இன்னொரு நிகழ்வை எடுத்துக் கொள்வோம். 1847-ஆம் ஆண்டுக் குளிர்காலத்தில், மோசமான விளைச்சலின் காரணமாகத் தானியங்கள், இறைச்சி, வெண்ணெய், பாலாடை, இன்னும் இவை போன்ற மிகவும் இன்றியமையாத பிழைப்பாதாரப் பொருள்களின் விலை வெகுவாக உயர்ந்து விட்டது.
தொழிலாளர்கள் அவர்களின் உழைப்புச் சக்திக்காக முன்போலவே இன்னும் அதே பணத் தொகையைப் பெறுகின்றனர் என வைத்துக் கொள்வோம். அவர்களுடைய கூலி குறைந்து விடவில்லையா? நிச்சயமாகக் குறைந்து விட்டது. அதே அளவு பணத்தைக் கொடுத்துக் குறைவான ரொட்டியும், இறைச்சியும், பிறவும் பெற்றனர். தொழிலாளர்களின் கூலி குறைந்தது, வெள்ளியின் மதிப்புக் குறைவாக இருந்த காரணத்தால் அல்ல, பிழைப்பாதாரப் பொருள்களின் மதிப்பு ஏறிவிட்ட காரணத்தால்.
முடிவாக, புதிய எந்திரங்களை ஈடுபடுத்தியது, சாதகமான பருவநிலை, இன்னும் இவை போன்ற காரணங்களால் அனைத்து விவசாயப் பண்டங்கள், தொழில் உற்பத்திப் பண்டங்கள் ஆகியவற்றின் விலை குறைந்து விட, உழைப்புச் சக்தியின் பண விலை அப்படியே இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதே அளவு பணத்துக்குத் தொழிலாளர்கள் இப்பொழுது அனைத்துவகைப் பண்டங்களையும் முன்னிலும் அதிகமாக வாங்க முடிகிறது. ஆக, கூலியின் பணமதிப்பு மாறாத காரணத்தால் அவர்களுடைய கூலி உயர்ந்துவிடுகிறது.
– கார்ல் மார்க்ஸ்
Leave a Reply