நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுக் கொண்டு உள்ள தொடர்புகளைக் கண்டறிய வேண்டும். மேலும் இதைச் செய்வதற்காக நாம் அகவய கற்பனையையோ, அப்போதைய ஆர்வத்தையோ அல்லது சாரமற்ற புத்தகங்களையோ சார்ந்திருக்கக் கூடாது, புறவயமாக நிலவுகின்ற சூழல்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். உரிய வகையில் தகவல்களைச் சேகரித்து, மார்க்சிய-லெனினிய பொதுக்கொள்கை நெறிகளினை சரியாகப் பின்பற்றி அதிலிருந்து முடிவுகளை வகுக்க வேண்டும். இத்தகைய முடிவுகள் வெறும் அ, ஆ, இ, ஈ வரிசையாலான நிகழ்ச்சிப்போக்குகள் நிறைந்த பட்டியல்களோ, பயனற்ற கூற்றுகள் நிரம்பிய எழுத்துக்களோ அல்ல, அவை அறிவியல் பூர்வமான முடிவுகள் ஆகும். இத்தகைய உளப்பாங்கு என்பது மெய் நிகழ்வுகளிலிருந்து பேருண்மையை தேடுவது, வெற்று பசப் புரையிலிருந்து அணுகூலமானதைப் பெறுவது அல்ல. இதுதான் மார்க்சிய-லெனிய வழியில் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பதாகும், உயிரோட்டமான கட்சியின் வெளிப்பாடு இதுவே. எந்தவொரு கட்சி உறுப்பினரும் இந்த அணுகுமுறையை மிக குறைந்த அளவிலேனும் கைக் கொண்டிருக்கவேண்டும்.
– பயிலும் முறை சீர்திருத்தம், மாவோ ஆற்றிய பகுதி …
அறிவு என்றால் என்ன? உலகம் வர்க்க சமூகம் தோன்றியது முதற்கொண்டு இருவகையான அறிவை மட்டுமே கொண்டிருக்கிறது. அவை உற்பத்திக்கான போராட்ம் பற்றிய அறிவு, வர்க்கப் போராட்டம் பற்றிய அறிவு என்பதே ஆகும். இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும் இந்த இருவகையான அறிவின் படிகங்களே. தத்தும் என்பது இயற்கை அறிவு, சமூக அறிவு ஆகியவற்றின் பொதுமையாக்கலும் தொகுப்புமே ஆகும்.
– கட்சி வேலைப்பாணியில் சீர்திருத்தம் …
ஒப்பீட்டளவில் முழுமையான அறிவு இரண்டு நிலைகளில் அமைகிறது இரு கட்டங்களில் உருவாகிறது. முதலாம் கட்டம் புலனறிவுக் கட்டம். இரண்டாம் கட்டம் என்பது பகுத்தறிவுக் கட்டம் என்பதாகும். புலனறிவுக் கட்டம் உயர்ந்த கட்டமாக வளர்வதுதான் பகுத்தறிவுக்கட்டமாகும்.
– கட்சி வேலைப்பாணியில் சீர்திருத்தம் …
நடைமுறையோடு இணைக்கப்படாத தத்துவம் இலக்கற்றதென்றார் ஸ்டாலின். இலக்கற்ற தத்துவம் பயனற்றதும் போலியானதும் ஆகும். இலக்கற்ற கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டோரை நாம் ஏளனம் செய்ய வேண்டும். புறவய யதார்த்தங்களில் இருந்து பிறப்பெடுத்து, அதில் சோதிக்கப்பட்டு முகிழ்ந்த மார்க்சிய-லெனினியமே மிகச் சரியானதும், அறிவியல் பூர்வமானதும், புரட்சிகரமானதுமான உண்மையென்றாலும், அதனைப் பயிலும் பலர் அதனை உயிரற்ற வறட்டுச் சூத்திரமாக எடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு செய்து தத்துவத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையிட்டு தமக்கும், பிற தோழர்களுக்கும் தீங்கைச் செய்கின்றனர். மறுபுறத்தில் நடைமுறைப்பணியில் ஈடுபட்டுள்ள நமது தோழர்கள் தங்களின் அனுபவத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்களானால் அவர்களும் கூட தோல்வியுறுவர்.
– கட்சி வேலைப்பாணியில் சீர்திருத்தம் …
சிலர் தாங்கள் மார்க்சியத்தை நம்புவதாக எண்ணுகின்றனர். ஆனால் அகநிலைவாதச் செய்தியை கேட்கும் பொழுதோ வாசிக்கும்பொழுதோ அதற்கு எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்தாமலோ யோசிக்காமலோ இருந்து பொருள்முதல்வாதத்தை அவ்விடத்தில் பிரச்சாரம் செய்வதற்கு முயற்சி எதையும் மேற்கொள்வதில்லை. இது ஒரு கம்யூனிஸ்டின் எண்ணப் போக்கல்ல. அது நமது பல தோழர்கள் அகநிலைவாதக் கருத்துகளால் நஞ்சூட்டப்படுவதற்கு அனுமதிக்கிறது. அது அவர்களின் உணர்வு நுட்பத்தை மரத்துப் போகச் செய்கிறது. ஆகவே நாம் கட்சிக்குள் நமது தோழர்களின் உள்ளங்களை அகநிலைவாதம்மற்றும் வறட்டுக் கோட்பாட்டியம் என்ற மூடுபனியிலிருந்து விடுவிப்பதற்கு கற்பித்தல் இயக்கத்தை மேற்கொண்டு அகநிலைவாதம், குறுங்குழுவாதம், செக்குமாட்டுத்தனமான கட்சி எழுத்துக்கள் ஆகியவற்றைப் புறக்கணிப்பதற்கு அவர்களுக்கு அறைகூவல் விட வேண்டும்.
– கட்சி வேலைப்பாணியில் சீர்திருத்தம் …
பிரச்சனைகளின் மையக்கரு வரையில் (பிரச்சனையின் தன்மை மற்றும் பிரச்சனையின் பல அம்சங்களிடையே உள்ள இணைப்பு) தமது ஆய்வை ஊடுருவி செய்யாதவர்கள்தான் எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்படுவர். அத்தகையவர்கள் சறுக்கி கிழே விழுவது நிச்சயம்!”
– (மாவோ தேர்வு நூல்கள் தொகுதி 1 பக். 302)
மக்கள் திரள் விழித்துக்கொள்ளும் முன்பே நாம் தாக்குதலில் இறங்கிட முயல்வோமென்றால் அது சாகசவாதமாகிவிடும். மக்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுவதற்கு அவர்களுக்கு உத்தரவிடுவோமென்றால் அது நிச்சயம் தோல்வியிலேயே முடியும். மக்கள் முன்னேற்றத்தை எதிர்நோக்கும்போது நாம் அதற்கு முயலாமலிருந்தால் அது வலதுசாரி சந்தர்ப்பவாதமாகிவிடும்.
– சான்ஷி-சுயான் நாளிதழ் ஆசிரியர்குழுவோடான உரையாடல் 1948 ஏப்ரல் 2 …
நாம் மக்களிடம் சென்று அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களின் அனுபவங்களைத் தொகுத்து சிறப்பாக்க வேண்டும், கொள்கை நிலைகளையும், செயல் முறைகளையும் வகுத்து பின் மக்களிடையே பிரச்சாரம் செய்து, மேற்சொன்ன கொள்கை நிலைகளையும், செயல் முறைகளையும் நடைமுறைக்கு கொண்டுவருவதன் மூலம், அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்டு, மக்கள் விடுதலையையும், மகிழ்ச்சியையும் வென்றெடுக்க உதவவேண்டும்.
– சான்ஷி-சுயான் நாளிதழ் ஆசிரியர்குழுவோடான உரையாடல் 1948 ஏப்ரல் 2 …
எந்தவொரு மக்கள் இயக்கத்தைக் கட்டமைக்கும்போதும், நம் ஆதரவாளர்கள், எதிரிகள், நடுநிலையாளர்களிடம் ஒரு அடிப்படையான ஆய்வும், விசாரணையும் அவசியம். நாமாக நம் அகவய உணர்வுக்கு ஏற்ப எந்த அடிப்படையும் இல்லாமல் பிரச்சனைகளை முடிவுசெய்யக் கூடாது.
– தலைமையேற்கும் முறை பற்றிய சில பிரச்சனைகள் …
எந்தவொரு இடத்திலும் உள்ள மக்களை எடுத்துக் கொண்டால் அவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம், ஒப்பீட்டளவில் செயலூக்கம் மிக்கோர், நடுத்தரமானோர், ஒப்பீட்டளவில் பிற்பட்டோர். தலைவர்கள் மிகச் சிரிய எண்ணிக்கையிலான செயலூக்கம் மிக்க நபர்களை தம் தலைமையைச் சுற்றி அமைத்துக் கொண்டு அவர்களை ஒன்றிணைப்பதில் தேர்ச்சிபெற வேண்டும், பின் அவர்களைக் கொண்டே நடுத்தரமானவர்களை உயர்த்திடவும், பிற்பட்ட நிலையில் இருப்போரை வெற்றிகொள்ளவும் வேண்டும்.
– தலைமையேற்கும் முறை பற்றிய சில பிரச்சனைகள் …
கட்சிக் கொள்கையை மக்கள் செயல்பாடுகளாக மாற்றிடவும், முன்னணித் தலைவர்களை மட்டுமல்லாது, விரிவான மக்கள் திரளும் புரிந்துகொண்டு, ஒவ்வொரு நடவடிக்கையிலும் தேர்ந்து நம் ஒவ்வொரு போராட்டத்திலும் இணைந்திருக்கச் செய்வதானது மார்க்சிய-லெனிய தலைமையின் கலையாகும். இதுதான் நாம் சரியாக செயல்படுகிறோமா? தவறாகச் செயல்படுகிறோமா? என்பதை அறிந்துகொள்வதற்கான வழியும் ஆகும்.
– அமைப்பாகத் திரளுங்கள் …
“ஒரு மனிதன் தனது பணியில் வெற்றி பெற வேண்டும் எனில், தான் எதிர்பார்த்த முடிவுகளை அடைய வேண்டும் எனில், அவர் தனது சிந்தனைகளைப் புற உலகின் விதிகளோடு ஒத்திசைவுக்குக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு அவரது சிந்தனைகளும் புற உலகின் விதிகளும் ஒத்திசையவில்லை எனில் அவர் தனது நடைமுறையில் தோல்வி அடைவார். தோல்விக்குப் பிறகு அவர் படிப்பினைகளைப் பெறுகிறார். பிறகு, தனது சிந்தனைகளைப் புற உலகின் விதிகளோடு ஒத்திசைவுக்கு கொண்டுவருகிறார். தோல்வியை வெற்றியாக மாற்றுகிறார். இதுவே “தோல்விதான் வெற்றிக்கு தாய்” எனவும் “விழுதல் அறிவில் எழுதல்” என்றும் கூறப்படுகிறது.”
(மாவோ தேர்வு நூல்கள் தொகுதி 1 பக். 297-297)
மாவோ மிகச் சிறந்த அமைப்பாளர்
LikeLike