மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


உலகறிந்த முற்போக்கு வரலாற்று ஆய்வாளர் பிபன் சந்திரா


மே 27, 1928 இல் இன்றைய ஹிமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த கங்க்ரா என்ற ஊரில் பிறந்து 2014 ஆகஸ்ட் 30 அன்று மறைந்த பேராசிரியர் பிபன் சந்திரா சிறந்த வரலாற்று ஆய்வாளர் மட்டுமல்ல. தனது வாழ்நாள் முழுவதும் முற்போக்கு இயக்கங்களோடு தொடர்பு கொண்டு செயல்பட்டவர். இடதுசாரி சிந்தனையாளர். வகுப்புவாதத்தையும், மதவாத சக்திகளையும் ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகளையும் செயல்பாடுகளையும் வலுவாக எதிர்த்து நின்றவர். ஏராளமான படைப்புகளை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார். அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேல் சிறந்த பேராசிரியராக செயல்பட்டு, தனது மாணவர்களில் பலரை சிறந்த வரலாற்று ஆய்வாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் உருவாக்கியவர். தனது இறுதி மூச்சுவரை வரலாறு, அரசியல் மற்றும் பொருளாதார கட்டுரை களையும் நூல்களையும் எழுதித்தள்ளியவர். 1950 களில் எழுதத் துவங்கியவர் அவர். 2012 இல் நவீன இந்தியாவின் உருவாக்கம்: மார்க்சிலிருந்து காந்தி வரை என்ற அவரது நூல் வெளியானது. அதன்பின் அவர் மறையும் முன் பகத்சிங் பற்றிய ஒரு நூலை எழுதி முடித்திருந்தார். தனது சுயசரிதையையும் எழுதி முடித்திருந்தார். ஆனால் இவ்விரு படைப்புகளும் பிரசுரிக்கப்படும் முன் அவர் மறைந்துவிட்டார்.

1940களின் இறுதியில் அமெரிக்காவில் ஸ்டான்போர்ட் பல்கலையில் பொறியியல் படிக்கத்துவங்கியவர், பொது உடைமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு வரலாறு படிப்பது என்று முடிவு செய்தார். இந்தியாவிற்குத் திரும்பிவந்து தில்லி பல்கலையில் வரலாற்று முனைவர் பட்டத்தைப் பெற்று அங்கிருந்த இந்து கல்லூரியில் விரிவுரையாளராக தனது ஆசிரியப்பணியை துவங்கினார். பின்னர் தில்லி பல்கலையில் பணியாற்றினார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட பொழுது ரொமிலா தபார், சர்வபள்ளி கோபால் போன்ற பேராசிரியர்களுடன் இணைந்து ஜே.என்.யு.-வின் வரலாற்று ஆய்வு மையத்தை அமைத்தார். பணி ஓய்வு பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னும் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 2007 இல் தேசிய ஆய்வுப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 2004-2012 ஆண்டுகளில் தேசிய புத்தக அறக்கட்டளையின் தலைவராக செயல்பட்டார்.

பிபன் சந்திரா இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆழமாக ஆய்வு செய்தவர்களில் மிக முக்கியமானவர். விடுதலைப் போராட்டத்தின் துவக்க காலத்தலைவர்கள் பொருளாதார தேசியவாதிகள் என்ற வாதத்தை இந்தியாவில் பொருளாதாரதேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலில் அவர் வலுவாக முன்வைத்தார். இந்திய விடுதலை போராட்டம் 1857-1947, இந்திய தேசிய இயக்கத்தின் நீண்ட கால இயக்க விதிகள், நவீன இந்தியாவில் வகுப்பு வாதம் உள்ளிட்ட பல புத்தகங்களை பிபன் சந்திரா எழுதியுள்ளார்.

இந்தியாவின் பொது உடைமை இயக்கத்தில் மீண்டும் மீண்டும் எழுகின்ற ஒரு அடிப்படை கேள்வி இந்திய முதலாளி வர்க்கத்தின் தன்மை பற்றியதாகும். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இது தொடர்ந்து விவாதிக்கப்பட்டது. இந்திய முதலாளிவர்க்கத்தின் இரட்டைத்தன்மை அழுத்தமாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு புறம் ஒரு எல்லைக்கு உட்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதை அது கொண்டுள்ளது. சமகால உலகச்சூழலில் சோசலிச நாடுகள் பின்னடைவுக்குப் பின் ஏற்பட்ட ஒரு துருவ உலக நிலை இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பை மட்டுப் படுத்தியுள்ள போதிலும் அது முற்றிலும் மறைந்து விடவில்லை. மறுபுறம், தனது வர்க்க நலனுக்காக மக்களை காவு கொடுத்து ஏகாதிபத்தியத்துடன் சமரசம் காண அது தயங்காது. காலப்போக்கில் இந்திய முதலாளி வர்க்கத்தின் தலைமையாக உள்ள ஏகபோக முத லாளிகள் மேலும் மேலும் அந்நிய நிதி மூலதனத்துடன் கூட்டு வைத்துக் கொள்வார்கள். இந்த சரியான வரையறையை நிலைநாட்டுவதற்கு ஒன்று பட்ட கட்சிக்குள் கடும் போராட்டம் நடந்தது. இப்பிரச்சனையில் பேராசிரியர் பிபன் சந்திரா அவர்களின் நிலைபாடு இந்திய முதலாளிவர்க்கம் மற்றும் அதன் கட்சியான காங்கிரஸ் கட்சி பற்றிய மதிப்பீட்டில் நாம் மேலே குறிப்பிட்ட சரியான வரையறையில் இருந்து வேறுபட்டு நின்றது. காங்கிரஸ் கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத்தன்மை பற்றிய தவறான, மிகையான மதிப்பீடு ஒரு கட்டத்தில் இந்தியாவில் இந்திரா காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனத்தை ஆதரிக்கும் நிலைக்கு அவரை இட்டுச்சென்றது.

எனினும் அவரது ஒட்டு மொத்த பங்களிப்பு என்பது சிறப்பானது. அதிலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கப் பரிவாரத்தின் தலையீட்டை எதிர்த்து கல்வியாளர்களை குறிப்பாக வரலாற்று அறிஞர்களை – திரட்டுவதில்அவர் பங்கு குறிப்பிடத்தக்கது. தேசிய புத்தக அறக்கட்டளையின் தலைவராக அவர் செயல்பட்டபொழுது ரொமிலா தபார் உள்ளிட்ட சிறந்த வரலாற்று ஆய்வாளர்களை பாடப் புத்தகங்கள் எழுத ஊக்குவித்ததும் அவற்றை பிரசுரித்ததும் அவரே இந்த தன்மையிலான பல நூல்கள் எழுதியதும் பிபின் சந்திரா அவர்களின் மகத்தான பங்களிப்புக்கு சான்றுகளாகும். 1979ஆம் ஆண்டு இந்து நாளிதழின் இணைப்பாக அவ்வப்பொழுது கொண்டுவரப்பட்ட அவுட்லுக் பகுதிக்காக பிபன் சந்திரா அவர்களை விரிவாக பேட்டி காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவரது அசாத்தியமான வரலாற்று அறிவையும் இனிமையாகப்பழகும் தன்மையையும் சமூக மாற்றத்தில் அவருக்கு இருந்த ஆழமான அக்கறை யையும் நேரில் கண்டு அறிய முடிந்தது. தோழர், பேராசிரியர், மார்க்சிய வரலாற்று அறிஞர் பிபன் சந்திரா அவர்களின் பயனுள்ள வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவருக்கு மார்க்சிஸ்ட் இதழின் செவ்வஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

நிலையிலிருந்து மாற வேண்டி வந்தது. இதன் விளைவாக, இஸ்ரேல் பிஎல்ஓ வுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கியது. நார்வே நாட்டின் தலைநகரம் ஆஸ்லோவில் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இஸ்ரேல்- பிஎல்ஒ இடையே கொள்கை விளக்க அறிவிப்புகள் முடிவில் வெளியாயின. செப்டம்பர் 1993ல் வஷின்டனில் இக்கொள்கை அறிவிப்புகள் இஸ்ரேல் பிஎல்ஓ இடையே கையெழுத்தாயின.

இக்கொள்கை அறிவிப்புகள் இஸ்ரேல், பிஎல்ஓ இடையே பரஸ்பர அங்கீகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஐந்தாண்டு இடைக் காலத்தில், காஜா பரப்பு, ஜெரிக்கோ, மற்றும் மேற்குக் கரையின் பெயர் வெளியிடப்படாத சில பகுதிகளிலிருந்தும் இஸ்ரேல் பின் வாங்கவும் அது வழிவகை செய்தது. முக்கிய மான பிரச்சனைகளான எந்த அளவுக்கு இஸ்ரேல் பிடித்த பகுதிகளை விட்டுக் கொடுப்பது, அமையப்போகும் பாலஸ்தீனத்தின் இயல்பு, இஸ்ரேல் குடியிருப்பு மற்றம் குடியேறியவர்களின் எதிர்காலம், தண்ணீருக்கான உரிமைகள், அகதிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு, ஜெரு சேலத்தின் அந்தஸ்து ஆகியவை இறுதிக்கட்டப் பேச்சு வார்த்தைகளுக்கு தள்ளி வைக்கப்பட்டன.

1994ல் பாலஸ்தீனிய அதிகார அமைப்பை சுய ஆட்சி தன்மையுடன் (நகராட்சி அதிகாரங்களுடன்) இஸ்ரேலியப் படைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளில் பிஎல்ஓ உருவாக்கியது. ஜனவரி 1996ல் பாலஸ்தீன சட்டமன்ற கவுன்சிலுக்கும் அமைப்பின் தலைமைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது; அத்தேர்தலில் அல் ஃபடாஹ்ம், யாஸர் அராஃபத்தும் முறையே வெற்றி பெற்றனர்.

பிஎல்ஒ ஆழ்ந்த குறைபாடுகள் கொண்ட இந்த ஒப்பந்தத்தை ஏற்றது; அவ்வமைப்பின் பலம் குறைந்ததும் அரேபிய நாடுகளின் ஆதரவு இல் லாமல் போனதுமே இதற்குக் காரணம். மேற்குக் கரையின் இஸ்லாமிய தீவிர அமைப்புகளும் உள்ளூர் தலைவகளும் அராஃபத் தலைமைய கேள்விக்குள்ளாக்கினார்கள்; பேச்சு வார்த்தை களை நிராகரித்தார்கள். தற்கொலை குண்டு வெடிப்புகளை ஹமாஸ் இக்காலகட்டத்தில் அறிமுகப்படுத்தியது. சில குண்டு வெடிப்புகள், (ஹெப்ரான் பள்ளி வாசலில் கொல்லப்பட்ட 29 பாலஸ்தீனியர்களின் கொலை போன்ற செயல் களுக்குப் பழி வாங்கும் நடவடிக்கைகளாகவும், சில ஆஸ்லோ பேச்சு வார்த்தைகளை கவிழ்த்துவிடும் நோக்கத்துடனும் செய்யப்பட்டன.

ஆஸ்லோ பேச்சுவார்த்தைகள், எந்த வித முடிவுகளையும் கருத்தில் கொள்ளாமல் பேச்சு வார்த்தைக்கான அமைப்பை உருவாக்கியது. பேச்சு வார்த்தைகள் மே, 1999ல் முடிந்திருக்க வேண்டும். ஆனால் லிக்குட் கட்சி அதிகார மேறிய 1996-99ல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ ஆஸ்லோ உடன்படிக்கையின்படி, பேச்சுவார்த்தையில் ஈடுபட அக்கறை காட்டவில்லை; அடிப்படையில் அந்த ஒப்பந்தத்தை அவர் எதிர்த்து வந்தார்.

லேபர் கட்சி தலைமையில் 1999ல் எஹூத் பாராக் இஸ்ரேல் பிரதமரானர்; அவர் முதலில் சிரியாவுடன் அமைதி ஒப்பந்தத்துக்கு தயாராக இருந்தார்; பாலஸ்தீனியர்களின் பலத்தைக் குறைக்கவே அவர் இத்தந்திரத்தை மேற்கொண்டார். சிரியாவை வழிக்குக் கொண்டு வருவதில் தோல்வியுற்ற பின், அவர், பாலஸ்தீனர்களின் பாதைக்குத் திரும்பினார்.

இழுத்தடித்துக் கொண்டிருந்த பேச்சு வார்த்தைகளின் கால கட்டத்தில், இஸ்ரேலில் ஆட் சிக்கு வந்த லிக்குட் மற்றும் லேபர் கட்சி அர சாங்கங்கள், ஆக்கிரமிப்புப் பகுதிகளில் யூதக் குடியேற்றங்களைக் கட்டுவதிலும், பாலஸ்தீனர் களின் நிலங்களைப் பறிமுதல் செய்வதிலும், தீவிரம் காட்டின; பாலஸ்தீனியர்கள் வாழும் பகுதிக்குள் செல்லாமலேயே, நேரடியாக இஸ்ரே லுக்குள் வரும் வகையில் பைபாஸ் சாலைகளை கட்டின. இத்திட்டங்கள், இறுதியில் இஸ்ரேல் கைப்பற்றப் போகும் இடங்களை அடையாளப் படுத்து வதற்காகவே மேற்கொள்ளப்படுவதாக பால்ஸ்தீனியர்கள் புரிந்து கொண்டனர். ஆஸ்லோ ஒப்பந்தங்கள், தன்னிச்சையான இச்செயல்களை தடுத்து நிறுத்தும் அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை; மேலும், பாலஸ் தீன மக்களின் உரிமைகளையும் குடிமைச் சமுக உரிமைகளையும் இஸ்ரேல் மீறும் போது அதை யும் தடுக்கக்கூடிய அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இல்லை. 2000ல்தான் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகள் துவங்கின. அக்கால கட்டத்துக்குள், மேற்குப் பகுதியில் 40 சதவீதப் பரப்பையும், காசா பகுதியில் 65 சதவிதப் பரப்பையும், பாலஸ்தீன அதிகார அமைப்பின் வசம், இஸ்ரேல் ஒப்படைத்திருந்தது. ஆனால், பாலஸ் தீனப் பகுதிகள் சுற்றிலும் இஸ்ரேலின் வசமிருந்த பகுதிகளால் சூழப்பட்டிருந்தன; எனவே பாலஸ்தீனர்கள் உள்ளே வருவதும் வெளியே செல்வதும் இஸ்ரேலின் கட்டுப் பாட்டுக்குள்ளேயே இருந்தது.

– (தொடர்ச்சி அடுத்த இதழில்)



%d bloggers like this: