மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


காந்தி முதல் கல்புர்க்கி வரை!


மத நல்லிணக்கத்திற்காக போராடிய மகாத்மா காந்தி, அறிவியல் கருத்துக்களை மக்களிடம் விதைத்த நரேந்திர தபோல்கர், மதச்சார்பின் மையே நமது உள்ளூர் வரலாறு, என்பதைப் பதிவு செய்த கோவிந்த் பன்சாரே, எழுத்துக்களின் மூலம் மூடநம்பிக்கைக்கு எதிரான அறிவியல் மற்றும் முற்போக்கு கருத்துக்களை வளர்த்த எம்.எம். கல்புர்க்கி என கொல்லப்படுவோர் பட்டியல் நீண்டு செல்கிறது. எல்லாவற்றிலும், துப்பாக்கி ஆயுதமாகவும், கருத்து ரீதியில் இந்துத்துவா தோட்டாக்களாகவும், காரணமாக இருந்து வருகிறது. இந்தப் பட்டியலில் பல நூறு கம்யூனிஸ்டுகளும், சாதாரண மனிதர்களும் உள்ளடங்குவர். பெண்கள் மீதான வகுப்புவாத தாக்குதல், பாலியல் வன்மத்துடன் இணைந்து நடைபெறுகிறது.

கருத்தை அழிக்கும் பணியில் இந்துத்துவா வகுப்புவாதம் ஈடுபடுகிற போது, எதிரில் இருப்பவரின் பிறப்பு அடையாளம் இந்து மதமாக இருந்தாலும், கொலையே தீர்வு என இந்துத்துவா செயல்படுகிறது. எழுத்தாளர் மற்றும் படைப்பாளர்களுக்கு நமது சமூகம் வழங்கிய மதிப்பை, இந்துத்துவா, அங்கீகரிப்ப தில்லை. எழுத்தாளர் பெருமாள் முருகன், ஓவியர் எஃப்.எம் உசேன், போன்ற படைப்பாளர்கள் மீதான தாக்குதல், ஃபயர், திப்பு சுல்த்தான் ஆகிய திரைப்படங்கள், ரஜினி, ஸ்பானா ஆஸ்மி போன்ற கலைஞர்கள் மீதான வார்த்தைத் தாக்கு தல், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியா வில் விளையாடக் கூடாது என்ற தடை, என அனைத்து துறைகளிலும், தலையீடு செய்வதாக, இந்துத்துவா தனது அதிகாரத்தை வெளிப்படுத் துகிறது. தாராளமயமாக்கல் மற்றும் முதலாளித் துவத்தின் நிதி மூலதனம் மேலோங்கிய நிலையில், தனிநபர் அதிகாரம் கோலோச்சுதல், ஜனநாயக உரிமைகள் மறுப்பு ஆகியவை தீவிரமாக அரங் கேறுகிறது. இந்தியா ஒரு மத சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு, என அரசியல் சட்டம் சொல்கிறது. முதலாளித்துவ ஆட்சியமைப்பு முறையும், அதற்கு இந்துத்துவா வகுப்புவாதம் தலைமை தாங்குவதும் ஒருசேர நடைபெறுகிற போது, இந்திய அரசியல் சட்டம் பரிகாசத்திற்கு உள்ளாகிறது.

மதசார்பின்மை என்ற வார்த்தை தேவைதானா? என்ற விவாதம் சில நாள்களுக்கு முன் பாஜக அமைச்சர்களால் முன்வைக்கப் பட்டது. கருத்து சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிப்பு இந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி, என்பது சொல்லாமலே புரியும். 

கருத்து உருவாக்கத்தில் பாசிசம்:
பாசிசம் என்பது, ஒருவரின் நம்பிக்கையின் பெயரில் வன்முறை நிகழ்த்த, மனரீதியில் அழ குணர்ச்சியுடன் சம்மதிக்கச் செய்யும் குணம் கொண்டது, என ஜெர்மானிய திரைப்பட இயக் குனர் லெனி ரீஃப்னல் சொல்கிறார். ஜெர்மனின் தெருக்களில் நாஜிகளின் உத்தரவு என்ற பெயரில், சமூகம் எப்படி ராணுவமயமாகிறது, என்பதை லெனி தனது திரைப்படங்களில் விளக்கியுள்ளார். வகுப்புவாதம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும், போதிக் கோஷ், பாசிசத்திற்கு எதிரான மார்க்சிய நடைமுறை என்ற கட்டுரையில், இது போன்ற உதாரணங்களைக் குறிப்பிடுகிறார். இந்த உதாரணங்கள், ஒரு மனிதனை கொடூர உணர்வு கொண்டவராகவும், தன் இயல்பில் உள்ள மனிதநேயத்தை அழிக்கக் கூடியதாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறது.

கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதை இந்தியா வில் ஆர்.எஸ்.எஸ், பாஜக அமைப்புகள், மேற் குறிப்பிட்ட தன்மையிலேயே செயல்படுத்துகின் றன. பாசிசம் என்பது அரசு அதிகாரத்துடன் இணைந்த முதலாளித்துவ அமைப்பில் தீவிரமாக இயங்குகிறது. கடந்த காலங்களில் ஜெர்மனி, இத் தாலி ஒரு உதாரணம் என்றால், இன்று இந்தியா வின் பாஜக ஆட்சி அது போன்ற உதாரணங்க ளுக்கான செயல்களில், தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குடிமைச் சமூகத்தில் உள்ள விழுமியங் களை மாற்றியமைக்கும் நோக்கத் துடன் பாசிசம் செயல்படுகிறது. வகுப்புவாதத் திற்கு தேவைப் படும் விழுமியங்களாக இருந்தால், அதைப் பாரம் பரியம் என்ற பெயரில், அமலாக்க எத்தனிக்கும். தனது வகுப்புவாத நோக்கத்திற்கு இடையூறாக இருக்கும் விழுமியம் என்றால், அதை முதலாளித் துவ வளர்ச்சியின் பெயரில் அழித்திட ஏற்பாடு செய்யும். இந்த வகையில், பாசிசத்தின் குணம் இந்திய ஆட்சியாளர்கள் மூலம், தற்போதைய நிகழ்வுகளில் அரங்கேறு வதைக் காண்கிறோம். இரண்டு வகையிலுமே முதலாளித்துவத்தின் நலன் பாதுகாக்கப்படுகிறது. பாசிசத்தின் நோக்க மும் அதுவே. கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதற்காக பண் டைய கருத்துக்கள், வரலாறு, பண்பாடு ஆகி யவை மீது ஆய்வு நடத்துகிற ஆராய்ச்சி மையங் களைக் கைப்பற்றுவது, மேற்குறிப்பிட்ட தேவை யை நிறைவேற்றுவதற்கானது ஆகும். ஒவ்வொரு முறையும் மத்திய ஆட்சிப் பொறுப்பைக் கைப் பற்றுகிற போதும், வகுப்புவாத வெறியர்களை ஆராய்ச்சி நிறுவனங்களில் திணிப்பதும், எதிர்ப் புகளை உதாசீனம் செய்வதும், இந்தப் பின்னணி காரணமாகவே ஆகும். ஆராய்ச்சி மையங்களை கைப்பற்றி, மதசார்பின்மை கருத்துக்களை அழித்து, இந்துத்துவா கருத்துக்களைத் திணித்த பின், அதை செயலாற்ற பாடத்திட்டங்களும், போதானா முறையையும் மாற்றி அமைத்து, அமலாக்கி வருகின்றனர்.

கல்வி என்பது சமூகம் குறித்த புரிதலை, அறிவி யலை மற்றும் பன்முக வளர்ச்சியை வளர்த்தெடுக் கும் மிக முக்கியமான நிறுவனம் ஆகும். கல்வி அமைப்பை அபகரிப்பதன் மூலம், நமது கடந்த காலத்தை வகுப்புவாத கண்ணோட்டத்தில் கைப் பற்ற இந்துத்துவா, தொடர்ந்து முயற்சிக்கிறது. 1992 ல் பாஜக உ.பி, ராஜஸ்தான், இமாச்சல் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றிய தில் இருந்து, கல்வித் துறையில் தலையீடு செய் வதை முதல் பெரும் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மார்க்ஸ் அரசி யல் பொருளாதாரத்தை விளக்குகிற போது, முதலாளித்துவம் மனிதர்களுக்கான பொருள் களை உற்பத்தி செய்வதைப் போல், பொருள் களுக்கான மனிதர்களையும் உற்பத்தி செய் கிறது, எனக் கூறியுள்ளார். வகுப்புவாதமும் கல்வித் துறையைக் கைப்பற்றுவதன் மூலம், தனது வகுப்புவாத செயல்பாட்டிற் கான, மனிதர்களை உருவாக்க திட்டமிடுகிறது.
மனிதர்களை வடிவமைக்கும் இந்த நோக்கத் தில் இருந்தே, ஆர்.எஸ்.எஸ் ஏராளமான கல்வி நிலையங்களை சுயமாக நடத்தி வருகிறது. இவை அல்லாது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் பண்பாட்டு மையங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை நியமித்து, புதிய கருத்தாக்கங்களை உருவாக்கி அமலாக்குகிறது. 1998, 1999ஆகிய ஆண்டுகளில் மத்திய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பாஜக மேற்குறிப் பிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டது. இது குறித்து மார்க்சிஸ்ட் ஆய்வாளரான, பேரா. நளினி தனேஜா,  பல்வேறு ஆராய்ச்சி நிறு வனங்கள் இந்துத்துவா நபர்களால் ஆக்கிரமிக் கப்படுவதன் மூலம், மதவெறி அம்சங்களை மக் களின் மனநிலையில் திணிப்பது நடைபெறு கிறது. இதன் விளைவாக, வருகின்ற காலங் களில் பாஜக ஆட்சி அமையும் வாய்ப்பு இல்லை என்றாலும், நீண்டகாலத் தாக்கம் கொண்டதாக சமூகத்தின் சிந்தனை கட் டமைக்கப் பட்டுவிடும் என்று கூறினார்.

இந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு அமைப்பு என்பதை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. கடந்த 15 ஆண்டு கால செயல்பாட்டில் பல இந்துத்துவா அறிவு ஜீவிகள் (கூமே கூயமே)  உருவாக்கப்பட்டுள்ளனர். புணே திரைப்படக் கல்லூரி முதல்வர் பொறுப்பு இந்தளவுக்கு சர்ச்சைக்கு உள்ளாக்கியிருப்பதற்கு, மத்திய பாஜக ஆட்சி காரணம். 4 மாதங்களாக மாணவர்கள் எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்கிருந்து வெளிவரும் திரையுலக கலைஞர்கள், ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டிற்கு எதிராகவும், பன்மைத்துவ ஆதரவாளர்களாகவும் இருப்பது கூடாது என கருதுகின்றனர். அண்மைச் செய்தி, ஜவஹர்லால் நேரு மத்தியப் பல்கலைக் கழகத்தை அதன் துணை வேந்தர் நியமனம் மூலம் கைப்பற்ற நினைப்பது ஆகும். இதுவரை இப்பல் கலைக் கழகம், இடதுசாரி சிந்தனையாளர் மற்றும் ஜனநாயகவாதிகளை உருவாக்கி வந்தது. இதைத் தடுக்க பாஜக  முயற்சிக்கிறது.
ஜெர்மன் நாட்டில் பாசிசம் வளர்ந்த விதத்தை, கம்யூனிஸ்ட் அறிஞர் எம்.என்.ராய் குறிப்பிடு கிறார். நிலவுடைமை சமூகத்தின் அனைத்துவித ஆதிக்க வடிவங்களுக்கும் எதிரான போராட்டத் தில் முதலாளித்துவம் முன் நின்றது. அதிகாரம் கையில் கிடைத்த பிறகு முதலாளித்துவம் சுரண் டலை அடிப்படையாகக் கொண்ட, மனிதனை மனிதன் ஆதிக்கம் செலுத்தும் எந்த ஒரு சமூக அமைப்பிற்கு மதமும், அதனோடு உறவு கொண் டுள்ள மாயாவாத / ஆன்மீகவாத வழிபாடுகளும் பயனுள்ளதாக இருக்க முடியும், என எதிர்பார்க் கிறது. நவீன ஆன்மீகவாதம், அறிவியல் வகை யான மாயாவாதம் ஆகியவற்றின் புரவலர்களா கிட முதலாளித்துவம் விரும்புகிறது. இதே குணம் இன்றைய இந்தியாவில் வளர்ந்து வருவதைக் காணலாம். விடுதலை பெற்ற காலத்தில் அன் றைய ஆளும் வர்க்கம் அறிவியல் கருத்துக்களுக் காகவும், பகுத்தறிவு தேவைக்காகவும் வழிகாட் டியது. அதற்கான நிறுவனங்கள் உருவாக்கப் பட்டன.

கடந்த 15 ஆண்டுகளில் பகுத்தறிவு, அறி வியல் ஆகியவற்றின் மீது ராய் குறிப்பிட்டது போல், மாயாவாத கருத்துக்களை பரப்பும் பணிகள், வகுப்புவாத அரசியல் பின்னணியில் அமலாகி வருகிறது. இந்த வகுப்புவாத அரசி யலை திட்டமிட்டு முதலாளித்துவம் வளர்க்கிறது என்று இந்த மாற்றத்தின் மூலம் அறியலாம்.

இயக்கங்கள் மற்றும் தனிநபர் மீது தாக்குதல்:  பாசிசம் தன்னை வளர்த்துக் கொண்டு சமூகத்தை முழுமையாக ஆட்கொள்ளும் போது, விமர்சனத்தையோ, மாற்றுக் கருத்தையோ, மாற்று பண்பாட்டையோ விரும்புவதில்லை. மீறி செயல்படுபவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. ஜெர்மனி யில், அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன், திரைக்கலை ஞர் சார்லி சாப்ளின் ஆகிய மிகப்பெரிய மனிதர் கள் நாஜிக்களின் தாக்குதலுக்கு ஆளாகினர். இந்த தனிநபர் தாக்குதலின் பின்னணியில்தான், பாஸ்ட்டர் நீல் மில்லர் தனது புகழ் பெற்ற கவிதையை எழுதினார். முதலில் அவர்கள் யூதர் களைத் தேடி வந்தார்கள் நான் எதுவும் செய்ய வில்லை, ஏனென்றால் நான் யூதன் அல்ல என்று தொடங்கும் அந்த கவிதை வரிகள், கம்யூனிஸ்ட், தொழிற்சங்க வாதி, ஜனநாயக சிந்தனையாளன் என்று ஒவ்வொரு சமூக செயல் பாட்டாள ரையும், பெரும் மக்கள் திரளையும் தாக்கி அழிப் பதாக, நாஜிக்களின் செயல் இருந்ததை, அம்பலப் படுத்துவதாக, இருக்கும்.

வகுப்புவாதம் தன்னை விமர்சிக்கும் யாரையும், தொடர்ந்து உயிர்வாழ அனுமதிப்பதில்லை. உயிரைப் பறிப்பதன் மூலம் வகுப்புவாதத்திற்கு எதிரான விமர்சனக்குரலை தற்காலிகமாக நிறுத்திவைக்க முயல்கிறது. அதேபோல் மற்ற விமர்சகர்களையும் எச்சரிக்கை செய்கிறது. குறிப்பாக, ஜனநாயக சிந்தனை குறைவாக உள்ள ஒரு சமூகத்தில், அத்தகைய கொலைகள் மிகப் பெரிய மனிதர்களாக இருக்கும் பட்சத்தில், விமர் சனக் கண்ணோட்டம் கொண்ட, சாதாரண குடும்பப் பின்னணி கொண்டோரை ஒடுக்க முடிகிறது. இந்தப் பின்னணியில் தான், காந்தி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்க்கி ஆகிய பிரபலங்கள், இந்துத்துவத்தால் கொல்லப்பட்டதை பார்க்க வேண்டியுள்ளது. எழுத்தாளர் ஏ.ஜி. நூரணி, தலைவர் குறித்த கோட்பாடு, ராணுவத் தன்மைக்குக் கொடுக்கும் அழுத்தம், இன/கலாச்சார மேன்மை குறித்த கோட்பாடு, மதக் கருத்தியல் கலந்த அதீத தேசியவாதம் பழைய குறியீடுகளைச் சின்னங் களாகப் பயன்படுத்தல், மதச் சிறுபான்மையி னரைத் தேசம் குறித்த வரையறையில் இருந்து விலக்கி வைத்தல் முதலான ஆர்.எஸ்.எஸ்-ன் பண்புகள் அனைத்தும் ஐரோப்பாவின் பாசிச இயக்கங்களையே நினைவுகூர்கின்றன, எனப் பதிவு செய்துள்ளார்.

1925ம் ஆண்டில் ஹெட் கேவர், தான் நான்கு ஆண்டுகளாக நாகபுரி நகரில் இயக்கிவந்த உடற்பயிற்சிக் குழுவை இந்து மதக் கலாச்சாரக் காப்பு மையம் என்றும், அதைத் தொடர்ந்து, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் என்ற ஆர்.எஸ்.எஸ்  என்றும் உருவாக்கினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு உறுப்பினர் பட்டியல் எதுவுமே கிடையாது. தேவைப்பட்டபோது பொய் சொல்வதற்கும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும்தான், இது போன்ற ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது, ஆர்.எஸ்.எஸ் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்ட போது, அளிக்கப்பட்ட விளக்கம் வித்தியா சமானது. ஒரு இந்து தனது செயல்கள் மூலம் தன்னை ஒரு இந்து என நிரூபிப்பது போல், ஒவ் வொரு ஆர்.எஸ்.எஸ் தொண்டனும் தனது செயல்கள் மூலம்தான், இச்சங்கத்தின் தொண் டன் என்று நிரூபிக்கப் படுவானே தவிர, உறுப் பினர் சீட்டு மூலம் அல்ல. இது ஒரு அமைப்பின் வெளிப்படைத் தன்மையைக் கேள்விக்கு உள் ளாக்குகிறது. ரகசியம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தேவைப்படுகிறது.

