மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தோழர் உமாநாத்!


மார்க்சிசம் எனும் அரசியல் சமூக விங்ஞான பயிர் வளர பழமைவாத புதரை அகற்றி தமிழ் மண்ணைப்பக்குவப்படுத்த வாழ்க்கையை அர்ப் பணித்த தோழர் உமாநாத் போன்றவர்களுக்கு மரணம் என்ற சொல் பொருந்தாது. அத்தகையோர் உடல் மறைந்தாலும் வர்க்கப் போராட்ட களத்திலே சமூக உறவை மேன்மைபடுத்தும் வர லாற்று சக்தியாகி விடுகிறார்கள். அத்தகையோரின் வாழ்க்கையையும். முயற்சிகளையும் இலட்சியங் களையும் கனவுகளையும் அறிய நேர்கிறபொழுது ஒருவித சோகம் நம்மை ஆட்கொள்வதோடு மனசாட்சி உறுத்தத் தொடங்குகிறது. அந்த இலட் சியப் பிடிப்போடும் அர்ப்பணிப்புணர்வோடும் நாம் செயல்படுகிறோமா என்ற கேள்வி நம்மை உறுத்துகிறது.

அவரது மேடைப் பேச்சுக்கான குறிப்புகளை இன்று யாராவது படிக்க நேர்ந்தால் அதிகார பூர்வமான வரலாறு சொல்ல மறுக்கும் தகவல் களின் களஞ்சியமாக இருப்பதை உணர்வர்.

நெஞ்சை தழுவும் பேச்சு நடையில் நம் கண் முன்னே அரசியலில் மற்றும் பொதுவாழ்வில் தனி நபர் உறவுகளில் மறை பொருளாக இருக்கும் வர்க்கசாய்மானத்தையும்,வர்க்க மோதலையும் படம் பிடித்து காட்டிவிடுவார்.

வாழ்க்கையே போராட்டமாக ஆகிவிட்டவர் களுக்கு அதற்கான அரசியல் பொருளாதார கார ணங்களை உடனடியாக அறிய இயலாது. அவர் கள் அரசியலை அஞ்சு தரு பேயென்றென்னி நெஞ் சம் அயர்வர். அவர்களது நிலைகண்டு வருந்து வோரை கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் கார ணங்கள் இவையெனும் அறிவுமிலார் என்று பாட வைத்துவிடுவர்.

அறியாமை இருளில் தவிக்கும் அத்தகையோர் இவரது மேடைப் பேச்சை கேட்டபிறகு அரசியல் ஞானமில்லாமல் சுயமரியாதையோடு வாழமுடி யாது என்பதை நெஞ்சிலே ஏந்திச்செல்வர். அதன் பிறகு அவர்களுக்கு போராட்டமே அரசியலை கற்கும் பல்கலைக் கழகமாகிவிடுகிறது. அத்தகைய போராட்ட களத்திலே அவர் ஆசானாகிவிடுவார். போராட்ட களத்திலே உமாநாத்தின் போதனை கள் உழைப்பாளிகளுக்கு அரசியலை போதித்தது. மாடு மேய்க்கிற தஞ்சை சிறுவன் தனுஷ் கோடி யைப்போல், சோவியத் எழுத்தாளர் மக்சிம் கார்க்கி எழுதிய எனது பல்கலைக் கழகம் என்ற புதினத்தில் வருகிற குழந்தை தொழிலாளி போல்,. சிவகாசி பட்டாசு செய்யும் சிறுவன் சங்கத்தின் மூலம் அரசியல் கற்றது போல் அரசியலை போராட்ட களத்திலே கற்க அவரது மேடைப் பேச்சுக்கள் உதவின.

அவரது பேச்சுக்கள் உழைப்பாளிகளுக்கு கூட்டுணர்வுதான் வர்க்க விழிப்புணர்வு ஆகும் என்பதை உணரவைத்தன.. அவரது பேச்சுக்கள்   வர்க்க ஒற்றுமையே போராட்டகளத்திலே உயிர் காக்கும் ஆயுதம் என்பதை ஏற்கவைத்தன .அவரது பேச்சுகளில் பிரித்தாளும் அரசியல் சூதை அம் பலப்படுத்துவதற்கு அதிக அழுத்தம் இருக்கும். விவசாயி தொழிலாளி ஒத்துழைப்பு என்ற ஞானத்தின் அவசியத்தை வலியுறுத்துவதே முத் தாய்ப்பாக அமையும்.

ஆதராங்கள் இல்லாமல் அவர் எதையும் சொல்வதில்லை. அவரது வாதங்கள் நம்மை சுற்றி நிகழ்பவைகளை அடிப்படையாக கொண்டிருக் கும் கோட்பாடுகளோ, தத்துவமோ அடிநாதமாக இருக்குமே. தவிர வெளிப்படையாகத் தெரியாது. அவர்.படித்ததை வாந்தி எடுக்கும் எந்திரகதி மார்க்சியவாதியல்ல. அவர் படித்ததையும் கள நிலவரத்தையும் கணக்கிலெடுத்து செயல்படும். சிறந்த மார்க்சிய கிளர்ச்சி பிரச்சாரகன் ஆவார். தேவையானதை படிப்பவர். சுயமாக சிந்திப்பவர், மெய்ப் பொருள் காணவே விவாதிப்பவர். கட்சிக் குள் கருத்து வேற்றுமைகளை களைந்து கருத் தொற்றுமையோடு செயல்படவே விவாதம் அவ சியமென்ற இலக்கை மறக்காதவர். விவாதங்கள் நடக்கிற பொழுது சடங்குத்தன்மை தலை தூக்கி னால் இருட்டுலே உருட்டாதே உள்ளதை காட்ட வெளிச்சம் போடு என்பார். பொதுமேடையிலே கொள்கைப் போர் நடத்தாமல் மக்களை பழமை வாதங்களிலிருந்து விடுபடவைக்க இயலாது என்பதையும் உணர்ந்தவர்.

போதனைகள் மக்களை மாற்றாது போராட்ட அனுபவங்களே மக்களின் ஆசான் என்பதையும் அறிந்தவர். அமைப்புக்களில் திரட்டப்பட்ட மக்களின் போராட்டக்களமே அரசியலை கற்கும் இடமாக அமையமுடியும் என்றதை உணர்ந்தே அவரது நடைமுறை இருந்தது.

தோழர்களிடையே நிலவிய தோழமை உணர் வும், சுயவிமர்சன அடிப்படையில் குறைகளை களையும் முயற்சியும் அவருக்கிருந்ததால் புரட்சி கர கம்யூனிஸ்டாக வாழ்ந்தார். அவரது எடுத்துக் காட்டான பழக்கவழக்கங்களை நினைவு கூற நிகழ்வுகள் ஏராளம் உண்டு. இடம் கருதி மூன்று நிகழ்வுகள் மட்டுமே இங்கே குறிப்பிடப்படுகிறது..

வெண்மணி படுகொலை துயரத்தை அவர் மேடைகளிலே விவரித்த விதம் கேட்போரின் மனசாட்சியை தட்டி எழுப்பியது. சிம்சன் தொழி லாளர்கள் போராட்டத்தில் அவரது உரை வர்க்க ஒற்றுமையே வெல்லும் என்ற தன் நம்பிக்கையை போராட்டகளத்தில் நிற்போருக்கு ஊட்டியது. நெல்லிக்குப்பம் சக்கரை ஆலை தொழிலாளர் வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பின் மோசடியை மக்களிடையே கொண்டு சென்றவிதம். அரசாங்க எந்திரத்தின் மறை பொருளாக கிடந்த சுரண்டும் வர்க்க சார்பினை வெளிச்சம் போட்டு காட்டியது. 1968 டிசம்பரில் வெண்மணி படுகொலையை பத்திரிகைகள் சித்தரித்தவிதம். அரசியல் தலைவர் களின் அனுதாப செய்தியில் குறிப்பிட்ட கருத் துக்கள் இவைகளை இன்று புரட்டிப்பார்த்தால் நேர்மையான சராசரி மனிதன் அதிர்ச்சிக்கு உள் ளாவான். வெண்மணி கொடுமையை அன்று பத் திரிகைகள் இரண்டு சங்கங்களுக்கிடையே நடந்த மோதலாக சித்தரித்தன தினமணி தலையங்கம் சொன்னது கீழ்வெண்மணி சம்பவம் ஒரு குறிப் பிட்ட கூலிக்கு வேலை செய்த தொழிலாளர் களுக்கும் அதை எதிர்த்த தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட சண்டை. இதை நிலச் சுவானுக்கும் கிஸான்களுக்கும் நடந்த சண்டை போல கம்யூ னிஸ்டுகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்… வன்செயல்களைத் தூண்டுவோரை சர்க்கார் பார்த்துக்கொள்ளும்.. (28.12.1968) கீழ் வெண்மணி நிகழ்வு ஒரு நடுங்கத்தக்க அக்கிரமம் என்று சொன்ன தந்தை பெரியாரோ “இந்தியாவை ஆள இந்திய ருக்கு தகுதியில்லை” என்ற கருத்தோடு அதை இணைத்துக் கொண்டார்.

இராஜாஜி தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது என்று கண்டித்தார் வெந்து சாம்பலான அந்த ஏழை மக்களுக்கு ஆதரவாக ஒரு குரல் கூட அன்று இல்லை. மன்னர்கள் காலத்திலிருந்து நில உடைமையாளர்களின் சனாதன தர்மம் வளர்க்கும் கொடுமைத் தீயே சொந்த உழைப்பால் கிடைக் கும் கஞ்சியே இனிதென கருதி வாழ்ந்த அந்த உழைப்பாளி மக்களை சாம்பலாக்கியது என்ற வரலாற்று உண்மையை பத்திரிகைகளோ அர சியல் தலைவர்களோ ஏற்க முன்வரவில்லை. அவர் கள் ஏற்காவிட்டாலும் பொது மக்கள் ஆதரவு இருந்தால் அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று கருதிய மார்க்சிஸ்ட் கட்சி மக்களின் ஆதரவை திரட்ட முயற்சித்தது. அதில் உமா நாத்தின் பங்கு சிறப்பிற்குறியது. வெண்மணி கொடுமை கூலி உயர்வு கேட்கும் கிராமப்புற ஏழைகளை பயமுறுத்தவே நில உடைமையாளர்கள் அரங்கேற்றிய கொடுமை என்பதை ஆதாரங்களுடன், பத்திரிகை செய்திகளை சேகரித்து மேடையிலே விவரித்தார். அவரது பேச்சை கேட்டவர்கள் கேட்காதவர்களுக்கு கொண்டு செல்கிற முறையில் நெஞ்சிலே பதியவைத்தார்.

அன்று.புதிதாக பதவி ஏற்ற திமுக அரசிற்கு இந்த செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தின. மூதறி ஞர் ராஜாஜி கூறுவது போல் வயக்காட்டு போலீசை அனுப்பி விவசாயத் தொழிலாளர்களை அடக்குவதா? அல்லது பி. ராமமூரத்தி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதா? என்ற தர்மசங்கடம் ஏற்பட்டது.

அரசு எந்திரமோ நில உடைமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது.வழக்குகள் காவல் துறையின் முதல் தகவலறிக்கை எல்லாமே மேலதிகாரிகளால் தயாரிக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றுதான் அம் மக்களின் குரலாக இருந்தது.

தோழர் உமாநாத் விவசாயத் தொழிலாளர் பக்கம் அரசை நிற்கவைக்க பொதுமக்களின் ஆதரவை திரட்ட ஊர்ஊராக சென்று பிரச்சாரம் செய்தார். .

அரசு தடுமாறியது அதற்கு காரணங்களிருந் தன..   பதவியில் அமர்ந்து 20 மாதங்களான திராவிட முன்னேற்ற கழகம் சுயமரியாதை பாரம்பரியத்தையும் ஜஸ்டிஸ் கட்சியின் பாரம்பரியத்தையும் கொண்ட கலவையாகும். எனவே எந்த வழியில் செல்வது என்ற தயக்கம் அதற்கு ஏற்பட்டது.

தெளிந்த மார்க்சிய ஞானத்தின் அடிப்படையில் செயல்பட்ட சிங்காரவேலர், அக்கருத்துக்க ளோடு இணைந்து தமிழ் மொழியின் ஆக்கத் திற்கும், வளர்ச்சிக்கும் பாடுபட்ட தோழர் ஜீவானந்தம், சமூகத்தின் பிற்போக்கு சனாதன கருத்துக்களையும், நடைமுறைகளையும் எதிர்த்து புயலென எதிர்த்துப் போராடிய தந்தை பெரியார் போன்றோர் இணைந்து முற்போக்கான வழி காட்டுதலைக் கொண்ட இயக்கமாக சுயமரியாதை இயக்கம் இருந்தது. பெருமளவில் மக்களின் சிந்தனையினை கவ்விப்பிடித்த இயக்கமாகவும் இருந்தது.

ஜஸ்டிஸ் கட்சியோ பிரிட்டிஷ் ஆட்சியின் போது பிராமணர்களைப்போல் சலுகைகளை பெற உருவான போட்டி அமைப்பு. சுயமரியாதை இயக்கத்தின் இலக்கும் பதவிகளை பயன்படுத்தி சலுகைகளையும் சொத்துகுவிக்கும் வாய்ப்புக் களையும் அடையலாம் என்ற ஜஸ்டிஸ் கட்சி யின் இலக்கும் ஒன்றை ஒன்று வீழ்த்த அக்கட்சிக்குள் உட் பூசலாக உருவெடுத்தது. வெண்மணி கொடுமை நிகழ்ந்த சில மாதங்களிலே அண்ணாவும் மறைந்தார் திமுக சுயமரியாதை இயக்கத்தை முக மூடியாக்கி ஜஸ்டிஸ் கட்சியின் இலக்கை அரசியல் வழியாக்கி செயல்பட ஆரம்பித்தது.

அன்றைய மார்க்சிஸ்டு தலைவர்கள் அரசை விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்க வற்புறுத்தியதை அரசு கண்டு கொள்ளவே இல்லை. நியாயம் கேட்டு போராடினால் அரசு வேடிக்கை பார்க்காது என்ற நிலை வந்தது. திமுகவின் இரும்புக்கர ஆட்சி சுரண்டும் கூட்டத்தின் நேசமிகு நண்பனாக்கிவிட்டது. இது சிம்சன் தொழிற்சங்க போராட்டத்தில் தெளி வானது. சிம்சனில் தொழிலாளர்கள் சங்க உதவியுடன் அடிமைகளாக நடத்தப்படடனர் அதனை எதிர்த்து போராட்டம் வெடித்தது. அதற்கு ஆதரவாக தமிழக தொழிலாளர்களை திரட்ட மார்க் சிஸ்ட் கட்சியே முன்நின்றது. வி.பி.சிந்தன், பி. ராம மூர்த்தி, உமாநாத் ஆகியோரின் பங்களிப்பும் பேச்சுகளும் அனைத்துமே தொழிலாளர்களை ஒற்றுமை உணர்வோடு இருக்கவைத்தது. தொழிலாளர்களை ஈர்க்க வீறாப்பு பேச்சுபேசும் தலைவர் களையும் அவர்களது ஆலோசனைகளையும் பகுத்தறியும் ஆற்றலை உமாநாத்தின் பேச்சு கற்றுக் கொடுத்தது. அன்று உமாநாத் ஆற்றிய உரையும் அறுவர் குழுவில் அங்கம் பெற்று சுமூக தீர்வை பெற அவரது முயற்சிகளும்எழுத இங்கே இட மில்லை. அவரது சேவையால் வி.பி சிந்தனைப் போல் சென்னை நகர தொழிலாளர்களின் நேச மிகு ஆசானாக ஆனார்.

நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைத் தொழி லாளர்கள் பிரச்சனை வழக்காகி உச்சநீதிமன்றம் வரை நிர்வாகத்தால் கொண்டு செல்லப் பட்டது. வழக் கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தொழிற் சங்க தரப்பு வாதங்களை புறக்கணித்து நிர்வாக தரப்பு வாதங்களை ஏற்று தீர்ப்பு வழங்கினார். அதில் நியாயமிருப்பதாக கூட இவர் தீர்ப்பில் கருத்து சொல்லவில்லை நிர்வாகத் தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்த வாதங்களையே இன்னொரு நக லெடுத்து கையெழுத்திட்டு அது தான் தீர்ப்பு என்றார். இந்த ஊழல்மிகு தீர்ப்பினை உமாநாத் அம்பலப்படுத்தியவிதம் லெனின் சொன்ன முறையில் இருந்தது. இந்த ஒரு தீர்ப்பை மட்டும் காட்டி சுரண்டும் வர்கத்தின் ஆயுதமாக அரசு இருக்கிறது என்று பொதுமைப்படுத்தி அவர் பேசவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாட்டில் மூன்று கைகளை கொண்ட அரசு எந்திரத்தை சுரண்டும் வர்க்கம் எப்படி யெல்லாம் தனது சேவகனாக ஆக்க முயற்சிக்கும் அதனை எதிர்த்து உழைப்பாளி மக்கள் அரசியல் ரீதியாக போராட வேண்டும்   என்பதை விளக்கிட ஏராள மான ஆதாரங்களிலிருந்து சலித் தெடுத்து எதை எப்படி சொன்னால் பாமர மக்கள் மனதிலே பதியும் என்பதை அறிந்து பேசினார் பின் நாளில் அந்த நீதிபதி ஊழல் பேர்வழி என்று கண்டு பிடிக்கப்பட்டது உச்ச மன்ற நீதிபதிகளை அகற்று கிற அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு மார்க்சிஸ்ட் கட்சி இதனை நாடாளு மன்றத்திற்கு கொண்டு சென்று அவரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவந்தது. அந்த தீர்மானத்தை காங்கிரஸ் கட்சியும் திமுகவும் எதிர்த்து வாக்களித்து ராமசாமியை காப்பாற்றி விட்டது. நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவுகிற நாட்டில் அரசியலே அரசாங்க நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது என்ற உண்மையை உணரவைத்த உமாநாத் இன்று இல்லை. போராட்ட களத்தில் தன்வாழ்வை அமைத்துக் கொண்ட தோழர் உமாநாத் தந்தை பெரியார் தலைமையில் போராளியான தோழர் பாப்பாவை தன் வாழ்க் கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் தங்கள் புதல்விகளையும் கம்யூனிச இயக்கத்திற்குள் கொண்டு வந்தனர். கம்யூனிச இயக்கத்தின்பால் அவர்கள் கொண்ட அர்ப்பணிப்பு நம்மால் மறக்கவியலாது. அவரது சேவை சாகாவரம் பெற்று வழிகாட்டுகிறது.



%d bloggers like this: