மார்க்சிஸ்ட் – வாசகர்களுக்கு சில அறிவிப்புகள் …



மார்க்சிஸ்ட் வாசகர் வட்டங்களை ஒருங்கிணைப்போர் கவனத்துக்கு …

  • வாசகர் வட்டங்களுக்கு ஏற்பாடு செய்கையில் கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்றிட கேட்டுக்கொள்கிறோம்.
  • ஒவ்வொரு மாதமும் அதற்கு முந்தைய மாத இதழின் கட்டுரைகளை விவாதிக்கலாம்.
  • குறைந்தது 10 தோழர்களாவது, கட்டுரைகளை ஆழ்ந்து வாசித்து, அதன் மீது உரையாற்றும் விதத்தில் தயாரிப்புடன் வருவதை உறுதி செய்ய வேண்டும்.
  • கட்டுரையின் நிறை குறைகளையும், இதழில் மேலும் கவனம் செலுத்திக் கொண்டுவர வேண்டிய உள்ளடக்கங்கள், வடிவமைப்பு பற்றிய ஆலோசனைகளை விவாதிக்கலாம்.
  • மாவட்டத்தில் உள்ள கட்சி மாநிலக் குழு உறுப்பினர் அல்லது கட்சி மாவட்டச் செயலாளர் இந்த விவாதங்களை தொகுத்து, பதிலளிக்கலாம். வாய்ப்பிருந்தால் ஆசிரியர் குழு உறுப்பினரை அழைக்கலாம்.
  • வர்க்க வெகுஜன அரங்கின் முன்னணி தோழர்கள், வாசகர்கள் என நூறு பேருக்கு குறையாமல் அழைப்பு அனுப்ப வேண்டும்.
  • வாசிப்பை மேம்படுத்துவதுடன், இதழின் சந்தா அதிகரிப்பதையும் வாசகர் வட்டங்களில் பேசலாம்.
  • வாசகர் வட்டத்தில் வந்த விவாதங்களை ஆசிரியர் குழுவுக்கு தாமதமின்றி அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம்.

– ஆசிரியர்.