சமநிலை இணையத்துக்கான போராட்டம் … (1)


பிரசாந்த் ராதாகிருஷ்ணன் 

தமிழில்: இரா.சிந்தன் 

இணைய சேவைகளுக்கு வேறுபட்ட விலை நிர்ணயம் செய்வது தொடர்பான விசயத்தில்இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதியன்று ஒரு உறுதியான முடிவை எடுத்ததுஅந்த முடிவு நெட் நியூட்ராலிட்டி என்று அழைக்கப்படும் சமநிலை இணைய சூழலுக்கான குரலை வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவின் இணைய சேவைகளின் எதிர்காலத்திலும், இணையச் சமநிலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசிவந்த இரு தரப்பாரின் அணிசேர்க்கைகளிலும்   அந்த முடிவு முக்கிய தாக்கம் செலுத்துகிறது. 

சமநிலை இணையம்: 

சமநிலை இணையம் என்பது இணையத்தில் பகிரப்படும் தகவல்களுக்கு இடையே ஏற்றதாழ்வைக் கடைப்பிடிக்க எந்தவொரு முகமைக்கும் அதிகாரம் இல்லை என்று உறுதி செய்யும் கருத்தாக்கமாகும். நடைமுறையில் இது இரண்டு முறையில் அமலாகிறது1) நமக்கு இணைய இணைப்பு வழங்கும் நிறுவனம்நாம் பார்க்கும் எந்த இணையத்திற்கும் தனியாக வேகத்தை நிர்ணயிக்க முடியாது2) ஒரு இணைய இணைப்பு வழங்கும் நிறுவனம்ஒவ்வொரு இணைய சேவைக்கும் வெவ்வேறு கட்டணங்களை வசூலிக்க முடியாது. இணையத்தை அனைவருக்குமானதாகவும்சுதந்திரமானதாகவும் வைத்திருக்கும் அடிப்படைக் கருத்தாக்கங்களில் ஒன்றுதான் ‘சமநிலை இணையம்’. ஆங்கில மார்க்சிஸ்ட் இதழில் இதுபற்றி எழுதிய பிரபீர் புர்காயஸ்தா இவ்வாறு குறிப்பிட்டார், “இணையக் கம்பிவடங்களையும்அலைபேசிக்கான ஸ்பெக்ட்ரத்தையும் ஏகபோகமாக நிர்வகிக்கும் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் பயன்பாட்டாளர்களிடமிருந்து ஏகபோக வாடகை வசூல் செய்வதை இது தடுக்கிறது”

இணைய ஊடகத்தின் தூண்:

உலகம் முழுவதுமுள்ள இணையம் இன்றுள்ளதுபோல பன்முகத்தன்மையுடன் இருப்பதற்கு காரணம் ‘சமநிலை இணைய’ சூழலாகும். சமூக வலைத்தளங்களோடு இணைய ஊடக உலகில் பல சிறு நிறுவனங்களும் தங்கள் படைப்புகளை மற்ற பல பெரிய நிறுவனங்களைப் போலவே சம தளத்தில் வெளியிட முடிகிறது. சமநிலை இணைய சூழலில் வெஇப்பாடாக வேறு பல நன்மைகளும்புதிய முயற்சிகளும் வெளிப்பட்டுள்ளன. உதாரணமாகசென்னை மாநகரத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது உலகம் முழுவதும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கைகோர்த்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டதைச் சொல்லலாம். இன்று இணையத்தில் மிகப்பெரும் நிறுவனங்களாக உள்ள கூகிளும்பேஸ்புக்கும் மிகச் சிறு நிறுவனங்களாக தொடங்கப்பட்டுஇன்றுள்ள நிலைக்கு வளந்திருப்பதர்கு காரணம் அப்போதிருந்த பெரு நிறுவனங்களுக்கும் இவர்களுக்குமிடையே சமநிலை சூழல் இருந்ததுதான். இந்த நிலைமை தொடர்வதை உறுதிசெய்யவும்புதிய கண்டுபிடிப்புகள்சேவைகள் வளர்ந்திடவும் அனைவருக்கும் சமமான போட்டிச் சூழல் அவசியம். இணையத்தின் ஒரு தூணாக சமநிலை இணையம் இருக்கவேண்டியதும் அவசியம்.

கட்டணமில்லாச் சேவைகள்: 

இருப்பினும்உலக அளவில் இணையத்தால் இணைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும்தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியும் காரணமாக – (ஏர்டெல்ரிலையன்ஸ் போன்ற) இணைய சேவை வழங்குனர் மற்றும் (பேஸ்புக் போன்ற) இணைய தொழில் நிறுவனங்கள் சமநிலை இணையத்துக்கு எதிராக நிலையெடுக்கின்றனர். இதன் விளைவாக இணைப்பு வழங்கும் நிறுவனங்களும்இணைய நிறுவனங்களும் கைகோர்த்துக் கொண்டு சில குறிப்பிட்ட இணையங்களை குறைந்த விலையிலோ அல்லது இலவசமாக வழங்க முடிவு செய்தன. ஏர்டெல் ஜீரோஇண்டர்நெட் ஆர்க் போன்ற முயற்சிகள் இதற்கு உதாரணங்கள். இவற்றின் மூலம் சில குறிப்பிட்ட தளங்கள் மட்டும் மக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்பட்டன.