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?
காந்தி கொல்லப்பட்ட வழக்கு விசாரணை யில், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் உறுப் பினர் என்ற குற்றச்சாட்டின்போது, அவர் ஆர். எஸ்.எஸ் ஐச் சார்ந்தவர் அல்ல என்ற விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளை ஆர்.எஸ்.எஸ் வீர வணக்க நாளாக அனுஷ்டித்து வருகிறது. கோட் சேயின் அஸ்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. காந்தி கொலையில் ஈடுபட்ட கோட்சே மற்றும் ஆப்டே ஆகிய இருவரையும் நெருக்கமாக அறி ந்த, இந்து மகாசபையின் முன்னாள் தலைவர், விக்ரம் சாவர்க்கர், கோட்சே ஒன்றும் அறியாத முட்டாள் இல்லை. அது உணர்ச்சி வசப்பட்டு செய்த கொலை அல்ல. கொலையின் பின்னணி யில் சிந்தாந்தக் காரணங்கள் இருந்தன என்று கூறியுள்ளார்.
இந்த விவரங்களைப் பார்க்கிற போது துப்பாக் கியின் விசையை இழுத்தது யார்? என்பதை விட வும் ஏன் இழுத்தார்? என்பதே முக்கியமாகப்படு கிறது. 1939 ல் கோல்வால்கர் தனது எழுத்தில், துரோகிகள் தேசீயத் தலைவர்களாக முடிசூட்டப் படுவதும், தேசபக்தர்கள் இழிவு படுத்தப் படுவது வதும் விசித்திரமானது. இந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லாமல், சுதந்திரம் இல்லை, என அறிவிப்பு செய்ததன் மூலம், நமது சமுதாயத்திற்கு துரோ கம் இழத்து விட்டார்கள். மகத்தான தொன்மை மக்களின் ஜீவாத்மாவை கொலை செய்த கொடும் பாவத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று எழுதினார். இதில் காந்தி நேரடியாக சொல்லப் பட வில்லை என்றாலும், காந்தியே பிரதான எதிரி என, மேற்குறிப்பிட்ட வரிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சிறையில் இருந்து வெளியே வந்த கோபால் கோட்சே, 1993 ஆம் ஆண்டு நான் ஏன் காந்தி யைக் கொலை செய்தேன் என்ற நூலினை வெளி யிட்டார். அதைத் தொடர்ந்து அவர் ஃபிரண்ட் லைன் ஜன- 1994 மற்றும் 1995 டிசம்பர் 24 டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழிலும் அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்.க்கும் காந்தி கொலைக்கும் சம்மந்த மில்லை என்பதை நிராகரித்தார். சுநனனகை.ஊடிஅ ல் கோபால் கோட்சே அளித்த பேட்டி பதிவாகியுள்ளது. அதில் காந்தி கொல்லப்பட்டதற்காக நீங்கள் வருந்தியது உண்டா? என்ற கேள்விக்கு, இல்லை கவலைப்படவே இல்லை. இந்தியாவின் பிரி வினை என்பது எனது சவத்தின் மீதுதான் நடக் கும் என்றார். ஆனால் தேசம் பிளவுபட்ட பிறகும் உயிரோடு இருந்தார். எனவே நாங்கள் அவரைச் சாகடித்தோம். காந்தி முஸ்லீம்களைத் திருப்திப் படுத்தவே ஆர்வம் காட்டினார், ஆகவே அவ ரைக் கொலை செய்தோம், எனக் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த சுதர்சன் 2003ம் ஆண்டில், காந்தி பிறந்த தினத்திற்கு முதல்நாள், காந்தி இரண்டு தவறுகள் செய்ததாகவும், ஒன்று பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக இருந்தது என்றும், மற்றொன்று நேருவை பிரதமர் ஆக் கியது என்றும் குறிப்பிட்டிருந் தார். காந்தியின் அனுகுமுறை யான, மதச்சார்பின்மை நாத்திக வாதிகளுக்கும் சமமரியாதை என்பதாக இருந்தது. காந்தி தன் குருவாக கொண்ட கோபால கிருஷ்ண கோகலேவும், தன் வாரிசாக அறிவித்த நேருவும் நாத்திகவாதிகளே, இது தற் செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். வேறு கோணத்தில் பார்த்துள்ளது.

நாத்திகவாதியான பேரா. கோராவுக்கு காந்தி அளித்த பேட்டி, காந்தியுடன் ஒரு நாத்திகவாதி என்ற புத்தகமாக வெளிவந்ததாக சொல்கின் றனர்.
நரேந்திர தபோல்கர்: புணேவைச் சார்ந்த மூடநம்பிக்கை எதிர்ப்பை யும், அறிவியல் பார்வையையும் ஒரு சேர பிரச்சா ரம் செய்து வந்த ஒரு சமூக போராளி நரேந்திர தபோல்கர் ஆவார். மருத்துவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவ சேவகரும் கூட. 12 ஆண்டுகால மருத்துவர் பணியை உதறிவிட்டு, 1980ல் சமூகப் பணியில் தன்னை முழு நேரமாக ஈடுபடுத்திக் கொண்டவர். 1989ல் மஹராஷ்ட்ரா அந்தஸ்ராத நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தை உருவாக்கி செயல்படுத்தினார்.  2010 முதல் மாநில சட்டமன்றத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்திற்கான நகல்கள் முன்மொழியப் படுவதும், கடும் எதிர்ப்பின் காரணமாக நிறுத்தப் படுவதுமாக இருந்தது. பாஜக, சிவசேனா, வர்காரி ஆகிய அமைப்புகள் இது போன்ற சட்டம் இயற் றுவதை அறவே வெறுத்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின. குறிப்பாக இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால், இந்து பண்பாடு அழித் தொழிக்கப்படும், பாரம்பரியம் மற்றும் நெறி முறைகள் வழக்கொழிந்து போகும் என வாதிட்டனர்.

