கடந்த சில பல வாரங்களாகவே இந்திய ஊடகங்கள் இந்தியா மீது சீனா படையெடுப்பு, எல்லையில் அத்துமீறல், இந்திய பகுதிகளை ஆக்கிரமிப்பு என பல தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டு வந்தன. தேசிய மாநில கட்சிகளின் அரசியல் தலைவர்களும் சீனாவுக்கு பதிலடி தர வேண்டும் என்று ஆக்ரோஷமாக அறிக்கை விட்டனர். ஆளுங் காங்கிரஸ் கட்சி, ஒரு பக்கம் எதிர்கட்சிகளை சமாளிக்க சீனாவுக்கு சவால் விடுவது போல் பேசிக்கொண்டே மறு பக்கத்தில் இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்கவே முயற்சித்தது.
பிரச்சனைதான் என்ன?
2013 ஏப்ரல் 15 அன்று இரவு சீன ராணுவத்தைச் சார்ந்த 50 வீரர்களைக் கொண்ட காலாட்படை பிரிவு கிழக்கு லடாக் பகுதியில் தௌலத் பெக் ஒல்டி என்ற இடத்தில் ஒரு தற்காலிக முகாமை அமைத்தது. இந்த இடத்திற்கு 500 மீட்டர் தொலைவில்தான் இந்திய ராணுவ முகாம் ஒன்று உள்ளது. ராணுவம் அமைத்த தற்காலிக முகாம் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்டதல்ல என்பது சீனாவின் வாதம். இல்லை இல்லை இந்திய பகுதிக்கு உட்பட்டது என்பது இந்தியாவின் வாதம். இதுதான் பிரச்சனையின் ஆரம்பம். இதைத் தொடர்ந்துதான் கிழக்கு வடாக் பகுதியில் சீனா அத்துமீறி நுழைந்ததாக ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணியும் அறிக்கை விட்டார். தேச நலனை பாதுகாக்க இந்தியா எல்லா நடவடிக்கையையும் எடுக்கும் என கூறினார்.
மன்மோகன் சிங் மட்டும் சற்று அடக்கமாக, இது உள்ளூர் பிரச்சனைதான் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் கருத்து தெரி வித்தார். ஏற்கெனவே திட்டமிட்டபடி மே மாதம் இரண்டாவது வாரத்தில் சீனா செல்வதாக இருந்த வெளி விவகார துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பிஜேபி சமாஜ்வாதி போன்ற கட்சிகளின் உரத்த எதிர்ப்பிற்கு பயந்து தனது சீன பயணத்தை ரத்து செய்தார். இந்திய அயல்துறை செயலர் ரஞ்சன் மத்தாய், சீன தூதரக அதிகாரியை அழைத்து எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பழைய நிலைக்கு சீன துருப்புகள் திரும்ப வேண்டும் என்று எச்சரித்தார். சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியும் சீன அதிகாரிகளுடன் விரைந்து பேசி ஒரு சுமுகமான தீர்ப்பு ஏற்பட கடும் முயற்சிகள் மேற்கொண்டனர்.
இறுதியில் மே 6 அன்று இந்திய அயல்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் இந்தியாவும் சீனாவும் இந்த எல்லை பிரச்சனையை பேசி தீர்த்துக்கொண்டதாகவும், ஏப்ரல் 15ந்தேதிக்கு அவரவர் எல்லைக்குள் துருப்புகளை நிறுத்திக் கொள்வதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் சீன அயல்துறை அமைச்சகமும் இந்த பிரச்சனை பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் இரு நாடுகளின் பரந்த நலன் களை முன்னிட்டு சுமுகமாக தீர்வு காணப்பட்ட தாக அறிக்கை வெளியிட்டது.
இந்திய சீன எல்லைப் பிரச்சனை நீண்ட நெடுங்கதை
இந்தியாவிற்கும் சீனாவிற்குமான வரையறுக் கப்பட்ட எல்லைக்கோடு இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட வகையில் இதுவரையில் வரை யறுக்கப்படவில்லை. இந்த பிரச்சனை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து வரக்கூடிய பிரச் சனையாகும். இந்தியாவிற்கும் சீனாவிற்குமான இந்த எல்லை தாவா ஏன் தீர்வுகாண முடியாமல் உள்ளது என்பதற்குள் பல அரசியல் உள்ளது. சீனாவின் எல்லைப் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட நாடுகள் சீனாவுடன் ஒரு சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை மேற் கொண்டு இந்த எல்லைப் பிரச்சனையை தீர்த்துக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியாவோ அவ் வாறு ஒரு நீடித்த முயற்சியை மேற்கொண்டு இதுவரை இந்த எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.
1914ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் வடக்கு கிழக்கு பகுதியில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரந்த பகுதியை சீனா விட்டுத்தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
மீண்டும் 1930ல் அதே போன்று ஒரு முயற்சி யில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு இறங்கியது. இம்முறை வலுவிழந்து இருந்த அன்றைய சீன அரசை நிர்பந்தித்து தாங்கள் விரும்பிய பகுதியை இந்திய பிரிட்டிஷ் அரசு இந்தியாவுடன் இணைத்துக்கொண்டது. வருங் காலத்தில் இதுவே நிரந்தரமாக்கப்பட்டு விடும் என பிரிட்டிஷ் அரசு நம்பியிருந்தது. துவக்கத்தில் மக்கள் சீன குடியரசும் அவ்வாறே கிட்டத்தட்ட அந்த எல்லையை அங்கீகரிக்க விரும்பியது. இந்த எல்லைக்கோடு இருதரப்பிலும் ஒப்பந்தப்படி ஏற்றுக்கொண்டதல்ல என்பதையும் இந்த எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி தாவாவிற்கு உட்பட்டது என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
பிரிட்டிஷ் அரசாங்கம் விட்டுச்சென்ற இந்த எல்லைப் பிரச்சனைதான் இன்றும் தொடர்கிறது.
மக்கள் சீனக் குடியரசு ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி எல்லைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு பதிலாக, அன்றைய பிரதமர் நேரு, தாவாவுக்கு உட்பட்ட இந்த பிரச்சனையில் பேசுவதற்கு ஒன்றுமில்லை. பிரிட்டிஷ் அரசு இணைத்துக் கொண்ட பகுதி இந்தியாவிற்கு உட்பட்டது என்ற கருத்தில் பிடிவாதமாக இருந்தார். அத்துடன் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள அக்சாய் சின் பகுதியும் இந்தியாவிற்கு உட்பட்டது என்று வாதம் புரிந்தார். பிரிட்டிஷ் அரசு காலத்திலேயே இந்த பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண் டும். அதுமட்டுமல்ல இந்தியாவின் வடக்கு பிராந்திய எல்லை பிரச்சனை தீர்வுகாணப்பட்ட பிரச்சனை என்றும், சர்வதேச அங்கீகாரம் உள்ளது எனவும் கூறி புதிய அதிகாரபூர்வ வரை படத்தையும் அப்போது நேரு வெளியிட்டார்.
நேருவிற்கு பின் வந்த அரசாங்கமும் நேரு கூறிய வாதத்தையே பின்பற்றி வருகின்றன. இந்திய எல்லை பிரச்சனையில் பேச்சுவார்த் தைக்கு இடமில்லை என்று கூறுவருகின்றன.
இருப்பினும் 1993ல் இந்திய-சீன எல்லைப் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டிட ஒரு ஒப்பந்தம்போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தற்போதுள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு இரு நாடுகளிலும் பொது வாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இரு நாடுகளுடன் இந்த எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் நிரந்தர முகாம் களை அமைக்காமல் இருந்து வருகின்றன. இதற் கிடையே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடை யில் எல்லை பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்று கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இருதரப்பிலும் உள்ள படைகள் தங்களுக்கு இடையில் தகவல் தொடர்பினை மேம்படுத்திக் கொள்ள இயலும். அதன் மூலம் அசம்பாவிதங் கள் நடக்காமல் தவிர்க்கலாம் என்பதும் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இதற்கிடையில் சில வருடங்களாகவே இரு நாடுகளுமே எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி யில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
சமீபத்தில் இந்திய அரசு எல்லை கட்டுபாடு பகுதிக்கு மிக அருகாமையில் ராணு விமான தளம் ஒன்றை நிறுவி வருவதை சீனா சாதாரண மாக எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல் இந்திய துருப்புகள் அதிகமாக இப்பகுதியில் நடமாடுவதையும் சீனா விரும்பவில்லை என்று தெரிகிறது. வெகு சமீபத்தில் லடாக் பிராந்தி யத்தில் உள்ள சுமர் மற்றும் பக்சே பகுதியில் இந்திய ராணுவம் பதுங்கு குழிகளையும் வேறு சில நிர்மாணப் பணிகளையும் மேற்கொண்டது தான் சீனாவிற்கு ஆத்திரமூட்டியுள்ளதாக தெரி கிறது.
1996ல் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி ஒரு குறிப்பிட்ட அளவு துருப்புகளை மட்டுமே இரு நாடுகளும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் நிறுத்த வேண்டும். 2005ல் மேற்கொண்ட மற்றொரு ஒப்பந்தப்படி பிரச்சனைக்கு உட்பட்ட பகுதியில் நிரந்தரமான முகாம்களை அமைக்கக்கூடாது என்றும் கூறப் பட்டிருந்தது.
சமீபத்தில் அருணாசலபிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் இந்திய அரசு புதிய படை பிரிவுகளை உருவாக்கியதும், மூன்று விமானப் படை தளங்களை ஏற்படுத்தியதும் சீனாவிற்கு எரிச்சலை தந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள துருப்பு களை குறைத்துக்கொள்ள ஒப்பந்தம் போடலாம் என சீன அரசு ஆலோசனை முன் வைத்தது. ஆனால் இந்திய அரசு தனது படைகளை அப் பகுதிகளுக்கு விமானம் மூலமே கொண்டு செல்ல முடியும் என்பதாலும், சீன ராணுவம் தரை மார்க்கமாகவே துருப்புகளைக் கொண்டுவர முடியும் என்பதாலும் கூடுதலாக துருப்புகளை நிறுத்தியுள்ளதைக் காரணம் கூறி தவிர்த்ததாகத் தெரிகிறது.
இருப்பினும் இவையெல்லாம் சீனாவின் தற்போதைய நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக கருத முடியாது.
சமீபத்தில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் கேந்திரமான, ராணுவ ரீதியான உறவுகளை மேற்கொண்டுள்ளன. பாரக் ஒபாமா சீனாவை மட்டம் தட்டி வைக்க வேண் டும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருவதன் பின்னணியில் இந்த நடவடிக்கைகள் சீனாவிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.
ஒரு பக்கம் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள எல்லை பிரச்சனையை தீர்க்க சுமுகமான நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் 4வது தடவையாக முக்கூட்டு பேச்சுவார்த்தை சமீபத்தில் வாஷிங்டனில் நடத்தின என்ற பின்னணியிலும் சீனா மிகவும் உஷார் நிலையில் உள்ளதாக தெரிகிறது.
இந்தியாவும், ஜப்பானும் சீனாவின் பிரம் மாண்டமான வளர்ச்சிக்கு மத்தியில் சீனாவை பல வழிகளிலும் கட்டுப்படுத்த அமெரிக்க உதவி அவசியம் என கருதலாம். அதேபோல் மேற் கத்திய நாடுகளில் சில ராணுவ தந்திர குருமார் களும் இந்தியாவும், ஜப்பானும் ராணுவ ரீதியாக மெத்தனமாக இருக்காமல் தங்களது ராணு வத்தை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மந்திரம் ஓதுகின்றனர்.
இந்தியாவுடனான எல்லை பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போதே சீனாவின் கிழக்கு கடற்கரையோர பிராந்தியத்தில் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையிலான தியாவூ தீவு பிரச் சனையில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் மோதல் உருவாகியது.
இந்த பிரச்சனையின் துவக்கமும் இதுதான். டோக்கியோவில் உள்ள யாசுகுனி கோயிலுக்கு ஜப்பானில் உள்ள எந்த மேல்மட்ட தலைவர் களும் செல்லக்கூடாது என்பது சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான ஒப்பந்தம். இந்த இடம் ஜப்பானின் போர்க்கால அட்டூழியங்களை நினைவுபடுத்துவதாக சீனாவும், தென் கொரியாவும் கருதுகின்றன. இந்த இடத்தில்தான் மிக மோசமான ஜப்பானின் போர் குற்றவாளி கள் புதைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தை மீறி ஏப்ரல் 21 அன்று ஜப்பான் துணை பிரதமர் (நிதியமைச்சர்) அந்த இடத்தை சென்று பார்வை யிட்டார். இந்த இடத்தில் ஜப்பான் போர் குற்ற வாளிகள் ஆவிகள் தங்கியுள்ளதாக நம்பிக்கை. இந்த நிலையில் ஜப்பான் துணை பிரதமர் யாசுகுனி கோவிலைச் சென்று பார்த்தது சீனாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாகத்தான் தியாவு தீவு பிரச்சனை கிளம்பியதாக தெரிகிறது.
அத்துடன் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத் தில் ஏப்ரல் 24 அன்று 21 முஸ்லிம்கள் கொல்லப் பட்ட சம்பவமும் சீனாவிற்கு கவலயை ஏற் படுத்தியிருக்கலாம்.
இவ்வாறு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் தனது நாட்டிற்கு எதிரான திட்டமிட்ட நடவடிக் கையாக சீனா கருதலாம். இதற்கு பதிலடி கொடுக்க சீனா தனது ராணுவ பலத்தை காட்டும் வகையில் இவ்வாறு நடந்து கொள்ளுகிறது என்று கருதுவதற்கும் இடமுண்டு.
ஆனால் இந்தியா அமெரிக்காவின் வலையில் விழுந்துள்ளது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. இந்திய ராணுவத்தின் சொற்படி இந்திய அரசாங்கம் தனது அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கைகளை மேற்கொண்டால் நமக்குத்தான் சிரமம். தற்போதுள்ள நிலைமை யில் இந்தியா பெரிய வல்லரசாக வேண்டும் என்ற நோக்கத்தை கைவிட்டு, ஆசிய நாடுகளின் ஒத்துழைப்புடன் பொருளாதாரத்தை பலப் படுத்தவும், அண்டை நாடுகளுடன் பரஸ்பர ஒத்துழைப்பை பெறுவதும் இந்தியாவின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். குறிப்பாக சீனாவுடன் பரஸ்பர வர்த்தக பொருளாதார மேம்பாட்டிற்கான ஒப்பந்தங்களை மேற் கொண்டு ஆசிய நாடுகளின் பரஸ்பர அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாப்பது அவசிய மாகும். அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எப்படியாவது ஆசிய நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும, தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் தொடர்ந்து முயற்சிக்கும் நிலையில் இந்த சூழ்ச்சி வலையில் சிக்காமல் இந்தியாவும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடு களும் பரஸ்பர ஒத்துழைப்பு, முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்திட வேண்டும்.
Leave a Reply