இணைய சேவை நிறுவனங்களைப் பொருத்தமட்டில் இதற்கு பின்னுல்ல காரணம் மிக எளிமையானதுசில சேவைகளை இலவசமாக வழங்குவதன் மூலம் இதுவரை இணைய சேவையில் இல்லாதவர்களையும் ஈர்க்க முடியும்.  

இணைய இணைப்பு வழங்குவோரின் நோக்கம்இலவசமாக கொடுத்துப் பழக்கி புதிய வாடிக்கையாளர்களைப் பெருவதுதான், (பேஸ்புக் போன்ற) இணைய நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் நோக்கம் சற்று சிக்கலானது. இலவசமாக தங்கள் சேவையை வழங்கிடும் அந்த நிறுவனங்களின் பொருளாதார எதிர்காலம் தங்கள் பயனாளர்களிடமிருந்து மேலதிக விபரங்களைத் திரட்டுவதிலும்அவர்களுக்கு விளம்பரங்களைக் கொண்டுசேர்ப்பதிலும் அடங்கியுள்ளது. உலக அளவில் பயனாளர்களைப் பெருவதில் ஒரு எல்லையை எட்டிவிட்ட அவர்கள்ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இன்னும் இணைய இணைப்பு பெற்றிடாத மக்களை குறிவைக்கின்றனர்.

டிஜிட்டல் காலனீயம்: 

சமீப காலத்தில் கூகிள்பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற அனைத்து நிறுவனங்களும் மூன்றாம் உலக நாடுகளில் இணைய இணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்கு நற்பணி நோக்கம் அடிப்படையாகச் சொல்லப்பட்டாலும், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற காலனியக் குடியேற்றங்களிடமிருந்து வேறுபட்ட ஒன்றல்ல. பல ஆய்வாளர்கள் இதனை டிஜிட்டல் காலனியம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அவர்களின் உத்திக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்தியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் கோடிப்பேர் இணையத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாக (60 மில்லியன்) ஆய்வுகள் சொல்கின்றன. மொபைல் வழியாக 30 கோடிப்பேர் இணையம் பயன்படுத்துகின்றனர். இன்னும் 60 கோடிப்பேரை இணைக்கவேண்டியுள்ளது. 

ஏகபோக ஆதரவு நிலை:

இந்த சூழலில்தான் சமநிலை இணையம் பற்றி இந்தியாவில் நடைபெற்ற விவாதங்களைப் பார்க்க வேண்டும். இவ்விசயத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொது விவாதங்கள் இரண்டு சுற்றுக்களாக நடைபெற்றன2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு கருத்துக் கேட்பு அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டது. அது ஓடிடி மற்றும் இணைய சமநிலை தொடர்பான கருத்துக்களைக் கோரியது. ஓடிடி என்பதை விளக்கும்போது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் “இணையத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு மென்பொருளும்” தனது கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்றது. பெருமளவில் இணைய இணைப்பை வழங்கிக் கொண்டிருக்கும் தொலைபேசி நிறுவனங்கள் இந்த ஓ.டி.டி.சேவைகளில் இருந்து வருமானம் பெற விரும்பினர். உதாரணமாக வாட்சாப் மூலம் அனுப்பும் செய்திகளுக்கோஅழைப்புக்கோ நாம் தனியாக பணம் செலுத்துவதில்லை. இதற்கென தனிக் கட்டணம் வசூலிக்க அவர்கள் விரும்பினர். இந்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தைப் பொருத்தமட்டில்,கிட்டத்தட்ட இணையத்தில் வழங்கப்படும் அணைத்து சேவைகளுக்கும் இப்படி கட்டணம் விதிக்கலாம். இந்த வகையில் இணைய தொடர்பு வழங்கும் நிறுவனங்கள் சில பெரிய இணையங்களோடு ஒப்பந்தம் செய்வதுடன் அவர்களுடைய தளங்களை மட்டும் அதிக வேகத்தில் காட்டச் செய்திட முடியும்.                                

மேற்சொன்ன அணுகுமுறையின் அபாயம் வெளிப்படையானது. கைபேசி இணையப் புரட்சியின் பாதிக்கட்டத்தில் இருக்கும் இந்தியா போன்ற நாட்டில் இது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட இணைய சூழலை உருவாக்கியிருக்கும். ஒவ்வொரு இணைய இணைப்பு வழங்குனரும் தனக்கேற்ப இணைய வசதிகளை முன்னுரிமை கொடுத்து வழங்குவது நடக்கும். உள்ளூர் அளவில் சிறப்பான தகவல்களையும்சேவைகளையும் வழங்க முடிந்த சிறு சிறு நிறுவனங்கள்மக்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு கைக்கு எட்டாமல் செய்யப்பட்டிருக்கும். இணைய நிறுவனங்கள் சில சமயங்களில் தங்கள் தளங்களை தெரியவைக்க இணைய இணைப்பு வழங்கும் பல்வேறு நிறுவனங்களோடு பேசி அவர்கள் இணைப்பில் இடம்பெற வேண்டியிருக்கும். தற்போது இலவசமாக சில தளங்களை வழங்கத் தொடங்கும் நிறுவனங்கள்ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி கட்டணங்கள் விதிப்பதில் சென்று முடியும். ஏர்டெல் ஜீரோ மற்றும் இண்டெர்நெர்.ஆர்க் ஆகிய முயற்சிகள் அதற்கான இரண்டு உதாரணங்கள். பேஸ்புக் நிறுவன முதலாளி மார்க் ஜூகர்பெர்க் உலகம் முழுவதும் இணைய சேவையைக் கொண்டு சேர்ப்பதாக தன் முயற்சியைத் தொடங்கினார். முதல் கட்டமாக அவர் 32இணையங்களையும்மென்பொருட்களையும் வழங்கினார். அவற்றில் பலஇப்போதுள்ளாவைகளில் சிறந்த நிறுவனங்கள் அல்ல.

சமநிலை இணையத்துக்கான இயக்கம்: 

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தனது அறிக்கையை வெளியிட்டவுடன் மிகப்பெரும் பொது விவாதம் தொடங்கியது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முன்வைத்த அறிக்கைதொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் இணைய பெரு நிறுவனங்களின் விருப்பத்திற்கு வடிவம் கொடுப்பதென்று வெளிப்படையாது. எனவேஇந்த நிலைப்பாட்டுக்கு எதிராக ஒரு கூட்டணியும் ஒருவானது. அவைகளில் பெரும்பான்மையானவர்கள் “சேவ் தி இண்டெர்நெட்” என்ற பிரச்சாரக் களத்தில் இணைந்தனர். அதில் இணைய தொழில் முனைவோர்மென்பொருள் பொறியாளர்கள்வழக்கறிஞர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் இருந்தனர். அவர்களே இந்தியாவில் சமநிலை இணையத்தைப் பாதுகாக்கும் முகமாகினர். இணையத்தில் அவர்களின் பணிகட்டற்ற மென்பொருள் செயல்பாட்டாளர்களாலும் ஆதரிக்கப்பட்டது. மிகப்பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை சென்றடையச் செய்தது. ஆல் இந்தியா பச்சோட்ஸ் என்ற இணையவழித் தொலைக்காட்சி சமநிலை இணையத்தின் அவசியத்தை விளக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டது. இவையணைத்தும் மக்களை விரைவாகச் சென்றடைந்தனவிழிப்புணர்வு வீடியோ மட்டும் சுமார் 3.5 லட்சம் பேரைச் சென்றடைந்தது. 

இறுதியில் வெற்றி:

மேற்சொன்ன ஒவ்வொரு தரப்பினரும் இப்பிரச்சனையைக் கையாள புதுப் புது எளிய வழிகளை முயற்சித்தனர். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட ஆலோசனை அறிக்கைக்கு பதில் அனுப்பும் விதமாக ஒரு தளம் உருவாக்கப்பட்டது. அதில் இந்த செயல்பாட்டாளர்கள்தங்கள் தரப்பு வாதங்களை பதிலாக வடிவமைத்தனர். சுமார் 10 லட்சம் பேர் இந்த தளத்திலிருந்து தங்கள் கருத்துக்களை தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார்கள். இவ்வாறு பல்வேறு வழிமுறைகளில் மிகவும் திறமையாக மக்கள் ஆதரவு பெறப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சனையான சமநிலை இணையம் போன்ற விசயங்கள் பொது ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறின. கருத்துச் சுதந்திரத்தைக் காவுகொடுக்கும் 66 ஏ போன்ற சட்ட விதிமுறைகளை நிறைவேற்றிய இந்திய நாடாளுமன்றத்திலும் சமநிலை இணையம் பற்றிய வாதம் முன்னுக்குவந்ததை இங்கே தள்ளிவைக்க முடியாது. கடந்த பத்தாண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி இணைய கருத்து சுதந்திரத்தின் பாதுகாவலனாகவும் முன்னின்று வருகிறது. தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட ஆலோசனை அறிக்கையின் பின்னர்விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாடு சமநிலை இணையத்தின் அவசியத்தையும்அதனைப் பாதுகாக்கும் அவசியத்தையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. அனைத்து அரசியல் தளத்திலிருந்தும் இந்த முழக்கங்களுக்கு ஆதரவு கிடைத்தன. ஏர்டெல்பேஸ்புக் போன்றவைகளின் முயற்சியோடு கைகோர்த்த பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் அதிலிருந்து தங்களை விளக்கிக் கொண்டன. அடுத்த சில மாதங்களில் தகவல் தொழில்நுட்ப துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் இப்பிரச்சனையில் தலையிட்டு – சமநிலை இணையத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன. தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசனை அறிக்கைமுடிவேதுமின்றி மூடப்பட்டது.

(தொடரும்)

 

One thought on “சமநிலை இணையத்துக்கான போராட்டம் … (1)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s