மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நவம்பர் புரட்சி கற்றுத் தந்தவை!


சுகுமால் சென்

தமிழில்: இரா.சிந்தன்

உலகப் புரட்சிகர இயக்கத்தின் வர லாற்றில் கடந்த நூற்றாண்டுகளில், உலகைக் குலுக்கிய ‘இரண்டு’ பத்து நாட்கள் உள்ளன: அவை ஜான் ரீட் எழுதிய புத்தகத்தின் தலைப்பு சுட்டுவதைப் போல அக்டோபர் புரட்சியின் 10 நாட்களும், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி யின் 20 வது மாநாடு நடந்த நாட்களும் (1956, பிப்ர வரி 14-25).  அதிரடியாகவும், திரும்பப் பெற முடி யாத வகையிலும் இந்த இரண்டு நிகழ்வுகளும் முன், பின் என்று குறிப்பிடும் வகையில் (புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றை) மாற்றிவிட்டன. வர லாற்றின் எந்த முக்கிய நிகழ்வும் இதற்கு ஈடாக எந்த நிகழ்ச்சியையும் என்னால் சிந்திக்க முடிய வில்லை. சுருக்கமாகச் சொன்னால், அக்டோபர் புரட்சி, உலக கம்யூனிச இயக்கத்தை உருவாக்கியது, 20 ஆவது மாநாடு அதனை தகர்த்தது”.

இதைச் சொன்னவர், புகழ்பெற்ற மார்க்சிய வரலாற்றியலாளர். உலக கம்யூனிச இயக்கம் மற்றும் உழைக்கும் மக்கள் போராட்டங்கள் பற்றி, மிகச் சமீபத்திய காலம் வரையிலான ஆய்வுகளை பல புத்தகங்களில் வழங்கி, சமீபத்தில் மரணித்த எரிக் ஹாப்ஸ்வம் அவர்கள். உண்மையில், 1917 ஆம் ஆண்டு ருஷ்ய பாட் டாளி வர்க்கத்தின் சாகசம் நிரம்பிய எழுச்சியின் பத்து நாட்கள், உலகையே உலுக்கி, அடிப் படையை மாற்றியமைத்ததை காட்சியுற்ற அமெ ரிக்க பத்திரிக்கையாளர் ஜான் ரீட் என்பவரின் சாட்சியம்தான் உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்ற புத்தகம்.  1881ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டின் பாட்டாளி வர்க்கம் ஆயுதமேந்தி நடத்திய புரட்சி, எதிர்பாராத வகையில் 2 மாதங்களுக்கு மேல் நீடித்திருக்க முடியாததை ஆய்வு செய்கை யில், பாரிஸ் கம்யூன் பற்றி குறிப்பிடும் மாமேதை கார்ல் மார்க்ஸ் அதனை  சொர்க்கத்தின் தாண்ட வம் என்கிறார். தோற்கடிக்கப்பட்ட காரணங் களை மார்க்ஸ் விளக்குகிறார், ஆனால் அதே நேரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார நடவடிக் கைகள், அதாவது முதலாளி வர்க்க ஆட்சிக்கு மாறாக பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியதிகாரம், உணர்த்திடும் செய்திகளைக் கண்டுகொள்ளு மாறு உலகத்தைக் கேட்டுக்கொள்கிறார். ஆனால் ரஷ்ய புரட்சி இதிலிருந்து மாறுபட்டது  – ருஷ்ய பாட்டாளி வர்க்கத்தால் ஒருங்கிணைப்பட்டட்ட ஆயுதப் புரட்சி, லெனின் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்பட்டது.

உலகை மாற்றியமைக்க தன்னை அர்ப் பணித்துக் கொண்டதும், பாட்டாளிவர்க்கம் தலைமையேற்ற அரசில் அமைந்தது போன்று மையப்படுத்தப்பட்ட,  அரை இராணுவ கட் டளைகளுக்கு கீழ்ப்படிந்ததுமான ஒழுங்கமைவைக் கொண்ட ராணுவமாக, லெனினிய நெறி முறைகளின்படி, உலக கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டமைக்கப்பட்டது. நாஜி ஜெர்மனியின் திமிரை நாராகக் கிழித்து, போரின் முடிவில் பெரும் சக்தியாக உருவெடுத்த சோவியத் ஒன்றி யத்துடன் தொடர்புடையதென்பதால் இது வொரு உலக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறியது. பரந்துவிரிந்த, பின்தங்கிய, வலுவில் லாத ஒரு நாட்டை, வல்லரசாக மாற்றிக் காட்டி யது ‘போல்ஸ்விசம்’. சோசலிசக் காரணிகள் பிற நாடுகளிலும் முன்னேற்றமடைந்தன, காலனிய நாடுகள், அரைக் காலனிய நாடுகளின் விடுதலை அதனைச் (சோவியத் ஒன்றியத்தைச்) சார்ந்தும், தயக்கத்துடனே என்றாலும் அதன் பாதுகாப்பிலும் அமைந்திருந்தன. அதனுடைய பலவீனம் எதுவாகவும் இருக்கலாம், ஆனால் அதன் இருப்பு சோசலிசத்தை கனவைவிட உயர்வான தென்று நிரூபித்தது. முதலாளித்துவ ஆட்சி யதிகாரச் சங்கிலியை ஒரு நாட்டில் மட்டும் (ரஸ்யாவில்) உடைத்தெரிவது மிகப்பெரிய சவால்தான். மற்ற நாடுகளில் கம்யூனிஸ்டுகளை மாஸ்கோவின் ஏஜெண்டுகளாகவும்,சோவியத் ஒன்றியத்தின் சோசலிச நோக்கங்களை முன் னெடுத்துச் செல்வதற்காகவே வடிவமைக்கப் பட்டவர்களாகவும் வகைப்படுத்திய பனிப்போர் சூத்திரதாரிகளின், உள்நோக்கம் கொண்ட கம்யூனிச விரோதப் பிரச்சாரமும் மிகப்பெரும் சவாலாக அமைந்தது.

1917 முதல் 1990 வரையிலான, சோசலிச ஆட்சி யின் 73 ஆண்டுகளுக்கு பின்னர், சோவியத் ஒன்றியம் 1991 ஆம் ஆண்டு தகர்ந்து வீழ்ந்தது. பெரும் குழப்பத்திலும், சிந்தனை நெருக்கடியிலும் ஆழ்ந்த உலக கம்யூனிஸ்ட் கட்சிகள், சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்த ஆய்வினை தொடங்கின, இதற்கிடையில் சில கம்யூனிஸ்ட் கட்சிகள் கலைக் கப்பட்டன அல்லது பாதியளவு கலைக்கப்பட்டன மேலும் சில தனது கட்டமைப்பை அப்படியே வைத்துக் கொண்டதுடன், சோவியத் ஒன்றியம் எனப்பட்ட சிவப்பு நட்சத்திரத்தை கலங்கரை விளக்கமாக அமைத்துக் கொள்வதை தவிர்த்து விட்டு, தங்கள் நடவடிக்கைகளை மறுநிர்மாணம்  செய்து கொண்டன.

அவை உலக கம்யூனிச இயக்கத்தின் மிகக் கடினமான நாட்கள், ஆனால், தற்போதைய உலக சூழலில், அனைத்து கம்யூனிஸ்டுகளும், கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளர்களும் மூல தனத்தின் ஆட்சிக்கும், உலக தொழிலாளி வர்க் கத்தின் மீதும் ஏழைகள் மீதும் உலக முதலாளித் துவம் தொடுத்துள்ள கொடும் தாக்குதலின் தற்போதைய வடிவமாக அமைந்திருக்கும் – புதிய தாராளவாத உலகமயத்திற்கும் எதிரான தாக்கு தலை மீண்டும் தொடங்கியுள்ளனர். ஆனால், ஏன் இது தோல்வியடைந்தது அல்லது உடைந் தது? என்பதுதான் தனது மரணத்தின் மூலம், சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய புதிர் – (இது) கார்ல் மார்க்ஸ் தனது ஆய்வின் மூலம் முன் வைத்த குறிப்பிடத்தக்க வலுவான வாதத்திற்கு விளக்கமாக அமைந்ததென்று கூறலாம். 1859இல் மார்க்ஸ் கூறியதாவது: மனிதர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சமூக உற்பத்தியின் மூலம், விருப்பத்திற்கு அப்பாற் பட்டிருந்தாலும், திட்டவட்டமான, அவசியமான உறவுகளுக்குள் நுழைகிறார்கள். பொருள் உற் பத்தி சக்திகளின் வளர்ச்சி, சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையில் உள்ள உற்பத்தி சக்தி களின் உற்பத்தி உறவுகளுக்குள் அல்லது இது குறித்து சட்ட ரீதியில் தெரிவித்தால் முன்னதாக அவர்கள் ஏற்று செயல்பட்டுக் கொண்டிருந்த சொத்து உறவுகளுக்குள் – மோதலை ஏற்படுத்து கிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் போக்கில், பழைய உறவுகள் (வளர்ச்சியைத் தடுக்கும்) பிணைச் சங்கிலிகளாக மாறிப்போகின் றன. நாம் பின்னர், சமூகப் புரட்சியின் காலகட்டத்தில் நாம் நுழைகிறோம்.

சமூகப் புரட்சிக்கான சூழலைக் குறித்த தத்து வார்த்த நிலைப்பாட்டில், மார்க்சை யாரும் மறுக்க  முடியாது. சிலர் வேண்டுமானால், மேற் கண்ட விளக்கம், ரஷ்யப் புரட்சிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறதா? என்று வாதாடலாம். ஆனால், அதைவிட, புரட்சிகர மார்க்சிய தத்துவத்தின் திரிபுகளும் – சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத் தின் தகர்வுக்கும்,  இன்றுவரை உலகம் முழுவதி லும் உள்ள கம்யூனிச இயக்கங்கள் சந்தித்து வரும் தத்துவார்த்த பிரளயத்திற்கும் களத்தை ஏற் படுத்திக் கொடுத்த – ஸ்டாலின் மறைவுக்கு பிறகான – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மாநாட்டைத்  தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளையும் மறுக்க முடியாது. இந்த அடிப் படையில், எரிக் ஹாப்ஸ்வ்ம் முந்தைய மேற் கோளில் குறிப்பிடும் வரலாற்று உண்மையை கவனிக்க வேண்டும்.

பின்தங்கிய விவசாயப் பொருளாதார சமூகம், முன்னேறிய இயந்திர உற்பத்தி சமுதாயமாக மாறிடும்போது – உற்பத்தி சக்திகள் ஒரு குறிப் பிட்ட புள்ளியில் தடையை ஏற்படுத்தும் விலங்கு களாக மாறினால்,  அதன்  சமூக, பொருளாதார, தத்துவார்த்தக் கட்டமைப்போடு, உற்பத்தி சக்திகள் மார்க்ஸ் குறிப்பிடும்படியான மோத லுக்கு உட்படுவதைக் காட்டும் தெளிவான உதாரணமாக இது அமைந்திருப்பதாக, இப் போதும் சிலர் எங்காவது வாதாடலாம். இன்று வரை, இது ரஸ்யப் புரட்சியைப் பொருத்து  விவாதத்திற்குரிய விசயம்தான். ஆனால், சோவியத் தகர்வு ஒரு உண்மையான நிகழ்வு. முடிவான இந்த வீழ்ச்சியில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மாநாட்டின் பாத்திரத்தை ஹாப்ஸ்வம் விளக்கியுள்ளார்.

ஆனால், இதனை எது மாற்றும்? ‘பழைய சமூகத்தை தூக்கியெறிவது, அதைவிட சிறந்த ஒன்றுக்கு நிச்சயம் இட்டுச் செல்லும், மனித குலம் தன்னால் தீர்க்கமுடிந்த பிரச்சனைகளையே தனக்கு விதித்துக் கொள்கிறது என்ற மார்க்சின் 19 ஆம் நூற்றாண்டு நம்பிக்கையை இனியும் நாம் பின் தொடர முடியாது. 1917 ஆம் ஆண்டில், ‘மனித குலம்’ அல்லது போல்ஸ்விக்குகள் தங்க ளுக்கு விதித்துக் கொண்ட சவால்கள் அவர் களின் காலத்திலும், புறச்சூழலிலும் தீர்க்க முடி யாதவையாகவோ அல்லது முழுமையாக தீர்க்க முடியாதவையாகவோ இருந்த அதே சமயம், அமெரிக்கா மற்றும் பிற மேற்கு ஐரோப்பிய பொருளாதாரங்களோடும், வாழ்க்கைத் தரத் தோடும் போட்டியிட முடியாத வகையில், போல்ஸ்விக்குகளுக்கு பனிப்போர் ஏற்படுத்திய உக்கிரமான சிரமங்களை வரலாற்றிலிருந்து மறந்துவிட முடியாது. மேலும், அந்தக் கால கட்டத்தில்  பண்பாடு, கலைகள், அறிவியல் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றில் சோவி யத்தின் சாதனைகளை விட்டுவிட்டு நோக்குவது பிழையாகிடும்.

சோவியத் வீழ்ச்சியின் காரணமாக எழுந்திருக் கும் பிரச்சனைகளுக்கு, எதிர்வரும் காலத்தில் தீர்வு உள்ளதென அதிகபட்ச நம்பிக்கையோடு இன்று வாதிட முடியும் அல்லது அடுத்தடுத்த தலைமுறைகள் கண்டறியும் தீர்வுகள் முந்தைய சோவியத் மற்றும் பால்கன் நாடுகளில் வசிப்பவர் களிடையே முன்னேற்றகரமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

‘மெய்யாக, நடப்பில் இருக்கும் சோசலிசம்’ என ஒரு பகுதியினர் குறிப்பிட்ட சோவியத் ஒன்றியத்தின் சோதனை முயற்சி, அதன் சீர்குலைவோடு முடிவுக்கு வந்தது. சீனாவைப் போல நீடித்து, நிலைத்திருக்கும் கம்யூனிச அரசாங்கங்கள், ஒரு மையமான, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மையப்படுத்தப்பட்ட பொருளா தாரம் அல்லது கிட்டத்தட்ட சந்தை இல்லாமல் கூட்டுறவால் நிர்வகிக்கப்படும் பொருளாதாரச் சிந்தனையைக் கைவிட்டுவிட்டனர்.

சோவியத் சோதனை முயற்சி, உலக முத லாளித்துவத்திற்கு மாற்றாக கட்டமைக்கப்பட வில்லை,  ஒரு பரந்துபட்ட பெருமளவில் பின் தங்கிய நாட்டில் நிலவிய, திரும்ப  ஏற்படும் சாத்தியமற்ற சிறப்பான வரலாற்றுச் சூழலுக்கு தகுந்த வகையில் கட்டமைக்கப்பட்டது. 1917 ஆம் ஆண்டு இறுதி வெற்றியைச் சாதித்த சோவியத் ஒன்றியம், உலகின் பிற பகுதிகளில் புரட்சிக்கு ஏற்பட்ட தோல்விகளின் காரணமாக, சோச லிசத்தை கட்டமைக்கும் முயற்சியில் தனியே விடப்பட்டது.

சமூக உடைமை மற்றும் உற்பத்தி சக்திகளின் திட்டமிட்ட மேலாண்மையும், விநியோகமும், பரிவர்த்தனையையும் அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் என்ற பாரம்பரிய சோசலிசத்தின் மீது, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி எத்தகைய சந்தேகங்களை ஏற்படுத்தியது என்பது மற்றொரு கேள்வி. ஏட்டளவில் பகுத்தறிவான பொருளாதாரப் பார்வையாக முதல் உலகப் போருக்கு முன்பு வரை ஏற்கப்பட்டு வந்த அந்தத் திட்டம், சோசலிசவாதிகளால்  இயற்றப்படவில்லை மாறாக  சோசலிஸ்டுகள் அல்லாத சுத்தமான பொருளாதாரவாதிகளால் எழுதப்பட்டது என்பது ஒரு ஆர்வமூட்டும் தகவல். அதிகார வர்க்கத்தினர் சோசலிசத் திட் டத்தை  செயல்படுத்தவேண்டும் என்ற  அதன் நடைமுறை, பின்னடைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படை. உண்மையான விலைக்கும், சந்தை விலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறைக்க அவர்கள் (சோசலிச நிர்வாகம்) ஒருபகுதி தலையீட்டைச் செய்துதான் ஆக வேண்டும், ஆனால் அது வாடிக்கையாளரின் விருப்பங்களைக் கணக்கில் கொண்டு செயல்படுவதே அன்றி, எது வாடிக்கையாளருக்கு உகந்தது என்று (அரசே) அறிவுருத்தும் அடிப்படையிலானதல்ல. இயற் கையாகவே இதுபற்றி அதிக விவாதங்கள் நடை பெற்றுக் கொண்டிருந்த, 1930களில், மேற்கத்திய சோசலிச பொருளாதாரவாதிகள், திட்டமிட்டு, மக்கள் விருப்பத்திற்கு உகந்த வகையில் பொருட் களுக்கு விலை நிர்ணயித்து பரவலாக்க வேண்டு மென்ற அனுமானத்திற்கு வந்தனர். இதைச் சொல்லி நிரூபிப்பது, ஓரளவு அதைப்போலவே சிறப்பாக இருந்த பொற்காலத்தின் கலப்புப் பொருளாதாரத்தை விட சோசலிச பொருளா தாரம் மேம்பட்டது என்று சொல்வதற்கல்ல, ஒரு பகுதியினர் அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். இது உண்மையில், சோசலிசம் குறித்த பொது வான கேள்விகளையும், சோவியத் யூனியனில் நடைமுறைப்படுத்தப்பட்டு 20 வது காங்கிரசைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் அழிக்கப்பட்ட சோசலிச நடைமுறையின் அனுபவங்களைக் குறித்த கேள்விகளும் வெவ்வேறானவை என்று தெளிவாக்குகிறது.

எரிக் ஹாப்ஸ்வம் தனது சொந்த அனுபவத்தி லிருந்து ஒரு சுவையான தகவலைக் கொடுக்கி றார், “1930களின் மிக நுட்பமான சோசலிசப் பொருளாதாரவாதியான ஆஸ்கர் லேஞ்,  லண்ட னில் ஒரு மருத்துவமனையில் சாகும் இடைக் காலத்தில், தன் தாய்நாடான போலந்தில் சோச லிசத்தைக் கட்டமைப்பதற்காக, அமெரிக்காவி லிருந்து திரும்பினார். தன்னைப் பார்க்க வந் திருந்த நண்பர்களிடமும்,  நான் உள்ளிட்டு அவர்மீது மதிப்புக் கொண்டவர்களிடமும் அவர் சொன்னது நினைவில் இருக்கிறது.

அவர் சொன்னது “1920 களில் நான் ரஸ்யா வில் இருந்திருந்தால், பக்கர்னைட் மிதவாதியாக இருந்திருப்பேன் (Bukharinite gradualist) சோவியத் தொழில்மயம் குறித்து எனது ஆலோசனை கேட்கப்பட்டிருந்தால், ரஸ்ய திட்டமிடுபவர்கள் உண்மையில் செய்ததைப் போல, மிகவும் வளைந்துகொடுக்கும், வரம்புக்கு உட்பட்ட இலக்கை பரிந்துரை செய்திருப்பேன். இப்போதும், நான் திரும்பிப் பார்க்கும் போது, என்னையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள் வது இதுதான். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் போல குழப்பமானதும், முரட்டுத்தனமானதும், அடிப்படைத் திட்டமில்லாத ஓட்டத்திற்கு ஏதாவது மாற்று  இருந்ததா? அப்படியொன்று இருந்ததாகச் சொல்ல நான் விரும்புகிறேன், ஆனால் முடியவில்லை. என்னால் ஒரு பதில் கண்டறிய முடியவிலை.” ஆஸ்கர் லேஞ் தனது இறுதி நிமிடத்தில் சொன்னது மிக முக்கியமான செய்தி. யாரால் பதில் சொல்ல முடியும்? சோவியத் முறை சோசலிசத்தின் விமர்சகர்கள் சொல்ல முடியுமா? 1917 ஆம் ஆண்டு நவம்பர் மூட்டிய நெருப்பு அழிக்க முடியாதது, அணையாது எரிவது. புறச் சூழல்கள் முறையாக கையாளப்பட்டு, பயன்படுத்தப்பட்டிருந்தால் ஏகாதிபத்தியமும் அதன் நிறுவனங்களும் மேற்கொண்ட கடுமையான பொருளாதார மற்றும் இராணுவ தாக்குதல்களி னால் சோவியத் ஒன்றியம் சிதைவுக்குள்ளாயிருந் தாலும் கூட, நம்பிக்கையின்மை தோன்றியிருக்காது. மேலே நாம் விவாதித்தவைகளைத் தாண்டி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னேற்றத்திற்கான மிக முக்கியமான நிபந்தனை, ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் கொள்ள வேண்டிய தத்துவார்த்த நேர்மையும், உறுதியும் ஆகும்.

English Version : Teachings of November RevolutionLeave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: