடாளுமன்றத்தில் குண்டு களை வீசினர். மீரட் சதி வழக்கில் 31 கம்யூனிஸ்ட் டுகள் கைது செய்யப்பட்ட நிலையிலும், தொழி லாளர்கள் சென்னை, பம்பாய் உள்ளிட்ட நகரங் களில் பெரும் போராட்டங்களைத் தீவிரப்படுத் திய நிலையிலும் நடந்த நிகழ்வு என்பதனால், வேலை நிறுத்தங்களின் தாக்கம் அன்றைய தினம் எவ்வாறு இருந்தது, என்பதை உணர முடிகிறது.
அன்றைய சென்னையில் தொழிலாளர் பாது காப்பு இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட்டுகள், மதராஸ் பிரஸ் லேபர் யூனி யனைத் துவக்கி, பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளனர். சூளை மில் வேலை நிறுத்தம், பி.அண்ட் சி மில் வேலை நிறுத்தம், மதராஸ் ட்ராம்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆகியவற்றில் கம்யூனிஸ்ட்டுகளுடன், சில காங் கிரஸ் தலைவர்களும் தொழிற்சங்கப் பொறுப்பில் இருந்தனர்.
1936 முதல் 1939 வரை தொழிலாளர்கள் சென்னை நகரில் பெரும் எண்ணிக்கையில் வேலை நிறுத்தப் போராட்டங்களிலும், ஊர்வலம் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தினமணி, ஆந்திர பிரபா போன்ற அச்சகங்களிலும், அரசு அச்சு நிறுவனத்திலும், விம்கோ, சரஸ்வதி ஃபவுண்டரி உள்ளிட்ட நிறுவனங்களிலும் போராட்டங்கள் பல வாரங்களாக நடந்துள்ளது. பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகத் துவங்கிய இந்தப் போராட்டங்கள், தேச விடுதலையுடனும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
மெஜுரா கோட்ஸ் பஞ்சாலைகளில், தூத்துக்குடி நகரில் வ.உ.சி காலத்தில் நடந்த போராட்டம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி நகரில் ஆங்கிலேயருக்கு மட்டுமல்லாமல், ஆங்கிலேயரை ஆதரித்தவருக்கும், சலவை செய்ய, சவரம் செய்ய தொழிலாளர்கள் மறுத்ததாக, வரலாறு பதிவு செய்துள்ளது. இந்தப் பாரம்பரியத்தில் விக்கிரமசிங்கபுரம், மதுரை ஆகிய நகரங்களில் செயல்பட்ட மெஜுரா கோட்ஸ் ஆலைகளிலும் 1930 களுக்குப் பின் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதேபோல் கோவை நகரில் இருந்த பஞ்சாலைகளிலும் தொழிலாளர்கள் போராட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய விவரங்களை அறிய முடிகிறது. இவை அனைத்தும் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் பகிரங்கமாக செயல்பட்டத் தலைவர்கள் எடுத்த முன் முயற்சி என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
தொழிலாளர் போராட்ட வரலாற்றின் மற்றொரு பகுதியாக, இரண்டாம் உலகப் போரின் சில நிகழ்வுகளும் அமைந்தது. இரண்டாம் உலகப் போரின் வடிவம் 1941க்குப் பின் சோவியத் யூனியன் மீது ஜெர்மனும், பர்மாவை வீழ்த்தி இந்தியாவை நோக்கி ஜப்பான் படைகளும் முன்னேறிய சூழலில், இந்தியக் கம்யூனிஸ்ட்டுகள் பாசிசப் படைகளுக்கு எதிராக போராடத் தயாராகினர். அதேநேரத்தில் இந்தியாவில் நடந்து வந்த, ஆங்கிலேய முதலாளிகளுக்கு எதிராக, கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமையில் நடந்த தொழிலாளர் போராட்டங்களைக் கைவிடவில்லை. 1942ம் ஆண்டில் வேலை நிறுத்தங்களினால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, 7,32,000 ஆகும். மனித உழைப்பு நாட்களின் இழப்பு எண்ணிக்கை 57 லட்சத்து 70 ஆயிரமாக இருந்தது, என்று பி. ராமமூர்த்தி எழுதிய இந்திய விடுதலைப் போரில் கம்யூனிஸ்ட்டுகள் என்ற சிறு நூலின் மூலம் அறிய முடிகிறது.
அதாவது, ஒருபக்கம் பிரிட்டிஷ் அரசின் பாசிச எதிர்ப்பிற்கும், மற்றொருபுறம் முதலாளித்துவத்தின் எதிர்ப்பிற்கும் அன்றைய தொழிற்சங்க இயக்கங்கள் கவனம் செலுத்தும் தன்மையில் செயல்பட்டன. மேற்கண்ட விவரங்களின் மூலம், தேசவிடுதலை என்ற முழக்கத்தை, சாமான்ய உழைப்பாளர்களிடம் கொண்டு சென்றதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கும், தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கைகள் மீது நடந்த வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கும் பெரும் பங்கு இருந்துள்ளது.
ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனியாதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது, என்ற தேசிய எண்ணம் கொண்ட பலரும் இத்தகைய போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். ஒரு தொழிலாளரின் கோரிக்கைகளுடன், இதர பகுதித் தொழிலாளர்களும் தங்களின் கோரிக்கைகளுக்காக இணைந்ததாலும் தொழிலாளி வர்க்க பங்களிப்பையும், ஐக்கியத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதன் ஊடாக அரசியல் ரீதியாகத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்த வரலாறு, ஆகியவற்றையும் படிப்பினையாக புரிந்து கொள்ள முடிகிறது.
இன்றைய வேலை நிறுத்தங்களும் அந்நிய நேரடி முதலீடு என்ற நவகாலனியத்திற்கு எதிரான ஒன்றாகவே, பெரும் அளவில் பிரதிபலித்துள்ளது. அதன் விளைவுதான், இன்சூரன்ஸ், வங்கி ஆகியவை முடங்கிப் போனது ஆகும்.
2011 டிசம்பர் 1 அன்றும், 2012 செப்டம்பர் 20 அன்றும் நடந்த தேசம் தழுவிய வணிகர்களின் கடையடைப்பு போராட்டமும் இதனுள் அடங்கும். பென்சன் சட்டத்தில் செய்யப்படும் திருத்தமும், தொழிலாளர் வைப்பு நிதி பராமரிப்பில் அந்நிய நேரடி முதலீடு குறித்த மசோதாவும் பன்னாட்டு மூலதனத்திற்கான பட்டுக்கம்பள விரிப்பாகவே கருதப்படுகிறது. அன்று இந்திய விளைநிலங்கள் மான்செஸ்ட்டருக்கான உற்பத்தி மையமாக இருந்தது. இன்று மலிவு கூலிக்கான உழைப்பாளர்களைக் கொண்ட, சிறப்புப் பொருளாதார மற்றும் ஏற்றுமதி வளாகங்களாகச் செயல்படுகிறது.
ஆகவே தான் இப்போது நடைபெற்ற 48 மணி நேர வேலை நிறுத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பங்கெடுத்தத் தொழிலாளர்கள் அனைவரும், முழுமையாக இந்த அரசியலை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் வேலை நிறுத்தம் உலகுக்குத் தரும் சமிக்ஞை தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு என்ற அரசியல் தான்.
வேலை நிறுத்தமும் வர்க்க உணர்வும்:
வேலை நிறுத்தம் வர்க்க உணர்வு பெறுவதற்கான போராட்ட வடிவம் என்பதை லெனின் பல கட்டங்களில் விவாதித்து இருக்கிறார். அதாவது வேலைநிறுத்தங்கள் என்பவை போர்கலையைப் பயில்வதற்கானப் பயிற்சிப் பள்ளி, அது உண்மையான வர்க்கப் போருக்கான தயாரிப்புகளில் முக்கியமானது என்கிறார்.
வேலை நிறுத்தங்களின் போது அரசு இயந்திரங்கள் அப்பட்டமாக முதலாளிகளுக்கு சாதகமாகச் செயல்படுவதைப் பார்க்கிறார்கள். குறிப்பாகக் காவல்துறை தனது அடக்குமுறைத் தாக்குதல்களின் மூலமாக, முதலாளித்துவப் பாசத்தை வெளிப்படுத்துகிறது. (ஹரியானா மற்றும் நொய்டாவில் 3 தொழிலாளர்கள் சாகடிக்கப்பட்ட செய்தியும் இந்த உண்மையை பறைசாற்றுகிறது.) இச்செயல்கள் தொழிலாளிக்கு தொழிலாளி வர்க்க உணர்வை உருவாக்கிடும், என்கிறார்.
உழைக்கும் மக்கள் தங்கள் கோரிக்கை மீதும் அது தரும் பலன் மீதும் ஆழ்ந்த எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார்கள் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் பொருளாதார நிலை உயர்வுடன் இணைந்தது தான் மக்கள் இயக்கத்திற்கான பங்களிப்பு என்ற லெனினின் வாசகத்தை கவனிக்க வேண்டியதும் அவசியம்.
தொடர்ந்து நடைபெறும் வேலை நிறுத்தங்கள் சலிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும், இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? என்ற அவநம்பிக்கை சார்ந்த கேள்வியையும் சில தருணங்களில் சிலர் எழுப்புகின்றனர். பொருளாதாரம் மற்றும் அரசியல் வேலை நிறுத்தங்கள் பற்றி லெனின் எழுதிய கட்டுரை இந்த கேள்வியாளர்களுக்கு விடை பகருகிறது.
1895 முதல் 1904 வரையிலான பத்தாண்டுகளில், ருஷ்யாவில் நடைபெற்ற 100 வேலை நிறுத்தங்களில் 52 வேலை நிறுத்தங்கள் எந்த வெற்றியும் பெறாமல், தோல்வியில் முடிந்தது. ஆனால் 1905க்குப் பின் நடைபெற்ற 100 வேலை நிறுத்தங்களில் 23 மட்டுமே தோல்வியில் முடிந்தன. அதே நேரத்தில் 1907ம் ஆண்டில் நடைபெற்ற 100 வேலை நிறுத்தங்களில் 69 தோல்வியச் சந்தித்தன, என்கிற விவரங்களை வைத்து ஆய்வு செய்த லெனின், பின்வரும் முடிவுக்கு வருகிறார்.
பொருளாதார வேலை நிறுத்தம் மற்றும் அரசியல் வேலை நிறுத்தம் ஆகிய இரண்டும் இணைவது மிக அவசியம். இணைந்த காலங்களில் கூடுதல் வெற்றியும், இணையாத காலங்களில் குறைவான வெற்றியும் பெற முடிந்தது, என்பதாகும்.
குறிப்பாக வெகு மக்களை பரந்த தன்மையில் இந்த வேலை நிறுத்தங்களில் ஈடுபடுத்துவதன் மூலமே, இந்த அரசியல் மற்றும் பொருளாதார வேலை நிறுத்தம் ஆகியவற்றின் இனைப்பு உருவாகும்.
அரசியல் திரிபுகளிலும், சீர்திருத்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, குழப்பங்கள் ஏற்பட்ட காலங்களிலேயே, இது போன்ற பொது வேலை நிறுத்தமும், அரசியல் வேலை நிறுத்தமும் இணையமுடியாமல் போனது என்பதையும், திரிபுவாதிகளுக்கு, லெனின் எழுதிய விளக்கங்கள் மூலம் அறியலாம்.
தொழிலாளர் வேலை நிறுத்த காலங்களில் பெற்ற, சுயமான பட்டறிவை எண்ணிப்பார்க்கத் துணைபுரிவதன் மூலம் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்டு முன்னேறுவது சாத்தியம். இது மிக முக்கியப் பணி என லெனின் குறிப்பிடுகிறார்.
எனவே வரலாற்றின் அனுபவத்தில் இருந்து, நவகாலணியாதிக்கத்திற்கு எதிராகவும், தொழி லாளர்களை வர்க்க உணர்வு கொண்டவர்களாக மாற்றுவதற்கும் இது போன்ற வேலை நிறுத்தங்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
உதவிய நூல்கள்:
- தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு. என். ராமகிருஷ்ணன்
- சென்னைப் பெருநகரத் தொழிற்சங்க வரலாறு முனைவர். தே. வீரராகவன்
- வேலைநிறுத்தங்கள் பற்றி – லெனின்.
- தொகுப்பு பகத்சிங் வரலாறு – சிவவர்மா
Leave a Reply