Rationalist_collag_தபோல்கர் சாகடிக்கப்படுவதற்கு ஒருவாரம் முன்னதாக வெளியிட்ட பத்திரிகைச் செய்தி யில் மகராஷ்ட்ர மாநில அரசு, 7 முறை சட்ட மன்றத்தில் முன்மொழிந்த சட்டநகலை நிறை வேற்றாதது சரியல்ல, மாநிலத்தில் உள்ள அறி வியல் மற்றும் முற்போக்கு செயல்பாட்டாளர்க ளின் கருத்துக்கு மாநில அரசு செவி சாய்ப்பதில் லை போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்தார். இதைத் தொடர்ந்தே இந்து த் து வாவாதிகளால் 67 வயதான தபோல்கர், 20 ஆகஸ்ட் 2013ல் கொல்லப்பட்டார். கொல்லப் பட்ட மறுநாள் மகராஷ்ட்ரா அரசு மூட நம் பிக்கை ஒழிப்பு சட்டத்தை, அவசர சட்டமாக அறிவித்தது. இதுவரையிலும் மத்திய அரசு இந்தசட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இன்று வரை கொலை செய்தவர்கள் மீதான கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெற்றி பெற வில்லை. 2014 முதல் வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு சென்றுள்ளது. கோவிந்த் பன்சாரே:
தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே சோச லிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். 1952 முதல் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சட்டம் படித்த பின், தொழிலாளர் நலன் காக்கும் சட்டப்பணிகளில், தீவிர செயல் பாடு கொண்டிருந்தார். மகாராஷ்ட்ரா மாநில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய யார் சிவாஜி? எனும் நூல் லட்சக் கணக்கில் பதிப்பிக்கப்பட்டு விற்பனையானது. இது இந்துத்துவா மற்றும் வலதுசாரி அமைப்பு களுக்கு எதிரான தாக்கத்தை  பரந்த அளவில் ஏற்படுத்தியது. சிவாஜி ஒரு மதச்சார்பற்றவர் என பன்சாரே, குறிப்பிட்டு இருந்தார். சிவாஜி முஸ்லீம்களுக்கும் பதவிகள் வழங்கியிருந்தார். விவசாயத் தொழிலில் இருந்த அடிமை முறையை ஒழித்தார். பெண்களை மதித்தார். ஆகிய விவரங் களை போதுமான ஆதரங்களுடன் குறிப்பிட்டு இருந்தார். இந்தி, கன்னடம், ஆங்கிலம், குஜராத்தி மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டது. 38 முறை பதிப்பிக் கப்பட்டு, 1.5 லட்சம் பிரதிகள் விற்பனையா கியுள்ளது. அதுமட்டுமல்ல 21 புத்தகங்கள் எழு திய அவர் சமூகத்தின் பிற்போக்கு அம்சங்களை அம்பலப்படுத்தும் வேலைகளைச் செய்துள்ளார். அவரின் கொலைக்குப் பின் அவருடைய புத்த கங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. ஆர். எஸ்.எஸ் உருவாக்கிய பல்வேறு வெகுமக்கள் அமைப்புகளில் ஒன்று, பாரதீய இதிகாஸ் சங் கலன் சமிதி ஆகும். இது 1000க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இதன் நோக்கம் ஒவ்வொரு மாவட்ட வரலாற்றையும் மதரீதியில் எழுதுவதாகும். அதாவது மக்களிடம் இருக்கின்ற பன்மைத்துவம் வாய்ந்த கருத்துகளை அழித்து, ஒருமையாக்கும் நோக்கம் கொண்டதாகும். இடதுசாரிகள் பன்மைத்துவத்தை பாதுகாக் கின்றனர். குறிப்பாக வரலாறு என்பது, பூகோள மற்றும் இயற்கை வளங்களின் தன்மைக்கு ஏற்ப, பொருளியல் தேவைகளில் இருந்து மாறுபடும். சில முற் போக்கு அம்சம் கொண்டதாக வும் இருக்கலாம் எனக் கருது கின்றனர். பன்சாரே இந்த வர லாற்று ஆய்வு நடவடிக்கைகளை உள்ளூர் மட்டத்தில் உள்ளதை உள்ளபடி எழுத ஆயிரக் கணக் கானோருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன் காரணமாக, லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதி கள் எழுதப்பட்டன. பலநூறு உள்ளூர் வரலாறுகள் உருவா கின. இவை ஆர்.எஸ்.எஸ் சிவ சேனா அமைப்புகளுக்கு பன் சாரே மீதான வெறுப்பை அதி கப்படுத்தின. அதைத் தொடர்ந் தே, பன்சாரே 16 பிப் 2015 அன்று சுடப்பட்டு சிகிச்சை பலனளிக் காமல், 20 பிப் 2015 அன்று இறந் தார். பி.ஜி.கோல்சே பாட்டீல் என்ற ஓய்வுபெற்ற நீதிபதி இந்தக் கொலை குறித்து குறிப்பிடுகிற போது, டிசம்பர் 2014ல் கர்க ரேவைக் கொன்றது யார்? என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் அதைத் தொடர்ந்த விவாதம் ஆகியவற்றிற்காக இந்துத் துவா அமைப்பினர், பன்சாரேவிற்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்கிறார். இடதுசாரி சிந்தனையாள ரான, பாரத் பாட்டன், என்ற எழுத்தாளரும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டார். பன்சாரே மரணத்தைத் தொடர்ந்து மகாராஷ்ட்ர அரசு காவல்துறைப் பாதுகாப்பு அளித்து வருகிறது  இந்த கொலையில் சனாதன சாஸ்தன் அமைப்பு உறுப்பினர் ஒருவர் கைதாகியுள்ளார்.
எம்.எம். கல்புர்க்கி:
தனது முதுகலைப் பட்டபடிப்பில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர். கன்னட கல்வெட்டு மற்றும் இசைப்பாடல்கள் ஆகியவற்றில் புலமை பெற்றவர். துணைவேந்தர் பொறுப்பு வகித்தவர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 103 புத்தகங் களையும் 400 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இந்துமதத்தில் உள்ள உருவவழிபாடு முறையை விமர்சனம் செய்துள்ளார். இதற்காக லிங்காயத் சாதியைச் சார்ந்த சிலரால் அச்சுறுத்தப்பட் டுள்ளார். கன்னட எழுத்துலகத்தின் முக்கியப் பிர முகர் மறைந்த யு.ஆர். அனந்த மூர்த்திக்கு விடுக்கப் பட்ட அச்சுறுத்தலைத் தொடர்ந்து, இவரும் பல முறை இந்துத்துவா அமைப்பினரால் அச் சுறுத் தப்பட்டார். இவர் கொலையைத் தொடர்ந்து கே.எஸ். பகவான் என்ற புகழ் பெற்ற எழுத்தாளர் மிரட்டப் பட்டு வருகிறார்..
இவருடைய கொலையில் இந்துத்வ அமைப்பைச் சேர்ந்தவர் கைதாகியுள்ளார். மேலே குறிப்பிடப் பட்ட அனைத்து நபர்களின் கொலைகளும் அறி வார்ந்த தளத்தில் இந்துத்துவாவை கேள்விக்கு உட்படுத்திய காரணத்தால் விளைந்தது என்பது தெளிவாகிறது. இந்துத்துவா தனது செயல்களை ஜனநாயக மாண்புகளுடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. என்பதை அனைத்துக் கொலைச் சம்பவங்களில் இருந்தும் அறிந்து கொள்ள முடிகிறது. நெருக்கடியை உருவாக்கும் வகுப்புவாதம்:
மேலே விவாதித்த அனைத்தும், இந்திய மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பாக வெடித்து கிளம்பவில்லைக் எனச் சிலர் கூறுகின்றனர். இன்று இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் வலுவான எதிர்ப்பை போராட்டம் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் ஆன்மீக உணர்வுகளுக்கும் வகுப்புவாதத்திற்கும் உள்ள வேறுபாடு, சமூகத் தின் பார்வையில் வேகமாக மறைந்து வருகிறது என்ற கே.என் பணிக்கர் போன்ற ஆய்வாளர் களின் மதிப்பீட்டை, வகுப்புவாத எதிர்ப்பாளர் கள் கவனிக்க வேண்டும். இது ஏன் நடைபெறு கிறது? என்ற விளக்கத்தையும் பணிக்கர் அளிக் கிறார். இந்து வகுப்புவாதம் ஆட்சியைப் பிடித் தது, அவர்களின் அரசியல் பணியினால் மட்டு மல்ல. சமூக, கலாச்சாரத் தளங்களில் அவர்கள் செய்த தளராத தொடர்ச்சியான செயல்பாட்டி னால் நடந்தது. அமைப்பு ரீதியில் உருவாக்கப் படும் ஆன்மீகம் மற்றும் மத உணர்வுகளை, பிரமிக்கத் தக்க வகையில் வெளிப்படுத்தும் போக்கு இந்த பின்னணியில்தான் வளர்கிறது என்று குறிப்பிடுகிறார்.
மேற்குறிப்பிட்ட உணர்வு சார்ந்த பிரச்சனை களின் மீது கேள்வி எழுப்புவது, மத நம்பிக்கைக்கு எதிரானது என, தனக்கான ஆதரவு வட்டத்தை விரிவாக்கிக் கொள்ள, வகுப்புவாதம் முயற்சிக் கிறது. அறிவுக்கு அனுமதி இல்லை, விமர்சனத் திற்கு உரிமை இல்லை, தன் சொந்தக் கருத்து என் பதை ஜனநாயக அடிப்படையில் பிறரிடம் ஊடகம், எழுத்து, பிரச்சாரம் மற்றும் அமைப்பு, என எதன் வடிவிலும் பகிர்ந்து கொள்ள முடி யாது என்ற நிலையை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உருவாக்கி உள்ளது. தமிழகத்திலும் எழுத் தாளர் பெருமாள் முருகனுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்,  தாலி குறித்து விவாதித்த ஊடகம் மீது வெடிகுண்டு தாக்குதல், தாலி அகற்றும் போராட் டம் நடத்தியதற்காக, பெரியார் படத்தில் சிறுநீர் கழித்தல் ஆகிய, இழிவான செயல்கள் அரங் கேறுகின்றன. இந்த தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில், இடதுசாரிகள், கருத்துரிமைப் போராளிகள், முற்போக்காளர்கள், அறிவிய லுக்கு ஆதரவான வர்கள் மற்றும் மூடநம் பிக்கை எதிர்ப்பாளர்கள், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றுசேர்வது மட்டுமல்ல, மாற்று பண்பாட்டு நடவடிக்கையை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. அந்த செயல்பாடு அய்ஜாஸ் அகமது குறிப்பிட்ட பண்பாடு பற்றிய கேள்விகள் கடந்த காலம் சார்ந்தவையாக மட்டும் இல்லா மல், எதிர்காலம் சார்ந்தவையாகவும் இருக்க வேண்டும். முன்பு இருந்தவற்றை மீட்டெடுப்பதற் காக மட்டுமின்றி, புதியதை உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும்.Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: