மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பிரெக்சிட் வெளிப்படுத்தும் உண்மை!


தமிழில் : ரமணி

பிரெக்சிட் வாக்கெடுப்பு மூலம் பிரிட்டிஷ் மக்கள் உலகமய நிதிமூலதன  மேலாக்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளார்கள் என்ற உண்மையை ஐரோப்பிய வலதுசாரி மற்றும் இடதுசாரி விமர்சகர்கள் பார்க்கத் தவறியுள்ளனர்.

பாரக் ஓபாமா போன்ற ஒரு சிலர் இதனை உலகமயத்திற்கெதிரானது என சரியாகக் கணித்துள்ளனர்.  ஆனால் உலகமயத்திற்கெதிரான நியாயமற்ற அச்சம் மக்களிடம் உருவாக்கப்பட்டதன் விளைவே இது என்று தஙகள் சுயலாபம் கருதி திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பிய இடதுசாரிகளின் அணுகுமுறை

ஐரோப்பிய இடதுசாரிகளில்  பெரும்பகுதியினர் உலகமயக்களினால் உருவான நன்மைகளை பெரிதுபடுத்தியும், தீமைகளை அடக்கி வாசித்தும் வருகின்றனர்.  அவர்களில் பலர் ஐரோப்பிய கூட்டமைப்பிற்கு ஆதரவாளர்கள்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் மேலாதிக்கும் செலுத்தும் ஜெர்மன் நிதிமூலதனத்தை ஜனநாயக செயல்பாடுகளின் வழி அழுத்தம் செலுத்தப்படுவதன் மூலம் அதன் மேலாதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்ற கற்பனையில் உள்ளவர்கள் இவர்கள்.

இதே கருத்துடன் ஆட்சிக்கு வந்த கிரேக்கத்தின் சிரிசா அரசு இன்று அம்பலப்பட்டு நிற்பதுடன், ஜெர்மனியின் நிபந்தனைகளை ஏற்று மீண்டுமொரு சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் கடுமையான சுமைகளை மக்கள் மீது திணித்துள்ளது.  இந்த செயல்பாடுகளின் விளைவாக இடதுசாரிகள் செயலற்றவர்கள் ஆக்கப்பட்டதுடன், வலதுசாரிகள், இனவெறியர்கள், பாசிசவாதிகள், அரை பாசிசவாதிகள் ஆகியோர் மக்களின் அதிருப்தியை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் தொழிலாளர் கட்சித்தலைவர் ஜெரிமீ கோர்பின் நிதிமூலதனம் சிக்கன நடவடிக்கை எனும் பெயரில் ஐரோப்பிய கூட்டமைப்பின் மீது செலுத்தும் நிர்ப்பந்தத்தை எதிர்க்கிறார். அதே சமயம் ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இருக்க வாக்களிக்குமாறு மக்களை அவர் கோருவது டோரி கட்சியின் பிரதமர் டேவிட் கேமரூனின் குரலை எதிரொலிக்கும், செயலாகும். ’லெக்சிட்’ என்ற பிரிட்டன் இடதுசாரிகளின் ஒரு பகுதியினர் பிரெக்சிட்டிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தாலும், அவர்கள் ஒரு சிறு பிரிவினர் என்ற காரணத்தினால் அது வலுவிழந்து காணப்பட்டது.  தீவிர வலதுசாரிகளான பிரிட்டன் சுதந்திரக் கட்சியான யு.கே.ஐ.பியும் லண்டன் முன்னாள் மேயர் போரீஸ் ஜான்சன் தலைமையில் ஒரு குழுவினரும் மக்களின் கோபத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.  வெளிநாட்டிலிருந்திலிருந்து குடியேறியவர்களுக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு பிரெக்சிட் வாக்கு என அதற்கு எதிரானவர்கள் இனவாத சாயம் பூசுகின்றனர். நிதிமூலதனம் செலுத்திய கடுமையான நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம் இவைகள் காரணமாக மக்களிடம் உருவான கோபத்தை புறந்தள்ளி, தொடர்ந்து ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருக்க வாக்களிக்குமாறு பிரிட்டிஷ் மக்களை இடதுசாரிகள், நடுநிலை – இடதுசாரிகள் (பிரிட்டன் தொழிலாளர் கட்சி உள்ளிட்டு)  கோரியது அதற்கு எதிரானவர்கள் இனவாத முலாம் பூச காரணமாக அமைந்தது.  அவ்வாறு திசை திருப்பி விடப்படாமல் உள்ளார்ந்த உனர்வுடன் நிதி மூலதனத்திற்கு எதிராக போராட மாற்றுத் திட்டத்துடன், நிதிமூலதனத்திடமிருந்து விடுபட அவர்கள் அழுத்தும் தந்திருக்க வேண்டும்.  பிரெக்சிட் வாக்கெடுப்பு நிதிமூலதன் உலகமயத்திற்கு எதிராக தன்னெழுச்சியாக மக்களிடம் உருவான கிளர்ச்சியாகும்.  ஊள்ளார்ந்த உணர்வுடன் உருவாக்கப்பட்ட மக்கள் கிளர்ச்சியாக மாற்ற வேண்டியவர்கள், அதிலிருந்து தங்களை முற்றாக விலக்கிக் கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற வாக்களித்திருப்பவர்களில் பெரும்பான்மையோர் தொழிலாளி வர்க்கத்தினர்.  பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் 63 விழுகாட்டினர் பிரெக்சிட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியினரில் பெரும் பகுதியினர் தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்.  இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தினருக்கும் அதனை தலைமையேற்று வழி நடத்திச் செல்பவர்களுக்குமிடையில் பெரும் இடைவெளி இருந்தது தெரிய வருகிறது.

ஐரோப்பியக்கூட்டமைப்பில் தொடர்ந்து இருக்க வாக்களித்தவர்கள் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் லண்டன் நகர மக்கள் ஆவர்.  நிதி மூலதனமும் ஐரோப்பியக் கூட்டமைப்பில் தொடர பெருமளவு பங்காற்றியுள்ளதை மறுக்க முடியாது.  இவர்கள் தவிர்த்து வெளிநாட்டிலிருந்து குடியேறிவர்களும் ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர வாக்களித்துள்ளனர்.

முக்கிய விளைவுகள் 

பிரிட்டிஷ் மக்களுக்கு வரக்கூடிய காலம் பல்வேறு காரணஙகளினால் நெருக்கடி மிகுந்த காலமாக இருக்கும்.  முதலாவதாக, உலகமய நிதிமூலதன மேலாதிக்கத்தின் பிடியிலிருந்து வெளியேறியுள்ள இந்த இடைப்பட்ட காலம் பல்வேறு சிக்கல்களை கொண்டு வரும். அவைகளாவன:  மூலதன வெளியேற்றம், நாணய மதிப்பு வீழ்ச்சி, அந்நிய பணப்பட்டுவாடா மோசமடைதல், பணவீக்கம் போன்றவைகளாகும்.  இவைகளனைத்தும் பிரெக்சிட்டிற்கு ஆதரவளித்த பிரிட்டிஷ் மக்களை கடுமையாகப் பாதிக்கும்.  இரண்டாவதாக, வாக்கெடுப்பிற்கு முன்னரே அந்நாட்டில் ந்டப்புக்கணக்கு பற்றாக்குறை இருந்தது. இதனை சமளிப்பது மிகவும் சிரமமாகும்.  மூன்றாவதாக பிரெக்சிட்டிற்குஆதரவாக வாக்களித்த பிரிட்டிஷ் மக்களுக்கு பாடம் கற்பிக்க நிதி மூலதனம்அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.  நான்காவதாக இந்த கடுமையானநெருக்கடியில் அவர்களை வழி நடத்திச் செல்ல சரியான இடதுசாரி தலைவர்களில்லை. யு.கே.ஐ.பியின் தலைவர் நைஜல் பாரேஜெஸ் மற்றும்போரிஸ் ஜான்சன் போன்ற தலைவர்கள் நிதி மூலதனத்தை எதிர்த்துப் போராடும் திறனற்றவர்கள்.  நிதிமூலதனத்தின் கண் அசைவிற்கு காத்திருப்பவர்கள்.  இச்சூழலை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் தெளிவான பார்வை கொண்ட இடதுசாரிகள் மட்டுமே.  அவர்களும் கைவிட்ட நிலையில் நிதிமூலதனத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமான ஒன்றல்ல.

ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீது பிரெக்சிட் வாக்கெடுப்பு உடனடியாக இரண்டு விளைவுகளை உண்டாக்கும். தற்போது கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள முதலாளித்துவம் மீட்சி பெறும் நம்பிக்கையை தகர்க்கும். உடனடியாக சிக்கிலிலிருந்து மீள்வது சாத்தியமல்ல. இரண்டாவது, இந்த இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிஷ் மக்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்த போதும், பிரெக்சிட் வாக்கெடுப்பு இதர நாடுகளும் அதன் வழியை பின்பற்றத் தூண்டும்.

சுருக்கமாக சொன்னால், உழைக்கும் மக்கள் இனி ஒருபோதும் நெருக்கடியில் சுழ்ன்று கொண்டு வாளாவிருக்க மாட்டார்கள். உலகமய நிதிமூலதன மேலாதிக்கத்தின் விளைவாக கடும் நெருக்கடியைச் சந்தித்த மக்கள் இனி பழைய நிலைக்கு பின்னோக்கிச் செல்வது என்பது சாத்தியமல்ல.

(ஜுலை 3, 2016 பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் வந்த பேராசிரியர் பிரபாத் பட்நாயக்கின் கட்டுரையின் சுருக்கம்.)



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: