மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் நடைமுறை உத்திகளின் வித்தகன் லெனின்


Basavapunnaih
Basavapunnaih

1970ம் ஆண்டு தோழர் லெனினுடைய பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது, தோழர் எம். பசவபுன்னையா லெனின் குறித்து பீப்பிள்ஸ் டெமாக்ரசி சிறப்பு இதழில் (22.04.1970) எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமான சூழ்நிலை குறித்த திட்டவட்டமான ஆய்வு என்ற அடிப்படையில் லெனின் உருவாக்கிய நடைமுறை உத்திகள் குறித்து, தோழர் பசவபுன்னையா மிக   ஆழமாக அறிந்திருந்தார். அது குறித்து அவருக்கு நமது பாராட்டினைத் தெரிவிக்கும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. இது தவிர, 22.04.2014ல் தோழர் லெனினுடைய 144 வது பிறந்த தின ஆண்டு நிறைவின் பின்னணியிலும், இது இப்போது மறு பிரசுரம் செய்யப்படுகிறது.

தோழர் பசவபுன்னையா எழுதிய அக்கட்டுரையின் ஒரு பகுதி, 1970 களில் இந்தியப் புரட்சியின் முன்னேற்றம் குறித்து விவரிக்கிறது. இன்றிருக்கும் சூழ்நிலைக்கு அது சற்றும் பொருந்தி வராத நிலையில், அந்தப் பகுதி இங்கு தவிர்க்கப்பட்டு விட்டது. அந்தப் பகுதி தவிர, அவரது கட்டுரை இங்கு முழுமையாக இடம் பெற்றுள்ளது. இன்று நிலவும் இந்திய அரசியல் சூழல் குறித்து இதில் குறிப்புகள் உள்ளன. அவற்றில் சில சற்று காலம் கடந்தவை எனினும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நமது கட்சி எப்படியெல்லாம் நடைமுறை உத்திகளை வகுத்தது என்பது குறித்து கற்றுக் கொள்வதற்கான அனுபவமாக இக்கட்டுரை அமையும் என நம்புகிறோம்.

– ஆசிரியர்

மகத்தான ரஷ்ய சோஷலிஸ்ட் புரட்சியின் நிலைத்து வாழும் சிற்பியும், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தின் தலைவனு மான விளாடிமிர் இலியிச் லெனினுடைய பிறந்த தின நூற்றாண்டு ஏப்ரல் மாதம் 22ம் நாள் வருகிறது. உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் வர்க்கம் சார்ந்த கம்யூனிஸ்ட் அமைப்புகள் அனைத்தும், இந்நாளை உரிய வகையில் சிறப் பாகக் கொண்டாட உள்ளன. மார்க்சிய அறிவுக் கருவூலத்திற்கும், உலகப் பாட்டாளி வர்க்க சோஷலிசப் புரட்சிக்கும் அவர் அளித்திருக்கும் பங்கினை நினைவு கூறும் வகையில், அந்த மகத்தான நூற்றாண்டு விழா அமையும். லெனி னுடைய பங்களிப்பின் பல்வேறு அம்சங்களை ஒரு சில பக்கங்களே கொண்ட இந்தக் கட்டுரை யில் அடக்கி விட முடியாது. எனவே, ஒரே ஒரு அம்சம் குறித்து மட்டும் இங்கு பார்க்கலாம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, அதை மேலும் திடப்படுத்துவது ஆகியவற்றிற்கான உழைக்கும் வர்க்கப் போராட்டத்தில், நடைமுறை உத்திகளின் வித்தகனாக அவர் வெளிப்படுத்திய மகத்தான ஆற்றலையும் வல்லமையினையும் இங்கு விவாதிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

மகத்தான ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்கு இட்டுச் சென்ற நீண்ட நெடிய போராட்டத்தில், பல திருப்பங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொரு திருப்பத் திலும் அந்தந்தக் காலச் சூழ்நிலையினை ஆய்வு செய்து அதற்குரிய உத்திகளை அவர் வகுத்துக் கொடுத்தார். அவை கம்யூனிஸ்டுகளுக்கு பிழை யற்ற வழிகாட்டல்களாகவும், முன்மாதிரியாகவும் திகழ்ந்து வருகின்றன. உலகம் முழுவதுமுள்ள கம்யூனிஸ்டுகள் இவற்றையெல்லாம் கற்றறிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மார்க்சியத் திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் விசுவாசமான ஆதரவாளர்களாகவும், லெனினை வியந்து பாராட்டுகிறவர்களாகவும், மார்க்சிய லெனி னியச் சித்தாந்த அறிவில் தேர்ச்சி பெற்றவர் களாகவும் இருக்கும் பலர் கூட, இந்தக் குறிப் பிட்ட அம்சத்தில் லெனினுடைய மேதமை குறித்து போதிய கவனம் செலுத்துவதில்லை. அடுத்தடுத்து மாறி வரும் புதிய புதிய சூழ்நிலை களுக்குத் தகுந்தாற் போல், உரிய உத்திகளை வகுப்பதில் நம்மில் பலர் தட்டுத் தடுமாறுகிறோம், சில வேளைகளில் பெரும் தவறுகளைக் கூடச் செய்து விடுகிறோம். இது குறித்து திறந்த மன துடன் விவாதிப்பதில் நமது சுய கௌரவம் (ஈகோ) குறுக்கே நிற்கத் தேவையில்லை. லெனி னுடைய உத்திகள் குறித்து லெனின் கற்றுத் தந்ததை யெல்லாம் நினைவில் வைத்திருப்பது மட்டுமே நமது பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு அளித்து விடும் என்று கம்யூனிஸ்டுகள் நம்பு வார்கள் எனில், அது அப்பாவித்தனம். ஆனால், அவருடைய வெற்றிகரமான உத்திகளையும், அவற்றின் பின்னணியில் இருந்த சித்தாந்தங்களை யும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள் வது நமக்கு பெருமளவு நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.

நீண்ட கால உத்தியின் ஒரு பகுதியே நடைமுறை உத்தி!

இராணுவப் படைகளுக்கெதிரான உத்திகள் தான் நடைமுறை உத்தி என்பதன் மரபார்ந்த பொருள். இதுவே, பின்னர் மார்க்சிய-லெனினியச் சொல்லாடலாகவும் மாறியது. வர்க்க எதிரிகள், முதலாளிகள் ஆகியோரிடமிருந்து அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றுவது புரட்சிகரமான பாட்டாளி வர்க்கத்தின் நீண்ட கால இலக்கு. அந்த நீண்டகால இலக்கினை அடைவதற்கான அன் றாடப் போராட்டத்தில், நடைமுறை உத்திகள், பாட்டாளி வர்க்கத்தின் விஞ்ஞானமாகவும், கலையாகவும் மாறின. ஆனால், முதலாளிகளும், அவர்களது சித்தாந்தவாதிகளும் இந்தச் சொல் லைக் கொச்சைப் படுத்தினர். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கான தற்காலிகமான தந்திரங்கள் என்பது போன்று, அவர்கள் அதன் மீது வெறுப்பேற்றி, அவதூறு செய்தனர். மார்க் சிய லெனினியவாதிகள் எவரும், நடைமுறை உத்தி என்ற சொல்லாடலுக்கு, பொருள் திரிக்கப்பட்ட, முற்றிலும் சந்தர்ப்பவாதத் தன்மை கொண்ட அத்தகைய அர்த்தத்தினை ஏற்றுக் கொள்வ தில்லை. புரட்சிகரமான தொழிலாளி வர்க்கத்தின் நீண்டகால (கேந்திர) உத்தியின் பிரிக்க இயலாத ஒரு பகுதியாகவே நடைமுறை உத்தியினைப் பார்க்கிறார்கள். திட்டவட்டமான சூழ்நிலை – அதாவது, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வெளிப் படும் வர்க்க எதார்த்தம் – குறித்த திட்டவட்ட மான, பாரபட்சமற்ற ஆய்வின் அடிப்படையில் உருவாகும் உத்தியாகவே அதைப் பார்க்கிறார்கள்.

ஒரு உத்தி, அந்தச் சொல்லாடலுக்குரிய தகுதி யுடன் இருக்க வேண்டும் எனில், அதன் உள்ளடக்கத்தில் வலுவான கோட்பாடுகள் கொண்ட செயல் திட்டம் ஒன்று இருக்க வேண்டும். கோட் பாடுடன் கூடிய உத்திகளை எதிர்த்தவர்களை எதிர்த்து லெனின் கடுமையாகப் போராடினார்.

அவர் காலத்திய பொருளாதாரவாதிகள் சிலர், தானாகவே உருவாகும் நிகழ்வுகளுக்கு இசைவாக நிலையெடுத்தது மட்டுமின்றி, அதை கோட்பாடு என்ற நிலைக்கும் உயர்த்தினர். அவர்களைப் பொறுத்த மட்டில், கட்சியுடன் சேர்ந்து உரு வாகும் கட்சிக் கடமைகளின் வளர்ச்சிப் போக்கு தான் நடைமுறை உத்தி எனப் புரிந்திருந்தனர். எந்தப் போராட்டம் சாத்தியமோ, அந்தப் போராட்டமே விரும்பத் தக்கது; எது சாத்திய மானதோ அந்தப் போராட்டமே நடந்து கொண் டிருக்கிறது என்பதே அந்த பொருளாதார வாதிகளின் நிலைப்பாடாக இருந்தது. இந்தப் போக்கினை எல்லையில்லா சந்தர்ப்பவாதம் என லெனின் கடுமையாகச் சாடினார். லெனின் இது குறித்து பின்வருமாறு எழுதுகிறார்:

சூழ்நிலைக்கு ஒத்திசைவாக பல போராட்ட வடிவங்கள், திட்டங்கள், வழிமுறைகள் இருக்கக் கூடும். ஆனால், அவைகளை எல்லாம் கோட்பாடு என்ற பெயரில் குழப்பி விட்டு, ஒரு குறிப்பிட்ட அரசியல் தருணத்தில் ஒரு குறிப்பிட்ட திட்டத் தின் அடிப்படையில் தான் போராட வேண்டும் என்பது சிலரின் வாதம். இது எப்படி இருக்கிற தெனில், நோய்களுக்கு பலவகை மருத்துவமுறை கள் மருத்துவ விஞ்ஞானத்தில் இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட முறை யில் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் எனக் கூறுவது போல் உள்ளது. (தொகுதி 5. பக். 397)   நடைமுறை உத்தியை திட்டம் எனக் கூறுவது மார்க்சியத்தின் சாரத்தினையே மறுப்பதாகும் என சில பொருளாதாரவாதிகள் கூறினர். அது குறித்து லெனின் எழுதுகிறார்: இது மார்க்சியத் தின் மீதான அவதூறு ஆகும். நமக்கு   எதிரான போராட்டத்தில், நரோத்னிக்குகள் நம்மைக் குறித்து வரையும் கேலிச்சித்திரம் போன்றது இது. வர்க்க உணர்வு கொண்ட போராளிகளின் தன்முனைப்பினையும், வல்லமையினையும் சிறு மைப்படுத்துவது என்பதே இதன் பொருள். மாறாக, மார்க்சியம் சமூக ஜனநாயகவாதியின் தன்முனைப்பிற்கும், ஆற்றலுக்கும் பெரும் ஊக்கத்தினை அளிக்கிறது; செயல் பரப்பில் விரிவான காட்சிகளை அவன் கண் முன் நிறுத்து கிறது. (இன்னும் கூட அதை வர்ணிப்பதெனில்), தன்னெழுச்சியாக போராட்டத்தில் இணையும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஒட்டு மொத்த பலத்தினையும் அது அவன் முன் வைக்கிறது அரசியல் பிரச்சாரம், போராட்டம், புரட்சிகரமான செயல்பாடுகளுக்கான ஸ்தாபன பலம்     ஆகியவை போதிய அளவு இல்லாத கார ணத்தால், ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள் பலர் தன்முனைப்பும், ஆற்றலும் அற்ற நிலையில் இருக்கும் போது, அவர்கள் முன் திட்டத்தினை நடைமுறை உத்தி என்று அறிவிப்பது மார்க்சியத் தின் சாராம்சத்தினையே மறுப்பதாகும். அது மார்க்சியத்தினை சித்தாந்த ரீதியாகக் கொச்சைப் படுத்துவது மட்டுமல்லாமல், கட்சியின் நடை முறைச் செயல்பாடுகளை பிற்போக்காக திசை திருப்புவதுமாகும். (அதே தொகுதி. பக்.392-393) ஒரு உருவமற்ற குழப்பத்தின் மீது ஆவி சுற்றிச் சுற்றி வருவது போல     இயக்கத்திற்கு எதிராக லெனின் தனது திட்டத்தினை உருவாக்கி வருகி றார் என்று அவர் மீது குற்றம் சாட்டியவர்களைப் பார்த்து லெனின் கேட்கிறார்:     தன்னெழுச்சி யான இயக்கத்தின் மீது ஆவி போன்று சுற்றி வருவதை விட சமூக ஜனநாயகத்திற்கு வேறு வேலை என்ன இருக்க முடியும்? அது மட்டுமல்ல; அந்த இயக்கத்தினை ஒரு திட்டம் என்ற அளவிற்கு உயர்த்துவதும் அதன் வேலையே. கண்டிப்பாக, இயக்கத்தின் வால் பகுதியிலிருந்து அதை பின் னுக்குப் பிடித்து இழுப்பது அதன் வேலையாக இருக்க முடியாது. இங்கு பொருளாதாரவாதிகள் என்ன செய்து விடுகிறார்கள் என்றால், இயக்கத் தின் வளர்ச்சிப் போக்கினையே நடைமுறை உத்திகள் என்று பின்பற்றுவது மட்டுமல்லாமல், அதை ஒரு கோட்பாடாகவும் உயர்த்தி விடுகிறார் கள். இந்தப் போக்கினை சரியாக விளக்குவ தெனில், இது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல; இது வால் பிடிக்கும் வாதம் (டெய்லிசம்) எனக் கூற வேண்டும். (அதே தொகுதி, பக்.396)

நிலைமைகள் குறித்த திட்டவட்டமான ஆய்வு!

லெனின் கூறுகிறார்: ஒரு குறிப்பிட்ட நாட்டில், அதைச் சுற்றியிருக்கும் நாடுகளில், மொத்தத்தில் உலகம் முழுவதிலும் நிலவும் வர்க்க சக்திகள் குறித்த விருப்பு வெறுப்பற்ற நிதானமான ஆய்வு, புரட்சிகர இயக்கத்தின் அனுபவங்கள் ஆகிய வற்றின் அடிப்படையில் தான் நடைமுறை உத்தி கள் உருவாக்கப்பட வேண்டும். திட்டவட்டமான நிலைமைகள் குறித்த திட்டவட்டமான ஆய்வே, மார்க்சியத்தின் முக்கிய சாராம்சமும், மார்க் சியத்தின் உயிர்த்துடிப்புள்ள ஆன்மாவும் ஆகும் என்று அந்த உண்மையினை மேலும் விளக்கு கிறார். மார்க்சிய-லெனினியவாதிகள் என்று அழைக்கப்படுவதில் நாம் பெருமை கொள்கி றோம். ஆனால், நடைமுறை உத்திகள் குறித்த லெனினுடைய சித்தாந்தக் கட்டளையினை வேத வாக்காக ஏற்றுக் கொண்டு நம்மில் எத்தனை பேர் செயல்படுகிறோம்? சூழ்நிலையில் உள்ள சில முக்கிய அம்சங்களை எடுத்துக் கொள்கிறோம். சம முக்கியத்துவம் கொண்ட வேறு சில அம்சங்களை கவனிக்கத் தவறுகிறோம். சூழ் நிலையின் சாதக பாதகங்களைப் பார்க்காமல் பளிச்சென்று ஒரு முடிவுக்குப் போய் விடுகிறோம். சூழ்நிலை வேக வேகமாக மாறிக் கொண்டு வரும் வேளையில் புதிய நிலைமைகளைக் கண்டு கொள் வதில் சற்று மெத்தனமாக இருந்து விடுகிறோம். நேற்று சரி என்பது இன்று மாறிவிட்ட நிலையில், நேற்று செய்த நிர்ணயிப்போடு நிலைகுத்தி நின்று விடுகிறோம். வேளைக்கு வேளை மாறிவரும் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடைமுறைக் கோஷங்களை வைக்காமல், நீண்ட கால இலக்கு குறித்த உண்மைகள் குறித்துப் பேசுவதைத் தொடர்கிறோம்.

லெனினியத்தின் அடிப்படைகள் என்று ஸ்டாலின் எழுதிய அந்த அற்புதமான நூலில், லெனினுடைய நீண்ட கால உத்திகள், நடைமுறை உத்திகள் குறித்து விளக்குகிறார். மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் உருவாக்கிய நீண்ட கால உத்திகள் மற்றும் நடைமுறை உத்திகளை இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த சந்தர்ப்பவாதிகள் இருட்ட டிப்புச் செய்திருந்த நிலையில், அதை லெனின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்; அது மட்டுமல்லாமல், அதை மேலும் மேம்படுத்தி புதிய சில கருத்துகளையும் ஆலோசனைகளையும் சேர்த்து, அவைகள் அனைத்தையும் ஒருங் கிணைத்து விதிகளாக உருவாக்கி, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் தலைமைக்கு வழி காட்டுகின்ற சித்தாந்தமாகவும் லெனின் மாற்றி விட்டார் என ஸ்டாலின் கூறுகிறார். நடைமுறை உத்திகள் என்ற கருத்தாக்கத்திலிருந்து தெளி வாகப் பிரித்து, புரட்சியின் கட்டம், நீண்ட கால உத்திகள் ஆகிய கருத்தாக்கங்களை ஸ்டாலின் விளக்குகிறார். அவர் கூறுகிறார்: புரட்சியின் ஒரு கட்டத்தில் பாட்டாளிகள் தொடுக்கவிருக்கும் பிரதானமான தாக்குதல் குறித்தும், பிரதானமான புரட்சிச் சக்திகள், அவர்களின் துணை சக்திகள் ஆகியவை குறித்தும் தீர்மானிக்கும் அம்சமே நீண்ட கால உத்தி என்பது. புரட்சியின் கட்டம் மாறும் போது, அந்த உத்திகள் மாறும். ஆனால், அந்தக் கட்டம் மாறாத வரை, அந்த உத்திகள் அடிப்படையில் மாறாமல் தொடரும்.   புரட்சி யின் கட்டங்கள் பல ஆண்டுகள், ஏன் பல பத் தாண்டுகள் என்று கூட நீடிக்கக் கூடும்.

ஆனால், நடைமுறை உத்திகளின் நிலைமை வேறு. ஸ்டாலினுடைய வார்த்தைகளில் கூறுவது எனில், புரட்சியின் ஏற்ற இறக்கங்கள், அதே போன்று இயக்கத்தின் ஏற்ற இறக்கங்களுக்குத் தகுந்தாற்போல் ஒரு குறிப்பிட்ட குறுகிய காலச் சூழலுக்குள் பாட்டாளி வர்க்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நடைமுறை உத்திகள் தான் தீர்மானிக்கும். பழைய போராட்ட வடிவங்கள், பழைய கோஷங்கள், ஸ்தாபன வடிவங்களுக்குப் பதிலாக புதிய வடிவங்கள், கோஷங்கள், அல்லது இரண்டினையும் இணைத்து இதனைச் செயல் படுத்த வேண்டியிருக்கும். குறி இலக்கில் உள்ள எதிரியினை வீழ்த்துகின்ற போரில் வெற்றி பெறுவது என்பதே நீண்ட கால உத்திகளின் நோக்கம். முழுப்போரிலும் வெற்றி பெறுவது என்பது நடைமுறை உத்தியின் நோக்கம் அல்ல. திட்டவட்டமான சூழ்நிலைக்கு உட்பட்டு, சில குறிப்பிட்ட போர்க்களங்களில் வெற்றி பெறுவது அல்லது சில குறிப்பிட்ட முன்னேற்றங்களை அடைவது என்பதே அதன் நோக்கம். நடைமுறை உத்தி என்பது நீண்ட கால உத்திகளுக்கு உட்பட்டு அதற்கு உதவுவது என்பதே. புரட்சியின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், சூழ்நிலையின் ஏற்ற இறக்கங்களுக்குத் தகுந்தாற்போல், நடைமுறை உத்திகள் பல முறை மாறக் கூடும்.

லெனினுடைய நடைமுறை உத்திக் கோட்பாடுகள்!

லெனினுடைய நடைமுறை உத்திகளை ஸ்டாலின் பின்வரும் மூன்று கோட்பாடுகளாக சுருக்கமாகத்   தொகுத்து அளித்திருக்கிறார்:

  1. நாடுகளில் நிலவும் பிரத்தியேகச் சூழ்நிலை கள், ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இயல்பான குணாம்சங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டியது தேவை. அது தவிர, அந்நாட்டின் தொழிலாளர் இயக்கம் குறித்து கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டல்களைப் பெற்று அவற்றை அமலாக்குவதும் தேவை.
  2. ஒவ்வொரு நாட்டிலுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாக பெரு மளவில் கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய கூட்டு எவ்வளவு தற்காலிக மானது எனினும், ஊசலாட்டம் நிறைந்தது எனினும், நிலைதடுமாறுவது எனினும், நம்பகத் தன்மை கொண்டது இல்லை எனினும் அத்தகைய கூட்டாளிகளை உருவாக்குவதற்கான சிறு சிறு சாத்தியங்களைக் கூடப் பயன்படுத்த வேண்டும்.
  3. கோடிக்கணக்கான மக்களுக்கு அரசியல் கல்வி அளிப்பதற்கு, பிரச்சாரமும் கிளர்ச்சியும் மட்டும் போதியதல்ல. ஏனெனில், அவர்களுக்கென்று அரசியல் அனுபவமும் தேவை. இந்த உண்மையினைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

இந்தச் சித்தாந்தத்தினை மேலும் விளக்கும் வகையில், லெனின் என்ன கூறியிருக்கிறார் என் பதையும் இங்கு பார்க்கலாம். ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கப் புரட்சியினையும், சர்வதேச அளவில் அதனுடைய வெற்றிகரமான   தாக்கங் களையும், பூர்ஷ்வாக்களும் எதிர்பார்க்கவில்லை, பாமரர்களும்.   எதிர்பார்க்கவில்லை. இது பழைய உலகம் அல்ல, மாறியிருக்கிறது. பூர்ஷ்வாக்களும் மாறியிருக்கிறார்கள். போல்ஷ்விசம் அவர்களை அச்சுறுத்தியிருக்கிறது. வெறிபிடிக்கும் அளவிற்கு அச்சுறுத்தியிருக்கிறது. இது இருவகையான போக்குகளை உருவாக்குகிறது. ஒரு புறம், பல புதிய நிகழ்வுப் போக்குகளை அது உந்தித் தள்ளுகிறது. மறுபுறத்தில், போல்ஷ்விசத்தினை அடக்கி ஒடுக்குவதற்கான பலப்பிரயோகமும் அழுத்தமாகி வருகிறது. பல தளங்களில் பூர்ஷ் வாக்கள் தங்களையே பலவீனப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள், இந்த இரண்டு வகைப் போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். (தொகுதி 31. பக். 100.)

அடுத்த கட்டத்தில் வரலாறு இந்த அம்சத் தினைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் பிற நாடுகளில் பாசிசம் தலை தூக்கிய நிலையில் பல கொடூரங்கள் நடந்தேறின. சீனாவில் ஏகாதி பத்தியத்தின் ஏஜண்டான சியாங் கேய் ஷேக் உருவாக்கிய சகோதரக் கொலைகள் நிறைந்த சிவில் யுத்தத்தில் பல லட்சக்கணக்கான தொழி லாளி மற்றும் விவசாயப் போராளிகள் பலர் கொல்லப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக் குப் பின்னர், கிரீஸ், மலேயா, பர்மா, வியட்னாம், கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா ஈரான், ஈராக், ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெ ரிக்கக் கண்டங்களிலுள்ள வேறு பல நாடுகள் என, தொழிலாளி வர்க்கம் தாக்குதல்களுக்கு ஆளா னது. இது, ஒரு உண்மையினை உணர்த்துகிறது. பூர்ஷ்வாக்கள் உலக அளவில் தரமிழந்து வெறுக் கத் தக்க மிருகங்களாக மாறி விட்டனர் என்பதும், தங்களது சுரண்டல் ஆட்சியினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உழைக்கும் மக்கள் மீது எத் தகைய தாக்குதல்களையும் தொடுக்கத் தயங்க மாட்டார்கள் என்பதுமே அந்த உண்மை. இது குறித்து உலகப் பாட்டாளி வர்க்கத்தை லெனின் மீண்டும் மீண்டும் எச்சரித்துக் கொண்டே வந்திருக்கிறார். தங்களது நடைமுறை உத்திகளைத் தீர்மானிக்கும் போது, இந்த அம்சத்தினைக் கணக்கில் கொள்ள வேண்டுமென வலியுறுத்தி னார். 1922ம் ஆண்டு, மே மாதம், பிராவ்தா ஏட்டின் 10வது ஆண்டு நிறைவு வேளையில் அவர் பின்வருமாறு எழுதுகிறார் : போல்ஷ்விசம் ஒரு சர்வதேசச் சக்தியாக மாறி விட்டது. நாகரீகத்தி லும், பொருளாதாரத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் புதிய சார்ட்டிஸ்டுகள், புதிய வார்லின்கள், புதிய லீப்னெக்ட்கள் பிறந்து வளர்வார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் சட்டபூர்வ மாக, (அதாவது, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஜார் மன்னன் ஆட்சியில் பிராவ்தா எந்த அளவு சட்டபூர்வமாக இயங்க அனுமதிக்கப்பட்டதோ, அந்த அளவு சட்டபூர்வமாக) இயங்குவதற்கு அனுமதிக்கப்படும். ஆனால், இங்கு ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் பூர்ஷ்வாக்கள் தங்கள் வர்க்க எதிரிகளை விட, ஒப்பிட இயலாத அளவு பலம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ரஷ்யாவில் பாடாளி வர்க்க அதிகாரத்தினைத் தோன்ற விடாமல் தடுத்தவர் கள் அவர்கள். அதன் தோற்றத்தினை பத்து மடங்கு அபாயகரமானதாகவும், துயர் மிக்கதாக வும் மாற்றியவர்கள் அவர்கள். (செஞ்சேனைக்கு எதிரான) தங்களது வெண் சேனை (ஒயிட் கார்ட்ஸ்), ஏகாதிபத்தியப் போர்கள் முதலியவற் றின் மூலம் லட்சக்கணக்கானவர்களை சித்திர வதை செய்யவும், கொல்லவும் வல்லமை கொண்ட வர்களாக இன்னும் இருக்கிறார்கள். இது நாம் மறக்கக் கூடாத ஒன்று. இந்தக் குறிப்பிட்ட சூழ் நிலைக்குப் பொருத்திப் பார்த்து, நமது நடை முறை உத்திகளை திறமையாக உருவாக்க வேண் டும். (தொகுதி 33. பக்.352)

இரண்டாவது உலகப் போரில் பாசிஸ்ட் கூட்டணி முறியடிக்கப்பட்டுவிட்டது. இந்த வெற்றியின் மூலம் சோவியத் செஞ்சேனை உலக அளவில், உலக வர்க்க பலாபலங்களை, தொழி லாளி வர்க்கத்திற்குச் சாதகமாக மாற்றிருப்பது உண்மை. இதனை வைத்துக் கொண்டு, உலக பூர்ஷ்வாக்களின் சக்தியினை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. பல லட்சம் மனிதர்களைச் சித்திர வதை செய்வதற்கும், கொல்வதற்கும் இன்றைக்கும் அவர்களால் முடியும். தொழிலாளி வர்க்கத்திற் கான நடைமுறை உத்திகளை வகுக்கும் போது, கம்யூனிஸ்ட் கட்சிகள் இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் இருப்பதை அனுமதிக்கவே முடி யாது.

இவ்வாறெல்லாம் லெனின் நம்மை எச்சரித் திருப்பினும், லெனினுடைய நடைமுறை உத்திக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் என்று உரிமை கொண்டாடி வரும் சில துயரமான சித்தாந்தவாதிகள் இன்று அமைதியான வழியில் சோசலிசத்திற்கு மாறிச் சென்று விட முடியும் என தைரியமாகக் கூறுவது அதி பயங்கரமானது. இந்தப் புதிய சகாப்தத்தில், பூர்ஷ்வாக்கள் சமா தான பூர்வமான சில பண்புகளைப் பெற்றிருக்கி றார்கள் என்று கூறி தங்களது வாதத்தினை நியாயப் படுத்துகின்றனர். நம் நாட்டில் உள்ள பூர்ஷ்வாக்களைப் பற்றி கம்யூனிஸ்டுகளுக்கு நன்கு தெரியும். அகிம்சை வன்முறை எதிர்ப்பு, சமா தானம், மகாத்மா காந்தியின் மனிதாபிமான வேதம் என்று பலவற்றை இவர்கள் பேசினாலும், உலகம் முழுவதுமுள்ள இவர்களின் பூர்ஷ்வா சகோதரர்களுக்கு இவர்கள் எவ்வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. 1947- 1951 தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களின் ஆயிரக் கணக்கில் அவர்களைச் சிறையில் அடைத்தது, சித்திரவதை செய்தது, கொன்றது, காவல் துறையின் திட்டமிட்ட அடக்குமுறை, வன்முறை இவை எல்லாவற்றையும் நம்மால் எப்படி மறக்க முடியும்? அண்மையில், ஆந்திர மாநிலத்தில் 1969ம் ஆண்டில், எத்தனை நக்ச லைட்டுக்கள் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டனர்? பூர்ஷ்வாக்கள் எவ்வளவு அகிம்சாவாதி கள் என்பதை அம்பலப்படுத்துகின்ற, லெனி னுடைய எச்சரிக்கை எவ்வளவு சரியானது என் பதை அழுத்தமாக வெளிப்படுத்துகின்ற எடுத்துக் காட்டுக்களே இவையெல்லாம்.

உலகம் முழுவதுமுள்ள தரங்கெட்டு வரும் பூர்ஷ்வா வர்க்கம் கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதில், போர், வன்முறை, கொடூரம் என எதையும் விட்டு வைப்பதில்லை. இவ்வகையில் அது தனது எதிர்ப்புரட்சிக் கலையினை நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறது. தொழிலாளி வர்க்கம் இவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த அபாயங்களை எல்லாம் எவ்வாறு சந்திப்பது என்று திட்டமிட்டு, அவற்றிற்கெதி ரான நடைமுறை உத்திகளை உருவாக்க வேண்டும். எல்லாம் நடந்து முடிந்த பின்னர், வர்க்க எதிரி தனது சூழ்ச்சியால் நம்மை வீழ்த்திவிட்டான் என்று குமுறுவதற்கு, தொழிலாளி வர்க்கத்திற்கு உரிமை எதும் இல்லை.

உத்திகள் அறிந்த தலைமை கூர்மையான எடுத்துக்காட்டுக்கள்!

நமக்கு பாடங்களை வழங்கும் லெனினுடைய மேதமை நோக்கியே மீண்டும் நகர்வோம். 1905 -1907, அது தவிர 1917 இவை அனைத்தும் சிக்கல் நிறைந்த காலங்கள். அந்தக் காலத்தில் லெனி னுடைய செயல்பாடுகளிருந்து சில எடுத்துக் காட்டுக்களை இங்கே பார்க்கலாம். அடுத்தடுத்து வெகு வேகமாக சூழ்நிலைகள் மாறி வந்த இந்த இரண்டு குறுகிய காலங்களில் அதற்கு இணை யாக, எவ்வாறு கோஷங்கள், போராட்ட வடி வங்கள், ஸ்தாபனம் ஆகியவற்றில் விரைவான பல மாற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

புரட்சிகரமான அதிகாரத்தைக் கைப்பற்று வதற்கு ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமே ஒரே வழி என்பதில் லெனின் உறுதியாக இருந் தார். அதே வேளையில், தனி நபர் பயங்கரவாதத் தினை சமரசமின்றி எதிர்த்தார். அத்தகைய தனி நபர் பயங்கரவாதத்தினை அறிவுஜீவிகளின் பயங்கரவாதம் (இன்டெலிஜென்சியா டெரரிசம்) என அழைத்த லெனின்,   அது தொழிலாளி வர்க் கத்தின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று கூறினார். புரட்சி முதிர் நிலையடைந்த 1905ம் ஆண்டு வரை, ஆயுதம் தாங்கிய சிறு சிறு களப்போர்களை அனுமதிக்க வில்லை. ஆனால், 1905ல் அதற்கான நேரம் வந்தவுடன், சற்றும் தாமதிக்காமல், அதே வேளை மிக எச்சரிகையுடன் ஆயுதம் தாங்கிய போராட் டத்திற்கு லெனின் அழைப்பு விடுத்தார்.

லெனின் இந்த விஷயத்தை எப்படி விளக்கு கிறார் பாருங்கள்: அறிவுஜீவிகளின் பயங்கரவாத மும், தொழிலாளர்களின் பெருந்திரள் இயக்கமும் வெவ்வேறானவை. இவ்வாறு அவை இரண்டும் வெவ்வேறாக இருத்தல் காரணமாகவே, அவற்றின் முழுச் சக்தியினையும் இரண்டுமே பயன்படுத்த முடியவில்லை. இதைத்தான் புரட்சிகரமான சமூக ஜனநாயகவாதிகள் இது வரை வலியுறுத்திக் கூறி வருகிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே, அவர்கள் பயங்கரவாதத்தினை எதிர்த்து வரு கின்றனர். நமது கட்சிக்குள் இருக்கும் அறிவாளர் பிரிவு உறுப்பினர்களின் பயங்கரவாதம் குறித்த ஊசலாட்டத்தை அவர்கள் எதிர்த்து வரு கின்றனர். இந்த ஒரே காரணத்திற்காகவே, பழைய இஸ்க்ரா ஏடு தனது 48வது இதழில் பயங்கர வாதத்திற்கு எதிராக எழுதியது. புரட்சிகரப் போராட்ட வடிவங்களிலேயே, பழைய பாணி பயங்கரவாதப் போராட்டம் மிகவும் அபாயகர மானது. அதில் ஈடுபடுபவர்கள் உறுதியாகவும், தங்கள் உயிரை பலி கொடுப்பதற்கும் தயாரான தியாகிகளாகவும் இருப்பார்கள். ஆனால், அரசுக்கு எதிரான பகிரங்கமான எதிர்ப்பு மேலோங்கி வரும் வேளையில், பழைய பாணி பயங்கரவாதப் போராட்டம் தேவையற்ற ஒன்று (தொகுதி 8. பக். 160)

ஆயுதம் தாங்கிய போராட்டம் தவிர, வேறு எந்த போராட்ட வடிவம் குறித்து அறியாத, எல்லா நாடுகளுக்கும், எல்லாக் கண்டங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போரட்டமே பொருந்தும் என்று கூறுகின்ற அதிதீவிரவாதிகள் நமது காலத்திலும் உள்ளனர். தாங்களே உண்மையான லெனினிஸ்டு கள் எனவும் மார்க்சியம் லெனினியம் தங்களுக்கு மட்டுமே தெரியும் எனவும் கூறும் இவர்கள், ஆயுதம் தாங்கிய போரட்டத்தினை ஒரு பொழுதுபோக்கு போல பேசி வருகின்றனர். ஆனால், லெனின் அப்படி பேசவில்லை. அது குறித்து உரிய முக்கியத்துவம் கொடுத்து அவர் பேசுவதைப் பார்ப்போம்.

ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பது ஒரு முக்கியமான சொல்லாடல். அதற்கான அறை கூவல் விடுப்பதும் மிகவும் தீவிரமான முடிவு. சமூக அமைப்பு சற்று சிக்கலானதாகவும், அரசு அதிகார எந்திரம் நன்கு பலம் பொருந்தியதாகவும், இராணுவம் நவீனப்படுத்தப் பட்டதாகவும் இருக்கும் நிலையில், ஆழ்ந்த சிந்தனை ஏதுமின்றி அத்தகைய ஆயுத போரட்டம் குறித்து முடி வெடுப்பதற்கு அனுமதிக்கவே கூடாது. முக்கிய மான சொல்லாடல்கள் குறித்துப் பேசும் போது சுற்று எச்சரிக்கை அவசியம். அவற்றுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் போது பெருமளவு சிரமங் களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆயுதப் போராட்டம் எனும் கோஷம், பௌதீகச் சக்தி யினைப் பயன்படுத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்று பொருள். இன்றைய ஐரோப்பிய நாகரீக சமூகத்தில் பௌதீகச் சக்தி என்றால் அதில் மிக முக்கியமனது இராணுவ சக்தி தான். புரட்சியின் முன் நிபந்தனைகள் அனைத்தும் முதிர்ச்சியடையும் வரை, தாங்கள் எழுச்சி பெற்று விட்டோம், புரட்சிக்குத் தயாராகி விட்டோம் என மக்கள் தெளிவாகச் சொல்லும் வரை, வெளி நிலைமைகள் பகிரங்கமாக நெருக்கடிக்கு இட்டுச் செல்லும் வரை, ஆயுதப் போராட்டம் என்ற கோஷத்தினை எழுப்பக் கூடாது. அந்தக் கோஷத்தை எழுப்பி விட்டால், அதிலிருந்து பின் வாங்குவது அவமானகரமாக மாறி விடும். தார்மீக பலம் கொண்ட பழைய சக்தியாக மீண்டும் அவ்வளவு எளிதாக மாறி விட முடியாது. எழுச்சிக்கு வித்திட்ட நிலையிலிருந்து, மாறிச் செல்லும் சாத்தியங்கள் உள்ளிட்ட சில நிலைமை களுக்கு எளிதாகத் திரும்பி விட முடியாது. (தொகுதி 9. பக். 367 369)

ஆயுதப் போராட்ட எழுச்சிக்கான கோஷம்!

மக்களின் புரட்சிகர மனநிலையினையும், புரட்சிகர போராட்ட   நடவடிக்கைகளின் வீச்சினையும் புரிந்து கொண்டவுடன் உடனடி யாக ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கான கோஷத்தினை லெனின் முன் வைத்து விட்டார். அந்தச் சூழ்நிலை குறித்து லெனின் பின் வருமாறு எழுதுகிறார்:

இன்றைய நாட்களில் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் தொழிலாளர் இயக்கம் பெரும் முன்னேற்றத் தினை அடைந்திருக்கிறது. வேலை நிறுத்தம், பொது வேலை நிறுத்தமாக மாறி வருகின்றது. இது வரை கண்டிராத அளவில் பிரம்மாண்ட மான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. ஜார் மன்னனின் கௌரவம் நிரந்தரமாக சீரழிந்து விட்டது. பலப்பிரயோகத்திற்கு எதிராக பலப்பிரயோகம். தெருக்களில் சண்டைகள் உக்கிர மடைகின்றன. தடுப்பு வேலிகள் பிய்த்தெறியப் படுகின்றன. சுழல் துப்பாக்கிகள் வெடிக்கின்றன. பீரங்கிகள் உறுமுகின்றன. தெருக்களில் ரத்த ஆறு ஓடுகிறது. சுதந்திரத்திற்கான சிவில் யுத்தம் கொழுந்து விட்டு எரிகிறது. சுதந்திரம் அல்லது மரணம் என்பதே இன்று தொழிலாளர்களின் கோஷம். (தொகுதி 8. பக்.71)

ஆயுதம் தாங்குபவர்களுக்கு எதிராகப் பேசு பவர்களை கோழைகள், துரோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள் என கண்டனம் செய்யும் லெனின் ஒன்றைக் குறிப்பிட்டுக் கூறுகிறார் : சமூக ஜனநாயகக் கட்சி ஏதோ திடீரென உணர்ச்சி வசப் பட்டு ஆயுதப் போராட்டத்திற்கான கோஷத்தை எழுப்பி விடவில்லை. சமூக ஜனநாயகக் கட்சி, வார்த்தையளவில் புரட்சி பேசும் ஜாலக்காரர் களை எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறது. அவர்களைத் தொடர்ந்து எதிர்க்கவும் செய்யும். நிலவும் சூழ்நிலை குறித்து நிதானமான பரிசீலனை வேண்டும் என அது எப்போதும் கூறி வந்திருக் கிறது. 1902 முதல் அத்தகைய போராட்டம் குறித்து சமூக ஜனநாயகக் கட்சி தொடர்ந்து விவாதித்து வந்திருக்கிறது. ஆனால் தயாரிப்பு எதுவுமில்லா மல், அறிவீனமாக, செயற்கையாக ஒரு போராட் டத்தினை உருவாக்கி பயன் ஏதுமின்றி நமது சக்தியினை விரயம் செய்வதை கட்சி விரும்ப வில்லை. ஆனால், இபோது தான், ஜனவரி 9ம் தேதிக்குப் பின்னர் தொழிலாளர் கட்சி ஆயுதப் போராட்டத்திற்கான கோஷத்தினை முன்வைக் கிறது. அதற்கான தேவையினையும், அணி திரட்டு வதற்கான அவசரத்தினையும் கட்சி இப்போது அங்கீகரித்திருக்கிறது. அரசின் சர்வாதிகாரப் போக்கு தான், இந்தக் கோஷத்தினை தொழிலாளி வர்க்கத்தின் இயல்பான நடைமுறைக் கோஷமாக மாற்றியிருக்கிறது. (தொகுதி 8. பக். 540)

புரட்சி சக்திகளுக்கும் எதிர்ப்புரட்சி சக்தி களுக்கும் இடையில் நடந்த பெரும் மோதல் கள் முடிந்த நிலையில், புரட்சி சக்திகள் தோல் வியைத் தழுவ நேரிட்டது. இருப்பினும், அங் கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு குழுக்கள், தனி நபர்கள் மோதல்களைத் தொடர்ந்து வந்தனர். இது குறித்து, நாம் வழக்கமாக இது போன்ற போராட்டங்களை அராஜகம், பிளாங் கிசம் (க்ஷடயnளூரளைஅ), பழைய பயங்கரவாதம், மக்களிட மிருந்து தனிமைப்பட்ட தனி நபர்களின் நடவடிக் கைகள், இவையெல்லாம் தொழி லாளர்களை உற்சாகம் இழக்கச் செய்யும், மக்களின் பெரும் பகுதியினரை நம்மிடமிருந்து விரட்டியடிக்கும், இயக்கத்தைச் சீரழிக்கும், புரட்சிக்கு தீங்கிழைக்கும் என்றெல்லாம் கூறியிருப்போம். என்று கூறிய லெனின், ஆயுதம் தாங்கிய தனி நபர் மற்றும் குழுக்களின் அன்றைய போராட்டங் களை நியாயப் படுத்துகிறார்.

அவர் கூறுகிறார் : லெட்டிஷ் சமூக ஜனநாயகக் கட்சியினரின் நடவடிக்கைகளை அராஜகம், பிளாங்கிசம் அல்லது பயங்கர வாதம் என்று கூற இன்று எவருக்கும் துணி விருக்காது. ஏனெனில், இங்கு புதிய போராட்ட முறைகளுக்கும், ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கும் இடையில் இணைப்பு இருக் கிறது. கடந்த டிசம்பரில் தொடங்கிய அந்தப் போராட்டம் இன்று மீண்டும் கனன்று கொண்டிருக்கிறது. (தொகுதி 11. பக். 216 – 217)

இவ்வாறு ஆங்காங்கு நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களை வலுவாக நியாயப்படுத்திய லெனின், ஒரு கட்டத்தில் அவற்றை நிறுத்தச் சொல்கிறார். அதை உறுதியாக எதிர்க்கிறார். புரட்சிகர எழுச்சி வடிந்து விட்ட நிலையில், இந்த தனிப் போராட்டங்கள் இயக்கத்திற்கு உதவு வதற்குப் பதிலாக அதை சீர்குலைக்கத் தொடங்கி விட்டது என்ற வகையில் அதை நிறுத்துமாறு கூறுகிறார். நடைமுறை உத்திகளை உருவாக்கும் சமயங்களில் எல்லாம், திட்டவட்டமான சூழ்நிலை குறித்த திட்டவட்டமான ஆய்வு செய்யும் வகையில் அவர் கூரறிவுடனும், கவனத் துடனும் செயல் பட்டார். அவர் எழுதுகிறார்: குறிப்பிட்ட போராட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதா வேண்டாமா என்று முடிவு எடுப்பதற்கு முன்பு, சூழ்நிலையின் அன்றைய வளர்ச்சிக் கட்டம் குறித்து விரிவான பரிசீலனை அவசியமாகிறது. அத்தகைய பரிசீலனையைத் தவிர்ப்பது என்பதற்கு, அடிப்படை மார்க்சிய நிலையினை முழுவதுமாகக் கைவிடுவது என்றே பொருள் கொள்ள வேண்டும். (தொகுதி 11. பக். 216 217)

திட்டவட்டமான சூழ்நிலை குறித்து திட்ட வட்டமான ஆய்வு செய்யாமல் செயல்படுவது வருந்தத் தக்கது. இன்றைய நக்சலைட் புரட்சி யாளர்கள் இத்தகைய பரிசீலனை இல்லாமல் நடத்துகின்ற துடுக்குத்தனமான சாகசங்கள் தான் அவர்களை சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறது. குட்டி பூர்ஷ்வா அறிவுஜீவிகள் மத்தியில் இது ஒரு பொதுவான நோய். ஒன்று அவர்கள் வயதில் மிக இளையவர்களாகவும், பக்குவமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லது விரக்தி அடைந்திருக்கி றார்கள். லெனினின் பெயரையும், லெனினியத்தை யும் பயன்படுத்துகின்ற அவர்கள், லெனின் கற்றுத் தந்த அடிப்படைப் பாடத்தை மறந்து விட்டனர். திட்டவட்டமான சூழ்நிலை குறித்த திட்டவட்ட மான ஆய்வு என்பது, மார்க்சியத்தின் மிக முக்கிய மான கூறு, அதன் உயிர்த்துடிப்பான ஆன்மா என்று லெனின் கூறியதை இவர்கள் கண்டு கொள்வதில்லை.

எம். பசவபுன்னையா

தமிழில் : இ.எம். ஜோசப்

(தொடரும்)



%d bloggers like this: